• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
இரவு - 39

மேலும் இரண்டு நாட்கள் கடந்திருக்க, நிவி உடல்நிலை நன்றாக தேறியிருந்தது. இரண்டு மாமியார்களுடன் செல்ல சண்டையிட்டு, தன்னால் இயன்ற உதவியை செய்து கொண்டிருந்தாள்.

"நிவி, சந்த்ரு வந்துட்டான் பாரு. நீ போய் அவனுக்கு பரிமாறு. நாங்க சமையலை பார்த்துக்குறோம்!" என அவளை வெளியே அனுப்பி விட்டார் ஆனந்தி.

அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவன், சாப்பிட மேஜையில் அமர்ந்தான். நிவி அவனுக்கு உணவை பரிமாறினாள்.

குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் ஜோதி. வீரபாண்டி நான்கு நாட்கள் முன்பே வீட்டிற்கு சென்று விட்டார். வேலையில் நிறைய நாட்கள் விடுப்பு கொடுக்கவில்லை.

"மாப்ளை, நான் இங்க வந்து பத்து நாளுக்கு மேல ஆகுது. அவர் அங்க தனியா இருப்பார். அதான் இன்னைக்கு வீட்டுக்கு கிளம்பலாம்னு இருக்கேன்!" என ஜோதி,

"சரிங்க அத்தை... மாமாவும் பாவம். தனியா இருக்காரு. நீங்க கார்லயே போங்க. ட்ரைவர் உங்களை விட்டுட்டு வருவாரு!" உண்டு கொண்டே பதிலளித்தான் சந்த்ரு. அவன் பதிலில் ஜோதி விழித்தார். அதைப் பார்த்த நிவிக்கு சிரிப்பு வந்தது.

"மாப்ளை, நான் மட்டும் போக முடியாது. நிவியும் குழந்தையும் கூட கூட்டீட்டு போறேன். அங்க கொஞ்சம் நாள் வச்சு நான் பார்த்துட்டு அப்புறம் அனுப்புறேன் மாப்ளை." ஜோதி கூற, அவரை பார்த்து புருவத்தை சுருக்கினான் சந்த்ரு.

"ஏன் அத்தை? இங்க தான் அம்மா இருக்காங்க‌. சாந்தி மா கூட இருக்காங்களே! அவங்க ரெண்டு பேரும் நிவியையும் குழந்தையையும் நல்லா பார்த்துப்பாங்க அத்தை!" என்றவனை நிவி முறைத்தாள்.

"டேய்! என்ன பேசுற நீ? அவ அங்க போய் இருக்கது தான் முறை.
நியாயப்படி அங்க தான் அவளுக்கு பிரசவம் பார்த்து இருக்கணும். ஆனால், யுகி கல்யாணம். அவ வராம இருக்க கூடாதுன்னு தான் இங்க இருந்ததே. அவ கிளம்பட்டும்!" ஆனந்தி கூறிக் கொண்டே அவன் தட்டில் தோசையை வைத்தார்.

"ம்மா... அதெல்லாம் அனுப்ப முடியாது. முறை, நுரைன்னுட்டு. போங்க மா. அவ்ளோ தூரம் ட்ராவல் எல்லாம் அனாவசியம். போங்க!" என்றவன், எழுந்து அறைக்குள்ளே சென்று விட்டான்.
ஜோதி என்ன செய்வது என தடுமாற, "இந்த பையன் சொல்ற பேச்சே கேட்குறது இல்லை" என புலம்பினார் ஆனந்தி.

"அத்தை, நான் பேசிக்கிறேன்!" என்றவள், "ம்மா... நீ போய் பேக் பண்ணு. அவரை நான் சம்மதிக்க வைக்கிறேன்" என்று விட்டு நிவி அறைக்குள் செல்ல, முகத்தை தூக்கி வைத்திருந்தான் சந்த்ரு.

அவனருகில் நிவி செல்ல, "என்னடி?" என்றான் கோபமாக.

