- Messages
- 1,269
- Reaction score
- 3,715
- Points
- 113
எண்ணம் – 17
முகம் புதைத்திருந்த மார்பின் சூடும், செவியில் கேட்ட இதயத் துடிப்பும் மலர்விழியின் உறக்கத்தை தொல்லை செய்தன. அவளது இடையிலிருந்த கரத்தின் இறுக்கமும் பெண்ணை தூங்கவிடவில்லை. சிறிது நேரத்திலே விழிப்புத் தட்டி எழுந்தவளின் உடல் முழுவதும் கணவன் அணைப்பில் இருந்தது. சூழல் உணரும் முன்னே முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது.
திடீரென மூளையும் மனதும் அவன் மீதான அதிருப்தியை நினைவுப்படுத்த, நொடியில் அவனிடமிருந்து பிரிந்திருந்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு விழி...” உறக்கத்திலும் கையைப் பிடித்து இழுத்தவனை பார்த்துக் கோபமானவள், நறுக்கென அவன் கையில் கிள்ளிவிட்டாள். அந்த வலியில் தனஞ்செயனுக்கும் உறக்கம் கலைந்துவிட, “எதுக்கு டி கிள்ளுன?” என சற்றே அதட்டலாய்க் கேட்டான்.
பதிலேதும் உரைக்காதவள், தனாவை முறைத்துவிட்டு வெளியேறினாள்.
‘வாய்ல முத்து வச்சிருக்கா. பேசுனா உதிர்ந்துடும். இவளைப் பேச வைக்கிறதுதான் என் முதல் வேலை’ என எண்ணிக்கொண்டு தனஞ்செயன் தானும் எழுந்துவிட்டான்.
மருமகளும் மாமியாரும் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருக்க, இவன் வெளியே வந்தான்.
“ஏன் டா இவ்வளோ சீக்கிரம் எழுந்த, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாம் இல்ல?” லீலாவதி வினவினார்.
“அதுமா, ஒரு பெரிய சைஸ் கொசு கிள்ளி வச்சிடுச்சு மா. அதான் தூக்கம் கலைஞ்சுடுச்சு...” என்றவனின் பார்வை மனைவியிடம்தான்.
“என்ன டா உளர்ற... கொசு எப்படி கிள்ளும்?” லீலா மகனை முறைத்தார்.
“ப்ம்ச்... உனக்கு அந்தக் கொசுவைப் பத்தி தெரியாது மா. சரியான ராங்கிப் பிடிச்ச கொசு...” கேலியான சிரிப்புடன் தாயருகே அமர்ந்தான் தனா. அவனது சிரிப்பில் மலர் பல்லைக் கடித்தாள்.
“இரு டா. நான் உனக்கு டீ எடுத்துட்டு வரேன்!” லீலா எழப் போக, “ம்மா, உட்காருங்க...” என்ற தனா, “விழி, டீ எடுத்துட்டு வா!” என்றான் சற்றே அதிகாரமாய். அவனை மலர்விழி முறைத்து வைத்தாள்.
“என்ன விழி, உன்கிட்டதான் டீ கேட்டேன். கிடைக்குமா?” இப்போது அவன் குறும்பாய்க் கேட்க, லீலாவதி முன்பு எதுவும் கூற முடியாதவள், தேநீரை சூடு செய்த வந்து மேஜை மீது நங்கென வைத்தாள்.
புன்னகையுடன் அதை எடுத்துப் பருகினான் தனா.
“இன்னைக்கு ஆஃபிஸ் போக வேணாம் டா. ரெஸ்ட் எடு, நாளைக்குப் போகலாம்...” லீலா மகன் தலையை வாஞ்சையாய்த் தடவ அவர் தோளில் சலுகையாய் சாய்ந்தான் மகன்.
“சரி மா. நான் கூட நினைச்சேன். வீட்ல இன்னைக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு. இன்னையோட பைனல் பண்ணணும். அதைப் பார்க்குறேன்...” என்றவன் பார்வை மலர்விழியின் மீதுதான். அவனது பேச்சின் சாராம்சம் உணர்ந்தவள், உதட்டைச் சுழித்து வேறுபுறம் திரும்பினாள்.
