Member
- Messages
- 31
- Reaction score
- 13
- Points
- 8
அத்தியாயம் - 6
' ஐயையாயோ ' என்று கத்தினாள் சித்தாரா . இந்த சப்தத்தில் அடித்து பிடித்து எழுந்தாள் என்று சொல்ல ஆசை தான்... ஆனால் மெல்லமாக உருண்டு புரண்டு ஒருவாறாக வலதுபுறம் சுவரில் ஒட்டியிருந்த தனது ஆதர்ச நாயகன் அல்லு அர்ஜூனிற்கு சில பல பறக்கும் முத்தங்களை வழங்கி விட்டு எழுந்து வந்தாள் சில்வியா...
" ஆச்சே மனுஷிய நிம்மதியா தூங்க விட மாட்ட... ஹாஸ்டல் ல இருந்து மனுஷி நிம்மதியா வந்து தூங்குனா பொறுக்காதே " என்று பாதி தூக்கத்தில் தூங்கி வழிந்தபடி கூற, தலையில் அடித்துக் கொண்டாள் சித்தாரா .
" எனக்கு நேரம் ஆச்சு பக்கி... 9.30க்கு எக்ஸாம் ஹால் ல இருக்கணும் ... இன்னும் சமைக்கல.. என்ன பண்ண னு தெரியல... இப்பவே டைம் 8.30 ஆகிட்டு டி... " என்க , " என்ன சமைக்கணுமா ... " என்று உச்சகட்ட கடுப்பில் கேட்டாள் . " என் செல்லப்புள்ள எம்புட்டு ஷார்ப்பு... வாடி தங்கம்... உம்மாமாமா... " என்று கூறி முத்தம் கொடுக்க போக , " அடச்சை நீங்கு... நான் இன்னும் பல்லு விளக்கல.. " என்று தூர நீங்கினாள் சில்வியா..
" தூ... ஊத்த... பல்லு விளக்காம சமையல்கட்டுல ஏறுன... கால உடைச்சுடுவேன்... " என்று சித்தாரா கத்த, " அடிங்க... தூங்குறவ தூக்கத்த கெடுத்துட்டு என்ன நீ ஊத்த ங்குறியா... நேத்து நீ தாண்டி பல்லு விளக்காம நாலு பச்ச முட்டைய திருடி தின்ன திருட்டு பக்கி " என்று அடி நடத்த, சத்தம் கேட்டு வீட்டு பக்கம் வந்தாள் பிரதீபா...
" அடச்சை இங்க என்ன சத்தம்.. குழாயடி சண்டை கூட முடிச்சுச்சு... உங்க தொல்லை முடியல.. " என்று சொல்லிக் கொண்டே கேட்டருகில் வந்து நிற்க, " நாங்க அப்படி தான் பேசுவோம்... சரிதான் போ... " என்று சித்தாரா முகம் சுழுக்க , " சித்து அப்படியெல்லாம் சொல்ல கூடாது... பிரதீ அக்கா ரொம்பபப நல்வங்க... " என்றவள் பிரதீபாவிடம், " சாரி க்கா இனி சத்தம் வராது " என்று விட்டு கிளம்பினாள் சில்வியா ... பிரதீபாவிற்கோ, ' நீ அவ்வளவு நல்லவளாடி ' என்று நினைத்தபடி வீட்டிற்கு சென்றாள் ... ஆனால் அவளுக்குத் தெரியாதே நம் சில்வியா அவள் தலையில் அழகாக மிளகாய் அரைக்கப் போவதை...
சித்திரா குளிக்கச் செல்ல, சில்வியா பல் துலக்கி சமைக்க ஆயத்தமானாள். நேற்று மீதம் இருந்த சாதம் நினைவு வந்தது. பிரிட்ஜில் கொஞ்சம் மோர் இருந்தது. ஒரு பச்சை மிளகாயை எடுத்து நறுக்கி அதில் சேர்த்தவள் , இருந்த மூன்று ஜாதிக்காயில் பரபரவென ஊறுகாய் இட்டாள் . செய்து முடித்து சித்தாரா வரும்முன் பாத்திரத்தில் அடைத்துக் கொண்டாள். காலை உணவு செய்ய சோம்பல் கொண்டு அதே உணவை தட்டில் எடுத்து வைத்தாள்.
வேகவேகமாக வந்த சித்தாரா அவளிடம், " சரிடா நான் கிளம்புறேன் " என்க, " அடியேய்... தாரா... சாப்பாடு எடுடி... " என்று கத்தினாள் சில்வியா...
" சாரி தங்கச்சிமா... என் சிலுக்குமா... நேத்து மீதம் இருந்த இரண்டு முட்டையை எடுத்து எக் ரைஸ் பண்ணிட்டேன். மைதா மாவு ல தோசை ஊத்தி சாப்பிட்டுட்டேன்.
உனக்காக செய்ய சொன்னேன்... நீ வேற ஆசையா மோரும் சாதமும் வச்சிருக்க... சாப்டு ஒரே என்ஜாய் மோடில் இரு.. உன் எலிக்கூண்டில் நான் எலி ஆக மாட்டேன்டி " என்று கத்தியபடி செருப்பணிந்து கிளம்பினாள் சித்தாரா .
சித்தாரா கிளம்பும்போது வாசல் வரை வந்த சில்வியா அவளை வழியனுப்பி வைத்தாள். வீட்டிற்குள் நுழையும் நொடி ஒரு பைக்கின் சப்தம் கேட்க, கண்களில் நட்சத்திரம் மின்னாத குறையாக, துள்ளலுடன் திரும்பி பார்த்தாள் சில்வியா. அவளுக்கு தோதாக பிரதீபாவும், " ஓய் சில்லு ... இன்றைக்கு சாப்பாடு என்ன வச்ச, உங்க வீட்டுல உரை மோரோ தயிரோ இருக்கா... " என்று கேட்டாள்.
' அடச்சை இவ ஒருத்தி ... போன முறை வாங்குன 2 தக்காளி, 3 பல் பூண்டு, 3 கத்தரிக்கா , 8 சின்ன வெங்காயம் இன்னமும் என்னமோ உண்டே... ஆங் 5 உருளைகிழங்கு... அதையே இன்னமும் தரல... இப்ப தயிரா... விளங்கிரும் ' மனதில் அவளை வறுத்தெடுத்தவள், உள்ளே சென்று நேற்று செய்து எடுத்த தயிரை எடுத்து வந்து தந்தாள்.
சில்வியாவின் மனமோ, ' பெயரு தான் போலீஸ்காரர் வீட்டு பொம்பள... ஆனா வாங்குன பொருள திரும்ப தராதே... பேசாம இது மேல ஒரு கம்ப்ளைண்ட் குடுத்தா என்ன... வேண்டாம்... நாள பின்ன இந்தம்மாவ வச்சு தானே வேலை ஆகணும்... அப்ப பாத்துக்கலாம் ' என்று நினைத்துக் கொண்டாள்.
தயிரைக் கொடுத்த பின்னரும் சில்வியா எதையோ ஸ்ட்ரா போட்டு உறிவதை போல முழுங்கும் கண்களுடன் கண்ணையகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, பிரதீபாவிற்கு குழப்பமாக இருந்தது. ' அப்படி என்ன கருமோ இருக்கு னு இவ இந்த பார்வை பாக்குறா... ' என்று சினிமா பாணியில் படு ஸ்லோவாக திரும்ப , பிரதீபாவின் மூளை வெடிக்காத குறை தான்...
இருந்தும் இது உண்மையா அல்லது பொய்யா என்று தெரிய வேண்டுமே... " சிலுக்கு... எலேய் சிலுக்கு... நீ அங்க என்ன பாக்குற... " என்று கேட்டாள். சில்வியாவிற்கு ஒரு பழக்கம் உண்டு... எதையாவது தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கையில் எதாவது கேட்டால் அப்படியே உண்மையை உளறி வைப்பாள்.
" அதுவா தீபா க்கா உங்க புருஷர தான்... அட இன்னமுமா புரியல... நம்ம ஆரியன் மாம்ஸ தான்... " என்று கூறி விட்டு வெகுதீவிரமாக அவனைப் பார்க்க, பிரதீபாவிற்கு காதுகளில் இருந்து காற்று வந்து கொண்டிருந்தது. அவளது வயிற்றில் சட்டி வைத்து சமைத்தால் தீயில்லாதே சமையல் நடக்கும் போல...
" அடியேய் அவன் என் புருஷன் டி... " என்று பிரதீபா காட்டுக் கத்தலாய்க் கத்த, வெளியே நின்ற ஆரியன் என்ன என்பது போல திரும்பி பார்த்தான். " நான் ஒன்னும் என் புருஷன் னு சொல்லலயே.. அவரு உங்க புருஷன் தான்... நான் வெறும் சைட்டு தான் அடிக்கிறேன்... இப்ப என்ன எனக்கே கல்யாணம் ஆனாலும் இப்படி தான் பாப்பேன்.. நீங்க இல்ல மாம்ஸே தடுக்க முடியாது " என்க, நெஞ்சில் கை வைத்து நின்றான் ஆரியன்...
