- Messages
- 1,247
- Reaction score
- 3,666
- Points
- 113
வேதம் – 28
அவளருகே விரைந்த அன்பழகனின் முகம் கடுப்பில் கடுகடுத்தன. “என்ன டி, மயக்கப் பார்க்குறீயா? நான் மயங்கமாட்டேன் டி...” என்றான் விரைப்பாக. மனைவி சிரித்தாள் கணவனின் இந்தப் பேச்சில். மனது சுகமாய் அந்தக் கணத்தை அனுபவித்தது.
“கட்டிப்பீங்களா? மாட்டீங்களா?” விரித்தக் கையை வேதவள்ளி மடக்கவே இல்லை. இன்னும் இன்னும் உதடு புன்னகையில் பெரிதாய் விரிந்தன.
“மாட்டேன் டி...” முணுமுணுத்தவன் இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். எதுவும் கூறாத வேதா, நன்றாய் சாய்ந்து அமர்ந்தாள்.
உடையை மாற்றி வந்த அன்பழகன், அவளை முறையோ முறை என முறைத்து விட்டு மறுபுறம் சென்று படுத்துக்கொண்டான். மெதுவாய் அவன்புறம் நகர்ந்த வேதா, எட்டி கணவன் முகம் பார்த்தாள். கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருந்தான். உதடுகள் இறுக்கமாய் மூடியிருக்க, இவளுக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.
“யோவ் அன்பழகன்...” மீண்டும் மனைவி கணவனைச் சீண்டினாள்.
அதில் விழித்த அன்பழகன் அவளருகே எழுந்து அமர, முகம் முழுவதும் கோப ரேகைகள் படர்ந்தன. “என்ன டி, திமிறா? பேரைச் சொல்லிக் கூப்பிட்ற?” பல்லைக் கடித்தபடி வினவினான். அதில் சற்றும் அசரவில்லை வேதவள்ளி.
“மிஸ்டர் அன்பழகன், பேர் எதுக்கு வச்சிருக்காங்க? கூப்பிடறதுக்குத்தானே?” என்றவள் சிரிப்பில் உதட்டை கடிக்க, அவன் பொறுமை பறிபோனது.
“வர வர வாய் ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு டி உனக்கு...” என்றவனின் சட்டையின் நுனியைப் பிடித்து இழுத்தாள் வேதா. இதை எதிர்பாராது தடுமாறிய அன்பழகன் முகம் அவளது முகத்தோடு இழைந்தது.
“யாரு, யாரை சொல்றது ஓவரா பேசுறதுன்னு? ஹம்ம்... சார் நேத்து நைட் பேசுனதெல்லாம் மறந்து போய்டுச்சோ?” உதட்டை வளைத்தாள் பெண்.
அவள் தாடையை தன் கையில் தாங்கியவன், “ஏன் டி அப்படி பண்ண? நான்...” என்றுவிட்டு வலக்கையை எடுத்து இடதுபுற நெற்றியைத் தேய்த்தவன், “நான் உனக்கு நம்பிக்கை தரலையா வேதா? என்கிட்ட எதுவுமே உனக்கு ஷேர் பண்ணத் தோணலையா?” குரல் கரகரக்க கேட்டவனைப் பார்த்து வேதவள்ளிக்குக் உருகிவிட, முகம் கனிந்துவிட்டது.
தன் இரண்டு கன்னத்தையும் தாங்கியிருந்த கைகளை எடுத்து அதில் அழுத்தமாக முத்தமிட்டவள், “இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை. சில கேள்விக்குப் பதிலே கிடையாது. அது போலத்தான் இதுவும். எனக்கு இந்த அன்பழகனை எந்த அளவுக்குப் பிடிக்கும்னு, எந்த அளவுக்கு தெரியும்னு வார்த்தையால எல்லாம் சொல்ல முடியாது... என்னை மட்டுமே சுத்தி சுத்தி வர்ற இந்தப் புருஷனை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு தெரியாததுன்னு என் வாழ்க்கையில எதுவுமே இருக்காது இனிமேல். இப்போ செஞ்சதுக்கு சாரி...” என்றாள் வேதா.
அவனது தாடியடர்ந்த கன்னத்தில் பதிந்திருந்த வேதவள்ளி கரங்களின் வெம்மை சற்றே ஆடவனை ஆசுவாசப்படுத்தியது. அவளது கரத்தை எடுத்து தன் முகத்தில் பதிந்துகொண்டவன், “இனிமேல் இருக்காது சரி. இதுக்கு முன்னாடி ஏன் சொல்லலை? உங்க அப்பாகிட்ட மட்டும் உன்னால ஷேர் பண்ண முடியுறதை, ஏன் என்கிட்ட முடியலை?” அவன் பேச பேச, இதழசைவை உணர்ந்த வேதவள்ளியின் விரல்கள் கூச்சம் கொண்டு மடங்கி மடங்கி விரிந்தன.
‘எத்தனை வளர்ந்தும் என்ன பயன்? இந்த ஆண்கள் எல்லாம் சில நேரங்களில் பக்குவத்தைப் பக்கத்து வீட்டில் கடன் கொடுத்து விடுகின்றனர் போல...’ மனம் அந்த நேரம் கேலி செய்ய, உதட்டில் புன்னகை மலர்ந்தது. குழந்தைப் போல தன்னைப் பற்றி தன்னிடமே குறை கூறும் அன்பழன் அவளுக்குப் புதிது.
‘இன்னும் எத்தனை பரிமாணங்கள் உண்டு இவனுக்கு? அனைத்திலும் தான் மட்டுமே பிரதானமாய் இருந்து தொலைக்கிறோம் போல...’ மனம் சுகமாய் அலுத்துக்கொண்டது. அப்படியே சரிந்து அவளது கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டவனின் மீசை முடிகள் உராந்ததில் லேசாய் கூசிச் சுருங்கியவளின் நயனங்கள் மட்டும் வாஞ்சையுடன் கணவனை மொய்த்ததன. அவனது தலையைக் கோதியவளின் விரல்களை இழுத்து மீண்டும் தனது கன்னத்தில் அழுத்திக்கொண்டான்.
‘இப்போது இவரிடமிருந்த கோபம் காத தூரம் சென்றுவிட்டதா? எப்படி? இங்கு வந்த நாட்களில் அவள் பலமுறை கண்டிருக்கிறாள். சில சில வாக்குவாதங்கள் தாயிடமும் தந்தையிடமும் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் அவர்கள் தவறென்றால் ஒருபடி கூட இறங்கி வர மாட்டானே! இப்போது என்புறம் தவறிருந்த போதும் ஏன் என்னிடம் மட்டும் இத்தனை மென்மை? எதற்கு இந்தக் காதல்? பிடித்தம் என்று பெயரிட்டு அது பிரியத்தின் வரையறைக்குள் நுழைந்துவிடுகிறது. எத்தனை அலாதியானது இந்த நேசம்? பிரியம், பிடித்தம், இன்னும் எத்தனையோ?' என்ன முயன்றும் இந்த அன்பழகன் அவளுக்குப் புரியாத புதிர்தான்.
லேசாய் தலையை உயர்த்திப் பார்த்த அன்பழகனின் விழிகள் இன்னும் தான் கேட்ட கேள்விக்கு நீ பதிலளிக்கவில்லை என்னும் விதமாக இருக்க, “தெரியலையே! சத்தியமா சொல்லத் தோணலை. இதுவரைக்கும் யார்கிட்டேயும் என்னோட உணர்வுகளை ஷேர் பண்ணிப் பழக்கம் இல்லை. சின்ன வயசுல இருந்தே எனக்கு நான் மட்டும்தான்னு வாழ்ந்த வாழ்க்கை கத்துக் கொடுத்தப் பாடம் இது. அதான் சொல்லலை, மத்தபடி உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை...” என்றவள் சில நொடிகள் நிறுத்தினாள்.
“என் வாழ்க்கைல நடந்த விஷயம் எல்லாம் சந்தோஷமா இருந்தா, எனக்குப் ரொம்ப பிடிச்ச என் புருஷன் கிட்ட சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டிருப்பேன். பட், அதெல்லாம் நான் மறக்கணும்னு நினைக்குற விஷயம். ஒவ்வொரு தடவையும் அம்மா இறந்து போனதை நினைக்கும்போது ஏதோ அப்போதான் அந்த இன்சிடென்ட் நடந்த போல ஒருமாதிரி ரொம்ப டவுனா பீல் பண்ணுவேன். அதனாலே அம்மா இறந்ததை நினைக்க மாட்டேன். அவங்க இந்த உலகத்துல ஏதோ ஒரு இடத்துல இருந்து என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டுட்டு இருப்பாங்க. நடந்தது அவ்வளோதான்...” வலியுடன் புன்னகைத்த மனைவியை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டான் கணவன்.
அவன் கரத்தின் மீது தன் கையை வைத்தவள், “இப்போ நம்ம வாழ்ற வாழ்க்கை நிஜம். இந்த அன்பழகன் நிஜம், என்னை நானா ஏத்துக்கிட்ட என் புருஷன் நிஜம். அவ்வளோ புடிக்கும் உங்களை. வெறும் வார்த்தையால சொல்றதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்க அளவுக்கு என்னால நேசிக்க முடியுமான்னுத் தெரியலை. ஆனாலும், நான் சாகுறவரை என்கிட்ட இருக்க மொத்த அன்பும் என் புருஷனுக்குத்தான். அதுல எந்த மாற்றமும் இல்லை...” நிமிர்ந்து அவன் மீசையை இரண்டுபுறம் இழுத்தவளின் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டான் கணவன். அத்தனை இயல்பாய் தன் மீதான உணர்வுகளுக்குப் பெயரிட்ட மனைவியை வாஞ்சையுடன் பார்த்தான் அன்பழகன். அவளது கடந்த காலத்தின் வலியும் வேதனையும் அவனால் உணர முடிந்தது. இனிமேல் அவளைக்
வருத்தப்பட வைக்கக் கூடிய எதைப் பற்றியும் பேசக் கூடாது என நினைத்துக்கொண்டான்.
சில நிமிடங்கள் எதையோ யோசித்த வேதா, “சரி, ரெண்டு விஷயம் உங்கப் பக்கம் தப்பு இருக்கு. அதை நீங்க மாத்திக்கணும்...” விழிகளில் லேசாய் முறைப்புடன் கூறினாள். இப்போது அன்பழகன் உதட்டில் புன்னகை ஏறியிருந்தது.
“என்ன டி?” சன்னமான சிரிப்புடன் கேட்டான். மனம் மனைவியின் பதிலில் நிறைந்து போயிருந்தது. தன் முழு நேசத்திற்கும் சொந்தமானவளின் வார்த்தைகள் வழியே தன் மீதான உணர்வுகளுக்குப் பெயரிடும்போது ஏதோ அடிவயிற்றிலிருந்து உணர்வொன்று பிரவாகமாக பொங்குவது போலொரு பிரம்மை. இதுவரை அவன் அனுபவித்திராத சுகமான அவஸ்தை அது. கோபமெல்லாம் நொடியில் விடுப்பெடுத்துக் கொண்டன. வேதா, அன்பழகனின் வேதவள்ளி அவள் மட்டும்தான் பிரதானம். மற்றவையெல்லாம் உறைந்து போனது போன்றொரு உணர்வு.
“முதல்ல சின்னபுள்ளை மாதிரி எங்கப்பாவோட உங்களை கம்பேர் பண்ணாதீங்க...” லேசாக முறைப்புடன் கூறியவள், “ஒரு பொண்ணுக்கு எப்பவுமே அப்பான்ற உறவு ரொம்ப ஸ்பெஷல். அவர் என் அப்பா... எனக்கு உயிர் கொடுத்த மனுஷன். எனக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போய்டுவாரு. அவர் வாழ்றதே எனக்காக மட்டும்தான். என்னைவிட்டா அவருக்கு யாரும் இல்லைங்க. அவர் மேல நான் ரொம்ப ரொம்ப அதிகமா அன்பை வச்சிருக்கேன். அதை உங்களோட கம்பேர் பண்ணாதீங்க."
"ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு வகையில ஸ்பெஷல். ஒரு அப்பாவா அவர் கொடுக்குற பாசத்தை உங்களால எனக்குத் தர முடியாது. அதே மாதிரி என்னோட புருஷனா நீங்க கொடுக்குற ஒருவிதமான அன்பை அவரால கொடுக்க முடியாது. ரெண்டு பேரும் வேற வேற வகையில எனக்கு ஸ்பெஷல். அதனால நான் முக்கியம் இல்லை, அவர்தான் முக்கியமான்னு வந்து நிக்கக் கூடாது...” செல்லமாகத் தன் முன்னே விரலை நீட்டியவளின் விரல்களைப் பிடித்து ஒவ்வொரு விரலுக்கும் மென்முத்தமிட்டவன், “ஏன் வேதா மருதாணி வைக்கலை?” எனக் கேட்டான்.
தன்னுடைய வார்த்தைகளைக் காதில் வாங்காது அசட்டையாக இருக்கும் கணவனை ஏகத்துக்கும் முறைத்த வேதவள்ளி, “நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னக் கேட்குறீங்க?” முக்கு விடைக்க முறைத்தவளின் நுனி மூக்கில் முத்தமிட்டவன், “சரி, ரெண்டாவது தப்பு என்ன?” என்றான் கிசுகிசுப்பான குரலில். அவனது வலக்கரம் உயர்ந்து மனைவியின் கூந்தலை கலைத்து முன்புறம் முழுவதும் எடுத்துவிட்டது.
அதில் மங்கத் துவங்கிய மனதை இழுத்துப் பிடித்தவள், “ரெண்டாவதா நீங்கப் பண்ணதுக்கு ரெண்டு அடிகூட கன்னத்துல கொடுக்கலாம்னு நினைச்சேன்...” வேதா உண்மையிலே கோபத்தோடு உரைக்க, கணவனின் புருவம் கேள்வியாக ஏறியது.
“என்னவாம்?” அசட்டையாய்க் கேட்டான்.
“அதென்ன சண்டை போட்டுட்டு நைட் வீட்டைவிட்டு வெளியே போற பழக்கம். இனிமே போங்க, வச்சுக்கிறேன் உங்களை...” ஒரு கரம் முடியை சேர்த்தணைக்க, மறுகரம் கொண்டையிட, கணவனை முறைத்தாள்.
“என்னை நீ வச்சுக்காம, யாருடி வச்சுக்கப் போறா? தாரளமா வச்சுக்கோ...” வேதாவின் முகத்தருகே குனிந்து கிசுகிசுப்பான குரலில் பேசியவனின் வெப்பமான மூச்சுக்காற்று பெண்ணைத் தீண்டியது. அவன் பேச்சில், அதன் சாரம்சத்தில் வேதவள்ளி சிவந்து போனாள்.
“ப்ம்ச்... நான் சொல்ல வந்தது வேற. நீங்களா ஒரு அர்த்தத்தை எடுத்துக்காதீங்க...” சிரிப்பும் சிணுங்கலுமாய் வேதா கூற, ஆடவனின் பார்வை அத்தனை ரசனையாய் மனைவியை மொய்த்தன.
“இப்படி சிணுங்கி சிணுங்கிதான் டி என்னை சித்திரவதைப் பண்ற. மயங்கி கிடக்குறேன் உன்கிட்ட...” எப்போதும் போல கணவனின் காதல் மிழற்றல்கள் மனைவியை வெட்கப்பட வைத்துத் தொலைத்தது.
“பேசிட்டு இருக்கும்போதே ஐயாவுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடும்...” முறைத்தவள், “ரெண்டு தப்புக்கும் உங்களுக்கு ஒரு பனிஷ்மெண்ட் தரப்போறேன்...” என்றாள் முகத்தை சிலுப்பியபடி. கணவன் கரம் இப்போது மனைவியை வயிற்றோடு சேர்த்து அணைத்துக்
கொண்டன.
“அப்படியா மேடம்! என்ன பனிஷ்மெண்ட்?” எனக் கேட்டவனைப் பாராது முகத்தை மற்றைய புறம் திருப்பியவள், “அது... அது...” எனத் திணறியபடி, “நான் சொல்ற வரைக்கும் என்னை கிஸ் பண்ணணும்...” என்றாள். அந்தத் திணறலில், சிவந்த முகத்தில், தயங்கியபடி பார்வையைத் தன்னிடம் வைக்க முடியாது அலைபாயும் விழிகளில், தாழ்ந்த இமைகளில், என அனைத்திலும் அன்பழகன் மனம் கொள்ளைப் போனது.
“இந்த பனிஷ்மெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...” உல்லாசமான குரலில் கூறினான் அன்பழகன். அதில் மேலும் சிவந்தது வேதாவின் முகம். அவன்புறம் முகத்தைத் திருப்பியவள், “ஃப்ர்ஸ்ட் இங்க...” என தன் நெற்றியைச் சுட்டிக்காட்டினாள்.
சிரிப்புடன் குனிந்து மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான் கணவன். “எனக்கு இந்த அன்பழகனை நிறைய தெரிஞ்க்கணும். நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுற ஒவ்வொரு பரிமாணத்தையும் தெரிஞ்சுக்கணும். இந்த ஆறடி உடம்பை, அதுக்குள்ள எனக்காக துடிக்கிற இதயத்தை... பேருக்கு ஏத்த மாதிரி என்னை ஒவ்வொரு நிமிஷமும் அன்பா பார்க்குற இந்தப் பார்வையை, என்னை இறுக்கமா அணைச்சுக்குற இந்த ரெண்டு கையை, எனக்கு ஓயாம முத்தம் கொடுத்து வேதா வேதான்னு ஜெபம் பண்ற இந்த உதட்டை...” என அவன் வாய் மீது விரலை வைத்தவள், “எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். நிறைய நிறைய தெரிஞ்சுக்கணும். வாழ்நாள் முழுசும் தெரிஞ்சுக்கணும்...” விழிகள் முழுக்க தன் மீதான நேசத்தில் மயக்கத்துடன் உரைக்கும் வேதா, அன்பழகனை ஒரு சுழற்றி சுழற்றி மொத்தமாய் வாரிச் சுருட்டிக்கொண்டாள்.
அணைத்துக்கொண்டான் இறுக்கமாக மனைவியை. காற்றுக்கூட புக முடியாத அளவிற்கு அணைத்தவனின் உதடுகள் புன்னகையில் மலர, “தெரிஞ்சுக்கலாம்... வாழ்க்கை முழுசும் தெரிஞ்சுக்கலாம். என் பொண்டாட்டிக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமே இல்லை...” என்றவன் உதடுகள் மீண்டும் அவளது நெற்றியில் பதிந்தன.
“நான் என்னை உனக்கு சொல்லித் தரணும். காதலிக்க சொல்லித் தரணும்... என்னை புரிய வைக்கணும்னு நினைச்சேன். அதையே நீ சொல்லி கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வாழ்க்கை, என் கைக்குள்ள அடங்கிப் போற எனக்கு மட்டுமே சொந்தமான என்னோட வேதா, பார்வையால உருட்டி மிரட்டுற பொண்டாட்டி, என்னை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கிற நம்மளோட குட்டி தேவதை, இதுவே போதும் டி...” வார்த்தைகள் மட்டுமல்ல, மனதே நிறைந்து போய்விட்டது அன்பழகனுக்கு. அழகான மௌனம் திரையிட்ட நொடிகளை இருவரும் அழகாய் உள்வாங்கிக் கொண்டனர். நேச பெருமழை அவர்களை அடித்துச் சென்றுவிட்டது. பிணக்குகள் எல்லாம் வெறும் கணக்காகிப் போக, கணக்கிட முடியாத நேசம் அவர்கள் இருவரையும் அழகாய் நிறைத்தது.
அவளைத் தன்னிடமிருந்து பிரித்த அன்பழகன், “நீ பனிஷ்மெண்ட் கொடுத்துட்ட... நான் கொடுக்க வேணாமா?” முகத்தில் அத்தனை தீவிர பாவம் அன்புவிற்கு.
“ஓ...” உதட்டை சுழித்த மனைவியின் முகம் முழுவதும் புன்னகை.
“என்ன பனிஷ்மெண்ட்...” சிரிப்புடன் வேதா வினாத் தொடுக்க,
“கட்டிக்கணும்... இறுக்கமா கட்டிக்கணும்...” எப்போதும் போல கையை விரித்து அபிநயம் பேசியவனில் மயங்கியவள்,
“சாரி மிஸ்டர் அன்பழகன், உங்களோட சான்ஸ் ஓவர்...” என்றாள்.
“எனக்கு கட்டிக்கணும்.”
“நோ...”
“யெஸ்...”
“நோ...”
“யெஸ்...” எனக் கூற வந்த அன்பழகன், “நோ...” எனவும் மனைவி பட்டென, “யெஸ்...” கூறிவிட்டாள். கணவன் முகத்தில் வெற்றிச் சிரிப்புத் தொற்றிக்கொண்டது.
“சரி உன் ஆசைப்படியே யெஸ். கட்டிக்கலாம்...” என்ற அன்பழகனை முறைத்தவாறு கையை விரித்த மனைவிக்குள் புகுந்தான் கணவன்.
எப்போதும் அழகாய் தெரியும் வேதாவின் முகம் தாய்மையில் இன்று பேரழகாகத் தெரிந்தது. கன்னம் இரண்டு லேசாய் உப்பியிருக்க, உதட்டில் புன்னகை தேங்கியிருந்தது. அப்படியே அவளது மார்பில் புதைந்தவனின் கரங்கள் மனைவியோடு சேர்த்து மகளையும் ஸ்பரிசிக்க, அந்த உணர்வு இதயம் முழுதும் இதத்தைப் பரவச் செய்தது. உறைந்த உணர்வு தான், வேதாவில்... அன்பழகனின் வேதாவை உணர்ந்து, உணர்த்தி உறைந்து போனான்.
“தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்...”