கவிதை 13
நேரம் சென்றதே தவிர ப்ரஷாந்தியின் அழுகை தான் குறைந்த பாடில்லை.
அவனது இத்தனை வருட போராட்டத்தினை எப்படி சில மணி நேரங்களில் அவளால் கரைத்திட முடியும்.
வற்றாத ஜீவ நதியாகி போனது அவளது கண்ணீர்…
'இதற்கு மேலும் விட்டால் அழுதே கரைந்திடுவாள்' என்று எண்ணியவன்,
"போதும் எவ்ளோ நேரம் அழுதிட்டே இருப்ப. முகமெல்லாம் ரெட்டிஷ்ஷாகிடுச்சு" என்று அவளது கண்ணீரை துடைத்தவன், அறைக்குள் அழைத்து வந்து முகம் கழுவி வர கூறினான்.
முகத்தை கழுவிவிட்டு வந்தும் அழுத தடையம் நீங்கவில்லை.
அவள் வருவதற்குள் சமையலறையில் காஃபியை சுட வைத்து எடுத்து வர சென்றவன் இரண்டு காஃபி கப்புகளுடன் வந்து,
"இந்தா சூடா காஃபி குடி…" என்று நீட்டினான்.
அவளும் பேசும் மனநிலையில் இல்லாததால் அதை வாங்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து பருகலளானாள்.
ஹரியும் அவளது அருகில் அமரந்து கொண்டான்.
அவனது மீண்டும் அவனையே நிந்தித்தது.
'எத்தனை சந்தோஷமான மனநிலையில் இதெல்லாம் தேவையா…?' என்று பத்தாவது முறையாக கேட்டது.
ஓரு பெருமூச்சு ஒன்றை விட்டவன் அவள் புறம் திரும்பி, "ப்ரஷாந்தி இங்க பாரு. பாஸ்ட் இஸ் பாஸ்ட் எல்லாம் எப்பவோ நடந்து முடிஞ்ச ஒன்னு. எனக்குன்னு வாழ்க்கையில வந்த முதல் சொந்தம் நீ. உன்கிட்ட இதெல்லாம் ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சு சொல்லிட்டேன். இப்போ பீல் பண்ணி எதுவும் நடக்க போறது இல்லை. சோ இனிமேல் நம்ம வாழ்க்கையை ஹாப்பியா வாழலாம்" என்று அவளிடம் விளக்கி கூற,
"உன் அம்மா அப்பா போட்டோ கூட உன்கிட்ட இல்லையா ஹரி…" என்று அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு கேள்வியை கேட்டாள்.
"ம்ஹூம் இல்லை" என்று பதிலளித்தான்.
"சின்ன வயசுல இருந்தே அங்க தான் இருக்கியா…? எந்த வயசுல இருந்து இருக்க…?" என்று மற்றொரு கேள்வி வந்தது.
'இவள் என்ன மறந்துவிட கூறினால் அதை பற்றியே பேசிகிறாள்…?' என நினைத்தவன்,
"ப்ரஷாந்தி நான் எல்லாத்தையும் மறந்திட்டு கடந்து வர சொன்னா…? நீ திரும்ப திரும்ப அதை பத்தியே பேசிட்டு இருக்க" என்று அதட்ட,
"ம்ஹூம் நீ பர்ஸ்ட் என் கொஸ்டின்க்கு ஆன்சர் பண்ணு…" என்று பிடிவாதமாக பதிலளித்தாள்.
அவளது பிடிவாதத்தை பற்றி அறிந்தவன், "ஆமா நாலு வயசுல இருந்து அங்க இருக்கேன்" என்க,
"ஓ…" என்றவள் குரலில் சுருதி இறங்க,
"அப்போதுல இருந்தே உன்னோட தேவைகளை நீ தான் பாத்துப்பியா…?" என்று வருந்தி வினவினாள்.
"ஹ்ம்ம்" என்று மட்டுமே அவனிடமிருந்து வந்தது.
'நான்கு வயதில் என்ன தெரிந்திருக்கும் இவனுக்கு…' என்று நினைத்தவளுக்கு,
தன்னுடைய பள்ளி காலம் முடியும் வரை தாய் தன்னை பார்த்து கொண்டது நினைவுக்கு வந்தது.