பிரதீபா மற்றும் சில்வியாவின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன் தனது நெஞ்சில் கை வைத்து பைக்கைப் பிடிமானமாகப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.
" என்ன மாம்ஸ் நெஞ்சுவலியா... நான் வேணா வந்து மருந்து போட்டு தரவா... " என்று சில்வியா கேட்க, " எதே... எலேய் சைட்டடிக்கிற னுட்டு எதோ சக்காளத்தி வேலை எல்லாம் பாக்குறடி... யோவ் நீ என்னயா மல பாம்பாட்டும் நெளியுற... " என்று பிரதீபா கத்த, உள்ளிருந்து வெளி வந்தான் அஸ்வின் .
" அய்யோ அண்ணி என்ன சத்தம்... அந்த வீட்டுல சத்தம் தாங்கல னுட்டு இப்ப நம்ம வீட்டு சத்தம் தான் சந்தி சிரிக்குது ... " என்றவன் , ஆரியனின் பைக்கில் வெளியே சென்றான்.
" அட இதுக்கு ஏன் க்கா ஃபீல் ஆகுற... ஆரி மாம்ஸ் மட்டும் இல்ல... உங்க வீட்டுக்கு வருவாரே ... நல்ல போஸ்ட் கம்பி போல பெருசா வளர்ந்து கெட்டவரு... ஹான் சமரு மாம்ஸ்... அவர கூட இப்படி தான் சைட் அடிப்பேன்... டூ யூ நோ... அந்த மாம்ஸ் நல்லா நான் சைட் அடிக்க ஏதுவா மதில் ல எப்பயும் நிப்பாரு .. உன் புருஷன் கோப்பரேட் பண்ண மாட்ராறு... " என்று மூக்கு சிந்த, " ஆத்தி " என்று உலறுவது ஆரியனின் முறையாயிற்று .
பிரதீபா சும்மா இல்லாமல் , " ஏன் நிறுத்தீட்ட... என் கொழுந்தனாரையும் சைட் அடிக்கிறது... " என்று கடுப்பில் பொங்க, சில்வியா சொன்னாளே பார்க்கலாம் ஒரு பதிலை.
" அட அக்கா... சைட் அடிக்கிறதுக்கும் லவ்வருக்கும் வித்தியாசம் உண்டு... தப்பு தப்பா கனெக்ட் பண்ணாதீங்க.. உங்க புருஷன் சைட் அடிக்கப்படும் நபர்... உங்க கொழுந்தனாரு மை லவ்வர்... அதனால தானே நான் இன்னமும் உங்கள அக்கா னு கூப்டுறேன்... கூட்டி கழிச்சு பெருக்கி வகுத்து பாருங்க ... எப்படி பாத்தாலும் உங்க குழந்தைக்கு நான் தான் சித்தி ... சரி வேலை இருக்கு. அப்புறமா வர்றேன் " என்றபடி சில்வியா வீட்டில் நுழைந்தாள் . ஆனால் கேட்டுக் கொண்டிருந்த ஆரியன் ஆவென கண்கள் விரிய கேட்க, பிரதீபாவோ பதில் புரியாமல் பேந்த பேந்த முழித்தாள்.
ஆரியன் பிரதியின் தலலயில் தட்டி, " பிரதீ ... அவ நம்ம அஸ்வின் அ விரும்புறா போல... அந்தப் பொண்ணு படிப்பு முடியட்டும்... அஸ்வின் கிட்டயும் பேசிப் பாக்கலாம்... ஆனா ஒண்ணு உனக்கேத்த சரியான வாயாடி தான் " என்று கூறிவிட்டு வீட்டில் செல்ல, பிரதீபாவிற்கு ஒரே குஷி தான்... ஆனாலும் தன் கணவனை சைட்டடிப்பாளே என்று எண்ணியே வயிறு கபகபவென எரிந்தது. (
) .
சில நிமிடத்தில் அஸ்வினும் வீடு வந்தான். " அஸ்வி... பிரதீ ரெடி ஆகுங்க
... சமர் வீட்டுக்குப் போயிட்டு வருவோம்... இந்த ஒரு வாரமா அந்த வீடே சரி இல்ல... ஒரெட்டு போய் பாத்துட்டு வருவோம்... " என்க, மறுபேச்சின்றி அனைவரும் ஒருங்கியிருந்தனர். குழந்தையோடு சேர்த்து நால்வரும் காரில் அமர்ந்து கொண்டனர். எதிர் வீட்டில் தான் சில்வியா இருப்பதனால் சன்னல் வழியே எட்டிப் பார்த்தவள் சத்தமின்றி மறைந்து கொண்டாள்.
குறிப்பிட்ட நேரத்தில் காரானது சமரின் வீட்டில் வந்து நின்றது . " வா ஆரியா ... வாமா தங்கச்சி... " என்று வரவேற்றான் சமர். " எப்படி இருக்கீங்கடா " என்று கேட்டபடி ஆரியனும் வந்து ஷோபாவில் அமர, பிரதீபா தனது கையில் கொண்டு வந்த பொட்டலங்களைக் கொடுத்தாள். " இது எல்லாம் எதுக்கு அக்கா... " என்றாள் சஹானா . சனா அக்கா எனவும் பிரதீபாவிற்கு காலையில் சில்வியாவின் செய்கை நினைவு வர, பக்கென்று சிரித்து வைத்தாள். ஆரியனுக்கு அவளது சிரிப்பு புரிய, தனது நெஞ்சில் கை வைத்து தன்னை சமன் செய்து கொண்டான்.
இதைப் பார்த்த சஹானாவும் சமரும் குழப்பமாய் பார்க்க, " ஆரி. . நீங்க அங்க சொல்லுங்க... நான் இங்க சொல்றேன்... " என்றபடி சஹானாவை இழுத்துக் கொண்டு சமையல்கட்டை நோக்கிச் சென்றாள் பிரதீபா. ஆரியனும் சமரோடு வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொள்ள, அஸ்வினோ ' வீணா போன தயிருக்கு அடிவச்ச கதைய சொல்ல தனித்தனியா போகுதுங்க ' என்று எண்ணிக் கொண்டான்... ஆனால் அவனுக்குத் தெரியாதே காலையில் அவனைப் பற்றிச் சொல்லத் தான் போகிறார்கள் என்று.
தனியே வந்தவர்கள் கதையை ஆரம்பித்தனர். பிரதீபா காலையில் தயிர் முதல் அஸ்வினை விரும்புவதை வரை கூறி முடிக்க, சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சஹானா. கதை முடிந்ததும், " ஏன் பிரதீ... அந்தப் பொண்ணு எப்படி.. வீட்டுல எல்லாம்.. " என்று விசாரணையை ஆரம்பித்தாள்.
" அவள தப்பா சொல்ல எதுவும் இல்ல... ஆனா ஆளு செம்ம கேடி... ஆரிய மாமா னு கூப்டுவா... பட் பார்வை கண்ணை மீறியது இல்ல... கொஞ்ச நாளாவே அஸ்வி பின்னாடி பார்வை போச்சு... இன்னைக்கு வேணும்னே வம்பிழுத்து மனசுல இருக்குறத சொல்லிட்டா. குணத்துல பிரச்சனை எல்லாம் இல்ல... குடும்பத்தை ஒழுங்கா நடத்துவா... 22 வயசு ஆகிடுச்சு . வீட்டுல மூத்தவங்க னா ஒரு அக்கா சித்தாரா மட்டும் தான். அவளும் படிச்சுட்டே பார்ட் டைமா ஜாப் போறா... நம்ம அஸ்வினும் இப்ப படிப்பு முடிச்சுட்டான்.. வேலைக்கு போறான்... அவனுக்கும் 27 ஆகுது ல.. பக்கத்துலே பாத்துட்டா நல்லதுதான். அவ படிப்பு ஒரு வருஷத்துல முடியும். முடிஞ்ச பிறகு வீட்ல பேசலாம் னு நினைச்சிருக்கோம்... "
" அப்ப பெரியவங்க னு பெத்தவங்க இல்லையாடா... " என்று சனா கேட்க, " அவங்க அப்பா சின்னதுலயே இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டாரு . அதுனால டிவோர்ஸ் வாங்கி இவங்க பிரிஞ்சு வந்து வாழ்றாங்க... முதல் அலை கொரோனா ல அவங்க இறந்துட்டாங்க... சொந்தம் னு பெருசா இல்ல... அவங்க வாழ்வு அவங்களுக்கு... " என்று பேச்சு மேற்கொண்டு முன்னேறியது.
இங்கு சமர் ஆரியன் மத்தியில், " ஹா ஹா ஹா... அந்தப் பொண்ணு அண்ணா னு தானே கூப்டுவா... நல்ல புளுகுராணி தான்... " என்று சொன்னான் சமர். " தெரியும் டா... எல்லை மீறி பேச மாட்டா... சொல்ல போனா அவ முழுங்குற கணக்கா பாத்தது என்ன இல்ல எங்க வீட்டு செவ்வாழை மரத்தை தான்... ஆனா பிரதீ தான் எப்ப பாரு விளக்குல எண்ண ஊத்தி பளிச்சுனு வச்சுருக்குறது போல நாலா புறமம் பாப்பாளே... தப்பா நினைச்சுட்டா போல... " என்க, இருவரும் சிரித்துக் கொண்டனர் .
" இப்ப அஸ்வின் எப்படி இருக்கான்.. " என்று சமர் கேட்க, " அவனுக்கென்ன... முன்னாடி அண்ணினா பத்தடி தள்ளுவான்... சின்ன வாயா பிரதீக்கு... வாயாடி பேசியே அவனை குழந்தை போல மாத்திட்டா... இப்ப அம்மா புள்ள போல ஒட்டிட்டு திரியுதுங்க... எனக்கு தான் வயிறு எரியுது " என்க , " மச்சான் " என்று வாயை மூடி சிரித்தான் சமர்.
" சரி விடு ... நேத்து என்ன ஆச்சு.. திடீர்னு நேத்து கவினைத் தூக்க சொன்ன... " என்று தீவிரமாகக் கேள்வியை முன்னிறுத்தினான். சமர் மொனத்தைப் பதிலாக தர, ஒரு நெடிய பெருமூச்சை வெளியிட்டவன் பேச ஆரம்பித்தான்.
" கவினை அஹானா விரும்புறாளா " என்று பட்டென்று கேட்டான். சமர் அவனை நிமிர்ந்து பார்க்க, " சின்ன டவுட் இருந்துச்சு... அதான் கேட்டேன்... அஹானா எனக்கும் தங்கச்சி தானேடா ... கவின் பத்தி விசாரித்ததில் சரியான தகவல் இல்ல... ஆனா நேத்து அஸ்வின் ஒண்ணு சொன்னான்... ஆனா என்ன னு சரியா சொல்ல தெரியல... " என்று இழுத்தான் .
" கவின் பத்தி எதாவது ஸ்டேஷன் ல கேஸ் இருக்கா... " என்று சமர் கேட்க, " அப்படி எதுவும் இல்ல... ஆனா மினிஸ்டர் ராஜசெல்வன் வீட்டுக்கு எவிரி நைட் போறதா கேள்வி... " என்க, சமருக்கு எதோ தவறாகப் பட்டது . " ஹேய் அவருக்கு இரண்டு பொண்ணுங்க தானேடா ... முதல் பொண்ணு ஒமிக்ரான் ல இறந்துட்டாளே . இன்னொரு பொண்ணு நம்ம அனாவ விட ஒரு வயசு மூத்தவ... அங்க பையனே இல்லையே... " என்று கேள்வியெழுப்ப,
" ஆமாடா... ஆனா அந்தப் பொண்ணு அங்க இல்ல ... விசாரித்ததில் அமெரிக்கா போனதா கேள்வி. ஏர்போர்டிலும் அப்படி தான் பதிவாகியிருக்கு . மினிஸ்டருக்கும் கவினுக்கும் எதாவது விஷயம் இருக்கா னு தெரியல... " என்க, " எதோ தடுக்குது... பாத்துக்கலாம் " என்றிட, அவனும் தலையசைத்தான்.
" அதுசரி அஸ்வின் என்ன சொன்னான் " காரியத்தில் குறியாக கேள்வி கேட்டான் சமர்.. " அவனுக்கு கன்ஃபார்ம் ஆகல... பட் ஒரு சந்தேகம் தான் " என்றவன் , மீண்டும் தொடர்ந்தான்.
" கவினை நீ சரியா கவனிச்சிருக்கியா னு தெரியல... நானும் அவனும் பார்த்தவரை சில நேரம் அவன் போடுற ஸ்டட் பொண்ணுங்களோடதா இருக்கும்... ஒரு நாள் அவன் நடக்குறதை பார்த்தால் பொண்ணு போல நடக்குறான்... " என்று பதட்டமாகச் சொல்ல, சமருக்கு தலை வெடிக்காத குறைதான்... ' அப்ப அவன் திருநங்கையா... ' என்ற கேள்வியே மூளையில் பதிந்து நின்றது . .
தொடரும்...
உங்க கருத்தைச் சொல்லிட்டு போங்க மக்களே...
- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன்