- Messages
- 1,259
- Reaction score
- 3,689
- Points
- 113
எண்ணம் – 10
வீட்டுக்கதவு திறந்துதான் இருந்தது. வீட்டிற்குள்ளே கோபமும் குழப்பமுமாய் நுழைந்தான் தனஞ்செயன். தனது அறைக்குக் கூட அவன் செல்லவில்லை.
கையிலிருந்த பையை நீள்விருக்கையில் வைத்துவிட்டு, நேராக மலர்விழி அறைக்குள் நுழைந்திருந்தான். அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தவள், அவன் வருகையை எதிர்பாராது ஒரு நொடி திகைத்துப் பின், கேள்வியாய் நோக்கினாள்.
“விழி, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?” தனா கேட்க, அவளது நெற்றியில் யோசனைக் கோடுகள் பரவின. ஆனால், வார்த்தைகள் வரவில்லை.
“நமக்கு கல்யாணமாகி ஒரு மாசம் ஆகப் போகுது. ஒரே வீட்ல ஏதோ ஸ்ட்ரேஞ்ஜர்ஸ் மாதிரி இருக்கோம். இன்னைக்கு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கேட்குறான், என்னடா ஃபேமிலி மேன் எப்படி இருக்கன்னு. அப்பதான் எனக்கு கல்யாணமானதே ஞாபகம் வந்துச்சு. அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கை இருக்கு டி...” ஆதங்கமாய்க் கூறியவனை அழுத்தமாய்ப் பார்த்து வைத்தாள்.
“உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு தோணுது. என் கூட வாழப் பிடிக்கைலை. அதான் நீ டைவ்ர்ஸ் எதுவும் பண்ணிட்டு, இந்த வாழ்க்கையையும் என்னையும் விட்டுப்போற ஐடியால இருக்க. ரைட்?” கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டவனின் கேள்வியில் இவளுக்கு கோபம் வரத் துவங்கியது.
அவளது பதிலுக்காகக் காத்திருந்தான் தனா. மலர் ஆமாம் என்று கூறினால், அப்படியே கன்னத்தை சேர்த்து அறைய வேண்டும் என்பது போலொரு எண்ணம். இந்தப் பெண் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என்ற ஆதங்கமும் ஆற்றாமையுமாய் நின்றிருந்தான்.
“ஏன், உங்களுக்கு டைவர்ஸ் எதுவும் வேணுமா?” என்றவளிடம் இயல்பு தொலைந்திருந்தது. இறுகிப் போயிருந்தவளின் கரங்களிலிருந்த விளக்கமாறு
கீழே விழுந்திருக்க, கைகளைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
“ப்ம்ச்... நான் உன்கிட்ட கேட்டேன்...” தனா எரிச்சலாய் கேட்டான். இந்தப் பெண் எப்போது கேட்ட கேள்விக்குப் பதிலளித்திருக்கிறாள் என்ற எரிச்சல் அது.
“ஓ... என்ன அதிசயமா என்கிட்ட கேட்டுட்டு கன்பார்ம் பண்றீங்க? எப்பவுமே நீங்களா எதையாவது முடிவு பண்ணீட்டு சண்டைதானே போட வருவீங்க?” இப்போது மலர்விழி கேலியாகக் கூற, தனஞ்செயனுக்குக் கோபம் வந்தது.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை விழி...” தனா இரைந்தான்.
“சரி, ஆமான்னு சொன்னா என்ன பண்ணப் போறீங்க? என்னை டைவர்ஸ் பண்ணீட்டு வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” என மீண்டும் அவளது குரலில் நக்கல் தொனிதான்.
அதில் மொத்தமாய் சீண்டப்பட்டவன், “நீ பேசுறதைப் பார்த்தா, உனக்குத்தான் அப்படியொரு எண்ணம் இருக்கு போல...” என்றவன் அவளை நெருங்கி வலதுகையைப் பிடித்திழுத்தான்.
