இதயம் 20
அவளது செயலில் மொத்தமாய் உடைந்து போனவன், விழியசைக்காது நின்றுவிட, மலரின் கண்ணீர் அவனது காலடியில் சரணடைந்தது.
அழுகையில் முகம் வீங்கி, சிவந்து, விழி முழுவதும் தேங்கிய கண்ணீருடன் நிமிர்ந்து, “தயவு செய்து என்னை விட்டுடுங்க சார்...” என்று மொத்த வேதனையையும் சுமந்து அவனைக் காண, அந்தப் பார்வை அவனைக் கொன்று கூறுபோட்டது. அதற்கு மேலும் தாளமாட்டாதவன், அவளருகே மடிந்தமர்ந்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“விடுங்க... விடுங்க... என்னை... ப்ளீஸ்...” என்றவள், அவனிடமிருந்து அழுகையுடன் விடுபடப் போராட,
“விட்டுடு... விட்டுடுன்னு சொல்றியேடி! உன்னை விட்டுட்டு எங்கே போவேன் நான்?” என்றவனது குரல் கரகரத்திட, மலர் சடுதியில் நிமிர்ந்து அவன் முகம் கண்டாள்.
அவளது உணர்ச்சிப் போராட்டத்தில் பெரிதாய் பாதிக்கப்பட்டவனது விழிகள் கலங்கி, சிவந்திருக்க, முகம் சொல்லொண்ணா வேதனையில் கசங்கியிருந்தது.
“சொல்லு மலர்... உன்னை விட்டு எங்கே போவேன் நான்?” என்று அவளது விழி நோக்கிக் கேட்க, தனக்காகக் கலங்கி துடிப்பவனைக் கண்டு அவள் இதயம் அதிர்ந்து துடித்தது.
இருந்தும், குடும்பத்தினர் முகம் ஒவ்வொன்றாய் வந்து போக, “எங்கேயாவது போங்க... எனக்கு நீங்க வேண்டாம்...” என்று அழுகை மாறாத குரலில் கூறினாள்.
“ஆனால், எனக்கு நீ மட்டும் தான் வேணும்...” என்றவன், மீண்டும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, இவளுக்கு அழுகை அதிகமானது.
“ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்றீங்க?” என்று அவனது அணைப்புக்குள் இருந்தவாறே முகத்தை உயர்த்திக் கேட்க,
“நீ இல்லாம போனா, என் வாழ்க்கையே நரகமாயிடும் மலர்...” என்றவன், வாழ்வின் ஒட்டுமொத்த நேசத்தையும் குரலில் கொட்டிக் கூறிட, இவளுக்கு விழிநீர் ஊற்றாய் பெருகி வழிந்தது.
“நீ இல்லாம நான் என்ன ஆவேன், மலர்?” என்றவன், அவளது முகத்தை கையில் ஏந்த,
“உங்களுக்கு ஏன் புரியவே மாட்டேங்குது? எனக்கு என் குடும்பம் உங்களை விட ரொம்ப முக்கியம்...” என்று அவனது விழி கண்டாள்.
“உன்னோட குடும்பம் என்னோடது இல்லையா? நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா?” என்று ரிஷி வினவிட,
“முடியாது...” என்று பட்டென்று பதில் உரைத்தாள் மலர்.
அதில் அதிர்ந்து திகைத்த ரிஷி ஏதோ கூற வர, இடைநுழைந்த மலர்,
“இருபத்தி நாலு மணி நேரமும் உங்களால் என் குடும்பத்துக்குக் காவல் இருக்க முடியாது. நீங்க ஊருக்குப் போன பின்னாடி என்ன நடந்தது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேள்வியுடன் அவனை நோக்கினாள்.
“ம்ஹூம்...” தெரியாது என்பது போல ரிஷியின் தலை அசைய,
“யாரைக் கேட்டு நீங்க உங்க அம்மாகிட்ட என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க?” என்று ஆவேசமாக வினவினாள்.
“அம்மா...?” என்றவளது கூற்றில் திகைத்து, “என்னோட அம்மா எதுவும் சொன்னாங்களா?” என்று தாயின் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடக் கூடாது என்ற தவிப்புடன் ரிஷி கேட்க, அது மலருக்கும் புரிந்தது.
“ஹ்ம்ம்...” என்று மெதுவாய் தலையசைத்தவள், அவனது தவிப்பை உணர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“அம்மா என்ன சொன்னாங்க, மலர்?” என்றவன் பதட்டம் நிறைந்த குரலில் கேட்டிட, மலர் அவன் புறம் திரும்பவே இல்லை.
தான் அவனது தாயின் நடத்தையைக் கூறினால், அவன் அவர் மீது வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கையும் அன்பும் நிமிடத்தில் உடைந்து போகுமே என்று அவனுக்காகச் சிந்தித்தவள் அமைதி காத்தாள்.
“உன்கிட்ட தான் கேட்கிறேன்... சொல்லு மலர்...” என்றவன், அவளது முகத்தைத் தன்னை நோக்கித் திருப்ப,
“வேணாம்... தெரிஞ்சா நீங்க கண்டிப்பா வருத்தப்படுவீங்க...” என்றவளது பதில் அவனுக்குள் அச்சத்தை விளைவித்தது.
உறுதியாய் தெரிந்து போனது, மலரின் இந்தக் கண்ணீருக்கும் அழுகைக்கும் சொல்லொண்ணாத் துன்பத்திற்கும் தன் தாய் மட்டுமே காரணம் என்று.
“நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பண்ணியே... அதைவிடப் பெருசா வருத்தப்பட மாட்டேன்...” என்று அவள் காலில் விழுந்ததைக் குறிப்பிட்டுக் கூற, அவள் முகம் மேலும் கசங்கியது.
அவளது கன்னத்தை ஒரு கையால் பிடித்து, தனது விழி பார்க்க வைத்தவன், “ப்ளீஸ் மலர்... சொல்லு. என்ன நடந்துச்சு?” என்று கெஞ்சலுடன் கேட்க,
“ஞாயித்துக்கிழமை உங்க அம்மாவும் மாமாவும் உங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க...” என்றிட, இதனை எதிர்பார்த்திருந்தவன் அதிர்வின்றி அவளைக் கண்டான்.
“நான் பணத்துக்கும் உங்களோட சொத்துக்கும் ஆசைப்பட்டு உங்களை மயக்கிட்டேன்னு சொன்னாங்க...” என்ற பொழுது மலரின் குரல் தழுதழுக்க, ரிஷியின் முகம் இறுகியது.
“உங்களோட ஸ்டேட்டஸ் வேற... என்னோட ஸ்டேட்டஸ் வேறயாம். நீங்க வெளிநாட்டல போய்ப் படிச்சிட்டு வந்து இருக்கீங்களாம். உங்களுக்கு பொண்ணு கொடுக்கப் பெரிய பெரிய பணக்காரங்க வரிசையில் நிக்கிறாங்களாம். நான் உங்க வீட்டு வேலைக்காரியா வரக்கூடத் தகுதி இல்லாத ஆளாம். ஏதோ நான் கெஞ்சி கேட்டதால எனக்கு வேலை போட்டுக் கொடுத்தாங்களாம்...” என்றவள், அழுகை குரலில்,
“அந்தப் பணக்கார வீட்டு பொண்ணுங்க யாரையாவது கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல... எதுக்கு என்னைப் பார்த்தீங்க?” என்று துக்கத்தைச் சுமந்த குரலில் கேட்க, இவன் கொஞ்சம் கொஞ்சமாய் சிதறிக் கொண்டிருந்தான்.
“நான் கருப்பா, கேவலமா இருக்கேன்னு சொன்னாங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம்...” என்றவள், “உங்களுக்கு ஏத்த மாதிரி அழகான பொண்ணைப் பார்த்திருக்க வேண்டியது தானே? எதுக்கு கேவலமா இருக்கிற என்னைப் பார்த்தீங்க?” என்று சாட்டையடியாக வினவிட, இவனுக்கு இதயத்தில் குருதி கசிந்தது.
