• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
602
Reaction score
836
Points
93
அத்தியாயம் 25:

மறுநாள் பொழுது அழகாக விடிந்தது அந்த காதல் இணைகளுக்கு.


ப்ரஷாந்தி உறக்கம் கலைந்து கண்விழித்து பார்க்க ஹரியை அருகில் காணவில்லை.


அவளது விழிகள் சுவற்றில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது எட்டு என்று காண்பித்தது.

'பயண களைப்பில் இத்தனை நேரம் உறங்கிவிட்டோமா…?' என எண்ணியவளின் விழிகள் ஹரியை தேட, குளியலறையில் இருந்து தண்ணீர் சத்தம் கேட்டது.


குளித்து கொண்டு இருக்கிறான் போல என நினைத்தவள் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு கீழே இறங்கி சென்றாள்.


இவள் அரவம் கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்த சுமதி, "எழுந்து வந்துட்டிங்களாம்மா…? இருங்க ரெண்டு நிமிஷத்துல காஃபி கலக்கி கொண்டு வர்றேன்" என்று விரைய,


"பொறுமையாவே போடுங்கம்மா" என்றவள் சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாளை புரட்ட தொடங்கினாள்.


சொல்லியபடியே இரண்டு நிமிடங்களில் காஃபியுடன் சுமதி வர, நன்றி கூறிய படி எடுத்து கொண்டவள் மீண்டும் விழிகளை செய்தி தாளில் பதித்தாள்.


செய்தி தாளின் அனைத்து பக்கங்களையும் பார்த்துவிட்டவள் இன்னும் ஹரியை காணவில்லையோ என்று மாடியை பார்க்க,


ஸ்கை ப்ளூ லினன் சர்ட்டும் டார்க் ப்ளாக் பேண்ட்டும் அணிந்து வெளியே செல்வதை போல தயாராகி கீழே வந்தான்.


'காலையிலே எங்கு கிளம்பிவிட்டான்…?' என்ற வினா அவளது வதனத்தில் தொக்கி நிற்க,


அதனை உணர்ந்தவன், "ப்ரஷாந்தி இன்னைக்கு ரொம்ப இம்ப்பார்ட்டன்ட் போர்ட் மீட்டிங் இருக்கு. நான் கண்டிப்பா போகணும்" என்று பதிலளித்து அவளை பார்த்தான்.


அவளுக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்கு பிறகு அவனை சந்திருக்கிறோம். அவனுடன் சேர்ந்திருக்கிறோம். இவ்வளவு வருடங்களாக தன் வாழ்நாளில் நடந்த அனைத்தையும் கூற அவனிடம் கேட்க என்று நிறைய நிறைய அவள் சிந்தித்து வைத்திருக்க,


இவன் என்னவோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று வந்து நிற்கிறான்.


அதனை கேட்கவும் முடியவில்லை. இத்தனை வருடங்களுக்கு பிறகான இணைவில் சடுதியில் அத்தனை உரிமையுடன் பேச முடியவில்லை.


ஏமாற்றம் அலை அலையாக உள்ளுக்குள் பரவ முகத்திலிருந்து மறைத்தவள்,

"சரி" என்பதாய் தலையசைத்தாள்.


அவன் பதில் பேசும் முன், "ஏன் தம்பி எத்தனை வருஷத்துக்கப்புறம் நீங்க ஒன்னா சேர்ந்திருக்கீங்க. பேசுறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும். எங்கேயாவது வெளியே அழைச்சிட்டு போகாம. ஆபிஸ்க்கு போகணும்னு வந்து நிக்கிற" என்று குரல் வந்தது சுமதியிடமிருந்து.


தான் நினைத்ததை அவர் கேட்டுவிட்டார் என்று நினைத்தவள் பதிலுக்காக அவன் முகம் நோக்கினாள்.

"சுமதிம்மா ஒரு முக்கியமான வேலைம்மா. நான் கண்டிப்பா அங்க போயாகணும். இல்லைன்னா நான் போயிருக்க மாட்டேன்" என்று பதில் மொழிந்தான்.


"வேலை எல்லாம் நாளும் தான் இருக்கும் தம்பி. நீ சொன்னதும் பாப்பா முகமே வாடி போச்சு" என்க,


அவன் பார்வை தன் புறம் திரும்பியதை உணர்ந்தவள்,


"இல்லை அதெல்லாம் இல்லை. நீ போய்ட்டு வா ஹரி" என்று உடனடியாக மறுத்தாள்.

"புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டி தான்" என்று சுமதி அங்கலாய்க்க,

இருவர் இதழிலும் புன்னகை ஜனித்தது.

"நான் போயிட்டு வர்றேன்" என்று பொதுவாக கூறிவிட்டு கிளம்ப,

"சாப்பிட்டு போ" என்று இருவரிடமுமிருந்தும் ஒரே நேரத்தில் பதில் வந்தது.


அதில் அவன் புன்னகை மேலும் விரிய, "டைம் ஆச்சு நான் ஆபிஸ் கேண்டின்லயே சாப்பிட்டுக்கிறேன்" என்றவாறு அவளிடம் விழிகளால் விடை பெற்று வெளியேறியிருந்தான்.


சுமதி, "ப்ரஷாந்திம்மா நீயாவாது சாப்பிடுவியா இல்லை உன் புருஷனை மாதிரி சொல்லிடுவியா…? உங்களுக்காக தான் பொங்கல் கேசரி வடை எல்லாம் செஞ்சிருக்கேன்" என்று கேட்க,


ப்ரஷாந்தி சிரிப்புடன், "கண்டிப்பா சாப்பிட்றேன்மா. சந்தோஷமா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நீங்க ரெடி பண்ணுங்க நான் குளிச்சிட்டு வர்றேன்" என்று அறைக்கு சென்றாள்.


அவரது உரிமையான பேச்சிலே எத்தனை தூரம் இங்க முக்கியத்துவம் வாய்ந்தவர் ஹரிக்கும் நெருக்காமானவர் என்று தெரிந்தது.

அவரது கள்ளம் கபடம் அற்ற அன்பு அவளுக்கும் பிடித்திருந்தது.


குளித்து வந்து அவருடன் பேசிய படியே சாப்பிட்டு முடித்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அலைபேசியை எடுத்து பார்க்க சுபத்ராவிடமிருந்து நிறைய அழைப்புகளும் மற்ற நிறைய அழைப்புகளும் வந்திருந்தது.

"ஷ்… நடந்தவற்றில் குடும்பத்தினரை மறந்துவிட்டோமே" என்று நாக்கை கடித்து தலையில் தட்டியவள், உடனே தாயிற்கு அழைப்பு விடுத்தாள்.


மறுமுனையில் அழைப்பை உடனடியாக ஏற்கப்பட, "என்ன பண்ற டி. ரெண்டு நாளா ஒரு காலும் இல்லை. சாப்பிட்டியா…?" வரிசையாக கேள்விகள் பறந்து வந்தது.


"ஹ்ம்ம் இப்போ தான் எழுந்து குளிச்சு சாப்பிட்டேன்" என்றவளுக்கு அடுத்து என்ன உரைப்பதென்று தெரியவில்லை.


ஹரியுடன் சேர்ந்துவிட்டதை கூற தயக்கம். இத்தனை நாள் கோபமாக இருந்துவிட்டு திடீரென அவனுடன் இணைந்து விட்டதை அதுவும் மும்பைக்கு வந்து விட்டதை கூற சிறு கூச்சம்.

"ம்மா…" என்று இழுத்தவளுக்கு வார்த்தை வரவில்லை.

"என்னடி" என்று சுபத்ரா வினவ,

ஆழ்ந்து மூச்சை எடுத்தவள்,

"ம்மா நான் மும்பைல இருக்கேன் இப்போ" என்று ஒருவழியாக கூறிவிட,

"எங்களுக்கு தெரியும்" என்று மறுமுனையில் சிரிப்புடன் பல குரல்கள் பதிலாக வந்தது.

அதில் அதிர்ந்தவள், "எப்படி" என்க,


"ஹான் காத்துவாக்குல நியூஸ் வந்தது ப்ரஷி" என்று நிஷா கூற,

"ஆமா ப்ரஷி பறந்து வந்திச்சு. நீ எவ்ளோ சீக்கிரம் எங்ககிட்ட சொல்லிட்ட. நேத்து மும்பைய ரீச் ஆகிட்டு இப்போ கால் பண்ற" தீபி இயம்ப,


"விடுடி காதல் மயக்கத்துல சொல்ல மறந்திருப்பா. அப்படி தான ப்ரஷாந்தி" என்று மீண்டும் நிஷா வினவினாள்.

ப்ரஷாந்தி பதில் கூறாது திகைத்து விழிக்க,

"ப்ச் சும்மா இருங்கடி" என்று அதட்டிய சுபத்ரா,

"எங்களுக்கு ரேஷ்மா தான் கால் பண்ணி சொன்னாடி.நீயா சொல்லுவேன்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. எங்க நீ இப்படி தனியாவே இருந்திடுவியோன்னு நானும் அப்பாவும் பயந்திட்டே இருந்தோம் டி. இப்போ தான் நிம்மிதியா இருக்கு" என்று மகிழ,


"ஆனால் எனக்கு நிம்மதியா இல்லையே. நானும் சந்திருவும் தான் இந்த வீட்ல நியூ கப்பிள்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ எங்களுக்கு போட்டியா இந்த லவ் பேர்ட்ஸ் வந்துட்டாங்களே" என்று போலியாக வருத்தப்பட,

அவளது பேச்சில் ப்ரஷாந்திக்கு சிரிப்பு வந்துவிட,

"தீபி" என்று சிரிப்புடன் சிணுங்கினாள்.

"பார்றா சிணுங்கலை. " என்று அதற்கும் அவள் வார,


"அடடே இந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க நான் நேர்ல இல்லையே" என்று கலாய்த்தாள்.

"பேசாம இருங்க" என்று மீண்டும் சுபத்ரா அதட்ட,


அதனை கேளாமல் இருவரும் மேலும் அவளை கலாய்த்து வெட்கப்பட வைத்துவிட்டு பின்னர் இறுதியில்,

"சும்மா தான் ஃபன்னுக்கு கலாய்ச்சோம். நீ சந்தோஷமா இருந்தா எங்களுக்கும் சந்தோஷம்" என்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


சுபத்ரா பேசிவிட்டு சுதர்ஷனிடம் தர அவருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு ஹரி தான் ரேஷ்மாவிற்கு கூறியிருப்பபான் என்று புரிந்தது.


நேற்று இரவு ரேஷ்மாவிற்கு தான் பேசியுள்ளான் போல என நினைத்தவள், திவாகருக்கு அழைத்து தான் ஹரியுடன் மீண்டும் இணைந்து விட்டதை கூறினாள்.


இதனை கேட்டு திவாகருக்கு அத்தனை மகிழ்ச்சி. அவன் தானே சுபத்ராவின் வருத்தத்தையும் புலம்பலயும் கேட்டு கொண்டிருந்தவன்.


மேலும் தோழியின் வாழ்க்கையை நினைத்து வருந்தியவனுக்கு இச்செய்தி தேனை தான் செவியில் பாய்ச்சியிருந்தது.


அவளது மனமாற வாழ்த்துக்கள் கூறியவன் சில பல கிண்டல்களையும் செய்து விட்டே அழைப்பை துண்டித்தான்.


அவனுடைய சிறு வருத்தம் ப்ரஷாந்தியை போல ஒரு உழைப்பாளி அவனுக்கு மீண்டும் கிடைப்பது கடினமே. இருந்தும் அவளது மகிழ்ச்சியில் இது பெரியதாக தெரியவில்லை.


இப்படியே மதிய பொழுது வந்துவிட சுமதியுடன் பேசி உண்டு அன்றைய நாளை கடத்தியிருந்தாள்.


இரவு வெகு தாமதமாக தான் ஹரி வீட்டிற்கு வந்தான். அவனுடைய நிறுவனம் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம்.


மிகப்பெரிய அளவில் பொருட்களை வாங்கி விற்கும் நிறுவனத்தினுடன் டை அப் செய்து தான் ஹரியின் நிறுவனம் இயங்கி வருகிறது.


திடீரென சர்வரில் ஏதோ க்ராஷ் ஆகி பொருட்கள் எல்லாம் முகவரி மாறி மாறி விநியோகம் செய்யப்பட்டதில் பெரிய பிரச்சினையாகிவிட்டது.


அதன் காரணமாக மூன்று நாட்களாக நிற்க நேரமில்லாமல் ஓடி கொண்டு இருப்பவன் அடுத்தடுத்த நாட்களும் இரவில் தாமதமாக வந்து காலையில் விரைவாக சென்று விடுகிறான்.


அவளால் அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. வீட்டினரை பார்க்க செல்ல வேண்டும் அலுவலகத்தில் முறையாக அனைத்தையும் முடித்து வேலையில் இருந்து விடுபட வேண்டும்.


நண்பர்களை பார்க்க வேண்டும் என்று ஆயிரமாயிரம் வேலைகள் அவளுக்காக காத்து கிடந்தது.


ஆனால் அவனுடைய சூழ்நிலையின் காரணமாக அவளால் எதையும் கேட்க முடியவில்லை.

இன்றும் அதே போல தான் நேரம் இரவு பதினொன்றை தொட்டிருக்க அவன் இன்னும் வரவில்லை.


அவனை எதிர்ப்பார்த்து ஹால் சோஃபாவிலே அமர்ந்திருந்தவளுக்கு தூக்கம் விழிகளை சுழற்றியது.


'ஆவ்' என்று கொட்டாவியை வெளியேற்றியவளிடம், "ப்ரஷாந்திமா ஏன் இப்படி தூக்கத்தை கெடுத்திக்கிட்டு உட்கார்ந்து இருக்க. தம்பி வந்தா நான் சாப்பாடு போட்டுக்கிறேன். நீ போய் தூங்கு" என்ற படி வந்தார் சுமதி.


"இல்லைம்மா நீங்க மார்னிங் சமைக்கிறதுக்கு இயர்லியரா எழணும். இப்பவும் லேட்டா தூங்குனா சரியா வராது. நீங்க போய் தூங்குங்க" என்று பேசி சமாளித்து அவரை அனுப்பியவள் மீண்டும் தன்னிடத்திற்கே வந்தவள் சோஃபாவில் பழைய படி அமர்ந்து கொண்டாள்.


நேரம் பனிரெண்டை நெருங்க தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாய்ந்தவாக்கில் உறங்கிவிட்டாள்.


தன்னிடமுள்ள சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனின் விழிகளில் பட்டது சோஃபாவில் எழிலோவியமாக உறங்கும் மனையாளை தான்.


தன்னை மறந்து தலையை சாய்த்து ரசித்தவனின் மனதில் அவளது உறங்கும் விழிகளில் முத்தமிட்டு அவளை எழுப்பிவிடும் விபரீத ஆசை எழுந்தது.


இதழில் புன்சிரிப்பு தோன்ற தனது பேக்கை வைத்துவிட்டு ப்ரஷ்அப் ஆகி வந்தவன் சத்தமில்லாமல் அவளை கைகளில் ஏந்தி கொண்டு அறைக்குள் செல்ல, அவளுக்கு விழிப்பு வரவில்லை.


படுக்கையில் படுக்க வைத்தவன் அவனுக்காக எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அறைக்கு வந்து அவளருகில் படுத்து கொள்ள அவனருகாமையை உணர்ந்தவள் அவனுடன் நெருங்கி படுத்து கொண்டாள்.


இடையோடு சேர்த்து அணைத்து கொண்டவன் மென்னகையுடன் இமைகளின் மேல் இதழ் பதித்து விட்டு உறங்கி போனான்.



ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு விழிப்பு தட்ட ஹரிக்காக காத்திருந்தது நினைவில் வந்து சடுதியில் எழ முற்பட்ட அவளை கரங்களால் தடுத்தவன் மூடிய விழிகளை திறக்காமலே,


"இவ்ளோ சீக்கிரம் எழுந்து என்ன செய்ய போற. தூங்குடி" என்றவாறு திரும்பி படுத்துவிட இவளுக்கு தான் மூச்சு ஒரு நொடி நின்று வந்தது.

அவளுக்கு மிக நெருக்கமாக முகத்தை வைத்திருந்தவன் விழிகளை திறக்காது பேசியவனின் இதழ்கள் அவளது இதழ்களில் உரசி செல்ல உடலில் மின்சாரம் பாய ஸ்தம்பித்துவிட்டாள்.



என்னதான் காதல் கணவன் என்றாலும் வெகுநாட்களுக்கு பிறகான அவனது இதழ் தீண்டல் உள்ளுக்குள் என்னென்னவோ செய்தது.

அவள் தன்னை சுதாரிக்கும் முன் அவள் புறம் திரும்பியவன்,

"எல்லா ஒர்க்கும் ஓவர். லேட்டா எழுந்தா போதும்" என்றபடி அவளது கழுத்தில் முகத்தை புதைத்த படி உறங்க தொடங்க, இவள் தான் மூச்சடைத்து போனாள்.


சில நிமிடங்களில் தன்னை நிதானித்வளுக்கு தான் இரவில் உறங்கிவிட்டது நினைவு வர, இவன் தான் இங்கு தூக்கி வந்திருப்பான்.

"இத்தனை நாட்களாக கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது வந்து ஒட்டி கொள்கிறான்' மனதிற்குள் நினைத்தவள் அவனிடமிருந்து விலக பார்க்க முடியவில்லை.


அத்தனை இறுக்கமாக அணைத்து பிடித்திருந்தவன், "நைட் ரொம்ப லேட் ஆகிடுச்சு. கொஞ்சம் ஆடாம அசையாம தூங்க விடுடி" என்க, அதன் பிறகு அவள் அசையேவேயில்லை.


ஒரே இடத்தில் கண்மூடி படுத்திருந்தவள் சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்.


மறுபடியும் அவள் கண்விழிக்கும் நேரம் அவன் அருகில் இல்லை. எழுந்து சென்றவள் காலை கடன்களை முடித்து வெளியே வர,


"ஹாப்பி மார்னிங்" என்று அகம் நிறைந்த புன்னகையுடன் வந்து சட்டென்று குனிந்து கன்னத்தில் இதழ் பதித்தவன் காஃபியை நீட்டினான்.


அவனது அடுத்தடுத்த தாக்குதலில் நிலை தடுமாறியவள் சாமாளித்து திகைத்து விழிவிரித்து அவனை பார்க்க,


"என்ன பாக்குற இந்தா காஃபியை குடி" என்று கையில் வைத்தவன்,

"இன்னைக்கு எங்கேயும் வெளியே போகலை நமக்கு வீட்ல தான் வேலை" என்று விஷம புன்னகையுடன் கூறினான்.


அதில் முகம் குப்பென சிவந்துவிட முகத்தை மறுபுறம் திருப்பியவள், "எ… என்ன வொர்க்" என்று கேட்க,


"ஹ்ம்ம்" என்றபடி அவளை முழுவதும் உரசும் படி வந்து நின்றவனது செயலில் திகைப்பில் விழி விரித்து கன்னங்கள் சிவந்து இதழ்துடிக்க நின்றிருந்தவளின் நாசியின் மேல் ஒய்யாரமாக வீற்றிருந்த நீர்த்துளியின் மேல் அவனது விழிகள் ரசனையாக படிந்தது.


அதனை இதழ்களால் இசைத்திடும் எண்ணம் துளிர்விட அவளை நோக்கி முகத்தை நகர்த்த துடிக்கும் அதரங்களுடன் துடி துடிக்கும் இமைகளை இறுக்கமாக மூடினாள்.


தன்னை கட்டுப்படுத்தியவன் இதழ்கள் அவள் செவியில் உரசும்படி, "இன்னைக்கு நம்ம வீட்டுக்கு ரொம்ப முக்கியமான கெஸ்ட் வர்றாங்க. வெல்கம் பண்ணனும் சீக்கிரம் ரெடியாகு" என்றவனின் குரலில் விழி திறந்தவள் இதழ்கடித்து முகத்தை திருப்பி கொண்டாள்.


உணர்வுகளை கட்டுப்படுத்தியவளுக்கு கோபம் எக்கசக்கமாக வந்தது.


இத்தனை நாள் யாரோ எவரோ என இருந்துவிட்டு இப்போது விருந்தினர் வருகிறாராம் விருந்தினர். அப்படி யார் முக்கியமான நபர்கள் என்று எண்ணம் தோன்ற அவனை முறைத்தப்படி,


"யார் அந்த கெஸ்ட்…?" என வினவ,


"அது சஸ்பென்ஸ்" என்று ஹஸ்கி குரலில் கூறி அவளது கன்னத்தை தட்டிவிட்டு வெளியேறிவன் அவளது கோபத்தை பெருக்கியிருந்தான்.


'இவன் சொன்னால் நான் தயாராக வேண்டுமா மாட்டேன்' என்று ஊடல் கொண்டவள் சில நொடிகளில் எண்ணத்தை மாற்றி யார் அந்த விருந்தினர் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தயராக செல்ல அவர்களது பெட்டில் இருந்த, "திஸ் இஸ் பார் யூ…" என்ற வாசகத்துடன் ஒரு உடை வரவேற்றது.


அதை ஆச்சரியமடைந்தவள் அதனை எடுத்து பார்க்க பேபி பிங்க் நிறத்தில் ஜார்ஜெட் லெஹெங்கா கண்களை பறித்தது.


தனக்காக தான் வாங்கியுள்ளான். இத்தனை தடபுடலாக அதுவும் என்னை கண்டுகொள்ளாமல் வரவேற்பை பெறும் நபரை பார்க்க ஆர்வம் உந்தி தள்ள குளித்து தயாராகி உடையும் அதற்கேற்ற வைட் கோல்ட் அணிகலன்களும் அணிந்து ப்ரென்ஜ் பேக்கை போட்டு முடித்தவள் ஒரு முறை கண்ணாடியில் பார்த்தாள்.


அத்தனை அழகாக இருந்த தன் தோற்றத்தினை கண்டு அவளது வியப்பு தான். அவ்வளவு பொருத்தமாக இருந்ததில் அவனது தேர்வை மெச்சி கொண்டவள் ஸ்கர்டை கையில் பிடித்த படி வெளியேறினாள்.


படியிறங்கியவளுக்கு கணவனது பார்வையை எதிர்கொள்வதை நினைத்து உள்ளுக்குள் சிறகடித்தது. காலையில் அத்தனை லஜ்ஜையுற செய்தவன் என்ன செய்ய போகிறானோ என்று படபடத்த இதயத்துடன் கீழிறங்க,

அவனோ இவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் சுமதியிடம்,

"சுமதிம்மா சாப்பாடெல்லாம் ரெடி தானே. அவங்க வந்திடுவாங்க" என்று கேட்ட படி இருந்தான்.


ஏமாற்றம் இதயத்தில் ஊடுருவி செல்ல, தன்னை கவனிக்காமல் இருந்திருப்பான் என்று மனதை தேற்றியவள்,

"ரெடியாகிட்டேன் ஹரி" என்று அவன் முன் நின்றாள்.

"ரெடியாகிட்டியா. அவங்க வர்ற டைம் ஆச்சு வா வெல்கம் பண்ணுவோம்" என்று வாசலுக்கு விரைய,


அவளுக்கு அந்த விருந்தினர் மீது ஆத்திரமே வந்துவிட்டது.


கோபத்தில் அழுத்தமான காலடிகளுடன் அவன் பின்னே சென்றவள் வரிசையாக வரும் மூன்று கார்களை கண்டு ஆச்சிரியமடைந்தாள்.


ஒன்று இரண்டு பேர் என நினைத்திருக்க மூன்று கார்களை எதிர்ப்பார்க்கவில்லை.


"வா ப்ரஷாந்தி" என்று கைபிடித்து இழுத்தவனுடன் சென்றவள் காரிலிருந்து இறங்கிய அவளது நண்பர்கள் கூட்டத்தை கண்டு அதிர்ச்சி வியப்பு மகிழ்ச்சி எல்லாம் தாக்கிய நிலையில் நின்றுவிட்டாள்.


"என்ன பார்த்துட்டே இருக்க வெல்கம் பண்ணு" என்று ஹரி உலுக்கவும் நினைவிற்கு வந்தவள் அவர்களை பார்க்க,


"சர்ப்ரைஸ்…" என்று கத்தியபடி அவளை வந்து அணைத்து கொண்டனர்.

அவளுக்கு மகிழ்ச்சியில் விழிகளே கலங்கிவிட்டது.


யாரோ வருகிறார்கள் என்று நினைத்தவள் சர்வ நிச்சயமாக இவர்களை எதிர்ப்பார்க்கவில்லை.


"ஹரி அவ ஸ்வீட் சர்ப்ரைஸ்ல ப்ரீஸ் ஆகிட்டா. நீங்க உள்ள வாங்க" என்று கூற,


"நோ நாங்க முறையான வரவேற்பு இல்லாம உள்ள வர மாட்டோம்" என்று எல்லோரும் கோரஸாக கூறிய படி கை கட்டி நின்றுவிட்டனர்.


அவர்களது செயலில் இதழில் சிரிப்புடன், "உள்ள வாங்க" இருவரும் வரவேற்க, எல்லோரும் உள்ளே வந்தனர்.


சுமதி வந்து எல்லோருக்கும் குளிர்பானத்தை கொடுத்துவிட்டு செல்ல நண்பர்களுடன் அவ்விடமே கலகலப்பானது.


சஞ்சய், "எப்படி எங்க சர்ப்ரைஸ்…?" என வினவ,


"ரியல்லி நீங்க எல்லாரும் என்னை பாக்க வருவீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. இட் வாஸ் ரியல்லி எ ஸ்வீட் சர்ப்ரைஸ்" என்று முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இயம்ப,


"ரொம்ப சந்தோஷதப்படாத நாங்க ஒன்னும் உன்னை பாக்குறதுக்காக வரலை. ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதான் வந்தோம்" என்று கூறிய ரேஷ்மா அவளை அதிர செய்திருந்தாள்.


அவள் அதிர்ந்த முகத்தை கண்டவள், "என்ன பாக்குற உண்மைக்கே தான். எங்களுக்கு ப்ரஷாந்தி ப்ரஷாந்தின்னு ஒரு ப்ரெண்ட் இருந்தா. அவ ஒரு நாலு நாளைக்கு முன்னாடி மும்பைக்கு கிளம்பி வந்தா. ஆனால் இப்போ வரைக்கும் ஒரு கால் இல்லை. மெசேஜ் இல்லை. ஆளயே காணோம்" என்று சோகம் போல சொல்ல,

"ஷ்…" என்றவள்,

"சாரி…" என்று இழுத்தாள்.


"என்ன சாரி ஆள பார்த்ததும் ரொமான்ஸ் பண்ணிட்டு எங்களை மறந்துட்டியா" மேனகா கிண்டலடிக்க, அதில் லஜ்ஜையுற்றவள் முகம் சிவந்துவிட்டாள்.


இதனை கண்ட நண்பர்கள் கூட்டம், "ஹே…." என்று ஆர்ப்பரிக்க,


மேலும் சிவந்த முகத்தை மறைக்க அவன் பின்னால் மறைந்து கொண்டாள்.


"எங்க ஓடுற. ஓடுனா விட்ருவோமா. வா வந்து பதில் செல்லு. ஏன் இப்போ வரைக்கும் நீ கால் பண்ணலை" என்று இழுத்து வைத்து விசாரிக்க,


"என்னை காப்பாற்றேன்" எனும் விதமாக ஹரியை நோக்கினாள்.


இத்தனை நேரம் சிரிப்புடன் அத்தனையும் பார்த்திருந்தவன்,

"போதும் விட்ருங்கப்பா" என்று மனையாளுக்கு துணையாக வந்தான்.


"ஹே என்ன சப்போர்ட்டா அதெல்லாம் இங்க எடு படாது ஐ வான்ட் ஆன்ஸர்" என்று ப்ரஷாந்தியை கலாய்த்து தள்ளிவிட்டனர்.


அதன் பிறகு காலை உணவுடன் நேரம் செல்ல உண்டுவிட்டு களைப்பை மறந்து கதையடிக்க தொடங்கியிருந்தனர்.


ஆண்கள் ஒரு புறமும் அவர்களிடம் இருந்து சிறிது தள்ளி பெண்கள் இருபுறமும் தோட்டத்தில் உள்ள புல் தரையில் அமர்ந்து பேசிய படி அமர்ந்திருந்தனர்.


எல்லோரும் பேசி கொண்டு இருக்கையில் மேனகா, "ப்ரஷி காலேஜ் டேஸ்லயே உன் ஆளு ஹீரோ மாதிரி இருப்பான். இப்போ நல்ல ஹைட் அண்ட் வெயிட்டா இன்னும் கலராகி பேஸ்ல மெச்சூரிட்டியோட அதுவும் இந்த ஆலீவ் க்ரீன் சர்ட் வித் ப்ளாக் ஜீன்ஸ்ல வேற லெவெல்ல இருக்கான்டி" என்று ஜொல்லுவிட,


"ஹேய் உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு" என்று ரேஷ்மா அவளை விலாவில் இடித்தாள்.


"ஸோ வாட். என் சைட் என்னுரிமை" என்று கண்ணடித்தாள்.


இவர்களது சண்டை கண்டு கொள்ளாது ப்ரஷியின் பார்வை ஹரியின் மீது விழுந்தது.


காலையில் கோபத்தில் இருந்ததினால் அவனை கவனிக்கவில்லை. இப்போது நிறுத்தி நிதானமாக கவனித்தாள்.


கேசம் காற்றில் அலை அலையாக பறக்க அதனை இடது கையால் கோதியபடி இதழில் சிரிப்புடன் முகத்தில் பொலிவுடன் பேசியவனின் கன்னக்குழியில் பார்வை பதிந்ததில் மொத்த
மாக வீழ்ந்திருந்தாள்.


தன்னை யாரோ பார்க்கும் உணர்வில் அவன் திரும்பி பார்க்க இருவரது விழிகளும் ஒரு கனம் நேர் கோட்டில் பயணிக்க, அடுத்த நொடியே பார்வை திருப்பி கொண்டாள்.


இருந்தும் அவளது கள்ளப் பார்வையை கண்டு கொண்டவனது இதழில் குறுஞ்சிரிப்பு மின்னியது.



நீ பார்க்கும் பார்வை கண்ணோடு
ஆஹா ஹா…
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு
ஆஹா ஹா…


தொடரும்…

இவள் மீரா க்ரிஷ்…










































 
Top