அத்தியாயம் 15
"சாரி சார் ஷ்யூரிடி இல்லாம எங்களால யாருக்கும் லோன் அப்ளிகேஷனை அப்ரூவ் பண்ண முடியாது…" என்று பைலை மூடியபடி ஹரியின் புறம் தள்ளினார் வங்கி ஊழியர்..
இதை கேட்ட ஹரியின் முகம் ஒரு நொடி இருண்டு பின்னர் இயல்பாகியது…
இதே வார்த்தையை தான் பல மாதங்களாக நிறைய முறை கேட்டுவிட்டான்…
சொந்தமாக மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது ஹரியின் நீண்ட நாள் கனவு…
அதற்காக தான் நிறைய இடங்களில் லோன் பெற முயற்சித்து கொண்டு இருக்கிறான்…
போகும் அனைத்து இடங்களிலும் யாரிடமாவது ஜாமின் கையெழுத்து அல்லது எதாவது நிலங்களின் பத்திரம் ஒன்றை கேட்கின்றனர்…
ஹரியின் முகமாற்றத்தை கவனித்த வங்கி ஊழியர், "உங்க பிஸ்னஸ் பிளான் எல்லாம் படிச்சு பார்த்தேன். இட்ஸ் அ வெரி குட் ஐடியா மிஸ்டர் ஹரி. பட் எங்க பேங்க்கிற்க்கு சில ரூல்ஸ் இருக்கு. அதை என்னால ப்ரேக் பண்ண முடியாது…" என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,
ஹரிக்கும் அவரது நிலை புரிந்தது.
'அவரும் இங்கே ஒரு ஊழியர் தான். அவருடைய வேலையை தான் செய்கிறார்' என்று எண்ணியவன் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தான்…
இது எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் ஒரு சதவீதமாவது தனக்கு சாதகமான பதில் கிடைத்திடாதா…? என மனதில் நப்பாசை இருந்தது.
'விடாமல் முயற்சித்து கொண்டே தான் இருக்கிறேன்…
ஒவ்வொரு முறையும் தொடங்கிய இடத்திற்க்கே வந்து நிற்கும் போது அத்தனை வருத்தமாக இருக்கிறது' என்று எண்ணியபடியே பேருந்தில் ஏறி பிளாட்டை வந்தடைந்தான்…
கதவு பூட்டியிருந்தது. இன்னும் அவள் வரவில்லை என்று தெரிந்தது…
தன்னிடமுள்ள சாவியை எடுத்து கதவை திறக்க இருட்டிய வீடே அவனை வரவேற்றது…
ஒரு கணம் விழிகளை மூடி திறந்தவன் உள்ளே சென்று லைட்டை போட்டான்…
அவன் வெறுத்த இருட்டை கண்டு மனம் எரிச்சலுற்றது.
தினமும் ப்ரஷாந்தி அவனுக்கு முன்பே வந்திடுவாள்…
அவன் வரும் போதே, "வா ஹரி" என்று புன்னகையுடனே வரவேற்பாள்.
அவளது புன்னகையை கண்டவுடன் இவனது மனதில் உள்ள பாரம் எல்லாம் குறைந்துவிடும்…
உள்ளுக்குள் புத்துணர்ச்சி பிறக்கும். மனையாளின் புன்னகை ததும்பும் முகத்தை பார்க்க மனம் ஏங்கியது.
தனது தொலைபேசியை எடுத்து அவளது எண்ணிற்கு அழைத்தான்…
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன் உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன் அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன்…
பாடல் காலர் ட்யூனாக ஒலித்தது. அவனுக்காக தான் இதனை வைத்திருந்தாள்.
பாடல் காதுக்குள் நுழைந்தவுடன் மனது லேசானது மனையாளின் நினைவில்…
சில நிமிடங்களில் அழைப்பை ஏற்றவள், "ஹரி வீட்டுக்கு வந்துட்டியா…?" என்க,
"ஹ்ம்ம் இப்போ தான் வந்தேன். நீ எங்க இருக்க. ஏன் லேட்…" என்று பதில் மொழிந்தான்…
"இங்க ஒரு சின்ன இஸ்ஸூ அதான் கிளம்ப லேட் ஆகிடுச்சு. இப்போ தான் பஸ் ஏற போறேன்" என்று இயம்ப,
"ஹ்ம்ம் சரி பார்த்து வா" என்று கூற,
"ஹான் பஸ் வந்திடுச்சு…" என்று அழைப்பை துண்டித்திருந்தாள்…
அவளது குரலை கேட்டதே உள்ளுக்குள் தெம்பு பிறந்தது போலிருந்தது.
