- Messages
- 545
- Reaction score
- 735
- Points
- 93
அத்தியாயம் 9
அவன் கூறுவதை கேட்டு திரும்பி பார்த்த சாரா அதிரவெல்லாம் இல்லை. ஆம், அதிர்ந்தால் அது சாராவே இல்லையே! அவன் அவளையே வேடிக்கை பார்த்திருக்க வேகமாக மொபைலில் உள்ள செயலியை பரிசோதித்தாள். அவள் பதிவு செய்திருந்த தொடர்வண்டி இன்னும் திருச்சிராப்பள்ளி சந்திப்பையே தொட்டிருக்கவில்லை என்ற தகவல் கிடைத்திருந்தது.
"ச்சு..." என்று சலித்தவள் நெற்றியை நீவி விட்டு மீண்டும் சென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வாயிலுக்கருகில் வந்து நின்று விட்டாள் அதாவது அவனை கண்டு கொள்ளாமல். பிறகு, மீண்டும் அவனிடம் சென்று மண்டியிட முனையும் மனதிடம் யார் போராடுவது. இப்பொழுது தான் சொற்பளவு மீண்டிருக்கிறாள்.
'என்ன தான் செய்கிறாள்?' என்று நின்று பார்த்திருந்தவன் அவளின் எண்ணம் புரிந்தவனாக அவளருகில் சென்று, "இங்கயே எவ்வளவு நேரம் நிற்ப? அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் டூ ஹவர்ஸ் இருக்கு. வந்து என்னோட சீட்டில உட்காரு" என்று அழைத்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் திறந்திருந்த கதவின் புறம் பார்வையை திருப்பிக் கொள்ள, "சாரா" என்றவன் அவளின் கையை பிடிக்க முனைய வேகமாக இரண்டடி பின்னால் நகர்ந்தவள் கைகளை இழுத்துக் கொண்டாள் விழிகளிலே கண்டனத்தை காட்டி.
"என்ன சொன்னாலும் கேட்க கூடாதுன்னே இருக்கியா நீ? என்ன தான் பிரச்சனை உனக்கு?" என்றவனுக்கு எரிச்சல் மேலிட, 'என்னோட பிரச்சனை சொன்னா தீர்த்திடுவியா நீ, போடா டேய்' என்று கத்த விழைந்த மனதினை அடக்கியவள் அவனின் பேச்சுக்கள் காதில் விழாதது போல் பாவனை காட்டி நின்றிருந்தாள்.
பாவையின் பாவனை ஆடவனை வெறுப்பேற்றியிருக்க, "இப்படி பார்க்காத, மனுஷனுக்கு கடுப்பாகுதுனு எத்தனை தடவை சொல்றது?" என்று தலையை அழுத்தி கோதியவன் அமைதியாய் அவளை நெருங்கி தோள்கள் உரசுமாறு நின்று கொள்ள விழிகளோ வெளியில் பதிந்திருந்தது அவளை போலவே. அவனது பேச்சில் எழுந்த புன்னகையை இதழில் அடக்கியவளை ஆடவன் அருகாமையும் ஸ்பரிசமும் பரிதவிக்க செய்திருக்க அவனை முறைத்தாள், 'அடேய் என்னடா செய்து கொண்டிருக்கிறாய்?' என்ற ரீதியில்.
அவன் அவளை கண்டு கொள்வதாய் தெரியவில்லை. 'தான் அசையாது அவனும் அசைய மாட்டான்' என்றுணர்ந்தவள் அவனை விலக்கி உள்ளே நுழைய அவனும் அடக்கிய புன்னகையுடன் அவளை தொடர்ந்தான். நின்று திரும்பி பார்த்தவள், "நீங்க கூப்பிட்டிங்கனு வரலை. எனக்கு கால் வலிக்குது அதான்" என்றிட, "க்கும்.." என்று தொண்டையை செருமியவனுக்கு புன்னகை அடக்குவது அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை. 'நீ அடங்கவே மாட்டியாடி?' என்று ஆடவன் விழிகள் புருவத்தை ஏற்றி இறக்க, 'ஆமா, அதற்கு இப்பொழுது என்ன? போடா' என்றாள் பெண் விழிகளாலே.
விழியின் மொழி புரிந்ததா? அதன் அபிநயமே புரியும் பொழுது பாஷைகளும் பாவனைகளும் புரியாதா என்ன?