'பேச கூட தெரியாத வயதில் தானாக எல்லாம் செய்து எத்தனை துன்பப்பட்டிருப்பான்' என்று நினைக்க விழிகள் நீரை உகுத்தது.
'இவளை இப்படியே விட்டால் இரண்டு நாட்கள் நினைத்து நினைத்து அழுவாள்' என்று நினைத்தவன்,
"வா நாம சேர்ந்து நைட்க்கு டின்னர் செய்யலாம். உனக்கு குக் பண்ண சொல்லி தர்றேன்" என்க,
"ஏன் ஹரி இதுவரைக்கும் நீ வீட்டு சாப்பாடே சாப்பிட்டது இல்லையா…?" என்று வினா தொடுத்தாள்.
'இதனையும் அங்கேயே போய் நிறுத்துகிறாளே' என்று வருந்தியவன், அவளை முறைத்தான்.
முறைப்பு கொஞ்சம் வேலை செய்ய சமையல் செய்வதற்க்காக எழுந்து கொண்டாள்.
"வா…" என்று அவள் கைப்பிடித்து அழைத்து சென்றான்.
அங்கிருந்த புதிய குளிர்சாதன பெட்டியை அப்போது தான் கவனித்தவள்,
"இது எப்போ வாங்குன ஹரி…?" என வினவ,
"டூ டேஸ் ஆச்சு" என்றவன் அவளது கவனத்தை திசைதிருப்புவதற்க்காக,
"நல்லாயிருக்கா…?" என வினா எழுப்பினான்.
அவளுக்கு பிடித்த அடர் நீல நிறத்தில் சோனியில் வாங்கி இருந்தான்.
'அவன் தனக்காக வாங்கியிருக்கிறான்' என்ற எண்ணமே உவகை தர, இதழில் சிறு புன்னகையுடன் அதனை வருடியவள், "நல்லா இருக்கு" என்று பதிலளித்தவளின் விழிகள் சமையலறையை ஒரு முறை சுற்றி வந்தது.
அன்று போல் அல்லாமல் இப்போது நிறைய கப்போர்ட்டுகள் பொருட்களால் நிறைந்திருந்தது.
எல்லாம் தனக்காக மட்டும் தான் என அவளுக்கு புரிந்தது.
அவளது புன்னகையில் சிறிது தேறிவிட்டாள் என்று நிம்மதியடைந்தவன்,
"சரி வா நாம குக்கிங் ஸ்டார்ட் பண்ணலாம். என்ன டின்னர் செய்யலாம்…?" என்று வினா தொடுக்க,
"உனக்கு குக்கிங் எப்படி தெரியும் ஹரி…? எப்போதில இருந்து குக் பண்ற நீ…?" என்ற கேள்வியில் சில நொடிகளுக்கு முன்பு அடைந்த நிம்மதியை பறித்திருந்தாள்.
"காலேஜ் டேஸ்ல இருந்து பண்றேன்…" என்று பட்டும் படாமல் பதிலளித்தவன்,
"சிம்பிளா தோசை சுட்டு தக்காளி சட்னி செய்யலாம். நீ வெஜிடபிள்ஸ கட் பண்ணு…" என்று அவளிடம் காய்கறிகளையும் கத்தியையும் கொடுத்தான்.
அவனது எண்ணம் புரிந்தவள் பேசாமல் அதனை வாங்கி நறுக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.
ஹரி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இன்ஸ்டன்ட் தோசை மாவை எடுத்து நீரில் கரைத்து தோசை ஊற்ற தொடங்கினான்…
அவனை பற்றிய எண்ணங்களுடனே நறுக்கி கொண்டு இருந்தவள் கவனிக்காத கையை வெட்டிட, "ஸ்…" என்ற சத்தத்துடன் கையை உதறினாள்.
தோசை வார்ப்பதில் கவனமாக இருந்த ஹரி அவளது செயலில் அதிர்ந்து பதட்டமடைந்து, "பார்த்து செய்ய மாட்டியா…? ரத்தம் வருது பாரு…" என்றவன் சிங்கில் கையை கழுவிவிட்டு ஓடிச்சென்று முதலுதவி பெட்டியை எடுத்து மருந்து வைத்து கட்டினான்.
அவனது பதட்டத்தையும் வேதனையும் கவனித்தவள், "ஏன் ஹரி உனக்கு அடிப்பட்ட போதும் இப்படி தானே வலிச்சிருக்கும்… யார்க்கிட்டயும் சொல்ல முடியாம கஷ்டப்ப்பட்டியா…?" என்று வினவி அவனது நிம்மதியை மொத்தமாக குலைத்திருந்தாள்.
அவனது கரம் ஒரு நொடி தன்னியக்கத்தை நிறுத்திட அதிர்ந்து பார்த்தான்.
அவளும் விழியெடுக்காது பார்த்திருந்தாள்…
அவளிடம் தன் துன்பங்களை கூறி செய்ய கூடாத மிகப்பெரிய தவறை செய்துவிட்டதை அவனது மனது அந்த கணம் உணர்ந்தது…
இவளது சிந்தனை இனி எங்கெல்லாம் செல்லுமோ என அஞ்சியவன்,
"இப்போ தான உன்கிட்ட சொன்னேன். எல்லாத்துக்கும் ஏன் டி அதையே இழுக்குற… என் கஷ்டத்தை உன்கிட்ட சொன்னது ரொம்ப பெரிய தப்புன்னு நினைக்க வச்சுட்ட நீ…" என்று அதட்டலில் ஆரம்பித்து வேதனையில் முடித்தவனின் முகம் சுருங்கிட,
அதை பார்த்தவளுக்கு விழிகளோடு சேர்த்து மனமும் கலங்கிட, "சாரி ஹரி… நான் வேணும்னே பண்ணலை. எனக்கு என்ன பேசுனாலும் உன்னோட கஷ்டம் தான் ஞாபகம் வருது. நான் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ட்ரை பண்றேன்" என்று அழுகையுடன் கூறினாள்.
அவளது அழுகையை கண்டு மேலும் வேதனையுற்றவன் நின்றவாக்கிலே அவளை அணைத்து கொள்ள அவளும் அவனது வயிற்றில் முகத்தை வைத்து கொண்டாள்.
தானும் வேதனையடைந்து அவனையும் வருத்துகிறோம் என்று அவளுக்கு புரிந்தது. இருந்தும் அதனை அவன் வருந்தி கூறிய நிமிடங்களை அவளால் கிரகிக்க முடியவில்லை. கடந்து வரவும் முடியவில்லை.
சில நிமிடங்களை அழுகையில் தொலைத்தவள் தன்னை நிதானித்து கொண்டு அவனிடமிருந்து விலகி முகத்தை துடைத்த கொண்டாள்.
அவள் செயலை கண்டே அவள் தேறிவர முயல்கிறாள் என்று அறிந்தவன் மௌனமாக சமையலறை நோக்கி சென்று பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தாள்.
இங்கு ப்ரஷாந்தி எதையும் நினைக்காதே என்று மனதிற்கு எத்தனை கடிவாளமிட்டாலும் மீண்டும் மீண்டும் அவ்விடமே செல்ல வெறித்த படி அமர்ந்திருத்தாள்.
இருவருக்கும் இரண்டு தோசைகளை சுட்டவன் தாக்காளி வெங்காயத்தை வதக்கி சட்னியையும் செய்துவிட்டு தோசையை தட்டுகளில் வைத்து கொண்டு திரும்ப அவளது வெறித்த தோற்றமே கண்ணில் பட்டது…
மனம் சொல்லவென்னா துயரத்தை மனம் தத்தெடுத்து கொள்ள அமைதியாக வந்து சாப்பாட்டை வைத்து விட்டு அமர அவன் வந்ததை கவனித்தவள் தானும் இறங்கி தரையில் அமர்ந்து கொண்டாள்…
அவளது விரலில் கட்டு போட்டிருப்பதால் தானே அவளுக்கு தோசையை பிய்த்து ஊட்டிவிட அமைதியாக வாங்கி கொண்டாள்…
"சாப்பாடு எப்படி இருக்கு…?" என்று தன் முயற்சியை கைவிடாது ஹரி வினவ,
"ஹ்ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு…" என்றவளின் மனதில் அவன் 'தனக்கு யாருமே சாப்பாடு ஊட்டிவிட்டதில்லை தாயின் கையால் சாப்பிட்டது இல்லை' என்று வருந்தியது நினைவு வந்தது.
வாய்வரை வந்த வார்த்தையை அவனை மேலும் துன்பப்படுத்த விரும்பாது உணவோடு சேர்த்து விழுங்கியவள்,
"நீயும் சாப்பிடு…" என்றாள்.
"நீ சாப்பிட்ட பிறகு நான் சாப்பிட்டுக்கிறேன்…" என்றவன் ஊட்டுவதை தொடர,
அவன் கைபிடித்து அவனது வாயிலே வைத்தவள் தன்னோடு சேர்த்து ஹரியையும் சாப்பிட வைத்தாள்.
சாப்பிட்டு முடிய ஹரி எல்லாவற்றையும் சமையலறைக்கு சென்று சமையல் செய்த பாத்திரங்களை கழுவிவிட்டு சுத்தம் செய்ய தொடங்கினான்.
ப்ரஷாந்தி எழுந்து அறைக்குள் சென்று பெட்டில் சாய்ந்தவாறு அமர்ந்து விழிகளை மூடி கொண்டாள்.
மூடிய விழிகளுக்குள் கலங்கிய முகத்துடன் அவன் தனது ஏக்கங்களையும் அது நிறைவேறாமல் போனதால் உண்டான ஏமாற்றத்தையும் கூறியது நினைவு வந்தது.
வரிசையாக ஒவ்வொன்றாக நினைவுகளில் நழுவ மனம் அவன் தன்னை முன்பிருந்தே விரும்பியதை நினைவு கூர்ந்தது.
அவளை மொத்தமாக சுருட்டி கொண்ட அவனது அளப்பறிய காதலில் வந்து நின்றது.
அவன் தனக்காக தன் மீதுள்ள நேசத்தினால் தன்னை பார்க்காமல் அவனடைந்த தவிப்புகளை கண்களில் வலியோடு கூறியது மனக்கண்ணில் தோன்றியது…
மனம் மற்றதை விட்டு அவனது உயிர் உருக்கும் தேசத்தில் வந்து நின்றது…
எத்தனை வருடங்களாக என்னை எண்ணி வாழ்ந்திருக்கிறான் என்று எண்ணத்திலே ஊன்றி நின்றது…
மனதுக்குள் சிறிதாய் ஒரு சந்தோஷ ஊற்று…
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் எத்தனை சுகம்…
அவனிடம் தன்னை எப்போது முதல் முறை பார்த்தான் என்று கேட்க அவா பொங்கியது…
அவனின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தது.
ஆனால் அவனோ பொறுமையாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சாவகாசமாக அறைக்குள் நுழைய, "என்னை எப்போ பர்ஸ்ட் டைம் பார்த்த ஹரி…?" என்ற மனையாளின் குரலே அவனை எதிர்கொண்டது.
அவளது வினாவில் திகைத்து அவள் முகம் நோக்க, தனது கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவள் முகத்தில் தொற்றியிருந்தது தெரிந்தது.
ஒவ்வொன்றாக யோசித்து வருந்தி இறுதியில் தான் கூறிய காதல் விடயத்திற்கு மனையாள் வந்துவிட்டாள் போலும் என்று யூகித்தவன் இதழ்களில் இளநகையுடன், "சொல்லணுமா…?" என்க,
"ஹரி ப்ளீஸ்…" என்றவளின் குரலில் ஓரளவிற்கு தெளித்திருந்தது.
"சொல்றேன்…" என்று பெட்டில் அவளருகில் சென்று அமர,
அவனை நோக்கி அவாவுடன் திரும்பினாள்.
அவளை நோக்கி ஒரு புன்னகையை சிந்தியவன், "நாம பர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஜூன் பிப்டீன் அன்னைக்கு நான் கேண்டின் பக்கத்துல ஸ்டோன் பெஞ்ச்ல உட்கார்ந்து ஒரு புக்கை ரீட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ தான் என் காதுல 'கிரண் நில்லு ஓடாதன்னு' ஒரு அழகான குரல் கேட்டுச்சு. அந்த குரலுக்கு சொந்தமானவளை பாக்கணும்னு ஒரு நொடி தோன நிமிர்ந்து பார்த்தேன்"
"..."
"என் முன்னாடி அழகா க்யூட்டா ப்ளூ கலர் டாப்பும் க்ரீன்ல புல் டாப்பும் போட்டுகிட்டு ஓடி வந்த உன்னை பார்த்தேன். அப்போ தான் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் வந்திருந்ததால உன் பேஸ்ல ஒரு இன்னசென்ஸ் குழந்தை தனம் இருந்துச்சு. அது பார்க்க அவ்ளோ அழகா இருந்துச்சு. உன்னை பார்த்ததும் உள்ளுக்குள்ள சின்ன ஈர்ப்பு. உன்னை திரும்பி பார்க்கணும்னு ஒரு ஆர்வம் வந்துச்சு…" என்று பதிலுரைத்தவன் அவள் முகம் நோக்க,
"பர்ஸ்ட் இயர்லயேவா…?" என வியந்தவள்,
"என்னை பார்த்தவுடனே உனக்கு பிடிச்சிருச்சா…? ஏன் பிடிச்சிது…?" என வினா தொடுத்தாள்.
"ஹ்ம்ம் பார்த்தவுடனே பிடிச்சிருச்சு… ஏன்னு தெரியலை…" என்றவன்,
"ஒரு இடத்துல இருக்காம அங்கயும் இங்கேயும் அலைபாயுற இந்த கண்ணால இருக்கலாம்…" என்று விழிகளை வருடியவன்,
"இல்லை கத்தி மாதிரி ஷார்ப்பா இந்த மூக்கா இருக்கலாம்…" என்று வருடியபடி அவள் முகம் கண்டான்.
கூச்சத்தில் நாணத்தில் சிறிது சிறிதாக சிவப்பேற தொடங்கியிருந்தது.
"இல்லை பார்த்ததும் அப்படியே செர்ரீ ப்ரூட் மாதிரி இருக்க உதட்டால இருக்கலாம்" என்று அவள் இதழ்களை வருட, மொத்தமாக மூச்சடக்கியவளுக்கு முகம் குப்பென சிவந்திருந்தது.
"ஏன் அழகா ஆப்பிள் மாதிரி இருக்க இந்த கன்னத்துனால கூட இருக்கலாம்" என்றவனின் விரல்கள் அவளது கன்னத்தின் மென்மையை சோதித்தது…
இதற்கு மேலும் தாங்க மாட்டாதவள் வெட்கத்தில் அவனது கையை தட்டிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்…
"என்ன உன் கொஸ்டினுக்கு இந்த ஆன்ஸர் போதுமா…? இல்லை வேற ஆன்ஸர் வேணுமா…?" என்று கண்ணோரச் சிரிப்புடன் வினவ,
"போதும் போதும் இந்த கொஸ்டின் ஓவர்" என்றவள் தன்னிலை அடைந்து முகத்தை தேய்த்துவிட்டு கொண்டாள்.
அவளது செயலை பார்த்து மேலும் நகைக்க தொடங்கியவனிடம் செல்ல முறைப்புடன், "அப்புறம் எப்படி அது லவ்வா மாறுச்சு…?" என்று வினா எழுப்ப,
"எப்போன்னு தெரியலை. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில உன் மேல இருந்த ஈர்ப்பு காதலா மாறிடுச்சு. உன்னை பாக்கணும் உன்கிட்ட பேசணும்னு தோணுச்சு" என்றான்.
"போர் இயர்ஸா ஏன் என்கிட்ட பேசாம இருந்த நானா போதையில பேசலைன்னா நீ பேசியிருக்கவே மாட்டேல…" என்றவளின் குரல் குற்றம் சாட்ட, ஹரியிடமே மௌனமே பதிலானது…
"என்னை பார்த்தா ஸ்டேட்டஸ் பார்த்து பழகுற மாதிரியா இருக்கு…?" என வினவ,
"நீ அப்படி இல்லை. பட் உன்னை சுத்தி உன்கூட இருக்கவங்களும் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லையே. லைக் உன் அம்மா அப்பாவே என்னோட ஸ்டேட்ஸ காட்டி தானே நிராகரிச்சாங்க…" என்றவனின் பதிலில் இருந்த உண்மை அவளை சுட அவளிடம் பதிலில்லை.
மௌனியாகி போனாள். ஒரு நொடி அங்கே கணத்த அமைதி…
"சரி நீ சொல்லு உனக்கு எப்போ என் மேல லவ் வந்தது. உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கும்" என்று அதனை கடக்கும் பொருட்டு வினவ,
"எப்போ எந்த செகெண்ட் வந்ததுனு தெரியலை. எனக்கு உன்னை பார்த்ததும் உன் கன்னக்குழி தான் ஞாபகம் வந்துச்ச்சு. உன்கிட்ட பிடிச்சதே அது தான். தொட்டு பாக்கணும்னு ஆசை"என்றவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
அவளுக்கு தன் கன்னக்குழியை பிடிக்கும் என்பது அவன் அறிந்ததே. அன்று போதையில் கூறியதை தவிர்த்து இதுவரை அவனிடம் கூறியதில்லை.
"ஹ்ம்ம் தெரியும் உனக்கு என் கன்னக்குழியை பிடிக்கும்னு. பர்ஸ்ட் டைம் பார்த்ததப்போ கூட சொன்ன" என்றவன்,
"தொட்டுப்பாரு உன்க்கில்லாத உரிமையா…" என்று கன்னத்தை அவள் புறம் நகர்த்தினான்.
அவன் கூறியபிறகு தொட்டுப்பார்க்க அவா ஆர்ப்பரித்தது இருந்தும் சிறிதளவு கூச்சம் அவளை தடைசெய்தது.
அவளது கூச்சத்தை உணர்ந்தவன் தானே அவளது கரத்தை எடுத்து தனது கன்னக்குழியில் வைத்தான்.
உள்ளுக்குள் புதிதாய் ஒரு சிலிர்ப்பு ஒரு கணம் அலாதியாய் ரசித்தவள் அவனது ரசனை பார்வையில் விரலை விலக்கி கொண்டவள் தலையை தாழ்த்தி கொண்டாள்.
ஹரி புன்னகையுடன் அவளது தலையை நிமிர்த்த முகம் காண்பிக்க மறுத்தாள்.
நாடியை அழுத்தமாக பிடித்து நிமிர்த்தி அவளது விழியோடு விழியை கலக்கவிட்டவன் அவளது நெற்றியில் அழகாக இதழை பதிக்க அவனது முத்தத்தை உள்ளார்ந்து அனுபவித்தவள் விழிகளை இறுக மூடி கொண்டாள்…
"ப்ரஷாந்தி…" என்றவனின் ஆழ்ந்த குரல் அவள் செவியினை தீண்ட,
விழி மலர்த்தி பார்க்க,
"நாம லைஃப கொஞ்ச நாள் கழிச்சு ஸ்டார்ட் பண்ணலாமா…?" என்றான்.
ஒரு நொடி உள்ளுக்குள் ஏமாற்றம் பரவினாலும் புன்னகையுடன் சரியென்பதாய் தலையசைத்தாள்…
ஹரி இருவருக்கும் படுக்கையை சரி செய்ய அமைதியாக அவனருகில் படுத்து கொண்டாள்…
விழிகளை மூடினாலும் உறக்கம் வர மறுக்க அவனது புறம் திரும்பி படுக்க கண்மூடி அவளை பார்த்தவாறு படுத்திருந்தாள்.
விழிகள் அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தது. அவன் பட்ட துன்பங்களை துடைத்தெறியும் வகையில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவனை பார்த்து கொள்ள வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கி போனாள்…
அவள் உறங்கிய பிறகு விழிகளை திறந்தவன் காலையிலிருந்து மகிழ்ச்சி நாணம் அழுகை வேதனை நேசம் என அனைத்தையும் மாறி மாறி தன்னிடம் காண்பித்த மனையாளை விழியெடுக்காது பார்த்திரு
ந்தான்.
கைகளை வெட்டி கொண்ட போது அவள் கேட்ட கேள்வியில் மொத்தமாக அவன் உடைந்திருந்தான்…
தற்போதைக்கு மட்டுமே இவள் இதனை மறந்து சகஜமாக பேசியிருக்கிறாள். நிச்சயமாக அவ்வ போது இதனை நினைத்து வருந்துவாள் பொறுமையாக தான் கையாள வேண்டும் என்று சிந்தித்தவாறு இருந்தவன் வெகுநேரம் கழித்தே உறங்கினான்…
தொடரும்…
இவள் மீரா க்ரிஷ்