• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 5

Member
Messages
37
Reaction score
2
Points
8
காலை கதிரவன் மேகங்களை விலக்கி தன் முகத்தை காட்டி பூக்களின் மேல் உள்ள பனிதுளிகளை கரைத்து கொண்டு இருந்தது. சக்தி தன் பள்ளிக்கு செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான்.
"சக்தி....சாப்பாடு ரெடி ஆகிருச்சு...சீக்கிரம் சாப்பிட்டு விட்டு ஸ்கூல்க்கு கிளம்பு..."என அமுதா கூற,
"யாருமில்லாத தனி தீவில் நான் மட்டும் தனியா இருக்கணும்...துன்பம்... வலி...என்னுடைய நண்பர்கள்...என்னுடைய அம்மா...யாருமே இல்லாத தீவில் நான் இருக்கணும்...எனக்கு தேவை எல்லாம் இந்த இடத்தை விட்டு போகனும்..." என ரம்யா எழுதியிருந்தது சாப்பிட்டு கொண்டு இருந்த அவன் மனதை என்னவோ செய்தது.
"அம்மா..."என சாப்பிட்டு கொண்டே சக்தி அழைக்க,
"என்னடா..."என அமுதா குரல் கொடுக்கிறாள்.
"என்னோட birthday அடுத்த வாரம் வருதுல...அதுக்கு என் ஃப்ரெண்ட்ஸ நம்ம வீட்டுக்கு கூப்பிடவா..."என சக்தி கேட்க,
"கூப்பிட்டுக்கோ...எப்போ இருந்து நீ பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்ச..."என அமுதா கேட்க,
"அதெல்லாம் ஒன்னும் இல்ல...நான் எப்போவுமே அப்படிதான்..."என அமுதா தன்னை பற்றி கண்டுபிடித்துவிடுவாளோ என பயத்தில் கூறுகிறான்.
"எத்தன பேர் வருவாங்க..."என அமுதா கேட்க,
"நாலு பேர் வருவாங்க அம்மா..."என சக்தி கூறுகிறான்.
"ரம்யா கூட பிரெண்ட் ஆனா நாம அவளை பத்தி நல்லா தெரிஞ்சுக்கலாம்... அவளை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியும்...நம்மளால நம்ம வருகாலத்தை மாத்த முடியும்...அப்போ நம்ம அம்மாவை காப்பாத்தலாம்..."என மனதினுள் எண்ணியவாறு வகுப்பிற்கு செல்கிறான் சக்தி.
வகுப்பு முடிந்ததும் சக்தி ரம்யாவை தேடுகிறான்.ஆனால் அவள் அங்கு இல்லை.அவள் ஏற்கனவே வகுப்பில் இருந்து வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் என்பது புரிய சக்திக்கு தன் கனவு நினைவு வருகிறது.அவள் பூங்காவில் நின்று கொண்டு இருந்த கனவு. உடனே சக்தி அவள் அங்குதான் இருக்க வேண்டும் என எண்ணியவாறு வேகமாக ஓடி பூங்காவின் உள்ளே ஓடுகிறான். அங்கு கனவில் பார்த்தபடியே ரம்யா சிவப்பு நிற உடையில் நிற்கிறாள். அவள் அருகே சென்ற சக்தி,
"இங்க என்ன பண்ற.."என கேட்க,
"ஒன்னும் இல்ல சும்மாதான்..."என ரம்யா கூற,
"எனக்கு உன்கூட பிரெண்ட்ஸ இருக்கணும்...என் birthday அன்னிக்கு என் வீட்டுக்கு வரியா...நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வர்றாங்க..."என சக்தி கூற,
ரம்யா சிறிது யோசித்து விட்டு"சரி சக்தி வர்றேன்..."என கூறுகிறாள்.
ரம்யாவை நடந்து சென்று அவள் வீட்டில் விட்டுவிட்டு சக்தி நடந்து தன் வீட்டிற்கு நடந்து செல்கிறான்.
"மழை பெய்து முடிஞ்ச பின்னால்தான் ரம்யாவின் இறந்த உடல் கண்டுபிடிச்சு இருக்காங்க வருங்காலத்தில்... அப்போ அவங்க அம்மா சொன்னது அவ பிறந்த நாள் ஒரு நாள் முன்னாடி அவளை கடத்தி இருக்காங்க...அப்படின்னு...அப்போ கண்டிப்பா இந்த டிசம்பர் தான்... ஆனா நாள்தான் தெரியல...அவ பிறந்த நாள்தான் எப்போனு தெரியல....ஆனா அதை எப்படியாச்சும் கண்டுபிடிக்கனும்..."என தன் மனதினுள் எண்ணியவாறு சக்தி நடந்து செல்கின்றான்.
மறுநாள் சக்தி தன் பள்ளியில் விளையாண்டு கொண்டு இருக்கிறான். அந்த பள்ளியின் ஆண்டு விழா வருகிறது என்பதால் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமைகளை காட்டி கொண்டு இருக்கிறார்கள். சக்தி ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்கிறான். போட்டி ஆரம்பிக்க அனைவரும் ஓடுகிறார்கள். சக்தி தன் வேகத்தை கூட்டி முன்னே ஓடி கொண்டு இருக்கும் சிவாவை முந்த ,"நாம வருங்காலத்தை மாத்தணும்..."என நினைவுக்கு வர, மெதுவாக ஓடி சிவாவை வெற்றி பெற வைக்கிறான்.இதை சந்தீப் பார்த்து விடுகிறான்.
"எதுக்கு என்னை ஜெயிக்க வச்சே..."என சிவா சற்று கோபத்துடன் சக்தியை நோக்கி வர,
"நான் ஒன்னும் உன்னை ஜெயிக்க வைக்கல...நீ நல்லா ஓடுனே நீ ஜெயிச்ச..."என சக்தி பொய்யுரைக்க,
"பொய் சொல்லாத..."என சிவா சக்தியை நோக்கி அடிக்க வருகிறான். அவனை சிவா அடிக்க வர அவனை பிடித்து கட்டுப்படுத்துகிறான் சந்தீப்.
அப்பொழுதுதான் சக்திக்கு தன் பழைய நினைவுகள் மீண்டும் வர, பழைய நினைவுகளில் கூட சக்தி சிவாவிற்கு விட்டு கொடுத்து இருப்பது நினைவுக்கு வருகிறது.
"அப்போ....அப்போ....நான் எதையும் மாத்தல... அப்படியேதான் இருக்கு...."என அதிர்ச்சியுடன் மனதினுள் எண்ணியவாறு நிமிர்ந்து ரம்யாவை பார்க்க அவளும் இவனை பார்க்கிறாள்.
அன்று மாலை பள்ளி முடிய, வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்த ரம்யாவை பார்த்து,
"உன் பிறந்த நாள் எப்போ..."என சக்தி கேட்க,
"எதுக்கு...அது எனக்கு பிடிக்காத நாள் அதை பத்தி என்கிட்ட கேட்காத..."என ரம்யா கூறிவிட்டு செல்கிறாள்.
அவள் செல்வதை பார்த்த சக்தி, "வேறு வழி இல்லை..."என மனதினுள் எண்ணியவாறு staff ரூம் செல்கிறான். அங்கு தன் வகுப்பாசிரியர் விஜய்யை பார்க்கிறான்.
"சார்..."என சக்தி அழைக்க,
"என்ன சக்தி...வீட்டுக்கு போகலையா..."என விஜய் கேட்கிறார்.
"ரம்யா பிறந்த நாள் எப்போன்னு அவகிட்ட கேட்டேன் அவ சொல்லல... அதான் உங்ககிட்ட கேட்டா தெரியும்னு வந்தேன்..."என சக்தி கூற,
"அவ பிறந்த நாளா....இரு..... ஆங்... டிசம்பர் 12..."என தன் வருகை பதிவேட்டை பார்த்து விஜய் கூறுகிறார்.
"தாங்க்ஸ்...சார்...."என கூறிவிட்டு விடைபெற்று செல்கிறான் சக்தி.
"அவளுக்கும் எனக்கும் ஒரே நாள்ல பிறந்த நாள் வருது..அப்போ அவ கடத்த பட்ட நாள் டிசம்பர் 11...அது வர இன்னும் ஒரு வாரம் இருக்கு...இப்போ அவ கடத்தபடாம அவளை காப்பாத்தினோம் என்றால் அந்த கொலையாளியை அவனோட முதல் குறில இருந்து விலக்கலாம்.... அம்மாவை வருங்காலத்தில் கப்பாத்தலாம்..."என எண்ணியவாறு நடந்து செல்கிறான் சக்தி.

(டிக்......டிக்..... டிக்.....)
 
Top