• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
601
Reaction score
836
Points
93
அத்தியாயம் 17

நொடிகள் நிமிடங்களாக நகர ப்ரஷி முகத்தை மூடியபடி தான் அமர்ந்திருக்க, வெளியே சென்ற ஹரி வரவில்லை…


பொறுத்திருந்து பார்த்தவள் தானே எழுந்து வெளியே செல்ல ஹரி கையில் அக்கருவியுடன் அவளுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தான்.


'தன்னை போல இன்ப அதிர்ச்சியில் உறைந்துவிட்டானா…?' என சந்தேகித்த படி அவன் முன்னே சென்று பார்த்தாள்.


கையில் இருந்த கருவியை பார்த்த படி இருந்தவனின் முகத்தில் என்ன உணர்வென்று அவளால் அறிய முடியவில்லை.


மகிழ்ச்சியில் ஏதும் உணராமல் நிற்கின்றான் போல என்று எண்ணியவள்,

"என்ன ஹரி எதுவும் சொல்லாம இருக்க. உனக்கும் என்ன மாதிரி ஆனந்த அதிர்ச்சியா…? டேட் தள்ளி போயிருக்கு. நான் கூட இதை நோட் பண்ணலை. ஆபிஸ்ல ஷாந்திதான் நான் மார்னிங் வாமிட் பண்ணதை பார்த்து ப்ரெக்னன்ட்டா இருக்கியான்னு கேட்டா…?"


"..."

"எனக்கு ஒரு செகெண்ட் ஒன்னுமே புரியலை. உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுச்சு சொல்ல தெரியலை. ரெண்டு நாளாவே எனக்கு ஒரு மாதிரி டல்லா இருக்க மாதிரி தான் பீல் ஆச்சு. வொர்க் டென்சன்னால அப்படி இருக்கோன்னு நானே நினைச்சு விட்டுட்டேன். ஆனால் அவ கேட்ட பிறகு தான் நான் டேட் தள்ளி போனதை பத்தி கால்குலேட் பண்ணி பார்த்து இதுவா இருக்குமோன்னு யோசிச்சு பார்த்தேன்"


"..."

"உடனே ஜி.எம்கிட்ட லீவ் சொல்லிட்டு பஸ்ல கிளம்பிட்டேன். வீட்டுக்கு வர்ற வரைக்கும் நிறைய திங்கிங். கொஞ்சம் பயமாகவும் இருந்துச்சு இல்லாம போய்ட்டா என்ன பண்றதுன்னு. ப்ரெக்னன்சி கிட்டை வாங்கிட்டு வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா டெஸ்ட்டிங் தான். அது ரிசல்ட் காட்றதுக்குள்ள என் ஹார்ட் பீட் எகிறிடுச்சு"


"..."

"ரெண்டு லைன் காட்ன அந்த ஒரு செகெண்ட் எப்படி என்னோட பீலிங்ஸ டிபைன் பண்றதுன்னு தெரியலை ஹரி. என்னால நிக்க முடியலை. இந்த மூவிஸ்ல எல்லாம் காட்டுவாங்களே அது மாதிரி என்னை சுத்தி எல்லாமே ஸ்டக் ஆகிடுச்சு. வந்து ஹால்லை உட்காந்துட்டேன். நான் நார்மலாகவே கொஞ்சம் நேரம் ஆச்சு…"


"..."


"தென் உன்கிட்ட சொல்லனும்னு ரொம்ப எக்ஸைட்டா இருந்துச்சு. உனக்கு கால் கூட பண்ணேன் நீ அட்டென்ட் பண்ணலை. அப்புறம் தான் நீ மீட்டிங் இருக்குன்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு. டைமே போகாம உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…" என்று தன்போக்கில் பேசி கொண்டு இருந்தவளை அவனது ஒற்றை வார்த்தை தடை செய்தது.


அவனது வார்த்தையில் அதிர்ந்தவள் தான் கேட்ட உண்மைதானா என்று அவனை பார்த்தாள்…


உணர்வற்ற முகத்துடன், "நமக்கு இது வேண்டாம்…" என்று மீண்டும் கூறி அவள் அதிர்ச்சியை அதிகரித்திருந்தான்.


அதிர்ச்சியில், "ஹரி…" என்றவளுக்கு வார்த்தை வர மறுத்தது.


கண்கள் நொடியில் குளமாகிவிட்டது.


பதில் கூறாது அவளையே வெறித்திருந்தான் ஹரி.


"என்ன பேசுற ஹரி…?" என்று தன்னை சமாளித்து கொண்டு வினவ,

மறுபடியும், "இது நமக்கு வேண்டாம்" என்க,


அவளுக்கு சுருக்கென்று கோபம் வந்திட்டது.


கன்னங்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள்,

அவனை கூர்மையாக பார்த்து, "எதை வேண்டாம்னு சொல்ற…?" என்க,


அவனிடம் மொழியில்லை.

அவனது மௌனம் அவளது கோபத்தை அதிகரித்தது.

"உன்னை நான் கேட்குறேன் எது வேண்டாம்னு சொல்ற…?" என கேள்வி கேட்டாள்.


"இந்த குழந்தை நமக்கு வேண்டாம்…" என்றவனின் ஸ்திரமான பதில் அவளை நிலை குலைய வைத்துவிட்டது.

எதுவென்று கேட்டால் நிச்சியமாக குழந்தை வேண்டாம் என்ற பதிலை அவனால் கூற இயலாது.


என்னுடைய ஹரியால் வார்த்தையால் கூட அதனை சொல்ல இயலாது என்று செருக்குடன் நினைத்தவளின் நினைப்பை ஒரு கணத்தில் தூள் தூளாக்கிவிட்டான்…


நாவென்னும் குத்தீட்டியால் இதயத்தினை கிழித்துவிட்டான்…


'நீ… நீயா ஹரி இதை சொன்ன' என்று தாங்கவியலா துக்கத்தை சுமந்து வினவியவளின் வதனத்தை பார்த்த பின்பும் கூட அவனிடம் சிறு இளக்கம் இல்லை.

தன்னவனின் பிம்பம் தன் முன் உடைவதை தாங்க முடியாதவளின் கால்கள் நிற்காது தள்ளாட,

"ப்ரஷாந்தி…" என்ற படி பதறி பிடித்தான் ஹரி‌.


சட்டென்று அவனது கையை தட்டிவிட்டவள் தீப்பார்வை பார்த்து, "தொடாத என்னை நீ. என்னையும் என் குழந்தையையும் நீ தொடவே கூடாது" பொறிந்தாள்.


அவளது பதிலில் அசைவற்று ஹரி நின்றுவிட,

ப்ரஷாந்தி தள்ளாடியவாறு நடந்து சென்று படுக்கை அறையில் உள்ள மெத்தையில் அமர்ந்தாள்.

சில நொடிகளில் தன்னிலை அடைந்தவன் அவளது காலுக்கருகில் மண்டியிட்டு அமர்ந்து அவளது கைகளை பிடிக்க, சடுதியில் அவனது கையை உதறி விட்டாள்.


அதில் முகம் சுருங்கினாலும், "ப்ரஷாந்தி நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க…" என்று பேசுகையில் இடைவெட்டியவள்,


"பேசாத நீ. என்ன சொல்ல போற. நம்மளோட குட்டி உலகத்துல நமக்குன்னே ஒரு அழகான ஜீவன் வரப் போகுன்னு உன்கிட்ட எவ்ளோ ஆசையா சொன்னேன். ஆனால் நீ அதை வேணாம்னு சொல்லிட்ட‌. உனக்கு எப்படி அது மாதிரி சொல்ல மனசு வந்துச்சு…" என்றவளின் விழிகள் தன்னிச்சையாக கண்ணீரை சொறிந்தது.


"நான் சொல்ல வர்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு ப்ரஷாந்தி" என்றவனிடம்,


"எதை கேளு கேளுன்னு சொல்லிட்டு இருக்க. நம்ம குழந்தையை வேணாம்னு சொல்றதுக்காக நீ சொல்ற எந்த காரணத்தையும் நான் காது கொடுத்து கேட்க விரும்பலை. நீ முதல் கண்ணு முன்னாடி நிக்காத. எனக்கு வர்ற கோபத்துக்கு எதாவது சொல்லிட போறேன்…" என்று சினத்துடன் வாதிட்டாள்.


மீண்டும் மௌனத்தை மொழியாக அணிந்து கொண்டான் ஹரி.

அவனது பதிலற்ற நிலையை கண்டவள்,

"இப்போ கூட நீ பேசுனது தப்புன்னு உனக்கு சொல்ல தோணலையா ஹரி. உன்கிட்ட இருந்து நான் இதை சத்தியமா எதிர்ப்பார்க்கலை. என்னோட ஹரியால இப்படி மனசாட்சி இல்லாம பேச முடியாது. நீ என்னோட ஹரி இல்லை. போ இங்க இருந்து போ…" என்று அழுகையுடன் அவனை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.


அவள் அழுவதை காண முடியாதவன் எழுந்து அவளை வயிற்றோடு அணைத்தான்.


சில நொடிகள் தன்னை மறந்து அவனை அணைத்திருந்தவள் பின்னர் சுயம் உணர்ந்து அவனை விலக்கிவிட்டு அவனை பார்க்க விரும்பாது அப்படியே திரும்பி பெட்டில் சரிந்து விட்டாள்…


அழுகை நின்றபாடில்லை. காலையில் இருந்த மனநிலை என்ன. இப்போதிருக்கும் நிலை என்ன.


முழுதுமாக தலை கீழாக மாறிவிட்டிருந்தது. ஏற்று கொள்ள முடியவில்லை.


நடந்த எதையும் ஏற்று கொள்ள முடியவில்லை. தன்னுடையவன் தனக்கு யாதுமானவன் கூறிய வார்த்தை உள்ளத்தை வதைத்தது.

காலையில் இருந்து எத்தனை கனவுகளுடன் அவனிடம் தங்களது உலகத்தில் புதிதாக பூத்த புது மலரை பற்றி பேருவகையுடன் கூற வந்தால் ஒற்றை சொல்லில் அதனை பஸ்பமாக்கிவிட்டான் என எண்ணி மனதுக்குள் புலம்பியவாறு படுத்திருந்தாள்.


வெகுநேரம் அவளை பார்த்த படியே நின்றிருந்தவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.


அவன் சென்ற பிறகும் அவள் திரும்பவில்லை. கிச்சனில் ஏதே சத்தம் கேட்டது காதுகளை இறுக மூடி கொண்டாள்…


மனது சமன்பட மறுத்தது. என்ன கூறி அதனை சமாளிப்பது என அவளுக்கு தெரியவில்லை.


பொய் கூறி தன்னை தானே தேற்றி கொள்ள முடியவில்லை. தந்தை வீட்டை விட்டு வெளியேற கூறிய போது கூட இத்தனை வலிக்கவில்லை.


அவர் அப்படித்தான் என்ற பிம்பம் அவளுக்குள். ஆனால் ஹரி எத்தனை தூரம் மனதில் நிறைந்திருந்தவன். செயல்களால் உயர்ந்திருந்தவன்.


இப்போது ஒரு செயலில் மொத்தமாக கீழிறங்கிவிட்டான். அவன் தன்னிடம் செய்ய கூறியது என்ன. கிட்டத்தட்ட கொலை என்ற நினைப்பே உள்ளத்தை நடுங்க செய்தது.


கரங்கள் வயிற்றை தடவியது. வயிற்றில் இருக்கும் தங்ஙளது குழந்தைக்கு இத்தனையும் கேட்டிருக்கும்.


'கேட்ட பின்பு தங்களை பற்றி என்ன நினைத்திருக்கும். தனது பெற்றோர் தனது வரவை கொண்டாடவில்லை.'


'அவர்களுக்கு தன்னை பிடிக்கவில்லை என நினைக்காதா…?'


'நாளை பிறந்து வளர்ந்த பின்னர் தன் தந்தை தன்னை வேண்டாம் என கூறிவிட்டதை அறிந்தால் மனதளவில் நொருங்கி போகாதா…?' என்று ஆயிரமாயிரம் சிந்தனையுடனே அழுதபடியே உறங்கி போனாள்…


இரவு அவன் எப்போது வந்தான்…? வந்தானா…? உறங்கினானா…? என எதுவும் அவள் அறியவில்லை.


உறக்கத்திலிருந்து மெதுவாக கலைந்து விழிகளை திறந்தவளுக்கு நேற்று நடந்த நிகழ்வுகள் வரிசையாக கண்முன் தோன்ற சடுதியில் பார்வை அருகில் சென்றது.


அங்கே அவன் இல்லை. வெளியே ஏதோ சத்தம் கேட்டது அவன் தான் ஏதோ செய்து கொண்டு இருப்பான் என்று நினைத்தவள் எழுந்து குளியலறை செல்ல கால்கள் தள்ளாடியது.


மெதுவாக சமாளித்து நடந்து ப்ரெஷ் ஆகிவிட்டு வந்தவள் ஹாலுக்கு வர ஹரி குளித்து தயாராகி இருந்தான்.


இருவரது பார்வையும் ஒரு நொடி உரசி கொண்டது. ப்ரஷாந்தி உடனடியாக பார்வையை விலக்கி கொண்டாள்.


ஆனால் அவன் தான் பார்த்தபடியே இருந்தான். நேற்று அவளை பார்த்த அதே பார்வை தான்.

அவனது பார்வை தன்னை பாதித்தாலும் எதுவும் இல்லாத பாவனையில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.


மனது மீண்டும் முரண்டியது. நேற்று ஏதோ தெரியாமல் பேசிவிட்டான். இரவெல்லாம் சிந்திருந்தால் தன்னுடைய தவறை உணர்ந்திருப்பான்.


எழுந்ததும் தன்னிடம் மன்னிப்பை வேண்டுவான். குழந்தை வரவை கொண்டாடுவான் என மனதின் ஓரத்தில் நம்பிக்கையாய் வந்தவளை மொத்தமாக ஏமாற்றும் விதமாக அதே பாவனை.


அந்த பார்வை அவளை உள்ளுக்குள் ஆயிரம் ஆயிரம் பாகங்களாக உடைய செய்ததது.


சில நொடிகள் பார்வையால் தொடர்ந்தவன்,


"ப்ரஷாந்தி நான் ஒரு இம்பார்ட்டன்ட் ஒர்க்கா வெளியே போறேன். வர லேட் ஆகும். ப்ரேக் பாஸ்ட்டும் லஞ்சும் குக் பண்ணிட்டேன்" என்றவன் சிறிது நிறுத்திவிட்டு,


"நான் சொன்னதை பத்தி கொஞ்சம் திங்க் பண்ணி பாரு" என்றான்.


அவனின் பேச்சை கேட்டவளுக்கு ஆத்திரம் பொங்கி வர கண்களை இறுக மூடி கொண்டாள்.


பேசிவிட்டு அவன் வெளியேறி சென்று விட்டான்.


ஆனால் கூறிய சொற்கள் தான் இவளை தாக்கிவிட்டு சென்றிருந்தது.


மேலும் மேலும் தனது செயலால் சொல்லால் அவளை உடைத்து கொண்டு இருந்தான்.


'சிந்தித்து பார்க்க வேண்டுமாமே. எதை பற்றி நம் குழந்தையை கொல்வதை பற்றியா…?' என்று கோப திவலைகள் முகத்தில் பரவியது.


எதுவும் செய்ய தோன்றவில்லை. வெகுநேரம் அப்படியே அமர்ந்திருக்க அலைபேசியின் கனா இசைத்து அவளை அழைத்தது.

எழுந்து சென்று பார்த்தாள் அலுவலக தோழி மஹிமாதான் அழைத்தாள்.


'இருக்கும் மனநிலையில் அழைப்பு ஏற்க வேண்டுமா…?' என தோன்ற அழைப்பும் முடிந்திருந்தது.


'மறுபடியும் அழைத்தால் பார்க்கலாம்' அவள் நினைக்க அடுத்த கணமே மீண்டும் அழைப்பு வந்தது.


எடுத்து காதில் பொறுத்தி, "ஹலோ…" என்க,


மறுமுனையில் மஹிமா, "என்னடி இன்னும் ஹெல்த் சரியாகலையா…? வாய்ஸ் டல்லாயிருக்கு" என்று வினவினாள்.


இவளிடம் எதையும் கூற ப்ரஷாந்திக்கு விருப்பமில்லை. தான் கருவுற்றிருப்பதை பற்றி கூறினால் அலுவலகம் முழுவதும் செய்தி பரவிவிடும்.


பின்பு அனைவரும் வாழ்த்து சொல்வதற்க்காக அழைப்பர். ட்ரீட் கேட்பார்கள்.


முதலில் வீட்டு நிலைமை சரியாகட்டும் அதன் பிறகு எல்லோரிடமும் சொல்லி கொள்வோம் என நினைத்து,

"ஹ்ம்ம் ஆமா மஹி. பட் யெஸ்டர்டேக்கு இப்போ பரவாயில்லை" என்று பதிலளித்தாள்‌.


"ஹாஸ்பிட்டல் போனியாடி"


"இல்லை. இனிமேல் தான் போகணும்"

"சரி டி. ஹெல்த்தை பார்த்துக்கோ‌. ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து ரெஸ்ட் எடு" என்க,


சரியென்று அழைப்பை துண்டித்தவளுக்கு குழந்தை வர போகும் சந்தோஷமான விடயத்தை கூட எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என பெருமூச்சு பிறந்தது.


ஜி.எம்மிற்கு இரண்டு நாட்கள் விடுப்பு கூறி மின்னஞ்சல் அனுப்பியவளுக்கு பசித்தது.


தன்னுடைய கோபத்திற்க்காக சாப்பிடாமல் குழந்தையை துன்புறுத்த கூடாது என எண்ணியவள் எழுந்து குளித்து வந்து கிச்சனுக்கு சென்று பார்த்தாள்.


காலைக்கு லேசான உணவான இட்லியும் கடலை பருப்பு சட்னியும் செய்திருந்தவன் மதியத்திற்கு ரசம் வைத்து பருப்பு துவையல் செய்திருந்தான்.


எளிதில் ஜீரணமாக கூடியதால் இதனை செய்து வைத்திருக்கிறான் என்று புரிந்தது.


'இதற்கு மட்டும் ஒன்றும் குறைச்சல் இல்லை' என்று மனதிற்குள் திட்டியவளுக்கு புளிப்பான ரசம் சாதம் சாப்பிட ஆசையாக இருந்தது.


சாப்பாட்டை எடுத்து வந்து சாப்பிட்டவளுக்கு புளிப்பான ரசம் அத்தனை பிடித்தமாக இருந்தது‌.


இன்னும் கொஞ்சம் சாப்பிட ஆசையாக இருந்தது. நிறைய சாப்பிட்டால் வாந்தி வந்துவிடும் என்று அஞ்சியவள் அத்துடன் முடித்து கொண்டு எழுந்து விட்டாள்.


எந்த வேலையும் இல்லை.‌ எல்லாவற்றையும் முடித்துவிட்டு சென்றிருந்தான்.


உடல் வேறு சோர்வாக இருக்க பெட்டில் படுத்துவிட்டாள்.


தாயிடம் பேச வேண்டும் போல இருந்தது. கர்ப்ப காலத்தில் இப்படி தான் எல்லாருக்கும் இருக்குமா என்று கேட்க வேண்டும் போல இருந்தது.


நாளை மருத்துவரை பார்த்துவிட்டு கர்ப்பத்தை உறுதி செய்து விட்டு அவரிடம் தன்னுடைய சந்தேகங்களை கேட்க வேண்டும் என்று நினைத்தவள் அதற்கு முன் ஹரியை சரி செய்ய வேண்டும்.


ஏன் இவ்வாறு பேசுகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவன் முகத்தில் தெரிந்தது உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்து கொண்டாள்.


கண்மூடி படுக்க உறக்கம் வர மறுத்தது. அலைபேசியை எடுத்து சில மணித்துளிகளில் பார்த்தவளுக்கு அதுவும் போரடித்தது.


மூளைக்குள் ஒரு எண்ணம் உதிக்க கூகுளில் குழந்தைகளின் அழகான பெயரை தேட தொடங்கினாள்.


ஆண் குழந்தைகளின் பெயர்களிலும் பெண் குழந்தைகளின் குழந்தை பெயர்களிலும் தனக்கு பிடித்த வற்றை குறித்து வைத்து கொண்டவள் சிறிது நேரத்தில் உறங்கி போனாள்‌.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் செவியின் ஒரு ஓரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்து எழுப்பியது.


தூக்க கலக்கத்திலே எழுந்து நடந்தவள் கவனியாது வழியில் இருந்த தண்ணீர் பாட்டிலை தட்டிவிட்டுவிட்டு நடந்தவள் அதை உணராமல் நகர்ந்து சென்று கதவை திறந்தாள்.


வெளியே லக்ஷ்மி ஆன்ட்டி நின்றிருந்தார். அவர் இவர்களது பிளாட்டிற்கு அடுத்ததில் வசிப்பவர்.


பிரஷாந்திக்கும் ஹரிக்கும் பழக்கம் தான். ஆனால் அத்தனை நெருக்கம் கிடையாது. அவ்வபோது பார்க்கும் போது புன்னகையுடன் கடந்திடுவாள்.


இப்போது எதற்க்காக வந்திருக்கிறார் என யேசித்தபடி அவள் பார்க்க,


"என்னம்மா தூங்கிட்டு இருந்தியா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…?" அவர் வருந்த,


"அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. உள்ள வாங்க…" என்று வழிவிட்டாள்.


"இல்லைம்மா இருக்கட்டும். ப்ரஷாந்திக்கு உடம்பு சரியில்லை கொஞ்சம் வந்து பார்த்துக்கோங்கன்னு ஹரி செல்லிட்டு போனாரு. அதான் பாக்கலாம்னு வந்தேன். இப்போ எப்படி இருக்கும்மா…?" என வினா எழுப்ப,


"ஹ்ம்ம் பரவாயில்லை ஆன்ட்டி" என்று பதில் மொழிந்தாள்.


"உடம்புக்கு என்னாச்சு காய்ச்சலா…?" என வினவ,


திடீரென கேட்ட வினாவில் என்ன பதில் கூறுவெதன தெரியாமல் விழித்தவள், "ஹான் ஆமா ஆன்ட்டி" என்று இயம்பினாள்.


நெற்றியை தொட்டு பார்த்தவர், "இப்போ சரியாகிடுச்சு போல. சாப்பிட்டியாம்மா" என்று கேள்வி கேட்க,


"மார்னிங் சாப்பிட்டேன். லஞ்ச் இனிமேல் தான் சாப்பிடனும்
" என்க,


"சரிம்மா ரெஸ்ட் எடு. எதாவது ஹெல்ப் வேணும்னா என்னை கூப்பிடு" என்றார்.


"சரிங்க ஆன்ட்டி" என்று புன்னகையுடன் தலையசைத்து கதவை சாத்திவிட்டு திரும்பி நடந்தவள் கவனிக்காது தண்ணீரில் காலை வைத்துவிட அம்மா என்ற அலறலுடன் கீழே விழுந்திருந்தாள்.


அடுத்த நொடி அவளது உடை குருதியினால் நனைய தொடங்கியிருந்தது…















 
Top