“இவ்வளவு கேவலமா இருக்கிறவளை, கூலி வேலை பார்க்கிறவன் கூட கல்யாணம் பண்ணிக்க யோசிப்பான். ஆனா, உனக்கு என்னோட புள்ள கேக்குதா? அன்னிக்கு வீட்டுக்கு வந்த ரோகினியை நீயும் பார்த்த தானே? அவளோட அழகு, படிப்புக்கெல்லாம் நீ அவ கால்தூசிக்குக் கூட சமமாவியானு கேட்டாங்க...” என்றவளது முகம் வேதனையில் சுருங்கியது.
“சாரி மலர்...” என்றவன், தழுதழுத்த குரலுடன் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைக்க,
“விடுங்க... விடுங்க... என்னை...” என்று அவனிடமிருந்து பிரிந்தவள், “நான் என்னைக்குமே நான் அழகா இருக்கேன்னோ, இல்ல அசிங்கமா இருக்கேன்னோ நினைச்சது இல்ல. ஆனா, உங்க அம்மாவோட வார்த்தை என்ன ரொம்ப காயப்படுத்திடுச்சு...” என்றவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“குப்பத்துக்காரி எல்லாம் வீட்டுக்குள்ள விட்டது ரொம்ப பெரிய தப்புன்னு ஒரு மாதிரி அருவருப்போட என்னைப் பார்த்தாங்க...” என்றவளது குரல், அவளது காயத்தின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தியது.
“குப்பத்துக்காரங்க எல்லாம் மனுஷங்க தான? நாங்களும் உங்கள மாதிரி சாதாரண மனுஷங்க தானே?” என்று அவளைப் பார்த்துக் கேட்ட ரிஷி, அவளை வெறித்தான்.
“இன்னைக்கு வேலையை விட்டு அனுப்புனா கூட, ஒரு மாசம் கூட உன்னால தாக்குப்பிடிக்க முடியாது. அடுத்த மாசம் சோத்துக்குப் பிச்சை தான் எடுப்பேன்னு சொன்னாங்க...” என்று துக்கத்தைத் தொண்டைக்குள் விழுங்கிவிட்டு, “அவங்க சொன்னது உண்மைதானே?” என்று அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்த, அது அவனை ஆயிரம் பாகங்களாய்ச் சிதறச் செய்தது.
“உங்க வீட்டிலேயே அஞ்சு பேர் வேலை பார்க்கிறாங்களாம். அப்படி இருக்கும்போது வீட்டு வேலை செய்ற உன்னை எப்படி மருமகளா ஏத்துக்க முடியும்னு கேட்டாங்க. அவங்க கேக்குறதும் நியாயம் தானே?” என்று கேள்வியாய் அவனை நோக்கினாள்.
“பணம் மனுஷங்களை நிர்ணயிக்காது, மலர்...” என்றவன் இறுகிய குரலில் கூற,
“கண்டிப்பா இல்ல. பணம்தான் இங்க எல்லாமே. இருநூறு பவுன் நகை போட்டு உங்களுக்கு பொண்ணு தர ஜமீன் குடும்பம் தயாரா இருக்காங்களாம். அவங்க தான் உங்க தகுதிக்கு கரெக்டா இருப்பாங்க. கல்யாணம் பண்ணிக்கோங்க...” எனக் கூறி, தன் மீதிருந்த அவனது கரத்தை விலக்கினாள்.
விலக்கிய அவளது கையைத் தன்னோடு சேர்த்து இறுக்கிப் கொண்டவன், அவளை நோக்கித் தலையை இடமும் வலமும் அசைத்தான்.
“நீங்க எல்லாம் பணக்காரங்க... நாங்க அன்னாடங்காச்சிங்க. உங்களுக்கும் எனக்கும் எந்தக் காலத்திலேயும் ஒத்து வராது...” என்றவள், கையை அவனிடமிருந்து உருவ முயற்சிக்க,
“நோ, மலர்...” என்றவன், அவளது கையைத் தனது கரத்திற்குள் இறுக்கமாகப் பிடித்து வைத்துக் கொண்டான்.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க சார். உங்ககிட்ட இருக்க பணத்தை வச்சு உங்க அம்மாவால எங்களை என்ன வேணா பண்ண முடியும்...” என்றவள், “உங்க அம்மா என்னோட குடும்பத்தை உருத்தெரியாம அழிச்சிடுவேன்னு சொன்னாங்க...” என்றதும், அவளது தொண்டைக்குழி அச்சத்தில் மேலும் கீழுமாய் இறங்கியது.
“உங்க மாமா கேக்குறாரு... உன்னோட தம்பியும் தங்கச்சியும் ஸ்கூல் தானே படிக்கிறாங்க? ஸ்கூலுக்குப் போறவங்க திரும்பி வராம பண்ணிருவேன்னு சொல்றாரு...” என்றவளது குரலோடு சேர்த்து உடலும் நடுங்க,
“என்ன மன்னிச்சிடு, மலர்...” என்றவன், அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“ப்ளீஸ் மலர்... என்ன மன்னிச்சிடு. இதெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல...” என்றவனது கண்களில் இருந்து கண்ணீர் அவளது தோளில் விழ, அதில் ஏகமாய் அதிர்ந்து போனவள், அவனைப் பிரித்து முகம் பார்க்க விழைய, ரிஷி அவளை அனைத்தும் இறுக்கி, அவளது தோளில் முகத்தைப் புதைத்தான்.
ரிஷியின் சூடான கண்ணீரைத் தோளில் உணர்ந்த மலருக்கும் அழுகை பெருகியது.
“உங்களைக் கொன்னு போட்டா கூட கேட்க ஆள் இல்லைன்ற மாதிரி உங்க மாமா பேசினாரு...” என்றவள், சில கணங்கள் நிறுத்தி, “பிறகு அவர் சொன்னதும் சரிதானே? நாளைக்கே உங்க வீட்ல இருக்கிறவங்க எங்களை ஏதாவது பண்ணினாலும், யார் வந்து கேட்பா? அப்படியே கேட்டாலும், உங்களை ஏதாவது பண்ண முடியுமா?” என்று நிதர்சனத்தைக் கூற, இவனது இதயத்தின் அறையெங்கும் வேதனை துளி துளியாய் இறங்கியது.
“இப்ப நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சா, உங்க வீட்டு ஆளுங்க என் குடும்பத்தை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு இந்த நிமிஷமும் எனக்கு உள்ளுக்குள்ள நடுக்கமாத்தான் இருக்கு. போதும்... இதெல்லாம் நிறுத்திக்கோங்க. உங்க அம்மா, அப்பா ஆசைப்படுற மாதிரி நல்லா படிச்ச பணக்கார வீட்டு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருங்க...” என்றவளது குரல் விரக்தியில் மூழ்கியிருந்தது.
அவளிடம் விடாது, நொடிக்கு ஒருமுறை மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தவனது முகம் அவளது விழி நோக்கியது.
சில கணங்கள் மொழியின்றி அவளை வெறித்தவன், பிறகு,
“அழகான பொண்ணு எல்லாம் நீயாகிட முடியாது, மலர்...” என்று உணர்ச்சிப் பெருக்கில் கரகரத்து மொழிய,
“என்கிட்ட என்ன இருக்கு? எதுவுமே இல்ல. ஏன் என்னை விட்டு தொலைய மாட்டேங்கிறீங்க?” என்று விரக்தியின் உச்சத்தில் கத்தினாள்.
“உன்கிட்ட என்ன இருந்தாலும், இல்லைன்னாலும், எனக்கு நீ மட்டும் தான் வேணும், மலர்...” என்றவனது நேசம் அவள் முன் மண்டியிட்டது.
