• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காதல் 22

Administrator
Staff member
Messages
459
Reaction score
785
Points
93
காதல் 22:

"கவின்கு பசிக்கிது பூவா…" என்று கவின் வயிற்றை தடவ,

"மகி புள்ளைக்கு பசிக்கிதாம் பாரு போய் சாப்பாடு எடுத்துட்டு வா…" கோதை குரல் கொடுக்க,

"ஹான் தோசை ஊத்திட்டு இருக்கேன்த்தை டூ மினிட்ஸ்" என்று குரல் கொடுத்தவள் சுட சுட தோசையுடன் இரண்டு நிமிடங்களில் வெளியே வந்தாள்.

பட்டு புடவை சகிதமாக அமர்ந்திருந்த கோதை,

"ப்பா நேரமாச்சு கிளம்பலாமா?" என்று வினவ,

கவினது முன்பு தட்டை வைத்த மகிழ்,

"அத்தை இருங்க தோசை ஊத்துறேன் சாப்பிட்டு போங்க" என்றாள்.

"இல்லைம்மா லேட் ஆகிடுச்சு. நாங்க அங்க போய் பாத்துக்கிறோம்* என்று கோதை பதில் மொழிந்தார்.

"ஒரு பத்து நிமிஷம் லேட்டா போனா ஒன்னும் ஆகிடாது‌. சாப்பிடாம போனா மயக்கம் வந்திடும் உங்களுக்கு சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டு தான் போகணும்" என்று உரிமையாய் அதட்டியவள்,

"தாத்தா உங்களுக்கும் தான் சாப்பிட்டு தான் போகணும்" என்றாள்.

இளையவளின் அதட்டலில் இருவருக்கும் புன்னகை பிறக்க,

"பார்றா என் மருமக என்னை அதட்டுறா" என்று கோதை சிரிக்க,

"சாம்பிடாம போனா அதட்ட தான் செய்வேன். நீங்க என்னை சாப்பிடாம விடுவிங்களா?" என்று தானும் புன்னகைத்தவள் சமையலறைக்குள் நுழைய,

இவர்களது உரையாடலை கேட்டபடி அறையில் இருந்து அலுவலகம் கிளம்பி இறங்கி வந்தான் குரு பிரசாத். முகத்தில் வழக்கம் போல அழுத்தம் குடி கொண்டிருந்தது.

கூடத்திற்கு வந்தவனை கண்ட கோதை,

"என்னப்பா ஆபிஸ்க்கு கிளம்பிட்டியா…? சாப்பிட்டு போ" என்க,

"சரிம்மா" என்றவன் அமர்ந்து தாத்தாவுடன் தொழில் ரீதியாக உரையாட துவங்கினான்.

மகிழ் இருவருக்கும் விரைவாக தோசையை எடுத்து வந்தாள்.

கோதையும் பிறை சூடனும் சாப்பிட சென்றதும் குரு அலைப்பேசியில் முக்கிய செய்திகளுக்கு மட்டும் பதில் அளித்து கொண்டிருந்தான்.

பிறைசூடனது நெருங்கிய சொந்தத்தில் ஒரு திருமணம் அதற்கு செல்ல தான் பிறைசூடனும் கோதையும் தயாராக இருந்தனர்.

இருவரும் உண்டதும் கிளம்ப தயாராக,

"அத்தை டேப்லெட்ட மறந்துட்டிங்க" என்று எடுத்து வர சென்றாள்.

"வர வர நீ மாத்திரையை சரியான நேரத்துக்கு எடுத்துக்கிறதே இல்லை" என்று பிறைசூடன் குறைபட,

"வயசாகிடுச்சுல அதான் மறதி வந்திட்டு. அதனால என்ன அதான் மக மாதிரி பாத்துக்க ஒரு தங்கமான மருமக இருக்காளே…" என்று கோதை புன்னகைக்க,

"சரி தான். நாமளே தேடி பாத்திருந்தாலும் இப்படி ஒரு பொண்ணை பாத்திருக்க முடியாது. என் பேரன் தொழில் விஷயத்துல மட்டும் இல்லை. வாழ்க்கையிலும் கெட்டிக்காரன்" என்று உணவு மேஜேயில் அமர்ந்தவாறு பேச,

இது கூடத்தில் அமர்ந்து அலைபேசியை கவனித்து கொண்டிருந்த குருவின் காதிலும் விழ ஒரு கையில் மாத்திரை பெட்டியும் மறுகையில் தண்ணீர் குவளையும் வைத்தவாறு வந்தவளது முகத்தில் முடிக்கற்றைகள் விழ அதனை புறங்கையால் ஒதுக்கிய படி நடந்து வந்தவளை தான் பார்த்தான்.

