• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 1

Member
Messages
37
Reaction score
2
Points
8
மாலை ஆறுமணி சூரியன் மறைய தொடங்க வேலை சென்று திரும்பி கொண்டிருக்கும் மக்கள் ஆரவாரமாக அங்கும் இங்கும் போய் கொண்டு இருந்தனர். திருப்பூரின் முக்கிய இடமான பெருமாநல்லூர் பகுதியிலும் கூட மக்கள் இங்கும் அங்கும் நடந்து கொண்டு தனது வீடுகளுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மாலை நேரம் என்பதால் ஆங்காங்கே வானத்தில் பறவைகளும் தத்தம் வேலைகளை முடித்து கொண்டு தன் கூட்டிற்கு செல்ல பறந்து கொண்டு இருந்தன.
"என் ஆழ் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்க பயமா இருக்கு..."என யோசித்து கொண்டே தான் எழுதிய கதையின் காகிதங்களை நெருப்பில் போட்டு எரித்து கொண்டு இருக்கிறான் சக்தி.
சக்தியின் கதை நெருப்பில் எரிய, அவனின் கண்களில் கண்ணீர் வர தொடங்கியது.
"ஏன் எனக்கு இப்படி நடக்குது...எல்லாருக்கும் வாழ்க்கைல தன்னோட திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.... ஆனா... என்னோட திறமையை மத்தவங்களுக்கு காட்ட ஒரு வாய்ப்பு கூட கிடைக்கமாட்டேங்குது..."என எண்ணி கொண்டே பெருமூச்சு விட்டபடி தன் கண்களை துடைத்துக் கொள்கிறான்.
தான் எழுதிய முழு கதையையும் எரித்த பின் எழுந்து சென்று சிவப்பு நிற உடையை அணிந்து கொண்டு தன் கைபேசியை எடுத்து பார்க்கிறான்.
"Manager 3 Missed calls" என காட்டியது அவனின் கைபேசி திரை.
தன் வீட்டை பூட்டி கொண்டு வெளியே சென்று அவன் பைக்கை உதைத்து வண்டியை எடுத்து கொண்டு நேராக பீட்ஸா கடைக்கு செல்கிறான்.
"இங்க வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் ஆச்சு...நாம இங்க வேலை செஞ்சுட்டே நம்ம கதையை ஒரு புத்தகமா போட்டு பதிப்பிக்கலாம்னு நினைச்சேன்...ஆனா அந்த பதிவாளர் இந்த கதைல காதல் இல்ல... கத்திரிக்காய் இல்லைனு காதல் இருக்க மாதிரி கதை எழுத சொல்றாரு... காதல் இல்லாத கதையே இல்லாத மாதிரி பேசறாங்க....நாம கடைசி வாய்ப்பா நினைச்சவரும் நம்ம கைவிட்டுட்டார்...இப்போ என்ன பண்றது..."என மனதினுள் எண்ணி கொண்டே அந்த பீட்ஸா கடையின் உள்ளே செல்கிறான்.
"ஏன்பா... ஃபோன் பண்ணுனா எடுக்க மாட்டியா...?"என மேனஜர் ரவி கேட்க,
"Sorry சார்... வண்டில வந்துட்டு இருந்தேன்...அதான் ஃபோன் பார்க்கல..."என பள்ளி கடித்து கொண்டே சொல்கிறான் சக்தி.
"சரி.... ஆர்டர் ரெடியா இருக்கு...நீ பீட்ஸா எடுத்து கொண்டு போய் டெலிவரி பண்ணிட்டு வா..."என கூறிவிட்டு ரவி தன் வேலையை தொடர ஆரம்பிக்கிறார்.
"சக்தி...என்ன இன்னைகும் லேட் போல...எனக்கு duty முடிஞ்சுது நான் கிளம்பறேன்..."என கூறிவிட்டு சக்தியை பார்த்து புன்னகைத்தபடி செல்கிறாள் ஸ்வேதா.
"இவளா வந்தா இவளா பேசுனா இப்போ இவளா கிளம்புறா..."என மனதினுள் எண்ணியவாறு ஆர்டர் செய்த பீட்ஸாக்களை எடுத்து தன் பையில் வைத்து கொண்டு வண்டியை நோக்கி செல்கிறான் சக்தி.
"பிஸ்ஸா எல்லாம் நீங்க சாப்பிட்டறாதீங்க..."என கூறிவிட்டு ஸ்வேதா சிரிக்க,
"இந்த comedy எத்தன தடவ பண்ணுவீங்க...நான் வேலைக்கு இங்க சேர்ந்ததுல இருந்து பண்ணிட்டு இருக்கீங்க..."என கூறிகொண்டே தன் பைக்கை உதைக்கிறான்.
"எத்தன தடவ பண்ணினாலும் அது evergreen தான்..."என புன்னகைத்துவிட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு, அவனுக்கு கைகளை அசைத்து டாடா காட்டியவாறு செல்கிறாள் ஸ்வேதா.
