• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 8

Member
Messages
37
Reaction score
2
Points
8
மதிய உணவு இடைவேளை என்பதால் மாணவர்கள் தன் உணவுகளை உண்டு முடித்து விட்டு வகுப்பு ஆரம்பிக்கும் வேளையில் தத்தம் இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர் விஜய் வகுப்பின் உள்ளே வந்து,
"சக்தி நம்ம ஸ்கூல் ஆண்டு விழா வருது...அதுக்கு எல்லாரையும் ஆளுக்கு பத்து ரூபாய் வீட்டுல வாங்கிட்டு வர சொன்னோம்...அதை நீ கலெக்ட் பண்ணி வை...நான் டீச்சர்ஸ் மீட்டிங் போய்ட்டு வரேன்..."என விஜய் கூறிவிட்டு ஆசிரியர் அந்த வகுப்பறையை விட்டு வெளியே செல்கிறார்.
ஆசிரியர் விஜய் வெளியே சென்றதும் சக்தி அனைவரின் காசை வாங்கி தன் பையில் வைத்து கொள்கிறான். வைத்து விட்டு எழுந்து சென்று கோபிநாத் மற்றும் சந்தீப் பக்கம் சென்று அவர்களுடன் விளையாண்டு கொண்டு இருக்கிறான். அப்பொழுது ஆசிரியர் விஜய் அங்கு வந்துவிட அனைவரும் அமைதியாக தத்தம் இடத்தில் அமர்கின்றனர்.
"சக்தி... காசு கலெக்ட் பண்ணிட்டியா....எடுத்துட்டு வா..."என விஜய் கூற,
சக்தி தன் கைகளை பைக்குள் விட்டு எடுக்க முயற்சிக்கிறான்.ஆனால் அவன் வாங்கி வைத்த பணம் அங்கு இல்லை.
"என்னாச்சு சக்தி..."என விஜய் கேட்க,
"சார்...காசு எல்லாம் வாங்கி பைக்குள் போட்டேன்....ஆனா இப்போ காணல..."என பைக்குள் கையை விட்டு தேடியபடி கூறுகிறான்.
"உன் பைல தேடினா எப்படி இருக்கும்...ரம்யா பைக்குள்ள தேடுங்க...அங்க இருக்கும்"என பக்கத்தில் அமர்ந்து இருந்த குமுதா கூறுகிறாள்.
"என்னது..."என சக்தி அவளை பார்க்க,
"ஆமா...அவதான் எடுத்து இருக்கணும்....நம்ம எல்லாருக்கும் தெரியும்...அவ வீட்டுல அவளுக்கு யாரும் அக்கறை காட்டமாட்டாங்க...அதுனால கூட எடுத்து வைச்சு இருப்பா..."என குமுதா ரம்யாவை பார்த்து கூற,
"நான் ஒன்னும் எடுக்கல..."என ரம்யா கூற,
"சரி அப்போ பைய குடு....நாங்க பார்த்து சொல்றோம்..."என குமுதா கூற,
"இங்க என்ன நடக்குது..."என விஜய் கோபத்துடன் கேட்கிறார்.
ரம்யா தன் பைக்குள் கைவிட்டு பார்க்க அதற்குள் பணம் இருப்பதை பார்க்கிறாள் ரம்யா. "இங்குதான் இருக்கு..."என ரம்யா அந்த பணத்தை எடுத்து பார்த்தபடி சொல்கிறாள்.
"நான் சொல்லல....இவதான் எடுத்து இருப்பான்னு..."என குமுதா கூற,
"அவ ஒன்னும் எடுத்து இருக்கமாட்டா..."என சக்தி குமுதாவை பார்த்து கூறுகிறான்.
"போதும் நிறுத்துங்க ...அதுதான் பணம் கிடைசிருச்சில்ல...சக்தி அந்த பணத்தை வாங்கிட்டு வந்து குடு..."என பெருமூச்சுடன் விஜய் கூறுகிறார்.
சக்தி அந்த பணத்தை எடுத்து கொண்டு விஜய்யிடம் ஒப்படைக்கிறான். அன்று பள்ளி முடிந்தவுடன் ஆசிரியர் விஜய்யும் சந்தீப்பும் ஸ்டாப் ரூமில் நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
"அந்த நாள் வர போகுது சார்..."என சந்தீப் கூற,
"எனக்கு தெரியும் சந்தீப்..."என ஆசிரியர் விஜய் கூறுகிறார்.
சக்தியும் ரம்யாவும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.
"ரொம்ப தேங்க்ஸ்..."என ரம்யா கூற,
"எதுக்கு..."என ரம்யாவை பார்த்து சக்தி கேட்கிறான்.
"இல்லை முன்னாடி எனக்கு support பண்ணதுக்கு..."என ரம்யா கூறுகிறாள்.
"இதுல என்ன இருக்கு...நாம பிரெண்ட்ஸ்ல..."என சக்தி கூற,
"எனக்கும் அவளுக்கும் ஆகாது..."என ரம்யா கூறுகிறாள்.
"ஆமா கேட்கணும்னு நினைச்சேன்....உங்களுக்குள்ள என்னதான் சண்டை...."என சக்தி அவளை பார்த்து கேட்க,
"அது எல்லாம் ஆரம்பிச்சது நாம நாலாவது படிக்கும் பொழுதுதான்..."என கூறியவாறு சக்தியை பார்க்க,
"அப்படி என்ன ஆச்சு..."என கேட்டவாறு ரம்யாவின் முகத்தை பார்க்கிறான் சக்தி.
"அவ நாலாவது படிக்கும் பொழுது ஒரு micro பென்சில் வாங்கிட்டு வந்து என்கிட்ட காட்டிட்டு இருந்தா....நான் என்னோட பென்சிலை எடுத்து காட்டினேன்...அது வெறும் பாதி பென்சில்தான்...அதுல ரப்பர் சுத்தி வைச்சு இருந்தேன்...அதை வெச்சு என்னை பேசிட்டு இருந்தா...எனக்கு அது புடிக்கல...அதுனால அவளோட அந்த மைக்ரோ பென்சிலை எடுத்து வீசிட்டேன் செடிக்குள்ள...ஆனா அந்த பென்சிலை கண்டுபிடிக்க முடியல....அதுனால அவளுக்கும் எனக்கும் ஆகாது..."என கூறிவிட்டு சக்தியின் முகத்தை பார்க்கிறாள் ரம்யா.
"அப்படியா..."என கூறிவிட்டு திரும்பி நடக்கிறான் சக்தி.
"இதெல்லாம் ஒரு கதை...இதுக்கெல்லாம் பழிவாங்கறாங்க...சின்ன பசங்கன்னு சொல்லறது சரியாத்தான் இருக்கு...அட நானும் இப்ப சின்ன பையன்தான..."என மனதினுள் எண்ணியவாறு நடந்து செல்கிறான் சக்தி. ரம்யாவை அவளின் வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான் சக்தி.
"இந்த வாரம் வார இறுதி வர போகுது ..இவ வீட்டுல இருக்கறதும் இவளுக்கு ஆபத்துதான் போல...எதாச்சும் பண்ணனும்..."என எண்ணி கொண்டே தன் வீட்டிற்கு நடந்து போகிறான் சக்தி.

(டிக்....டிக்...டிக்...)
 
Top