• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எபிலாக்

Administrator
Staff member
Messages
466
Reaction score
795
Points
93
எபிலாக்

"அதி…" என்ற செல்வாவின் குரல் அவ்வறையை நிறைக்க,

"முடிஞ்சா பிடிச்சுக்கோம்மா" என்ற அதி சிரிப்புடன் அவ்வறையை சுற்றி வர,

"அடியே உன்னோட என்னால போராட முடியலை" என்ற செல்வா நின்று மூச்சு வாங்க முறைத்தாள்.

"ம்மா கமான் வாங்க" என்றவள் சிரிக்க,

"வர வர உனக்கு சேட்டை அதிகமாகிடுச்சு" என்று மேலும் முறைத்தாள்.

"என்ன ரெண்டு பேரும் சத்தம் போட்டுட்டு இருக்கிங்க" என்று குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வந்த வல்லபன் வினவ,

"எல்லாம் உங்க பொண்ணால தான். வர வர அவளுக்கு சேட்டை அதிகமாகிடுச்சு" என்று கணவனிடம் புகார் வாசிக்க,

"ப்பா எல்லாம் அம்மாவால தான் வர வர அவங்களுக்கு சேட்டை அதிகமாகிடுச்சு" என்று தாயை போலவே பாவனையாக அதி கூற,

இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

செல்வா சிரிப்பும் முறைப்புமாக மகளை காண,

வல்லபன் சிரிப்புடன், "க்யூட் குட்டிம்மா" என்று மகளை தூக்கி கொஞ்ச,

"எஸ் ப்பா" என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

"ம்க்கூம் அவளை கண்டிக்க சொன்னா கொஞ்சிட்டு இருக்கிங்க. உங்களால தான் அவ ரொம்ப பண்றா" என்று கணவனை முறைக்க,

"என் பொண்ணு க்யூட்டா இருக்கா கொஞ்சுறேன்‌. உனக்கேன் பொஸஸ்ஸீவ் ஆகுது. உன்னை கொஞ்சலைன்னா"என்று கேட்க,

"ஆமா ப்பா அம்மாக்கு என்மேலயும் தம்பி மேலயும் பொஸஸ்ஸீவ்.
நீங்க எங்களை மட்டும் கொஞ்சுறிங்கன்னு" என்று மகளும் எடுத்து கொடுத்தாள்.

"அப்படியா?" என்பது போல சிரிப்புடன் பார்த்து வைக்க,

அதுதான் உண்மை என்றாலும் ஒப்புக் கொள்ள மனமின்றி,

"யாருக்கு பொஸஸ்ஸீவ் எனக்குலாம் அப்படி ஏதுமில்லை" என்று உதட்டை சுழித்தவள் முகத்தை திருப்பி கொள்ள,

"நம்பிட்டேன்" என்று சிரிப்புடன் மொழிந்தவன்,

"என்ன பிரச்சனை உங்களுக்குள்ள எதுக்கு குட்டிம்மாவ துரத்திட்டு வந்த?" என்க,

"சாப்பிட மாட்றா உங்க பொண்ணு" மனைவி புகார் செய்ய,

"ஏன்டா பட்டு" என்று மகளை காண,

"ப்பா அது பிட்டர் கார்ட் வாய்ல வைக்க முடியலை உவேக்" என்றாள் அதியா.

உணவு தட்டை எடுத்து வந்தவள்,

"இந்தாங்க அவளை சாப்பிட வைங்க. நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு" என்று நகர்ந்தவள் சமையலறைக்கு செல்ல,

"என்னம்மா பாப்பா சாப்பிட்டாளா?" என்று ரிஷியை இடுப்பில் வைத்திருந்த ரேகா வினவ,

"என்னால முடியலத்த. உங்க புள்ளைக்கிட்ட கொடுத்திட்டு வந்திட்டேன்" என்று பதிலளித்தவள் உணவு பாத்திரத்தை மேஜை மேல எடுத்து வைத்தாள்.

இங்கு வல்லபனோ, "குட்டிம்மா அப்படிலாம் சொல்ல கூடாதுடா‌. எல்லா சத்தும் உடலுக்கு வேணும்டா" என்று பலவாறாக பேசி மகளை ஐந்து நிமிடத்திலே உண்ண வைத்திருந்தான்.

"தாத்தா நான் பிட்டர் கார்ட சாப்பிட்டேன்" என்று அதி சிரிப்புடன் ஓடி வர,

"எனக்கு தெரியும் டா செல்லம் நீ குட் கேர்ள்னு" என்ற அபிஷேக் அவளை மடியில் அமர்த்தி கொள்ள,

மகளின் சத்தத்தில் வெளியே எட்டிப் பார்த்தவள்,

'அதானே நான் சொன்னா எதையுமே செய்றது இல்லை. அப்பா சொன்னா பாகற்காய் இறங்கிடும்' என்று நினைத்தவள் மகளை முறைத்துவிட்டு கணவனை காண,

'உண்ண வைத்துவிட்டேன் பார்த்தியா?' என்ற தோரணையில் மனைவியை பார்க்க,

"ரொம்பத்தான்" என்று உதட்டை சுழித்தவள் உள்ளே செல்ல,

புன்னகையுடன் மகன் புறம் திரும்பிய வல்லபன் கையை நீட்ட,

அபியின் மடியில் இருந்த அவர்களது இரண்டு வயது புதல்வன் ரிஷி கேஷவ், "ப்பா" என்று அரிசி பற்கள் மின்னும் சிரிப்புடன் தந்தையிடம் தாவினான்.

"ப்பா நானும்" என்று அதியும் தம்பியுடன் போட்டி போட்டு கொண்டு தந்தையின் மடியில் அமர,

"போதும் ரெண்டு பேரும் இறக்குங்க. எம்புள்ள சாப்பிடட்டும்" என்று ரேகா கூற,

"ம்ஹூம்" என்று ஒரு சேர கூறிய இருவரும் தந்தையை கெட்டியாக பிடித்து கொள்ள,

"அப்பா கோண்டுங்க ரெண்டு பேரும்" ரேகா கூற,

"ம்மா அவங்க இருக்கட்டும் நான் சாப்பிட வர்றேன்" என்று சிரிப்புடன் இருவரையும் தூக்கி கொண்டு சாப்பிட அமரந்தான்.

மற்றவர்களும் உணவுண்ண வர செல்வாவும் அவனை முறைத்தபடியே வந்து சாப்பிட அமர்ந்தாள்.

மனைவியின் கோபத்தை உணர்ந்தவனுக்கு இதழ்கடை சிரிப்பில் வளைந்தது.

வல்லபன் உண்டுவிட்டு பிள்ளைகளுடன் அறைக்கு செல்ல,

செல்வா பாலை காய்ச்சி பிள்ளைகளுக்கு எடுத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.

அங்கு இருவரையும் அமர வைத்து வல்லபன் ஏதோ கதையை சொல்லி கொண்டிருக்க அவர்கள் ஆவென வாயை திறந்து கேட்டு கொண்டிருந்தனர்.

செல்வா, "போதும் ஸ்டோரி டைம் ஓவர். பாலை குடிச்சிட்டு தூங்குங்க" என்று பால் தம்பளரை நீட்ட,

இருவரிடமும் சிறு அசைவு கூட இல்லை‌.

அதில் மனைவி கணவனை அதிகமாக முறைக்க,

வல்லபன் தான், "அம்மா கூப்பிட்றாங்க பாருங்க. பாலை குடிங்க அப்போதான் ஸ்டோரி கன்டினியூ பண்ணுவேன்" என்று கூறிட,

இருவரும் வேகமாக பாலுக்காக கையை நீட்ட மகளிடம் குவளையை கொடுத்தவள் மகனுக்கு தானே பாலை அருந்த செய்தவள் குவளையை வைத்துவிட்டு வர,

இருவரும் படுக்கையில் படுத்தபடி கதையை கேட்டு கொண்டிருந்தனர்.

மனையாள் இது இப்போதைக்கு முடியாது என்று நினைத்து பால்கனியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கால்களை கட்டி கொண்டு விழிமூடி அமர்ந்துவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து அருகில் அரவம் கேட்டது.

கணவன் தான் என்று உணர்ந்தாலும் விழிகளை திறக்கவில்லை.

அவன் நெருங்கி அமர்வதும் தெரிந்தது.

செவிக்கருகில் சூடான மூச்சுக்காற்று மோத,

"என்னவாம் என் ஜான்சிராணிக்கு?" என்று கிசுகிசுப்பாக வினவ,

சட்டென்று விழிகளை திறந்தவள் முறைப்புடன் பார்க்க,

அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தினான்.

'என்ன' என்பதாக சிரிப்புடன் புருவத்தை ஏற்றி இறக்க,

அதில் மயங்க துடித்த மனதிற்கு கடிவாளமிட்டவள் முகத்தினை பக்கவாட்டாக திருப்பி,

"செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு சிரிச்சே ஆள மயக்கிட வேண்டியது" என்று முணுமுணுத்தாள்.

"ஹே எது பேசுனாலும் சத்தமா பேசுடி" என்று அவளை சீண்ட,

"என்ன சொல்ல ரெண்டு பேரும் ரொம்ப சேட்டை பண்றாங்க. நீங்களாவது கண்டிப்பிங்கன்னு பார்த்தா நீங்களும் சப்போர்ட் பண்ணுறிங்க" என்று முறைக்க,

"ஹேய் சின்ன பசங்கடி. வளர வளர சரியாகிடுவாங்கடி" என்று சமாதானம் கூற,

அவள் இன்னும் முறைப்பை கைவிடவில்லை.

"உன் முகத்தை பார்த்தா இதுக்கு கோபப்பட்ற மாதிரி தெரியலையே என் பொண்ணு சொன்ன மாதிரி உன்னை கொஞ்சலைன்னு பொஸஸ்ஸீவ் ஆகுற மாதிரி இருக்கே" என்று வம்பிழுக்க,

இங்கு இவளது நாசி நுனி சிவப்பேற துவங்கியது.

சடுதியில் அவளை தன்னுடைய மடிக்கு மாற்றியவன்,

"உன்னையும் கொஞ்சிட்றேன்டி" என்றவனது தனது மீசையால் அவளது கன்னத்தினை உரச,

"ப்ச் ஒன்னும் வேணாம் போங்க" என்றவள் திமிற,

"ஹே நமக்கு கிடைக்கிறதே கொஞ்சம் நேரம் தான் அதையும் ஸ்பாயில் பண்ணாம கோவாப்ரேட் பண்ணுடி" என்றவனது இதழ்கள் அவளது கழுத்தடியில் புதைந்த நேரம்,

"ப்பா…" என்று மகன் சிணுங்கினான்‌.

அதில் சட்டென்று மனைவியிடமிருந்து பிரிந்தவன் எழுந்து சென்று மகனை தட்டிக் கொடுக்க,

இங்கு வல்லபனை கண்ட செல்வாவின் இதழ்களில் தான் புன்னகை தோன்றியது.

எல்லா இடங்களிலும் தாய் தான் ஓடி சென்று அனைத்தினயும் பார்த்த கொள்வாள். ஆனால் இங்கோ இவர் ஓடுகிறார் என்று நினைத்து புன்னகை.

காரணம் இங்கு இவளையும் சேர்த்து தாயாய் மடிதாங்குபவன் இவன் தானே என்ற எண்ணம் வர பார்வையில் ரசனை பூத்தது.

மகனை உறங்க வைத்துவிட்டு வந்தவன் மனைவியின் பார்வையை உணர்ந்து சிரிப்புடன்,

"என்ன மேடம் பொஸஸ்வீவா அதியோட சேர்த்து ரிஷிமேலயுமா?" என்று வேண்டுமென்றே கூற,

அந்த நாளின் பத்தாவது முறையாக அவ்வார்த்தையை கேட்டவள் கோபத்தின் உச்சிக்கே சென்று,

"எனக்கு தூக்கம் வருது" என்று எழுந்து செல்ல முனைய,

"ஹே ஸ்டார்ட் பண்ணதை கம்ப்ளீட் பண்ணிடணும்டி" என்றவன் அவளை கைகளில் தூக்கிக் கொள்ள,

"ப்ச் விடுங்க விடுங்க" என்று திமிறியவள் சிரித்து துள்ளி சிணுங்கி கிறங்கி மயங்கி அவனுள்ளே புதைந்து போனாள் வல்லபனின் செல்வ மீனாட்சி‌…








 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Wow wow semma ending💖💖💖 selva kojam possiveness thaa vallapan unnoda love la Aathi rishi mela possiveness happy ya Iruka 🤗🤗🥰💖💖
 
Active member
Messages
347
Reaction score
234
Points
43
Vallavan oda love avan oda seyal ah veli varuthu na selva oda love aval oda possessiveness la varuthu pasanga kooda poti.podra pa aana vallaban ku.selva mela ulla love than adi rishi rendu per mela yum anbu ah vandutuchi avanga rendu perum avanukku.selva moolama vandhavaga la chumma unconditional love apadiyae story full ah vae flow agiduthu
 
Top