இருவரும் உள்ளே நுழைய அவள் எழுப்பியிருந்த கலவரம் முடிந்து விட்ட திருப்தியில் அனைவரும் மீண்டும் விட்ட உறக்கத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். அவளின் உடமைகளை வாங்கி சீட்டிற்கு அடியில் வைத்தவன், "ஏறு" என்றிட மேலேற முயன்றவள் சற்று தடுமாற, "ஷோல்டரை பிடிச்சுக்கோ, காலை சீட்ல்ல அழுத்தி வை" என்றபடி அவளின் கைகளை பிடித்திருந்தவனுக்கு அவளை அப்படியே தூக்கி அமர வைக்கும் எண்ணம். 'தான் அவ்வாறு செய்து மீண்டுமொரு கூச்சலை எழுப்பி விட்டாள், செய்தாலும் செய்வாள் ராட்சசி' என்று மனது கூற சற்று முன் அவள் செய்திட்ட கலாட்டாவை எண்ணியவன் இதழில் அவனையும் அறியாமல் புன்னகை அரும்பியது.
தன்னை போல் புன்னகைப்பவனை கண்டு விட்டு, 'சுத்தமா கழண்டிடுச்சு போல, தனியா சிரிச்சிட்டிருக்கான் பக்கி' என்று எண்ணியபடி அவனின் தோளை பிடித்து ஏறியவள் அமைதியாய் மேலே அமர்ந்து கொண்டாள்.
விளக்கை அணைத்தவன் நகர விழைய, "ஹேய், எங்க போறீங்க?" என்ற சாரா சீட்டில் பதிந்திருந்த அவனின் கரத்தை பிடித்துக் கொண்டாள். முழுவதுமாக இல்லையென்றாலும் முகம் தெரியுமளவிற்கு ஒளிக்கற்றைகள் அங்கு சூழ்ந்திருந்தது.
"நீ படுத்துக்கோ, நான் வாசல்ல நிற்கிறேன்" என்றவன் பதிலில், "இல்ல இல்ல, நீங்க எவ்வளவு நேரம் நிற்பீங்க? இங்கயே உட்காருங்க" என்று பிடித்த அவனின் கையை விடவே இல்லை. 'இவ மட்டும் கைய பிடிப்பாளாம். நான் பிடிக்க வந்தா முறைக்கிறது' என்று நினைத்தவன் அவளை மறுக்காது ஏறி அமர்ந்து கொண்டான். ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருக்க சாரா மொபைலை நோண்டிக் கொண்டிருக்க சித்விக் கண்களை மூடி பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவனுக்கும் பாதியில் விட்ட தூக்கம் கண்களை நிரப்பி இருந்தது.
மணி பணிரெண்டை தாண்டி இருக்க இருவரது இமைகளும் அவர்கள் அறியாமலே உறக்கத்தை தழுவி இருக்க அந்தோ பரிதாபம் அடுத்த நிறுத்தத்தையும் தவற விட்டிருந்தாள் பேதை.
தொடர்வண்டி சில நிமிடங்கள் நிறுத்தத்தில் நின்று மீண்டும் நகர தொடங்கிய கணங்களில் பாவையின் உறக்கம் கலைந்திருக்க, "ஹேய் ஸ்டேஷன் போய்ட்டுச்சு ட்ரெயின் மூவ் ஆகுது" என்று அரக்க பறக்க அவனை உலுக்கியவள் மேலிருந்து கீழே குதிக்க முனைந்தாள்.
நொடியில் சுதாரித்து அவளின் தோளை பிடித்து பின்னால் இழுத்தவன், "சாரா, என்ன பண்ணிட்டு இருக்க? நீ தூங்கலைன்னா எவனுமே தூங்க கூடாதா? இடியட் குதிக்க போற? எப்பயும் போல புதையல் எடுக்க போறீயா என்ன? இங்க இருந்து விழுந்தா கண்டிப்பா கைக்கால் உடைஞ்சிடும் " என்று பேசியிருக்க அவளுக்கு அப்பொழுது தான் தன் செயலின் வீரியம் உரைந்தது.
நெற்றியை தேய்த்துக் கொண்டவளுக்கு அத்தனை சலிப்பாய் இருந்தது. "நான் தான் அசந்திட்டேன் நீங்களாவது எழுப்பியிருக்கலாம்ல்ல" என்றவளின் வார்த்தை ஆடவன் முறைப்பில் அடங்கி போக, "சரி எங்க போற?" என்றான் தணிந்து.
