கவிதை 8
"ஹரி உனக்காக ஒரு கிஃப்ட் கொண்டு வந்துருக்கேன். எதுக்குனு கண்டுபிடி…" என்ற படி அவனருகில் அமர்ந்தாள் ப்ரஷி.
ஹரியை ரெஸ்டாரன்ட்டில் பார்த்த பிறகு இருவரும் தினமும் கேண்டின் அருகில் உள்ள ஸ்டோன் பெஞ்சில் சந்தித்து கொண்டனர்.
தினமும் உணவு இடைவேளையின் போது வந்து அவனை சந்தித்துவிட்டு தான் ப்ரஷாந்தி செல்வாள்.
ஹரியும் அவனது வருகைக்காக தினமும் காத்திருப்பான்.
அப்படி வரமுடியாத சூழ்நிலைகளில் செய்தி அனுப்பிவிடுவாள்.
இப்பொழுது எல்லாம் வாட்ஸப்பில் நிறைய பேசினார்கள்.
ஏதோ ஓரிடத்தில் இருவருக்கும் அலைவரிசை ஒத்து போக அதன் வழியில் பயணம் செய்து வாழ்வின் நீட்சிகளை தொட்டுவிடும் முயற்சியை பயின்றனர்.
அவன் பத்து மணிக்கு வேலை முடித்து விட்டு வரும் வரை காத்திருந்து ப்ரஷாந்தி செய்தி அனுப்பினாள்.
"என்ன கிஃப்ட். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்…?" என்று வினவியபடி அவள் புறம் திரும்பினான்.
"நீ கரெட்டா சொன்னா தான் உனக்கு கிஃப்ட்" என்று ப்ரஷாந்தி கூறிவிட,
ஹரி சிந்தித்தான் பரிசு கொடுக்கும் அளவிற்கு இன்று என்ன சிறப்பு என்று.
'ஒருவேளை இவளுக்கு பிறந்த நாளாக இருக்குமோ…?' என்ற எண்ணம் வர, மறுநொடியே இருக்காது அவளது பிறந்தநாளிற்கு எனக்கெதற்கு பரிசளிக்க வேண்டும் என்று சிந்தித்தவன் அவளிடம் தெரியவில்லை என்று தலையாட்டினான்.
"ரியல்லி ஒரு கெஸ்ஸிங் கூட இல்லையா…?" என்று தலையாட்டலுடன் வினவ,
அவளது தாளத்திற்கு ஏற்ப அசைந்தாடும் அவளது ஜிமிக்கியில் அவனது பார்வை படிய ரசனையுடன் தலை சாய்த்து பார்த்தான்.
அவனது பார்வை மாற்றத்தை உணர்ந்தவளின் கன்னங்கள் சிவப்பேற துடிக்க சடுதியில் அவஸ்தையுடன் பார்வையை அவனிடமிருந்து திருப்பி கொண்டாள்.
இருந்தும் கன்னங்கள் வானவில்லின் சிவப்பு வன்னத்தை பூசி கொண்டதில் அவனது பார்வையில் ரசனை கூடியது.
அந்த ஜிமிக்கை விரலால் வருட மனம் உந்தி தள்ள ஏதும் கூறாது விழிகளால் அவளை தொடர்ந்த படி இருந்தவன் அவளது அவஸ்தையை புரிந்து கொண்டு விழியகற்றினான்.
ஹரி எப்போதும் இப்படி தான். பேசி கொண்டு இருக்கும் போதே அவனது பார்வையில் ரசனை கூடிவிடும்.
தலையை சரித்து அவன் பார்க்கும் பாவனையே பாவையவளுக்கு அவனது செயலை கட்டியம் கட்டி கூறிவிடும்.
அதன் பின்னர் இவள் தான் அதனை எதிர்கொள்ள முடியாமல் கூச்சத்தினால் அவதிபடுவாள்.
அவன் பார்வையை மாற்றிவிட்டான் என்பதை உணர்ந்தவள், "இன்னைக்கு எனக்கு பர்த்டே அதான் உனக்கு கிஃப்ட் கொண்டு வந்திருக்கேன்" என்க,
"ரியல்லி…?" என்று வினவியவன்,
"விஷ்ஷிங் யூ அ ஹாப்பி பர்த்டே" என்று கை குலுக்க,
ப்ரஷாந்தியும் புன்னகையுடன், "தாங்க்ஸ்…" என்று நன்றி நவிழ்ந்தாள்.
"உன்னோட பர்த்டேக்கு நான் தான் உனக்கு கிஃப்ட் தரணும். நீ எனக்கு கிஃப்ட் கொண்டு வந்திருக்க…?" என்று வினவ,
"சும்மா ஒரு சேன்ஜ்க்கு" என்று புன்னகையுடன் கண்சிமிட்டியவள் அவன் முன் பரிசை நீட்ட,
ஹரியும் புன்னகையுடன் பெற்று கொண்டான்.
"பிரிச்சு பாரு உனக்காக தேடி தேடி வாங்கிட்டு வந்தேன்…" என்று ப்ரஷி கூற,
ஹரியும் ஆர்வத்துடன் பிரிக்க, உள்ளே கருப்பு நிறத்தில் அழகிய கைக்கடிகாரம் இருந்தது.
அதன் தோற்றமே கூறியது அது சற்று விலை உயர்ந்தது என்று.
ஹரி வாட்ச்சை ஒரு முறை பார்த்துவிட்டு அவள் முகம் நோக்க,
"என்ன ஹரி என்னோட கிஃப்ட் உனக்கு பிடிச்சிருக்கா…? பர்ஸ்ட் டைம் உனக்கு கொடுக்கிறோமேன்னு தேடி பிடிச்ச வாங்குனேன்" என்று தேர்வு முடிவை எதிர்நோக்கும் பள்ளி சிறுமியின் பாவனையில் ஆர்வமும் ஆசையும் போட்டி போட அவன் முகம் கண்டாள்.
அதில் அவனது புன்னகை முகம் முழுவதும் விரவ, "ரொம்ப பிடிச்சு இருக்கு…" என்க,
ப்ரஷி,"ரியல்லி உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு திங்க் பண்ணிட்டேன் இருந்தேன்…" என்று இயம்பினாள்.
இன்னமும் மாறா சிரிப்புடன், "பர்த் டே பேபிக்கு என்ன கிஃப்ட் தரலாம். இப்போ என் கையில எதுவுமே இல்லையே…" என்று சிந்திக்கும் பாவனையில் வினவ,
அவளுக்கும் சிறிது ஆர்வம் பிறந்தது என்ன கொடுக்க போகிறான் என்று.
முதலில் அவனுக்கு தன் பிறந்த நாள் தெரியாது என்பதால் அவள் எந்த பரிசையும் எதிர்ப்பார்க்கவில்லை.
ஆனால் இப்போது அவனது கூற்றினாலும் இந்த பாவையினுள் ஆர்வம் பிறந்தது.
சாக்லேட்டை எதிர்பார்க்கும் குழந்தையின் அவாவுடன் தன்னெதிரே நிற்பவளின் விழிகளை இமைக்காமல் கண்டவன் அவளருகில் சென்று,
"பர்த் டே பேபிக்கு என்னையே கிஃப்ட்டா தரலாம்னு முடிவு பண்ணிட்டேன். கொடுத்திரலாமா…?" என்று கிசுகிசுப்புடன் வினவ,
அவனது பதிலில் முதலில் திகைத்தவள் பின்னர் உணர்ந்து சட்டென்று அவனிடமிருந்து எழுந்து நின்று விட்டாள்.
அவனது வார்த்தையை கிரகிக்க தனக்குள் உள்வாங்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது தெரிவைக்கு.
உடலில் உள்ள குருதியெல்லாம் முகத்திற்கு பார்த்துவிட்டது.
வேறு எதாவது கொடுப்பான் என்று எதிர்ப்பார்த்தவள் இதனை சுத்தமாக நினைத்து பார்க்கவில்லை.
இத்தனை நாட்கள் சொல்லி கொள்ள படாமல் மெல்லிய இழையாய் பட்டும் படாமல் தொடர்ந்து கொண்டு இருந்த ஒன்றிற்கு நேசத்தால் உறவுப்பாலத்தை அமைத்திடுவான் என்று அவள் கிஞ்சித்தும் எண்ணவில்லை.
மூளையும் மனமும் ஒரு ஸ்தம்பித்துவிட எழுந்து நின்று விட்டாள்.
அவளது நிலையை உணர்ந்தவன் சில நொடிகள் அவகாசமளித்து விட்டு பின் அவளது கரங்களை பற்றி, "என்ன கொடுக்கலாமா…? கொடுத்தா வாங்கிப்பியா…?" என்று வினவ,
உள்ளுக்குள் உணர்வுகள் ஆர்ப்பரிக்க தலையை நிமிர்த்தாது, "ஹ்ம்ம்…" என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்தாள்.
"சரியா கேக்கலை. இங்க என்னை பார்த்து சொல்லு…" என்று கூற,
தயங்கியவாறு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், "வாங்கிப்பேன்" என்றாள்.
"நோ ரிட்டன் அப்புறம் கிஃப்ட் எக்ஸ்பைர் ஆகிடுச்சுனு சொல்லி பேச்சு மாற கூடாது" என்று குறும்பு கொப்பளிக்கும் குரலில் கண்சிமிட்டி வினவ,
அதில் எழுந்த சிரிப்பில், "ம்ப்ச் ச்சு போ ஹரி…" என்று அவளது விளையாட்டு புரிந்து தோளில் அடித்தாள்…
இருவருக்கும் அது வாழ்வில் மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது.
ப்ரஷியும் அவனிடமிருந்து இதனை எதிர்ப்பார்க்கவில்லை.
ஹரியும் இன்று அவளிடம் காதலை கூறிவிட வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை.
இந்த பொல்லாத நேசம் எப்பபோது கரையுடைக்கும் என்று யாவருக்கும் தெரிவதில்லை.
இருவரது முகத்தினிலும் நிறைவான புன்னகை.
மௌனத்தின் வழியாக இருவரும் நேசத்தை ஆழ்ந்து சுவாசித்தனர்…
"என்ன ஹரி வேற லெவெல்ல என்ஜாய் பண்ற போல" என்று சற்று தள்ளி ஒலித்த குரலில் இருவரும் நடப்புக்கு வந்தனர்.
ஹரியிடம் வினவியது அவனது வகுப்பு தோழர்கள் தான்.
அவர்கள் எந்த நேரம் இவர்களை கடந்து சென்றாலும் கிண்டலடிக்காமல் செல்வதில்லை.
இவர்கள் இருவரும் புன்னகையுடன் புறந்தள்ளிவிடுவார்கள்…
இன்றும் அதே போல தான் வினவினார்கள்.
கூட்டத்தில் இருந்த ஒருவன், "காலேஜ்லே டூயட் பாடுறிங்க போல…" என்று சிரிப்புடன் இணைந்திருந்த அவர்களது கரத்தின் மீது பார்வையை பதித்தவாறு கூற,
பட்டென்று இருவரும் கையை விலக்கி கொண்டனர்.
நேசத்தில் திளைத்திருந்தவர்கள் பிணைந்திருந்த கரங்களை மறந்துவிட்டிருந்தனர்.
ஹரி எழுந்து, "டேய் இப்போ உதை வாங்க போறிங்க. போங்கடா…" என்று கண்ணோரச் சிரிப்புடன் மிரட்ட,
"இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். யூ என்ஜாய்" என்று மேலும் கலாய்த்து விட்டு தான் அகன்றனர்.
இன்னும் இவர்கள் இருவரது முகத்திலும் சிரிப்பு மிச்சமிருக்க, ஹரி அவளருகே அமர்ந்தவன் தன் விரலில் இருந்த ஒரு மோதிரத்தை கழட்டி அவள் விரலில் அணிவித்தான்.
ப்ரஷாந்தி வியப்புடன் பார்த்து, "அதான் ஏற்கனவே ஒரு ப்ரைஸ்லெஸ் கிஃப்ட் கொடுத்துட்டியே…" என்க,
"இது அந்த கிஃப்ட கொடுத்ததுக்கான கன்பர்மேஷன்" என்று சிரித்தவன்,
"இது ஆர்ப்பனேஜ்ல பாதர் எனக்கு சின்ன வயசுல கிஃப்டா கொடுத்தது. இதுவரைக்கும் கழட்டுனதே இல்லை" என்று கூற,
ஆசையாக அதனை வருடியவள், "நானும் இதை எப்பவுமே கழட்ட மாட்டேன்" என்று பதில் மொழிந்தவள் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்.
அதை வைத்தே அவளுக்கு நேரமாகிவிட்டது என்று ஹரி புரிந்து கொள்வான்.
ஹரியுடன் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் அவள் பிரிந்து செல்ல விரும்புவதில்லை. அதன்காரணமாக வாயை திறந்து நேரமாகிவிட்டது என்றும் கூறுவதில்லை.
அவள் கடிகாரத்தை பார்த்தாளே அவளுக்கு நேரமாகிவிட்டது என்பதை அவனே புரிந்து கொள்வான்.
"உன் ஃப்ரெண்ட்ஸ் உனக்காக வெயிட் பண்ண போறாங்க. கிளம்பு" என்றான்.
ப்ரஷாந்தி விழியசைத்து விடைபெற, ஹரியும் தலயசைத்தான்.
ப்ரஷாந்தி வந்தவுடன், "ப்ரஷி ஹரி என்ன கிஃப்ட் கொடுத்தான்…? என்ன சொன்னான்…?" அவளது நண்பர்கள் அவளை பிடித்து கொண்டனர்.
ரேஷ், "ஷ்… கொஞ்சம் அவளை பேச விடுங்க… அவனுக்கு ப்ரஷி பர்த்டேவே தெரியாது அப்புறம் எப்படி கிஃப்ட் கொடுப்பான்" என்க,
மேனகா, "அப்படியா…? அவனுக்கு உன் பர்த்டே தெரியாதா…?" என்று வினவ,
"ஹ்ம்ம் ஆமா தெரியாது" என்றவள் பின்னர் புன்னகையுடன்,
"ஆனாலும் கிஃப்ட் கொடுத்தான்" என்றாள்.
அவளது புன்னகையை கண்டு நண்பர்கள் கூட்டம், "ஹோ…" என்று கூச்சலிட்டது.
"பார்றா…என்ன கிஃப்ட் …" என்று வினுஷா வினா எழுப்ப,
"இதோ இந்த ரிங்கை கொடுத்தான்" விரல்களை காண்பித்தாள்.
மேனகா, "பழைய ரிங்கை கொடுத்து உன்னை ஏமாத்திட்டான்டி… வேற எதாவது பெருசா கேட்ருக்க வேண்டியது தானே…" என்று விளையாட்டை கூற,
"இது மட்டும் இல்லை. இன்னொன்னும் சேர்த்து கொடுத்தான்…" என்றவளின் முகம் நாணத்தால் வண்ணம் மாறிவிட்டது.
ப்ரஷாந்தியின் வெட்கத்தில் எல்லோருக்கும் ஆர்வம் தொற்றி கொண்டது.
"நீ இப்படி வெட்கப்படுற அளவுக்கு என்னடி கொடுத்தான்…" என்று ஆர்வம் மின்ன ரேஷ்மா வினா தொடுக்க,
"அது…" என்றவள் தயக்கத்துடன் நிறுத்த,
பொறுமை இழந்த வினுஷா, "சீக்கிரம் சொல்லுடி…" உந்தினாள்.
"அவன் அவனையே எனக்கு லைஃப் புல்லா கொடுக்குறேன்னு சொல்லிட்டான்…" என்றவள் முகத்தை கரங்களால் மூடி கொண்டாள்.
இதனை கேட்ட ப்ரஷாந்தியின் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
மீண்டும், "ஹே ப்ரஷி கமிட் ஆகிட்டா…" என்று கூச்சலிட்டனர்.
வருண், "பர்த்டே ட்ரீட்டோட சேர்த்து கமிட் ஆனதுக்கும் டபுள் ட்ரீட் கொடுத்திரு" என்று கூற, எல்லோரும் அதனை பிடித்து கொண்டு அவளிடம் கேட்டு அவளது பர்ஸை அன்று காலியாக்கிவிட்டு தான் ஓய்ந்தனர்…
******************
இருள் மெல்ல கவிழ்ந்து பாரியவன் மறைய தொடங்கும் நேரம் வானத்தை வெறித்த படி நின்றிருந்தாள் ப்ரஷாந்தி…
அவளது சிந்தை முழுவதும் ஹரி ஹரி ஹரி கிருஷ்ணா மட்டுமே…
இந்த நொடி வரை அவனை கண்டதை நம்பமுடியவில்லை.
அவனை இங்கு காண்போம் என அவள் நினைத்திருக்கவில்லை.
அவன் வருவதை யாரும் அவளிடம் கூறவில்லை…
முற்று முழுதாக நான்கு ஆண்டுகள் கழித்து அவனது வாசம் நாசியை நிறைக்க அவனது உருவம் விழிகளை நிறைத்தது.
அவனை கண்ட அந்நொடி உள்ளுக்குள் உருவம் இல்லாத ஒன்று நழுவியது.
அந்நொடியை நினைக்க இப்போதும் அந்த நடுக்கம் உள்ளம் உறைந்திட்டது.
எத்தனை முயன்றும் மனது அவனை கண்ட நொடியில் தான் நின்றது.
கண்ணெதிரில் நிற்பவனை அவளால் நம்ப முடியவில்லை.
உலகத்தோடு சேர்த்து உள்ளமும் உறைந்திட இமை சிமிட்டாது அவனை பார்த்தாள்.
அந்த நொடியை அவளால் கடக்க முடியவில்லை.
உடலில் உள்ள மொத்த சக்தியும் வடிந்தது போல கால்கள் தொய்ந்துவிட்டது.
வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வுகள் அவளை சுழற்றியடிக்க விழிகளில் நீர் நிரம்பி விட அவன் பிம்பம் மங்கலாக தெரிந்தது.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது என்று தோன்றிவிட கண்களை துடைத்த படி அங்கிருந்து அறைக்கு ஓடி வந்து விட்டாள்.
எதிலிருந்து யாரிடமிருந்து தப்பிப்பதற்க்காக ஓடி வந்தாள் என்று அவளுக்கே தெரியாது.
கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தவளின் விழிகள் நீரை உகுத்தது.
நிஜத்தில் உறவாடிய நிகழ்வுகள் நினைவுகளில் நழுவி சென்றது.
வாழ்வின் இழப்புகள் நெருஞ்சியா நெஞ்சை தைக்க அதன் கணம் தாங்காது தலையை பிடித்த படி அமர்ந்துவிட்டாள்.
எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளோ யாரோ கதவை திறக்கும் அரவம் கேட்க விழிகளை அழுத்தி துடைத்து கொண்டாள்.
உள்ளே நுழைந்த மேனகா, "ஏன் டி அதுக்குள்ள வந்துட்ட. எல்லாரும் சேர்ந்து செம்ம என்ஜாய்மென்ட் பண்ணோம்" என்க,
"லைட்டா தலைவலி டி. அதான் ரூம்க்கு வந்துட்டேன்" என்று பதில் மொழிந்தாள்…
"என்ன திடிர்னு தலைவலி…?" என வினவியபடி அருகில் வந்தவள் அவளது சிவந்த முகத்தை பார்த்து,
"முகமெல்லாம் ஏன் இப்படி ரெட்டிஷ்ஷா இருக்கு. எனி இஸ்யூஸ்" என்று நெற்றியில் கை வைத்து பார்க்க,
"க்ரீம் பூசுனதுனால அப்படி இருக்கு. கொஞ்ச நேரத்தில நார்மல் ஆகிடும்" என்றாள்.
"நான் போய் ஹெட் ஏக்குக்கு டேப்லெட் வாங்கிட்டு வரவா…?" என வினா எழுப்ப,
"இல்லை டேப்லெட் வேண்டாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்" மறுத்துவிட்டாள்.
"சரி டி ரெஸ்ட் எடு. யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்றேன்" என்று வெளியேறிவிட்டாள்.
அதன் பின் ப்ரஷாந்தி படுக்கையில் விழுந்து பயணகளைப்பில் ஆழ்ந்த உறங்கியும் விட்டாள்.
யாரும் அவளை மதிய உணவிற்கு கூட தொந்திரவு செய்யாததால் மாலை நேரம் தான் எழுந்தாள்.
உறங்கி ஏழுந்ததில் மனம் சற்று தெளிவடைந்திருந்தது.
வெளியே செல்ல மனமில்லாமல் அறைக்குள்ளே இருந்தவள் சாரளத்தின் வழியாக வானத்தை வெறிக்க ஆரம்பித்துவிட்டாள்.
"எழுந்திட்டியா ப்ரஷி. இப்போ ஹெட் ஏக் எப்படி இருக்கு. பரவாயில்லையா…?" என வந்தாள் வினுஷா.
"ஹ்ம்ம் மச் பெட்டர் வினு" என்று புன்னகைத்தாள்.
"இன்னும் பேஸ் டல்லா தான் இருக்கு. டின்னருக்கு வா. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்க,
ப்ரஷிக்கு அங்கே ஹரி இருப்பானே என்று தான் முதலில் தோன்றியது.
அவனை எப்படி எதிர்கொள்வது என்று தான் தெரியவில்லை. ஒரு நொடி சிந்தித்தவள் எப்படியும் இதனை கடந்து தான் ஆக வேண்டும் என நினைத்து,
"ஒரு டூ மினிட்ஸ் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்" என்று பதில் மொழிந்தாள்.
"சரி டி. லேட் பண்ணிடாதா எல்லாரும் வெயிட் பண்றாங்க" என்று வினு வெளியேற,
ஒரு பெருமூச்சுடன் உடை மாற்ற சென்றாள் ப்ரஷாந்தி.
ஐந்து நிமிடங்களில் உடை மாற்றி அவளது விருப்பமான மெஸ்ஸி போனி டெய்லை கண்ணாடியில் சரி பார்த்து விட்டு கதவை திறக்க,
அவளது காலடியில் வந்து விழுந்தது ஒரு பல வண்ண பந்து.
அதை குனிந்து எடுத்தவள் யாருடையது என்று பார்க்க,
"அது என்னோடது…" என்று கூறியபடி தனது இரட்டை குடுமியை ஆட்டியபடி தத்தி நடந்து வந்தது ஒரு அழகு குழந்தை.
குழந்தையை கண்டதும் ப்ரஷாந்தி முகம் பிராசிக்க, "ஹே க்யூட் டால் இந்த பால் உன்னோடதா…?" அவளுயரத்திற்கு குனிந்து வினவ,
"ஆமா ஆன்ட்டி…" என்று அழகாய் தலையாட்டியது அந்த குழந்தை.
பந்தை குழந்தையிடம் நீட்டியவள், "டால் உங்க நேம் என்ன…?" என வினவ,
அது பதில் கூறும் முன்னர்,
"லாவி எங்க போய்ட்ட…" என்றவாறு அங்கு வந்து சேர்ந்தாள் ரேஷ்மா.
ரேஷ்மாவை கண்டதும் குழந்தை, "மம்மி வந்துட்டாங்க" என்று அவளிடம் ஓட, இதை கண்ட ப்ரஷாந்தி அதிர்ந்து நின்றுவிட்டாள்.
அவளால் நம்ப முடியவில்லை அது ரேஷ்மாவின் குழந்தை என்று.
இத்தனை வருடமாக எங்கும் செல்லாமல் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தவளுக்கு ரேஷ்மாவிற்கு குழந்தை பிறந்த விடயம் தெரியவில்லை.
திருமணம் ஆனது மட்டும் தான் தெரியும்.
திகைப்பில் விழி விரித்தவள், "ரேஷ் இது உன் பேபியா…?" என வினவ,
ரேஷ்மா அவளுக்கு பதில் கூறாது, "லாவி அம்மாட்ட சொல்லாம விளையாட போக கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. வா போகலாம்" என்று லாவியின் கையை பிடித்தாள்.
"ரேஷ் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். பதில் சொல்லுடி உன் பேபியா. செம்ம க்யூட்" என அவளது தோளை தொட,
சடுதியில் அவளது கையை எடுத்து விட்டவள், "யார் நீங்க…?" என வினவ,
ப்ரஷாந்தி அவளது வினாவில் அதிர்ந்து அவள் முகத்தை சமீபித்தாள்.
"ஹே இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும். எல்லாரும் சாப்பிட வெயிட் பண்றாங்க" என்று மேனகா வர,
"இதோ வர்றேன் டி…" என்றவள் ப்ரஷாந்தியை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு செல்ல, ப்ரஷாந்தி தான் அவள் செயலின் அர்த்தம் விளங்காது விழித்துவிட்டு அவர்களோடு சென்றாள்.
உணவு கூட்டத்திற்குள் நுழைந்தவளின் பார்வை சுழல அவளையே பார்த்த படி அமர்ந்திருக்கும் ஹரியிடம் தான் வந்து நின்றது.
உடனே பார்வை திருப்பியவளின் இதயம் தடதடத்தது. அவனின் புறம் பார்வையை திருப்பாது வந்து அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
எல்லோரும் பேசி சிரித்த படி உணவை உட்கொள்ள ப்ரஷாந்தி இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை.
சாப்பிட்ட படி இருந்தவளின் விழிகள் அவன் புறம் திரும்ப அருகிலிருந்த சஞ்சயிடம் ஏதோ புன்னகையுடன் பேசி கொண்டு இருந்தான்.
ஆனால் அந்த புன்னகையில் உயிர்ப்பு இல்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
அவளது பார்வையை உணர்ந்த ஹரியும் அவள் புறம் திரும்பவில்லை.
அப்போது அதிர்ச்சியில் அவனை சரியாக பார்க்காதவள் இப்போது ஓர விழியில் பார்க்காதவாறு கண்டாள்.
கல்லூரியில் இளம்வயதில் இளைஞனாக இருந்தவன் இப்போது ஆறடி உயரத்தில் அதற்கேற்ற உடல்வாகுடன்
முகத்தில் முதிர்ச்சியுடனும் சிறிய தாடியுடன் முழு ஆண்மகனாக இருந்தான்.
முன்பை விட மேலும் அழகாக இருந்தான். காயாம்பூ நிறத்தில் லோ நெக் டீசர்ட்டும் கருப்பு நிறத்தில் ஜீன்ஸும் அணிந்திருந்தான்.
இருந்தும் முகத்தில் ஏதோ ஒன்று குறைந்ததை அவளால் அறிய முடிந்தது.
யோசனையுடனே சாப்பிட்டவள் எழுந்து சென்று கைகழுவி விட்டு திரும்ப அவளுக்கு மிக அருகில் நின்று இருந்தான் ஹரி கிருஷ்ணா…
இப்படி வந்து நிற்பான் என்று தெரியாததால் ஒரு நொடி அதிர்ந்து விலகி நின்று அவனை நோக்கினாள்…