• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
601
Reaction score
836
Points
93
அத்தியாயம் 9

வேதனையுடன் பார்த்துக் கொண்ட இருவருக்கும் திருமணத்துக்கு பின்னான தங்களது வாழ்க்கை நினைவு வந்தது…


இரவு நேரத்தில் சொட்ட சொட்ட நனைந்து குளிரில் நடுங்கியபடி நின்றிருந்தவளை கண்டதும் ஹரி ஏகத்திற்கும் அதிர்ந்து,


"என்னாச்சு ப்ரஷாந்தி ஏன் இப்படி மழையில நனைஞ்சிட்டு வந்திருக்க…" என்று வினவ,


"எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன் பர்ஸ்ட் உள்ள விடு…" என்று பற்கள் தந்தியடித்த படி கூறினாள்.


அவளது நிலையை உணர்ந்தவன் அவளுக்கு வழிவிட்டு கதவை சாற்றி விளையாட்டு உள்ளே வர,


இரண்டு கைகளையும் குறுக்கே கட்டியபடி குளிர்தாங்காது நின்றிருந்தாள் ப்ரஷாந்தி.


உடனே பேனை ஆஃப் செய்தவன் உள்ளே சென்று ஒரு டவலை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.


மௌனமாக அதனை வாங்கி தலையை துவட்ட தொடங்கியவள், "ஹரி வேற ட்ரெஸ் எடுத்துட்டு வர்றியா… ரொம்ப கூலிங்கா இருக்கு" என்க,


"புது ட்ரெஸ் எதுவும் இல்லை. என்னோட ட்ரெஸ் தான் இருக்கு…" என்று தயங்கி இழுத்தான்.

"பரவாயில்லை. உன்னோடது தானே நோ இஸ்யூஸ்…" என்று பட்டென்று பதில் வந்தது அவளிடமிருந்து.


"வெயிட் எடுத்திட்டு வர்றேன்" என்று அறைக்குள் நுழைந்தவனுக்கு அவளது பதிலே எதோ முடிவு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று கூறியது…


ஆனால் பிரச்சனை என்னவென்று தெரியவில்லை. அதன் விளைவுகளும் தெரியவில்லை.


அவன் அறைக்குள் சென்றதும் ப்ரஷாந்தியின் கண்கள் அந்த பிளாட்டை சுற்றி வந்தது.

சிங்கிள் பெட்ரூம் தான் அது. ஒரு சிறிய ஹால் ஒரு கிட்சன் ஒரு பெட்ரூம் என்று அளவாக இருந்தது…


ஹாலில் இரண்டு சேர் ஒரு டேபிள் என்று அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இருந்தது.


இதுவரை ப்ரஷாந்தி இங்கு வந்ததில்லை. இருவரும் பொதுவாக எதாவது ஒரு இடத்தில் தான் சந்தித்து கொள்வார்கள்.


இனி இது தான் தங்களுடைய வீடு. இங்கு தான் வாழ போகிறோம் என்று நினைக்கையிலே புன்னகை வந்து அமர்ந்து கொண்டது அவளது இதழ்களில்…


ஹரி ஒரு டீசர்டும் ட்ராக் பேண்டும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து, "போய் ரூம்குள்ள மாத்திட்டு வா…" என்க,


சரியென்று தலையசைத்தவள் தன் கையிலிருந்த பேக்கை டேபிள் மீது வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.


உள்ளே ஒரு சிறிய கட்டில் மெத்தை ஒரு கபோர்ட் இன்னும் சில இத்தியாதிகள் இருந்தது.


ப்ரஷாந்தி உடைமாற்றிவிட்டு வெளியே வர கையில் இரண்டு கப்களுடன் அவளை எதிர்க்கொண்டான் ஹரி.


அவனுடைய உடை அவளுக்கு சிறிது தொலதொலவென்று இருந்தது. முட்டி வரையிலான அவனது ட்ராக் பேண்ட் அவளுயரத்திற்கு சரியாக இருந்தது.


அவனது கண்கள் அவளை ஆராய,


"உன் ட்ரெஸ் எனக்கு எப்பிடி இருக்கு…" என்று ஒரு முறை சுற்றி காண்பித்தாள்.


"ஹ்ம்ம் நாட் பேட்…" என்று அவன் பதிலளித்த படி வர,

"டீசர்ட் மட்டும் லைட்டா லூசா இருக்கு" என்றவள்,

"வாவ் காஃபியா இந்த குளிருக்கு சூப்பரா இருக்கும்…" என்று வாங்கியவள் நாற்காலியில் அமர்ந்துவிட,


"பால் இல்லை. ப்ளாக் காஃபி தான் போட்ருக்கேன்…" என்று அவளெதிரில் அமர்ந்தான்.


"இட்ஸ் ஓகே… எனக்கு ப்ளாக் காஃபி ரொம்ப பிடிக்கும்…" என்றவள் மெதுவாக அருந்த தொடங்கியவள்,


"வாவ் ஹரி சூப்பர் பெர்பெக்டா போட்ருக்க…" என்று கண்கள் மூடி ரசித்தபடியே கூற,

அதில் அவனது இதழ்களில் புன்னகை பிறக்க, "ஹாஸ்டல்ல போட்டு பழக்கம்…" என்று பதிலளித்தவன்,


அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியா இருந்து பின்னர், "இப்போ சொல்லு என்ன பிராப்ளம். ஏன் இந்த நேரத்துல இங்க வந்திருக்க…? என்று வினா எழுப்ப,


இத்தனை நேரம் இலகு தன்மையில் இருந்தவள் சற்று முகம் மாறி, "நம்ம லவ் வீட்ல தெரிஞ்சிடுச்சு நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்…" என்று நடந்தவற்றை கூறினாள்.


அவள் கூறுவதை பொறுமையாக கேட்டவன், "என்ன நடந்து இருந்தாலும் நீ பண்ணது தப்பு. வீட்டை விட்டு வெளியே வந்திருக்க கூடாது…" என்று சற்று கடுமையுடன் கூற,


"என்ன பேசுற நீ… அவர் உன்னை அநாதைன்னு சொல்றாரு அதை கேட்டுட்டு என்னை அமைதியா இருக்க சொல்றியா… அதுமில்லாம அந்த ஹிட்லர் தான் என்னை வீட்டைவிட்டு போக சொன்னாரு. நான் ஒன்னும் பர்ஸ்ட் முடிவெடுக்கலை…" என்று சற்று உரக்கவே கூறினாள்.


"அவங்க சொன்னா நீ வந்துடுவியா…? எந்த அம்மா அப்பாவும் பிள்ளைங்க காதலிச்சா உடனே ஏத்துக்க மாட்டாங்க நாம தான் பொறுமையா பேசி புரிய வைக்கணும்" ஹரி இயம்ப,


"எனக்கு நம்ம இந்த விஷயத்துக்கு இது தான் முடிவுன்னு ஆல்ரெடி தெரியும். என்ன பேசுனாலும் அந்த ஹிட்லருக்கு ஒன்னும் புரியாது" என்று அலுத்து கொண்டாள்.



ஹரி,"எதையுமே முயற்சி பண்ணாம பேச கூடாது. நீ எடுத்து சொல்ல ட்ரை பண்ணி இருக்கணும். என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்பு தான். மார்னிங் நான் வந்து உங்க வீட்ல பேசி விட்டுட்டு வர்றேன்" என்க,


"நோ நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்…" என்று பட்டென்று பதில் வந்தது அவளிடம்.


"புரியாம பேசாத ப்ரஷாந்தி…"


"நான் எல்லாம் புரிஞ்சு தான் பேசுறேன். நான் இங்கயிருந்து போக மாட்டேன்"


"ஏன் இப்படி அடம்பிடிக்கிற. நீ இன்னும் எத்தனை நாள் இங்க தங்க முடியும்…"


"எப்போவுமே இங்க தான். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றவளின் கூற்றில் ஏகத்திற்கும் அதிர்ந்தவன்,


"வாட் கல்யாணமா…? நமக்கு என்ன வயசு ஆகுது அதுக்குள்ள கல்யாணத்தை பத்தி பேசுற" என்க,


"அதெல்லாம் கல்யாண வயசு ஆகிடுச்சு. எங்க சுதா ஆன்ட்டி பொண்ணுக்கு நம்ம ஏஜ் தான். அவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு" என்றவளின் கூற்றில் ஆயாசமாக உணர்ந்தவனுக்கு அவளது பேச்சு முதிர்ச்சி இல்லாத வளர்ந்த குழந்தையின் அடமாக தெரிந்தது.


