• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 3

Member
Messages
37
Reaction score
2
Points
8
கோபிநாத் மற்றும் சக்தி இருவரும் ஓடி சென்று ஒரு பள்ளிக்குள் செல்கின்றனர். திரும்பி அங்கே தேதி நாட்காட்டியை பார்க்கிறான் சக்தி. 2003 வந்து இருப்பதை உறுதிபடுத்தியது அந்த நாள்காட்டி.
"என்ன....இந்த தடவ இவ்வளவு வருஷம் முன்னாடி வந்து இருக்கிறோம்..."என அதிர்ச்சியுடன் ஓடி வந்ததில் மூச்சு இரைக்கிரான் சக்தி.
நிமிர்ந்து தான் வந்து நின்ற பள்ளியை பார்க்கிறான். அரசு ஆரம்ப பள்ளிஎன இருந்தது."இது நான் படிச்ச ஸ்கூல்தான் அப்போ உறுதி நான் இருபது வருஷம் முன்னாடி வந்து இருக்கேன்"என தன் மனதிற்குள் எண்ணி கொண்டே தன் நண்பன் கோபிநாத்தை பார்க்கிறான் சக்தி.
"டேய்... டைம் ஆகிருச்சு...வா சீக்கிரம்..."என கோபிநாத் முன்னே ஓட, சக்தி கோபிநாத்தை பின் தொடர்ந்த படியே ஓடுகிறான்.
இருவரும் ஓடி சென்று ஒரு வகுப்பறையின் உள்ளே செல்கின்றனர். வகுப்பின் உள்ளே அவர்களின் ஆசிரியர் விஜய் நின்று கொண்டு இருக்கிறார்.
"என்ன இன்னிக்கும் ரெண்டு பேரும் லேட் போல....சரி சீக்கிரம் உள்ள வந்து உட்க்காருங்க..."என ஆசிரியர் விஜய் கூற,
என்ன நடக்கிறது என புரியாமல் தான் பள்ளி படித்த பொழுது யார் பக்கத்தில் அமர்ந்து இருந்தோம் என்பதை மறந்து ரம்யாவின் இடத்தில் அமர்கிறான்.
"டேய் அது ரம்யா இடம்டா...இங்க வா...."என கோபிநாத் அழைக்க, சக்தி எழுந்து கோபிநாத் பக்கத்தில் அமர்கிறான்.
ஆசிரியர் விஜய் தன் வகுப்பை தொடங்க, சக்தி யோசிக்க தொடங்குகிறான்.
"ஏன்...இப்போ அந்த பட்டாம்பூச்சியை பார்த்தேன்... சாதாரணமாக நான் அதை பார்த்தா கொஞ்ச நேரம் மட்டும்தான் முன்னாடி வருவேன்...ஆனா இப்போ இவ்ளோ வருஷம் முன்னாடி வந்து இருக்கேன்...இங்க ஏதாச்சும் மாத்துனா என்னோட வருங்காலத்தில் அம்மாவை காப்பாத்த முடியுமா...அம்மா...அம்மா...ஆமா அப்போ அம்மா இந்த நேரத்துல உயிரோட இருப்பாங்க..."என எண்ணி கொண்டே எழுந்து ஆசிரியர் விஜய்யின் பக்கம் செல்கிறான் சக்தி.
"என்னாச்சு சக்தி..."என வகுப்பை பாதியில் நிறுத்தி விட்டு விஜய் சக்தியை பார்க்க,
"சார்....என்னால முடியல சார்... தல ரொம்ப வலிக்குது... வீட்டுக்கு போகவா..."என சக்தி கேட்க,
"சரி...நீ போய் வீட்டுல சொல்லி ஹாஸ்பிடல் போய்ட்டு நாளைக்கு வா..."என கூற,
"சரி சார்..."என விடைபெற்று கொண்டு தன் புத்தக பையை எடுத்து கொண்டு சக்தி வேகமாக ஓடுகிறான் தன் வீட்டை நோக்கி.
சக்தி ஓடும் பொழுது இரத்த வெள்ளத்தில் அமுதாவின் உடல் இருந்த காட்சி மட்டும் மனதினுள் ஓடி கொண்டு இருக்கிறது. அப்பொழுது ஒரு சிறுமி தன் எதிரே வேகமாக பள்ளியை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறாள். அவளின் முகத்தை பார்க்க அப்பொழுது சக்தி தன் இறந்த காலத்தில் மறந்தவை எல்லாம் அவன் நினைவுக்கு வருகிறது.
"இது அவளேதான்...நான் குளிக்கும் பொழுது நினைவுக்கு வந்த சிறுமி இவள்தான்...நீதான் ரம்யா....நீதான்...அந்த குழந்தையை கடத்தி கொல்லற நபர் கடத்த போற முதல் குழந்தை நீதான்..."என தனக்கு நினைவு வந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவளை தாண்டி தன் வீட்டை நோக்கி ஓடுகிறான் சக்தி.
வேகமாக ஓடி வந்து தன் வீட்டை பார்க்கிறான். அது பூட்டி இருந்தது. அப்பொழுதுதான் அவனிற்கு நினைவு வந்தது அம்மா இந்நேரம் வேலை சென்று இருப்பார் என. அங்கேயே காத்து கொண்டு இருந்தான் சக்தி பூட்டிய கதவின் பக்கத்திலேயே. சக்திக்கு அப்பா இல்லை. அவர் சக்தி சிருவயதாக இருக்கும் பொழுதே ஒரு விபத்தில் இறந்து விட்டார். சக்தியை தனி ஆளாக வளர்த்து இருக்கிறாள் அவள் அன்னை அமுதா. தன் செய்தி சேகரிக்கும் வேலையை எல்லாம் முடித்து விட்டு தன் வீட்டை அடைந்து பார்க்கிறாள் அமுதா. சக்தி வீட்டின் கதவின் பக்கத்தில் தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து அமுதா வீட்டை திறந்து சக்தியை தூக்கி கொண்டு உள்ளே செல்கிறாள்.
"அம்மா....அம்மா...."என தூக்கத்தில் உளறி கொண்டு இருந்த சக்தி கண் விழித்து பார்க்கிறான். தன் வீட்டில் கட்டிலில் படுத்து இருப்பதை பார்த்து வெளியே ஓடி வந்து பார்க்கிறான் சக்தி.
மணி எட்டை தொட்டிருந்தது அவன் கண் விழிக்கும் பொழுது. அந்த இரவின் அமைதியில் சக்தி எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்க்க, அமுதா அங்கு சமைத்து கொண்டு இருந்தாள்.
"அம்ம்ம்ம்ம்மா......"என சக்தி தன் விழிகளில் கண்ணீர் வடிய அவளை நோக்கி கத்துகிறான்.
"என்னடா ஆச்சு ஏன் கத்தறே..."என சற்று பதறியவாறே கேட்கிறாள் அமுதா.
கண்களில் கண்ணீர் வடிய நிற்கும் தன் மகனின் அருகில் சென்று, கை எடுத்து சக்தியின் தலையில் வைத்து அவனை பார்க்கிறாள். சக்தி தன் பிஞ்சு கைகளால் அம்மாவின் தலையை லேசாக கொட்டி விட்டு அமுதாவை கட்டியணைத்து கொண்டு
"அம்மா...உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்... இந்த முறை உன்னை எப்படியாச்சும் காப்பாத்துவேன்..."என அழுகையுடன் கூறுகிறான்.
"என்னடா எதுவும் கெட்ட கனவு கண்டியா..."என அமுதா கேட்க,
"அம்மாவிடம் இதை எதையும் சொல்ல வேண்டாம்..."என மனதில் எண்ணி கொண்டு,
"ஆமாம் அம்மா... கெட்ட கனவு"என சொல்கிறான் சக்தி.

(டிக்....டிக்....டிக்...)
 
Top