"பெங்களூர்" என்ற பதிலில், "ம்ம், நீ ட்ரெயின் மாற வேணாம். இதில போய் இறங்கிக்கோ. அன் டையமாகிடுச்சு, இனி நீ தனியா இறங்கி ஏறது ரொம்ப ரிஸ்க்" என்றவனுக்கு மறுத்து தலையசைத்தவள், "டிக்கெட் செக்கர் வந்தா?" என்றாள் அதிமுக்கிய கேள்வியாக.
"ஆல்ரெடி வந்து செக் பண்ணிட்டாங்க, திரும்ப வர வாய்ப்பில்லை, வந்தா பார்த்துக்கலாம்" என்றவன் பதிலில் அவளுக்கு திருப்தி இல்லையென்றாலும் வேறு வழி இல்லை தான். திரும்பவும் இறங்கி இரயில் தேடி ஏறுமளவிற்கு அவளிடம் தெம்பும் இருந்திருக்கவில்லை. ஏனோ ஆடவனை கண்டதில் இருந்து ஒரு வித ஆற்றாமையில் மனது உழன்றது.
'நான் தான் விலகி ஓடுகிறேனே! மீண்டும் மீண்டும் கண் முன் வந்து ஏன் இம்சை செய்கிறான்?' என்று அவளுக்கு ஒரு கோபம். தன்னையும் மீறி அவனுக்கு உட்படும் மனதின் மீது ஆதங்கம். 'அவன் அழைத்தால் நீ எதற்கு மானம்கெட்டு போய் அவனின் பின்னால் வந்தாய்? லேப்பில் நாள் முழுவதும் கால் கடுக்க நின்ற உன்னால் இரண்டு மணி நேரம் தாக்கு பிடிக்க முடியாத என்ன?' என்று எண்ணங்கள் எள்ளி நகையாட தன் மீதே கோபம் பிரவாகமாக எழுகிறது.
அரை மனதுடன் தலையசைத்தவள் பின்னால் நன்றாக சாய்ந்தமர்ந்து கண்களை இறுக மூடிக் கொள்ள முகத்தில் அப்படியொரு அசதி.
அவளையே பார்த்திருந்தவன், "நீ சாப்பிட்டீயா? ஏன் இவ்வளவு டயர்டா தெரியுற, எங்க போற? இந்த டைம்ல ஏன் தனியா வந்த, கூட யாரும் வரலையா?" என்று கேள்வி கணைகளை அடுக்க வேகமாக கண்களை திறந்தவள், "நீங்க நீங்க பேசாதீங்க, உங்ககிட்ட பேசவே கூடாதுன்னு தான் இருந்தேன்" என்று ஆர்வத்தில் விரல் நீட்டி சத்தமாக பேச, "ஷ்ஷ், மெதுவா பேசு" என்று வாய் மேல் விரல் வைத்தான் ஆடவன் அடுத்தவரின் உறக்கத்தை கலைத்து விடக் கூடாதென்ற எண்ணத்தில்.
அவனை முறைத்தவள், 'போடா, நான் உன்னிடம் பேசவே விரும்பவில்லை' என்ற ரீதியில் நன்றாக தள்ளி ஏற்கனவே அமர்ந்திருந்தது போல் மற்றொரு மூலையில் போய் சாய்ந்தமர்ந்து கொண்டாள் கண்களை மூடியபடி.
அவளின் கோபத்தில் ஆடவன் இதழில் புன்னகை வந்து அமர்ந்து கொள்ள அவளை பார்த்தப்படியே அமர்ந்திருந்தான். பாவை தான் உறக்கத்தை விரட்டி இருந்தாளே!
அவளின் முகத்தில் அவ்வப்பொழுது சாரளத்தின் வழியாக விழுந்த ஒளிகற்றையின் உபயத்தால் இடதுபுற மூக்கில் புதிதாக குடியேறியிருந்த ஒற்றைகல் மூக்குத்தி ஜொலித்து கொண்டிருந்தது.
ஆடவனுக்கு அருகில் சென்று அதை வருடும் ஆர்வம். 'சித், கன்ட்ரோல்டா. அவ இருக்க கோபத்துக்கு ஏதாவது வம்பு இழுத்த மண்டைய கூட உடைப்பா' என்று மனது அபாயக்குரல் எழுப்ப கடினப்பட்டு அவளிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டான் தலையை கோதியப்படி.
சிறிது நேரத்தில் சாரா உறங்கி இருக்க பேதையின் கால்கள் அவளையும் அறியாமல் சித்விக் மேல் உரசியிருந்தது. அதில் மீண்டும் அசந்திருந்தவன் உறக்கம் கலைந்திருந்தது. அவளின் வெண் பாதத்தில் ஆடவனின் பார்வை நிலைக்க அன்றைய நாளில் அவளின் விழிகள் படித்த அபிநயம் சட்டென்று மூளையை ஆக்கிரமிக்க அதன் மென்மையை பரிசோதித்து பார்க்கும் ஆர்வம் ஆடவனுள் பிரவாகமாக பொங்கியது.
'ச்சு...' என்று சலித்தவனுக்கு தனது எண்ணவோட்டத்தில் அதிருப்தி தோன்றியது. நேரத்தை பார்க்க அதுவோ நான்கை தாண்டி இருக்க கீழே இறங்கி கொண்டவன் போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு நகர்ந்து வாயிலுக்கு சென்று விட்டான்.
சாரா கண் விழிக்கும் போது சித்விக் கீழே எதிர்புற சீட்டில் அமர்ந்து அருகிலிருந்தவனுடன் அளவளாவி கொண்டிருந்தான். எழுந்தமர்ந்தவளை கண்டவுடன் அவனது இதழில் லேசாக புன்னகை அரும்ப அவளோ அவனை முறைத்தாள். 'திமிரை பார், மனுசனை தூங்க விடாம அவ மட்டும் நல்லா தூங்கி எழுந்திருக்கா, சிரிச்சா பதிலுக்கு சிரிக்க கூடாதாம், முறைக்கிறா ராட்சசி' என்று எண்ணியவன் அவளிடமிருந்து பார்வையை மீட்டு அருகிலிருந்தவனிடம் திருப்பி கொண்டான்.
நேரத்தை பார்த்தவள் அலைபேசியை எடுத்து எங்கு இருக்கிறோம் என்று பார்க்க இறங்க இன்னும் இரண்டு மணி நேரமே இருந்தது. மேலிருந்து கீழிறங்கியவள் கைப்பையுடன் ஓய்வறை சென்று விட்டாள்.
முகம் கழுவி தலையை சீர் செய்து தன்னுடைய வேலைகளை முடித்து பத்து நிமிடங்களில் மீண்டும் இருக்கையை நோக்கி வந்தவளுக்கு சூடான தேநீருடன் காத்திருந்தான் சித்விக். ஒரு கையில் தன்னுடையதை பருகி கொண்டும் மற்றொரு கையில் அவளுக்கான குவளை ஏந்தியும் இருந்தவன் வந்தவுடன் அவளை நோக்கி நீட்டியிருந்தான்.
'என்னை தான் வேண்டாமென்று விட்டானே! இவனுக்கு என்ன தான் வேணுமாம்? ரொம்ப படுத்துறானே? போடா, உன்னுடைய அக்கறை யாருக்கு வேணும்? வேண்டாமென்று விலகி சென்று விட்டால் கூட இத்தனை அவஸ்தை இருந்திருக்காதோ என்னவோ? எல்லோரையும் போல் இவனும் அமைதியாய் என்னை வேடிக்கை பார்த்திருந்தால் கண்டிப்பாக அவனை வெறுப்பதற்கான காரணத்தை பிடித்திருப்பேனே. ஏன்டா நல்லவனாய் இருந்து தொலைக்கிறாய் அதுவும் என் முன்னே' என்று காதல் கொண்ட மனம் கோபத்தில் பிதற்றினாலும் நீட்டியவனை மறுக்க தோன்றவில்லை. சுற்றி இருந்தவர்களின் பார்வை தங்களின் மீதே இருக்க அவனை காயப்படுத்த பெண்ணவளுக்கு விருப்பமில்லை. அமைதியாய் அமர்ந்து குவளையை காலி செய்தவள் அவனை பார்ப்பதை தவிர்த்து மொபைலில் தன்னை புகுத்திக் கொள்ள கார்த்தியிடமிருந்து அழைப்பு வந்து விட்டது.
"எங்க இருக்க சாரா? ட்ரெயின் எப்ப ஸ்டேஷன் வரும்? நான் கிளம்பிட்டேன், இங்க கொஞ்சம் ட்ராபிக்கா இருக்கு. சோ ஒரு டென் மினிஸ்ட் லேட்டாகும். நீ வெளிய வந்து வெயிட் பண்ணுடா" என்று பேசியவனுக்கு பதில் அளித்து அழைப்பை துண்டித்து நிமிர சித்விக் அவளை தான் பார்த்திருந்தான் இமைக்க மறந்து.
இருவருமே ஏங்கிய சந்திப்பு தான் ஆனால் பேச்சுக்களை எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. 'நான் என்னை கூறி விட்டேன், இதற்கு மேல் என்னால் அசைய முடியாது' என்று பெணணவளின் இதழ் இறுக்கமாக பூட்டிக் கொள்ள ஆடவனுள் மெல்லிய தடுமாற்றம் தான். இந்த முறை எங்கும் சொதப்பி விடக்கூடாது என்பதில்.
தொடர்வண்டி இயக்கத்தை மெதுவாக நிறுத்த தொடங்கி இருக்க பயணிகள் அனைவரும் தங்களுடைமைகளை எடுத்து இறங்குவதற்கு தயாராகி எழுந்து கொள்ள அந்த இருக்கையில் எஞ்சி நின்றது சித்விக்கும் சாராவும் மட்டுமே. ஆடவனையே பார்த்தவள் வேகமாக தன்னுடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேற இன்னும் அவனுக்கு நா மேலெழும்பவில்லை.
அவளை அழைக்க விழைந்தவனுக்கு தயக்கம் ஒட்டிக் கொள்ள சிந்தனை கலைந்து வாயிலுக்கு வருவதற்குள் அவள் இறங்கி கூட்டத்தோடு கலந்திருந்தாள்.
'டேய் சித், ஏன்டா இப்படியே பண்ணிட்டு இருக்க?' என்று நெற்றியை தட்டிக் கொண்டவன் விழிகளால் துழாவியபடி வெளியில் வந்திருக்க ஓரமாக நின்றிருந்தாள் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்தப்படி.
அருகில் வந்தவனுக்கு மூச்சு வாங்கியது விரைந்து வந்ததன் பொருட்டு. முட்டியில் கை ஊன்றி தன் முன் குனிந்து நின்றவனை பெண்ணவள் விழிகள் கபளீகரம் செய்ய, 'டேய் என்னாடா சாகசம் செய்து கொண்டிருக்கிறாய்?' என்ற ரீதியில் இதழ் விரிந்தது.
தனது பையில் சொருகியிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து நீட்டியவளின் இதழில் நீந்திய புன்னகை ஆடவனை தொற்றிக் கொள்ள வாங்கி இரண்டு மிடறு உள்ளே இறக்கியவன், "ஐயம் சித்விக்" என்று அவளை நோக்கி கைகளை நீட்ட, "தெரியுமே!" என்றவள் தலை சாய்த்து கண் சிமிட்டினாள்.
அவனின் இதழ் இன்னும் பெரிதாய் விரிய, "இந்த சிக்ஸ் மந்த்ல்ல பேபியை கேர் பண்ணிக்க ப்ராக்டிஸ் பண்ணிட்டேன்" என்றவனின் வார்த்தையில் புருவம் உயர்த்தினாள் பெண்.
"நீ எப்பவுமே இப்படி தானா?" என்ற ஆடவன் கூற்றில் பெண் நெற்றி சுருங்கியது வினாவாய், "எப்படி?" என்றபடி.
"நான் பதில் சொல்றதுக்குள்ள ஏன் கிளம்பி போன? எவ்வளவு நேரம் தேடுனேன் தெரியுமா?" என்றவன் வார்த்தைக்கு பெண் பதில் கூறாது நன்றாக விரிந்த புன்னகையுடன் நிற்க கண்கள் மின்னியது. ஒரு புறம் சாய்ந்திருந்த தலை இன்னும் நிமிரவே இல்லை, குறும்புடன் இதழ் கடித்து நின்றிருந்தவளை நோக்கி கை நீட்டி இருந்தான் ஆடவன், 'வா, இப்பொழுதே வந்து சரணடைந்து விடு' என்பதாய்.
தொடரும்.
அடுத்த அப்டேட் திங்கள் என்று நினைக்கிறேன். நேரம் கிடைத்தால் இடையில் வரேன், வீட்டில் விஷேசம் மக்களே சோ கொஞ்சம் பிஸி.. விமர்சனம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி

Last edited: