• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அவள் - 3

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அவள்.‌‌..

அவளுக்கு தான் தெரியும்... அவளின் கஷ்டங்கள் வருத்தங்கள் சோகங்கள் சந்தோஷங்கள்.... அவள் வாழ்க்கை இப்படி தான் என்று எழுதி இருக்கிறது போல் என்று நினைத்து கொண்டு காலம் போன போக்கில் அவளும் போகிறாள்....

திரவியம் எழுந்து அமர்ந்து கொண்டு சினுங்க...

துளசி : அடச்சீ வாய மூடு...எதுக்கு இப்ப சினுங்குற...

திரவியம் : ஏன் என்னைய touture பண்றீங்க... நிம்மதியா தூங்க விட‌மாட்டீங்களா...

துளசி : "அடேய் எரும மணி என்ன ஆகுது...இன்னும் என்ன தூக்கம்...எழுந்திரி..."என்று அங்கே செம்பில் இருந்து தண்ணியை அவன் முகத்தில் ஊற்றினாள்...

அவள் வேகமாக காபி எடுத்து வந்து கொடுக்க...அவன் முகத்தில் வழிந்து தண்ணீரை பார்த்து "அய்யய்யோ என்ன ஆச்சுங்க..."என்று பதற...

துளசி : என்ன அய்யய்யோ ஒன்னும் ஆகல... தண்ணிய தான் மேல ஊத்தி விட்டேன்‌‌...

அவள் : என்ன கா...

துளசி : என்ன என்ன கா...போ மணி ஆச்சு அவளுங்களுக்கு உப்புமா செய்...

அவள் : "அச்சச்சோ ஆமா ல..."என்று திரும்ப...

மணி 8 அடித்தது...

துளசி : டேய் இன்னும் என்ன உட்காந்து இருக்க...உனக்கு வேலை இல்லையா...

திரவியம் தலையை சொரிந்து கொண்டே "இல்ல இன்னக்கி leave போடலாம் னு இருக்கேன்..."என்று அசடு வழிய இழிக்க...

துளசி : பிச்சுப்புடுவேன் படவா... ஒழுங்கா வேலைக்கு போகல... உன் அப்பாயி கிட்ட சொல்லிடுவேன்...

திரவியம் : "அய்யய்யோ இதுக்கு நா வேலைக்கே போயிடுவேன்... அது பேசுறத என்னால கேட்க முடியாது..."என்று வேகமாக எழுந்து ஓடினான்...

துளசி அவளிடம் வந்து "நா போய் அவரை அனுப்பிட்டு வரேன்..."என்று கிளம்பினாள்...

ரஞ்சனியும் ஜனனியும் குளித்து கிளம்பி வந்து அமரந்தனர்‌‌...

ரஞ்சனி : அண்ணி ஆச்சா....

தேங்காய் சட்னி அரைத்து கொண்டே "இரு டா மா சட்னிய அரைச்சுக்கிட்டு இருக்கேன்... தாளிச்சுட்டு கொண்டு வரேன்‌‌..."என்று அவள் சொல்ல...

ஜனனி : ம்ப்ச் எவ்ளோ நேரம் நாங்க எப்பவோ சொல்லிட்டு போனோம் ல... இவ்ளோ நேரம் என்ற பண்ணிங்க...

ரஞ்சனி : ஏய் சும்மா இரு டி... அவங்க கடைக்கு போய் வாங்கிட்டு வந்து செய்றது இல்லையா‌...அவங்க என்ன machine ஹ... Switch ஹ போட்ட உடனே வர்றதுக்கு... ஒரு ரெண்டு நிமிசம் உட்கார மாட்ட...

ஜனனி : என்ன அவங்களுக்கு support ஹ...

ரஞ்சனி : ஜனனி நீ அடி வாங்க போற... அவங்களும் மனுஷி தானே...

ஜனனி : காலைல மட்டும் அவ்ளோ அதிகாரமா அவங்ககிட்ட வேலை வாங்குன...

ரஞ்சனி : "அது நா அவங்க கிட்ட சும்மா விளையாடுனேன்... அது அவங்களுக்கே தெரியும்..."என்று "என்ன அண்ணி நா சொல்றது சரி தானே..."என்று சத்தமாக கேட்க..

தட்டையையும் தண்ணியையும் எடுத்து கொண்டு வந்தவள்... ரஞ்சனியை பார்த்து சிரித்துக் கொண்டே கன்னத்தை கிள்ளி "சாப்டுங்க...lunch pack பண்றேன்..."என்று எழுந்து சென்றாள்...

ஜனனி அவள் போவதை பார்த்து கொண்டே "நீயும் அப்பாவும் தான் அவளுக்கு support... அந்த தடிமாடு கூட எதுவும் சொல்ல மாட்டான்...நா சொல்றத கேளு ரஞ்சனி... அவங்களுக்கு நம்ம இங்க இருக்குறது பிடிக்கல... அப்போ டா கல்யாணம் பண்ணி அனுப்புவாங்க நம்ம நிம்மதி யா இருக்கலாம் னு நினைக்கிறாங்க..."என்று சொல்ல...

ரஞ்சனி : தேவை இல்லாம அண்ணி பத்தி தப்பா பேசாத‌... அவங்க நமக்கு நல்லது தான் நினைக்கிறாங்க... நீயும் அம்மாவும் தான் அவங்களை இப்படி படுத்துறீங்க... ஆனா அவங்க வெளிய‌‌யாரி கிட்டையும் உங்களை விட்டு கொடுத்து பேசறது இல்ல‌... நீயும் ஒரு பொண்ணு தான் அது முத நீ ஞாபகம் வச்சுக்கோ...

இப்ப நீ என்ன செய்யுறீயோ அது தான் உனக்கு பின்னாடி நடக்கும்...நீ படிச்சவ தானே உனக்கு சொல்லி தான் தெரியுனுமா‌... அம்மா தான் இப்படி இருக்காங்க னா நீயும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு இப்படி பண்ற... நம்ம கல்யாண்ம பண்ணிக்கிட்டு போயிருவோம்...பின்னாடி யாரு அம்மா வ பாத்துக்கிறது அவங்க தானே...

"அப்படி சொல்லு டி ரஞ்சனி அவ மரமண்டைக்கு ஏறட்டும்‌‌..."என்று அங்கே வந்த துளசி "ஜனனி சின்ன பொண்ணா நடந்துக்கோ... அவ உன்னையே விட பெரியவ... உனக்கு அண்ணி அவ கிட்ட இப்படி எதிர்த்து பேசுறது‌... முகத்துல அடிச்ச மாதிரி பேசுறது மரியாதை இல்லாம பேசுறது இது எல்லாம் வேணாம்... நீயும் ஒரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி போறவ தான்...அங்கே உன்னையே மாதிரி ஒரு நாத்தனார் உனக்கு அமைஞ்சா என்ன பண்ணுவ..."என்று சொல்ல...

ஜனனி : என்ன சாபம் விடுறீங்களா... அதுவும் அவங்களுக்காக...

துளசி : இவ கிட்ட பேசி என்ன‌‌ ஆக போகுது...ரஞ்சனி சாப்டு கிளம்பு...இவ பட்டு தான் திருந்துவா...

அவள் lunch box உடன்‌ வந்தாள்...

அவள் : ரஞ்சனி சாப்டு உன்னோட lunch bag ல வச்சுக்கோ... ஜனனி உனக்கும் எடுத்து வச்சு இருக்கேன்... அப்புறம் பொரியல் இன்னக்கி வைக்கல... வடகம் பொறிச்சு தரவா...

ரஞ்சனி : ம்ம்ம் சரி அண்ணி...

ஜனனி : ம்ப்ச் வடகம் எதுக்கு... இந்த சாப்பாடை நீங்களே வச்சுக்கோங்க... எனக்கு வேணாம்....

ரஞ்சனி : ஜனனி வாய அடக்கு...

ஜனனி : என்ன அடக்கு அவங்களுக்கு காலைல இருந்து என்ன வேலை... ஒரு பொரியல் செய்யறதுக்கு என்னவாம்...

அவள் : ஜனனி அது இல்ல மா... Market போய் காய் வாங்கிட்டு வரனும்... இருந்த காயை வச்சு சாம்பார் வச்சுட்டேன்... கொஞ்சம் adjust பண்ணிக்கோ டா மா...

ஜனனி கோவமாக தட்டை தள்ளி விட்டு "இந்த வீட்டு நீங்க நல்லா பண்றது சமையல் மட்டும் தான்‌‌... அதுல கூட அறைகுறை செஞ்சா எப்படி... நிம்மதியா சாப்ட முடியுதா இந்த வீட்டுல‌..."என்று எழுந்து செல்ல...

அவள் : "ஜனனி... ஜனனி நில்லு மா... கோவத்தை சாப்பாடு ல காட்டாத... நீ காய் வாங்கி பொரியல் செஞ்சு நீ வேலை செய்யும் இடத்துக்கு நா கொண்டு வரேன்..."என்று கெஞ்சி கொண்டு அவ பின்னால் சென்றாள்...

ரஞ்சனி தலையில் கை வைத்து அமர்ந்திருக்க...

துளசி : ரஞ்சனி முத இவளை தான் கல்யாணம் பண்ணி அனுப்பனும்... அவ பண்றது எதுவும் சரி இல்ல... அவளை அடங்க சொல்லு...

ரஞ்சனி : "அப்பா கிட்ட சொல்றேன்...அவர் ஒரு கத்து கத்துனா பேசாம இருப்பா...என்ன பண்றது அவளுக்கு அப்படியே அம்மா புத்தி..."என்று தட்டை எடுத்து கொண்டு சென்றாள்...

திரவியம் விசில் அடித்து கொண்டே வர... துளசி அவனை பார்த்து முறைத்தாள்...

திரவியம் : நீ இன்னும் போகலையா...

துளசி :" நா போகிறது இருக்கட்டும்... நீ ஏன் இப்படி இருக்க... நீ இப்படி உன் பொண்டாட்டி அப்படி...சொல்றத ரெண்டு பேருமே கேட்க மாட்டீங்க..."என்று தலையில் அடித்து கொண்டு வெளியே வர...

அவள் சோகமாக எதிரே வர...

துளசி : என்ன...

அவள் : ஜனனி சாப்பாடு வேணாம் னு கோச்சுக்கிட்டு போயிட்டா... அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆக போகுதோ...

துளசி : எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா பரவா இல்ல... குடும்பமே ஒவ்வொரு திசையில போகுதே... ஒரே திசையில் போனா கூட சரி எல்லாரும் ஒரு மாதிரி தான் இருக்காங்க...நம்ம தான் வேற மாதிரி இருக்கோம் னு நினைச்சுக்கலாம்.... ஆனா இவங்க அப்படி இல்லையா... வேற வேற திசையில் தனி தனியா போறாங்க... எந்த பக்கம் போய் யார் கூடுறது...எப்படி கூடுறது...சரி ஒரு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி கொண்டு அங்க அந்த மனுசன் என் கொழுந்தியா வச்ச சாம்பாரை வாங்கி வா னு உட்காந்து இருக்காரு...நாங்களும் தான் சமைக்கிறோம்...நீயும் தான் சமைக்கிற‌.‌‌..ஆனா நீ பண்ற taste வரமாட்டேங்குதே...

அவள்‌‌ சிரித்துக் கொண்டே சாம்பாரை ஊற்றி கொடுக்க...

துளசி : என்ற நடந்தாலும் உன் கண்ணுல கண்ணீரை மட்டும் என்னால் பாக்க முடியல... எல்லாத்துக்கு சிரிப்பை தான் தர... யாருக்கும் தெரியாம அழுதுக்கிட்டு வருவீயோ... உனக்கு நடக்குறத பார்த்தா கோவமா வருது...பாசமா இருக்கு.. ஒரு நேரம் அழுகை கூட வரும்... ஆனா நீ அழுதா கூட உன்னோட உதட்டுல சிரிப்பு இருக்கு...உன்னை மாதிரி யாராலும் இருக்க முடியாது சாமி... நானா இருந்திருந்தா இந்த ஜனனி என் கிட்ட நல்லா வாங்கி இருப்பா... ஆனா‌ நீ அமைதியா இருக்க‌... உன்னையே மாதிரி நானும் ஒரு நாள் இருக்கலாம் னு நினைக்கிறேன்... முடியலையே...

அதற்கு சிரிப்பை உதிர்க்க...

சிவா : அடியேய் துளசி சீக்கிரம் வா டி... மணி ஆச்சு...

துளசி : "சரி நா அப்புறம் வரேன்...உன் கிட்ட கொஞ்சம் பேசனும்‌... அந்த மனஷனை அனுப்பிட்டு வரேன்..."என்று ஓட...

அவள் அறைக்குள் நுழைய... திரவியம் அறை கதவை பூட்டி விட்டு அவளை கட்டி அணைக்க...

அவள் : என்னங்க விடுங்க... அத்தைக்கு வேற சாப்பாடு எடுத்து வைக்கனும்... Lunch box ready பண்ணனும்... உங்களுக்கு எடுத்து வைக்கனும்...

திரவியம் : "முடியாது..."என்று அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு அவள் இடுப்பை பிடிக்க...

அவள் கண்ணை இறுக்க மூட.... மாமியாரின் குரல் கேட்டு கண் விழித்து திரிவியத்தை தள்ளி விட்டு விலக...

திரவியம் கோவமாக "ச்சீ..."என்று அவளை பிடித்து தள்ளி விட்டு வேகமாக கதவை திறந்து வெளியே சென்றான்...


அவன் தள்ளியதில் சுவத்தில் மோதி நின்று அவன் கோவமாக போவதை நினைத்து அழுதாள்...

தொடரும்.........
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Janani mandaiya udaiga enna ma pesura poriyal illama sapita matagalaoo madam
Thiraviyam enna pa romance ya Avan vitta athuyum pesa matana
Itho kupidagala mamiyar odita ippo enn evanuku kovam varuthu Ava pavom thaana 😐😐😐
 
Top