- Messages
- 997
- Reaction score
- 2,811
- Points
- 93
அவளின் ஒரு நாள் வாழ்க்கை........
அதுவே அவளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கை.....
விடியற்காலைக்கும் நடுநசிக்கும் இடைப்பட்ட நேரம்....
நேரம் விடியற்காலை 3மணி....
இருள் சூழ்ந்து இருக்க... ஏதோ ஒரு சத்தம் அவள் தூக்கத்தை கெடுக்க திரும்பி படுத்து சத்தம் வந்த திசையை நோக்கி கை வைத்து தடவ அவளின் phone தட்டுப்பட...அதை எடுத்து alarm off செய்து கண்ணை மூடி கொண்டு எழுந்தவள்...இரு கையை தேய்த்து கண்ணில் வைத்து எடுத்து தன் உள்ளங்கையை பார்த்தாள்...
திரும்பி பார்க்க அருகில் அவளின் கணவன் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தான்...
எழுந்து படுக்கையை எடுத்து வைத்து விட்டு brush உடன் வெளியே வந்து நிதானமாக பல் விழக்க...
அந்த வழியே சென்று ஒரு பெண் அவளை பார்த்து "என்ன டி மணி ஆகல... போ டி மணி ஆச்சுனா உன் அத்தைக்காரி எதாவது பேசிற போறா..."என்று சொல்ல...
அவள் வெற்று சிரிப்பை உதிர்த்து விட்டு " அது எல்லாம் பழகி போச்சு கா... நீ முத வேகமா போ...உன் மாமியா முனகல் இங்க வரைக்கும் கேக்குது..."என்று நகர...
"வர வர உனக்கு வாய் கொழுப்பு அதிகமாகிருச்சு டி..."என்று சொல்லி கொண்டு சென்றாள்...
அவள் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து கை கால் முகத்தை கழுவி விட்டு உள்ளே சென்று எண்ணெய் பாட்டிலையும் இரண்டு தூக்கு வாளியையும் எடுத்து கொண்டு வீட்டிற்கு பின் புறம் சென்றாள்...
அவளை பார்த்து மூன்று கோமாதாங்களும் எழுந்து நிற்க...
அவள் சிரித்து கொண்டே "லெட்சுமி,தங்கம்,அன்னம் என்ன என்னைய பாத்து உடனே எழுந்து நிக்கிறீங்க...என்ன வைக்கோல் வேணுமா... கொஞ்சம் நேரம் இருங்க... அக்கா வேலைய முடிச்சுட்டு உங்களுக்கு வைக்கிறேன்..."என்று கோமாதாவிற்கு முத்தமிட்டு பால் கறந்தாள்....
சேலை கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகி கொண்டு ரெண்டு கையிலும் பால் வாளியை தூக்கி கொண்டு ஐந்து நிமிடம் நடையில் பால் சொசைட்டி வர...
அருகில் இருந்த ஒரு பெண் அவளை பார்த்து "ஏன் டி கொசுவத்தை எடுத்து சொருகிட்டு வர...இறக்கு டி..."என்று சொல்ல...
"இல்ல கா பால் கறந்தவாக்குல அப்படியே வந்துட்டேன்..."என்று பால் வாளியை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு சேலையை சரி செய்து விட்டு "என்ன துளசி கா இன்னக்கி உன் co sister ஹ காணோம்..."என்று சிரித்துக் கொண்டே கேட்க...
"வேணாம் டி அப்புறம் நா ஏதாவது சொல்லிற போறேன்...என்னைய வம்பு இழுக்காம இருக்க முடியல உனக்கு..."என்று துளசி கேட்டு கொண்டே பால் ஊற்றினாள்...
"எல்லாம் ஒரு time pass க்கு தான் கா..."என்று சொல்லி விட்டு "இந்த அண்ணே..."என்று பால் வாளியை நீட்டி அவனும் அவளை பார்த்து இழித்து கொண்டே "அம்மாடி நீ எதுக்கு தூக்கிட்டு சிரமப்படுற நானே வந்து எடுத்துக்குவேனே..."என்று சொல்லி அளந்து ஊற்றி 2 லிட்டர் பாலை அளந்து ஊற்றினான்...
"முத்து அண்ணே பல்லு எல்லாம் நல்லா தான் இருக்கு...எனக்கு தான் முடியல... நீ வந்து எங்க வீட்டுல பாலை எடுத்து போ..."என்று துளசி சொல்ல...