“சரி டா. ரொம்ப வேலை பார்க்காத. அப்புறம் லீவ் போட்டதுக்கு பயன் இல்லாம போய்டும். ரெஸ்டும் எடு...” லீலா கூற, தனாவிற்கு லேசாய் இருமல் வந்தது. மலர் அவனை முறைத்தாள்.
“ம்க்கும்... ஹக்கும். ஆமா மா, சின்ன வேலைதான். இப்போவே முடிச்சிடலாம்னு இருக்கேன்...” என்றான் கேலியான குரலில்.
“சரி டா. எதுனாலும் சாப்ட்டு பண்ணு டா. நான் இடியாப்பம் செய்றேன்...” என லீலா எழ, மலரும் அவருக்கு உதவி செய்ய சென்றுவிட்டாள். காலை சமையல் முடிந்து நால்வரும் உண்டனர். மலர்விழி அறைக்குச் செல்லாமல், மாமியாருடன் சுற்றினாள். மதிய உணவை இருவரும் பேசியபடியே சமைத்து முடித்தனர்.
ராமலிங்கம் உணவுண்ண வர, மதிய உணவு முடிந்திருந்தது. நேரத்தை அப்படியே கடத்திக் கொண்டிருந்தாள் விழி.
“மலர், போ... போய் கொஞ்ச நேரம் படுத்து எழுந்து வா. கண்ணை சுத்தி இன்னுமே கருவளையம் போகலை...” லீலாவதி விரட்டிவிட, வேறு வழியின்றி அறைக்குள் நுழைந்தாள்.
கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்திருந்த தனா, இவளை அழுத்தமாய்ப் பார்த்தான். அதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பது போல மலர்விழியும் அவனது பார்வையை எதிர்க் கொண்டாள்.
கையிலிருந்த அலைபேசியை தூர வைத்தவன், “வெல், இப்போ ரூம்க்குள்ள வர விழிக்கு தைரியம் வந்துடுச்சா?” என்றான் நக்கலாய்.
அதில் சீண்டப்பட்டவள், “ஓஹோ... உங்களுக்குப் பயந்துதான் வெளியே நிக்கிறேன்னு எண்ணமோ? அப்படியெல்லாம் எதுவும் இல்லை!” நறுக்குத் தெரித்தாற் போல பதிலளித்தாள்.
“ஓ... அப்படியா!” போலி ஆச்சர்யத்தைக் குரலில் காட்டியவவன் முகம் முழுவதும் இறுக்கம்தான். அவன் தன்னருகே தான் வருகிறான் என உணர்ந்தாலும், மலர் அசையவே இல்லை. அப்படியே நின்றிருந்த இடத்திலே கையைக் கட்டிக்கொண்டு அவனைப் பார்த்தாள். பார்வையில் சற்றே அலட்சியமும் கோபமுமிருந்தன.
“ரைட், இப்போ எதுக்கு உனக்கு கோபம்?” என தனா வினவ, அவனை முறைத்தவளிடம் பதிலில்லை.
“வாயைத் தொறந்து சொல்லு விழி...” என அவள் கையை எட்டிப்பிடிக்க முனைந்தான் தனா. ஆனால், மலர் அதற்கு முன்பே கைகளைப் பின்னோக்கி இழுத்திருந்தாள்.
“ஏன்... உங்களுக்குத் தெரியாதோ? பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கதை மறந்துட்டு இவர் சொல்லாம கொல்லாம எங்கையாவது போய்ட்டு வருவாராம். நாங்க அப்படியே வந்ததும் சிரிச்சுட்டே வரவேற்கணுமோ?” மலர் கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
“அட! இப்போதான் நீ எனக்குப் பொண்டாட்டின்னு உனக்கு ஞாபகம் வந்துச்சோ? கல்யாணமாகி ரெண்டு மாசம் ஆகியிருக்கு, நீ என் பொண்டாட்டின்னு ஒத்துக்க...” என்றவனின் குரலில் நக்கல் தொனி.