“புரிஞ்சுக்கோங்க... எனக்கு நீங்க வேணாம்...” என்று மலர் முகத்தைத் திருப்ப,
“எனக்கு உன்னைத் தவிர யாரும் வேண்டாம், மலர். எனக்கு ஒரே ஒரு சான்ஸ் குடு. இதை எல்லாத்தையும் நான் சரி பண்றேன்...” என்று இறைஞ்சும் குரலில் அவளைக் கண்டான்.
“சில விஷயங்களையும், மனுஷங்களையும் எப்பவும் சரி பண்ண முடியாது. அவங்க மாறவும் மாட்டாங்க. வாழ்க்கை முழுக்க இதே மாதிரி என்னால காயப்பட முடியாது. என்னை விட்டுருங்க...” என்று மலர் உரைக்க,
“திரும்பத் திரும்ப ‘விட்டுருங்க... விட்டுருங்க’ன்னு சொல்லாத, மலர். உன்னை விட்டுட்டா நான் எதுவுமே இல்லை. உனக்கு ஏன் இது புரிய மாட்டேங்குது?” என்று அவளது கன்னத்தைப் பிடித்து தன் முகம் பார்க்க வைத்தவன், “கிவ் மீ எ சான்ஸ் மலர். கண்டிப்பா இது எல்லாத்தையும் சரி பண்றேன். இனிமே எப்பவும் இது போல நடக்காது. ஒரே ஒரு டைம் என்னை நம்பு, மலர்...” என்றவனது முகம், நேசத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடியது.
“இவ்ளோ கஷ்டப்பட்டு என் கூட சேரணும்னு என்ன அவசியம் உங்களுக்கு?” என்று மலர் இயம்ப,
“எனக்கு அவசியம் தான், மலர். நான் வாழ்றதுக்கு கண்டிப்பா நீ வேணும், மலர்...” என்று தன்னுடைய நேசத்தின் ஆழத்தை உணர்த்த முயன்றான்.
அதை உணர்ந்தவள், உணராத பாவனையில்,
“இதெல்லாம் வெறும் ஈர்ப்பு, சார். கொஞ்ச நாள்ல என்னைப் பார்க்கலைனா உங்களுக்கே மறந்துடும். அப்புறம் உங்களுக்கு ஏத்த பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நானும் என்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு மீன் கடைக்காரனையோ, கறிக்கடைக்காரனையோ பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இதுதான் நிதர்சனம்...” என்றவள், அவனுக்கு உண்மையை உணர்த்திட விழைந்தாள்.
“நோ. உனக்கு இந்தக் கார் கடைக்காரன் மட்டும் தான். வேற எந்தக் கடைக்காரனும் உன் வாழ்க்கையில் வர முடியாது...” என்று அழுத்தமாகக் கூறினான்.
“எனக்கு என் குடும்பம் ரொம்ப ரொம்ப முக்கியம். என்னால் அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வர்றதை நான் விரும்பல...” என்று மலர் கூற,
“என்னைப் பாரு, மலர். இனி உன்னோட குடும்பம், என்னோட குடும்பம்... எதுவுமே தனித்தனி இல்லை. அவங்க மேல துரும்பு கூடப் படாம நான் பார்த்துக்குறேன். ட்ரஸ்ட் மீ..” என அவளது விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட, மலரது விழியில் அச்சம் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“என்னை நம்புடி. ஒரு தடவை என்னை அறியாம தப்பு நடந்துருச்சு. இனிமே எந்தக் காலத்திலும் இந்த மாதிரி நடக்காது. உன்னோட தம்பி, தங்கச்சிங்க எனக்கும் தம்பி, தங்கச்சி மாதிரி தான். நான் அவங்களைப் பார்த்துக்குறேன். அவங்களைப் படிக்க வச்சு, அவங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கிறது என்னோட பொறுப்பு. எவ்வளவு நாள் நீ ஒரே ஆளா எல்லாத்தையும் சுமந்துட்டு இருப்ப? என்கிட்ட எல்லாத்தையும் கொடு. நான் பார்த்துக்குறேன்... உன்னையும் சேர்த்து...” என்று நம்பிக்கையைத் தரும் விதமாகக் கூற,
“நான் உங்களைத் திரும்பிப் பாக்கல. உங்க மேல ஆசைப்படல. என்னைக்குமே உங்களை அப்படி நினைச்சது இல்ல. ஆனா, உங்க அம்மா நான் உங்க மேல ஆசைப்பட்டதா சொன்னாங்க...” என்று உணர்வற்ற குரலில் ராதா கூறியதை நினைவில் வைத்து மொழிந்தாள்.
“நீ என்னை பாஸா மட்டும் தான் பார்த்த. நான் தான் உன்னைப் பார்த்தேன். நான் தான் உன் மேல ஆசைப்பட்டேன். உன்கிட்ட மட்டும் இல்ல, யார்கிட்டயும் இதைச் சொல்ல நான் தயங்க மாட்டேன். எங்க வீட்ல நான் போய்ப் பேசுனதுக்கு காரணம், உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. என் வீட்டில் பேசி, உங்க அம்மாகிட்ட பேச வச்சா நம்பிக்கை வரும்னு நினைச்சுத்தான். ஆனா, அம்மா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கல...” என்றவனது குரலில் வருத்தம் மேலோங்க,
“நான் இதை எதிர்பார்த்தேன்...” என்று விழி உயர்த்தினாள்.
“இதுக்கே இப்படி வருத்தப்பட்டீங்கன்னா, அடுத்து உங்க அத்தை, உங்க அண்ணி எல்லாம் இன்னும் நிறைய பேசுவாங்க...” என்று மலர் மொழிய,
“கண்டிப்பா நடக்காது. உன்னைப் பேசினா, அது என்னைப் பேசின மாதிரின்னு அவங்களுக்கு உறைக்கிற மாதிரி புரிய வைக்கிறேன். புரிய வைக்கணும்...” என்றவனது குரலில் ஒருவித கோபம் கனன்றது.
“இதான் வேணான்றேன். எனக்காக எதுக்கு சொந்தக் குடும்பத்தை எதிர்த்து நிற்கிறீங்க?” என்று மலர் கேட்டிட,
“உனக்காக எதிர்த்து நிக்கலைன்னா, இந்த ஜென்மத்துல வேற யாருக்காகவும் நிற்க மாட்டேன், மலர்...” என்றவனது பதில் அவளை வாயடைக்கச் செய்தது.
உரியவனிடத்தில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டதால், இப்போது மலரிடத்தில் கொஞ்சம் பயம் அகன்று, அழுகை நின்றிருந்தது.
“இருநூறு பவுன் என்ன... இரண்டு பவன் கூட எங்க வீட்ல இருந்து உங்களுக்கு வராது...” என்று மலர் முகத்தைத் திருப்ப,
“தேவை இல்லை. அதான் நீ இருக்கியே...” என்று முடித்துவிட்டான் ரிஷி.
“நான் குப்பத்துக்காரி...” என்று மலர் முணுமுணுக்க,
“ஸோ வாட்? வேணும்னா நானும் குப்பத்துக்கு ஷிப்ட் ஆகி இருக்கிறேன்...” என்று ரிஷி தோளைக் குலுக்க, மலர் அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவளது கரத்தை எடுத்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டு,
“எனக்கு உன்னைப் பிடிச்ச அளவு, இந்த உலகத்துல வேற எந்தப் பொண்ணையும் பிடிக்காது, மலர்...” என்றவனது பார்வை, அவளது நெற்றியில் துவங்கி, சிறிய விழிகளில் தவழ்ந்து, ஒற்றைக்கல் மூக்குத்தி அணிந்த நாசியில் பதிந்தது.
மற்றொ
ரு கரம் உயர்ந்து, அவளது முகத்தருகே வந்தது. அதில் திகைத்தவள், பட்டென்று அவனைத் தள்ளிவிட்டு பின்னகர்ந்து செல்ல, ரிஷியின் பார்வை அவளது மின்னும் மூக்குத்தியில் பதிந்தது.

Last edited: