• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 6

Member
Messages
37
Reaction score
2
Points
8
கதிரவன் தன் வேலையை முடித்து கொண்டு நிலாவிடம் வானை ஒப்படைக்கும் நேரம் மாலை ஆறு மணி சக்தி பள்ளியை முடித்து விட்டு ரம்யாவை பார்க்க ரம்யா அங்கு இல்லை. ரம்யாவை தேடி கொண்டு வழக்கமாக சந்திக்கும் பூங்காவின் உள்ளே நுழைந்து ரம்யாவை தேடி கொண்டு இருக்கிறான். ஆனால் ரம்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
"இவ வேற எங்க போய்ட்டா தெரியலயே...ஒரு வேளை கடத்தி இருப்பாங்களா....இல்ல அவ கடத்த பட வேண்டிய நாள் இன்னும் இருக்கே..."என பதட்டத்துடன் தேட,
"சக்தி....இங்க என்ன பண்ற...."என குரல் வந்த திசையை நோக்கி பார்க்கிறான் சக்தி.
"இங்க வா..."என அழைத்தவாறு சக்தியை பார்க்கிறான் கவின்.
"இவரா....இவர் என்ன இங்க பண்றார்... இவர்தான் வருங்காலத்தில் குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் கொலையாளின்னு கைது பண்ணாங்க..."என மனதினுள் நினைத்தவாறே கவின் அருகே செல்கிறான் சக்தி.
"ஒன்னும் இல்ல அண்ணா என் பிரெண்ட்ஸ் தேடி இங்க வந்தேன்..."என சக்தி கூற,
"அதுக்குன்னு இந்த நேரம்தான் வருவியா...நம்ம ஊரு முன்ன மாதிரி இல்ல... தெரியுமா..."என பேசியவாறு சக்தியின் சிறு கைகளை பிடிக்கிறான் கவின்.
"வா என் வீட்டுக்கு...உங்க அம்மா வந்ததும் உன்னை அவங்ககிட்ட விடறேன்..."என கவின் கூற,
"ஒரு வேளை இவர்தான் கொலைகளை செய்ய போறதா...இந்த நேரத்தில் இவர் இங்க என்ன பண்றார்...ஒருவேளை இவர் கொலை செய்ய போறது இல்லையா...இவர் சும்மாதான் இங்க வந்து இருப்பாரோ... இவர் நம்ம மேல காட்டறது உண்மையான அன்பா...இல்ல அவர் கடத்த போற குழந்தை லிஸ்ட்ல நானும் ஒருத்தனா...."என எண்ணியவாறு,
"சரி அண்ணா வாங்க போலாம்..."என சக்தி கூறுகிறான்.
"இவர் உண்மையா கொலையாளியா இல்லையான்னு நாம போய் பார்த்துப்போம்...ஒருவேளை இவர் கொலையாளி இருந்ததா எதாச்சும் தப்பா இருக்கும்...நாம உஷார் ஆகி தப்பிக்கலாம்.... இல்லேனா இவரையும் வருங்காலத்தில் சிறைக்கு செல்லாமல் காப்பாத்தலாம்..."என எண்ணியவாறு கவினுடம் சேர்ந்து கவின் வீட்டிற்கு செல்கிறான் சக்தி.
கவினும் சக்தியும் வீட்டிற்கு சென்றதும் கவினின் வீட்டில் ஏதேனும் சந்தேகிக்கும் படி இருக்கிறதா என சக்தி சுற்றும் முற்றும் பார்க்க அப்பொழுது கவினின் அறையில் ஒரு ஆபாச புத்தகம் இருப்பதை சக்தி பார்க்கிறான். அப்பொழுதுதான் சக்திக்கு நினைவுக்கு வந்தது. கவினை போலீஸ் கைது செய்யும் பொழுது அவன் அறையில் ஆபாச புத்தகங்கள் இருப்பதை ஒரு ஆதாரமாக போலீஸ் எடுத்தனர். குழந்தைகளை ஆபாசமாக பார்ப்பதாக மற்றும் கடத்தி கொலை செய்வதாக குற்றம் கூறி அவனை கைது செய்தது நினைவுக்கு வந்தது. சக்தி அந்த ஆபாச புத்தகங்களை பார்ப்பதை கவின் பார்க்க கவின் பதறி அந்த புத்தகங்களின் மேல் துண்டை போட்டு மறைத்து,
"அப்புறம்....யாரு அந்த பிரெண்ட்...?"என கவின் சக்தியின் கவனத்தை திருப்புவதை சக்தியால் உணர முடிந்தது.
"அது எங்க கிளாஸ் பொண்ணு..."என கூற,
"எப்படி இருக்கும்.."என கவின் கேட்க,
"கொஞ்சம் ஒல்லியா....வெள்ளையா....அழகா இருக்கும்... வட்ட வடிவ முகம் அண்ணா..."என சக்தி கூறுகிறான்.
"இன்னிக்கு பூ வெச்சிட்டு வந்திருந்தாளா..."என கவின் கேட்க,
"ஆமாம் அண்ணா..."என சக்தி கூற,
"அவளை நான் பார்த்தேன்...உங்க வீட்டுக்கு போற வழில பார்த்தேன்..."என கவின் கூறுகிறான்.
"அவளை நான் பார்க்க போகனும் அண்ணா..."என சக்தி கூற,
"நானும் வரேன்...நீ தனியா போகாத.."என கவின் கூற,
"இதுலயே தெரியுது அண்ணா...நீ அந்த கொலையாளி இல்லை என்று...நான் பார்க்க கூடாதுன்னு அந்த புத்தகத்தை மறைந்து வைக்கறது...என்னை தனியா விடாதது..."என மனதினுள் எண்ணி கொண்டே,
"இல்ல அண்ணா....நான் போயிக்கிறேன்..."என விடை பெற்று கொண்டு சக்தி கவினின் வீட்டை விட்டு கிளம்புகிறான்.
சக்தி வேகமாக ரம்யா வீட்டிற்கு செல்கிறான். "நம்ம வீடு போற பக்கம்னா அவ வீடுதான்...அவ ஒழுங்கா வீட்டுக்கு போயிட்டாளான்னு பார்த்துட்டே வந்திருவோம்..."என மனதினுள் ஓட, அவன் கால்கள் சாலையில் ஓடியது.
சக்தி ரம்யாவின் வீட்டை அடைந்து ரம்யாவின் வீட்டின் முன் நின்று கொண்டு அவளின் பெயரை சொல்லி அழைக்கிறான். பதில் எதுவும் வரவில்லை.பயத்தில் சக்தி அவளின் வீட்டின் மதில் ஏறி குதித்து வீட்டின் பின்புறம் சென்று பார்க்கிறான்.அங்கு நாய் அடைக்கும் ஒரு பழைய அறை இருக்கிறது. ஆனால் அந்த அறையில் நாய் இருப்பதற்கான அறிகுறி இல்லை.
"நாய் இருந்து இருந்தால் இந்நேரம் நாம வந்ததும் குழைத்து இருக்கும்..."என எண்ணி கொண்டே அந்த நாய் அறையின் கதவை திறக்க, அந்த அறையில் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் சக்தி.
அங்கு அவன் கண்ட காட்சி அவன் விழியில் உள்ள விழிபாவையை விரிவடைய செய்தது. உடம்பெல்லாம் இரத்த காயங்களுடன் மேலும் பழைய காயங்களின் தழும்புகளுடன் ரம்யா அங்கு சோர்வாக படுத்து இருந்தாள். சக்தி அவள் அருகே சென்று அவளை பார்க்க, அவனை பார்க்க கூட முடியாமல் பேச கூட முடியாமல் மூச்சு மட்டும் விட்டு கொண்டு இருந்தாள் ரம்யா. அப்பொழுது சக்தியின் பின்னால் யாரோ நின்று கொண்டு இருப்பதை சக்தி உணர்கிறான். பயத்தில் சக்தி மெதுவாக தன் தலையை திருப்புகிறான்.
"நம் பின்னால் நிற்பது கொலையாளியா...."என எண்ணி கொண்டே திரும்புகிறான்.


(டிக்....டிக்.....டிக்.....)
 
Top