அவனை முறைத்தவள், “நீங்க ஊருக்குப் போனதும், வீட்டைப் பத்திரமா பாதுக்காக்க என்னை வர சொன்னீங்களோ? ரெண்டு நாளா காத்திருந்தேன் உங்களுக்காக...” இவளின் குரலும் கேலிதான்.
“ஓஹோ... ரெண்டு நாள் வெயிட் பண்ண முடியலை உன்னால. ஆனால் பாரேன் ஒரு இடியட், முட்டாள், கிறுக்கி லவ் கிவ்னு ஏதோ உளறிட்டு ஆறுவருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கா!” அவளைக் காயப்படுத்தும் நோக்கத்தோடு பேசினான் தனா. அவனுக்கும் வேறு வழியில்லை. இந்தப் பெண்ணை சீண்டினால் மட்டுமே மனதிலிருப்பதை வாங்க முடியுமென அப்படி பேசினான்.
அவனது பேச்சில் ரொளத்திரமான மலர், “ஷட் அப்...” என்றாள் சீற்றத்துடன்.
“என்னைப் பேசக் கூடாதுன்னு சொல்ல உனக்கென்ன உரிமை இருக்கு... நீயென்ன எனக்குப் பொண்டாட்டியா?” தனாவும் பதிலுக்கு இரைந்தான். மலர் அவனை தீப்பார்வைப் பார்த்தாள்.
“சொல்லு டி... நீ என்ன எனக்குப் பொண்டாட்டியா? அதான் டைரில பாதி பக்கம் இந்த ஜெய் எனக்கு வேணாம்னு ஜெபம் மாதிரி எழுதி இருந்தீயே! அப்போ நான் உனக்கு வேணாம் தானே?” என்று வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தமாய் விழ, மலர்விழியின் கண்கள் லேசாய் பனித்தன. அவனைப் பார்க்காது முகத்தைத் திருப்பியவளின் தாடையைப் பிடித்துத் தன்னை நோக்கித் திருப்பியவன், “ரெண்டு நாளைக்கு முன்னே நான் கேட்ட அதே கேள்விதான். நீ இன்னும் அதுக்குப் பதில் சொல்லலை. இந்த தனா உனக்கு வேணுமா? வேணாமா? இதான் பைனல். இதுக்கு மேல உன் முடிவுதான். வேணாம்னு சொன்ன, சாகுற வரைக்கும் என் மூஞ்சியில நீ முழிக்கவே கூடாது!” என்றவன் வார்த்தைகள் அத்தனை சூடாய் வந்தன.
தனா பிடித்திருந்த தாடையின் வலியை விட, பேசிய வார்த்தைகள் அவளை அதிகமாய் வதைத்தன. கொஞ்ச கொஞ்சமாக விழி உடைந்து கொண்டிருந்தாள், இந்த தனஞ்செயன் அருகில், அவனின் வார்த்தைகளில். அவன் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் இவளது இதயத்தை வலிக்க வலிக்க அடித்தது போலிருந்தன.
“வாயைத் தொறந்து சொல்லு டி. இப்போவாது என்னைப் பிடிக்கும்னு சொல்லு. உன் க்ரீடம் ஒன்னும் இறங்கிடாது!” கோபமும் ஆற்றாமையுமாய்க் கேட்டவனை உதடுகள் துடிக்கப் பார்த்தாள் மலர்விழி. எப்படி இவனை தன்னால் வேண்டாம் என சொல்ல முடியும். இவனில்லாது என்னால் வாழ்ந்திட முடியுமா? சத்தியமாய் முடியாதே! என் உயிரும் உணர்வோடும் கலந்தவனாகிற்றே இவன் என நெஞ்சு விம்மித் துடிக்க, விழிகளில் உவர் நீர் பொங்கியது.
“இந்த தனா எனக்கு வேணாம்னா, வேற யாருமே எனக்கு வேணாம்...” என்றாள் பொங்கிய அழுகையை அடக்கி. இரண்டாவது முறை இதே பதிலில் தன்ஞசெயன் உடல் சிலிர்த்துப் போனது. எத்தனை பெரிய வார்த்தை இது? என துடித்துப் போனவன், அப்படியே அவளை உதறியிருந்தான்.
