• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
581
Reaction score
836
Points
93
அத்தியாயம் 4:



முகத்தில் தவழும் புன்னகையுடன் ப்ரஷி தன் நண்பர்களை நெருங்க,


எல்லோரும் அவளை சந்தேகத்துடன் பார்த்தனர்.


ரேஷ், "என்னடி சிரிப்பு ஒரு மாதிரி இருக்கு…?" என்று வினவ,


ப்ரஷி உடனே தனது முக பாவனைகளை மாற்றிக் கொண்டு, "சும்மா தான் பேசிட்டு இருந்தோம்" என்று பதில் அளித்தாள்.


மேனகா, "நீங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா சும்மா பேசுன மாதிரி தெரியலையே…உன் முகம் வேற ஓவர் ப்ரைட்டா இருக்கே…?" என்று பார்க்க,


ப்ரஷி, "ப்ச் நீங்க இமாஜின் பண்ற அளவுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. நேத்து நைட் அவர் தான் என்னை ஹிட்லர்கிட்ட இருந்து காப்பாத்துனாரு. அதான் தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்" என்று பதில் மொழிந்தாள்.


வினுஷா, "நேத்து நைட் ஹெல்ப் பண்ணது யாருன்னு கேட்டதுக்கு ஞாபகமே இல்லைன்னு சொன்ன…?" என்று விடாமல் வினவ,


ப்ரஷாந்தி, "நீங்க இப்படி துருவி துருவி கேள்வி கேட்குற அளவுக்கு எதுவுமே இல்லை" என்று நடந்தவற்றை கூறினாள்.



தான் போதையில் உளறியதை மட்டும் கூறவில்லை. மறைத்துவிட்டாள்.


அவள் செய்தது மட்டும் தெரிந்தால் கலாய்த்தே தள்ளிவிடுவார்கள்.


வினு, "இந்த ஹீரோவும் நம்ம காலேஜா…? சுமாரான பீஸ்லாம் கூட கண்ல படுதுங்க. இவரை எப்படி மிஸ் பண்ணேன்" என்றவள்,

"ஆமா அவர் எந்த டிபார்ட்மெண்ட்…?" என்று ஆர்வத்துடன் வினவினாள்.


ப்ரஷி, "சி.எஸ்.சி " என்று பதில் மொழிந்தாள்.


வினு, "ஓ…பக்கத்து டிபார்ட்மெண்ட் தானா…? இனிமேல் அங்கயே செட்டில் ஆகிட வேண்டியது தான்" என்று இயம்ப,

ரேஷ், "ஹே நீ எதுக்கு டி அங்க போற அவரை ஏற்கனவே ப்ரஷி புக் பண்ணிட்டா…" என்றவள்,


ப்ரஷாந்தியிடம், "அப்டிதான ப்ரஷி…?" என்று கண்ணடித்தாள்.


"ஹே சும்மா இரு. அப்படிலாம் எதுவுமில்லை" என்று அதட்டினாள்.


ரேஷ் ஊடுருவும் பார்வையுடன், "ரியல்லி…?" என வினவ,


"எஸ்" என்று பலமாக தலையாட்டினாள் ப்ரஷி.


"வாவ் அப்போ இந்த செகெண்ட்ல இருந்து அவர் என்னோட க்ரஷ். யாரும் அவரை பார்க்க கூடாது" என்று வினுஷா குதூகலிக்க,


மேனகா, "நாங்க யாரும் அவரை பார்க்கிறது இருக்கட்டும். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தோம் ப்ரமிளா நம்மள பார்த்திடும். அப்புறம் நீ யாரையும் பார்க்க முடியாது" என்று கூறி அவளை கலாய்க்க,


அங்கே கொல்லென்ற சிரிப்பொலி எழுந்தது.


வினு அவளை அடித்து விட்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்.

இப்படியே ஒருவரை ஒருவர் வாரியபடி காலை உணவை முடித்துவிட்டு அறைக்கு சென்றனர்.


அங்கிருந்து நகரும் முன் ப்ரஷியின் கண்கள் அவன் அமர்ந்திருக்க இருக்கையை நோக்க அங்கே வேறு யாரோ அமர்ந்திருந்தார்கள்.


அவன் சாப்பிட்டு எழுந்து சென்று விட்டான் போல என்று எண்ணியவளின் மனதில் ரேஷ் கூறிய வார்த்தைகள் வந்து மோத, உள்ளுக்குள் ஒரு சாரல் மழை தூவியது அதனை அசட்டை செய்தவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.


அன்று மாலை அவர்கள் தங்கியிருக்கும் உணவகத்தின் ஹாலில் கலந்தாய்வு நடைபெற இருந்தது.


ப்ரஷாந்தியின் காலை பொழுது நண்பர்களுடன் கலாட்டாவுடன் கழிந்திட அனைவரும் கலந்தாய்வுக்கு செல்ல தயாராக சென்றனர்.


அதன் பிறகு அவனை பற்றி ப்ரஷாந்தி சிந்திக்கவே இல்லை.


எல்லோரும் தயாராகி வர கலந்தாய்வு நடக்கும் ஹாலிற்கு சென்றனர்.


இன்னும் யாரும் அங்கே வந்திருக்கவில்லை.


ஆங்காங்கே ஒரு சிலர் அமர்ந்திருக்க மேடையில் மைக் வைப்பது நாற்காலிகளை அடுக்குவது போன்ற வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.



ரேஷ், "என்னடா இன்னும் யாரையும் காணோம். பங்க்ஷன் என்ன டைம்க்கு ஸ்டார்ட் ஆகும்" என்று வினவ,


"சிக்ஸ் தர்டிக்கு" என்று பதில் மொழிந்தான் வருண்.


தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு, "டேய் பங்க்ஷன் ஸ்டார்ட் ஆக இன்னும் ஒன் ஹவர் இருக்கேடா…?. எனக்கு போரடிக்குமே…" என கோபத்துடன் வினவ,

கிரண், "ப்ரமிளா மேம் தான் ஒன் ஹவர் முன்னாடியே வர சொன்னாங்க" என்று பதிளளித்தான்.


"ரெப்ரசென்டேட்டிவ் வேலைய கரெக்டா செய்யிறயா…?" என அவன் தலையில் கொட்டினாள்.


"ஒன் ஹவர் லேட்டா வந்தாமட்டும் நீ எதையாவது கவனிக்க போறியா…? சும்மா தானே உட்கார போற. இப்பவும் அதே மாதிரி உட்காரு" என்று தலையை தேய்த்தவாறு கிரண் கூற, மற்ற அனைவரும் நகைக்க தொடங்க,
ரேஷ் கிரணை முறைத்தாள்.


சிரித்து முடித்த பிறகு வினு, "சரி வாங்க நாம எப்போதும் போல லாஸ்ட் ரோல செட்டில் ஆவோம்" என்று ஒரு சேரில் அமர,


மற்றவர்களும் வரிசையாக அமர்ந்தனர்.


அமர்ந்தபடியே ஹாலை சுற்றி பார்த்த ப்ரஷியின் விழிகள் கருப்பு மற்றும் கோல்டன் நிற தீமில் பலூன்கள் அழகாய் தொங்கவிட பட்டிருக்க அதிசயித்து விரிந்தது.


"ரேஷ் இந்த தீம் பார்க்க சூப்பரா இருக்குல. வா கிட்ட போய் பார்த்திட்டு வரலாம்" என்று அவள் கையை பிடிக்க,


"ம்ஹும் நான் வரலைப்பா. வேற யாராயாவது கூப்பிட்டுக்கோ" என்று கூற, மற்றவர்களும் வர மறுத்துவிட்டனர்.


"சரி நான் மட்டும் போறேன்" என்றவள் எழுந்து சென்று அந்த ஹாலின் ஒவ்வொரு இடத்தையும் சுற்றி வந்தாள்.


கோல்டன் நிறத்திலான வெல்வெட் துணி இதய வடிவத்தில் எல்லா மூளையிலும் தொங்கவிட பட்டு அதன் நடுவே பலூன் பொருத்தபட்டிருந்தது.


அதனை அருகில் சென்று பார்க்க ஆசை எழ அதனை நோக்கி நடந்தவள் கீழே கிடந்த வயரை கவனிக்காமல் காலை வைத்திருந்தாள்.


அது அவளது காலை பிடித்து இழுக்க பின்வாக்கிலே சரிய போக அவளை ஒரு கரம் விழாமல் தாங்கியிருந்தது.


விழுந்துவிட போகிறோம் என்று பயத்தில் விழி மூடியவள் நொடிகள் கடந்தும் தான் விழாமல் இருப்பதை உணர்ந்து விழியை திறக்க அவள் முகத்தை புன்னகையுடன் பார்த்திருந்தான் ஹரி கிருஷ்ணா.


அவனது முகத்தினை வெகு அருகில் கண்டதில் அதிர்ந்தவள் சடுதியில் அவனிடமிருந்து விலகினாள்.


ப்ரஷாந்தி ஏதும் கூறாமல் அவனை பார்க்க,


ஹரி, "செகெண்ட் டைம்" என்றான்.


"என்ன செகெண்ட் டைம்" என்று ப்ரஷாந்தி புரியாமல் வினவ,


"நான் உன்னை காப்பாத்துறது" என்று கூறி புன்னகைக்க,


"அது வயர் இருந்ததை கவனிக்காம காலை வச்சிட்டேன். அதான்…" என்று இழுத்தவள் மனதினுள்,


'என்ன இது இவன்கிட்ட இப்படி வரிசையா இப்படி நடக்குதே…" என்று எண்ணியபடி புன்னகையை உதிர்த்தாள்.


ஹரி கவனித்தேன் என்பது போல தலையாட்டிவிட்டு, "ஏன் உன் ஃப்ரெண்ட்ஸ் லாஸ்ட் ரோல உட்கார்ந்து இருக்காங்க…? இங்க உட்காந்தா பேசுறது ஆடிபிளா இருக்காதே…?" என்று வினவ,


"ஆடிபிளா இருக்க கூடாதுன்னு தான் இங்க உட்கார்ந்து இருக்கோம். எங்களுக்கு கிளாஸ்ல லெசென் கவனிக்கவே பிடிக்காது…இதுல எக்ஸ்ட்ரா லெக்செர்ஸா…ஆக்சுவலி நாங்க இங்க வந்ததே கேரளாவ சுத்தி பாக்கலாம்னு தான்" என்றவள் சிரிக்க,


"நல்ல ப்ளான்" என்று ஹரியும் சிரித்தான்.


"ப்ளான் பண்ணி என்ன பண்றது. இந்த ஹிட்லர் ஹோட்டலை விட்டு எங்கேயும் போக விட மாட்டிது. வந்ததுக்கு ஒரு போட்டிங்காவது போயிட்டு வந்திடலாம்னு பார்த்தா ஷேடோ மாதிரி பின்னாடியே சுத்துது" என்று வருத்தத்துடன் முடித்தாள்.


"ஏன் நீங்க கேட்டு பாக்க வேண்டியது தானே…" என்க,


"எதுக்கு அந்த ஹிட்லர் எங்களை காலேஜ்ல இருந்து துரத்துறதுக்கா. ஆல்ரெடி எங்களுக்கும் அதுக்கும் ஆகாது" என்று இயம்பியவள்,


"ஆமா நீங்க எங்க பர்ஸ்ட் ரோவா…?" என வினா எழுப்பினாள்.


"ஹ்ம்ம் ஆமா" என்று ஹரியிடமிருந்து பதில் வந்தது.


"எப்படி பர்ஸ்ட் ரோலலாம் உட்கார்றிங்க…? கையில மைக் கிடச்சிட்டா போதும் என்னவோ இவங்க தான் பிஸிக்ஸ கண்டுபிடிச்ச மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க" என்றவள்,


"என்ன நான் சொல்றது சரிதானே…?" என்று கேள்வி எழுப்ப,


"ஹ்ம்ம் சரி தான்" என்று மென்னகையுடன் பதில் அளித்தவன்,


"எல்லாரும் வந்துட்டாங்க. கான்பிரன்ஸ் ஸ்டார்ட் ஆக போகுது. நாம அப்புறம் பேசலாம்" என்று விடை பெற்று சென்றுவிட்டான்.


ப்ரஷி வந்து நண்பர்களுடன் வந்து அமர்ந்து கொள்ள கலந்தாய்வு தொடங்கியது.


வரிசையாக ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வந்து தங்களது ப்ராஜெக்டை ப்ரெஜெக்டர் மூலமாக மைக்கில் விளக்கி கூற அனைவரும் அதனை ஆர்வமாக கவனித்தனர்.


ப்ரஷாந்தியும் அவளது நண்பர்களும் தங்களுக்குள் பேசிய படி அமர்ந்திருந்தனர்.


ப்ராஷாந்தி பயிலும் கல்லூரி பெயர் அழைக்கபட,


ரேஷ், "நம்ம காலேஜ்ல இருந்து ப்ராஜெக்ட் ப்ரசென்ட் பண்ண போறது இ.சி.இ டிபார்ட்மெண்ட் ரித்தேஷ் தானா…?" என வினவ,


"ஹ்ம்ம் ஆமா அவன் மட்டும் இல்லாமல்.‌ சி.எஸ்.சி டிபார்ட்மெண்ட்ல ஹரி கிருஷ்ணாவும் பண்ண போறானாம்" என்று கிரண் கூற,


எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்க்க,


ப்ரஷி, "உண்மையாவா…? நம்ம காலேஜ்ல இருந்து ரித்தேஷ் ஒருத்தன் தான்னு சொன்னாங்க…?" அதிர்ச்சி விலகாமல் வினவினாள்.


"நானும் அப்படி தான் நினைச்சு இருந்தேன். இது லாஸ்ட் டேல முடிவு பண்ணதாம்…எனக்கும் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் தெரியும்" என்று கிரண் கூற,

"லாஸ்ட் டேலயா…? பட் சம்மிஷனுக்கு டெட்லைன் ஓவராகிடுச்சே…?" என்று ப்ரஷி விடாமல் வினவ,


"ஹ்ம்ம் முடிஞ்சது தான். இருந்தாலும் ப்ரமிளா மேம் ரெக்கமெண்டேஷன்ல சப்மிட் பண்ணி இருக்கானாம். கன்பார்ம் ஆகாம இருக்கவும் யார்க்கிட்டயும் சொல்லலையாம். மார்னிங் தான் அப்ரூவ் ஆச்சாம்" என்று கிரண் பதிலளித்தான்.


"இதை ஏன்டா நீ மார்னிங்கே சொல்லலை" என்று கோபமாக வினவ,


"அதை தெரிஞ்ச நீ என்ன பண்ண போற…? நம்ம காலேஜ்ல இருந்து நிறைய பேர் பார்டிசிபேட் பண்ணா நமக்கு தானே பெருமை" என்று கேட்க,


ப்ரஷாந்தியிடம் இதற்கு பதில் இல்லை.


என்ன கூறுவாள் அவள். அவனிடம் தான் வாய்க்கு வந்ததை பேசி வைத்துள்ளாளே.


இனி எப்படி அவன் முகத்தில் விழிப்பேன் என்று மனதிற்குள் புலம்பியவள் ஒன்றும் இல்லை என்பதாய் தலையாட்டினாள்.


இவர்கள் பேசி கொண்டு இருக்க ரித்தேஷ் தனது ப்ரசென்டேஷனை முடித்துவிட்டு கீழிறங்க ஹரியின் பெயர் அறிவிக்கப்பட்டது.


ப்ரஷாந்தி நிமிர்ந்து பார்க்க ஹிரியும் ஒரு கணம் அவளை பார்த்து விட்டு மேடையில் ஏறினான்.


அச்சமயம் அங்கு வந்த ப்ரமிளா, "கிரண் ஏன் எல்லாரும் லாஸ்ட் ரோல உட்கார்ந்து இருக்கிங்க. நம்ம ஸ்டூடன்ட் ப்ரசென்ட் பண்ணும் போது பர்ஸ்ட்ல உட்கார்ந்தா தான் நல்லா லிசன் பண்ண முடியும். போய் நம்ம ஸ்டூடண்ட்ஸோட உட்காருங்க" என்று மெதுவாக கட்டளையிட்டு செல்ல,


இவர்களும் வேறு வழியின்றி முன்னாலுள்ள தங்களது கல்லூரியில் பயிலும் மற்ற துறை மாணவர்களும் அமர்ந்து கொண்டனர்.


ப்ரஷாந்திக்கு முதல் வரிசையில் அமர்வதற்கு அவஸ்தையாய் இருந்தது.


அவன் பார்வை அடிக்கடி தன் மேல் விழுவது போல அவளுக்கு எண்ணம்.


இருந்தும் முதல் வரிசையில் அமர்ந்திருந்ததால் அவன் கூறுவதை கவனித்தாள்.


அழகான உச்சரிப்புடன் தெளிவாக விளக்கி கூறியவனின் பாங்கு அவளை ஈர்த்தது.


அது அவளது துறைக்கு தேவையில்லாத ஒன்று என்ற போதிலும் கவனித்தாள் அவனின் பால் ஈர்க்கப்பட்டு.


வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மென்பொருள் தொழில்நுட்பத்தின் பங்கினை அழகாக எடுத்து கூறி முடித்தான்.


அவன் முடித்தவுடன் எல்லோரும் கைகளை தட்ட ப்ரஷாந்தியும் கைகளை தட்டியடி அவனை தான் பார்த்திருந்தாள்.


மேடையில் இருந்தவன் இறங்கி அவளை நோக்கி வருவது தெரிந்து ப்ரஷியின் பார்வை அருகில் காலியாக இருந்த இருக்கையில் பதிந்தது.

அவன அதை நோக்கி தான் வருகிறான் போல என அவனை பார்த்திருந்தாள்….


பேசிய பேச்சை நினைத்து உள்ளம் அடித்து கொண்டது. அவன் எதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற எண்ணத்துடன் அவனை நோக்கினாள்…




************************************************



மறுநாள் எப்போதும் போல சோம்பலாக விடிய கண்களை கசக்கிய படி எழுந்தவள் நேரத்தை பார்க்க அது ஆறு முப்பது என காட்டியது.


இன்னும் அரைமணி நேரம் கழித்து எழலாம் என்று நினைத்தவள் மீண்டும் படுத்து கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்.


முற்றிலும் கலைந்த உறக்கம் மீண்டும் வர மறுக்க எழுந்து அமர்ந்தவள் கூந்தலை அள்ளி கட்டிவிட்டு காலை கடன்களை முடிப்பதற்க்காக குளியலைறைக்குள் நுழைந்தாள்.


குளித்து முடித்து கடற்பச்சை நிறத்தில் ப்ரிண்ட்டட் டாப்முன் சந்தன நிறத்தில் ஜீன்ஸும் அணிந்து வெளியே வந்தவள் சமையலைறைக்கு சென்று
லேசாக சுடு செய்த பாலை ப்ளெண்டர் மெஷினில் ஊற்றி சாக்லேட் மில்கிற்காக ஆன் செய்து விட்டவள் டோஸ்டரில் ரொட்டியை போட்டுவிட்டாள்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் சாக்லெட் மில்க்கும் ரோஸ்ட் செய்த ப்ரெட்டும் ரெடியாக அதனை ஒரு ப்ளேட்டில் வைத்து மறுகையில் சாக்லேட் மில்க்கை எடுத்து கொண்டவள் பால்கனியில் உள்ள ஊஞ்சலாடும் மூங்கில் நாற்காலியில் அமர்ந்த படி வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.


பெங்களூரின் காலை நேர குளிருக்கு இதமாய் சூடான சாக்லெட் மில்க் தொண்டையில் இறங்க ரசித்த படியே பருகியவள் ப்ரெட் டோஸ்ட்டை ஒரு முறை வாயில் வைத்தாள்.


சேரில் இருந்த படியே கீழே எட்டி பார்க்க பள்ளிக்கு வேலைக்கு என வழக்கமாக வெளியில் செல்பவர்கள் தங்களது இடத்தை நோக்கி ஓடி கொண்டு இருந்தனர்.


இன்னும் சிறிது நேரத்தில் தானும் அதே போல தான் ஓட வேண்டும் என்று நினைவு வர பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது அவளிடம்.


அவ்வாறு அரக்க பரக்க ஓடி தன்னை மறந்து வேலை செய்வதனால் தான் தான் நடந்தவற்றை மறந்து கடந்து வந்துவிட்டோம் என்றும் தோண்ற நடந்த அணைத்தும் கண்முன் நழுவிச் செல்ல விழிகள் தன்னையறியாமல் மூடியது.


நினைக்காதே எதையும் நினைக்காதே மனமே என்று தனக்கு தானே கூறி கொள்ள அதே சமயம் அவளது தொலைபேசியின் கனா இசைத்து அவளை காப்பாற்றியது.


இத்தனை காலை வேளையில் யார் தனக்கு அழைத்திருப்பார்கள் என்று எண்ணியபடியே தொலைபேசியை எடுத்து பார்க்க திரையில் திவாகரின் பெயர் மின்னியது.


திவாகரின் பெயரை பார்த்ததும் இதழ்களில் ஒரு இளநகை வந்து அமர்ந்து கொண்டது.


இவன் மட்டும் தனது துன்ப காலத்தின் ஆறுதலாக இல்லாவிட்டால் என்னவாவது என்று உள்ளம் வினா எழுப்ப அவளிடம் பதில் இல்லை.


அழைப்பை ஏற்று காதில் பொருத்தியவள், "சொல்லு திவா…" என்க,


"ப்ரஷி ப்ரீயா இருக்கியா…? எனக்கு ஒரு சின்ன ஹெல்ப்" என்று பதில் வந்தது அவனிடம்.


"ஹ்ம்ம் ப்ரீ தான். ஆஃபிஸ்க்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்" என்று பதில் மொழிந்தாள்.


"எனக்கு ஒரு எமர்ஜென்சி ஒர்க் வந்திடுச்சு. நம்ம ஜெயாநகர் சைட்க்கு டுடே விசிட்க்கு போகணும் போக முடியலை. நீ ஒரு டைம் போய் வொர்க்லாம் சரியா நடக்குதான்னு பார்த்திட்டு வந்திட்றியா…?" என வினவ,


தனக்கு நேரம் தாரளமாக இருப்பதை பார்த்துவிட்டு, "ஹ்ம்ம் ஓகே. நான் பார்த்திட்டு ஆஃபிஸ்க்கு வர்றேன்" என்று அழைப்பை துண்டித்தவள் சமையலறை சென்று ப்ளேட்டையும் கிளாஸையும் கழுவி வைத்துவிட்டு தயாராக தொடங்கினாள்.


திவாகர் எப்போதும் இப்படி தான் முதலாளி ஸ்தானத்தில் இருந்தாலும் அதிகாரமாக இவளிடம் எதையும் கூற மாட்டான்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று பெர்கி போனி டெயில் ஒன்றை போட்டவள் நெற்றியில் ஒரு வைட் ஸ்டோனை வைத்துவிட்டு தனது அலுவலக கைப்பை எடுத்து கொண்டு கிளம்பினாள்.


இப்போது கிளம்பினால் தான் ஜெயாநகர் சென்றுவிட்டு அலுவலகம் செல்ல நேரம் சரியாக இருக்கும்.


அலுவலகத்தில் ப்ரஷிக்கு மேலாக ஜி.எம், ஏ.ஜிஎம் என்று எத்தனை நபர்கள் இருந்தாலும் திவாகர் அனைத்தையும் ப்ரஷாந்தியிடம் தான் கூறுவான்.


மார்கெட்டிங் டீம் வேலையில் இருந்து கொட்டேஷன் வரை அவள் தான் பார்ப்பாள். எதற்கும் சளைக்கமாட்டாள்.


முதலில் அவளது கடந்த காலத்திலிருந்து அவளை திசைதிருப்புவதற்க்காக அனைத்து வேலைகளையும் கொடுத்தவனுக்கு பின்பு அதுவே வாடிக்கையாகி போனது.


அதற்கு அவளது வேலை செய்யும் நேர்த்தியும் ஒரு காரணம். மற்றவர்கள் என்ன செய்தாலும் திவாருக்கு வராத ஒரு திருப்தி இவளிடம் தான் வரும். இது இன்று நேற்றல்ல கடந்த நான்கு வருடங்களாக நடக்கிறது.


ப்ரஷாந்தியும் தன்னை மீட்க இதில் மூழ்கியவள் பின்னர் வேலையை விரும்ப தொடங்கிவிட்டிருந்தாள்.


அரை மணி நேர பயணத்தில் ஜெயாநகரில் அவர்களது நிறுவனம் கட்டி கொண்டு இருக்கும் அபார்ட்மெண்டை அடைந்திருந்தாள்.


இவர்கள் நிறுவனம் இதுவரை செய்ததிலே இது தான் மிக பெரிய பிராஜெக்ட். பதிமூன்று தளங்களை கொண்ட அபார்ட்மெண்ட் அது.


ப்ரஷாந்தி உள்ளே நுழைந்தவுடன் சைட் இன்ஜினியர் ஜீவா வந்து, "வாங்க மேம் சார் சொன்னாரு நீங்க வருவிங்கனு" என்று வரவேற்க,


புன்னகையுடன் தலையசைத்தவள், "நான் பாத்துக்கிறேன். நீங்க உங்க வொர்க்க கன்டினியூ பண்ணுங்க" என்று அவனை அனுப்பிவிட்டு தானே அனைத்தையும் பார்க்க சென்றாள்.


முக்கால் வாசி வேலைகள் முடிந்திருக்க தளம் போடும் வேலையும் பிளாஸ்டரிங் வேலையும் நடந்து கொண்டு இருந்தது.


மேஸ்திரிகள் சிமெண்ட் கலவைகளை கொட்டி சமன் செய்து தளத்தை சமன் செய்த படி இருக்க இன்ஜினியர்கள் அருகிலே நின்று சில பல தவறுகளை சுட்டி காட்டி சரிசெய்ய சொல்லிய படி இருந்தனர்.


ஒரு புறம் ஜன்னல் மற்றும் கதவு வைக்கும் வேலையும் நடந்து கொண்டு இருந்தது.




எல்லாம் சரியாக நடக்கிறதா என்று சுற்றி வந்த படி இருந்தவளை, "ப்ரஷாந்தி….." என்ற சத்தம் கலைத்தது.


ஆம் சத்தம் தான் அந்த சத்தத்தில் வேலை செய்திருந்த அனைவரும் திரும்பி பார்த்துவிட்டு தங்களது வேலையை தொடர, ப்ரஷாந்தி சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினாள்.


அங்கே, "ப்ரஷி எப்படி இருக்க…?" என கைகளை ஆட்டி ஆர்ப்பாட்டமாய் பேசியவாறு அவளருகே வந்தாள் கரிஷ்மா.


"ஹ்ம்ம் நல்லா இருக்கேன்" என்று மிதமான புன்னகையுடன் பதில் அளித்தாள்.


ப்ரஷாந்தியை சந்தித்ததில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி அது முகத்திலும் பிரதிபலித்தது.


ப்ரஷாந்திக்கு மகிழ்ச்சி தான் ஆனால் அமைதியாகவே புன்னகைத்தாள்.


அருகில் வந்து கைகளை பிடித்து கொண்டு, "வாவ் இன்னைக்கு நான் உன்னை மீட் பண்ணுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ண கூட இல்லை. ஐ ஆம் ஸோ ஹாப்பி டூ மீட் யூ" என்று மகிழ்ச்சியில் குதூகலித்தவள்,


"ஆமா நீ எங்க இங்க…?" என வினா தொடுத்தாள்.


"எனக்கும் உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். நான் இங்க தான் வொர்க் பண்றேன்" என்று பதில் மொழிந்தாள்.


"ஓ…இங்க தான் வொர்க் பண்றியா…?" என்றவள்,


"நீ ரொம்ப ஆளே மாறிட்ட. எப்படி துறுதுறுன்னு பேசிட்டே இருப்ப. அதெல்லாம் மிஸ்ஸிங்" என்க,


ப்ரஷாந்தி புன்னகையை பதிலாக கொடுத்தாள்.


"ஹ்ம்ம் அளந்து தான் பேசுற" என்று இயம்ப,


"நீ இங்க என்ன பண்ற…?" என ப்ரஷியிடமிருந்து பதில் வந்ததது.


அவள் பதில் கூறும் முன், "கரிஷ் எங்கெல்லாம் உன்னை தேடுறது…?" என கேட்டபடியே ஒருவன் வர,


கரிஷ்மா, "ப்ரஷி இவர் என்னோட ஹஸ்பண்ட் யுவன்" என்றவள் கணவனிடமும் ப்ரஷாந்தியை அறிமுகப்படுத்தினாள்.


யுவனிடம், "ஹாய்…" என்று புன்னகைத்தவள்,


"உனக்கு மேரேஜ் ஆகிடுச்சா…? சொல்லவே இல்லை" என்று வியப்பில் புருவம் உயர்த்தினாள்.



"ஆமாடி…" என்று வெட்க புன்னகையை சிந்தியவள்,


"சாரி யாராயும் இன்வைட் பண்ண முடியலை" என்று வருத்தத்துடன் முடிக்க,

"இட்ஸ் ஓகே" என்று ப்ரஷி அவள் கையை பற்றினாள்.


"நாங்க தனியா ப்ளாட் வாங்குற ஐடியால இருக்கோம். அதுக்காக தான் இப்போ ப்ளாட் பார்க்க வந்திருக்கோம்" என்று கூற, மார்கெட்டிங் குழுவிழுலிருந்து ஒரு பெண் க்ரிஷ்மாவை தேடி வந்தாள்.


ப்ரஷாந்தி, "இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். நான் இவங்ககிட்ட பேசிக்கிறேன். நீங்க மத்த கிளையண்ட்ஸ கவனிங்க தனு" என்று அந்த பெண்ணை அனுப்பியவள்,


"ப்ளாட்டை சுத்தி பாத்திங்களா…? உங்களுக்கு பிடிச்சிருக்கா…?" என்று அவர்களிடம் வினவினாள்.


"ஹ்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னும் ரெண்டு மூனு ப்ளாட் பாத்திட்டு டிசைட் பண்ணலாம்னு நினைச்சு இருந்தோம். பட் உன்னை பார்த்ததும் இங்கயே புக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டோம்" என்று புன்னகைத்தாள்.


"உங்களுக்கு எந்த ப்ளோர் எந்த ப்ளாட் வேணும்" என்று ப்ரஷி தொழில் சம்மந்தமாக பேச தொடங்கிட, கரிஷ்மாவும் பதில் அளித்தாள்.


இறுதியில் மூவரும் பேசி எந்த ப்ளாட்டை வாங்குவது என்று முடிவு செய்து இருந்தனர்.


யுவன், "இப்பவே புல் அமௌண்ட பே பண்ணனுமா…?" என கேள்வி எழுப்ப,


"இல்லை. இப்போதைக்கு நீங்க இனிஷியல் அமௌண்ட் பே பண்ணி ப்ளாட் புக் பண்ணிட்டா போதும். பேலன்ஸ ரெஜிஸ்ட்ரேஷன் அப்போ பண்ணா போதும்"
என்று பதில் மொழிந்தாள்.


கரிஷ்மா, "அப்போ ஓகே. நாங்க இந்த வீக் எண்ட்ல இனிஷியல் அமௌண்ட் பே பண்ணிட்றோம்" என்று முடித்தாள்.


ப்ரஷி தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க,


யுவன், "கரிஷ் அவங்களுக்கு வொர்க் இருக்கும் போல" என்றான்.


"உனக்கு அர்ஜென்ட் வொர்க் எதுவும் இருக்கா டி. ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்ணி இருக்கோம் ஒரு காஃபி சாப்பிடலாமா…?" என வினா எழுப்பினாள்.


கரிஷ்மா இவ்வளவு தூரம் கேட்பதால் திவாகரிடம் சொல்லி கொள்ளலாம் என்று நினைத்தவள் சம்மதமாக தலையசைத்தாள்…
 
Top