- Messages
- 1,266
- Reaction score
- 3,708
- Points
- 113
எண்ணம் – 16
மாறன் பேசுவதைக் கேட்ட மலர்விழி கொதித்துப் போனாள். தன் கணவனே ஆயினும் தன்னுடைய தமையன் மீது எப்படி அவன் கை நீட்டி இருக்கலாம் என்ற கோபம் கனன்றத் தொடங்க, “இத்தனை நாளா என்கிட்ட இருந்து இதை மறைச்சுட்டல்ல மாறா?” என வினவினாள்.
“ப்ம்ச்... பிரச்சனை எதுவும் வேணாம்னுதான் மலர் நான் இதை சொல்லலை....” எனத் தங்கைக் கையைப் பிடித்தான் மாறன்.
“கையை விடு மாறா. அவர் என்னை அடிச்சதும் உனக்கு கோபம் வருது இல்ல. அது போல எனக்கும் வரும். என் புருஷன்னாலும் அவர் எப்படி உன் மேல கை வைக்கலாம்?” என்றவள் தனஞ்செயன் அறைக்குள் நுழையப் போக, மாறன் அவளை உள்ளே விடாது தடுத்தான். மீண்டும் இந்தப் பெண் அவளிடம் போய் தனக்காக சண்டையிடுவாள் என சலிப்பாய் வந்தது மாறனுக்கு.
“மலர், அவன் உன் புருஷன் மட்டும் இல்லை. அதுக்கு முன்னாடி இருந்தே என்னோட ஃப்ரெண்ட். அதை மறந்துடாத! அவனுக்கும் எனக்கும் இடையில ஆயிரம் இருக்கும். நீ உள்ள வராதே!” என்றான் அழுத்தமாய்.
“ஓஹோ... அப்போ உன் ப்ரெண்டா அவர் உன்னை அடிச்சிருக்காரு. ரைட்?” அவள் கேட்ட தொனியில் மாறனுக்குத் தொண்டை வரண்டு போனது. ஆமாம் என்று கூறினால் தன்னிடம் சண்டை போடுவாள் இல்லையென்றால் பேசாமல் மௌன விரதம் காப்பாளே! என எண்ணியவன்,
“மலர்... நான் அந்த அர்த்தத்துல சொல்லலை...” என்றான் அவளுக்குப் புரிய வைத்திடும் நோக்கோடு.
அவன் முன்னே கையை நீட்டியவள், “போதும், நீ எந்த அர்த்தத்துல சொன்னேன்னு எனக்கு நல்லா புரிஞ்சது. நீயாச்சு உன் ஃப்ரெண்டாச்சு... என்கிட்ட இனிமே உங்கப் பஞ்சாயத்தை தூக்கிட்டு வந்துடாத!” அவனை உறுத்து விழித்தபடியே கூறியவள், விறுவிறுவென அறைக்குள் நுழைந்து தன் உடைகளை ஒரு பையில் திணித்தாள்.
அவளது செய்கையில் பதறிய மாறன், “ஏய்... ஏ... என்ன பண்ற மலர்? எதுக்காக இப்போ பேக் பண்ற?” எனப் பயந்தான். அடுத்ததாய் பஞ்சாயத்தைக் கூட்ட இவள் தயாராகிவிட்டாளோ என மாறன் பயந்து போனான்.
“அதான் நீ சொன்னியே. நீயாச்சு, உன் ப்ரெண்டாச்சுன்னு. நீங்க அடிச்சுப்பிங்க, கூடிப்பிங்க. இடையில நான் எதுக்கு இடைஞ்சலா? நீங்க ரெண்டு பேரும் இந்த வீட்ல இருந்துக்கோங்க. நான் கிளம்புறேன்...” என்றவள் பேச்சில் ஏகத்திற்கும் கேலி இருந்தது. ஆனால், மாறன் கருத்தில் அது பதியவே இல்லை.
“லூசா டி நீ. எதை எதோட முடிச்சு போட்ற?” என வினவினான். அவனைக் கண்டு கொள்ளாதவள், பையை தோளில் மாட்டிக்கொண்டு வெளியேறினாள்.
“டேய் தனா, இவ பைல ட்ரெஸ்ஸை எல்லாம் எடுத்துட்டு எங்கையோ போறா டா!” மாறன் கத்தியதும், ‘இவளை என்ன செய்தால் தகும்!’ எனப் பல்லைக் கடித்தபடி வெளியே விரைந்து மலர்விழியின் கையைப் பிடித்திருந்தான் தனஞ்செயன்.
“எங்க டி போற?” தனா அவளை முறைக்க, கையை ஒரே உதறில் உதறினாள் விழி.
“அதை உங்ககிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை!” என்று சிலுப்பிக் கொண்டாள்.
“கட்டுன புருஷன்கிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்ல உனக்கு அவசியம் இருக்கு?” தனாவும் பேச, “அதான் உங்க ஆருயிர் நண்பன் இருக்கானே! அவன்கிட்ட சொல்ல வேண்டியது தானே? உங்களுக்கும் அவனுக்கும் இடையில ஆயிரம் இருக்காமே. நான் எதுக்கு இடைஞ்சலா? அவன் கூடவே குடும்பம் நடத்துங்க!” என்றவள் மாறனை முறைத்துவிட்டு வெளியேறினாள்.
இருவரும் அவளது பேச்சில் ‘பே’வென நின்றிருந்தனர்.
“டேய், அவக்கிட்ட என்ன டா சொன்ன?” தனாவின் கோபம் மாறன் புறம் திரும்பியது.
“ச்சு... நான் என்னத்த டா சொல்ல போறேன்... வாய் தவறி நீ அடிச்சதை சொல்லிட்டேன் டா. அதான் கோச்சுட்டு போறா!” மாறன் கவலையாக கூறினான்.
“உன் தங்கச்சி கேடி டா. என்ன காரணம் கிடைக்கும், எஸ்ஸாகலாம்னு இருந்தா. நீயும் சலங்கை கட்டிவிட்டு ஆட சொல்லிட்ட... ஓடிட்டா!” தனா குரலில் நக்கல் தொனிதான்.
“டேய், இவ்வளோ அசால்ட்டா சொல்ற கோச்சுட்டுப் போறான்னு. போய் சமாதானம் செஞ்சு கூட்டீட்டு வா டா...” மாறன் பதறினான்.
“நான் எதுக்குக் கூப்பிடணும். போன அவளுக்கு திரும்ப வரத் தெரியாதா?” என இருக்கையில் பொத்தென விழுந்தான்.
“இப்படியெல்லாம் பேசாத டா. அவ கோவிச்சுட்டுப் போனா, ஈஸியா சமாதானம் செய்ய முடியாது. வீம்பு பிடிச்சவ டா!”
“ஆமாம்... இப்போதானே எனக்கு இது தெரியும்...” என மாறனை முறைத்தவன், “நீ இங்க வராம இருந்தாலே, எல்லாம் சரியாகியிருக்கும்!” என்றான் கோபமாய்.
‘சிவ பூஜையில் கரடி மாதிரி வந்து எல்லாத்தையும் கெடுத்ததும் இல்லாம, இவனுக்கு கோபம் வேற’ மாறனை ஏகத்திற்கும் முறைத்துத் தள்ளினான் தனா.
“எப்படி சரியாகிருக்கும், நீ என் தங்கச்சியை அடிச்ச மாதிரியா?” மாறன் முறைக்க,
“வாய்ல நல்லா வந்துடும். மூடிட்டு மொதல்ல கிளம்பு நீ. உன் தங்கச்சி ஸ்கூட்டி ரிப்பேர். இங்க பக்கத்துல ஆட்டோ எதுவும் கிடைக்காது. ஒழுங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போங்க!” தனா அதட்டலிட்டான்.
“வீட்டுக்குப் போங்கன்னு சாதரணமா சொல்ற. அங்க, அம்மா, அப்பா என்னவோ ஏதோன்னு பயந்துடுவாங்க தனா. என்ன ரீசன் சொல்லி அவங்களை சமாதானம் செய்றது?” மாறன் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாய்க் கேட்டான்.