“அப்புறம் என்ன டேஷ்க்கு டி பெரிய தியாகி மாதிரி என் கல்யாணத்துக்கு வந்த? அட்சதை தூவி வாழ்த்திட்டு, ஔவையாராப் போகலாம்னு நினைச்சுட்டீயா? இடியட்... இடியட்!” அவன் திட்டவும், மலர்விழி கணவனை முறைத்தாள்.
“நான் ஔவையாரா போவேன், இல்லை மதர் தெரஸாவா போவேன். உங்களுக்கென்ன அக்கறை?” சீறியவளின் கையைப் பிடித்து முதுகோடு திருப்பியவன், “இந்த வாய்... இந்த வாய் இன்னைக்கு இவ்வளோ பேசுதே டி. இதே வாய் என்கிட்ட ஒரு வார்த்தை பிடிச்சிருக்குன்னு சொல்ல என்ன டி தடுத்துச்சு, சொல்லு...” என கரங்களின் அழுத்தத்தைக் கூட்டவும், மலர்விழிக்கு வலித்தது. இருந்தாலும் பல்லைக் கடித்துப் பொறுத்தவள், வாயையே திறக்கவில்லை.
“பேசு டி... பதில் சொல்லு இடியட். நீ ஒரு இடியட். உன் அண்ணன் பெரிய இடியட்!” தனா கோபத்தில் பொரிந்தான்.
“வார்த்தையை அளந்து பேசுங்க. என் அண்ணனைப் பத்தி எதுக்குப் பேசுறீங்க? பிரச்சனை உங்களுக்கும் எனக்கும்தான். என் குடும்பத்தை இழுத்தீங்க, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்!” பல்லைக் கடித்தவளின் கையைவிட்டிருந்தவன்,
“மனுஷியா இருக்க மாட்டேனா, என்னடி பண்ணுவ... அடிப்பீயா?” என சுவரோடு அவளைச் சாற்றி, தானும் சாய்ந்திருந்தான். தன் முகத்தருகே நெருங்கி நின்றவனின் சூடான மூச்சுக் காற்றும் அவன் உடலின் மொத்த பாரமும் விழி மீது சுமத்தியதில், மூச்சடைத்துப் போனாள். அவனது முகத்தையே பார்த்திருந்தவளுக்கு இந்த நெருக்கத்தில் பேச்சே வரவில்லை.
“முதல்ல இப்படி ஒட்டி உரசாம தள்ளி நின்னுப் பேசுங்க!” மலர் பல்லைக் கடிக்க, பட்டென அவளை உதறியவன்,
“நான் என்ன கேட்குறேன். நீ என்ன சொல்ற? கிட்ட வந்தாலே, ஒட்டாத... உரசாதன்னு. பொண்டாட்டின்னு கிட்ட போனாலே முறைச்சே பத்தடி தூரம் போக வச்சுடுவா மனுஷனை...” தனா சினத்தில் முணுமுணுத்தான். அவன் முகம் மேலும் கோபத்தில் சிவந்து போனது.
விழியின் செவியில் அது அப்படியே விழுந்தது. அவனை உறுத்து விழித்தவள், “ஆமா, பொண்டாட்டின்னு ஆசையா வந்துட்டாரு. எப்பப்பார்த்தாலும் எதாவது கிறுக்குத் தனமா பேசி வாங்கிக் கட்டிக்கிறது. இல்லைன்னா, கையை காலைப் பிடிச்சு ஒடிக்கிறது. இதானே உங்களுக்குத் தெரியும்...” மலர்விழியும் பதிலுக்கு இரைந்தாள்.
“இந்த மூஞ்சியைப் பார்த்து ஆசை வந்துட்டாலும். இஞ்சித் திண்ணக் குரங்கு மாதிரி எப்பப் பார்த்தாலும் முகத்தை முறைச்சுட்டே சுத்துனா, எப்படி டி ஆசை வரும்?” தனா கூறியதும் மலர்விழிக்கு அப்படியொரு கோபம்.
