• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 7

Member
Messages
37
Reaction score
2
Points
8
ரம்யாவை காயங்களுடன் கண்ட சக்தி அதிர்ந்து போய் நின்று கொண்டு இருக்கிறான். சக்தியின் பின்னே நிழல் ஆடுவது போன்ற உணர்வு. சக்தி திரும்பி பார்க்க அங்கே ஒரு பெண் நின்று கொண்டு இருக்கிறாள்.
"யார் நீங்க...?"என சக்தி எச்சிலை விழுங்கியவாறு கேட்கிறான்.
"அதை நான் கேக்கணும்...நீ யாரு...இது என் வீடு..."என அவள் கூற,
"அப்போ நீங்க ரம்யாவோட...."
"அம்மா..."என கூறுகிறாள் அந்த பெண்.
"உங்க பொண்ணுக்கு என்னாச்சு..."என சக்தி கேட்க,
"அவ விளையாடும் பொழுது கீழ விழுந்துட்டா... அப்படிதானே..."என பேசி கொண்டே ரம்யாவின் உடலின் மீது தன் காலை வைத்து லேசாக எத்துகிறாள்.
"பொய் சொல்லாதீங்க..."என சக்தி சற்று கோபத்துடன் கேட்க,
"நான் ஒன்னும் பொய் சொல்லல...குட்டி பையா... வேணும் னா அவகிட்டே கேளு..."என கூறி கொண்டே கீழே படுத்து இருக்கும் ரம்யாவின் முடியை பிடித்து தூக்குகிறாள்.
"சொல்லு ரம்யா..."என அவளின் தாய் சீதா கூற,
"எனக்கு ஒன்னும் ஆகலை....நான் விளையாடும் பொழுது கீழ விழுந்துட்டேன்..."என ரம்யா பேச கூட முடியாதது போல கஷ்டப்பட்டு பேசுகிறாள்.
"நிஜமா ஒன்னும் இல்லையா..."என தன் கைகளை முறுக்கியவாறு சக்தி கேட்க,
"அதுதான் சொல்றால்ல...நீ எங்க வீட்டுக்கு எகிறி குதிச்சு வந்ததே தப்பு...மொதல்ல நீ இங்க இருந்து கிளம்பு..."என சீதா கூற,
"உன்னை காப்பாத்துவேன் ரம்யா..."என ரம்யாவிடம் கூறிவிட்டு அங்கு இருந்து கிளம்புகிறான் சக்தி.
"ஒரு வேளை இவங்கதான் அந்த கொலையாளியா இருக்குமோ..."என மனதினுள் எண்ணியவாறு அந்த வீட்டை விட்டு கிளம்புகிறான் சக்தி.
"அச்சச்சோ...என்ன என் பொண்ணுக்கு வலிக்குதா...வீக்கம் வராம இருக்க ஐஸ் வைக்கணும்ல...உள்ள வா வைக்கறேன்..."என கூறி கொண்டு ரம்யாவின் கைகளை பிடித்து இழுத்து கொண்டே வீட்டின் உள்ளே செல்கிறாள் சீதா.
ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் ஐஸ் கட்டிகளை போட்டு ரம்யாவின் தலையை அந்த குளிர் நீர் நிரம்பிய பாத்திரத்தில் விட்டு அமுக்குகிறாள் சீதா. மூச்சு விட முடியாமல் துடித்து போகிறாள் ரம்யா.
"இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல...என் அம்மா எப்போவும் இப்படித்தான் என்னை டார்ச்சர் பண்ணறதுதான் அவங்களுக்கு பொழுது போக்கு... மத்தவங்க மேல காட்ட முடியாத கோவத்தை என்மேல காட்டறாங்க..."என மனதினுள் எண்ணியவாறு மூச்சு விட போராடுகிறாள் ரம்யா.
ரம்யாவின் தலையை விட ரம்யா தலையை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுத்து சுவாசிக்க ஆரம்பிக்கிறாள். கண்களில் கண்ணீர் வடிய தன் நிலையை எண்ணி வருந்தியபடி அந்த குழந்தை கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது. அவர்கள் வீடே வீடு போல் இல்லாமல் ஆங்காங்கே கழுவாத பாத்திரங்களும் பெருக்காத தரையுமாக இருந்தது.
"உங்க அப்பா போனதும் நான் நிம்மதியா இருந்தேன்...ஆனா எனக்கு தொல்லையா இப்போ நீதான் இருக்கே...நீயெல்லாம் எதுக்கு பொறந்தே..."என ரம்யாவை பார்த்து கத்துகிறாள் சீதா.
"நீங்க எதுக்கு பெத்தீங்க..."என வாய் கேட்க தோன்றினாலும் அவளின் உடல் ஒத்துழைக்க மறுக்க, அவளால் வாயை திறந்து பேச இயலவில்லை.
மறுநாள் காலை வழக்கம் போல் சக்தி தன் பள்ளிக்கு சென்று ரம்யா இன்று வந்து இருக்கிறாளா என பார்க்க, அவள் பள்ளியில் இல்லை. அவளுக்கு என்ன ஆயிற்று என சிந்தித்து கொண்டே தன் இடத்தில் அமர்கிறான் சக்தி. சிறிது நேரம் கழித்து ரம்யா தாமதமாக வர,
"லேட்டா...போய் உட்க்காரு..."என ஆசிரியர் விஜய் கூற, அமர வந்த ரம்யாவின் கை கால்களில் காயங்கள் இருப்பதை ஆசிரியர் விஜய் கவனிக்கிறார். ஆசிரியர் விஜய் பார்ப்பதை சக்தி பார்க்கிறான். பள்ளி இடைவேளையில் ஆசிரியர் விஜய்யை ஸ்டாப் ரூமில் பார்க்கிறான் சக்தி.
"சார்...நேத்து நான் ரம்யா வீட்டுக்கு போனேன்...அங்க அவங்க அம்மா அவளை சித்ரவதை பண்றாங்க... விட்டா அவளை அவங்களே கொண்ணிருவாங்க போல..."என சக்தி கூற,
"இதை நீ இப்போதான் சக்தி பார்க்கற...நான் அவளோட காயங்களை எப்பவோ பார்த்துட்டேன்...அவளை அவங்க அம்மா டார்ச்சர் பன்றாங்கன்னு யூகிச்சு child help lineக்கு ஃபோன் பண்ணேன்...ஆனா அவங்க அம்மாவுக்கு அது சம்மந்தப்பட்ட ஆபீசர் call பண்ணும் பொழுது அவங்க சரியா response பண்ணல சொல்றாங்க..நானும் அவங்கள நேரில் பார்க்க முயற்சி பண்ணேன் ஆனால் அவங்க தப்பிச்சிட்டாங்க... ஆனா அவங்ககிட்ட இருந்து அவளை காப்பாத்த ஒரே வழி அவ அம்மாவை child help line ல புடிச்சு குடுக்கணும்...."என விஜய் கூற,
"சரி சார்...."என கூறிவிட்டு, "அவளை எப்படியாச்சும் காப்பத்தனும் " மனதினுள் எண்ணியவாறு அங்கிருந்து கிளம்புகிறான் சக்தி.


(டிக்....டிக்....டிக்....)
 
Top