சக்தி தன் பைக்கை எடுத்து கொண்டு டெலிவரி செய்ய கிளம்ப, தன் கவலைகளை மறந்து வாகனத்தை செலுத்துகிறான். முதல் டெலிவரி பேருந்து நிலையம் பக்கம் என்பதால் கூட்ட நெரிசலாக இருந்தது. ட்ராஃபிக் சிக்னல் விளக்கில் சிவப்பு நிற விளக்கு விழ, சக்தி வண்டியை நிறுத்தி பக்கத்தில் பார்க்க, குழந்தைகள் கைகளில் பையுடன் சாலையை கடக்க நின்று கொண்டு இருக்கின்றனர்.அப்பொழுது ஒரு குழந்தை கைகளில் சோப்பு நீர் வைத்து காற்றில் பப்பிள்ஸ் விடுகிறது அதை பார்த்து சக்தி சிறிய புன்முறுவல் விடுகிறான்.எப்படியோ அறுபது மணித்துளிகள் கடக்க, பச்சை நிறம் காட்டுகிறது ட்ராஃபிக் சிக்னல். வாகனத்தை மீண்டும் செலுத்துகிறான் சக்தி. அப்பொழுது அவனின் வாகனம் மெதுவாக செல்வது போல் உணர அவனிற்கு எதிரே வந்த லாரி மெதுவாக வருவது போல் தெரிய, "என்ன நடக்குது இங்க..."என எண்ணிவாறு தன் பக்கவாட்டில் பார்க்கிறான் சக்தி.
அங்கே நீல நிற பட்டாம்பூச்சி ஒன்று மின்னி கொண்டு மெதுவாக பறக்க ஆரம்பிக்க, அதை சக்தி பார்க்கிறான். "நினைச்சேன்..."என சக்தி உதட்டை கடிக்க, சக்தி ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய நிற்கிறான். பக்கவாட்டில் பார்க்க குழந்தைகள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.ஒரு குழந்தை தன் கையில் உள்ள சோப்பு நீரில் பப்பிள்ஸ் விடுகிறது. சக்தி சுற்றும் முற்றும் பார்க்கிறான்.
"அதேதான்...இந்த தடவையும் ஏதாச்சும் தப்பு நடக்கும்...என்னை சுத்தி இருக்கவங்க யாருக்காச்சும் ஏதாச்சும் ஆபத்து வரும்..."என நினைத்து கொண்டே மறுபடியும் பார்க்க, சிக்னல் பச்சை நிறத்தை காட்ட பின்னால் உள்ள வாகனங்கள் ஒலியை எழுப்புகிறது. சக்தி வேறு வழி இன்றி வண்டியை எடுத்து செல்ல முன்னே நடந்தது போல் அவன் எதிரே லாரி ஒன்று கடந்து செல்கிறது. அப்பொழுது அந்த லாரி டிரைவர் கண்களை பார்க்கிறான் சக்தி. அவரின் கண்கள் மூடி இருப்பதை சக்தி பார்க்கிறான்.
"அப்போ இதுதான் அந்த ஆபத்து போல..."என எண்ணிக்கொண்டு தன் பைக்கை திருப்பி வேகமாக லாரி செல்லும் சாலையில் சென்று லாரியின் பக்கவாட்டில் சென்று லாரி டிரைவர் சீட் கதவை தட்டுகிறான். டிரைவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. லாரியின் கண்ணாடியில் பார்க்க டிரைவர் கண்களை மூடி இருப்பதை கவனிக்கிறான் சக்தி. எதிரே பார்க்க முன்னே பார்த்த அந்த குழந்தை சாலையை கடக்க செல்கிறது. இப்பொழுதுதான் சக்திக்கு புரிய வருகிறது.
"இந்த லாரி அந்த குழந்தையை இடிச்சு அந்த குழந்தை இறந்து இருக்கும் போல...அதான் எனக்கு அந்த பட்டாம்பூச்சி மறுபடியும் தெரிஞ்சு முன்னாடி நடந்தது மாத்தி அமைக்க நான் வழக்கம் போல முன்னாடி வந்து இருக்கேன் போல..."என மனதினுள் ஓட, தன் கையை நீட்டி வண்டியை ஓட்டி கொண்டே லாரியின் ஸ்டைரிங் பிடித்து திருப்பி லாரியை திருப்புகிறான். அந்த குழந்தைக்கு சிறிது இடைவெளியில் அந்த லாரி திரும்புகிறது. ஆனால், அப்பொழுது எதிரே வந்த கார் சக்தியின் வண்டியின் மீது மோதி சக்தி தடுமாறி கீழே விழுகிறான்.
வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த ஸ்வேதா அதே சாலையில் இருக்க, சக்தியை பார்த்து ஓடி வருகிறாள். ரோட்டில் விழுந்து கிடக்கும் சக்தி ஸ்வேதா ஓடி வருவதை தன் விழித்திரையில் பார்த்து கொண்டே கண்களை மூடுகிறான்.