“ஓஹோ... இந்த மூஞ்சியைப் பார்த்து ஆசை வரலை. ஆனால், உங்க அத்தை மக சுமி...” என மலர் பேசும்போதே அவளது பேச்சைத் தடைசெய்திருந்தன தனஞ்செயனின் இதழ்கள். அழுத்தமாய் தன்னைப் பேசிய உதடுகளை வலிக்க வலிக்க முத்தமிட்டான். இப்போது இந்த முத்தத்தை எதிர்பாராது விழி மீண்டும் திகைத்துப் போனாள். ஆனால், கணவனை தன்னிடமிருந்து விலக்கப் போராட முயலவில்லை. உடல் லேசாய் அந்த முத்தத்தில் நடுங்கியது.
மலர்விழியை விட்டுப்பிரிந்த தனா, “இந்த வாய் இருக்குன்னா எது வேணாலும் பேசுவீயா டி. இதை முதல்ல அடக்கணும்!” அவளின் உதட்டைக் கைகளால் பிடித்தவனின் குரல் கரகரத்துப் போயிருந்தது. கோபமும் அதைவிட மோகமும் போட்டிப் போட்டு அவனை ஒரு வழியாக்க, மனைவி அதற்கு தூபம் போட்டாள். அவளின் அருகில் தனஞ்செயன் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்தம் கலங்கிநின்றான்.
“இந்த ஜென்மத்துல உங்களால அது முடியாது!” உதட்டிலிருந்து அவன் கையைத் தட்டிவிட்டாள் விழி.
“அடக்கிக் காட்டுறேன் டி...” என்றவன் பட்டென மனைவியை இழுத்து அவளது சங்குக் கழுத்தில் முத்தமிட, உடல் தூக்கி வாரிப் போட்டது பெண்ணுக்கு.
கழுத்திலிருந்த உதட்டை அப்படியே முகத்திற்கு நகர்த்தியவன் முகம் முழுவதும் முத்தமிட, அவளின் உறுதி ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. மனம் முழுவதும் நிறைந்திருந்தவனின் ஒவ்வொரு முத்தமும் அவளுள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தது. உடல் உறைய உயிர் தகிக்க ஆரம்பித்தது. மெல்லிய நடுக்கமும் பயமும் ஆர்வமும் என அவன் கைகளில் பெண் நெகிழ ஆரம்பித்திருந்தாள்.
சற்று முன்னர் நடந்த சண்டையெல்லாம் எங்கோ ஓர் மூலைக்குச் சென்றிருக்க, தனா மனைவியை வீணையாய் மீட்டத் தொடங்கினான்.
இத்தனைநாள் கோபமும் காதலுமாய் மலர்விழி அவனை ஏற்கத் தொடங்கினாள். தனாவின் உதடுகள் மலர்விழியை மொத்தமும் ஆட்சி செய்ய, கூசி சிலிர்த்து அவனிடமே அடைக்கலம் புகுந்தது பெண்மை. வன்மையிலிருந்து மென்மைக்கு மாறி நிதானமாய், பொறுமையாய் மனைவியை ஆளத் தொடங்கினான் தனஞ்செயன் . வாய் சண்டை கட்டில் சண்டையாய் உருவெடுத்திருந்தது.
இருவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், வாழ்க்கை அவர்களது சமாதானத்தை இப்படி எழுதிவிட்டது போல. கோபமெல்லாம் வடிந்திருக்க, மனைவியை ரசிக்கும் கலைஞனாகிப் போனான் தனா. அவனது இதழ்கள் பதிந்த ஒவ்வொரு இடமும் ரசனையும் கவியுமாய்ப் பேசிப் பேசியே மனைவியை சிவக்கச் செய்திருந்தான். அப்போதும் சிவந்து, கணவனை முறைத்தாள் மனைவி. ஆனால், ஒரு வார்த்தை கூட பெண்ணிடம் வெளிவரவில்லை. அத்தனை நேசத்தை தானும் அவனிடம் மௌனமாய்க் கொட்டிவிட்டிருந்தாள்.