கிட்டத்தட்ட மூச்சு வாங்க வந்தவள்,

"இந்தாங்க போட்டுட்டு கிளம்புங்க" என்க,

"மெதுவா வர வேண்டியது தானே" என்று மருமகளை கடிந்துவிட்டு மாத்திரையை விழுங்கினார்.

இருவரும் புறப்பட்டு செல்லும் நேரம் வாசல் வரை சென்று வந்தவள் அப்போது தான் குரு அங்கிருப்பதையே கவனித்தவள் போல,

"சார் உங்களுக்கு தோசை சுட்டு எடுத்துட்டு வரவா?" என்று வினவ,

"ஹ்ம்ம்…" என்று தலையசைத்தவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைய,

"ம்மா எனக்கு சப்பாத்தி" என்றான் எழில்.

"சப்பாத்தியா…? அப்பாவுக்கு வேலைக்கு நேரமாச்சு. தோசை ஊத்திட்டு அம்மா மாவு பிசைஞ்சு போட்டு தர்றேன்" என்று கூற,

"ம்ஹூம் எனக்கு சப்பாத்தி இப்போவே வேணும்" என்று அடம்பிடிக்க,

"எழில் கண்ணா ஒரு டென் மினிட்ஸ்" என்று கெஞ்ச,

"நோ…" என்று அடமாக கூறினான் எழில்.

மகிழ் ஏதோ கூற வர இதனை கவனித்த குரு,

"அவனுக்கு சப்பாத்தி போட்டு கொடுத்திட்டு எனக்கு தோசை கொடு" என்றிட,

சம்மதமாக தலையசைத்தவள்,

"வர வர‌ உனக்கு அடம் அதிகமாகிடுச்சு" என்று எழிலிடம் கூறிவிட சென்றவள் மற்றொரு அடுப்பில் தோசை கல்லை வைத்தவள் தோசையை ஊற்றிவிட்டு மாவை விரைவாக பிசைந்து சப்பாத்தியையும் முதல் கல்லில் போட்டு எடுத்தாள்.

எழிலுக்கு ஒரு தட்டில் சப்பாத்தியை எடுத்து வந்து வைத்தவள,

"எழில் சாப்பிடு" என்று கூறிவிட்டு,

"சார் உங்களுக்கும் தோசை எடுத்து வச்சிட்டேன்" என்று அவனிடம் கூறினாள்.

குரு வந்து அமர்ந்ததும் சுட சுட இரண்டு தோசைகளை தட்டில் வைத்தவள் அவனுக்கு மிகவும் பிடித்த நிலக்கடலை சட்னியையும் புதினா சட்னியையும் வைத்தாள்.

குரு அமைதியாக உண்ண மேலும் இரண்டு தோசைகளை கொண்டு வந்தவள் அருகில் வைக்க,

"போதும்" என்று குரு கூறியதும்,

"சப்பாத்தி கொண்டு வரவா சார்?" என்று மீண்டும் வினவினாள்.

"வேணாம்" என்று மறுத்துவிட்டவன் உண்டுவிட்டு கிளம்பும் நேரம்,

"ப்பா அவேஞ்சர்ஸ் பாக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னிங்களே…" என்று இருவரும் ஆளுக்கொரு காலை பிடித்து கொள்ள,

குருவிற்கு சட்டென்று புன்னகை பிறந்தது.

மகிழ், "டேய் என்ன இது ஆபிஸ் கிளம்புற நேர்த்தில வம்பு பண்ணிக்கிட்டு நாளைக்கு போகலாம்" என்று அதட்ட,

"ம்ஹூம் இன்னைக்கே போகணும்" என்று இருவரும் சேர்ந்தபடி கூற,

குரு இருவரையும் இரு கைகளிலும் ஏந்தி கொண்டு,

"ஈவ்னிங் ஆபிஸ்ல இருந்து சீக்கிரமா வந்து உங்களை அவேன்சர்ஸ் பாக்க அழைச்சிட்டு போறேன். அதுவரைக்கும் சமத்தா இருக்கணும்" என்று கூற,

"சரிப்பா" என்று தலையசைத்த இருவரும் அவனது இரு கன்னங்களிலும் முத்தமிட குருவிற்கு சிலிர்த்தது.

