• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அவள் - 2

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,811
Points
93
அவள்...2

அவள் கஷ்டத்திலும் புன்னகையை உதிர்ப்பவள்...அவள் கண்கள் கலங்கினாலும் அவள் உதடு புன்னகையுடனே இருக்கும்...ஏன் கண்ணீர் என்று கேட்டால் கண்ணில் தூசி என்பாள்...

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள்... பெற்றவர்களுக்கு மூன்றாவது மகளாகவும் கடைசி கடைக்குட்டியாகவும் பிறந்தவள்... மூத்த அக்காவிற்கு அவளுக்கு 15 வருடம் இடைவெளி இருக்க... இரண்டாவது அக்காவுக்கு அவளுக்கும் 8 வருடம் இடைவெளி..
அவள் பிறந்த 3 வருடத்தில் பெற்றவர் மறைந்து விட... தகப்பன் இல்லாதவள் என்று அதிக பாசத்தோடும் செல்லத்தோடும் வளர்க்கப்பட்டாள்...

மூத்த அக்கா தன்‌மகள் வளர்க்க... அவளுடைய 10 வயதில் மணமாகி செல்ல... இளைய அக்காவால் வளர்க்கப்பட்டாள்...பள்ளி பருவ இறுதியில் இளைய அக்காவும் மணமாகி விட... தனித்து விடப்பட்டாள்...தாயும் மகளும் தனியாக இருக்க... +2 முடித்து கல்லூரியில் சேராமல் இளைய அக்காவின் கணவன் திருப்பூரில் வேலை பார்க்க...‌அவன்‌ மூலமாக வேலைக்கு சேர்ந்தாள்...

5,6 வருடம் வேலை செய்தாள்... தன் சித்தப்பாவின் மூலம் வந்த வரனால் நகரத்தில் வாழ்ந்தவள்... கிராமத்து வாழக்கையில் அடி எடுத்து வைத்தாள்... பெண் கேட்கும் போது வீட்டை கவனித்து கொண்டு இருந்தாள் போதும்... மூன்று கறவை மாடும் ஒரு பாச்ச மாடு இருக்கு... அதை நாங்க பாத்துக்குறோம் னு சொன்னார்கள்...

மணமாகி வந்த மூன்றாம் நாளே விறகு அடுப்புல மாட்டு சோற்றை ஆக்கி வை என்றாள் மாமியார்...

விறகு அடுப்பில் சமைத்து பழகாத அவள்... புகையில் கண் எரிச்சலில் கஷ்டப்பட... அதை பார்த்த அவள்‌ மாமியார் "என்ன பொம்பள புள்ள நீ ஒரு விறகு அடுப்புல சமைக்க தெரியுதா‌... உன் ஆத்தா என்னத சொல்லி கொடுத்து வளர்ந்தாளோ தெரியல...எனக்கு தெரியாது நீ மாட்டு சோற ஆக்கி வைச்சு தான் ஆகனும்... நானும் உனக்கு சொல்லி தர மாட்டேன்..."என்று கத்தி விட்டு சென்று விட...

சத்தம் கேட்டு வந்த மாமனார் "அம்மாடி என்ன நீ விறகு அடுப்புல காய்ற... உன்னையே யாரு மா இந்த வேலைய செய்ய சொன்னது... நீ எழுந்திரி மா‌... இந்த ரெண்டு புள்ளைங்களும் எங்க போச்சுங்க... நா பாத்துக்குறேன்... நீ உள்ள போ மா..."என்று சொல்ல...

"இல்ல மாமா...அத்தை தான் மாட்டு சோறா ஆக்கும் னு சொன்னாங்க... நா தான் வைக்கிறேன் னு சொன்னேன்... அத்தை வேணாம் இந்த அடுப்புல உனக்கு வைக்க தெரியாது சொன்னாங்க... நா தான் வைச்சு பழகுறேன் னு சொன்னேன்.."என்று அவள் சிரித்து கொண்டே சொல்ல...

மாமனார் : "ஏன் மா பொய் சொல்ற... என் பொண்டாட்டி பத்தி எனக்கு தெரியும் மா... இருந்தாலும் விட்டு கொடுக்காம சிரிச்சுக்கிட்டே பேசுற...இரு மா..."என்று கொஞ்சம் தள்ளி வந்து "துளசி இங்க வா மா.."என்று சத்தமாக அழைக்க...

துளசி :"இதோ வரேன் மாமா..."என்று துளசி அங்கே வந்து "என்ன மாமா.."என்று கேட்க...

மாமனார் : உன் அத்தை இருக்காளே அவளை என்ன பண்றது னு தெரியல... என் மருமகளை விறகு அடுப்புல மாட்டு சோறு ஆக்க சொல்லி இருக்கா... நகரத்துல வளர்ந்தவ...எப்படி ஆக்குவா... நீ போய் ஆக்கு...

துளசி : இந்த அத்தைக்கு அறிவே இல்ல... ஏன் தான் இப்படி பண்ணுதோ... இதுக்கு தான் சொன்னேன்... என்னைய ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கோ மாமா னு கேட்டீயா..."என்று சொல்ல...

மாமனார் : அடி கழுதை... என் தங்கச்சி ய கூப்டு சொல்றேன்... நாலு போடு போட்டா தான் நீ அடங்குவ...

துளசி சிரித்து கொண்டே "போ போய் சொல்லு...அப்படியே என்‌ புருஷன் கிட்டையும் சொல்லு..."என்று அவள் கையை பிடித்து "நீ வாடியம்மா..."என்று மாட்டு சோற்றை ஆக்கி கொடுத்து பேசி பழகியதில் இருவரும் தோழிகளாக ஆகினர்‌...

"மருமகளே..."என்ற அழைப்பில் கடந்த நாட்களில் இருந்து வெளிய வந்தவள்..."மாமா.."என்று திரும்ப..

மாமனார் : என்ன மா பால் பொங்க போகுது பாரு... என்ன ஆச்சு மா...

அவள் : "ஒன்னும் இல்ல மா..."என்று வேகமாக காபி போட்டு எடுத்து கொண்டு நாத்தனார் அறைக்குள் நுழைய...இருவரும் தூக்கி கொண்டு இருக்க...எழுப்பி காபியை கொடுத்தாள்...

மூத்தவள் : இத போட இவ்ளோ நேரமா...சாப்பாடு ஆச்சா இல்லையா...எனக்கு வேலைக்கு நேரமாகுது...

அவள் : ஆச்சு டா மா... நீ போய் குளிச்சுட்டு வா... நா எடுத்து வைக்கிறேன்...

மூத்தவள் : என்ன சாப்பாடு...

அவள் : சாம்பார் டா மா...

மூத்தவள் : "ம்ப்ச்... சாம்பார் காலைலேயே வா... எனக்கு இப்ப சாப்ட உப்புமா தேங்காய் சட்னி வேணும்...உனக்கு என்ன டி வேணும்..."என்று இளையவளை பார்த்து கேட்க...

இளையவள் காபியை குடித்து கொண்டு "எனக்கும் அதே தான் வேணும்..."என்று சொல்ல...

அவள் : ரவை இல்ல மா... தேங்காயும் இல்ல...

மூத்தவள் : "இல்லைனா போய் வாங்கிட்டு வாங்க...உங்களுக்கு இங்க வேற என்ன வேலை இருக்கு... எனக்கு மணி ஆச்சு... நா போய் கிளம்புறேன்... சீக்கிரம் ready பண்ணுங்க‌..."என்று குடித்து முடித்த காபி டம்ளரை அவள் கையில் கொடுத்து செல்ல...

இளையவள் அவள் அருகில் வந்து "என்ன அண்ணி அக்கா வர்றதுக்குள்ள ready பண்ணுங்க... இல்லைனா அக்கா அம்மா கிட்ட சொல்லிருவா..."என்று காலி டம்ளரை கொடுத்து விட்டு நகர்ந்தவள்... நின்று திரும்பி "அண்ணி..."என்று அழைக்க...

அவள் : சொல்லு மா...

இளையவள் : என் tiffin box ஹ மட்டும் கழுவுங்க...நேரமாச்சு ஆச்சு...அப்புறம் நேத்தே என் dress எல்லாம் துவைக்கலாம் னு நினைச்சேன்... ரொம்ப tried ஹ இருந்துச்சு...துவைக்கல.. நீங்க வீட்டுல தானே இருக்கீங்க... அது மட்டும் துவைச்சு போட்டுருங்க...

அவள் : "இல்ல டா எங்க துணி வேற இருக்கு‌... இன்னக்கி ரேசனுக்கு போகனும்... மாட்டு கொட்டை ய clean பண்ணனும் நேரமாகுமே மா...நாளைக்கி வேணுமா..."என்று சொல்லும் போதே

இளையவள் : என்ன நேரம் ஆகும்... வீட்டு தானே இருக்கீங்க... நாங்க வேலைக்கு போறோம் ல... துவைச்சு கொடுத்தா என்னவாம்...

அவள் : அம்மாடி நா துவைக்க மாட்டேன் னு சொல்லையே... நாளைக்கி துவைக்கிறேன் னு தானே சொல்றேன்...

இளையவள் : எனக்கு நாளைக்கி போட dress இல்ல...night போட்டுக்க nighty இல்ல... ரேசனுக்கு வண்டில் தானே போவீங்க... நடந்து போயிட்டு வர்ற மாதிரி ல பேசுறீங்க...

அப்போது அங்கே வந்து துளசி இளையவளை பார்த்து "ஏன் டி ஜனனி உன் துணிய நீ துவைச்சுக்க மாட்டியா...அவள் என்ன சும்மா வா இருக்கா‌... அவளும் நா முழுக்க வேலை செய்யுறா தானே‌... உன் அம்மா தான் இப்படி பண்றாங்க னா நீங்களும் ஏன் டி இப்படி பண்றீங்க... அடி தான் டி வாங்க போறீங்க‌‌... உங்களுக்கு எல்லாம் சித்தப்பா தான் சரியா வருவாரு... வரட்டும் சித்தப்பா அவர் ஊருல இல்லைனு என்ன ஆட்டம் எல்லாம் போடுறீங்க...இவ்ளோ நேரம் தூங்கிட்டு தானே இருந்த...நேரமா எழுந்திருச்சு துவைச்சு போட வேண்டியது தானே..."என்று கத்த...

ஜனனி துளசியை முறைத்து கொண்டே "அண்ணி ய‌ ஏதாவது சொன்னா போது மோப்பம் புடிச்சுக்கிட்டு வந்துரு..."என்று நகர...

துளசி : ஜனனி அவ துவைக்க மாட்டா... நீ போயிட்டு வந்து துவைச்சுக்கோ...

ஜனனி நின்று திரும்பி பார்த்து முறைத்து விட்டு சென்றாள்...

துளசி : "முறைக்கிறதை பாரு...கண்ண நோண்டனும்..."என்று திரும்ப அவள் இல்லாமல் போக.."அடியேய் எங்க டி போன..."என்று கண்கள் சுழற...

அவள் ஜனனி அழுக்கு துணிகளை எடுத்து கொண்டு இருந்தாள்..‌.

துளசி வேகமாக வந்து அதை தட்டி விட்டு "முத உன்னையே தான் டி அடிக்கனும்...அவ சொல்றா னு நீயும் வேகமாக பண்ண போற... நீ ஏன் டி இப்படி இருக்க..."என்று கேட்க...

அவள் : அக்கா அவ சின்ன பொண்ணு கா...

துளசி : என்ன சின்ன பொண்ணு இன்னும் ரெண்டு இல்ல மூனு மாசத்துல ரஞ்சனிக்கு கல்யாணம் பண்ணிருவாங்க... அடுத்து ஒரு வருசத்துல இவளுக்கு... இன்னும் அடுப்ப பத்தி வச்சு ஒரு சுடுதண்ணி கூட வச்சு இல்ல‌... அவ மண்டை ல நாலு தட்டு தட்டி வந்து சமையலை பழகு சொல்றத விட்டுது... அவளுக்கு நீ வேலை பாத்து இருக்க...

அவள் சிரித்து கொண்டே அங்கே இருந்து நகர்ந்தாள்...

துளசி கோவமாக "நா என்ன சொல்லி இருக்கேன்‌... நீ என்ன சிரிக்கிற..."என்று கேட்க...

அவள் : "அக்கா போ போய் சிவா மாமா வ கிளப்பு வேலைய பாரு... நா அவளை வேற எழுப்புனும்..."என்று டீ யை எடுத்து கொண்டு செல்ல...

துளசி : "இரு டி நானும் வரேன்...அந்த பயலுக்கு இருக்க இன்னக்கி..."என்று முந்தானையை எடுத்து சொருகி கொண்டு அவள் பின்னால் சென்றாள்...

அவள் அவனை எழுப்பி போக...துளசி அவளை தடுத்து "இரு நா எழுப்புறேன்..."என்று அவன் முதுகில் ஒரு அடியை போட்டு "டேய் எருமமாட்டு பயலை எழுந்திரி டா... தடி மாடு..."என்று கத்த...

அவள் : அக்கா எதுக்கு கா அடிக்கிற... பாவம் கா... அவர் என்ன பண்ணுவாரு...

துளசி : "நீ வாய மூடு..."என்று மறுபடியும் அவனை அடித்து விட்டு "டேய் திரவி எழுந்திரி டா... கும்பகர்ணன் மாதிரி நல்லா தூங்கி கத்துக்கிட்ட..."என்று கத்த...

"ஏய் என்ன டி உனக்கு வேணும்..."என்று தூக்க
கலக்கத்தில் சினுங்கி கொண்டே எழுந்து கண் முழிக்காமல் அமர்ந்திருந்தான் திரவியம்....

தொடரும்....
 
Last edited:
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Thulasi ne tha crt Avala athuyum solla mataa 👍👍
Akka thagachi romba over ya pandraga 😡😡😡
Hero sir thiraviyam ma inum 4 adi podu 😅😅😅
 
Top