எழுந்து சென்று முகம் கழுவி ரெப்ரெஷ் ஆகி வந்தவன் கிச்சன் சென்று காஃபியை போட்டு பருகிவிட்டு நேரத்தை பார்க்க பத்து நிமிடங்கள் தான் சென்றிருந்தது.
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் அவள் வருவதற்குள் இரவுணவை செய்துவிடலாம் என சமையலைறைக்கு சென்று அவளுக்கு பிடித்த சீஸ் சாண்ட்விச்சை செய்ய துவங்கினான்…
பேருந்து தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அந்த கூட்டத்திற்குள்ளிருந்து அடித்து பிடித்து இறங்கிய ப்ரஷாந்திக்கு மூச்சு வாங்கியது…
'ஹப்பாடி. ஜெயில்ல இருந்து வந்த மாதிரி இருக்கே' என்றே மலைத்தவள் தனது பிளாட்டை நோக்கி சென்றாள்…
என்றும் இல்லாமல் இன்று பேருந்தில் நிறைய கூட்டம். நிற்க்கவே இடமில்லை. ஒரு மணி நேரமாக நின்று கொண்டே வந்தவளுக்கு காலிரண்டும் நிரம்ப வலித்தது.
மெயின் ரோட்டை கடந்து தான் அவர்களது பிளாட்டிற்கு செல்ல வேண்டும்.
ரோட்டை கடப்பதை நினைத்தால் மலைப்பாக இருந்தது. சிக்னல் போடும் வரை நின்று கூட்டத்துடன் கடந்து தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தவளுக்கு அத்தனை ஆசுவாசம்.
'இனி வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாம்' என்று எண்ணியபடி லிஃப்டின் அருகே செல்ல, மெயின்டனென்ஸ் வேலை நடக்கிறது என்று பெரிய பலகை தொங்கி கொண்டிருந்தது.
அதனை கண்டதும் சிறிது எரிச்சல் பரவியது. ஐந்து தளம் ஏறி செல்ல வேண்டும் என்று எண்ணுகையிலே மலையை தாண்ட வேண்டும் என்ற உணர்வு வர சுவற்றில் சாய்ந்து நின்றுவிட்டாள்…
சில நிமிடங்கள் நின்றவள் சரி இன்று நமக்கு படி தான் வேறு வழியில்லை என்று எண்ணியபடி படியேற செல்ல எதிரில் காவலாளி வந்தார்.
"அங்கிள் ஒரு நோட்டீஸ் கூட போடாம திடீர்னு மெயின்டனென்ஸ் ஒர்க்…" என்று வினவினாள்…
"லிஃப்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திடீர்னு நின்னு போச்சு மேடம். அதான் ஆளுங்களை கூப்பிட்டு பார்க்க சொல்லி இருக்கோம்…" என்று பதிலளித்தார்..
"ஓ… மார்னிங் சரியாகிடுமா…?" என வினா எழுப்ப,
"ஹான் சரியாகிடும்மா. நைட்டே முடிஞ்சிடும்மா…" என்றவரின் பதிலில் மனதில் நிம்மதி பிறந்தது.
பின்னே காலையில் பால் வாங்க இறங்கி வர வேண்டுமே. அதற்க்காக தான் கேட்டாள்.
அவரிடம் சரியென்பதாய் தலையசைத்தவள் படியேற தொடங்கினாள்…
இரண்டு தளம் ஏறியதுமே மூச்சு வாங்கியது. முட்டியை பிடித்த படி நின்றுவிட்டாள்…
ஹரியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது…
எடுத்து பார்த்துவிட்டு அழைப்பை ஏற்க்காமல் மீண்டும் ஏற தொடங்கியவள் ஒரே மூச்சில் தளத்தை அடைந்து கதவை திறந்தாள்…
கதவு திறக்கும் ஓசையில் வாசலுக்கு வந்தவன் வாடிய கொடியாய் வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்தவளை தான்.
"ஏன் இவ்ளோ டையர்டா தெரியிற…" என்ற படி நெற்றி வியர்வையை துடைத்தான்.
"பஸ்ல செம்ம ரஷ்டா… நிக்க கூட இடமில்லை. செம்ம டயர்ட்" என்றபடி நாற்காலியில் சரிந்து அமர்ந்தாள்…
"ரொம்ப ரஷ்ஷா இருந்துச்சா…? நின்னுட்டு தான் வந்தியா…?" என்றவனின் குரலில் இருந்த வருத்தம் அவளை தாக்க,
"பஸ்ல வந்ததால இவ்ளோ டயர்ட் இல்லை. லிஃட்டும் ஒர்க் பண்ணலை. அதன் ஸ்டெப்ஸ்ல ஏறி வந்தேன். அதான்" என்று அவனை சமாளிக்க கூறினாள்…
"ஏன் லிஃப்ட்க்கு என்னாச்சு. கொஞ்ச நேரத்துக்கு முன்னே நான் அதுல நான் வந்தேன்" என்க,
"தெரிலை. திடீர்னு ஒர்க் ஆகலையாம்…" என்றவள்,
"எனக்கு ஒரு காஃபி தா ஹரி" என்று அறைக்குள் நுழைந்துவிட்டாள்…
ஹரி காஃபியை கொண்டு வர இருவரும் பால்கனியில் நாற்காலியை போட்டு அமர்ந்து விட்டனர்…
சாம்பலுக்கும் கருப்பிற்க்கும் இடையே வானம் இருட்டியிருக்க சிலுசிலுவென காற்று முகத்தில் மோதியது…
"பஸ் ட்ராவலிங் ரொம்ப கஷ்டமாக இருக்கா…? இன்னும் டூ மந்த்ஸ் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ ஸ்கூட்டி வாங்கி தர்றேன்" என்று ஹரி கூற,
"ப்ச் நீ அதை விடமாட்டியா…? எல்லாமே ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தான். ஸ்கூட்டி எல்லாம் தேவை இல்லை" என்றவள்,
"லோன் விஷயமா பேங்க் போறேன்னு சொன்னியே என்னாச்சு…?" என வினவ,
"ப்ச் அதை விடு" என்றவன் வானத்தை வெறித்தான்.
அதிலே என்ன நடந்ததென்று அவளுக்கு தெரிந்தது.
"ஹரி…" என்றழைக்க, அவன் திரும்பவில்லை.
"ஹிரி இங்க பாரு…" என்று அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவள், அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்…
எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது அவன் முகத்திலே தெரிந்தது…
"எதுவுமே அவ்ளோ ஈசியா கிடைக்காது. நாம நம்ம லட்சியத்தை அடைய கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும். சீக்கிரமா கிடைச்சிடும்…" என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்…
அவளின் ஆறுதலுக்கு சரியென்பதாய் தலையசைத்தவன் அவளது உச்சியில் தாடையை பதித்தவாறு கண்களை மூடி கொண்டான்…
நொடிகள் நிமிடங்களாக கடக்க இருவரிடையே ஆழ்ந்த அமைதி…
ப்ரஷாந்தியும் அவனுக்குள் வாகாக பொருந்தி அமர்ந்திருந்தவள் கழுத்தில் கைகளை கோர்த்து கொண்டாள்…
சில நிமிடங்களில் ஹரி விழிதிறந்து பார்க்க அவன் கண்டது கவலை அப்பிய முகத்துடன் குழந்தையாய் தன்னையே பார்த்திருந்த மானையாளை தான்…
அவளது முகத்தை கண்டதும் தான் தானும் வருந்தி அவளையும் வருந்த வைக்கிறேன் என்று உணர்ந்தவன் முகத்தை மாற்றி,
"கொஞ்சம் எந்திருக்கிறியா… நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்ப வெயிட் ஆயிட்ட போல. ப்பா என்ன கணம்" என்று அவளை கலாய்க்க,
தான் சற்று முன் பேசியதெல்லாம் மறந்து, "வாட் அவ்ளோ வெயிட்டாவா ஆகிட்டேன்…" என்று அதிர்ந்தவள் எழுந்து சென்று கண்ணாடி முன் நின்று திரும்பி திரும்பி தன்னையே பார்த்தாள்…
சில நேரங்களில் இப்படி தான் குழந்தையாக மாறிவிடுவாள்…
அவளது செயலில் புன்னகையுடன் உள்ளே சென்றவன் அவளது பின்னே நிற்க,
"எனக்கு நார்மலா இருக்கிற மாதிரி தான் தெரியிது ஹரி…" என்று அவனிடம் கூறினாள்…
"ஐ ஆம் ஜெஸ்ட் கிட்டிங்…" என்றவன் குறுஞ்சிரிப்புடன் கூற,
"உன்னை… நான் பயந்தே போயிட்டேன்…" என்று முறைப்புடன் அவனை அடித்தாள்…
சிரிப்புடன் அடியை பெற்று கொண்டவன், "அடிச்சது போதும் பசிக்கிது வா சாப்பிட போகலாம்" என்றவன் அவளை அழைத்து சென்றான்…
ஹரி சாப்பாட்டை எடுத்து வைக்க, சாண்ட்விச்சை பார்த்தவள்,
"வாவ் ஹரி சீஸ் சாண்ட்விச் எனக்காகவா…?" என வியப்புடன் வினவினாள்…
"ஹ்ம்ம்…" என்று புன்னகையுடன் தலையசைத்தான்…
ஆசையாக அதனை எடுத்து வாயில் வைக்க சென்றவள் ஒரு கணம் நிறுத்திவிட்டு யோசிக்க, அவளது எண்ணம் புரிந்தவன் நகைக்க தொடங்கிவிட்டான்…
"எல்லாம் உன்னால நான்…?" என்றவள் முறைக்க,
"நான் தான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்றேன்ல…? அப்படியேன்னாலும் ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது…" என்று தானே அவளுக்கு எடுத்து ஊட்ட,
தான் சாப்பிட்டபடியே அவனுக்கும் ஊட்டிவிட இருவரும் உண்டு படுக்க சென்றனர்…
படுக்கையில் விழுந்ததும் தான் ப்ரஷாந்திக்கு கால்வலி நினைவு வந்தது…
நின்றே வந்தது வெகுவாக வலித்தது… புரண்டு புரண்டு படுத்து பார்த்தாள் உறக்கம் வர மறுத்தது.
அவளின் நிலையை கண்டவன், "என்னாச்சு ப்ரஷாந்தி. என்ன பண்ணுது உனக்கு…?" என்று வினவ,
"ஒன்றுமில்லை…" என்றவள் கண்மூடி உறங்க முயற்சித்தாள்…
இருந்தும் உறக்கம் வரவில்லை. எழுந்து லைட்டை போட்டவன்,
"என்ன செய்யிது உனக்கு…?" என்று மீண்டும் வினவ,
"லைட்டா கால் வலி ஹரி. வேற ஒன்னும் இல்லை. தூங்கினா சரியாகிடும்" என்றாள்…
"பஸ்ல நின்னுட்டே வந்தததால வலிக்கிது போல. நான் பிடிச்சு விட்றேன்" என்று காலை எடுத்து தன் மடியில் வைத்து கொள்ள,
அவள் அதிர்ந்து, "வேண்டாம் ஹரி" என்று மறுத்தாள்..
"ப்ச் பேசாம படு நீ. பிடிச்சிவிட்டா தான் சரியாகும்" என்று அவளை படுக்க வைத்தவன் மெதுவாக பிடித்து விட தொடங்கினான்…
கால் வலிக்கு பிடித்து விடுவுவது இதமாக இருக்க சற்று நேரத்திலே உறங்கியும் போனாள்…
அவள் உறங்கியதை உறுதி செய்தவன் லைட்டை ஆஃப் செய்து விட்டு அவளை அணைத்து படுத்து கொள்ள அவளும் அவனுக்குள் ஒன்றி போனாள்…
"ப்ரஷாந்தி நீ ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க…?" என்று மஹிமாவின் வினாவிற்கு,
"தெரியலை மஹி. ரெண்டு நாளாவே ஒரு மாதிரி மந்தமா தான் இருக்கு…" என்று பதிலளித்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் ப்ரஷாந்தி.
அவளுக்கும் இரண்டு நாட்களாக ஏதோ உள்ளுக்குள் செய்தது. என்னவென்று தெரியவில்லை.
ஹரிக்கூட வினவினான் ஒன்றுமில்லை என்று சமாளித்திருந்தாள்…
காலையிலிருந்து சாப்பிட்டது வேறு நெஞ்சை கரிப்பது போல தோன்றியது…
கணினியில் தட்டச்சு செய்த படி இருந்தவளுக்கு வாந்தி வருவது போல தெரிய எழுந்து வாஷ் ரூமை நோக்கி ஓடினாள்…
காலையில் சாப்பிட்ட அனைத்தும் வெளியே வருமளவு வாந்தி எடுத்திருந்தாள்…
உடம்பில் சக்தி எல்லாம் குறைந்தது போல உணர்வு ஏற்பட்டது.
முகத்தை கழுவிவிட்டு வெளியே வர, அவளை எதிர்கொண்ட ஷாந்தி, "என்னடி முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு…" என்று அக்கறையுடன் வினவ,
"காலையில சாப்பிட்டது ஒத்துக்கலை அதான் வாமிட் பண்ணிட்டேன்" என்றாள்…
"வாமிட்டா…? காலையில சாப்பிட்டது தான் ஒத்துக்கலையா…? இல்லை ப்ரக்னென்ட்டா இருக்கியா…?" என்று சந்தேகிக்க,
ப்ரஷாந்திக்கு ஒரு நொடி நெஞ்சுக்குள் ஜில்லிட்டது. இதை எப்படி மறந்தேன் என்று எண்ணியவள் நாட்களை கணக்கிட ஏதோ ஒன்று தொண்டையை அடைத்தது.
அதிர்ந்து நின்றவளை கண்டவள்,
"என்னடி கேட்டுட்டே இருக்கேன். அப்படியே நிக்கிற. எனக்கென்னமோ நீ கன்சீவா இருக்கேன்னு தான் தோணுது. போய் செக் பண்ணு" என்றாள்.
அவளிடம் சம்மதமாக தலையசைத்தவள் தனது இடத்திற்கு வந்து அமர்ந்து விட்டாள்…
ஒரு நிமிடம் எதுவும் பிடிபடவில்லை. இந்த முக்கியமான விடயத்தை எப்படி மறந்தேன் என்று தன்னை தானே நிந்தித்து கொண்டவளது கரங்கள் தனது வயிற்றை வருடியது.
இதழ்களில் புன்னகை சொல்லாமல் கொள்ளாமல் சிம்மாசனமிட்டது…
தங்களுக்கென்று ஒரு மகவு நினைப்பே தித்தித்தது. இதனை அவனுக்கு தெரிவிக்க வேண்டும்.
இதனை அறிந்தால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவாள் என்று எண்ணுகையிலே ஒரு சிலிர்ப்பு.
அவனை பார்க்க வேண்டும் என்று அவா உந்தி தள்ளியது…
அதற்கு முன் இதனை உறுதி செய்ய வேண்டும். உறுதியாக தெரியாமல் அவனுக்கு ஏமாற்றத்தை தந்துவிட கூடாது என நினைத்கவள் உடனடியாக உடல்நிலையை காரணம் கூறி விடுமுறை எடுத்து கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்…
பேருந்து அவ்வளாக கூட்டமில்லாது வந்ததினால் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
கர்ப்பத்தினை உறுதி செய்த பின்னர் இது போல வெகு நேரம் பயணம் செய்ய கூடாது என நினைத்தவள் தனது வயிற்றில் கையை வைத்து கொண்டாள்…
அவளை சோதிக்கவென்றே பேருந்து இன்று மெதுவாக சென்று கால் மணி நேரம் தாமதமாக கொண்டு சேர்த்தது.
இறங்கி அருகில் உள்ள மருந்தகத்தில் கர்ப்பத்தினை உறுதி செய்யும் கருவியை வாங்கியவள் பிளாட்டை நோக்கி நடந்தாள்…
வேகமாக செல்ல வேண்டும் என்று மனது உந்தினாலும் நடையில் ஒரு நிதானம் இருந்தது தங்களது குழந்தையை நினைத்து.
பிளாட்டிற்குள் நுழைந்த கணமே கழிவறைக்கு சென்
றவள் கர்ப்பத்தை உறுதி செய்ய தேவையான செயல்முறையை செய்து விட்டு முடிவிற்க்காக அதனையே பார்த்தவாறு காத்திருந்தாள்…
காத்திருந்த நொடிகள் யுகமாக கழிய இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது…
முடிவு சாதமாக வர வேண்டும் என்று மனது வேண்டி கொள்ள தடதடக்கும் ஓசையுடன் பார்த்திருந்தாள் ஹரி கிருஷ்ணாவின் ப்ரஷாந்தி…
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்