இதனை பார்த்த மகியின் முகத்திலும் அப்படி ஒரு ரசனை புகுந்தது.

ஒரு நொடி தன்னை மறந்து அதனை ரசனையுடன் பார்த்தவள் சட்டென்று திரும்பி கொண்டாள்.

குரு இளையவர்களிடம் பேசிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பியதும் அவன் விட்டு வைத்திருந்த ஒரு தோசையை உண்டு முடித்தவள் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்து கூடத்தில் இருந்த நீள்விருக்கையில் பொத்தென்று அமர்ந்துவிட்டாள்.

இளையவர்கள் தொலைக்காட்சியில் ஓடிய பொம்மை படத்தை பார்த்து கொண்டிருந்தனர்.

இங்கு இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடியவளது மனக்கண்ணில் அன்றைய நிகழ்வு நிழலாடியது.

சட்டென்று கன்னம் தாண்டிய கண்ணீரை துளியும் பொருட்படுத்தாது எப்போதும் போல அழுத்தமான நடையுடன் லேசாக நனைந்தபடி நடந்து வந்தவனை இமைக்காது பார்த்திருந்தாள்.

எங்கே இமைத்தால் மறைந்துவிடுவானோ என்று உள்ளம் பதறியது.

"குரு வந்துட்டானாம்மா" என்ற கோதையின் விழிப்பில் சடுதியில் நினைவை அடைந்தவள் முகத்தில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு,

"ஹ்ம்ம் வந்துட்டாருத்தை‌" என்றவளது குரல் அவளையும் மீறி தழுதழுத்துவிட,

அவன் தன்னை நெருங்கிவிட்டதை உண்ர்ந்தவள்,

"நான் போய் அவருக்கு டீ போட்றேன்" என்று விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்.

குரு உள்ளே நுழைந்ததும் கோதை,

"ஏன்பா குரு இவ்வளோ நேரம். நாங்க போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வந்தது. ரொம்ப பயந்துட்டேன்" என்று அவனது கையை பிடித்து கொள்ள,

"ம்மா‌ எதுக்கு பயம். நான் என்ன குழந்தையா?" என்று குரு மொழிய,

"எவ்ளோ வயசானாலும் பிள்ளைங்க பெத்தவங்களுக்கு குழந்தை தான்" என்று மொழிந்தவர்,

"மழை வேற அடிச்சு ஊத்துது‌. போததுக்கு கம்பெனி இருக்க இடத்துக்கு பக்கத்துல நிலச்சரிவுன்னு வேற நியூஸ்ல சொல்ல அவ்ளோ பயந்துட்டேன். நீ வர இன்னும் ஐஞ்சு நிமிஷம் லேட்டாகியிருந்தா கூட தாத்தாவ உன்னை தேடி அனுப்பியிருப்பேன்" என்று பயத்துடன் கூற,

அவரது அச்சத்திற்கு காரணம் அறிந்தவன்,

"ம்மா நான் வரும் போது பாதை நல்லா தான் இருந்துச்சு. வர்ற வழியில ஒரு மரம் உடைஞ்சு விழுந்திருச்சு. அதான் வேற வழியில வந்தேன். மழை ரொம்ப இருந்ததால ட்ரைவ் பண்ண கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்று விளக்கம் தந்தான்.

"போனாவது போட்டு சொல்லியிருக்கலாம்ல பா" என்று பிறைசூடன் கூற,

"இல்லை தாத்தா நான் கிளம்பும் போதே மொபைல் லோ பேட்டரில தான் இருந்துச்சு. கொஞ்ச நேரத்தில சுவிட்ச் ஆஃப் ஆகிட்டு" என்று மொழிந்தான்.

"சரிப்பா எல்லாம் சரிதான்.‌ இனி இது மாதிரி ஆகாம பாத்துக்கோ. நான் கூட பரவாயில்லை. மகிழ் தான் ரொம்ப ரொம்ப பயந்துட்டா" என்று மொழிய,

குருவின் விழிகள் அவளை தேடியது.

"உனக்கு தான் காஃபி போட போயிருக்கா. நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வாப்பா" என்று கோதை கூற,

"ஹ்ம்ம்…" என்று தலையசைத்தவன் எழுந்து அறைக்குள் சென்றான்.

இங்கு சமையலறைக்குள் நுழைந்த மகிழுக்கு அழுகை குறையவில்லை. துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது.

ஏனென்று தெரியவில்லை அவனது உருவத்தை உள்ளம் உண்ர்ந்த நொடி தான் போன உயிர் திரும்ப வந்தது.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தாளோ பின்னர் நடப்புக்கு
வந்தவள் முகத்தை நன்றாக கழுவிவிட்டு பாலை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சினாள்.

தேநீரை தயாரித்தவள் குவளையில் எடுத்து வர குரு உடை மாற்றி வந்து தாயின் அருகில் அமர்ந்து பேசி கொண்டு இருத்தான்.

மற்றொரு புறம் பிறை சூடன் அமர்ந்திருக்க அவனது மடியில் இளையவர்கள் அமர்ந்திருந்தனர்.

என்னவோ மீண்டும் அவனை பார்த்த கணம் கண்ணீர் பெருக முயன்று தன்னை கட்டுபடுத்தியவள் மூவருக்கும் தேநீரை கொடுத்தாள்.

தேநீரை எடுத்து கொண்ட குரு அவளது முகத்தை தான் கண்டான். அவள் முகத்தை கழுவி இருந்தாலும் ஆங்காங்கே சிவப்பாகி என்னவோ போல தெரிந்தது.

தேநீரை கொடுத்தவள் அமைதியாக அமர்ந்து கொள்ள பெரியவர்களுடன் பேசியவன் இரவு உணவை உண்ண சென்றான்.

மகிழ் தான் அவனுக்கு பரிமாறினாள். முகத்தில் அத்தனை அமைதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

உண்டுவிட்டு அறைக்கு சென்ற பிறகும் அமைதியாக இளையவர்களை உறங்க வைத்துவிட்டு தானும் படுக்க விழைய,

"மகிழினி…" என்ற குருவின் குரல் அவளை தடுத்தது.

திரும்பி பார்த்தாள். கட்டிலில் சாய்ந்தவாக்கில் கையில் கைப்பேசியுடன் அமர்ந்தவனது பார்வை இவளிடம் தான்.

"ஹான்…" என்ற வார்த்தை தான் வந்தது. அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

"நீ ரொம்ப பயந்துட்டேன்னு அம்மா சொன்னாங்க" என்றவனது பார்வை அவளை ஆராய்வதாய் அவளுக்கு தோன்ற உள்ளுக்குள் ஒன்று நடுங்கியது. முதல் முறையாக மனதிற்குள் தடுமாற்றம் வந்தது.

"அது நீங்க வர லேட்டாகிடுச்சு ப்ளஸ் மொபைல் சுவிட்ச் ஆப் அப்புறம் டிவில நிலச்சரிவுனு நியூஸ் வந்ததும் கொஞ்சம் பயந்துட்டேன். என்னை விட அத்தை தான் ரொம்ப பயந்துட்டாங்க" என்று மனதை நிலைப்படுத்தி பதிலை கூற,

"ஓ…" என்றவனது பதிலுக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் இவள் பார்த்தாள்.

இவள் விழிப்பதை கண்டவன் ஏதும் கூறாது அலைபேசியினுள் புகுந்துவிட மகிழ் விட்டால் போதுமென போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

ஆனால் உறக்கம் வரவில்லை. விழிகளை மூடினாள் நடந்த நிகழ்வு தான் நினைவிற்கு வந்தது.

அதோ அவனை கண்டதும் ஆசுவாசம் அடைந்த மனதினை கொண்டு தன்னுடைய நிலையை உணர்ந்துவிட்டாள்.

உணர்ந்த விடயம் அத்தனை உவப்பானாக இல்லை. ஆம் அவன் மீது தனக்கு இருப்பது நேசம் என்று புரிந்து கொண்டாள்.

இத்தனை நாளாக அவன் செய்த உதவிக்கு குருவை கடவுளாக பாவித்தவளுக்கு தனக்கு அவன் மீது உள்ளது பக்தி இல்லை நேசம் என்று தெரிந்து கொண்டாள்.

தெரிந்த கணம் இதயம் தாளம் தப்பியது. குரு பிரசாத் மீது தனக்கு தேசமா…? அவர் எங்கே தான் எங்கே.

அவர் கோபுரத்தில் வாழ்பவர் தான் குடிசையில் இருப்பவள்.‌ அவருடன் ஒப்பிடுகையில் தனக்கு என்ன தகுதி இருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலான உண்மை ஒன்று அவனுக்கு ஹனிகாவின் மீது நேசம் இருந்தது. ஹனிகாவை பார்க்கும் நேரம் எல்லாம் குருவின் விழிகளில் வழிந்திடும் நேசத்தை கண்டிருக்கிறாளே…

சில முறை அவளே இருவரும் ஒருவருக்கொருவர் பிறந்தது போல அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று தானே நினைத்தது உண்டு.

குரு பிரசாத் ஹனிகாவிற்கு சொந்தமானவர். அடுத்தவருடைய உடைமைக்கு ஆசை படுவது மிகப்பெரிய தவறு. அதனை தான் செய்ய கூடாது என மனதில் எண்ணம் பிறக்க விழிகளின் ஓரம் கசிந்தது.

தகுதிக்கு மீறி ஆசைப்படாதே. அவர் உனக்கு கடவுள் அவரை நீ ஆராதிக்கலாம் தவறில்லை ஆசைப்பட கூடாது.

அவர் உனக்கு செய்த உதவிகளை நினைத்து பார்த்திருந்தால் நீ இத்தகைய எண்ணம் கொண்டிருப்பாயா…?

உன்னுடைய எண்ணம் தெரிந்தால் அவர் உன்னை பற்றி எத்தனை கீழ்த்தரமாக நினைப்பார். வேறொருவருக்கு சொந்தமாக போகிறவர் மேல் ஆசை வைப்பது எவ்வளவு பெரிய குற்றம்.

அதுவும் இந்த ஆசைப்படுவதற்கு
எல்லாம் ஒரு தகுதி வேண்டும் அது உன்னிடம் எந்த காலத்திலும் இருக்காது. ஹனிகா எங்கே நீ எங்கே.

அவரோடு ஒப்புமை படுத்தி கொள்ளும் அளவிற்கு கூட உனக்கு எந்த வித தகுதியும் இல்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலே உதவி செய்தவருக்கு உபத்திரவம் செய்வது மகா பாவம். என்னால் உங்களுடைய குடும்பத்தில் எந்தவித பிரச்சனையும் வராது என்று வாக்கு கொடுத்திருக்கிறாய்.

அவருடைய வாக்கிற்காக குரு எவ்வளவு பெரிய உதவியை உனக்கு செய்திருக்கிறார். இதை எல்லாம் மறந்து அவருக்கு துரோகம் இழைக்க போகிறாயா…? என்று மனம் கேட்டது.

'இல்லை என்றைக்கும் என்னால் அவர் வாழ்வில் எந்தவித சிக்கலும் வராது' என்று தனக்குத்தானே கூறி கொண்டாள்.

நீ நினைப்பது சரி தான் அவர் உனக்கு கடவுள்.

கடவுளை வணங்குவதற்கு மட்டும் தான் பக்தைக்கு உரிமை உள்ளது அவரை சொந்தம் கொண்டாட அல்ல என்று எண்ணியவள் அடுத்த கணமே தனக்குள் முளைத்த நேசம் தன்னுடனே போகட்டும் என்று முடிவு செய்தாள்.

அரும்பிய வேகத்திலே கருகிய தனது நேச மலரை நினைக்கையில் மகிக்கு அழுகை பெருகியது.

ஒவ்வொரு செயலிலும் நேசத்தை பொழியும் தாய் தந்தையரை காண்கையில் தனக்கும் இப்படி ஒரு நேசம் கிடைத்தால் வாழ்க்கை அழகாக இருக்குமே என்று பல முறை நினைத்தது உண்டு.

ஆனால் இப்போது முளைத்த நேசத்தை முளையிலே கிள்ளிவிட நேரிடும் என்று மனது ஒரு போதும் எண்ணியதில்லை.

விழிகளில் சூடான நீர் சரசரவென இறங்க அதனை துடைத்த படியே இருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.

அடுத்தடுத்து நாட்கள் நகர அவள் நினைத்தது போல குருவை அவனது நினைப்பை தனது நேசத்தை அத்தனை சுலபத்தில் விட்டுவிட முடியாது என்று தோன்றியது.

விழியும் மனதும் எந்நேரமும் அவனை தான் தேடியது. தன்னுடைய நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே உழன்றது. மனதும் ஏனோ தனிமையை அதிமாக தேடியது.

எதுவும் பிடிக்கவில்லை யாரிடமும் பேச பிடிக்கவில்லை.‌ என்னவோ வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

இப்படியே போனால் தான் என்னாவது என்று அஞ்சியவள் தனிமையில் இருக்கும் நேரத்தை வெகுவாக குறைத்து கொண்டாள்.

தன்னை எந்நேரமும் எதாவது ஒரு வேலையில் மூழ்கடித்து கொண்டாள். காலையில் எழுந்ததும் சமைப்பது பிள்ளைகளை கவனிப்பது என்று எதாவது ஒன்றை செய்து கொண்டே இருந்தாள்.

அவனோடு இருக்கும் வரைக்குமாவது தனக்கான நினைவுகளை சேர்த்து வைத்து கொள்வோம் இதன் பிறகு தன் வாழ்வில் யாருமில்லை.

இந்த நினைவுகளுடனே மீத வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் என்று எண்ணி கொண்டாள்.

முன்பே கோதையையும் பிறை சூடனையும் நன்றாக கவனித்து கொண்டவளுக்கு இப்போது சொல்லவா வேண்டும்.

கொண்டவனின் குடும்பத்தினரை தன்னுடன் குடும்பத்தினராக நினைத்து மிகவும் நன்றாக பார்த்து கொண்டாள்‌. அதனோடு சேர்த்து குருவையும் கவனித்தவளுக்கு அவனுக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் கருத்தில் பதிய அவனுக்கு பிடித்த உணவுகளை பார்த்து பார்த்து செய்தாள்.

இத்தனையும் மிகவும் கவனமாக தான் செய்தாள். எந்த புள்ளியிலும் தன்னுடைய நேசம் குருவிற்கு தெரிந்துவிட கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருந்தாள்.

நினைவுகளை தூர விரட்டியவள் பிள்ளைகளுடன் தன் பொழுதை கழித்துவிட்டு மாலை வந்ததும் எளிமையான‌ ஒரு புடவையில் தயாராகி இருந்தாள்.

குழந்தைகளையும் தயார் செய்து கொண்டிருந்தாள். குரு தான் மாலை விரைவாக வந்து விடுவதாக பிள்ளைகளிடம் கூறி இருந்தானே.

வருவதாக சொன்னால் நிச்சயமாக வந்துவிடுவான் என்று தெரியும் ஆதலால் தான் தயாராகி கொண்டு இருந்தனர்.

இருவருக்கும் உடை மாற்றிய பிறகு வெளியே அழைப்பு மணி ஓசை வர எழுந்து வெளியே சென்றாள்.

வாசற்கதவில் காவலாளி இருந்தாலும் வீட்டில் தான் மட்டும் பிள்ளைகளுடன் இருந்ததால் கதவை பூட்டி இருந்தாள்.

'அதற்குள் வந்துவிட்டாரா?' என்று எண்ணியபடி வந்தவள் கதவை திறக்க வாசலில் குரு பிரசாத் நின்று இருந்தான்.

"சீக்கிரமாவே வந்துட்டிங்களா சார். நான் இன்னும் பசங்களை ரெடி பண்ணவே இல்லை" என்று பதில் மொழிந்தபடி‌ திரும்பி நடக்க,

"மகிழினி…" என்றவனது அழுத்தமான குரல் அவளை நிறுத்தியது.

அப்போது தான் அவனது குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவள் திரும்பி பார்க்க,

"எத்தனை நாளா நீயும் உன் தம்பியும் இந்த பிளான போட்டிங்க?" என்று அழுத்தமாக வினவியவனது முகம் செந்தணலாக இருக்க,

"என்ன… என்ன பிளான்?" என்றவளுக்கு அவனது முகத்தை கண்டதும் உள்ளுக்குள் பயம் அப்பியது.

"டோன்ட் ஆக்ட் லைக் அ இன்னசென்ட் இடியட்…" என்று ஏகமாய் கத்தியவனது குரலில் நடுங்கி தான் போனாள்.

"நிஜமா எனக்கு என்ன சொல்றிங்கன்னு புரியலை" என்றவளது விழிகளில் நீரீப்படலம்.

"ச்சை அழுது தொலைக்காத… இப்படி அழுதழுது தான் நல்லவ மாதிரி ஏமாத்தி இருக்க என்னை. நானும் முட்டாள் மாதிரி ஏமாந்து இருக்கேன்…"

"..."

"இப்படி‌ ஒரு பணக்கார வாழ்க்கையில சொகுசா வாழ்ந்ததும் இங்கயே செட்டில் ஆகிடலாம்னு ஆசை வந்திடுச்சா…? என்னோட மிஸ்டேக். வாசலோட நிறுத்த வேண்டிய உன்னை என் பெட்ரும் வரை அலோவ் பண்ணது என் மிஸ்டேக் தான் ஹவ் சீப் யூ ஆர். பணத்துக்காக என்ன வேணா செய்விங்களா…" என்றவன் இறுதியில்,

"சீ…" என்று அருவருப்பாய் முகம் சுழிக்க,

இத்தனை நேரம் அவனது வார்த்தைகளில் அதிர்ந்து ஆயிரம் பாகங்களாய் உடைந்துவிட்டவளுக்கு அவனுடைய இறுதி வார்த்தையான,

'பணத்துக்காக என்ன வேணா செய்விங்களா?' என்பதும்,

'சீ…' என்ற முகசுழிப்பும் தன் மானத்தே தீண்ட,

"போதும் நிறுத்துங்க சார்‌. நான் அப்படி என்ன செஞ்சுட்டேன்னு இப்படி பேசுறிங்க" என்று அழுகையில் துடிக்கும் உதடுகளுடன் கையை அவன் முன் நீட்டியிருந்தாள்.

"செய்றதை எல்லாம் பிளான் பண்ணி செஞ்சிட்டு இப்போ வரைக்கும் எதுவுமே தெரியாத மாதிரி நடிச்சிட்டு இருக்க. இத்தனை நாளும் இப்படி தான் ஏமாத்தி இருக்க"

"..."

"உன்னை உன்னை என் லைஃப்ல அலோவ் பண்ண என்ன சொல்லணும். அதான் உன் தம்பியை டாக்டருக்கு படிக்க வச்சு உன்னோட மகனையும் காப்பாத்தி கொடுத்துட்டேனே. சும்மா இல்லை அறுபது லட்சம் கொடுத்து அவன் உயிரை காப்பாத்தி இருக்கேன். அந்த நன்றிக்கடன் கொஞ்சமாவது இருந்தா இப்படி‌ பண்ணி இருப்பிங்களா…?"

"..."

"என் ஆபிஸ்ல என்கிட்ட சம்பளம் வாங்குற உன்னை என் வீட்டுக்குள்ள விட்டது எவ்ளோ பெரிய தப்புனு இப்போ தான் புரிஞ்சது. அக்காவும் தம்பியும் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்ளோ க்ளவரா பிளான் பண்ணி இருக்கிங்க. உன்னை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வச்சிருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா…? சீ என் கண் முன்னாடி நிக்காத போ இங்க இருந்து" என்று உச்சஸ்தானியில் கத்த அவனது வார்த்தையில் எப்போதோ மறித்து சிதைந்திருந்தவள் பயத்தில் நடுங்கி விழப்போனவள் அப்படியே கால்களை மடித்து அமர்ந்து இரு கைகளையும் கொண்டு காதை மூடி,

"போதும் ப்ளீஸ் ப்ளீஸ் இதுக்கு மேல என்னால கேட்க முடியாது" என்று அழுகையில் கரகரத்தவள்,

"தயவு செய்து என்ன நடந்தச்சுனு சொல்லுங்க. என் பிள்ளைங்க மேல சத்தியமா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது" என்று கேவலை அடக்கியபடி கூறினாள்.

தன்னுடைய அலைபேசியை எடுத்து உயிர்ப்பித்தவன் ஒரு காணொளியை எடுத்து அவளிடம் காண்பிக்க,

அதனை நடுங்கும் கரங்களால் வாங்கி பார்த்தவள் ஏகமாய் அதிர்ந்துவிட்டாள்…









 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Enna video ah guru kaamichathu magi athuvum magi ah indha alavuku kevalam ah pesura alavuku andha video la apadi enna iruku nu than theriyala
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Smooth tha move pannika ippo enna twist enna video 🙄🙄ayoo mahima romba povom 🥺🥺🥺
 
Top