• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 9

Member
Messages
37
Reaction score
2
Points
8
பொழுது விடியும் வேளை பறவைகள் ஒவ்வொன்றாக கீச் கீச் என சப்தம் எழுப்பி கொண்டு விடியலை வரவேற்று கொண்டு இருந்தன. அமுதா சமையல் செய்து கொண்டு இருந்தாள். தூக்கத்தில் இருந்து கண் விழித்த சக்தி தன் அம்மா அமுதாவிடம் சென்று,
"அம்மா...நாளைக்கு நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கண்காட்சிக்கு போகலாம்னு இருக்கோம்... போய்ட்டு வரட்டா...?"என கேட்கிறான்.
"என்ன கண்காட்சி...?"என அமுதா கேட்க,
"அறிவியல் கண்காட்சி அம்மா..."என கூறுகிறான்.
"சரி போய்ட்டு வா... யாரெல்லாம்..."என கேட்க,
"என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அம்மா..."என கூறுகிறான் சக்தி.
"சரி போய்ட்டு வா..."என அமுதா கூறிவிட்டு தன் வேலைகளை தொடர,
"இன்னும் மூணு நாள்ல ரம்யா கடத்தப்பட போறா....இவளை காப்பாத்தினால்தான் அம்மாவை காப்பாத்த முடியும்..."என மனதினுள் எண்ணியபடி தன் பள்ளிக்கு செல்ல ஆயத்தம் ஆகிறான் சக்தி.
பள்ளியில் வகுப்பு முடிந்ததும் சக்தி தன் நண்பர்களிடம் சென்று,
"நாளைக்கு நாம எல்லாரும் சேர்ந்து கண்காட்சி போலாமா..."என சக்தி கேட்க,
"சூப்பர்...யாரெல்லாம்..."என கோபிநாத் கேட்கிறான்.
"நீ...நான்...சந்தீப்... ஆஷா...ரம்யா..."என சக்தி கூற,
"ரம்யாவா..."என ஆஷா யோசித்து விட்டு,
"சரிடா அப்போ நீங்க போய்ட்டு வாங்க...நான் இன்னொரு நாள் வரேன்..."என ஆஷா கூறுகிறாள்.
"ஏன்..."என சக்தி கேட்க,
"அதெல்லாம் அப்படிதான்..."என சிரித்தவாறே கோபிநாத் கூறுகிறான்.
"சொல்லுங்க...என்னாச்சு..."என சக்தி கேட்க,
"நீ உன் ஆளு கூட போறே...நாங்க எதுக்கு கரடி மாதிரி...இன்னொரு நாள் வரோம்..."என கூறிவிட்டு தன் பையை எடுத்துவிட்டு கிளம்புகிறான் சந்தீப்.
"டேய்...நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல...அவ வெறும் பிரெண்ட் தான்..."என சக்தி கூற,
"அடுத்த தடவை நாங்க வரோம்..."சக்தியின் தோள்களை தட்டிவிட்டு செல்கிறாள் ஆஷா.
"இரு ஆஷா...நானும் வரேன் .."என அவர்களுடன் தன் புத்தக பையை எடுத்து விட்டு கிளம்புகிறான் கோபிநாத்.
"இந்த வயசுல என்னடா லவ்... காமெடி பண்ணிட்டு இருக்கீங்க..."என மனதினுள் எண்ணியவாறு நடந்து சென்று ரம்யாவுடன் சாலையில் நடந்து செல்கிறான்.
ரம்யாவை அவள் வீட்டில் விட்டதும்,"ரம்யா..."என சக்தி அழைக்க,
"என்ன சக்தி..."என ரம்யா திரும்ப,
"உங்க அம்மாவை கூப்பிடு...அவங்ககிட்ட நான் பேசணும்..."என சக்தி கூற,
"என்ன பேச போறே..."என சற்று பயத்துடன் ரம்யா கேட்க,
"நீ கூப்பிடு நான் பேசிக்கறேன்..."என சக்தி கூறுகிறான்.
"சரி இரு..."என கூறிவிட்டு ரம்யா செல்கிறாள்.
சிறிது நேரம் கழித்து ரம்யாவின் தாய் சீதா வருகிறாள்.
"என்ன வேணும்..."என சீதா கேட்க,
"நாளைக்கு நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் கண்காட்சி போறோம்... ரம்யாவை கூட்டிட்டு போக உங்ககிட்ட கேக்கலாம்னு கூப்பிட சொன்னேன்..."என சக்தி கூற,
"கண்காட்சியா...அதுக்கெல்லாம் அனுப்ப முடியாது..."என சீதா கூற,
"பிளீஸ்...அவளை இதுக்கு மட்டும் அனுப்புங்க..."என சக்தி கேட்க,
"சரி ஓகே நான் அனுப்பினாலும் அவ வரமட்டா..."என கூறிவிட்டு,
"உனக்கு கண்காட்சிக்கு போக ஆசையா..."என சீதா கேட்க,
"ஆமா எனக்கு போக ஆசைதான்.."என ரம்யா கூற,
"என்ன சொன்னே..."என உச்ச கோவத்தில் ரம்யாவை அடிக்க கையை ஓங்க,
சீதாவின் கைகளை ஒரு கை வந்து தடுக்கிறது. யார் என சீதா திரும்பி பார்க்க அது சக்தியின் தாய் அமுதா.
"தனி ஆளாக இருந்து குழந்தைய வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் தெரியும்...ஆனா நீங்க உங்க பொன்ன இப்படி நடத்தறது சரி இல்ல..."என அமுதா கூறுகிறாள்.
"இங்க பாருங்க இது எனக்கும் என் பொண்ணுக்கு உள்ள விஷயம் நாங்க பாத்துக்கறோம்.."என சீதா கூற,
"சரிதான் ஆனா ஒரு நியூஸ் ரிபோர்டரா நான் என்னோட வேலையை செஞ்சா நீங்க ஜெயில இருப்பீங்க...பசங்க கண்காட்சிதானே போறோம்னு சொல்றாங்க..அது அவங்க படிப்புக்கு கூட உதவும்...பேசாம அவளை அனுப்புங்க..."என அமுதா கூற,
சீதா சிறிது யோசித்து விட்டு வேறு வழியின்றி, "சரி போய்ட்டு வா.."என கூறிவிட்டு சிடுசிடுவென வீட்டினுள் நுழைகிறார் சீதா.

(டிக்...டிக்...டிக்...)
 
Top