"......எனக்கு எப்போவும் இப்படித்தான்... எப்போவும்னா எப்போவும்தா....இது எல்லாம் ஆரம்பிச்சது எப்போன்னு கூட தெரியல...நான் சின்ன பையனா இருந்த பொழுது எங்க வீட்டு பக்கத்துல ஒரு விண்கல் விழுந்துச்சு...அப்போ இருந்து எனக்கு அந்த மின்னற பட்டாம்பூச்சி என் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது...அதை எப்போ எல்லாம் நான் பார்க்கறேனோ... அப்போ எல்லாம் என்னை சுத்தி ஏதாச்சும் ஒரு ஆபத்து நடக்கும் இல்ல நடந்து முடிந்து இருக்கும்... அப்போதான் எனக்கு அந்த பவர் கிடைக்கும்...எனக்கு நடந்ததே மீண்டும் நடக்கும்...கிட்டத்தட்ட படத்துல எல்லாம் காட்டற டைம் டிராவல் மாதிரிதான்...ஆனா இது ஒன்னும் கால பயணம் இல்ல... ஏன்னா டைம் டிராவல் பண்ணுனா நம்ம இறந்த காலத்தை மாற்றும் பொழுது புதுசா ஒரு கால கோடு வரும்...அந்த கால கோட்டோட வருங்காலம் மட்டும்தான் மாறும்...நாம பயணிச்ச கால கோடு அப்படியேதான் இருக்கும் அதோட வருங்காலம் மாறாது...ஆனா எனக்கு நடக்கறது மறுபிறப்பு மாதிரி...என்னால கொஞ்ச நேரம் காலத்துல முன்னோக்கி போக முடியும்...புதுசா கால கோடு உருவாகாது... இதை என்னால கன்ட்ரோல் கூட பண்ண முடியாது...அதுவா நடக்கும்...யாருக்கு தேவை இந்த பவர் எல்லாம்....அதுவும் என்ன மாதிரி ஒரு தோல்வியாளனுக்கு இது தேவையே இல்ல...எனக்கு தேவை எல்லாம் ஒரே ஒரு வாய்ப்பு... என்னோட திறமையை நிரூபிக்க...." என எண்ணி கொண்டு இருந்த சக்தி தன் கண்களை விழிக்கிறான்.
சுற்றும் முற்றும் பார்க்கிறான்.தன் கைகளில் ஊசியின் வழியே மருந்து ஏறி கொண்டு இருப்பதை பார்க்கிறான். தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்கிறான் சக்தி. அந்த அறையில் ஜன்னலோரம் நின்று கொண்டு இருக்கும் ஸ்வேதாவை பார்க்கிறான் சக்தி. ஸ்வேதாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அழகாக இருக்கமட்டாள். சிறிது கருப்பாகதான் இருப்பாள் ஆனால் மிகவும் ஒழுக்கமான பெண். மற்றவர்களுக்கு உதவும் பெண்தான்.கருணை குணம் கொண்டவள். மிகவும் அன்பானவள்.
"என்ன எழுந்துட்டீங்க போல..."என ஸ்வேதா சக்தியை பார்த்து கேட்க,
"இப்போதான்...எவ்வளவு நேரமா இப்படி இருக்கேன்..."என சக்தி கேட்க,
"நேரமா நாளுன்னு சொல்லுங்க...ரெண்டு நாளாக நீங்க மயக்கத்துலதான் இருந்தீங்க...."என ஸ்வேதா கூறுகிறாள்.
"நான் சொன்னேன்ல பீட்ஸா நீங்க சாப்பிடாதீங்கன்னு அதுதான் இப்படி மயக்கத்திலே இருந்தீங்க..."என ஸ்வேதா கூற,
"இதுக்கு மயக்கமே பரவா இல்ல...முடியல..."என கூறுகிறான் சக்தி.
"ரொம்ப தாங்க்ஸ்..."என சக்தி கூற,

"தாங்க்ஸா...உங்களுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும்...அந்த லாரி டிரைவர் heart attack ல வண்டி ஓட்டிட்டு இருக்கும் பொழுதே இறந்துட்டாரு...அந்த லாரி வந்து மோதிருந்தா அங்க இருந்த எல்லாருமே இறந்து இருப்பாங்க...அந்த லாரில இருந்து நீங்கதான் மத்தவங்களை காப்பாத்துனீங்க....எனக்கு நேரம் ஆச்சு...இப்போ உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்க... நீங்க ரெடி ஆகிட்டு வாங்க கடைக்கு..."என விடைபெற்று கொண்டு செல்கிறாள் ஸ்வேதா.


(டிக்...டிக்...டிக்.....)
 
New member
Messages
1
Reaction score
0
Points
1
Nice update ... I like it.
 
Top