• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 4

Member
Messages
37
Reaction score
2
Points
8
காலை சூரியன் தன் தலையை காட்டி கொண்டு இருக்க சின்னஞ்சிறு குருவிகள் சூரியன் வருவதை வரவேற்றன. சக்தி தன் பள்ளிக்கு மறுநாள் நடந்து சென்று வகுப்பில் அமர்கிறான்.
"Future ல அம்மாவ கொன்ன கொலையாளி முதல்ல கடத்தி கொல்ல போற குழந்தை ரம்யாதான்...அந்த கடத்தலை எப்படி தடுத்து நிறுத்துவது...நாம பெரிய பையனா இருந்தா கூட பரவா இல்லை...நாம இப்போ இறந்த காலத்துல இருக்க குட்டி பையனா இருக்கோம்...என்ன பண்றது..."என அமர்ந்த படி சக்தி சிந்தித்து கொண்டிருக்க,
"என்னடா யோசிச்சுட்டு இருக்கே...."என அவன் அருகில் வருகிறான் சந்தீப்.
"ஒன்னும் இல்லைடா..."என சந்தீபின் முகத்தை பார்க்கிறான் சக்தி.
சக்தி பள்ளியில் படிக்கும் பொழுது சக்தி, சந்தீப், கோபிநாத் மற்றும் ஆஷா நான்கு பேரும் நல்ல நண்பர்கள் என்பது சக்திக்கு நினைவு வர,
"ஆஷா எங்க..."என சக்தி கேட்கிறான்.
"அவ இன்னும் வரல..."என கோபிநாத் கூறுகிறான்.
"இவர்கள் இப்போ நண்பர்களா இருந்தாலும் இதை பத்தி சொல்லி அவங்கள பயமுறுத்த வேணாம்..."என மனதிற்குள் எண்ணி கொண்டு சக்தி ரம்யாவை பார்க்கிறான். அப்பொழுது ரம்யாவின் காலில் காயங்கள் மற்றும் தழும்புகள் இருப்பதை பார்க்கிறான் சக்தி.
பள்ளி முடிந்ததும் சக்தி நேரே ரம்யாவின் பக்கம் சென்று, "நானும் உங்க வீட்டு வழியாதான் போறேன்...நாம ஒன்னா போலாமா..."என சக்தி கேட்கிறான்.
"நாம இப்போ சின்ன பையனா இருக்கோம்... கொலையாளி இவளை பின்தொடர்ந்து வந்தா கத்தி பக்கத்துல இருக்கவங்களை கூப்பிடலாம்..."என எண்ணி கொண்டு அவளை பார்க்க,
"சரி..."என ரம்யா கூற, அவர்கள் இருவரும் அவர்கள் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்.சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே நடக்கிறான் சக்தி.
"இப்போ இவளை கடத்த போறது இல்லை...இவள் கடத்தப்பட்ட நாள் வர இன்னும் ஒரு வாரம் இருக்கு...அதுக்குள்ள இவகூட ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டா நாம இவ கூட நடந்து வரலாம்...அந்த கொலையாளி இவளை கடத்த வேவு பார்க்க வருவான்...கூட நானும் இருப்பதை பார்ப்பான்....தக்க சமயத்துக்கு காத்திருப்பான்...அதுக்குள்ள இவளை காப்பாத்த நான் ஏதாச்சும் பண்ணனும்..."என சிந்தித்து கொண்டே நடக்க,
"எங்க வீடு வந்திருச்சு நான் போறேன்..."என ரம்யா பிரிந்து செல்ல,
"இனி தினமும் நாம ஒன்னா நடந்து போலாமா..."என கேட்கிறான் சக்தி.
"என்கூட ஏன் ஃப்ரெண்ட்ஸ் ஆகனும்னு நினைக்கறே...பரவா இல்லை...ஒன்னா நடந்து வரலாம்..."என ரம்யா கூற,
"சரி..."என கூறிவிட்டு ரம்யா அவளின் வீட்டிற்குள் செல்லும் வரை பார்த்து விட்டு தன் வீட்டை நோக்கி நடக்கிறான் சக்தி.
மறுநாள் பள்ளியில் சக்தி ரம்யாவை பார்க்க அவள் கால்களில் உள்ள காயங்கள் ஆறாமல் அதன் மேல் தன் துணியை போட்டு மறைத்து இருப்பதை கவனிக்கிறான்.
"டேய்...உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா...."என குரல் வந்த திசையை நோக்கி பார்க்கிறான் சக்தி.
"என்ன கேக்கணும்..."என சக்தி சந்தீப்பிடம் கேட்க,
"நீ ஏண்டா ரம்யா கூட பிரெண்ட்ஸ் ஆகனும்னு இருக்கே...அப்படி ஆகனும்னாலும் எதுக்கு இவ்ளோ அவசரம்...உனக்கு எதாச்சும் பிரச்சினையா... எதுவா இருந்தாலும் சொல்லு..."என சந்தீப் கேட்க,
"என்ன இவன் maturity ஆ பேசறான்...அட ஆமா சந்தீப் நார்மலா Matured ஆ இருப்பான்..."என மனதினுள் எண்ணியவாறு "ஒன்னும் இல்ல...நான் நல்லாதான் இருக்கேன்..."என கூறுகிறான் சக்தி.
"சரி...இப்போ நீ staff room போ...அங்க நமக்கு எழுத குடுத்த கட்டுரை இருக்கு...அதுல ரம்யா எழுதுன கட்டுரை எடுத்து பாரு..."என கூறிவிட்டு நகர்கிறான் சந்தீப்.
"கட்டுரையா...அதுல என்ன..."என எண்ணி கொண்டே Staff room செல்கிறான். உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் கட்டுரைகளை எடுத்து பார்க்கிறான். அதை எடுத்து ரம்யாவின் கட்டுரையை எடுத்து அதை வாசிக்க,
"ஓஹ்...சக்தி...நீ இங்க என்ன பண்ற..."என ஆசிரியர் விஜய்யின் குரல் கேட்க,
"போச்சுடா...இவரு என்ன சொல்ல போராறோ..."என மனதினுள் எண்ணியவாறு திரும்புகிறான்.
"இல்லை சார்...நான் கட்டுரை படிக்க வந்தேன்..."என சக்தி கூற, அவன் கைகளில் உள்ள கட்டுரை வாங்கி பார்க்கிறார்.
"நீ ரம்யா ஃப்ரெண்டா..."என கேட்கிறார் ஆச்சரியமாக விஜய்.
"ஆ...ஆமா...சார்..."என பொய்யுரைக்க,
"சரி அப்போ படி..."என கட்டுரையை கொடுக்கிறார் விஜய்.
அதை வாங்கி வாசிக்க,"யாருமில்லாத தனி தீவில் நான் மட்டும் தனியா இருக்கணும்...துன்பம்... வலி...என்னுடைய நண்பர்கள்...என்னுடைய அம்மா...யாருமே இல்லாத தீவில் நான் இருக்கணும்...எனக்கு தேவை எல்லாம் இந்த இடத்தை விட்டு போகனும்..."என எழுதி இருந்தது.
"என்ன படிச்ச்சியா..."என விஜய் கேட்க,
"படிச்சேன் சார்..."என சக்தி கூறுகிறான்.
"நீ ரம்யா பிரெண்ட் அதுனால உன்கிட்ட சில விஷயம் கேட்கணும்..."என விஜய் கூற,
"என்ன சார்..."என நிமிர்ந்து ஆசிரியர் விஜய்யின் முகத்தை பார்க்கிறான் சக்தி.
"அவளோட கால்களை பார்த்தியா....அந்த காயங்கள்..."என விஜய் பேசி கொண்டு இருக்கும் பொழுது வேறு ஆசிரியர் உள்ளே வர,
"சரி நான் இத பத்தி இன்னொரு நாள் உன்கிட்ட பேசறேன்...நீ கிளாஸ் கிளம்பு..."என சக்தியிடம் கூறுகிறார் விஜய்.

(டிக்....டிக்....டிக்....)
 
Top