“டேய், செமஸ்டர் முடிஞ்சது உன் தங்கச்சிக்கு. லீவ், சோ ரெண்டு நாள் அங்க இருக்கலாம்னு வந்தேன்னு சொல்லுவா அவளே. நீ ஒன்னும் சமாளிக்கத் தேவையில்லை...” என்றவனுக்கு அத்தனை எரிச்சல். தங்கச்சி என்னவென்றால் அப்படி ஒரு அழுத்தக்காரி, விவரமானவள். அண்ணன்காரன் இப்படி மாக்கானாய் இருந்து தொலைத்தால் அவனும் என்னதான் செய்வான்.
தனா கூறியதும் மாறன் முகத்தில் நிம்மதி படர்ந்தது. “சரி டா.. நான் வரேன்!” என்றவன் கீழே சென்று இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து இரண்டு தெருக்கள் கடக்கவும், மலர் பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
“மலர் வா, வீட்டுக்குத் தானே நானும் போறேன்!” என்றவனை முறைத்தவள், பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டாள். மாறனுக்குத் தங்கையைப் பற்றி தெரியுமாதலால், தானும் பேருந்து பின்னே மெதுவாய் இருசக்கர வாகனத்தை ஓட்டி வீட்டிற்குச் சென்றான்.
கையில் பையோடு வந்த மகளை லேசாய் பதட்டத்துடன் பார்த்தார் லோகநாயகி. “வழியை விடு மா. இப்படியே வெளிய தொரத்திட்ற ஐடியா வா?” மலர் எரிந்து விழ, அவர் வழியைவிட்டார்.
“என்ன விழி... என்ன கைல பை?” லோகநாயகி வினவினார்.
“என்னோட ட்ரெஸ் தான் உள்ள இருக்கு. பார்க்குறியா மா?” என்றவள் அவரது கையில் பையைத் திணித்துவிட்டு, நாற்காலியில் கடுப்புடன் அமர்ந்தாள்.
“என்ன... என்ன ட்ரெஸ். எதுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்த?” லோகநாயகி பதற,
“ஏன் இங்க வந்தன்னு கூட கேளு மா. ஏன் அதை மட்டும்விட்ட?” மகள் கடுப்புடன் இரைந்தாள்.
மாறன் உள்ளே நுழைந்தவன், என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து, “ம்மா, பதறாத. அவளுக்கு எக்ஸாம் முடிஞ்சுடுச்சு இல்லை. அதான் லீவ்க்கு இங்க ரெண்டு நாள் தங்குறேன்னு சொன்னா. நான்தான் கூட்டீட்டு வந்தேன்...” தாயை சமாதானம் செய்யும் நோக்கோடு பதிலளித்தான்.
“ஓ... சரி டா. ரெண்டு பேரும் கையை காலை கழுவிட்டு வாங்க. பசி முகத்தைப் பார்த்தே தெரியுது!” என அவர் மதிய உணவை எடுத்து வைத்தார். அப்போதுதான் இருவருக்கும் வயிறு இருப்பதே உறைக்க, சாப்பிட அமர்ந்தனர்.
தனாவும் தாய், தந்தையுடன் இருக்கலாம் என அங்கே சென்றுவிட்டான். மகன் உள்ளே நுழைந்ததுமே, “வா டா. இப்போதான் மலர் ஃபோன் பண்ணா, நீ வருவன்னு. அவ அங்க ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்னா!” என்றவாறே லீலாவதி மகனை வரவேற்றார்.
‘இதெல்லாம் நல்லா செய்வா. ஆனால், வாயைத் தொறந்து காதலிக்கிறேன்னு சொன்னா, முத்து உதிந்திடுமோ? வரட்டும். ரெண்டு நாள் கழிச்சு இங்க தானே வரணும்’ என நினைத்துக் கொண்டான் தனஞ்செயன்.
இரண்டு நாட்களும் மலர்விழி முறைத்துக்கொண்டு சுற்றவும், மாறன் அவளை சமாதானம் செய்ய படாதபாடுபட்டான். ஆனால், அவள் இறங்கி வருவதாய் தெரியவில்லை.
லோகநாயகியே, “டேய், என்ன பிரச்சனை உனக்கும் அவளுக்கும்?” என இருவரையும் கவனித்து வினவினார்.
“ம்மா... ஒன்னும் இல்லை. நீ எதையும் நினைச்சு குழப்பிக்காத. இது வேற...” என அவரிடம் மாறன் சமாளிக்க முயன்றான்.
“ப்ம்ச்... ஏதோ ரெண்டு பேரும் பண்றீங்க. என்னென்னு தெரியலை...” மகனை சந்தேகமாய்ப் பார்த்த லோகு, “இருந்தாலும் உன் தங்கச்சிக்கு இவ்வளோ ஆகாது டா. அவகிட்ட கெஞ்சிட்டு வேற இருக்க நீ!” என திட்டிவிட்டு நகர்ந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த மாறன், “என்னதான் மலர் வேணும் உனக்கு. இன்னும் எவ்வளோதான் எனனைக் கெஞ்சவிடுவ?” என அலுப்புடன் வினவினான்.
“உன்னை நான் கெஞ்சவே சொல்லலையே!” மலர்விழி உதட்டைக் கோணினாள்.
“நீ சொல்லலை மலர். உன் ஆட்டிடூட் சொல்லுது... அவன் உன்னை அடிச்சதுல தப்பே இல்லை!” மாறன் முணுமுணுத்தாலும் அவன் உதட்டசைவை வைத்தே புரிந்துகொண்ட மலர்,
“அவன் அடிச்சதை நியாயப்படுத்துறீயா மாறா?” என காட்டமாய் வினவினாள்.
“நியாயப்படுத்தணும்னு எண்ணம் இல்லை மலர். நீ இப்போலாம் எதுக்கெடுத்தாலும் ரொம்ப கோபப்பட்டு, முகத்தைத் தூக்கி வச்சிக்கிற. மனுஷனை டென்ஷன் பண்ற... என்னை மட்டும் இல்லை, அவனையும்தான். அதான் கோபப்பட்டு அடிச்சிருப்பான். உன் வாயை முதல்ல அடக்கி வை!” மாறனும் கோபத்தில் இரைந்தான். அவன் உண்மையிலே தனா மலரை அடித்துவிட்டதாய் நினைத்துக் கூறினான்.
“என் வாயை அடக்குறதுக்கு முதல்ல உன் ப்ரெண்ட் வாயை அடக்க சொல்லு. அவர்தான் அடிச்சது!” என்றவள் அவன் முத்தமிட்டதை நினைத்துப் பல்லைக் கடித்தாள்.
‘எத்தனை தைரியம் அவனுக்கு. பேசிக் கொண்டிருக்கும்போது முத்தமிட்டுவிட்டானே!’ என மலருக்கு லேசாய் கோபம் வந்தது.
“நீயும் வாய் பேசுறதை நிறுத்தப் போறது இல்லை. அவனும் அமைதியா இருக்கப் போறது. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்ச, என்னைத்தான் சொல்லணும்!” மாறன் குரலில் எரிச்சல் மண்டியது.
“நீதானே மாறா கல்யாணம் பண்ணி வச்ச. அப்போ நீதான் அனுபவிக்கணும்...” ஏகத்துக்கும் கேலியாய் கூறினாள்.
“நீ எப்போ உன் மாமியார் வீட்டுக்குப் போற. வந்து ரெண்டு நாளாச்சே!” மாறன் அடுத்தப் பேச்சிற்குத் தாவ, அவன் கேள்வியில் இவளுக்கு கோபம் பொங்கியது.
“ஏன்? ஏன்... நான் இங்க இருக்கதுல உனக்கென்ன பிரச்சனை. இது என் அம்மா, அப்பா கட்டுன வீடு. இங்க எப்போ வரணும், போகணும்னு நீ சொல்லாத!” வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு நகர்ந்தாள்.
போகும் அவளைப் பார்த்த மாறன், ‘ஊர் உலகத்துல பத்து பதினைஞ்சு தங்கச்சி வச்சிருக்கவனுங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கானுங்க. நான் மட்டும்தான் ஒன்னே ஒன்னை வச்சிட்டு அவஸ்தை பட்றேன்!’ என நொந்துவிட்டு, தனாவுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தான்.
‘மச்சான், இப்போதைக்கு என் தங்கச்சி இங்க இருந்து நகர்றதா தெரியலை. நீயாச்சு, அவளாச்சு!’ மாறனிடமிருந்து வந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் மலருக்கு பலமுறை அழைப்பை விடுத்தான் தனஞ்செயன். அவள் அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
நேராக லோகநாயகிக்கு அழைத்து அவளிடம் பேச வேண்டும் என தனா கூற, அவளது அறைக்குச் சென்ற லோகு, “ஃபோனை எங்க டி வச்ச? மாப்ளைதான் லைன்ல இருக்காரு. பேசு!” என மகளிடம் அலைபேசியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
அதை எடுத்து காதில் வைத்தவள், “என்ன வேணும் உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
“ஹக்கும்... என்னென்னவோ வேணும். அதெல்லாம் போன்ல தர முடியாதே!” தனாவின் குரலில் இவளுக்கு எரிச்சல் வந்தது.
“ப்ம்ச்... எதுக்குப் ஃபோன் பண்ணீங்க. அதை மட்டும் சொல்லுங்க...” பல்லைக் கடித்தாள்.
“நாளைக்கு கிளம்பி இங்க வர்ற நீ. அதை சொல்லதான் கூப்ட்டேன்!” தனா அதிகாரமாய் அழைக்க, “ஓ... நீங்க கூப்பிட்டதும், நாங்க வரணுமோ?” என சினம் மிகுதில் வினவினாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்ல விழி. மாமியார், மாமனார் வீட்ல தங்குறதுக்கு ஈகோ பார்க்குற ஆள் நான் இல்லை. நானே அங்க வந்துட்றேனே!” என்றான் நக்கலாய். அவனது பேச்சில் மலர்விழியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இங்கே அவன் வந்து தங்கினால், இரண்டு பேருக்குமிடையே உள்ள பிணக்குகள் தாய், தந்தையின் கவனத்தை கவர்ந்துவிடும். அது அவர்களது நிம்மதியை குலைத்துவிடுமே என நினைத்தவள், “நோ, நீங்க இங்க வரக்கூடாது!” என்றாள்.
“சரி அப்போ நீ இங்க வா...” தனாவின் உதட்டில் கேலிச் சிரிப்பு.
“முடியாது...”
“எதுக்குமே ஒத்து வரலைன்னா எப்படி விழி. சரி, நானே அங்க வரேன்!” விட்டுக் கொடுப்பது போல பேசினான் தனா. எரிச்சலான விழி, “நான் வரேன்...” என்று பட்டென அழைப்பைத் துண்டித்தாள்.
அங்கே தனஞ்செயனுக்கு அப்படியொரு சிரிப்பு. இத்தனை நாள் அவளை எப்படி கையாள்வது எனத் தெரியாமல்தான் தடுமாறினான். ஆனால், இப்போது மலர்விழி என்ன யோசிக்கிறாள் என்பதை முதற்கொண்டு அவனால் யூகிக்க முடிந்தது. வீட்டிற்கு அவள் வந்தும், அன்றுவிட்ட சண்டையும், முத்த சண்டையும் தொடரலாம் என்று முழு முனைப்போடு இருந்தான். ஆனால், பாவம் வேலை வடிவில் விதி விளையாடிவிட்டது.
“இந்தா மா உன் ஃபோன்...” லோகுவிடம் அலைபேசியைக் கொடுத்தவள், “ம்மா, நாளைக்கு காலைல நான் அங்கக் கிளம்புறேன்!” என்றாள் உபரித்தகவலாய். லோகு நிம்மதியுடன் அவளைப் பார்த்தார். அவளது செயலும் நடவடிக்கையும் இங்கிருந்து மகள் நகரமாட்டாள் என அவரை எண்ண வைத்திருந்தது.
தனஞ்செயன் அன்று மாலை வீட்டிற்கு வரவும், அவனுக்கு முக்கியமான சந்திப்பு ஒன்றிற்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது. அது அவன் நீண்ட நாட்களாய் எதிர்பார்த்த ஒன்று. தொழிலை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்
இருந்தவனுக்கு இந்தக் கூட்டம் இன்றியமையாத ஒன்று. எனவே மறுநாள் காலை விமானத்திலே டெல்லி செல்வதற்காக பயணச்சீட்டை பதிவு செய்துவிட்டான்.
இரண்டு நாட்கள் தங்குமாறு சூழ்நிலை அமைய, அதற்குத் தகுந்தாற் போல துணிகளை எடுத்து வைத்துக்கொண்டான். வேலையிலிருந்த கவனத்திலும் பரபரப்பிலும் மனைவியை முற்றும் முழுதாய் மறந்து போயிருந்தான். இதற்கும் சேர்த்து மனைவி ஆட்டமாய் ஆடப் போகிறாள் என்பதை கணவன் அறிய வாய்ப்பில்லை.
அதிகாலை எழுந்து தனா கிளம்பவும், லீலாவதியும் அவனுக்கு உதவினார். “ம்மா, ஏன் இவ்வளோ காலைல எழுந்தீங்க. நான் தான் நைட்டே சொன்னேனே. சொல்ல சொல்ல கேக்காம, தூக்கத்தைக் கெடுத்துக்குறீங்க...” கடிந்தான் மகன்.
“பரவாயில்ல டா. நீ கிளம்புனதும் என்கென்ன வேலை. மறுபடியும் தூங்கதானே போறேன். பார்த்து பத்திரமா போய்ட்டு வா டா. டைம்க்கு மறக்காம சாப்பிடு...” என மகனை வழியனுப்பி வைத்தார் லீலா. தனஞ்செயனுக்கு விமானத்தில் ஏறி அமர்ந்ததும்தான் மனைவி நினைவே வந்தது. சரி இறங்கியதும் அவளிடம் கூறலாம் என விட்டுவிட்டான்.
லீலா சிறிது நேரம் போய்ப் படுத்தார். உறக்கம் வராது போக, எழுந்து அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். சமைத்து முடித்து கணவன் மனைவி இருவரும் உண்ணவும், ராமலிங்கம் அலுவலகத்திற்குக் கிளம்பினார்.
“அவன் போய்ட்டானான்னு ஃபோன் பண்ணி கேளு லீலா...” என ராமலிங்கம் வெளியேறினார். லீலா மகனுக்கு அழைத்து அவன் பத்திரமாய் அங்கு சென்றதை உறுதி செய்தார்.
சிறிது நேரத்திலே மலர்விழி மாறனுடன் வந்து இறங்கினாள்.
“அடடே! வா மலர்... வா மாறா. காலைல தான் உன் புருஷன் கிளம்பி போனான். இப்போ நீ வர்ற? ரெண்டு பேரும் ஒன்னா இருக்கவே முடியுறது இல்லை...” என அவர்களை வரவேற்றார்.
“எங்கப் போய்ருக்காரு அத்தை?” மலர் யோசனையாய்ப் புருவத்தைச் சுருக்கினாள்.
“டெல்லி வரை ஒரு கான்ப்ரென்ஸ்னு போய்ருக்கான் மலர். உன்கிட்ட சொல்லலையா?” லீலா வினவ, “ஒ... அதுவா. சொன்னாரு அத்தை. நான்தான் மறந்துட்டேன்...” என்றவளின் குரலிலேயே மாறன் என்னவென அறிந்து கொண்டான். கண்டிப்பாக இதற்கொரு பஞ்சாயத்து தங்கை வைக்கக் கூடும் என உள்மனம் கூறியது. இனிமேல் எதுவாக இருந்தாலும் அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்வார்கள் என மாறன் ஒதுங்கிக் கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தான்.
லீலாவதி கூறியதும் மலர்விழியின் முகமே விழுந்து போனது. தன்னை இங்கே வரச் சொல்லிவிட்டு இவன் மட்டும் என்னிடம் சொல்லாமல் டெல்லி செல்லலாமா? லீலாவதியிடம் கூறும்போது என்னிடம் ஒரு வார்த்தைக் கூற இவனுக்குத் தோன்றவில்லையா? என ஆற்றமையும் கோபமும் ஒருசேரப் பொங்கியது. கொஞ்சம் தணிந்து மட்டுப்பட்டிருந்தக் கோபம் மீண்டும் அவளின் உச்சியில் வந்தமர்ந்தது.
மாறன் சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றான். மலர்விழிக்கு அவன் சொல்லாமல் சென்றுவிட்டதே மனதை அழுத்த, அறைக்குள் முடங்கிப் போனாள். அங்கு சென்று இறங்கியதும் தனாவிற்கு மீண்டும் மனைவி நினைவு வந்தது. இந்நேரம் அவள் வீட்டிற்கு வந்திருப்பாளே என மனம் கூற, அவளுக்கு அழைத்தான். அழைப்பு ஏற்கவில்லை என்றதுமே தெரிந்து போனது. மலர் தன் வீட்டிற்கு வந்துவிட்டாள் என. சரி, அங்கு சென்றதும் சமாதானம் செய்து கொள்ளலாம் என சென்ற வேலையில் மும்முரமாகிப் போனான்.
“விழி, ஏன் ரூம்லயே அடைஞ்சு கிடக்குற. இங்க வா...” லீலாதான் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார். அவரிடம் இயல்பாய் பேசி சிரித்தாலும், தனா சொல்லாமல் சென்றதே அவளது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அதை நினைத்தே இரண்டு நாட்களையும் ஓட்டியிருந்தாள்.
தனஞ்செயனுக்கும் இரண்டு நாட்கள் பொழுது பட்டென கடந்துவிட, அதிகாலையில் வந்திறங்கினான். லீலா மகன் வருவதை அறிந்து அவனுக்காக விழித்தேக் கிடந்தார்.
அழைப்பு மணி ஒலித்ததும் சில நிமிடங்களிலே அவர் கதவைத் திறக்க, “ம்மா...” எனப் புன்னகைத்தான் தனா. அவனுக்குத் தெரியுமே லீலா தனக்காக காத்திருப்பார் என.
“என்ன டா... போ, போய் குளிச்சுட்டு தூங்கு. நைட்டு சரியா தூங்கியிருக்க மாட்ட!” என அதட்டலிட்டவருக்குத் தலையை அசைத்தவன் அறைக்குள் நுழைய, கட்டிலில் பதுமையாய் உறங்கிக் கொண்டிருந்தாள் மலர்விழி. அவளைப் பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவளிடம் சண்டையிடு என மூளை கூற, மனதோ அந்த எண்ணத்தை தட்டிவிட்டது. ஏற்கனவே அவள் சண்டை போட காரணம் தேடி வைத்திருப்பாள். நானும் எதற்கு தனியாக சண்டையிட வேண்டும் என மனது கேலி செய்தது.
மெல்லிய புன்னகையுடன் அவசரக் குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு வந்தவன், மனைவியின் அருகே படுத்தான். அவனின் அசைவில் மறுபுறம் திரும்பிப்படுத்தாள்.
விழியை நெருங்கிப்படுத்த தனா, அவளது இடுப்பில் கையைப் போட்டு தன்னோடு அணைத்துக்கொண்டான். அந்த ஸ்பரிசம் தூக்கத்தில்
இருப்பவளுக்கு ஏதோ அசௌகரியத்தைக் கொடுக்க, முகத்தைச் சுளித்தாள். சிறி
து நேரம் தானும் தூங்கலாம் என தனஞ்செயனும் உறங்கிப் போனான். கணவனின் அணைப்பில் சுகமாய் உறங்கியவள், எழுந்ததும் சொல்லாமல் கொல்லாமல் சென்றதற்கு சாமியாடிவிட்டாள்.