அத்தியாயம் 5
அவன் தன்னருகில் நெருங்கியதை உணர்ந்தவள் மறுபுறம் இருந்த ரேஷ்மாவிடம் பேசுவது போல திரும்பி கொண்டாள்.
அவளை மேலும் சோதிக்க விரும்பிதவன் அவளது வரிசைக்கு இரண்டு வரிசை தள்ளி அமர்ந்திருந்த தனது நண்பர்களுடன் அமர்ந்து கொண்டான்.
ஹரி வந்ததும் நிறைய மாணவர்கள் வந்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்க அவர்களுக்கு புன்னகையுடன் பதில் அளித்த படி இருந்தான்.
வினு, "ப்ரஷி அவன் வந்துட்டான் வா கங்கிராட்ஸ் பண்ணலாம். நல்லா ப்ரசென்ட் பண்ணான் இல்லை" என்க,
மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
மேனகா, "ஆமாடி வாங்க போய் கங்கிராட்ஸ் சொல்லிட்டு. பக்கத்துல போய் ஒரு டைம் சைட் அடிச்சிட்டு வந்திடலாம்" என்று ஜொள்ளினாள்.
ப்ரஷி மனதிற்குள், 'நானே அவன்கிட்ட எப்படி முகம் குடுத்து பேசுறதுன்னு தயங்கிட்டு இருக்கேன். இதுல இவங்க வேற' என்று சலித்தவள்,
"கான்பிரன்ஸ் முடிஞ்சதும் சொல்லலாம். இப்போ எழுந்து போனா மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும்" என்றாள்.
"அதெல்லாம் ஒன்னும் டிஸ்டர்ப் ஆகாது. அங்க பாரு எத்தனை பேர் அவன்கிட்ட பேசுறாங்க" என்று ஆர்வமாக மேனகா கூற,
"நாம எழுந்திருக்கதை பார்த்தா ப்ரமிளா மேம் திட்டுவாங்க. அவங்க தானே நம்மள இங்க உட்கார சொன்னாங்க" என்று அவர்களது அஸ்திவாரத்தை கையில் எடுக்க எல்லோரும் அமைதியாகிவிட்டனர்.
'இப்போதைக்கு இவங்களை சைலண்ட் ஆக்கியாச்சு. போகும் போது என்ன பண்றது' என்று யோசித்தவாரே அமர்ந்திருக்க கான்பிரன்ஸ் முடிவுக்கு வந்திருந்தது.
எல்லோரும் ஒவ்வொருவராக கலைந்து செல்ல தொடங்க, மேனகா, "ப்ரஷி வா…அவனை எங்களுக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணி வை" என்று அவனிருக்குமிடம் இழுத்து சென்றாள்.
ஹரி அருகில் இருந்த நண்பனிடம் ஏதோ சிரித்து பேசிய படி இருந்தவன் இவர்களை பார்த்ததும், "நான் பேசிட்டு வர்றேன். நீங்க போங்க" என்று அனுப்பிவிட்டு அவள்புறம் திரும்பினான்.
ப்ரஷாந்திக்கு பேச வந்தது மறந்து போயிற்று.
ஏதும் கூறாமல் அவனையே பார்த்திருக்க, அவளது நிலையை உணர்ந்தவன் போல அவளை பார்த்து புன்னகைத்தான்.
அதில் தைரியம் வர பெற்றவள், "நீ ப்ரசென்டேஷன் ரொம்ப நல்லா பண்ணேன்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க…" என்று புன்னகைக்க,
"ரியல்லி" என்றவனின் குரலில் குறும்பு கொப்பளித்தது.
ப்ரஷாந்தி பதில் அளிக்கும் முன் மேனகா, "ஆமா. சூப்பரா இருந்தது. நாங்க எல்லாரும் பர்ஸ்ட் ரோல உட்கார்ந்து பார்த்தோம்" என்று கூறி புன்னகைக்க,
"தாங்க் யூ" என்று இளநகை புரிந்தான்.
ப்ரஷாந்தி, 'ஹப்பாடா தப்பித்துவிட்டோம்' என்று மனதிற்குள் நிம்மதி அடைந்தாள்.
வினு, "ஹே அவரை எங்களுக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணி வைடி" என்று காதிற்க்குள் கிசுகிசுக்க,
ப்ரஷி, "ஹரி இவங்க எல்லோரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ். இது மேனகா அண்ட் இது வினுஷா…." என்று எல்லோரையும் அறிமுகப்படுத்த,
ஹரி, "ஹாய்" என்று அனைவரிடமும் புன்னகைத்தான்.
ஹரியிடம் எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு சாப்பிடுவதற்காக ரெஸ்டாரன்டை நோக்கி சென்றனர்.
வினுவும் வருணும் சாப்பாட்டை வாங்கி வர சென்றிருக்க மற்றவர்கள் பேசிய படி அமர்ந்திருந்தனர்.
ரேஷ், "நாளைக்கு மார்னிங் ட்ரெயின் கிளம்பணும். கடைசி வர ஒரு சின்ன போட் ரைட் கூட போக முடியலை" என்று வருத்தப்பட,
"ஹ்ம்ம் ஆமா. இதுக்கா வீட்ல சாப்பிடாம அடம்பிடிச்சு கிளம்புனேன்" என்று மேனகாவும் சோகமாக பதிலளித்தாள்.
ரேஷ், "ப்ச் நமக்கு கிடைச்சது இந்த ரெஸ்டாரன்ட் தான். மனசை தேத்திக்கிட்டு கிளம்புங்க" என்று தன் பங்கிற்கு ஆறுதல் கூறினாள்.
கேரளாவை சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் தங்களது துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள துறை தலைவரிடம் பேசி வந்திருந்தனர்.
ப்ரமிளா மேம் இவர்களது கைடாக வருவதை இவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் சிறிது கண்டிப்பானவர் என்பதால் இவர்களது ஆசை கானல் நீராகி போனது.
வினுவும் சஞ்சயும் சாப்பாடு வாங்கி வர கிரணின் தொலைபேசி அழைத்தது.
"நான் பேசிட்டு வர்றேன்" என்று சென்றவன்,
வரும்போது, "காய்ஸ் ஒரு குட் நியூஸ்" என்று ஆரவாரத்துடன் வந்தான்.
எல்லோரும் கேள்வியாக ஏறிட,
"எங்களுக்கு இப்போதைக்கு குட் நியூஸ்னா. போட்டிங்க்கு பெர்மிஷன் வாங்கி தர்றது தான். என்ன பெர்மிஷன் வாங்கிட்டியா…?" என கேலி போல வினவினாள்.
"எஸ்" என்ற கிரணின் பதிலில் எல்லோரும் அதிர்ச்சி அடைய,
'தான் கேலி பேசியதற்கு இவனும் விளையாடுகிறானா…?' ரேஷ் நம்பாமல் பார்த்தாள்.
கிரண், "உண்மை தான் காய்ஸ். நம்புங்க நம்ம போட்டிங் போக ஹிட்லர் பர்மிஷன் கொடுத்திடுச்சு. அதுவும் ஹிட்லர் நம்ம கூட வரலை" என்று கூற,
எல்லோருக்கும் ஐஸ்கட்டி கூடையை தலையில் கவிழ்த்தது போல ஆனந்தம்.
ப்ரஷி, "டேய் இது எப்படி சாத்தியம். என்னால நம்ப முடியலை…?" என்று அதிர்ச்சி விலகாமல் வினவ,
"என்னாலயும் தான் நம்ப முடியலை…நமக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு. சீக்கிரம் கிளம்புங்க. இன்னும் டென் மினிட்ஸ்ல எல்லாரும் ரெடியா இருக்கணும். வேன் வருது நம்மள அழைச்சிட்டு போக" என்று கூறினான்.
'எல்லோரும் சாப்பாடாவது ஒன்னாவது இங்கு வந்ததற்கான முக்கியமான காரியம் நிறைவேற போகிறது. சாப்பாட்டை பிறகு பார்த்து கொள்ளலாம்' என்று விரைவாக அறைக்கு சென்று கிளம்பி வந்திருந்தனர்.
அவர்களது கல்லூரியில் இருந்து வந்த அனைத்து மாணவர்களும் தயாராக நின்றிருந்தனர்.
ப்ரஷியின் விழிகள் ஹரியை தேட அவன் தன் நண்பர்களுடன் நின்றிருந்தான்.
ரேஷ், "யாரடி தேட்ற…?" என ஊடுருவல் பார்வையை வீச,
"யாரையும் தேடலை. சும்மா தான் பார்த்தேன்" என்றவள் அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி கொண்டாள்.
ரேஷ்மாவிற்கு தன் நண்பி மேல் சிறு சந்தேகம் அவளுக்கு ஹரியை பிடித்துள்ளதோ என்று…? அதனால் தான் இந்த வினா.
ப்ரஷாந்திக்கு அவன் மேல் ஏதோ ஒரு ஆர்வம். அவ்வளவு தான் அதற்கு மேலே அவள் செல்ல விரும்பவில்லை.
அவர்களுக்கான வேன் வர எல்லோரும் ஏறினர். ப்ரஷாந்தி தன் நண்பர்களுடன் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
சிரிப்பும் பேச்சமாக களைகட்ட அரைமணி நேரத்தில் ஆழப்புழா போட்டிங் செய்யும் இடத்திற்கு சென்றனர்.
ஏழு மணியாகி இருந்ததால் சற்று இருட்ட தொடங்கியிருந்தது.
ப்ரஷாந்திக்கும் அவளது நண்பர்களுக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. அது அவர்களது முகத்திலே பிரதிபலித்தது.
இ.சி.இ துறை மாணவன் ரித்தேஷ் தான் எல்லாவற்றிற்க்கும் பொறுப்பேற்று இருந்தான்.
எல்லோரும் வேனிலிருந்து இறங்கியதும் ரித்தேஷ், "காய்ஸ் எல்லோரும் இங்கயே இருங்க. நான் போய் பாசஞ்சர் போட்க்கு டிக்கெட்ஸ் எடுத்திட்டு வர்றேன்" என்று கூறி செல்ல,
வினு, "டேய் இவனா இன்சார்ஜ். யாரு இவனை இன்சார்ஜா போட்டது. இவனா பெர்மிஷன் வாங்குனது" என்று வினா எழுப்ப,
"ஆமா ரித்தேஷ் தான் இன்சார்ஜ். இவன் தான் எனக்கும் இன்பார்ம் பண்ணான். பெர்மிஷன் வாங்குனது யார்னு தெரியவிலை" என்று பதில் மொழிந்தான்.
"யாரு பெர்மிஷன் வாங்குனா என்ன…? நமக்கு வந்த வேலை நடக்குதுல அதை நினைச்சு சந்தோஷப்படுங்க. அதுவும் இந்த நைட் டைம்ல போட்டிங். கூட ஒரு பாய்பிரண்ட் இருந்தா வேற லெவெல்ல இருக்கும்" என்று ரேஷ் சிலாகிக்க,
"இருக்கும் இருக்கும். அப்படியே மிஸ்டர் கர்னல் சதாசிவமும் கூட இருந்தா ரொம்ப சூப்பரா இருக்கும்" என்று அவளது தந்ததையை நினைவு படுத்தினான்.
"டேய் எதுக்குடா இப்போ அவரை ஞாபகப்படுத்துற…" என்று தந்தையின் பெயரிலே ஜெர்க்கானாள்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சாதாசிவம் மிகவும் கண்டிப்பானவர். ரேஷ்மாவிற்கு தந்தையை பார்த்தாலே சிறுவயது முதல் பயம்.
"பேரை சொன்னதுக்கே பம்மிட்டு. பேசுற பேச்ச பாரு" என்று கலாய்க்க அங்கே சிரிப்பொலி பரவியது.
இவர்களது சத்தத்தில் மற்ற மாணவர்கள் திரும்பி பார்த்தனர்.
ரித்தேஷ் பயணச்சீட்டு எடுத்து வர எல்லோரும் அந்த பாசஞ்சர் போட்டில் ஏற தயாராகினர்.
பேசஞ்சர் படகு ஒரு பேருந்து அளவு தான் இருக்கும். ஆழப்புழா அருகே உள்ள மக்கள் வெளியே சென்று வருவதற்கு பேருந்தை போல இதனை தான் பயன்படுத்துவர்.
ஒரே நேரத்தில் இருபத்தி ஐந்து பேர் வரையிலும் இதில் பயணம் செய்யலாம்.
வரிசையாக ஒவ்வொருவராக படகில் ஏற ப்ரஷாந்தியின் நண்பர்கள் படையும் ஏறுவதற்க்காக வரிசையில் நின்றனர்.
ப்ராஷாந்தி நண்பர்களின் வரிசையில் கடைசி ஆளாக நிற்க அவளுக்கு முன்னால் நின்ற ரேஷ்மா ஏறியவுடன் படகின் நடத்துனர்,
"இதோட அவ்ளோ தான் சீட் ஓவர். மீதி இருக்குவங்க அடுத்த போட்ல ஏறுங்க" என்று கதவை பூட்ட,
ப்ரஷாந்தி செய்வதறியாது நின்றுவிட்டாள்.
அவர்கள் எல்லோரும் ஒரு பேருந்தில் செல்ல தான் மட்டும் மற்றொரு படகில் எப்படி தனியாக செல்வது என்று நினைத்து அவர்களை பார்க்க,
அவர்களும் இவளை தான் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்திருந்தனர்.
கிரண் நடத்துனரிடம், "அண்ணா அந்த பொண்ணை மட்டும் அலோவ் பண்றிங்களா…? அவ எங்க கூட தான் வந்தா. அவ மட்டும் தனியா அடுத்த போட்ல போக முடியாது" என்று கேட்க,
"இல்லைப்பா…ஏற்கனவே ரெண்டு பேரை எக்ஸ்ட்ரா தான் ஏத்தி இருக்கேன். இனிமே யாரையும் ஏத்த முடியாது. உள்ள போங்க" என்று கரையில் இருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டார்.
ரேஷ்மா, "அப்போ டோரை ஓபன் பண்ணுங்க. நாங்க நெக்ஸ்ட் போட்ல வர்றோம்" என்க,
"அப்படிலாம் உங்க இஷ்டத்துக்கு திறக்க முடியாது. போட் ஸ்டார்ட் ஆகிடுச்சு" என்று முடித்துவிட்டார்.
அவளை மட்டும் தனியாக விட்டுவிட்டோமே…என்று மற்றவர்கள் பரிதவிப்புடன் பார்க்க,
"ஒன்னும் பிராப்ளம் இல்லை. நான் நெக்ஸ்ட் போட்ல வர்றேன். நீங்க கவலைப்படாம போங்க" என்று அவர்களுக்கு கை அசைத்தாள்.
மற்றவர்களும் மனமே இல்லாமல் கை அசைத்தனர்.
இதுவரை அவர்களுக்கு இதுபோல நடந்ததே இல்லை. எங்கே சென்றாலும் ஒன்றாக தான் செல்வார்கள்.
அடுத்த போட் வர எல்லோரும் ஏற ஆரம்பிக்க ப்ரஷாந்தி ஒதுங்கி நின்றுவிட்டாள்.
அவளுக்கு இது வருத்தம் தான். நண்பர்களை விட்டுவிட்டு தனியாக தான் என்ன செய்வது என்று ஒரு எண்ணம்.
அவர்கள் வருத்தப்பட கூடாது என்று தான் அவ்வாறு கூறி அனுப்பினாள்.
அங்கே போய் சேர்ந்து கொள்ளலாம் என்று பார்த்தால் இது மீனப்பள்ளி காயல் வரை போய்விட்டு அப்படியே திரும்பி விடும். இந்த பேசஞ்சர் போட் சுற்றி காட்டுவதை மட்டும் தான் செய்யும்.
எல்லோரும் ஏறி இருக்க இவள் மட்டும் ஏறாமல் சிந்தனையுடனே நின்றிருந்தாள்.
மற்ற துறை மாணவர்கள், "ப்ரஷாந்தி ஏன் நிக்கிற வந்து ஏறு" என்று குரல் கொடுக்க,
அதில் மீண்டவள் சரியென்று அதில் ஏற சென்றாள்.
கரையில் இருந்தபடி ஒரு காலை போட்டில் வைத்து ஏற முயற்சிக்க அது நீரில் இருபதனால் மிதந்தது.
அதில் அதிர்ந்தவள் காலை மீண்டும் எடுத்து கொண்டாள்.
தலையை நிமிர்த்தி எல்லோரையும் பார்க்க அவர்களும் இவளை தான் பார்த்திருந்தனர்.
வேறு வழியில்லாமல் மறுபடியும் காலை வைக்க இம்முறை அதிகமாக ஆடியது.
என்ன செய்வதென்று பயந்தவளின் முகத்தின் முன் ஒரே கரம் நீண்டது நிமிர்ந்து பார்க்க ஹரி தான் புன்னகையுடன் நின்றிருந்தான்.
ப்ரஷி அவனது கையை பிடிக்காது பார்க்க,
"என்ன பாக்குற. ஹ்ம்ம் என் கையை பிடிச்சுக்கோ. நான் உன்னை பத்திரமா அழைச்சிட்டு போறேன்" என்றான்.
அந்த வார்த்தை அவளுக்கு தைரியத்தை வரவழைக்க அவனது கையை பிடித்து கொண்டு மேலே ஏறியிருந்தாள்.
நடத்துனர் வந்து கதவை மூடிவிட்டு கயிறை எடுத்த பின் படகை இயக்கினார்.
ஹரி, "ப்ரஷாந்தி எங்க உன் ஃப்ரெண்ட்ஸ். அந்த போட்ல போயிட்டாங்களா…?" என வினவ,
"ஹ்ம்ம் ஆமா. அதுல சீட்ஸ் ஓவர் ஆகிடுச்சு" என்று பதில் மொழிந்தாள்.
"ஓ…ஓகே" என்றவன் அவளிடம் தலையசைத்துவிட்டு தன் நண்பர்கள் இருக்குமிடம் நோக்கி செல்ல சட்டென்று ப்ரஷாந்தி முகம் வாடியது.
யாருமில்லை என்று வருந்தியவள் ஹரியை கண்டதும் அவனுடனே சென்று வரலாம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைய அவன் விட்டு சென்றதில் சடுதியில் மொத்த சந்தோஷமும் வடிந்திட்டது.
ஒரு ஓரமாக சென்று அலை அலையாய் வந்து செல்லும் நீரினை பார்த்தவாறு நின்றுவிட்டாள்…
************************************************
கஃபே வொர்ல்ட் என்று வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் வளைவாக ஒரு பலகை தாங்கி நின்றிருந்த காஃபி ஷாப்பினுள் நுழைந்தனர் ப்ரஷாந்தியும் கரிஷ்மாவும்.
யுவன் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி ஒரு சிறிய வேலை உள்ளது நான் அரைமணி நேரத்தில் வந்து விடுவதாக காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.
சிமெண்ட் டைல்ஸ் என்று எதுவுமில்லாமல் மண் தரையிலே நடுநடுவே மரங்களுடன் காட்சியளித்த அவ்விடத்தை கண்டு வியந்த கரிஷ்மா, "வாவ் இந்த காஃபி ஷாப் சூப்பரா இருக்குடி" என்று சிலாகிக்க,
"ஹ்ம்ம் இங்க காஃபியும் நல்லா இருக்கும். காஃபி மேக்கர் இல்லாம ஹாண்ட் மேட் தான் இங்க. நான் டூ த்ரி டைம்ஸ் வந்திருக்கேன்" என்று பதில் மொழிந்தாள்.
"எனக்கு இந்த ப்ளேஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க ஷிப்ட் ஆன பின்ன அடிக்கடி வரணும்" என்று பேசிய படி இருவரும் அமர்ந்தனர்.
சிப்பந்தி வந்து நிற்க ப்ரஷாந்தி இருவருக்கும் காஃபியை ஆர்டர் செய்தாள்.
சிப்பந்தி அகன்றவுடன், "இப்போ சொல்லு ப்ரஷி உனக்கு என்ன ஆச்சு…? யுவன் இருந்ததால என்னால எதையும் டேரெக்டா கேக்க முடியலை…" என்று அவளை நோக்க,
ப்ரஷாந்தி இளநகையுடன், "என்ன ஆச்சு.. ஒன்னும் நடக்கலையே…நான் எப்பவும் போல தான் இருக்கேன்" என்று பதில் மொழிந்தாள்.
"இல்லை சம்திங்க் ஹாப்பன்ட். நீ முன்ன மாதிரி இல்லை. நான் காலேஜ்ல உன் கூட க்ளோஸா பழகலைன்னாலும் தூரத்தில இருந்து நீங்க பண்ற சேட்டை எல்லாம் பாத்திருக்கேன். எப்பவுமே கூட நாலுபேரோட ஜாலியா சிரிச்ச முகத்தோட இருப்ப. ஆனால் இப்போ எல்லாமே அதுக்கு ஆப்போசிட்" என்று அவளை ஆராயும் பார்வையை வீசினாள்.
'தன்னை இத்தனை தூரம் இவள் கவனித்திருக்கிறாளா…?' என மனதிற்குள் வியந்தவள்,
"எல்லா நேரமும் எப்பவும் போல இருக்க முடியுமா…? இப்போ வயசு கூடிருச்சு. பொறுப்பு வந்திடுச்சு" என்று மென்னகை புரிந்தாள்.
அந்த புன்னகை கரிஷ்மாவிற்கு என்ன உணர்த்தியதோ…
"சரி நீ எதுவும் சொல்ல போறதில்லைன்னு தெரிஞ்சிடுச்சு. உனக்கு தோணும் போது சொல்லு. நான் கம்பெல் பண்ணலை" என்று முடிந்துவிட,
ப்ரஷி, "என்னை விடு உன் மேரேஜ் லைஃப் எப்படி போகுது. உன் ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்கிறாரா…? உன் பேமிலி எப்படி" என்று வினவினாள்.
"ஹ்ம்ம் ரொம்ப நல்லா பாத்துக்கிறாரு டி. என்னோட மாமானார் மாமியாரும் கூட ரொம்ப நல்ல டைப்" என்றவள்,
"நம்ம பேட்ச்ல கூட முக்கால்வாசி பேருக்கு மேரேஜ் முடிஞ்சது போல" என்று இயம்ப,
"ஓ…எனக்கு தெரியலை டி. நான் யார்கூடயும் டச்ல இல்லை டி" என்று ப்ரஷி பதில் அளித்தாள்.
"உனக்கு தெரியாதா…? ரீசன்ட்டா நம்ம வினுஷாக்கு கூட என்கேஜ்மென்ட் நடந்ததே" என்று கூற,
ப்ரஷாந்தியை பலமாக அதிர்ச்சி தாக்கியது.
வினுஷாவிற்கு திருமணமா…? அதுவும் தன்னிடம் அவள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ற எண்ணம் தான் வந்து மோதியது.
"என்னடி இப்படி ஷாக் ஆகுற. உனக்கு தெரியாதா…?" என கரிஷ்மா வினவ,
"இல்லை தெரியாது" என்று தலையாட்டினாள்.
"எனக்கு தான் அவ இன்விடேஷன் வைக்கலைன்னு பார்த்தா…உன்னையும் இன்வைட் பண்ணலையா…?" என அதிர்வது கரிஷ்மாவின் முறையாயிற்று.
ஒரு நொடியில் அதிர்ச்சியை மறைத்த ப்ரஷாந்தி, "மேரேஜ்க்கு எல்லாரையும் இன்வைட் பண்ணலாம்னு நினைச்சிருப்பா போல…?" என கூற,
"ஹ்ம்ம் இருக்கலாம். நான் அவ பேஸ்புக் ஸ்டேடஸ் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன். மே பீ நீ சொல்ற மாதிரி தான் இருக்கும்" என்று ஆமோதித்தாள்.
அதன் பின்னர் மேலும் பலரை பத்தி பேச நேரம் ஓடியதே தெரியவில்லை.
"கரிஷ் கிளம்பலாமா…?" என்று வந்து நின்றான் யுவன்.
"ஹ்ம்ம் கிளம்பலாம்" என்றவள்,
ப்ரஷாந்தியிடம், "சரி டி. நீ ப்ரீயா இருக்கும் போது சொல்லு நாம மீட் பண்ணலாம்" என்று கூறி தொலைபேசி எண்ணை பெற்றுவிட்டு கிளம்பினாள்.
கல்லூரி நண்பர்களை பற்றி பேசியதில் ஆழ்மனதில் படிந்திருந்த நினைவுகள் எல்லாம் மேலெழும்புவது போல பிரம்மை பிரஷாந்திக்கு.
மேலும் வினு ஏன் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை. என்னுடைய எண் அவளிடம் உள்ளதே என்ற கேள்வி வேறு அவளை குடைந்தது.
தலையை பிடித்த படி அமர்ந்தவளுக்கு கோவிலுக்கு சென்று வந்தால் தேவலாம் என்று தோன்றியது.
கையை திருப்பி கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அலுவலகத்திற்கு செல்ல இன்னும் நேரம் இருந்தது.
அருகில் உள்ள ராக்கிகுடா கோவிலுக்கு சென்று வரலாம் என்று நினைத்து தனது வெஸ்பாவில் புறப்பட்டாள்.
மனம் நிம்மதி இழந்து தவிக்கும் நேரம் எல்லாம் இவள் செல்வது ராக்கிகுடாவிற்கு தான்.
அங்கு சென்றாலே மனதின் கவலைகள் எல்லாம் மறந்து ஒரு வித அமைதி கிடைக்கும்.
இதற்க்காகவே அடிக்கடி இந்த கோவிலுக்கு ப்ரஷாந்தி வந்து செல்வாள்.
வெஸ்பாவை ஓரமாக நிறுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.
இன்று எந்த விஷேச நாட்களும் அல்லாதாததால் கூட்டம் ஏதுமில்லை.
ஒரு சிலர் மட்டுமே சந்நிதி அருகே நின்று கடவுளை வணங்கி கொண்டு இருந்தனர்.
ராக்கிகுடா அனுமன் கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.
குன்றின் அடிவாரத்தில் விநாயகர் மற்றும் ராஜேஸ்வரி தேவி கோவில் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்து விநாயகரை தரிசித்து விட்டு ராஜேஸ்வரி தேவியை விழி மூடாமல் பார்த்தவாறு நின்றுவிட்டாள்.
அந்த முகத்தை காண்கையில் தான் மனதில் எத்தனை நிம்மதி அமைதி என்று அவள் மனம் எண்ணாமல் இல்லை.
சிறிது நேரம் அப்படியே பார்த்திருந்தவள் தீபாராதனையை வணங்கிவிட்டு சந்நிதியின் ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டாள்.
எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளே மனதின் அலைப்புறுதல்கள் எல்லாம் மறைந்து மனது ஒரு சமநிலைக்கு வந்துவிட்டதாக தோன்ற கிளம்புவதற்க்காக எழுந்து கொண்டாள்.
எப்பொழுது குன்றின் மேல் இருக்கும் ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்று தரிசித்து விட்டு தான் வருவாள். இன்று நேரமின்மையால் செல்லாமல் அலுவலகம் நோக்கி பயணமானாள்…
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் கூட வினுஷா ஏன் தனக்கு அழைக்கவில்லை.
தான் அவர்களிடம் இருந்து விலகி வந்ததால் அவர்களும் தன்னை ஒதுக்கிவிட்டார்களா…? என்ற எண்ணம் வர,
'சே என்ன எண்ணம் இது' என்று தலையை உலுக்கி கொண்டவள் படுக்கையில் விழுந்தாள்.
கல்லூரி தோழியை சந்தித்ததில் இருந்து கல்லூரி நினைவுகள் தான் மனதில் ஒடி கொண்டு இருந்தது.
எத்தனை சந்தோஷமாக சுற்றி திரிந்த காலங்கள் என்று எண்ணும் போதே ஹரியின் நினைவும் வந்தது.
எப்போதும் அவளை பார்த்து சிந்துவானே அந்த வசீகர புன்னகை நினைவு வந்த
து.
இறுதியாக அவனை பார்த்த நொடி அவனது கசங்கிய தோற்றம் கண்முன் நிழலாட சடுதியில் விழிகளில் நீர் நிறைந்துவிட்டது.
அவனும் அவளும் வாழ்ந்த அழகான வாழ்க்கை நினைவுகளில் நழுவி செல்ல தலையணையில் முகத்தை புதைத்து கொண்டாள்…
வெகு விரைவிலே தன் நினைவுகளுக்கு சொந்தமானவன் கண்ணெதிரிலே வந்து நிற்க போகிறான் என்று அறியாமலே ஆழ்ந்த உறகத்திற்கு சென்றாள் ப்ரஷாந்தி…
பார்க்கும் திசை
எல்லாம் நீ வரைந்த காதல்
தோன்றுதே… சேர்க்கும்
விதியென்றே நான் நினைக்க
காலம் ஓடுதே…