தனாவை முறைத்துக்கொண்டே தனது கையை இழுக்கப் போராடியவள், மற்றைய கையால் அவன் மார்பில் வைத்து தள்ளினாள். அந்தக் கையையும் லாவகமாகப் பிடித்தவன், “டைவர்ஸ் பண்ணணும், பிரிஞ்சுப்
போகணும்னு எண்ணமெல்லாம் இருந்தா, இப்போவே அழிச்சிடு விழி. அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்க வாய்ப்பே இல்லை. உனக்குப் பிடிச்சாலும், பிடிக்கலைனாலும் இதுதான் நிஜம், இந்த வாழ்க்கைதான் நிதர்சனம். அதைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு...” என்றவனின் சுவாசக் காற்று முகத்தில் மோத, இவளுக்கு லேசாய் மூச்சடைப்பது போலிருந்தது.
“கையை விடுங்க முதல்ல. நீங்களா எதாவது மனசுல முடிவெடுத்துட்டு வந்து என்கிட்ட கேட்குறது. உங்களுக்கு டைவர்ஸ் பண்ணணும்னு எண்ணம் இருக்கும்னு நான் நினைக்கிறேன். ஒன்னும் பிரச்சனை இல்லை, உங்க அம்மா, அப்பா, அதான் என் அத்தை, மாமாகிட்ட சொன்னா போதும். அவங்க நல்லா வாங்குவாங்க...” பல்லைக் கடித்தவள், முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பினாள். அருகிலிருந்தவனின் உடல் இவள் மீது மொத்தமாய் சமீபித்திருந்தது.
உதட்டைச் சுழித்தவன், “நான் பேசுனதை நீ வீட்ல சொன்ன, நீ தனியா ரூம்ல படுக்குறதை நானும் அம்மாகிட்ட சொல்லுவேன். எப்படி வசதி?” என கேலியாய் நகைத்தவனைப் பார்த்து இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
அவனை உதறித் தள்ளியவள், “கஷ்டப்பட்டு கடன் வாங்கி, வீட்டை அடகு வச்சு எங்க அம்மா, அப்பா சீர் செஞ்சு கல்யாணம் பண்ணிக் கொடுப்பாங்களாம். இவர் டைவர்ஸ்னு வந்து நிப்பாராம். உங்க எண்ணமே இப்படித்தான் போல. அதான் என்கிட்ட போட்டு வாங்குறீங்க..” என மீண்டும் நக்கல் பேச்சிற்கு தாவினாள் மலர்விழி.
“வார்த்தையை அடக்கிப் பேசு டி...” என்றவன் கோபத்தைக் கட்டுப்படுத்த தலையைக் கோதினான்.
“என்ன வாயை அடக்கிப் பேசணும்? ஹம்ம்... சும்மா இருந்தவளை நீங்கதான் சீண்டுறீங்க. நான் உங்ககிட்ட வந்து டைவர்ஸ் கேட்டேனா? நீங்க என்ன சொல்றது, டைவர்ஸ், பிரிஞ்சுப் போகலாம் அப்படின்னு எதாவது பேச்சை எடுத்துட்டு வந்தீங்கன்னா, நான் மனுஷியாய் இருக்க மாட்டேன்...” என அழுத்தமும் கோபமாய் பேசிவளின் முகம் சிவந்திருந்தது. அத்தனை சினத்துடன் கத்தினாள்.
“என்ன டி பண்ணுவ?” என்ற தனா அவளது கையைப் பிடித்து முதுகுபுறம் திருப்பினான். இந்தப் பெண் அவனது பொறுமையை மொத்தமாய் சோதித்தாள்.
“கையை விடுங்க முதல்ல...” என அவனை முடிந்தளவிற்கு முறைத்தாள் மலர்விழி. கணவன் பிடித்தது வலிக்கவில்லை. ஆடவனின் அருகாமைதான் இம்சையைக் கூட்டியது. அதை பொறுக்க முடியாது மலர் பல்லைக் கடித்தாள்.
மலர்விழி இரண்டு சுரிதார்களை துணி தைத்துக்கொடுப்பவரிடம் கொடுத்து தைத்து வைக்குமாறு முன்பு கொடுத்திருந்தாள். அந்த சுரிதார் இப்போதுதான் லோகநாயகியின் கைக்கு வந்திருந்தது. மாறன் ஏதோ வேலையாக வெளியே செல்ல, அவனிடம் கொடுத்தனுப்பி இருந்தார்.
