• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

கவி_02

New member
Messages
14
Reaction score
16
Points
3
கள்வ கண்ணனே
வண்ண பூந்தோட்டமாய்
என் மேனி வாசல் பார்த்து
உன் வரவை நோக்குதடா!!..
அலைபாயும் கண்களும்
ஆடவன் உன் கட்டுடலில்
சிக்கி முக்கி நடத்துதடா!!..
உனக்காய் தேனை
சிந்தும் இதழ்களும் இன்று
தேன் எடுக்கும் வண்டு
உன்னை தேடி அலையுதடா!!..
கொடியிடையும் உன் விரல்
தீண்டாது கோவிக்கிறதடா!!..
சுவாசக் குழாயும் உந்தன்
மூச்சு காற்று காணாது
உள்ளுக்குள் மடிகிறதடா!!..
மொத்தமாய் பொன்மேனி
ஒன்றின் மனதுக்குள்
போர்க்களம் நடக்கிறதடா!!..
நிந்தன் தீண்டாமையில்
தீயாக மேனி கொதிக்க
குளிர்வூட்டும் காளையன்
நீயோ தொலைதூரம்!!..

கனவுகளின் கண் இவள்
பிரியா ரியா..
 
Top