"அவங்க வேற. நம்ம வேற. நம்ம லைஃப்ல இன்னும் செட்டில் ஆகலை…"


"கல்யாணம் பண்ற எல்லாரும் செட்டில் ஆகிட்டா பண்றாங்க… நீ என்ன சொன்னாலும் உன்னை அப்படி பேசுனவங்க வீட்டுக்கு நான் திரும்பி போறதா இல்லை" என்று அவன் முகம் பார்க்க,


"ப்ச் ஏன் இப்படி எதையுமே புரிஞ்சுக்காம அடமென்ட்டா இருக்க…." என்றவனுக்கு சினம் துளிர்க்க,


"உங்கப்பா சரியா தான் சொல்லியிருக்காரு. நான் ஒரு அநாதை தான்… எனக்கும் அம்மா அப்பா பேமிலின்னு இருந்திருந்தா நீ இப்படி நைட் டைம்ல வந்து இங்க தான் இருப்பேன்னு சொல்லுவியா…?" என்று பொறிந்தான்.


அவனது பேச்சில் கோபம் கடல் அலையாய் பெருக, "ஸ்டாப் இட் ஹரி.‌ இன்னொரு டைம் நீ அநாதைன்ற வேர்ட்ட யூஸ் பண்ண அவ்ளோ தான். அவங்க இதை சொன்னாங்கன்னு தான் அங்க இருந்து கிளம்புனேன்" பாய்ந்தவள்,


"இப்போ என்ன நான் இங்க வந்தது தான் உனக்கு பிராப்ளமா…? நான் போய்ட்றேன்" என்று அழுத்தமாக கூறியவள் எழுந்துவிட்டாள்.


அவளது வார்த்தையில் அதிர்ச்சி அடைந்து, "ப்ச் என்ன பேசுற நீ. நான் உன்னை பிராப்ளம்னு சொன்னேனா…?" என்று அவளது கையை பிடிக்க,


"ப்ச் விடு என் கைய விடு. யாருக்கும் நான் பாரமா இருக்க விரும்பலை…" என்று தனது பேக்கை எடுத்தவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.


அவளது கலங்கிய கண்களை கண்டு தன்னையே நிந்தித்தவன், "நான் அந்த அர்த்தத்துல சொல்லலை டி…" என்று அவளை தன் புறம் திருப்ப,


முகம் சிவந்து கலங்கிய விழிகளுடன் துடிக்கும் அதரங்களுடன் தன்னை நோக்கியவளின் பாவனையில் உருகியவன் சட்டென்று அணைத்து கொண்டான்.


அவனது மார்பில் முகம் புதைத்தவள், "உன்னை விட்டு போக சொல்லாத நீ…" என்று விம்ப,


"சரி போக சொல்ல மாட்டேன்…" என்று அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்தவன் அப்போது தான் அவள் கன்னத்தில் இருந்த விரல் தடையத்தை கவனித்தவன்,


"கன்னத்துல என்ன காயம்…? இது எப்படி ஆச்சு…?" என்று அதிர்ந்து வினவினான்.


"அம்மா அடிச்சுட்டாங்க அப்பாவ கை நீட்டி பேசுனேன்னு" என்று பதிலுரைக்க,


அவன் விரல்கள் கன்னத்தினை மெதுவாக வருடியது,

"ஷ்…" வலியில் லேசாக கண் சுருக்கினாள்.


"ரொம்ப பெயினா இருக்கா…?" என்று வருத்தத்துடன் கேள்வி எழுப்பினான்.


"லைட்டா தான் இருக்கு…" என்று பதில் இயம்ய,


"வெயிட் வந்துட்றேன்…" என்று அவன் வெளியேற போக,


"எங்க போற…?" என்று வினவினாள்…


"ஐஸ் க்யூப்ஸ் வாங்கிட்டு வர்றேன்…" என்று பதில் மொழிந்தவன் வெளியேறி விட,


'ஃப்ரிட்ஜ் இல்லையா இங்க…' என்று எண்ணியபடி கிட்சனுக்குள் எட்டிப்பார்க்க,


அங்கே பாதி கபோர்டுகள் காலியாக தான் இருந்தது.


ஒரு சிறிய இன்டஸ்ட்டன் ஸ்டவ் ஷெல்ப்பில் கொஞ்சம் பாத்திரங்கள் சமையலுக்கு தேவையான மளிகை சாமான்கள் இருக்க சமையலறை மிகவும் சுத்தமாக இருந்தது.


ப்ரஷாந்தி சமையலறையில் இருந்து வெளியே வர கையில் ஐஸ் க்யூப்புடன் உள்ளே நுழைந்தான் ஹரி.


"எங்க போய் வாங்கிட்டு வர ஹரி…?" என்று ப்ரஷி வினா தொடுக்க,


"கீழே க்ரவுண்ட் ப்ளோர்ல ஒரு ஷாப் இருக்கு. அங்க போய் தான் வாங்கிட்டு வர்றேன்" என்றவன்,

டவல் எடுத்து அதில் ஐஸ் க்யூபை சுற்றி அவளது கன்னத்தில் மெதுவாக ஒற்றி எடுத்தான்…


இரண்டு நிமிடங்கள் ஒற்றி எடுத்தவன் சற்று வீக்கம் வற்றியதும், "வீக்கம் குறைஞ்சிடுச்சு. மார்னிங் ஒரு தடவை ஒத்தடம் கொடுத்தா சரியாகிடும்" என்றவன்,


"இப்ப போய் படு மத்ததை மார்னிங் பேசிக்கலாம்…" என்றான்.


அவளும் மறுத்து பேசாமல் தலையசைக்க அறைக்குள் சென்று ஒரு பெட்ஷீட்டை மட்டும் எடுத்து கொண்டு வெளியே வந்தவன், "நீ உள்ள பெட்ல படுத்துக்கோ. நான் ஹால்ல படுத்துக்கிறேன்…" என்றான்.


"நீ எப்படி தரையில படுப்ப…?" என்று ப்ரஷாந்தி வினவ,


"எனக்கு தரையில படுத்து பழக்கம் தான்…" என்றவன் நாற்காலியை ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு போர்வையை விரித்துவிட, ப்ரஷாந்தி அறைக்குள் சென்று மெத்தையில் படுத்துவிட்டாள்.


உரியவனிடம் சேர்ந்துவிட்டோம் என்ற நிம்மதியில் ப்ரஷாந்தி படுத்தவுடன் உறங்கிவிட,


இங்கு ஹரி தான் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த படி புரண்டு புரண்டு படுத்தான்.


இவள் செய்து வைத்திருப்பதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்தவன், 'இப்போது கோபத்தில் யோசிக்காமல் பேசுகிறாள். காலையில் பொறுமையாக எடுத்து கூறி வீட்டிற்கு அழைத்து சென்று அவள் பெற்றோரிடம் பேசி விட்டு வர வேண்டும்' என்று முடிவெடுத்து உறங்கி போனான்…


மழை இன்னும் தூறிய படி இருக்க குளிர் தாங்காது புரண்டு படுத்தவனுக்கு உறக்கம் கலைந்துவிட்டது.


தனது அலைபேசியில் நேரத்தை பார்க்க அது மூன்று என காண்பித்தது.


மழையின் காரணமாக டைல்ஸ் சற்று அதீத குளிராக இருந்ததில் அவனது உறக்கம் தடைபட்டுவிட்டது…


எழுந்து கழிவரை செல்வதற்க்காக அறைக்குள் சென்றவன் பார்வை அவள் மீது படிய கை கால்களை மிகவும் குறுக்கி உறங்கி கொண்டிருந்தாள்…


ஹரி கழிவரை சென்றுவிட்டு அறையில் இருந்து வெளியேறும் சமயம் அவளிடமிருந்து சிறு முனகல் வர,


'தூக்கத்தில் பேசுகிறாளா இவள்…?' என்று எண்ணியபடி அருகில் சென்று பார்க்க அனலடித்தது அவனுக்கு.

அதில் சடுதியாக அவளது நெற்றியில் கைவைத்து பார்க்க காய்ச்சல் நெருப்பாக கொதித்தது.


குளிர் தாங்காது, "ம்மா ம்மா…" என்று முனகியபடி இருந்தாள்.


மழையில் நனைந்ததில் காய்ச்சல் வந்துவிட்டது என்பதை யூகித்தவன் சமையலறை சென்று சிறு துணியின் நீரை நனைத்து எடுத்து வந்து அவளது நெற்றியில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்து போட்டு அருகிலே அமர்ந்துவிட்டான்.


அரை மணி நேரம் சென்றிருக்க அவளிடம் நடுக்கம் குறைந்தபாடில்லை. உடல் சூடும் அதிகமானது போல வேறு இருந்தது.


நேரம் நான்கை நெருங்க இதற்கு மேலும் தாமதித்தால் காய்ச்சல் அதிகமாகிவிடும் என்று எண்ணியவன் எழுந்து வீட்டின் கதவை பூட்டிவிட்டு அந்த அபார்ட்மெண்டில் உள்ள மருத்துவர் வீட்டிற்கு சென்றான்.


இங்கு வந்த புதிதிலே அவசரத்திற்கு உதவும் என்று மருத்துவரை பற்றி விசாரித்து வைத்திருந்தான்.


இரண்டாம் தளத்திற்கு சென்று மருத்துவரது வீட்டு கதவை தட்டி அவரிடம் ப்ரஷாந்தியின் நிலைமையை கூறி அழைத்து வந்திருந்தான்.


மருத்துவர் வந்து ப்ரஷாந்தியை சோதித்து விட்டு, "நார்மல் ஃபீவர் தான். மழையில நனைஞ்சாங்களா…?" என வினவ,


"ஆமா டாக்டர். நைட் மழையில நனைஞ்சிட்டா…" என்று பதில் மொழிந்தான்.


"அதுனால தான் டெம்ரேச்சர் ரெய்ஸ் ஆகிடுச்சு. ஒரு இன்ஜெக்ஷன் போட்றேன்… மார்னிங் எழுந்ததும் சாப்பிட்டு இந்த டேப்லெட்டை போட சொல்லுங்க சரியாகிடும். அப்படி ஆகலைன்னா ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போங்க" என்று கூறிவிட்டு ஊசியை போட,


தூக்கத்திலே வலியில் முகம் சுழித்தாள்.


ஹரி மருத்துவருக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு ப்ரஷாந்தியின் அருகிலே வந்து அவளை பார்த்த படி அமர்ந்து விட்டான்…


அவளது முகத்தை பார்த்தவனுக்கு, எதற்கு இவளுக்கு இந்த தேவையில்லாத பிரச்சினை…? வீட்டை விட்டு வெளியே வந்து மழையில் நனைந்து காய்ச்சல் வந்து படுத்துவிட்டாள்…' என்று தான் தோன்றியது.


அவளது முகத்தையே பார்த்தபடி அமர்ந்து இருந்தவன் நேரம் ஆவதை உணர்ந்து அவளை தொட்டு பார்க்க காய்ச்சல் நன்றாக குறைந்திருந்தது.

நேரம் ஆறாகியிருந்தது எழுந்து சென்று முகம் கழுவி பாலை வாங்கி வந்து காஃபியை தயாரித்து கொடுத்தவன் அலுவலகத்திற்கு விடுமுறையை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு கையில் இருந்த செய்தி தாளை படித்த படி அவளருகில் அமர்ந்து விட்டான்.


ஏழு மணியளவில் மெதுவாக விழிகளை திறந்தாள் ப்ரஷாந்தி.


"எழுந்துட்டியா…? இப்போ பீவர் குறைஞ்சிடுச்சு…" என்று நெற்றியில் கை வைக்க,


ப்ரஷாந்திக்கு இரவு நடந்தது நினைவிற்கு வர, "ஹ்ம்ம் பீலிங் பெட்டர்" என்று புன்னகைத்தாள்.


"போய் பிரஷ்ஷாகிட்டு வா நான் காஃபி போட்டு எடுத்திட்டு வர்றேன்…" என்று சமையலறைக்கு சென்றான்.


கை கால் முகம் கழுவிவிட்டு அவன் வாங்கி வைத்திருந்த ப்ரெஷ்ஷில் பல்லை துலக்கிவிட்டு வந்தவளிடம் காஃபியை கொடுத்துவிட்டு, "நீ சாப்பிட்டு டேப்லெட் போடு பீவர் சரியாகிடும்…" என்று பதில் மொழிந்தான்.


அவளுக்கும் காய்ச்சல் வந்தது உடல் அசதியாக இருக்க சாப்பிட்டு மீண்டும் படுத்துவிட்டாள்…


படுத்தவள் மீண்டும் மதிய உணவிற்கு கூட எழவில்லை. மாலை நேரம் தான் எழுந்தாள்.


எழுந்தவள் குளித்துவிட்டு வர பால்கனியருகே நின்று இருந்தவன், "நல்லாகிட்டியா…? இல்லை ஹாஸ்பிடல் போய்ட்டு வருவோமா…?" என்று வினவ,


"இல்லை. ஐ ஆம் கம்ப்ளீட்லி ஆல்ரைட்…" என்று கூறியவளின் முகம் தெளிவாக இருந்தது.


இப்போது கோபம் அவளுக்கு குறைந்திருக்கும் தான் நினைத்ததை பேசி புரிய வைக்கலாம் என்று எண்ணியவன், "ப்ரஷாந்தி கொஞ்சம் நான் பேசுறதை பொறுமையா கேளு… அப்புறம் உன் முடிவை சொல்லு…" என்க,


அவன் பேச போகும் விடயம் அறிந்தாலும் சம்மதமாக தலையசைத்தாள்…


"நீ இப்போ கோபத்துல முடிவெடுத்திட்டு நாளைக்கு பீல் பண்ண கூடாது" என்று பேசுகையிலே இடை புகுந்தவள்,


"எதுக்கு பீல் பண்ண போறேன். உன்னை கல்யாண பண்ணதுக்காகவா…?" என்றவளின் வார்த்தையில் அனலடிக்க,


அவளை முறைத்தவன், "இப்போ தான சொன்னேன். இடையில பேசாதன்னு…" என்க,


"சரி இடையில பேசலை. நான் கேட்ட கொஸ்டினுக்கு மட்டும் ஆன்சர் பண்ணு" என்று கூறினாள்…


"நான் சொன்னது அம்மா அப்பாவை எதிர்த்திட்டு கல்யாணம் பண்றதுக்காக" என்று முறைத்த படி பதிலளித்தான்.


"எந்த காலத்திலும் அவங்க சம்மதம் கிடைக்காது சோ நான் எப்பவுமே பீல் பண்ண மாட்டேன்" என்றவள் அவனது முகத்தை பார்த்து வாயை மூடினாள்.


"பேரண்ட்ஸ் எல்லாருமே பசங்க காதலிக்கிற விஷயம் தெரிஞ்சா கோபப்பட்டு திட்ட தான் செய்வாங்க. அவங்க பிள்ளைங்க வாழ்க்கையை பத்தி அவங்களுக்குன்னு சில கனவுகள் இருக்கும். அது திடீர்னு கலைஞ்சு போகும் போது ஏற்பட்ற‌ ஏமாற்றத்தோட வெளிப்பாடு தான் அவங்க கோபம்"


"..."


"பெத்து வளர்த்த அவங்களுக்கு ரெண்டு வார்த்தை திட்றதுக்கு உரிமை இல்லையா…? இப்போ நம்ம ரெண்டு பேர் மட்டும் போதும்னு நினைச்சு பேசிடலாம் பட் நாளைக்கு நமக்கு அவங்க தேவை…" என்றவன் பின் வருத்தத்துடன்,


"எனக்கு தான் அம்மா அப்பா யாருமில்லை. உன் வீட்டு சொந்தமாவது நமக்கு வேணும் ப்ரஷாந்தி…" என்று கூற,


இத்தனை நேரம் அழுத்தமாக இருந்தவள் அவனது வருத்தத்தில் இளகி, "நீ சொல்றது எல்லாம் சரி தான். அவங்களுக்கு என்னை திட்றதுக்கு உரிமை இருக்கு. அடிக்க கூட செய்யட்டும். பட் உன்னை திட்றதுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு. அது தான் நான் கோபப்பட்டேன். மோர் ஓவர் நான் திரும்பி போனாலும் அவங்க நம்மள அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க. எனக்கு என் பேரண்ட்ஸ பத்தி தெரியும்…"


"இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்துட்டா சீக்கிரமா ஏத்துப்பாங்க. என்னை ஏற்பாடு பண்ணிடலாமா…?" என்று சீரியஸாக ஆரம்பித்து இறுதியில் கண்சிமிட்டியவளை கண்டு அவனுக்கும் மனநிலை மாறி சிரிப்பு வந்துவிட்டது.


சிரிப்பை கட்டுபடுத்தியவன் அவளை முறைக்க, "என்ன உன்னால ஏற்பாடு பண்ண முடியும் தானே…?" என்று என்று மீ
ண்டும் சீண்ட,


"உன்னை… உனக்கு வாய் கொஞ்சம் அதிகமாகிடுச்சு…" என்று அடிக்க போக,


"ஆமா அதிமாகிடுச்சு…" என்று அவனை அணைத்து கொண்டவள்,


"நீ என்ன தான் பக்கம் பக்கமா லெக்சர்ஸ் எடுத்தாலும் நான் இங்க இருந்து போக மாட்டேன்…" என்று முகத்தை அழுத்தி கொண்டாள்…


அவனும் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளை அணைக்க வெளியே அழைப்பு மணி ஓசை கேட்டது…
 
Last edited:
Top