ஒவ்வொரு நொடியும் விழி விழி என லேசாய் பிதற்றலுடன் அவளிடம் சரண் புகுந்த தனஞ்செயனை எந்த சஞ்சலுமும் இன்றி ஏற்றுக்கொண்டாள் விழி. இதழாலே அவளைத் தனக்காக என முழுவதும் எழுதி வாங்கி விட்டிருந்தான் தனா.
இந்த வாழ்க்கைக்காகத் தானே ஆறு வருடமாய் தவமிருந்தாள். நடக்காது என நினைத்து தினம் தினம் செத்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது விழிநீர் பொங்கியது. ஊனையும் உயிரையும் உருக்கியிருந்தான் தனஞ்செயன், அவளின் ஜெய்.
கூடலுக்குப் பின்னான ஆழ்ந்த அமைதி. அவனைக் காணாது மறுபுறம் திரும்பிப் படுத்தாள் மலர்விழி. லேசாய் கலங்கிய கண்களை, தலையணையில் புதைத்தாள். தனஞ்செயன் எதுவுமே பேசவில்லை. முதன் முதலில் உணர்ந்த பெண்மையின் மென்மையில் மொத்தமாய் உருகியிருந்தான். இத்தனை காதலை இந்தப் பெண் எங்கே வைத்திருந்தாள் என் ஆச்சர்யம் அவனது மனம் முழுவதும் வியாபித்தது.
வாயையே திறக்காதவள், கூடலுக்குப் பின் நெற்றியில் முத்தமிட்ட போது, “ஜெய்...” என உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் வராது உதட்டைக் கடித்திருந்தாள். அந்நொடி அவன் என்ன உணர்ந்தான் என வரையறுக்க முடியவில்லை. அந்தக் கண்களில் தெரிந்தக் காதலில் மொத்தமும் கலங்கிப் போனான்.
“விழி... என்னைப் பாரு!” அதட்டலாய் அழைத்தவன் குரல் கரகரத்துப் போயிருந்தது. அதில் மலர்விழிக்கு மேலும் அழுகைப் பொங்கியது.
“என்னைப் பாரு டி...” என அவளை வலுக்கட்டாயமாகத் தன்புறம் திருப்பிய தனா, “ஏன் டி சொல்லலை?” என்றான் ஆதங்கமாய். மலர்விழியிடம் பதிலில்லை. விழிகளில் சூடான திரவம் பொங்கியது.
“ஏன் இவ்வளோ காதலை வச்சிருந்தும் சொல்லலை. ஏன்டி யாருக்கோ விட்டுக் கொடுக்கலாம்னு முடிவெடுத்த?” கோபமும் ஆற்றாமையுமாய்க் கேட்டான். தனாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், எக்கி அவன் உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டாள்.
“அமைதியா படுங்க. பேசுனா சண்டைதான் வரும்...” அதட்டலாய் உரைத்தவள், பொங்கும் நீரைத் துடைத்துக்கொண்டு அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தனஞ்செயனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அந்தக் கணத்தின் அமைதியை ஆழ்ந்து அனுபவித்தபடி, மனைவியின் தலையைக் கோதிக் கொடுத்தான். சிறிதுநேரம் இருவரும் கண்ணயர்ந்தனர்.
மலர்விழி மீண்டும் கண்விழித்த போது மாலை ஐந்தாகியிருந்தது. அவனிடமிருந்து விலகி, எழுந்து குளித்து வெளியே சென்றாள். லீலாவதி தொலைக்காட்சியில் எதையோ பார்க்க, இவளும் இணைந்துகொண்டாள்.
தனா கண்விழிக்கும் போது கையணைவில் மனைவி இல்லை. எழுந்து தானும் குளித்துவிட்டு வந்தான்.
ராமலிங்கமும் அலுவலகம் முடிந்து வந்தார். மலர்விழி அவர்கள் இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் இரவு உணவு முடிந்து ஆண்கள் இருவரும் அறைக்குள் நுழைந்தனர். மலர் லீலாவதிக்கு உதவிவிட்டு அறைக்கு வந்தாள்.