அவனும் மலர்விழியைப் பார்த்து பத்து நாட்கள் மேலாகிறது என அவளது வீட்டிற்கு வந்திருந்தான். அழைப்புமணி அழைத்தும் ஒருவரும் கதவைத் திறக்கவில்லை. உள்ளே ஏதோ சண்டை போல சத்தம் கேட்க, ஒரு நொடி தயங்கியவன் பின் வீட்டிற்குள்ளே நுழைந்தான்.
மலர்விழியின் அறை திறந்திருக்க, தனா அவளை சுவற்றில் சாய்த்து கைகளை மடக்கியிருந்ததைக் கண்டவன் பதறிப் போனான்.
“டேய், தனா என்ன டா பண்ற?” என கோபமாகக் கேட்டுக்கொண்டே மாறன் அவர்கள் அருகில் செல்ல, அவனை எதிர்பார்க்காது இருவரும் திகைத்தனர். மலர் பட்டென தனஞ்செயனின் கையை உதறிவிட்டாள்.
“வா மாறா, எப்போ வந்த?” ஒரு நொடி தன்னை நிலைப்படுத்தியவாறு வினவினாள் மலர்விழி.
“என்ன நடக்குது இங்கே? என்ன தனா இது?” என மாறன் தனஞ்செயனைப் பார்த்துக் கோபமாய் வினவினான். தனாவிற்கு என்ன பதில் உரைப்பதென தெரியவில்லை. மாறனின் பார்வையில் அவனுடைய கோபம் நியாயமானதுதான் என மனம் கூற, பதில் கூறாது அவனை சங்கடமாகப் பார்த்தான்.
“என்ன... என்ன நடக்குது? ஒன்னும் இல்லை மாறா...” மலர் மாறன் கையைப் பிடித்தாள்.
“ஒழுங்கா என்ன நடந்ததுன்னு இப்போ சொல்ற மலர்...” மாறனின் குரலில் கடுமையேறியிருந்தது.
ஒரு நொடி விழிகளைத் மூடித் திறந்தவள், “ஒன்னும் இல்லண்ணா. சும்மா பேசிட்டுதான் இருந்தோம். நீ நினைக்கிற அளவுக்கு எதுவும் இல்லை...” என அவன் கையை அழுத்தினாள்.
“உனக்கு என்கிட்ட பொய் சொல்ல வருமா மலர்?” தங்கையை ஆழ பார்த்து மாறன் வினவ, அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்துவிட்டாள் பெண்.
“பதில் சொல்லு மலர்...” மாறன் மீண்டும் கேட்க, “இப்போ உனக்கு என்ன பதில் சொல்லணும். அதெல்லாம் ஒன்னும் இல்லை மாறா. என் புருஷனுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும். நீ எங்களுக்கு இடையில வராத...” என்றாள் பேச்சைக் துண்டிப்பது போல. தனஞ்செயன் மலரின் பதிலில் ஆச்சரியமாக அவளை நோக்கினான்.
“ப்ம்ச்... என் கண்ணு முன்னாடி அவன் உன் கையைப் பிடிச்சு முறுக்குவான். நான் அமைதியா இருக்கணுமா?” மாறன் தனாவைக் கோபமாகப் பார்த்து உரைத்தான்.
“ச்சு... என்ன மாறா வேணும் உனக்கு இப்போ?” மலர் சலிப்பாய்க் கேட்டாள்.
“எதுக்காக அவன் உன் கையை முறுக்குனான்?” மீண்டும் அந்தக் கேள்வியையே மாறன் வினவ, மலர்விழி எரிச்சலானாள்.
“மாறா, எங்களுக்குள்ள சின்ன பிரச்சனை. அதான் அவர் கையை லேசாப் பிடிச்சாரு. கையை முறுக்கவெல்லாம் செய்யலை. என் கை ரொம்ப நல்லா இருக்கு...” என கையைத் தூக்கி இரண்டு புறமும் திருப்பிக் காண்பித்தவள், “நான் முன்னாடியே சொன்னதுதான். நான் உங்ககிட்டே பிரச்சனைன்னு வந்து நின்னா, நீ எனக்காக கேளு. இப்போ அப்படியெதுவும் இல்லை!” அழுத்தமாய் மாறனுக்குப் புரியும்படி அவள் கூற, தனா அவளது பேச்சைக் கேட்டவாறு வெளியேறியிருந்தான். இந்த ஜென்மத்தில் மலர்விழி அவனுக்குப் புரியாத புதிர்தான். விடை தேடியே வாழ்க்கை ஓய்ந்துவிடும் போல என எண்ணம் தோன்றியது. இத்தனை நேரம் தன்னுடன் சரிக்கு சமமாய் பேசியது என்ன? இப்போது தனக்கு ஆதரவாக மாறனிடன் சண்டையிடுவது என்ன? எது உண்மை? எது பொய்? மூளையும் மனதும் குழப்பத்திற்குச் சென்றது.
தனா சென்றதும் கதவை அடைத்த மாறன், “என்ன நடக்குது மலர்? இப்படி ரெண்டு பேரும் சண்டை போடுறதுக்கா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்? சந்தோஷமா வாழ்றதைப் பார்க்குறதுக்குத்தானே?” என்றான் கோபமும் ஆயாசமுமாய்.
“ஆமா, நீதானே தனாவோட வாழ்ந்தா, என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்ன. அதான் ரொம்ப நல்லா இருக்கு...” நக்கலும் நையாண்டியுமாய் கூறினாள். அவளைக் கோபமாய் பார்த்தான் மாறன்.
“நான் தான் முன்னமே சொன்னேன் இல்லை மாறா, என்னோட கோப குணத்துக்கும் அவரோட குணத்துக்கும் ஒத்துப் போகாதுன்னு...” இப்போது அவளது குரலில் லேசான வருத்தம் இருந்தது.
“ஒத்து வராதுன்னு தெரிஞ்சு தான் அவனை லவ் பண்ணீயா?” மாறன் கேள்வி அழுத்தமாய் வந்து விழ, இவளிடம் பதிலில்லை. தலையைக் குனிந்துகொண்டாள்.
“ஒத்து வராதது குணமா? இல்லை பணமா?” என்ற மாறன் கேள்வியில் இவளது விழிகள் பனித்துவிட்டன. முகம் சிவந்து மலர் தலையை வேறு புறம் திருப்பினாள். அவளைக் காயப்படுத்தக் கூடாது என்றுதான் மாறன் எதையும் பேச முயற்சிக்கவில்லை. ஆனால், இப்போது சூழ்நிலை. அமைந்துவிட்டது. இப்படியே விட்டால் இவர்கள் என்றைக்கு தங்கள் வாழ்க்கையை நன்றாய் வாழ்வது. ஒரு அண்ணனாய் அவனுக்கும் மலர் வாழ்க்கையைப் பற்றிய பயம் மனதினோரத்தில் இருந்தது.
ஒரு நொடி தன்னை நிதானப்படுத்தி மூச்சை வெளிவிட்டவன், “மலர், இங்க வா...” என அழைத்தான். அவனைப் பார்த்து நின்றிருந்தவள், இமையை சிலுப்பி அதிலிருந்த நீரை வெளியேற்ற முயன்றாள். மாறன் தங்கையை நோக்கி கையை நீட்டவும், மறு கணம் தமையனை இறுக அணைத்திருந்தாள் மலர். அவளது தலையை ஆதரவாகத் தடவினான் மாறன். மலரிடம் மெல்லிய விசும்பல். மாறனுக்கு மனம் வலித்தது. தாய், தந்தை அவளை அதட்டினால் கூட இவன்தான் எப்போதுமே மலருக்கு ஆதரவாய்ப் பேசுவான். அவளது கண்ணீரை இவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. சிறுவயதிலிருந்தே அப்படித்தான். அடித்தாலும் பிடித்தாலும் ஒருவரை ஒருவர் எங்கும் எதிலும் விட்டுக் கொடுத்தது இல்லை. இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
“ஏன் டா?” என மாறன் பாசமாய் வினவ, தங்கையின் அழுகை அதிகமானது.
“தெரியலை ண்ணா... திடீர்னு எதையும் என்னால ஏத்துக்க முடியலை. எங்களோட குணம், அதைவிட ரெண்டு குடும்பத்துக்கும் இடையில இருக்க ஸ்டேட்டஸ். இது ரெண்டும் என்னை நானா இருக்கவிடலை...” என்றாள் தேம்பலுடன். அவளது அழுகை சில நொடிகள் நிற்கட்டும் எனக் காத்திருந்தவன்,
“மலர், ஸ்டேடட்ஸ் அந்தஸ்து எல்லாம் வெறும் பணத்தை வச்சு வர்றது. நீ இந்த தனாவை தானே விரும்புன? அப்பவும் இப்பவும் அவன் ஒரே மாதிரிதான் டா. அவனோட குணம் கண்டிப்பா உன்னை அனுசரிச்சுப் போகும்...” என்ற மாறனை நிமிர்ந்து பார்த்துக் கண்களைத் துடைத்தவள், “இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன அனுசரிச்சுப் போன மாதிரியா மாறா?” என்றாள் சிவந்த விழிகளுடன்.
அவளை முறைத்தவன், “இந்த வாய்தான் உனக்கு
அடங்க மாட்டுது...” என்றான்.
“எனக்கு நியாயம்னு தோன்ற இடத்துல கண்டிப்பா நான் பேசுவேன்...” இப்போது முறுக்கிக் கொண்டாள் மலர்.
“ப்ம்ச்... எல்லா இடத்திலயும் பேசணும்னு அவசியம் இல்லை. சில இடத்துல அமைதியா போனா, பிரச்சனையைத் தவிர்க்கலாம்...” என்றவனை முறைத்தாள் தங்கை.
“என்ன முறைக்கிற... உன் வாய் அடங்காது. பேசாம உன்ன டைவர்ஸ் பண்ணிட்டு தனாவுக்கு வேற நல்ல அமைதியானப் பொண்ணா பாரத்துக் கல்யாணம் பண்ணி வச்சிட்றேன்...” மாறன் விளையாட்டிற்குக் கூற, கையில் அகப்பட்டதை அவன்மீது தூக்கி எறிந்திருந்தாள் மலர்விழி.
“கொன்னுடுவேன், அவனையும் உன்னையும் சேர்த்து...” என்றவள், “இப்போ இதேமாதிரி பேசித்தான், வெளிய ஒருத்தன் வாங்கி கட்டீட்டு இருக்கான்!” என்றாள் மலர்விழி.
அவளது பேச்சில் நெற்றியை சுருக்கிய மாறன், “டைவர்ஸ் கேடடானா தனா?” என வினவினான்.
“ச்சு...” எனத் தன்னையே கடிந்த மலர், நடந்த விவாதத்தை தமையனிடம் விளக்கினாள்.
“ஏன் மலர், நான் அப்போவே உன்கிட்ட சொன்னேன். அவன்கிட்ட சண்டை போடாத. ஒரு ஃப்ரெண்ட்-ஆ இருக்கப் பாருன்னு. உன்னோட பிகேவியர்தான் அவனை இப்படி யோசிக்க வச்சிருக்கு...” மாறன் கண்டிப்பான குரலில் கூறினான்.
“போ டா... நீ அவனுக்குதானே சப்போர்ட் பண்ணுவ?” என்று முகத்தைக் கோணியவள், “இப்போ எதுக்கு வந்தேன்னு சொல்லு...” என்றவாறே கதவைத் திறந்து வெளியேறினாள்.
‘ஷப்பா... இவளை மாத்துறது ரொம்ப கஷ்டம். தனா பாவம்!’ என நினைத்தவன் தனஞ்செயன் அறைக்குள் நுழைந்தான். இவனைப் பார்த்ததும் தனா எழுந்து நின்றான்.
“மாறா, நீ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கிட்ட டா...” தனா தன் பக்கத்தைக் கூற முனைந்தான்.
“எனக்கு எல்லாம் தெரியும் தனா. உங்க ரெண்டு பேர் மேலயும் சரி சமமா தப்பு இருக்கு. அதுக்காக நீ அவ மேல கை வைக்கலாமா? இந்தப் பழக்கம் இன்னைக்குத்தான் கடைசியாக இருக்கணும். அவ மேல சின்ன அடிபட்டா கூட, நான் உன் ஃப்ரெண்ட் மாறனா இருக்க மாட்டேன் டா. அவளுக்கு அண்ணனா பேச வரும். இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கணும்!” என்ற மாறன் குரலில் அதிகபட்ச கண்டிப்பு.
“டேய், நீ பேசுறதைப் பார்த்தா, நான் என்னமோ உன் தங்கச்சியைக் கொடுமைப்படுத்துற மாதிரி இருக்கு டா. அவ பண்றதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலை. இத்துனூண்டு இருந்துட்டு மனுஷனைப் போட்டு இம்சை பண்றா டா. எதை பேசுனாலும் அதுக்கு எதிரா பேசுறது, சண்டை போட்றது... ச்சு போடா... வாழ்க்கையே வெறுக்குது டா!” உட்சபட்ச வெறுப்பும் ஆதங்கமுமாய் பேசிய தனாவைப் பார்த்து இவனுக்குப் பாவமாய் போய்விட்டது.
“டேய்...” என்ற மாறனின் கையைத் தட்டிவிட்ட தனா, “ப்ளீஸ், அவ அப்படித்தான். அட்ஜஸ்ட் பண்ணு, புரிஞ்சுக்க முயற்சி பண்ணுன்னு மட்டும் சொல்லாத டா. அவ என்கிட்ட பேசவே தயாரா இல்லை. அப்புறம் எப்படிடா அவளை நான் புரிஞ்சுக்கிறது?” என்றவன், “இந்த மூவிஸ்ல வர்ற மாதிரி கண்ணைப் பார்த்து, ஹார்ட்டைப் பார்த்து புரிஞ்சுக்கிறது எல்லாம் எனக்கு வராது டா!” என்றவனின் குரல் முழுவதும் ஆதங்கம்தான்.
“சரி, என்கிட்ட அவளா பேச மாட்றா. நானா போய் பேசுனா கூட, எதாவது பிரச்சனை பண்ணி அம்மா, அப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறா டா... சைல்ட் மாதிரி அவங்க என்னை ட்ரீட் பண்றாங்க. ஐ யம் 29 நவ். பட், எனக்கு அப்படித் தெரியலை. பேசாம உன்னை மாதிரி சிங்கிளா சந்தோஷமா இருந்திருக்கலாம் போல...” என்றவனைப் பார்த்து மாறன் சிரித்துவிட்டான்.
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம். உனக்கு கஷ்டம் என் தங்கச்சி ரூபத்துல...” என மாறன் கூற, தனா சிரித்துவிட்டான்.
“மாறா காஃபி...” என கையில் குவளையோடு உள்ளே நுழைந்த மலர், தமையனின் பேச்சில் பல்லைக் கடித்தாள். அவளைப் பார்த்து மாறன் சிரிக்க, அவனை முறைத்துவிட்டு குவளையை மேஜை மீது நங்கென வைத்துவிட்டு நகர்ந்தாள்.
“சாத்தானைப் பத்திப் பேசுனா, சாத்தானே வந்து நிக்கிது பாரேன்...” மலர் சென்றதை உறுதி செய்த தனா கூற, “டேய், அவ என் தங்கச்சி டா. நீ எப்படி சாத்தான்னு சொல்லலாம்?” என மாறன் நண்பனிடம் பாய்ந்தான்.
“ஃபார் அ கைண்ட் இன்பர்மேஷன், அவ இப்போ என் பொண்டாட்டி டா. அவளை சாத்தான்னு சொல்ல எனக்கு எல்லா உரிமை இருக்கு...”
“இருக்கும் டா... இருக்கும்...” என இழுத்த மாறன், நண்பன் சரியாகிவிட்டான் என்பதை உணர்ந்தான்.
“தனா, நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன் கேளு டா...” என்ற மாறனை தனஞ்செயன் கேள்வியாக நோக்கினான்.
“மலர் இந்த ஜென்மத்துல உன்னைவிட்டு பிரிஞ்சுப் போக நினைக்க மாட்டா டா. அவ எந்த இடத்திலயும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டா. ஈவன், என்கிட்ட, அப்பா, அம்மாகிட்ட கூட உனக்காக சண்டை போடுவா, போட்டிருக்கா. நீயே பார்த்த இல்லை?” என்ற மாறனை தனா முறைத்தான்.
“நீ நம்பலை இல்ல. சரி, மலர் இந்த ஒரு மாசத்துல ஒரு வார்த்தையாவது உன்னைப் பிடிக்கலை, பிரிஞ்சுடலாம்னு சொல்லி இருக்காளா? எங்கேயாவது உன்னை விட்டுக்கொடுத்து இருக்காளா?” என மாறன் வினவ, தனஞ்செயன் யோசித்தான்.
மூளை மனது என எந்த இடத்திலும் மாறனின் கேள்விக்குப் பதிலில்லை. ஏன், கை வீங்கிய பொழுது கூட தன், தாய் தந்தையிடம் பொய்தான் உரைத்திருந்தாள். அவனைக் குறையாய் கூறவில்லையே. எத்தனை சண்டை அவர்களுக்கு இடையே நிகழ்ந்த போதும், அவனை மலர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததாய் நினைவில்லை. அதற்கு சான்று சற்று முன் மாறனிடம் அவள் பேசிய பேச்சுக்களே. தனா மாறனைப் பார்த்து தலையை இடம் வலமாக இல்லையென அசைத்தான்.
“ஹம்ம்... அப்போ நான் சொல்றது உண்மைன்னு புரிஞ்சுக்கோ டா. எல்லாத்தையும் என்னால வெளிப்படையா சொல்ல முடியலை. ஷி லைக்ஸ் யூ மோர். என்ன அவளுக்கு கொஞ்சம் கோபம். அது குறைஞ்சதும் அவ உன்கிட்ட நார்மலா பேசுவா...” மாறன் கூற, அவனை யோசனையாய்ப் பார்த்த தனா, “டேட் எதுவும் உன் தங்கச்சி கிட்டே வாங்கித் தாடா, அவ கோபம் எப்போ முடிவுக்கு வரும்னு...” என்றவனைப் பார்த்து மாறன் தலையில் அடித்துக்கொண்டான்.
“இந்த ஜென்மத்துல நீ சாமியார் தான் டா...” என் சாபம்விட்ட மாறன், ‘நான் சொன்ன அத்தனையும் விட்டுட்டு எதை கேட்குறான்...’ என மச்சானை மனதிற்குள் அர்ச்சனை செய்துவிட்டு விடை பெற்றான்.
நேரமாவதை உணர்ந்த மலர் உணவை மேஜைமீது எடுத்து வைத்துவிட்டு பத்து நிமிடங்கள் காத்திருந்தாள். தனஞ்செயன் வருவதாய் தெரியவில்லை.
அலைபேசியை எடுத்து மாறனுக்கு அழைத்தவள், “மாறா, சாப்பிட வரலையா?” என சத்தமாக அழைத்தாள்.
“நான் எதுக்கு மலர் சாப்பிட வரணும்?” வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவன் குழப்பமாய் வினவினான்.
“உன்னைத்தான் கூப்பிட்றேன். சாப்பிட வரலையா?” என மலர் மீண்டும் வினவ, மாறனுக்கு மண்டையில் மணி அடித்தது.
“வந்தேன்னு வை மலர்... வெளு வாங்குவ...” எனக் கடுப்புடன் அழைப்பைத் துண்டித்தான்.
மலர் தன்னிடம் தான் பேசுகிறாள் என்பதை உணர்ந்த தனா, வேண்டுமென்றே அறைக் கதவை அடித்துச் சாற்றினான். அவனது செயலில் உதட்டைச் சுழித்தவள், உணவை எடுத்து உண்டுவிட்டு அறைக்குள் நுழைந்து லீலாவதிக்கு அழைத்தாள்.
எப்போதும் போல சம்பிரதாயப் பேச்சுகள் முடிவடைய, “அத்தை, உங்கப் புள்ளை இன்னும் சாப்பிடலை. கூப்பிட்டா வர மாட்றாரு. நீங்கப் போன் பண்ணி என்னென்னு கேளுங்க...” என்றாள். மகன் உண்ணவில்லை எனக் கேட்டதும் லீலா தனாவிற்கு அழைத்துவிட்டார்.
“என்ன மா பண்ற? அப்பா என்ன பண்றாரு?” தனஞ்செயன் வினவினான்.
“ரெண்டு பேரும் சாப்ட்டு படுத்துட்டோம் டா. நீ ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க?” என வினவினார்.
“ச்சு... பசிக்கலை மா!”
“தனா, சாப்பாட்டை கட் பண்ணக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அம்மாவுக்காகப் போய் சாப்பிடுடா!” என லீலா மகனிடம் கெஞ்சினார்.
அவரை வருத்த வேண்டாம் என நினைத்தவன், “சரி மா, சாப்பிட்றேன்...” என அழைப்பைத் துண்டித்தான்.
‘இவளை...’ எனப் பல்லைக் கடித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறியவன், “விழி, கதவைத் தொற...” என்றான் ஆத்திரமாய். அவளிடம் பதிலில்லை.
சாப்பிட்டதும் உறக்கம் வருகிறதென காலையில் படித்துக் கொள்ளலாம் என புத்தகத்தை மூடி வைத்துவிட்டு விளக்கை அணைத்து அப்போதுதான் மெத்தையில் விழுந்திருந்தாள். தனா கண்டிப்பாக வருவான் எனத் தெரிந்து கதவை தாழ் போட்டிருந்தாள்.
“விழி... இப்போ கதவை தொறக்கப் போறீயா இல்லையா?” பற்கள் நரநரக்கும் சத்தம் மலர் செவியில் விழுந்தாலும் அவள் அசையவில்லை. சாவி தன்னிடம் இருக்கும்போது அவன் உள்ளே வர வாய்ப்பில்லை என இறுமாப்பாய்ப் படுத்திருந்தாள்.
வீட்டின் உரிமையாளர் தனாவிடம் மாற்றுச் சாவி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதை எடுத்து வந்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்திருந்தான்.
‘என்ன சத்தம்?’ என மலர் போர்வையை விளக்க, இருட்டில் மெத்தயருகே சென்றவன் கால் இடறி அவள் மீது மொத்தமாய் விழுந்திருந்தான். இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை.
தனஞ்செயன் மொத்த உடலும் மலர்விழியின் மீதுதான். அவனது பாரத்தைத் தாங்காது அவளுக்கு மூச்சுவிடுவது கடினமாகிப் போனது. போதாதற்கு சரியாய் அவனது முகம் இவளது கழுத்தில் புதைந்திருக்க, மீசை முடிகள் இவளை குறுகுறுக்கச் செய்தது. மலர் அவஸ்தையில் நெளிந்தாள்.
தனஞ்செயன் ஒரு நொடி மனைவியிடம் தடுமாறிப் போனான். அவளின் ஸ்பரிசமும் சுகந்தமும் இவனை லேசாய் மயங்கச், மங்கச் செய்திருந்தது. ஒருமாதிரி விழிப்பும் மயக்கமுமாய் மோன நிலையிலும் இருந்தான். புதுதாய் உணர்ந்த அவளின் உணர்வு இவனை பேச்சிழக்கச் செய்திருந்தது. பேதாதிற்கு இவனின் கைகள் அவளது மேல் சட்டயைத் தாண்டி மெல்லிடையின் அளவை அளந்து கொண்டிருந்தது.
மலர்விழி இந்த நெருக்கத்தில் தவித்துப் போனாள். தனாவை விலக்கலாம் எனப் பார்க்
க, அவன் இப்போதைக்கு தன்னைவிட்டு நகர்வதாய்த் தெரியவில்லை என உணர்ந்த மலர்,
“சான்ஸ் கிடைச்சா ஒட்டி உரசிட்றது... சே!” என அவள் வார்த்தையைவிட்டிருக்க, தனா ருத்ரமூர்த்தியாகிப் போனான்.