- Messages
- 1,247
- Reaction score
- 3,666
- Points
- 113
வேதம் – 27
நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வராத கணவனை நினைத்தொருபுறம் அழுகையும் மற்றொருபுறம் கோபமும் வந்தது. ஏற்கனவே இப்படி ஒரு சண்டை நிகழ்ந்த போது, வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தியிருந்தாள் பெண். அப்போது எல்லாம் தலையை ஆட்டிய கணவன், இப்போது வார்த்தையை மீறி இருக்க, கோபமாக வந்து தொலைத்தது அவளுக்கு. விழியோரம் துளிர்த்த நீரை துடைத்தவள், வீம்புக்கென்றே தூங்காது அமர்ந்தே இருந்தாள்.
வத்சலா வந்து மகனை வசைபாடி, “நீ தூங்கு வேதா, காலைலதான் அவன் வருவான்...” என்றுவிட்டு நகர்ந்தார்.
அன்பழகன் வந்தான், அதிகாலையில் தான் வீடு வந்தான். விழிகள் எல்லாம் சிவந்து போயிருந்தது அவனுக்கு. ஏனோ கோபம் அத்தனை கோபம் மனைவி மீது, இத்தனை நாட்களில் ஒரு நொடி கூட அவள் என்னை நம்பவில்லையா? என்ன வாழ்ந்து என்ன பயன் என்றதொரு சலிப்பு மனதோரம் துளிர்த்துவிட்டது.
கட்டிலை பகிர்ந்து கொள்வதுடன் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்ன? இல்லையே! அது ஒரு உணர்வு. உனக்கு நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு அது. வார்த்தைகளில் எல்லாம் உணர்த்த முடியாதே. அதை அண்மையால் மட்டுமே உணர முடியும்.
தன்னவர்கள் என்று எண்ணம் வரும்போதுதான் நெஞ்சை அழுத்திய பாரம் எல்லாம் நேசத்தின் பிடியில் கண்ணீராய் வெளிப்படும். இதோ, அவளுடைய தந்தையைக் கண்ட பின்பு தேம்பி அழுது கூறிய வார்த்தைகள் எல்லாம் நெஞ்சை இன்னுமே அழுத்தித் தொலைத்தது. அவளுடைய கதறல்கள் எல்லாம் இதயத்தை கத்தியின்றி கிழித்துக்கொண்டிருந்தது.
அவ்வளதானா நான்? இந்த ஒன்றரை வருட வாழ்க்கை? சந்தோஷத்தைப் பகிர மட்டும்தான் நான் வேண்டுமா அவளுக்கு? எத்தனை முறை நேராகவும் மறைமுகமாவும் கேட்டிருக்கிறான் அன்பழகன். சிரித்தே மழுப்பிவிட்டிருந்தாள் பெண்.
தன் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருப்பாள் போல? நினைக்க நினைக்க மனமே ஆறவில்லை. இவளை மட்டுமே உலகமென சுற்றிவரும் தன்னுடைய அன்பும் நேசமும் அவளை அசைத்துப் பார்க்கவில்லையோ?
ஏன் நேற்று வீடு வந்து நுழைந்ததும் கேட்டானே? அப்போது கூடப் பொய்தான் உரைத்தாள். தந்தை மீது பாசம் வைப்பதெல்லாம் தவறில்லை. ஆனால், அதை ஒரு புறம் மனது ஏற்றுக்
கொள்ளவில்லை. தன்னுடைய வேதா என நொடிக்கொரு முறை அவளது பெயரை உச்சரிக்கும் மனது கூட மரத்துப்போனது அவளது செயலில். என்னவென்று விளக்க முடியவில்லை. தனக்கான உறவொன்று தன்னைவிட, மற்றொருவர் மீது நேசத்தைப் பொழிவதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது போனது. அதுவும் வேதவள்ளி விஷயத்தில் தாய், தந்தையையே தூக்கியெறிந்து சென்றுவிட்டான்.
ஏன் அவள் மீது தனக்கு இப்படியொரு மயக்கம். தான் மட்டுமே அவள் மீது நேசத்தைக் கொட்டுவதும், அதை அனுபவிக்க மட்டும்தானே செய்கிறாள் பெண். பதிலுக்கு அவள் கொடுத்த அன்பெல்லாம் பெண்ணின் செய்கையில் கசந்து போனது.
ஒருமாதிரி நிலையில்லாத நிலையில் இருந்தான் அன்பழகன். அவள்புறம் உள்ள நியாயம் எல்லாம் இப்போது காற்றில் கலந்து விட்டது போன்றொரு பிரம்மை. தூங்காது இருசக்கர வாகனத்திலே சுற்றியவன், பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தான். தலையெல்லாம் வலித்தது.
‘அதென்ன, என்னை அவள் தந்தையிடம் அறிமுகப்படுத்துவதற்கு கூட அத்தனை தயக்கம்? அதுவும் எவ்வளவு விரைவாய் கணவனை கைக் காண்பித்தாள் தந்தையிடம்?’ கேலியாய் வளைந்தன இதழ்கள். அவள் முகம் பார்த்து ஒவ்வொரு முறையும் நடக்கும் அன்பழகனுக்கு வேதவள்ளி தன்னிடம் அப்படி இல்லையோ? என்ற எண்ணம் துளிர்த்துத் தொலைத்தது.
ஒரு வித தன்முனைப்பு அவன் மனதை இப்போது ஆக்கிரமிப்பு செய்து இருந்தது. ‘சரிதான் போடி...’ மனது அதிகமாய் சலித்துப் போனது. என்ன வாழ்ந்து என்ன பயன்? இத்தோடு பலமுறை இந்த எண்ணம்.
தானிருக்கும் கோபத்திற்கு சண்டையிட்டால், கண்டிப்பாக அது பெரிய பிரச்சனையாகிவிடும். தனக்கும் மனைவிக்கும் இடையிலொரு பலத்த பிரிவுக்குதான் அது வழிவகுத்து தொலையும். கோபமெல்லாம் அவள் முன்னே ஏனோ இரண்டு நாட்கள் வீட்டில் படிந்த தூசி போல, தட்டிவிட்டதும் காணாமல் போய்விடுகிறது. ஆனால், அவள் அப்படியில்லையே! அதையே பிடித்துக்கொண்டு இன்னும் இரண்டொரு மாதங்களுக்காவது தன்னை தவிக்க வைத்துவிடுவாள். அதுவுமின்றி வேதவள்ளி இப்போது இருக்கும் நிலையில் அவளை திட்டவெல்லாம் அன்பழகனால் முடியாது.
இப்போது அல்ல! எப்போதும்தான். இது கூட அவள் மீதான அதிருப்தியும், ஆதங்கமும் மட்டும்தான். மற்றபடி, அவளை ஒரு நொடி கூட எங்கும் வீட்டுத்தர மாட்டானே!
இது காதலின் என்ன பரிமாணம் என்றே தெரியாத நிலை, அது ஒரு முக்தி நிலை. இந்தப் பிடித்ததிற்கு எல்லாம் வரையறை இதுவரை ஒருவர் கூட வகுக்கவில்லை. அது எல்லாவற்றையும் கடந்துவிட்டது. அது கடவுளுக்கும் பக்தனுக்குமான புலப்படாத உறவுகளின் வரிசையில் நிற்கும். அன்பழகன் மட்டுமல்ல! எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.
நேரத்தைப் பார்த்தவன், கண்டிப்பாகத் தன் மனைவி உறங்கச் சென்றிருக்க மாட்டாள் என உணர்ந்திருந்தான். விறுவிறுவென வீட்டை நோக்கிப் பயணப்பட்டான். ‘அழுத்தக்காரி, வீம்பு பிடித்தவள்...’ பல்லைக் கடித்தான் அன்பழகன்.
அழுகையெல்லாம் நின்றிருந்தது பெண்ணுக்கு. ஒருவிதமான அழுத்தம் குடிபுகுந்திருந்தது அவளிடம். முகத்தில் ஆங்காங்கே கோபத்தின் சுவடுகள் ஒளிந்திருக்க, அவளுக்குமே கண்ணெல்லாம் எரிந்தது. அவன் வந்ததும் கூட்டத்திலிருந்து மெல்ல எழுந்து அறைக்குள் நுழைந்தாள்.
‘அதென்ன எப்போது பார்த்தாலும் சண்டை எனும்போது வெளியே செல்வது? கோபமாய் வந்தது அவளுக்கு. இவர் இஷ்டத்திற்கு ஊரைச் சுற்றுவார். நான் இங்கே சென்றவரை இன்னும் காணவில்லை என பதறித் துடிக்க வேண்டும்? முதல்முறை அவன் இவ்வாறு செய்ததற்கே அத்தனை கோபம் கொண்டவள். மறுமுறையும் அதையே செய்திருக்கிறான்? அப்படியென்றால் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு சண்டையின் போதும் இவர் வெளியே சென்றுவிடுவார். நான் பதைபதைப்புடன் அழுதுகொண்டே வாயிலை நோக்க வேண்டுமா?’ ஆதங்கமும் ஆற்றாமையும் விழிகளில் நீரைப் பெருகச் செய்ய, இதழைக் கடித்து நீரை உள்ளிழுத்துக்கொண்டாள் வேதவள்ளி.
‘என்ன கோபம், எத்தகைய சண்டையாக இருப்பினும் அது தங்களது அறைக்குள்ளே முடிந்துவிட வேண்டுமே! வத்சலா வேறு தன்னுடைய அழுத முகத்தைப் பார்த்தே என்ன பிரச்சனை எனக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்க, அதில் திணறிய தன்னைப் பற்றி இவருக்கு என்ன கவலை?’ என வீம்புடன் அறைக்குள் நுழைந்தாள்.
“உன்னைத் தூங்கதானே சொன்னேன்...” அன்பழகன் வார்த்தைகள் பல்லிடுக்கில் வந்துவிழ, வேதவள்ளி முகத்தில் கோணலான சிரிப்பு. முகம் முழுவதும் அலட்சியம்தான்.
“என்ன டி?” எனக்கேட்டவன் குரல் முழுவதும் கடுப்பு.
“ஏன் இவ்வளோ சீக்கிரம் வந்தீங்க? ஸ்டெர்ய்ட்டா நாளைக்கு காலையில வந்திருக்கலாமே?” நக்கலாகக் வினவினாள் மனைவி. அதில் பல்லைக் கடித்தவன், “போடி... போய்ப் படு...” என்றான் கோபத்தை அடக்கி.
“முடியாது...” அடமாக நின்றிருந்தவளின் விழிகளில் சரசரவென கண்ணீர்.
“ப்ம்ச்... இப்போ எதுக்கு அழற டி?” எரிச்சல் படரக் கேட்டான்.
“நான் அழுதா உங்களுக்கு என்ன? உங்களுக்கு நீங்க நினைக்கிறது மட்டும்தான் சரி, அதைத்தான் செய்வீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?” என்றவளுக்கு ஏனோ மனம் வலித்தது அதிகமாய்.
“பேசாம போய் படு டி. கோபத்துல திட்டிடுவேன். இவ பண்றதெல்லாம் சரி, நாங்க பண்றதெல்லாம் தப்பு?” கோபமாக வினவினான் அன்பழகன். விழி இடுங்க கணவனைப் பார்த்தாள் வேதா.
“நான் என்ன தப்பு பண்ணி இருந்தாலும், அதைக் கேட்டு சண்டை போடுங்க, திட்டுங்க. இப்படி வெளிய போற வேலை வச்சுக்காதீங்க. என்ன நினைச்சுட்டு வெளிய சுத்தீட்டு வர்றீங்க? ஒவ்வொரு தடவையும் சண்டை போட்டுட்டு நீங்க வெளிய போவீங்க? நான் உங்களுக்கு என்ன ஆச்சுன்னு பயந்துட்டு இருக்கணும். அப்படித்தானே? நீங்க பண்றது மட்டும்தான் சரின்ற மைண்ட் செட்டை எப்போ மாத்தப் போறீங்க?” என்றவளின் விழிகள் பளபளத்தன.
மனைவியின் வார்த்தைகள் ஏனோ கோபத்தை அதிகப்படுத்தின. “ப்ம்ச்... நீ செஞ்ச தப்பை முதல்ல உணர்ந்தீயா டி?” என சலிப்பாய் கேட்டான்.
“நான் என்ன தப்பு பண்ணேன்னு இப்போ வரைக்கும் எனக்குத் தெரியலை...”
“ஏன் வேதா, இந்த ஒன்றரை வருஷம் உன்கூட வாழ்ந்தேனே? ஒரு தடவையாவது என்கிட்ட உன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்கணும்னு தோணலைல? உங்க அப்பாகிட்ட என்னை இன்ட்ரோ பண்ணக் கூட உனக்கு டைம் தேவைப்படுது. அவர்கிட்ட நீ அழும்போது எப்படி இருந்தது தெரியுமா? ஏதோ ஒரு கையாலாகாதத்தனமா தோணுச்சு. என் பொண்டாட்டி, அவ மனசுல இத்தனை நாள் எவ்வளோ கஷ்டத்தை வச்சு சுமந்துட்டு இருக்கா? அதைக் கூட என்னால கண்டு பிடிக்க முடியலைன்னு ஆதங்கமா வந்துச்சு டி. உங்கப்பா ஜெயில்ல இருக்கார்னு ஒரு தடவையாவது என்கிட்ட சொல்ல தோணுச்சா?”
“எத்தனை தடவை கேட்டு இருப்பேன் நான்? சொல்லு டி... ஏன் சொல்லலை? உன் பாஸ்ட் பத்தி சத்தியமா எந்த கவலையும் இல்லைடி எனக்கு. அதுல என்ன நடந்து இருந்தாலும், இதோ இப்போ இருக்க என் பொண்டாட்டி மட்டும்தான் நிஜம். அவ எனக்கு சொந்தமானவ, அவளோட விருப்பு வெறுப்பு, துக்கம், சந்தோஷம்னு எல்லாம் எனக்குத் தெரியும். அவளை எனக்குத் தெரியும், அவ மனசு எனக்குப் புரியும். அவளோட ஒவ்வொரு அசைவையும் மூளை அடையாளம் காணும்னு ரொம்ப இருமாப்புல இருந்தேன் டி. அது ஏதோ ஒரு சந்தோஷம், என் வேதான்னு உன் மேல பைத்தியமாதானே டி இருந்தேன். என்கிட்ட உனக்கு சொல்ல தோணலைல? என்னை நீ சரியா புரிஞ்சுக்கலையா? இல்லை நான்தான் உன்னைப் புரிஞ்சுக்கலையான்னு தெரியலை. எந்த இடத்துல நான் தவறுனேன்னு தெரியலை. சே! என்ன வாழ்க்கைன்னு சலிப்பா இருக்கு... போடி... போ, உங்கப்பா கிட்ட போய் அழுதுவடி. கூடவே இருக்க உன்னைச் சுத்தி வர்ற புருஷன் உன் கண்ணுக்குத் தெரியமாட்டேன்ல?”
“உங்கப்பா மேல நீ காட்டுற பாசம் எல்லா சரிதான், ஆனால், அப்படியென்ன என்னைவிட அவர் முக்கியம்னு... பொறாமைன்னே வச்சுக்கோ... என் பொண்டாட்டி, அழுதாலும், என் தோள்லதான் சாயணும், சந்தோஷம்னாலும் என்கிட்டதான் ஃபர்ஸ்ட் ஷேர் பண்ணணும்னு எதிர்பார்க்குறது தப்பா டி?”
“நீ சம்பந்தப்பட்ட எதுவா இருந்தாலும், நீ சரியா தப்பான்னு எல்லா பார்க்க மாட்டேன் டி. நீ மட்டும்தான் என் கண்ணுக்கு தெரிவ... உன்கூட கடைசி வரைக்கும் நிற்பேன் டி. அந்த நம்பிக்கையை உனக்குள்ள நான் வரவைக்கலை போல! இல்லைன்னா, நீயே என்கிட்ட நடந்ததை எல்லாம் சொல்லி இருப்ப இல்ல?” என்றவனின் பேச்சில் வேதவள்ளி வாயடைத்துப் போனாள். கணவனுக்கு தன் மீதான அன்பு அவளறிந்ததே! அவனது அன்பிற்கு எல்லை எல்லாம் இல்லை. யாராக இருந்தாலும் தனக்கு முன்னே இரண்டாம்பட்சமாய் தானே பார்த்துத் தொலைப்பான்.
‘ஐயோ’ வென கணவனைப் பார்த்தாள். ஒருமனம் அவன்புறம் நியாயமிருக்கிறது என போராட, மற்றொரு மனது அதிர்ச்சியில் இருந்தது.
‘என்ன அன்பு இது? அன்பழகன், சரியான பெயர்தான் இவனுக்கு. எப்படி? ஏன்? போயா...’ சுகமாய் சலித்தது மனது. இவ்வளவு நேரம் அவனின் கோபம் எதற்கெனத் தெரியாது தவித்த மனது இப்போது குளுமையை உணர்ந்தது. கொஞ்மல்ல, நிறைய நிறைய காதல் செய்தான் இந்தக் கோசாரக் கள்வன். உண்மையிலே இவன் என்னிடம் மயங்கித்தான் கிடக்கிறான்...’ மனம் கேலி செய்து சிரித்தது.
‘இருந்தாலும் என் அப்பாமேலயே பொறாமை பட்றது எல்லாம் ஓவர்தான்...’ மனதோரம் துளிர்விட்ட மகிழ்ச்சியுடன் சுகமாய் அலுத்துக்கொண்டாள். இப்போது பெண்ணின் உதட்டில் லேசாக புன்னகை படர, அது அன்பழகன் கருத்தில் பதியவே இல்லை என்பது உண்மை. கோபமாக இருந்த கணவனைப் பார்த்தவள், இதழ்கள் விரிந்தன.
‘போயா... வாழ்க்கை முழுசும் இப்படி காதலிச்சே, என்னைக் கட்டிப்போட்டுடுவ போல... ஏற்கனவே இருபத்திநாலு மணி நேரமும் உன் நினைப்புதான்...’ சுகமான தொல்லை. கொஞ்சம் பயம் ஓரத்தில் படர்ந்தாலும், கண்டிப்பாக அவன் பேச்சின் நியாயம் உறைத்தது வேதாவிற்கு. ‘என்னதான் இருக்கு என்கிட்ட? ஏன் என்னை இப்படி சுத்தி வர்றீங்க?’ மனம் முழுவதும் சந்தோஷ ஆர்பரிப்பு.
ஒருமாதிரி மயக்க நிலைதான் வேதாவிற்கு. இந்த அன்பழகனின் அன்பு மட்டும் ஏன் தன்னை இத்தனை பாதிக்கிறது. ‘என்ன டா செய்ற என்னை?’ மனதிற்குள் கேட்டாள். உதட்டோரம் லேசாய் மகிழ்ச்சி புன்னகையாக விரிந்தது. அவன் செய்த தவறு இப்போது பின்னே சென்றிருந்தது.
‘ஏன் தன்னிடம் மட்டும் இவனுக்கு இத்தனை எதிர்பார்ப்பு? தேடல். என்றாவது ஒருநாள் இது தீர்ந்துவிடுமோ?’ சந்தேகம் கொண்ட மூளையைப் பார்த்து மனது சிரித்தது. ஏனோ இந்த ஜென்மத்தில் அன்பழகனின் நேசமெல்லாம் தீராத ஒன்று. வாழ்க்கை முழுவதும் இதுபோலத்தான் தன்னை காதல் செய்வானோ? நினைப்பே குளுகுளுவென பனிக்கூழை தொண்டையில் சரிக்கும் உணர்வு படரச் செய்தது. சந்தோஷப் பூக்கள் மனமெங்கும் பூத்தது. தன் கோபத்தை சற்றே இறக்கி வைத்திருந்தாள்.
சரியென வேதா இறங்கிவந்து ஏதோ கூற வர, “ப்ம்ச்... போடி, போய் தூங்கு, எப்ப பார்த்தாலும் மனுஷனை பாடாய்படுத்துறது. கருமம் கோபம் கூட வரமாட்டுது...” சலித்தபடி கூறியவனின் சுருங்கிய முகத்தில் ஆயிரம் முத்தமிட தோன்றியது மனைவிக்கு. தன்னை முறைக்கும் விழிகளில் முத்தமிட்டு சமாதானம் செய்ய வேண்டும் என்ற அவா எழ, அவனருகே சென்றாள் வேதா. அவளைக் கண்டு கொள்ளாது நேரத்தைப் பார்த்தான் அன்பு. மணி ஆறாக, வத்சலா எழுந்துவிட்டது அவரது சத்தத்திலே கேட்டது.
அவளைக் கண்டு கொள்ளாது அலமாரியைத் திறந்து ஒரு உடையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றுவிட்டான். மனைவி முகம் முழுவதும் இப்போது புன்னகைப் படர்ந்திருந்தது.
குளித்து முடித்து வந்தவன், வேதவள்ளியை முறைத்தவாறே வெளியேறினான். மனைவி சிரித்தாள் அவனின் செய்கையில் மனம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. இரவு தூங்காதது விழிகள் எரிய, சற்றுநேரம் ஓய்வெடுக்கலாம் என படுத்தவள், அப்படியே உறங்கிப் போனாள்.
“எப்போ டா வந்த?” மகன் கையில் தேநீரை நீட்டியவாறு வினவினார் வத்சலா.
“இயர்லி மார்னிங் மா...” என்றவன் தொண்டையில் சூடான தேநீர் இறங்க, தலைவலி சற்று மட்டுப்பட்டது போலிருந்தது.
“இனிமே இந்தமாதிரி நைட் வேலையெல்லாம் வச்சுக்காத டா. பாவம் வேதா முகமே ஏதோ போலாகிடுச்சு. அவளை நீதானே இந்த டைம்ல ஒழுங்கா பார்த்துக்கணும். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கோங்க...” தாயாய் அறிவுரைக் கூறி நகர்ந்தார் அவர். அதையெல்லாம் காதில் வாங்காதவன், அசட்டை செய்து வெளியே கிளம்பிவிட்டான்.
சோனைமுத்துவைக் காணத்தான் சென்றான். ஒருமணி நேரத்தில் அவரது வீட்டை அடைந்திருந்தான்.
அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்தார் மனிதர்.
கதவு திறந்தே இருக்கவும் அன்பழகன் உள்ளே நுழைந்தான். இத்தனை காலையில் அவனை எதிர்பாராது திகைத்த சோனைமுத்துவின் கண்கள் அவருக்குப் பின்னே மகளைத் தேடின.
“வேதா வரலை மாமா, அலைச்சல் வேண்டாம்னு நான் மட்டும்தான் வந்தேன்...” அன்பழகன் பதில் கூறவும், “சரிங்க மாப்பிள்ளை, உட்காருங்க. நான் போய் உங்களுக்கு டீ, காபி எதுவும் வாங்கிட்டு வர்றேன்...” என்றார்.
“இல்லை மாமா, வரும்போது தான் சாப்பிட்டு வந்தேன்...” என்று மறுத்தவன், “நீங்க கிளம்புனா வீட்டுக்குப் போகலாம்...” என்றான்.
“சரிங்க மாப்பிள்ளை, நான் குளிச்சிட்டு வர்றேன்...” என்றவர் குளியலறைக்குள் நுழைய, இப்போது அந்த வீட்டை அமைதியாய் அளவெடுத்தான் அன்பு. பெரிய வீடெல்லாம் இல்லை. மூன்று பேர் தங்கலாம், அவ்வளவுதான். அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அப்படியே நினைவு மனைவியைச் சுற்றியது. காலையில் தான் பேசியவற்றை அசைப்போட்டுக்
கொண்டிருந்தான். இனிமேல் எந்த ஊடலாக இருந்தாலும் இரவில் வெளியே செல்லும் வேலையை வைத்துக்
கொள்ளக் கூடாது என எண்ணிக்கொண்டான்.
சோனைமுத்து குளித்துவிட்டு தயாராகி வந்தார்.
அவர் முகத்தைப் பார்த்தவன், “மாமா, வீட்டுக்குப் போகுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா?” தயங்கித் தயங்கிக் கேட்டான் அன்பழகன்.
“பேசலாம் தம்பி...” என்றவர் தானும் அமர, சில நொடிகள் தயங்கியவன், தங்கள் திருமணம் நடந்த நிகழ்வை விளக்கி இருந்தான். அதைக் கேட்டதும் சோனைமுத்துவிற்கு மகளை நினைத்து ஒருபுறம் பெருமையாக இருந்தாலும், தானில்லாது அவள்பட்ட கஷ்டங்கள் எல்லாம் நெஞ்சை அழுத்தியது.
‘தான் கூறிய ஒரு வார்த்தைக்காகவா மகள் இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறாள்?’ நினைக்கவே அவருக்கு மனம் கசந்து போனது. தன்னுடைய ஒரு நிமிடக் கோபம் மகள் வாழ்க்கையை மாற்றிவிட்டதை அவரால் இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“வேதா பயப்படுறா இதை உங்ககிட்டே சொல்ல, சூழ்நிலைதான் எங்க கல்யாணத்தை நடத்தி வச்சுடுச்சு. உங்க பொண்ணு மேல எந்த தப்பும் இல்லை மாமா...” பொறுமையாகக் கூறிய அன்பழகன் அகம் நிறைத்தான். மகளின் தேர்வு சரியாய் இருக்கிறது என நேற்றே எண்ணி நெகிழ்ந்தவருக்கு மனம் நிறைந்து போனது.
“தம்பி, என் பொண்ணு ஒரு காரியம் செஞ்சா, அது கண்டிப்பா நல்லதாதான் இருக்கும். உங்களைக் கல்யாணம் பண்ற முடிவை அவ அவ்வளோ சீக்கிரம் எடுத்திருக்க மாட்டா. கண்டிப்பா நல்லா யோசிச்சு தான் எடுத்துருப்பா...” என்றவருக்கு மகள் நினைவில் மனம் கனிந்து போனது. அன்பழகனுக்கு மனதிலொரு சொல்ல முடியாத நிம்மதி பிறந்தது. மனைவி தன் தந்தையிடம் எப்படி கூறுவது என மனதில் நினைத்து புழுங்கியதை எத்தனைமுறை கண்டிருக்கிறான். அவனிடமே புலம்பியிருக்கிறாளே பெண்.
“தேங்க்ஸ் மாமா, நீங்க இவ்வளோ சீக்கிரம் எங்களை புரிஞ்சுகிட்டதுக்கு...” லேசாய் இதழ்களை விரித்தான் அன்பழகன். அவனது பணிவான பேச்சில், ‘எத்தனை அமைதியான மனிதராக இருக்கிறார் மாப்பிள்ளை...’ என மனதில் நினைத்த சோனைமுத்துவிற்கு பெருமை பிடிபடவில்லை.
“மாமா, உங்க கிட்ட இன்னொரு விஷயம் கேட்கணும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் சொல்லுங்க...” அத்தனை தயங்கி கேட்டவனைப் பார்த்த மனிதர்,
“தம்பி, நீங்க எதைப் பத்தி பேச வர்றீங்கன்னு புரியுது பா...” என்ற சோனைமுத்து, “நடந்ததெல்லாம் ரொம்ப கஷ்டமான சம்பவம் பா. அழகா, நான், என்புள்ளை, பொண்டாட்டின்னு சந்தோஷமா இருந்தோம். ஆனால், வாழ்க்கை எங்களை புரட்டிப் போட்டுடுச்சு...” என்றவர் நடந்தவற்றைக் கூறத் தொடங்கினார்.
சோனைமுத்து அவருடைய மனைவி காவேரி, மகள் வேதவள்ளி என அழகாக நகர்ந்த குளத்தில் திடீரென ஒரு கல் விழுந்திருந்தது. சோனைமுத்துவிற்கும் அவரது சொந்தகாரர் ஒருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை நிகழ்ந்திருந்தது.
அந்த நேரத்தில் சோனைமுத்து வேலை காரணமாக வெளியூர் சென்றிருக்க, அப்போது அந்த நபர் சண்டை போட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டுருந்தார். இதை எதிர்பாராது திகைத்த காவேரி எதிர்த்துப்போராட, அவர் எதுவும் பேசாது சிறிதுநேரம் வீட்டிலிருந்து விட்டு மெதுவாய் வெளியேறினார். அக்கம்பக்கத்து வீட்டிலிருந்த மனிதர்கள் சிலர் அதை தவறாகப் பேச ஆரம்பிக்க, காவேரி கணவனும் மகளும் இன்றி தவித்துப்போனார். கணவனுக்கு அழைத்துப் பார்த்து அவர் எடுக்காது போய் விட, தன் முடிவை தானே தேடிக் கொண்டார். தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் பெண்மணி.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த வேதவள்ளிக்கு எதுவுமே புரியவில்லை. தாய் இறந்துவிட்டார் என்பதை நம்ப இயலாமல் அழுது கரைய, வெளியூர் சென்றிருந்த சோதனைமுத்து அடித்துப் பிடித்து வீட்டிற்கு விரைந்திருக்கிறார். நேற்று காலையில் தன்னுடன் பேசி வழியனுப்பிய மனைவி இப்போது இல்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனைவிக்கு கொள்ளி வைத்த கையோடு, இத்றகு காரணமான நபரை அறுவாளால் வெட்டி வீழ்த்தியிருந்தார். காவல்துறையினர் அவரைப் பிடித்துச் செல்ல, மகளை முருகையாவின் பாதுகாப்பில் ஒப்படைத்துச் சென்றுவிட்டார்.
நடந்ததை கூறிய சோனைமுத்துவின் விழிகள் கலங்கித் துடித்தன மனைவியை நினைத்து. எத்தனை முறை அழுதிருக்கிறார் மனிதர். கொஞ்சம் தன்னுடைய மனைவி பொறுமையாய் இருந்திருக்கலாம் என ஒவ்வொரு முறையும் எண்ணி மருகுவார். அவருடைய வலியையும் வேதனையையும் அன்பழகனால் உணர முடிந்தது. அவரை அணைத்துக்கொண்டான்.
“நடந்ததை எல்லாம் மாத்த முடியாது மாமா, அதை நினைச்சு வருத்தப்படாதீங்க. இப்போ உங்க பொண்ணு உங்ககூட இருக்கா. உங்களோட மிச்ச காலத்தை அவகூட சந்தோஷமா வாழுங்க. பேரப்புள்ளையைத் தூக்கிக் கொஞ்சுங்க...” என்ற அன்பழகன் வார்த்தையில் தலையை அசைத்தார் சோனைமுத்து.
இருவருக்குள்ளும் கனத்த அமைதி நிலவியது. “மாமா, வீட்டுக்குப் போகலாமா?” அன்பழகன்தான் அந்த அமைதியை உடைத்தான்.
“போகலாம் தம்பி...” அவர் பதிலளிக்கவும் இருவரும் அன்பழகனின் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர்.
இடையில் ஒரு தேநீர் விடுதியில் நிறுத்தி அவருக்கு தேநீர் வாங்கிக் கொடுத்தவன், “ஒரு போன் பேசிட்டு வர்றேன் மாமா...” என அவ்விடத்திலிருந்து நகர்ந்து தன் தாய்க்கு அழைத்து எதையோ கூறி அழைப்பைத் துண்டித்தான்.
சிறிது நேரத்திலே இருவரும் வீட்டை அடைய, வத்சலா வாயிலுக்கு வந்துவிட்டிருந்தார்.
“வாங்க அண்ணா, உள்ள வாங்க...” புன்னகை முகமாக தன்னை வரவேற்கும் பெண்மணியிடம் தலையை அசைத்தார் சோனைமுத்து.
“மாமா, இது என்னோட அம்மா, இவர் என்னோட அப்பா, அப்புறம் அண்ணன்...” மூவரையும் அறிமுகம் செய்த அன்பழகன் அவரை நாற்காலியில் அமரச் செய்தான்.
“அண்ணா, காலைல சாப்பிடலைன்னு அன்பு சொன்னான். வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்...” வத்சலா பாசமாக அழைக்க, சோனைமுத்து மறுக்க முடியாது அமர்ந்திருந்தார்.
“வாங்க சம்பந்தி, எங்க கூட இன்னைக்கு சேர்ந்து சாப்பிடலாம்...” முத்துக்கிருஷ்ணனும் அழைக்க, அவரால் மறுக்க முடியாது போக, அனைவரோடும் அமர்ந்து உண்ணத் துவங்கினார். அவரது பார்வை மகளைத் தேட, அதை உணர்ந்த அன்பழகன், “வேதா தூங்குறா மாமா...” எனப் பதிலளித்தான். சோனைமுத்துவுக்கு அப்படியொரு நிறைவு மனதில். மகள் புகுந்த வீட்டு மக்கள் அனைவரும் தன்னையே அத்தனை அன்பாய் தன்னைக் கவனித்துக்கொள்ளும் போது, மகளைக் கண்டிப்பாக தாக்குவார்கள் என மனம் குளிர்ந்து போனார். அதுவும் இன்றி, தான் சிறையிலிருந்து வந்திருக்க, அதைப்பற்றி ஒருவரும் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லையே! ஏன் லேசாய் முகத்தைக் கூட சுளிக்கவில்லை. அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? அவர்களது நடவடிக்கையை வைத்து எதுவுமே அவரால் கணிக்க முடியவில்லை.
உண்டு முடித்ததும் முத்துக்கிருஷ்ணன் சோனையிடம் இயல்பாய் பேச, அவரது பேச்சில் கலந்து கொண்டார். முத்து தங்களது குடும்பம் பற்றி
பகிர்ந்துகொண்டார். மகனின் சேட்டைகள் பற்றியும் அவ்வப்போது இடையிடையில் கூறினார். அவர் பேசுவதில் கவனமிருந்தாலும், சோனைமுத்துவால் இப்போது கணிக்க முடிந்தது. கண்டிப்பாக தன்னுடைய கடந்த காலம் இவர்களுக்கு தெரிந்திருக்கிறது என. எத்தனை உன்னதமான மனிதர்கள் என மனம் குளிர்ந்து போனார்.
தன்னை அவர்கள் இழிவாய் நடத்தினாலும், மகளை நன்றாய் கவனித்துக்கொண்டால் போதும் என நினைத்துதான் மனிதர் இங்கே வந்திருந்தார். ஆனால், இப்படியொரு எதிர்வினையை அவர் எதிர்பார்க்கவில்லை. மனதிலே கடவுளுக்கும் சாமியாகிப் போன மனைவிக்கும் நன்றியை உரைத்தார். மகளைப் பற்றிய கவலை வேரோடு அழிந்துவிட்ட உணர்வு.
“என் ஃப்ரெண்ட் ஒரு வெல்டிங் கம்பெனி வச்சிருக்காரு. முன்னாடி நீங்க அந்த மாதிரி ஒரு கம்பெனியிலதான் வேலை பார்த்தீங்கன்னு அன்பு சொன்னான். உங்களுக்கு விருப்பம்னா, அங்கப் போய் வேலைக்குச் சேர்ந்துக்கோங்க. இது அவனோட நம்பர்...”
முத்துக்கிருஷ்ணன் இயல்பாய் ஒரு அறிமுக அட்டையை சோனையிடம் கொடுக்க, அதை சிறிய தலையசைப்புடன் பெற்றுக்கொண்டார் மனிதர். அறிவழகனும் இரண்டு வார்த்தைகள் அவரிடம் பேசிவிட்டு, மருத்துவமனைக்குக் கிளம்பினான்.
சமையலறையில் மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் சென்ற அன்பழகன், “தேங்க்ஸ் மா...” எனக்கூறி அவரை அணைத்துக்கொள்ள,
“டேய், வேலை பார்க்க விடுடா. உன் கொஞ்சல் எல்லாம் அப்புறம் வச்சுக்கோ...” தாய் முறைக்கவும் மகன் முகத்தில் சிரிப்பு படர்ந்தது.
“ஹம்ம்... ம்மா, எப்படிமா நான் ஃபோன் பண்ணி சொன்னதும், எல்லாத்தையும் உங்களால உடனே அக்செப்ட் பண்ண முடிஞ்சது? உங்களுக்கு கோபம் வரலையா?” அன்பழகன் வினவினான்.
அதில் சிரித்த வத்சலா, “கோபப்பட என்ன டா இருக்கு? ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தவங்க எல்லாரும் கொடுமைக்காரங்க இல்லை டா. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மனிஷனை மிருகமா மாத்தி, தப்பு பண்ண வைக்கிது. செஞ்ச தப்பை உணர்ந்து, தண்டனை அனுபவிச்சுட்டு வர்றவங்களை எதுவும் பேசாம, வாழ வழி விட்டாலே போதும் டா. அதான் மனிதாபிமானம். அதுவும் வேதா அப்பா வாழ்க்கையில அவர் அனுபவிச்சது எல்லாம் பெரிய வலி டா. அதுதான் கோபத்துல அப்படி செஞ்சுட்டாரு. இப்போ திருந்திட்டாருல்ல டா? ஏன் எங்கப்பா கூடதான் ஜெயிலுக்குப் போனாரு...” தாயின் பேச்சை அமைதியாகக் கேட்டிருந்தான்.