"ப்ம்ச்... இப்ப எதுக்கு கோபப்படுறீங்க? அப்பா பாவம் இல்லை. தனியா இருக்காரு. அம்மா போகணும். நானும் அங்க போய் ஒரு ரெண்டு மாசம் இருந்துட்டு வர்றேன்!" என்று அவன் நாடி பிடித்துக் கொஞ்சினாள் பாவை.

"அம்மா வீட்டுக்கு போறதுலயே இரு டி!" பல்லைக் கடித்தான் சந்த்ரு.

"ரொம்ப தான் பண்றீங்க நீங்க. டைவர்ஸ் கொடுத்து அனுப்புவராம். இப்போ ரெண்டு மாசம் அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டாராம்!" நிவி வார்த்தையை விட, அதில் சந்தரு முகம் சுருங்கி விட்டது. நாக்கை கடித்தவள், "சாரி சந்த்ரு!" என அவனை தொட, "ச்சு... போடி!" என்றான்.

அவன் மடியில் சட்டமாக அமர்ந்தவள், "சாரி... சாரி. அது எதோ வார்த்தையா வந்துடுச்சு. சாரி சந்த்ரு. ப்ளீஸ்!" என அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள்.

"மனசுல இருக்கது தான் பேசும் போது வரும்!" கடின குரலில் கூறியவனின் கைகள் அவளை அணைக்கவில்லை.

"அது... பொம்பளைங்கன்னா அப்படி தான். ஆயிரம் நினைப்போம். உங்களை மாதிரி மறப்போம், மன்னிப்போம்ன்னு எல்லாம் இருக்க முடியாது. அப்போ அப்போ ஆதங்கத்துல வார்த்தையை விட தான் செய்வோம். அதுக்காக அதையே பிடிச்சு தொங்காதீங்க. அதான் சாரி கேட்டேன் இல்லை!" என அவன் கையை எடுத்து தன் இடுப்பை சுற்றிப் போட்டுக் கொண்டாள்.

"விடு டி!" என கைகளை உதற முயன்ற சந்த்ரு, "உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு டி!" என்றான்.

"அதை மூஞ்சியை சந்தோஷமா வச்சு சொல்ல வேண்டியது தானே?" நிவி பேச, அவனிடம் பதில் இல்லை.

ஆடவன் முகத்தை தன் புறம் திருப்பியவள், "சாரிங்க. அதான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன் இல்லை. சாரி" என அவன் நெற்றியில் முத்தமிட்டவள், "சாரி... சாரி..." என்று அவன் விழிகளில் முத்தமிட்டாள்.

"அம்மா பாவம் இல்லை. அவங்களுக்கும் என்னை பக்கத்துல வச்சு பார்த்துக்கணும்னு ஆசை இருக்காதா? ஆம்பளைங்க மாதிரி இல்லையே பொண்ணுங்க. கல்யாணம் பண்ணிக் கொடுத்ததும், வளைகாப்பு, குழந்தை பொறந்ததுன்னு பொறந்த வீட்டுக்கே விருந்தாளி மாதிரி தானே போய் தங்கீட்டு வரோம். நான் போய்ட்டு சீக்கிரமா வரேன்!" என அவன் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள்.

அவள் இடையை தன்னோடு இறுக்கி, கழுத்தில் முகத்தைப் புதைத்தவன், அவள் முத்தத்திலே சமாதானமடைந்து இருந்தான்.
சில நொடிகள் மௌனமாக கழிய, "கண்டிப்பா போகணுமா டி?" என ஏக்கமாக கேட்டான். அதில் நிவிக்கு இதழ்கள் லேசாக புன்னகைக்க, அவன் தலைமுடியை கோதினாள்.

"ரெண்டு மாசம் எல்லாம் ரெண்டு வாரம் போல ஓடிடும். போய்ட்டு வர்றதே தெரியாது. டெய்லி உங்களுக்கு வீடியோ கால் பண்ணி நானும் பாப்பாவும் பேசுவோம். ஹ்ம்ம்..." என அவன் நெற்றியில் முத்தமிட்டாள். ஆடவன் எதுவும் பதில் பேசவில்லை.

"என்ன ப்பா?" என தலையை கோத கொண்டு சென்றவளின் கைகளை பிடித்துக் கொண்டவன், "ஐ லவ் யூ!" என உள்ளங்கையில் முத்தமிட்டான். முகம் முழுவதும் புன்னகை பரவியது பெண்ணுக்கு.

"நானும் தான் லவ் யூ!" என அவள் கூறி முடித்ததும், அவள் உதட்டில் தன் உதட்டைப் பொறுத்தி, அவளது அதரங்களை சிறை செய்திருந்தான். மென்மையாக ஆரம்பித்த முத்தம் பின் வன்மையாக மாறிய போது, ஆடவன் கைகள் அவள் உடலை ஆராய துவங்க, சரியாக அதே நேரம் குழந்தை சிணுங்கினாள்.

அதில் இருவரும் விலக, சந்த்ரு முகத்தை தூக்கினான். நிவிக்கு புன்னகை அரும்பியது. "உங்க குழந்தை தான்!" என அவனிடமிருந்து எழுந்து சென்று குழந்தை தொட்டிலை சில நொடிகள் ஆட்டினாள். சிணுங்கிய குழந்தை உறக்கத்தை தொடர, பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டான் சந்த்ரு.

அவன் கை மீது தன் கையை வைத்தவள், "போதும் உங்க ரொமான்ஸ். என் பின்னாடியே சுத்தீட்டு இருக்காம ஆஃபிஸ் கிளம்புங்க. டைமாகுது" என நிவி கூற, "இல்லை, நானே உன்னை விட்டுட்டு வரேன் டி!" என்றான்.

"எதுக்கு? அதெல்லாம் அவசியம் இல்லை. உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்குன்னு எனக்கு தெரியும். சும்மா என் பின்னால சுத்தாம, கிளம்புங்க. நாங்க ஈவ்னிங் தான் கிளம்புவோம். அப்ப வந்தா போதும். ட்ரைவர் அண்ணா கொண்டு போய் பத்திரமா விடுவார். கிளம்புங்க!" என அவனை தன்னிடமிருந்து பிரித்தாள்.

முன்புறம் திரும்பியதும் இடையை வளைத்து அணைத்துக் கொண்டவனின் மூக்கு நிவியின் மூக்கோடு உரச, "நிவி!" என்றான் சிணுங்கலாக, கெஞ்சலாக கொஞ்சலாக. அதில் அவளுக்குமே கணவனைப் பார்த்து பாவமாய் போய்விட்டது.

'இன்னும் கொஞ்சம் நேரம் போச்சுன்னா, என்னையே மாத்துனாலும் மாத்திடுவாரு!' என நினைத்து அவனிடமிருந்து பிரிந்து வழுக்கட்டாயமாக அலுவலகத்திற்கு அனுப்பி விட்டாள்.

குழந்தையை ஒரு முறை பார்த்து விட்டு, குளித்து வந்து தேவையான உடைகள் பொருட்கள் என எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். குழந்தைக்கு என்ன வேண்டும் என யோசித்து ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, வித்யாவும் அவளுக்கு உதவினாள்.

நேரம் மாலையை தொட்டதும் சேலையை மாற்றி, குழந்தையையும் கிளப்பினாள். எல்லாம் எடுத்து வைத்து தாயாராக இருக்க, யுகி வந்து விட்டான்.

"என்ன நிவி, எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சா?" என கேட்டு பை அனைத்தையும் எடுத்து மகிழுந்தில் வைத்தான். பின் மகிழுந்தை ஒரு முறை சரி பார்த்தான்.

"அண்ணா! பெட்ரோல் எல்லாம் இருக்கு தானே? டயர்ல காத்து எல்லாம் ஃபுல்லா தானே இருக்கு?" என நூறு கேள்வி கேட்டுவிட்டே விட்டான் யுகி.

"மாமா, பாவம் ட்ரைவர் அண்ணா!" என நிவி சிரிக்க, "ரொம்ப படுத்துறீங்க அவரை!" என வித்யாவும் சலித்துக் கொண்டாள்.

அவர்கள் பேச்சை காதில் வாங்காதவன், குழந்தையை கைகளில் வாங்கி, அவளிடம் எதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

"ம்க்கூம்... இப்பவே ரெண்டு பேருக்கும் ரகசியமா?" என நிவி கேட்க, "ஆமா! எனக்கும் என் பொண்ணுக்கும் ஆயிரம் இருக்கும்" என்றவனின் புன்னகை கண்களை எட்டி இருந்தது. குழந்தையின் முகம் சந்த்ரு போல அமைப்பு இருந்தாலும், குட்டி நிவியாக தான் அவனுக்கு தெரிந்தாள்.

"என்னக்கா, சந்த்ரு மாமாவை காணோம்?" என வித்யா கேட்கும் போதே சந்த்ரு உள்ளே நுழைந்தான்.

அவனைப் பார்த்ததும் நிவி கண்களை விரித்தாள். "என்னங்க இது?" பின் கண்ணை சுருக்கி பெண் முறைக்க, "கடையில பாதியை காலி பண்ணிட்டீயா டா சந்த்ரு?" என ஆச்சரியமாக வினவினார் ஆனந்தி.

"ம்மா... குழந்தைக்கு தான் மா. கொஞ்சம் ட்ரெஸ் அப்புறம் விளையாட பொம்மைங்க" என்றவனின் கைகள் முழுவதும் நெகிழிப் பைகள் நிரம்பி வழிந்தது.

"போதுமா சந்தரு?" சாந்தி சிரிக்க, "சாந்தி மா!" என முறைத்தவன், மகிழுந்தின் பின்புறம் எல்லாவற்றையும் வைத்தான். பின் நிவி அருகில் சென்று நின்றவனின் பார்வை குழந்தையிடம் நிலைக்க, யுகி குழந்தையை நிவியிடம் கொடுத்தான்.

"அவர் கிட்ட கொடுங்க மாமா!" நிவி வேண்டுமென்றே கூற, அவளை முறைத்துக் கொண்டே குழந்தையை வாங்கினான் சந்த்ரு. சில நிமிடங்கள் குழந்தையை கொஞ்ச, "போதும் டா. டைமாகுது!" என ஆனந்தி குழந்தையை வாங்கி நிவியிடம் கொடுக்க, "பத்திரமா போய்ட்டு வா நிவி!" என்றான் யுகி.

"என் பேத்தி பத்திரம் மா!" அழகர் கூற, "அப்போ நான் பத்திரமா இருக்க வேணாமா மாமா?" என புன்னகையுடன் கேட்டுக் கொண்டே நிவி மகிழுந்தில் ஏற, ஜோதியும் ஏறினார்.

"அண்ணா! பார்த்து மெதுவா போங்க. குழந்தை வேற இருக்கா. பெட்ரோல் எல்லாம் இருக்கு இல்ல?" சந்த்ரு தன் முறையாக ஓட்டுநரிடம் பேச, "இதோ, உங்க தம்பி ரவுண்ட் இப்போ!" என்றாள் வித்யா புன்னகையுடன்.

"போடி!" என்ற யுகியின் பார்வை அன்பாக சந்த்ருவை தொட்டு மீண்டன. என்ன தான் இருவருக்கும் வேறுபாடுகள் ஆயிரம் இருந்த போதும், நிவேதா என்ற ஒற்றை நுலிழை அவர்களை எப்போதும் இணைக்கும் என்பது அதே போல ஆயிரம் மடங்கு உண்மை. அதை நினைத்ததும் மேலும் ஆடவனின் புன்னகை விரிந்தது.

அவர்கள் விடை பெற்று செல்ல, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்து, வீட்டிற்கு சென்ற பிறகே விட்டான் சந்த்ரு. அவர்கள் திருச்சியை அடைய, நேரம் பத்தை தாண்டி இருந்தது. ஆயிரம் மிஸ்யூக்களையும் லவ்யூக்களையும் கொஞ்சல்களையும் கூறி விட்டே அழைப்பை துண்டித்தான்.

கழிவறையிலிருந்து வெளியே வந்த வித்யா, கடிகாரத்தை பார்த்தாள். நேரம் பத்து முப்பதை தொட, "என்னப்பா? வொர்க் இருக்கா இன்னும்?" என வினவினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த யுகியின் கண்கள் அவளிட்டிருந்த கொண்டையிலிருந்து வழிந்து கண்கள் மூக்கு உதடு என பயணம் செய்தது. கைகை தூக்கி நெட்டி முறித்தவன், "ஆமா டி... நைட் ஃபுல்லா வொர்க் இருக்கும்!" என்றவனின் பார்வை காதலாய் மோகமாய் மனைவியை வருட, அவன் பார்வையை உணரவில்லை பெண்.

"ப்ம்ச்... என்ன வொர்க்கோ? நீங்க தான் அந்த கம்பெனிக்கு
எம்.டியான்னு எனக்கு சந்தேகமே வருது. எங்கப்பா ரன் பண்ணப்போ, ஒரு நாள் ஒரு பொழுது உங்களை மாதிரி வொர்க் பண்ணி பார்க்கலை!" என புலம்பியவள், "சரி, உங்களுக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வரவா?" என வினவினாள். தலையை மட்டும் அசைத்தான் யுகி.

ஐந்து நிமிடத்தில் ஒரு கோப்பை நிறைய குளம்பியுடன் உள்ளே நுழைந்த வித்யா, "காஃபி..." என அவனிடம் நீட்டினாள். "தேங்க்ஸ்" புன்னகையுடன் யுகி வாங்கி பருக, அவனுக்கு அருகில் படுப்பதற்காக படுக்கையை சரி செய்தாள் பெண்.

"எனக்கு போதும். நீ குடி" பாதி குளம்பியை யுகி அவளிடம் நீட்ட, "தூங்க போற நேரத்துல எதுக்கு காஃபி. போங்க எனக்கு வேணாம்!" என கூறினாள். எதுவும் பேசாதவன், கோப்பையை அவள் புறம் நீட்டிக் கொண்டிருக்க, அவனை முறைத்துக் கொண்டே வாங்கி பருகியவள், கோப்பையை வைத்து விட்டு உள்ளே வர, கணினியை மூடி வைத்துக் கொண்டிருந்தான் யுகி.

"நைட் புல்லா வேலை இருக்குன்னு சொல்லிட்டு இப்பவே லாப் டாப்பை ஆஃப் பண்ணிட்டீங்க?" அவனருகில் வந்து இடுப்பில் கைவைத்து முறைத்த மனைவியை பார்த்து சிரித்தவன், அமர்ந்தவாறே வித்யாவை இழுத்து வயிற்றில் முகத்தைப் புதைத்து அவளது வாசத்தை உள்ளிழுத்தவன், "ஆமா! நைட் வெர்க் இருக்கு!" என மாதுவை இழுத்துக் கொண்டு தானும் படுக்கையில் வீழ்ந்தான். ஆடவனின் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவள், "அடப்பாவி!" என எதோ கூறும் முன் அவள் வார்த்தையை விழுங்கி இருந்தான். பேச்செல்லாம் காற்றில் மறைந்து போக, ஒருவரில் மற்றொருவர் கரைய துவங்கினர். மனைவியிடம் கொஞ்சி மிஞ்சி என அவளை தன்வசப்படுத்திக் கொண்டிருந்தான் ஆடவன்.

***

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. சந்த்ருவுக்கு காலையில் விடிவதும் இரவு துயில்வதும் மனைவி மற்றும் மகளின் முகத்தில் என்றானது.

எழுந்ததும் நிவிக்கு காணொளி அழைப்பில் அழைத்து விடுவான்.
குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது மனைவியையும் மகளையும் ஆசை தீர கொஞ்சி, கண்களில் நிரப்பிக் கொள்வான். இரவு படுக்க செல்லும் போது காதல் மொழி பிதற்றி மனைவியை உருக்கி விடுவான். காதலித்தான், அதிகமாக காதல் செய்து அவளையும் தன்னை காதலிக்க வைத்தான் ஆடவன். காதல் என்று சுற்றிய போது காத்த கன்னியங்கள் யாவும் காற்றில் கரைந்து போனது இப்போது மனைவியாய் பேசும் போது. ஆயிரம் ஆயிரம் லவ்யூக்களையும் கொஞ்சல்களையும் மிஞ்சல்களையும் தாங்கிக் கொள்ள பெரும்பாடு பட்டுவிட்டாள் பெண். சில சமயம் என்னவென்றே தெரியாது கோபமாக பேசுவான். பின் தானே வந்து மனைவியை சமாதானம் செய்வான். ஆனால், அப்போது பெண் முறுக்கிக் கெள்வாள்.

அலைபேசியிலே முத்த மழை பொழிந்து சாமாதானம் செய்வான். இடையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு அனைவரும் குடும்பமாக திருச்சி சென்றிருந்தனர்.
நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து, நிவியின் குலதெய்வ கோவிலில் குழந்தைக்கு பிரதியுக்ஷா என பெயரிட்டு மகிழ்ந்தனர். எல்லோரும் வீட்டிற்கு கிளம்பும் நேரம் சந்த்ரு மட்டும் இரண்டு நாட்கள் அங்கே தங்கி விட்டு வருவதாய் கூறிவிட்டான்.

இரண்டு நாட்கள் மனைவி பின்னே சுற்றியவன், மனமே இல்லாமல் வீடு வந்து சேர்ந்தான்.
மீண்டும் அலைபேசி அழைப்புகளும் காணொளி அழைப்புகளும் அவர்களை இணைக்க ஆரம்பித்தது.

யுகி வித்யாவின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல செல்ல ஆரம்பித்தது. இருவருக்கும் இடையிலிருந்த நெருக்கம் காதலையும் நேசத்தையும் மட்டுமல்ல அதீத புரிதலையும் அவர்களுக்கிடையில் விதைத்திருந்தது. அவ்வப்போது சின்ன சின்ன ஊடல் கூடல் என சென்றது நாட்கள்.

கணவனின் முகம் பார்த்தே அவனின் மனதை படித்தாள் மனைவி. மனம் நிறைந்து போனது யுகேந்திரனுக்கு. அத்தனை புரிதலாய், அனுசரணையாய் நடந்து கொண்டாள் வித்யா. சாந்தியிடமும் அவளுடைய உறவு அழகாய் புனையப்பட்டிருந்தது. எந்த ஒரு விஷயத்திலும் மாமியாரை காயப்படுத்த கூடாது என வார்த்தைகளை யோசித்து தான் பேசினாள். அவருக்கு பிடிக்காததை பேச கூட விரும்பவில்லை. சாந்தியும் நிவியை போல தான் வித்யாவை பார்த்துக் கொண்டார்.

அழகருக்கும் யுகிக்கும் பேச்சு வார்த்தைகள் எதுவும் இல்லை. வித்யா அவனை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால், எங்கே கேட்டால் கணவன் முகம் வாடிவிடும் என மனதோடு வைத்துக் கொண்டாள். அதில் யுகிக்கு என்ன உணர்வு என்றே வரையறுக்க முடியவில்லை.

அழகரின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது. தவறு செய்தவர்கள் திருந்தும் போது, ஏற்றுக் கொள்வது நியாயம் என மனம் வாதிட, அதிகம் ஒட்டவில்லை அவரிடம். ஆனால், அவ்வப்போது சில தலையசைப்புகள் சிறு சிறு புன்னகை என அவர்களின் உறவிற்கு அடித்தளமிட்டான். அவரிடம் சகஜமாக பேச நாட்களாகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.

அழகருக்கு மகன் தன்னைப் பாரத்து புன்னகைப்பதே அத்தனை நிறைவாய் இருந்தது. கண்டிப்பாக கூடிய விரைவில் அவன் தன்னிடம் பேசுவான் என்ற நம்பிக்கையே அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

மொத்தத்தில் மனிதர் அத்தனை நிறைவாய் வாழ்ந்தார். சாந்தியும் ஆனந்தியும் அவர் வாழ்க்கையை நிறைத்தனர். சந்த்ரு முன்பு போல் இல்லை என்றாலும் அவரிடம் அலுவலக விஷயம் தொடங்கி சிறிது சிறிதாக பேச ஆரம்பித்திருந்தான். அழகர் பேத்தியை அவ்வப்போது காணொளி அழைப்பில் கண்டு பூரித்துப் போனார். வாழ்க்கையிலிருந்த கருப்பு பக்கங்கள் எல்லாம் வண்ணமயமாகி விட்டது அவருக்கு.

இரண்டு மாதங்கள் முடிந்திருக்க, பத்து தடவை அலைபேசியில் அழைத்து நிவியை வர சொல்லி சந்த்ரு அழைக்க, "இன்னும் ஒரு வாரத்துல வந்துடுவேன்ங்க!" என நிவி கூற, ஆத்திரத்தில் பதில் கூறாது அழைப்பை துண்டித்தவன், அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

சில மணி நேரங்கள் சென்றிருக்கும் மனைவி அவனுக்கு எதோ ஒரு காணொளியை அனுப்பி இருக்க, எடுத்துப் பார்த்தான். அவளும் குழந்தையும் சந்த்ரு அறையில் இருந்தனர். அதை நம்ப முடியாது உடனே அவளுக்கு அழைத்து விட்டான்.

"என்னவாம்? சார் அவ்ளோ கோபப்பட்டீங்க? சொல்லுங்க!" என்றாள் குரலில் புன்னகையுடன்.

"ஹே! என்னடி? எங்க... எங்க இருக்க?" என கேட்டவனின் குரலில் அத்தனை மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.

"அட! அது கூட தெரியலையா? நம்ம ரூம் தான்!"

"வர ஒரு வாரம் ஆகும்னு சொன்னீயே டி?" அவன் குரலில் ஆர்ப்பாட்டமிருந்தது. அதை புன்னகையுடன் உள்வாங்கியவள், "ஒரு வாரம் கழிச்சு தான் வரலாம்னு இருந்தேன். பட், உங்க பொண்ணு தான் அப்பாவை பார்க்கணும்னு அடம் பண்ணிட்டா. அதான் சர்ப்ரைஸா வந்துட்டோம்!" என அவள் கூற, சந்த்ரு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். பெரிய பெரிய மூச்சுகளாய் விட்டவனுக்கு சந்தோஷத்தை கிரகிக்க நேரம் தேவைப்பட்டது. மனைவியின் வார்த்தைகளை தெவிட்டாது உள்வாங்கியவன், "காலையில வேணும்னு தானே பொய் சொன்ன? வரேன் இருடி!" என பல்லைக் கடித்தவனின் புன்னகை முகம் பெண்ணுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

"வாங்க! வாங்க! நானும் உங்க பொண்ணும் வெய்ட்டிங்க!" என கூறி நிவி அழைப்பைத் துண்டிக்க, மறுநொடியே கிளம்பி விட்டான் வீட்டிற்கு.

"நிவி, கொஞ்சம் நேரம் தூங்கி எழு. குழந்தைக்கு அசதியா இருக்கும்!" என குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்ட ஆரம்பித்தார் ஆனந்தி. சில நிமிடங்களில் குழந்தை உறங்கி விட, பதைபதைப்புடன் கணவனுக்காக காத்திருந்தாள். அவள் நினைத்து போலவே, உள்ளே நுழைந்த சந்த்ரு, "நிவி, இவளை!" என பல்லைக் கோபமாக கடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தவன், அவளையும் கடித்தான்.


தொடரும்...
 
Top