தனா கட்டிலில் கண்களை மட்டும் மூடி படுத்திருந்தான். விளக்கை அணைத்தவள், தானும் அவனருகே சென்றுபடுக்க, அவளது இடையில் கைக்கொடுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான். எந்த எதிர்ப்புமின்றி அவனுக்குள் பாந்தமாகப் பொருந்திப் போனாள் விழி.
சில நிமிடங்கள் மௌனம் விழுங்கிக் கொள்ள, “விழி... சாரி டி!” என்ற தனாவின் குரலும் நெற்றியில் அவனது இதழின் ஸ்பரிசமும் அவளது விழிகளை லேசாய் பனிக்கச் செய்தன. தன் மீது தவறோ, இல்லையோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தானே இறங்கி வந்து மன்னிப்பு கேட்கும் இந்த ஒரு குணத்திற்காகத்தானே தனஞ்செயனை அத்தனைப் பிடிக்கும் விழிக்கு. இப்போது இன்னுமின்னும் பிடித்துத் தொலைத்தது அவனை. ஆயிரம் என்ன லட்சம் முறை அவனைக் காதலித்து இருப்பாள், இனியும் காதலிப்பாள். அவர்களுக்கு இடையே எத்தனை சண்டை வந்தப் போதும், அவனைவிட்டு விலகும் எண்ணமெல்லாம் விழிக்குக் கிடையாதே. எதிரும் புதிருமாய் இருந்தாலும், அவனுடனே வாழ்ந்துவிட வேண்டும் என்ற உந்துதல் தானே மனம் முழுவதுமிருந்து தொலைத்தது.
தனாவிற்குத் தெரியும், எப்படியும் விழி இறங்கி வர மாட்டாள் என்று. அதனாலே மனைவிக்காக எனத் தான் ஒரு படி என்ன, ஆயிரம் படி இறங்கி வரத் தயாராக இருந்தான். அதற்கான முதற்படிதான் இந்த மன்னிப்பு தூது.
தனக்காக என்று தன்னிலையிலிருந்து இறங்கி வந்து மன்னிப்பு கேட்டவனை கலங்கும் விழிகளுடன் நிமிர்ந்து முறைத்தவள், “நீங்க சாரி கேட்டு பெரிய தியாகின்னு நிரூபிக்கிறீங்களா? பதிலுக்கு இப்போ நானும் சாரி கேட்கணும். அப்படித்தானே?” என காட்டமாய்க் கேட்டாள்.
“ஹே... நான் எப்போ டி அப்படி சொன்னேன்?” தனா வினவினான்.
“நீங்க சொல்லலை. உங்களோட சாரி சொல்லுதே!” முறைப்புடன் உதட்டைச் சுழித்தாள்.
“சரி, சரி. சண்டை வேணாம் டி!” தனா பின்வாங்கினான்.
“ஓ... அப்போ நான்தான் சண்டைக்கு அலையுறேனா?” மலர் சூடாய் வினவ, தனஞ்செயன் திகைத்துப் போனான். மனைவியை சமாளிக்கும் வழி தெரியவில்லை அவனுக்கு.
“அப்படியெல்லாம் நான் எங்க டி சொன்னேன்?” இவன் பதறினான்.
“இப்போதானே சொன்னீங்க. என்னைப் பார்த்தா எப்போ பார்த்தாலும் சண்டை போட்றவ மாதிரிதான் உங்களுக்குத் தெரியுது?” மலர் அடுத்த சண்டைக்கு தயாராகிவிட்டாள் என்பதை உணர்ந்தவன், “பேசாத டி. சண்டை வரும்...” என அவளைப் போலவே குனிந்து மனைவி உதட்டில் அழுந்த முத்தமிட்டான். ஒரு முத்தம் என ஆரம்பித்தது கணக்கின்றி நூற்றில் தொடர ஆரம்பிக்க முதலில் போல அல்லாது பொறுமையாய் மனைவியை முத்தாடத் தொடங்கினான். விழியும் அவனது ஜெய்யிடம் மெத்தமாய் கரைந்து உருக ஆரம்பித்திருந்தாள்.
“கேட்காமல் காட்டும் அன்பு
உயர்வானது!
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது!
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது!
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…”

Last edited by a moderator: