• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
601
Reaction score
836
Points
93
கவிதை 11

ஹரி கதவை திறக்க,

"ஹாய் ஹரி"

"ஹாய் ட்யூட்"

"ஹல்லோ…"

என்று வரிசையாக குரல் கொடுத்தபடி நின்றிருந்தனர் ப்ரஷாந்தியின் நண்பர்கள் குழு.


ஹரி ஒரு நொடி அவளை பார்த்து விட்டு பின்னர் அவர்களிடம் திரும்ப,


"தப்பான டைம்ல வந்துட்டோமா…? ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்திங்களா…?" என‌ மேனகா கண்ணடிக்க,


சஞ்சய், "இருக்கும் போல. சரி வாங்க நாம போய்ட்டு நாளைக்கு வரலாம்" என்று திரும்ப மற்றவர்களும் திரும்பிவிட்டனர்.

"ஹே சும்மா இருங்க. அதெல்லாம் ஒன்னுமில்லை…" என்று மேனகாவை அடித்தாலும் நண்பர்களின் கேலியில் அவளது முகம் சிவந்துவிட்டது.

அதை பார்த்தவர்கள், "நம்ம சொன்னது உண்மை தான் போல" என்று ஆர்ப்பரித்து சத்தம் போட,


அங்கே சிலர் திரும்பி பார்த்துவிட்டு சென்றனர்.

இத்தனை நேரம் அவர்களது கேலியை பார்த்திருந்த ஹரி, "காய்ஸ் இது ரெஸ்டாரன்ட் இல்லை. எல்லாரும் திரும்பி பார்க்குறாங்க. உள்ள வந்து பேசுங்க…" என்றான் அவர்களது சேட்டையில் எழுந்த புன்னகையுடன்.


எல்லோரும் உள்ளே நுழைய,

"நான் தான் அவங்களுக்கு சொன்னேன்" என்று சிறு குரலில் அவனிடம் உரைத்தவளின் விரல்கள் கன்னத்தின் சிவப்பை மறைக்க தேய்த்து கொண்டு இருந்தது…


எல்லோரும் ஹாலில் நின்று பேசிய படி இருக்க,

' இரண்டு சேர்கள் தான் உள்ளது எப்படி இத்தனை பேர் உட்கார முடியும். என்ன செய்வது…' என்று சங்கடத்துடன் பார்க்க,

அவன் எண்ணத்தை உணர்ந்தவள் போல ப்ரஷாந்தி அறைக்குள்ளிருந்து ஒரு பாயை எடுத்து வந்து விரிக்க அவர்களும் எந்த பிகுவும் பண்ணாமல் அமர்ந்துவிட்டார்கள்…


ப்ரஷாந்தியின் செயல் அந்த உரிமை புரிந்துணர்வு உள்ளுக்குள் மொத்தமாக ஒரு நொடி உருக செய்துவிட்டது.


தன் முகம் பார்த்து நடக்கும் துணை எத்தனை பேருக்கு அமைகிறது…


அந்த வகையில் தான் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தவன் தானும் புன்னகையுடன் அவர்களருகில் அமர,

சஞ்சய், "கங்கிராட்ஸ் ஹரி…" என்று கைக்குலுக்க,


வருண், "எங்க கேங்கலயே லாஸ்ட்டா ப்ரஷி தான் மேரேஜ் பண்ணுவான்னு நினைச்சோம். பட் இப்போது எல்லாம் ஆப்பபோசிட்டா நடக்குது…" என்க,


கிரண், "ஹரி நீ கவலையே படாத… எங்கண்ணன் ப்ரெண்ட் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல தான் ஒர்க் பண்றாரு. நான் அவர்கிட்ட பேசிட்டேன். உங்க கல்யாணத்தை சூப்பரா நடத்திடலாம்" என்றான்.


ஹரி பதில் கூறாது, 'என்ன நடக்கிறது…' என்கின்ற ரீதியில் ப்ரஷியை பார்த்து கொண்டு இருந்தான்…


ப்ரஷாந்தியும் அவன் முகத்தை தான் அந்நொடி பார்த்திருந்தாள்.


மேனகா, "நல்ல நாள் கூட எங்கம்மாட்ட சொல்லி பார்த்தாச்சு. வர்ற வெள்ளி கிழமை நல்லா இருக்காம். மார்னிங் கோவில்ல கல்யாணத்தை முடிச்சிட்டு அப்படியே போய் ரெஜிஸ்டர் பண்ணிக்குவோம்" என்று இயம்ப,


"இன்னும் போர் டேஸ் இருக்கு. அதுல ட்ரெஸ் மத்த ஆக்சசரிஸ் எல்லாம் பர்சேஸ் பண்ணிக்கலாம்" என்ற வினுஷா,


"எங்க ப்ளான் ஓகே தான ஹரி…" என்று வினா தொடுத்தாள்.


அவர்களா அனைத்தையும் செய்து முடிக்க நினைக்க ஹரி என்ன கூறுவதென்று தெரியாமல் மையமாக தலையசைத்தவன்,

"நீங்க பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்" என்று சமையலைறைக்கு சென்றான்.


ப்ரஷாந்தியும் இவர்கள் இத்தனை ஏற்பாடு திட்டம் எல்லாம் போட்டு கொண்டே வந்துவிடுவார்கள் என்று நினைக்கவில்லை.


ஒரு ஆறுதலுக்காக தான் அவர்களிடம் நடந்ததை கூறி திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதை கூறினாள்.


திருமணம் செய்ய முடிவெடுத்த அவள் கூட இத்தனை விடயத்தை பற்றி சிந்திக்கவில்லை.


ஹரி என்ன நினைப்பான் என்ற எண்ணம் அவளுக்குள் எழ அவனிடம் பேசலாம் என்று எழுந்துவிட்டாள்.


மேனகா, "என்னடி இங்க இத்தனை பேரை வச்சிட்டே ரோமான்ஸ் பண்ண போறியா…" என்று கை பிடித்து இழுக்க,


"சே உனக்கு எப்போ பாரு அதே நினைப்பு" என்று அவளது தோளில் தட்டிவிட்டு உள்ளே நுழைய ஹரியும் அவளரவம் கேட்டு திரும்பி பார்த்தான்.


அவன் முகம் எப்போதும் போலிருக்க ப்ரஷாந்தி தான் ஓரு நொடி தயங்கி, "ஹரி வீட்ல நடந்த பிராப்ளத்தை சொல்ல தான் கால் பண்ணேன். பட் இவங்க இப்படி எல்லாத்தையும்…" என்றவள் இழுத்தபடி அவனை பரிதவிப்புடன் நோக்கினாள்.


அவன் இன்னும் சம்மதமே தெரிவிக்காத பொழுது தான் செய்தது கொஞ்சம் அதிகம் தான் என்று தோன்றியது…


தான் அவனிடம் அடம்பிடிப்பது வேறு. இவர்கள் வந்து பேசுவது வேறு…


இப்போதும் திருமணம் செய்யும் எண்ணம் அப்படியே உறுதியாக தான் உள்ளது. ஆனால் அவனும் சம்மதிக்க வேண்டுமே…


இப்போது நண்பர்களை அழைத்து வந்ததில் அவனை திருமணத்திற்கு தான் நிர்பந்திப்பது போல ஆகிவிட்டதே…




தான் நேற்று பிடித்த அடம் கோபம் எல்லாம் இப்போது நடந்த நிகழ்வில் காணாமல் போய்விட்டதை உணர்ந்தவள் தன்னை தவறாக எண்ணிவிடுவானோ… என்று பரிதவிப்புடன் நோக்கினாள்.


அவள் எண்ணமும் மனப்போராட்டமும் அவனுக்கு புரிந்தது கை நீட்டி தன்னருகே அழைத்தவன் அவளை அணைத்து கொண்டான்…


"எதுக்கு நீ இவ்ளோ எக்ஸ்பிளனேஷன் எல்லாம் கொடுக்குற… உன்னை எனக்கு புரியும்" என்று அவள் உச்சியில் நாடியை வைத்து கொண்டான்.


அவளுக்கும் அந்நொடி ஆறுதல் தேவைப்பட்டதோ என்னவோ அவனுக்குள் அடங்கி போனாள்…


சில பல நொடிகளை மௌனம் உள்வாங்கி கொள்ள பால் பொங்கும் ஓசையில் இருவரும் பிரிய ஹரி நெருப்பை குறைத்து வைத்தான்.


அவனுக்கு நன்றாக ப்ரஷாந்தியின் தற்போதைய எண்ணம் புரிந்திருந்தது.


அவனறிந்த வரை அவள் எப்போதும் இப்படி தான். முதலில் கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டு பிறகு வருந்துவாள்.


அவளை புரிந்து வைத்திருந்தவன் அவள் கோபப்பட்டால் அமைதியாக தான் அவளை கையாள்வான்…



ஹரி காதலை சொல்வதற்கு முன்பு அவள் அப்படியில்லை. அப்போது அவள் உரிமை எடுத்து கொள்ளவில்லை.


அதன் பின்னர் உரிமையுடன் சில சில சண்டைகள் வர அவன் பொறுத்து தான் போனான்…


அவள் ஏதும் பேசாததை கண்ட ஹரி, "ப்ரஷாந்தி நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்க,


வியப்பில் விழிவிரித்தவள் துள்ளி குதிக்காத குறையாக, "உண்மையாவா சொல்ற…?" என்று வினா எழுப்பினாள்…


முகத்தில் அத்தனை மகிழ்ச்சி மின்னியது.


"உண்மையா தான்" என்று தானும் புன்னகைத்தவன் பாலை எடுத்து ஊற்றி காஃபி பவுடர் மற்றும் சர்க்கரையை போட்டு தம்ளர்களில் ஊற்றினான்.


முகம் முழுக்க புன்னகையுடன் அவனது செய்கையை தான் பார்த்த படி நின்றிருந்தாள் ப்ரஷாந்தி.


உண்மையில் கூற வேண்டும் என்றால் அவளுக்கு மகிழ்ச்சியில் இம்மையும் பிடிபடவில்லை. மறுமையும் பிடிபடவில்லை.


வெளியே வந்துவிட்டாள். ஹரி எல்லோருக்கும் காஃபியை எடுத்து வந்து கொடுத்துவிட்டு தானும் அமர்ந்துவிட்டான்…


எல்லோரும் அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பேசி கொண்டு இருக்க ரேஷ்மா மட்டும் அமைதியாக யோசனையுடன் அமர்ந்திருப்பதை ப்ரஷி அப்போது தான் கவனித்தாள்.


அவளது கை பிடித்தவள் கண்களாலே என்னவென்று வினவ,


ஒன்றுமில்லை எனும் விதமாக தலையாட்டியவள் உன்னிடம் பேச வேண்டும் என்று உதட்டசைத்தாள்.


ப்ரஷாந்தி காஃபி கப்களை எடுத்து செல்ல ரேஷ்மாவும் உடன் சென்றாள்.


"நீ மட்டும் ஏன் வந்ததில இருந்து சைலண்டா இருக்க…?" என்று ப்ரஷி வினவ,


"இப்போ அவசரமா இந்த கல்யாணம் உனக்கு தேவையா…?" என்று ரேஷ்மா வினவ,


"ஏன் டி இப்படி கேக்குற… நானே இப்போ தான் வேணாம்னு சொல்லிட்டு இருக்கவனை கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சிருக்கேன்" என்றாள்.


அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்பது தெரிந்தது. ஹரியை பற்றி அவள் அறிந்திருந்தாள்.


தங்கள் வயது தான் என்றாலும் அவனிடம் சற்று அதிகமான மன முதிர்ச்சி இருந்தது.


அது அவன் வளர்ந்த சூழலின் காரணமாக கூட இருக்கலாம்.


அவன் நிச்சியமாக இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டான் இவள் தான் அடம்பிடித்திருக்க வேண்டும் என்று யூகித்திருந்தவள்,


"இப்போ கல்யாணம் செய்யிறதுக்கு என்ன அவசியம் வந்துச்சு… கொஞ்சம் யோசிச்சு பண்ணு" என்க,


"எல்லாத்தையும் நல்லா திங்க் பண்ணிட்டேன். இது தான் பைனல் டிசிசன்" என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.

அவளது பிடிவாதத்தை பற்றி அறிந்தவள் மேலும் ஏதும் பேசாமல் தலையசைத்து நகர்ந்துவிட்டாள்.


அவர்கள் திட்டமிட்டல் படியே எல்லாம் செய்யலாம் என்று முடிவானது.

இருவரும் அலுவலகத்திற்கு விடுப்பு கூறிவிட்டனர்.

திருமணம் நடக்கும் வரை ப்ரஷாந்தி தனது வீட்டிலே தங்கியிருக்கட்டும் என்று ரேஷ்மா கூறி அவளை அழைத்து சென்று விட்டாள்.


மறுநாள் பேசியபடியே கடைக்கு சென்று அவர்களுக்கு உடை தாலி எல்லாம் வாங்கி கொண்டனர்…


அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முன்பதிவு செய்தனர்.


ஹரியே அணைத்து செலவுகளையும் பார்த்து கொண்டான். யாரையும் செலவு செய்யவிடவில்லை.


பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. ப்ரஷாந்தி அவளது நண்பர்கள் குழு மட்டும் அலுவகத்தில் சிலரை அழைத்திருந்தாள்.


ஹரியும் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்திருந்தான்…


வெள்ளி கிழமை காலையில் எழுந்த ஹரி குளித்து கடவுளிடம், 'நீ தான் நடக்கும் எல்லாவற்றிற்க்கும் பொறுப்பு…' என்று கண்மூடி வேண்டிவிட்டு அழைக்க வந்த தனது நண்பர்களுடன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றான்.

ப்ரஷாந்தியும் அவளது நண்பர்களுடன் வந்துவிட்டிருந்தாள்.


எதிர்ப்பார்த்த நன்னாள் வந்துவிட்டதில் அவள் முகம் கூடுதலாக மினுமினுத்தது…


ஹரியின் முகத்திலும் நிறைவான புன்னகை. செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு நிறைவாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்…


அதிகாலை நேரம் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.


சஞ்சய் வந்து, "வாங்க மாப்பிள்ளை சார்…" என்று புன்னகையுடன் அழைத்து சென்றான்…


அழைத்திருந்த நண்பர்கள் ஒரு பதினைந்து பேர் மட்டும் வந்திருந்தனர்.


ப்ரஷி அவனை பார்த்து புன்னகைக்க தானும் பதிலுக்கு அழகான சிரிப்பை உதிர்த்தவன் அவளருகில் நின்று கொண்டான்.


அர்ச்சகர் தாலியை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வர கூற, ரேஷ்மா வாங்கி வந்து கொடுத்தாள்.


இருவரும் கண்களை மூடி இறைவனை தரிசித்தனர்.


இருவர் மனமும் இனி எதிர்கொள்ள போகும் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று வேண்டுதல் வைத்தது.


அர்ச்சகர் மந்திரங்களை கூறி ஹரியின் கையில் மாங்கல்யத்தை கொடுக்க,


அதை வாங்கியவன் அவள் முகம் பார்த்த படி அவள் கழுத்தில் அணிவித்து அவளை தன்னில் பாதியாக ஏற்று கொண்டான்.


இருவருக்குள்ளும் சொல்ல முடியாத மகிழ்ச்சி.


ஹரிக்கு ப்ரஷாந்தியின் குடும்பத்தினர் இல்லாதது சிறிது மனதின் ஓரத்தில் வருத்தத்தை தோற்றுவித்தது.


இருந்தும் மனதில் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி வார்த்தைகளால் வடிக்க இயலாத ஒன்றாக இருந்தது.


"நம்ம ப்ரஷாந்தி இப்போ மிஸஸ் ஹரி கிருஷ்ணா ஆகிட்டா…" என்று நண்பர்கள் சந்தோஷ கூச்சலிட் இருவரும் சிரிப்புடன் பார்த்திருந்தனர்.


அலுவலகத்தில் வந்திருந்த நண்பர்கள் பரிசை கொடுத்துவிட்டு கிளம்ப அவர்களை வழியனுப்பிவிட்டு காரில் ரெஜிஸ்டர் ஆபிஸ் கிளம்பினர்.


சஞ்சய் காரை ஓட்ட மணமக்கள் இருவரும் பின்னால் ஏறி கொண்டனர்.

மற்றவர்கள் தங்களது காரில் வந்தனர்.

காரில் ஏறியதும் ப்ரஷாந்தி ஹரியின் கையை பற்றி கொள்ள அவளை ஆதுரமாக பார்த்தவன் தானும் அவளது கரங்களை அழுத்தமாக பற்றினான்.



ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நாளைந்து தம்பதிகள் திருமண பதிவுக்காக காத்திருந்தனர்.


கிரண், "நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் போய் மாதவன் அண்ணாவ பார்த்திட்டு வர்றேன்" என்று உள்ளே நுழைந்தான்.


இவர்கள் வெளியே காத்திருக்க ஐந்து நிமிடத்தில் வெளியே வர அவனுடன் ஒருவர் வந்தார்.


கிரண், "இவர் தான் மாதவன் அண்ணா…" என்று அறிமுகப்படுத்தினான்…


மாதவன், "ஹாப்பி மாரிட் லைஃப்…" என்று அவர்களை வாழ்த்த,


இருவரும் புன்னகை முகமாக நன்றி கூறினர்.

"எல்லா ப்ரசிரும் முடிச்சாச்சு. நீங்க வந்து சைன் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணா போதும்…" என்று அவர்களை அழைத்து சென்றார்.


உள்ளே செல்ல ரெஸிஸ்தார், "என்ன மாதவா இவங்க தான் நீ சொன்ன பசங்களா…? ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லாயிருக்கு" என்க,


ப்ரஷாந்தியும் ஹரியும் ஒரு முறை புன்னகையுடன் பார்த்து கொண்டனர்…


மாதவன், "ஆமா சார்" என்க,

"மாப்பிள்ளையும் பொண்ணும் இதுல கையெழுத்து போடுங்க…" என்றார்.


இருவரும் கையெழுத்து போட்டு முடிக்க சாட்சிக்காக ஹரியின் பக்கம் சஞ்சயும் கிரணும் கையெழுத்து போட ப்ரஷாந்தியின் பக்கம் ரேஷ்மாவும் வினுஷாவும் கையெழுத்திட்டனர்…


அங்கே எல்லா வேலையும் முடிய மணி ஒன்பதை நெருங்கியிருந்தது…


முன்னரே திட்டமிட படி ஒரு உணவகத்திற்கு சென்று காலை உணவை உண்டனர்.


ஹரிக்கும் ப்ரஷாந்திக்கும் மனதும் வயிறும் நிறைந்திருக்க உணவு அவ்வளவாக இறங்கவில்லை…


எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஹரியின் வீட்டை அடைந்தனர்.


ப்ரஷாந்தி ஹரியின் கையை பிடித்த படி வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைய,


"மணமகளே மணமகளே வா வா…" என்று கோரஸ் பாடி உள்ளே அனுப்பினர் ப்ரஷியின் நண்பர்கள்.


இப்போது ஹரியின் வீட்டில் நான்கைந்து நாற்காலிகள் இருந்தது.


ஃப்ரிட்ஜ் மற்றும் இன்னபிற பொருட்களும் இருந்தது.


இந்த இடைப்பட்ட நாட்களில் ப்ரஷிக்காக அவன் வாங்கி வைத்திருந்தான்…


உள்ளே நுழைந்ததும் ப்ரஷாந்தி, "எல்லாரும் உட்காருங்க. நான் காஃபி போட்டு கொண்டு வர்றேன்…" என்று சமைலறையை நோக்கி செல்ல,


சஞ்சய், "பார்றா… கல்யாணம் ஆனதும் இவளுக்கு பொறுப்பு வந்திடுச்சு…" என்று கலாய்க்க,


"அட ஆமா…" என்று வருண் கூற,


"முழுசா குடும்ப பொண்ணா மாறிட்ட நம்ம ப்ரஷாந்தியை பாருங்க…" என்றான் கிரண்.


அவன் கூறிய தோரணையில் எல்லோரும் சிரிப்பு வந்துவிட்டது.


ப்ரஷாந்தியின் சிரிப்புடன் அவர்களை முறைத்து விட்டு சென்றாள்…


ப்ரஷாந்தி காஃபியை கொண்டு வந்து கொடுக்க, எல்லோரும் எடுத்து கொண்டனர்.


கிரண் மட்டும், "ப்ரஷி பக்கத்துல எதுவும் ஹாஸ்பிட்டல் இருக்கா…?" என்று வினவ,


எதற்கு கேட்கிறான் என்று புரியாதவள், "ஹ்ம்ம் இருக்கு டா" என்று பதிலளித்தாள்.


"அப்போ ஓகே… இதை குடிச்சு எனக்கு எதாவது ஆகிட்டா இம்மிடியட்டா அங்க சேர்த்திடுங்க" என்று சிரிக்காமல் கூற, மற்றவர்கள் சிரிக்க தொடங்கிவிட்டனர்.


ப்ரஷாந்தி முனைப்புடன் காஃபி பிளேட்டால் அவனது தலையில் தட்ட,


"ஹரி உன் வொய்ப் கிட்ட இருந்து இந்த அப்பாவி ஜீவன காப்பாத்து" என்று போலியாக அலற,


ஹரி சிரிப்புடன் அவளது கையை பிடித்து கொண்டான்.


ரேஷ்மா, "பேசுனது போதும். கிஃப்ட எடுங்கப்பா…" என்க,

மேனகா, "ரெண்டு பேரும் எழுந்து நில்லுங்க…" அருகில் நிறுத்தி கொண்டாள்.

சஞ்சய், "ஹாப்பி மேரிட் லைஃப்…" என்று ஒரு ஜோடி வைர மோதிரம் அடங்கிய பெட்டியை நீட்டினான்.


அதனை கண்ட ஹரி, "எதுக்கு இவ்ளோ காஸ்லி கிஃப்ட்…" என்று தயங்க,


"ரொம்ப காஸ்லிலாம் இல்லை எடுத்துக்கோங்க" என்று கிரண் கூறினான்.


ப்ரஷாந்தியோ எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்து கொண்டவள், "இன்னும் பெருசா எக்ஸ்பெக்ட் பண்ணேண்… ப்ச் பரவாயில்லை" என்று பெருந்தன்மையாக கூறுவது போல பேச,


வருண், "உனக்கு இதுவே போதும்… போட்டுவிடு" என்று அவளை வாரினான்.


ப்ரஷாந்தி மோதிரத்தை ஹரியின் விரலில் அணிவிக்க அவனும் அவளது விரலில் மோதிரத்தை அணிவித்தான்…


இப்படியே பொழது நண்பர்களது கேலியுடன் கழிய ஹரி வரவழைத்த மதிய உணவை உண்டுவிட்டு பின்னர் சிறிது நேரம் இருந்துவிட்டே கிளம்ப ஆயத்தமாகினர்.




இருவரும் வாசல் வரை வந்து வழயனுப்ப, வருண் ப்ரஷாந்தியின் கையில் ஹரியின் கையில் வைத்து, "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்.‌ அதுல ஆனந்த கண்ணீரை மட்டும் தான் பாக்கணும்" என்க,


கிரண், "டேய் டையலாக்க மாத்தி சொல்ற… இவ ஹரிய‌ ஏதும் பண்ணாம இருந்தா சரி" என்று கூறி ப்ரஷியிடம் நான்கைந்து அடிக்ளை பெற்று கொண்டான்…


எல்லோரும் வெளியேற மேனகா மட்டும் ப்ரஷாந்தியை அழைத்து காதில் ஏதோ கூற அதில் சடுதியில் முகம் சிவந்தவள் அவளை ஏதோ செல்லமாக திட்டி அனுப்பி விட்டு அவர்கள் சென்றதும் கதவை அடைத்து திரும்ப ஹரி அவளையே பார்த்தபடி இருந்தான்.


சிவந்த முகத்தை மறைக்க தலையை திருப்பிய படி உள்ளே நுழைந்தவள் ஹாலில் இருந்த நாற்காலிகளை ஒன்றாக போட்டுவிட்டு காஃபி கப்புகளை எடுத்து சென்றாள்.


தங்கள் வீட்டில் உரிமையாக இந்த உலகில் தனது முதன் உறவாக வலய வரும் தனது மனையாளை விழியெடுக்காது பார்த்திருந்தான் ஹரி.


மனதில் வடிக்க இயலாத ஒரு நிறைவு. தனக்கென யாருமில்லை என்ற எண்ணம் துடைத்தெடுக்கப்பட்டு தனக்காக தனக்கு மட்டுமே சொந்தமாக ஒருத்தி வந்துவிட்டாள் என்று எண்ணும் போதே நன் நெஞ்சில் தித்திப்பாய் ஒரு சாரல்…


சமையலையிலிருந்து வெளிவந்தவளின் கையை தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டான்.


ப்ரஷாந்தி தலையுயர்த்தி பார்க்க கன்னத்தில் இன்னும் சிவப்பு மீதமிருந்தது…


காயாம்பு நிறத்தில் கரை வைத்த பட்டு
சேலையில் தான் காலையில் அணிவித்த மாங்கல்யம் கழுத்தில் தொங்க முகமெங்கும் புதுபுது மினுமினுப்பும் பளபளப்புடனும் நின்றிருந்தவளின் மீது பார்வை ரசனையாக படிந்தது.


அவனது பாவனையிலே செயலை உணர்ந்தவள் முகம் சிவக்க கூச்சத்துடன் முகத்தை திருப்பி கொண்டான்.


அவளது அந்த வெட்கம் பேரழகியாக காண்பிக்க அவனது பார்வையில் ரசனை உறியது…


அவளது செயலை கண்டு புன்னகையுடன் அவளது கரத்தை எடுத்து கன்னத்தில் வைத்து கொண்டான்…



































 
Top