முத்து : அது எப்படி மா எல்லாரும் இங்க வந்து தானே ஊத்துருறாங்க... உனக்கு மட்டும் தனியா வரனுமா...
துளசி : அவளுக்கு மட்டும் தனியா போய் எடுத்துட்டு வருவீங்களா...
அவள் துளசி கையை பிடித்து "பேசாம வா கா..."என்று இழுத்து சென்றாள்...
துளசி : இப்ப மணி என்ன டி இருக்கும்...
மாதா கோவிலில் 4 மணி என்று மணி அடிக்க...
அவள் : கேட்டுச்சா துளசி கா...
துளசி : கேட்டுச்சு நீ போய் வேலைய பாரு... உன் அத்தைக்காரி கத்துவா...
அவள் : துளசி அக்கா என் அத்தைக்கு நா பயப்படுறேனோ இல்லையோ நீங்க நல்லா பயப்படுறீங்க...
துளசி : என் கிட்ட நல்ல பேசு...உன் அத்தை கிட்ட பேசாத... போ வேலைய பாரு...
அவள் சிரித்து கொண்டே பாலை ஒரு பால் சட்டியில் ஊற்றி விட்டு வாளியை கழுவி உள்ளே வைத்து விட்டு பின் புறம் சென்று மாட்டு சாணத்தை எடுத்து வந்து கறைந்து வாசலில் தெளிந்தாள்...
தன் அறைக்குள் நுழைய... கீழே படுத்து இருந்த கணவன் கட்டிலில் படுத்திருக்க...அவனை பாத்தவாறு பீரோ வை திறந்து சேலையை எடுத்து கொண்டு குளியலறைக்கு நுழைந்தாள்...
அவள் தலையை பின்னலிட்டு கொண்டு இருக்க...கோவிலில் 5 மணி என்று அடிக்க...வேகமாக அரிசி யை அளந்து கழுவி தண்ணீரை ஊற்றி ஊற வைத்து வெளியே ஓடி வந்து விறகு எடுத்து அடுப்பு பக்கத்தில் வைத்து சோற்று பானை எடுத்து கழுவி அடுப்பை பற்ற வைத்து உலை வைத்து விட்டு வாசலை பெருக்கினாள்...
உள்ளே Gas stove வை பற்ற வைத்து பாலை ஊற்றி காய வைத்து வெளியே வந்து உலை காய்ந்து விட அரிசியை போட்டு மூடி விட்டு உள்ளே வந்து டீ தூள் போட்டு ஏலக்காய் தட்டி போட்டு கொதி வர... இறக்கி சர்க்கரை போட்டு வடிக்கட்டி ஆற்றி வைக்க...
மணி 6 அடித்தது...
டீ யை 1 டம்ளரில் ஊற்றி வெளியே அவள் மாமனார் வெளியே இருந்து உள்ளே நுழைந்தார்...
அவள் : மாமா எப்போ எழுந்திங்க...
மாமா : நீ பாலை ஊத்த போனப்போ தான் மா எழுந்திருச்சே...
அவள் : ஏன் மாமா தூக்கம் வரலையா...
மாமா : இல்ல மா...அது தான் ரோடு வரைக்கும் நடந்து போயிட்டு வரேன்...
அவள் : மாமா டீ குடிங்க...
மாமா : "கொடு மா... இந்நேரம் நீ டீ போட்டுறுவ னு தான் நா வேகமாக வந்தேன்...எங்க மா உன் அத்தை..."என்று கேட்டு கொண்டே டீ யை வாங்கி குடிக்க...
அவள் : இன்னும் எழுந்திரிக்கல மாமா...
மாமா : அப்போ வேகமாக போய் நீ டீ ய குடி... அப்புறம் அவ வேலையா வாங்கி குடிக்க விட மாட்டா...
அவள் சிரித்துக்கொண்டே "சரி மாமா... சோறு அடுப்புல இருக்கு பாத்துத்து வரேன்..."என்று நகர்ந்து சோற்றை பதம் பார்த்து வடித்து விட்டு திரும்ப...
அவள் மாமனார் அவளிடம் டீ யை நீட்டினார்...
அவள் : என்ன மாமா நீங்க...நானே போய் எடுத்து குடிப்பேனே... நீங்க எதுக்கு...
மாமா : "உன்னைய பத்தி எனக்கு தெரியாதா... குடிக்கிறேன் குடிக்கிறேன் னு சொல்லி குடிக்க மாட்ட... என் முன்னாடியே குடி..."என்று நீட்ட... அவள் குடித்து விட்டு பருப்பை எடுத்து கழுவி குக்கரில் போட்டு வேக வைத்தாள்...
காய்கறிகளை நறுக்கி விட்டு கழுவி வைக்க... அவள் மாமியார் எழுந்து வர... டீ எடுத்து வந்து கொண்டாள்...
மணி 7.....
Gas stove ல் சாம்பார் ஐ வைத்து விட்டு வர... அவளின் இரண்டா நாத்தனாரும் எழுந்து வந்து "அண்ணி டீ எங்க..."என்று கேட்க...
அவள் ரெண்டு டம்ளரில் ஊற்றி வந்து கொடுக்க... வாங்கி கொஞ்சம் குடித்து விட்டு "என்ன அண்ணி ஆறி போச்சு... தூக்கி எழுந்து வந்து குடிச்சா சூடா இருந்தா தானே... நல்லா இருக்கு... இப்படி ஆறி போனதை வந்து கொடுத்தா எப்படி... எங்களுக்கு இது வேணாம்..."என்று அந்த டீ யை கீழே ஊற்றி விட்டு "மீதி இருக்குற டீ ய நீங்களே குடிங்க... எங்களுக்கு டீ வேணாம்... காபி போட்டு கொடுங்க...நாங்க உள்ள இருக்கோம்...போட்டுட்டு வந்து கொடுங்க..."என்று உள்ளே செல்ல...
மாமியார் : ஏன் டி டீ ய ராத்திரியே போட்டு வைச்சீயா...
அவள் : இல்ல அத்தை மாமா வரும் போது தான் வச்சேன்...
மாமனார் : ஏன் டி அந்த புள்ளைய அத்தாளு மகளும் சேர்ந்து ஏன் தான் இந்த பாடு படுத்துறீங்களோ... ரெண்டு பொம்பள பிள்ளைய பெத்து வச்சு இருக்க ல... நேரமா எழுந்திரிச்சு வேலைய பாக்க சொல்ல வேண்டியது தானே...
மாமியார் : "யோவ் இவ ஒருத்தி இருக்கும் போது எதுக்கு யா என் புள்ளைங்க வேலை பாக்கனும்... உன் வேலைய மட்டும் பாரு யா..."என்று அவளை பார்த்து "இன்னும் என்ன டி இங்கேயே நிக்கிற... போ போய் காபி போட்டு கொண்டு போய் கொடு..."என்று எழுந்து சென்றாள்...
அவள் எதுவும் பேசாமல் அங்கே இருந்து நகர...
மாமனார் : அம்மாடி...
அவள் : "சொல்லுங்க மாமா..."என்று புன்னகையுடன் பார்க்க...
மாமனார் : உன்னால மட்டும் எப்படி மா சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுது... என்னால உனக்கு ஆறுதல் மட்டும் தானா மா சொல்லு முடியும்... அதுங்கள திருத்த முடியாது... உன் புருஷனும் ஒரு வாய் இல்லா பூச்சி மாதிரி... என்ன ஏது னு கேட்க மாட்டான்... அமைதியா இருப்பான்...
என்ன பண்ண என் அப்பா அவனை ஒரே பையன் னு எதுவுமே சொல்லி கொடுக்காம வளத்தாரு.. நல்லது கெட்டது எதுவும் சொல்லாம வளர்த்தாரு... அதனாலேயே அவன் வெகுளியா இருக்கான்... என்ன சொன்னாலும் அவனுக்காக புரியமாட்டேங்குது...
நீ அமைதியா இருக்க... இந்த இடத்துல வேற பொண்ணா இருந்திருந்தா எப்பவும் சண்டை தான்... என்னால ஒன்னுமே பண்ண முடியலையே மா... அது நினைச்சா தான் வருத்தமா இருக்கு... நீ வருத்தப்படாத மா அவளோட தம்பி ஊருல இருந்து வரட்டும்... இவ அவனுக்கு மட்டும் தான் அடங்குவா...
அவள் : மாமா சும்மா இருங்க... அத்தை என் நல்லதுக்கு தானே சொல்றாங்க...
மாமனார் : "எது உன்னையே திட்டுறதா... நீ எப்போ எதிர்த்து பேச போறீயோ தெரியல... அவளும் திருத்த மாட்டா...நீயும் எதிர்த்
து பேச மாட்டா...போ மா..."என்று சலிப்புடன் எழுந்து செல்ல...
அவள் காபி போட சென்றாள்...
தொடரும்.......