• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 8

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 8


அதுவொரு இரவுப்பொழுது. யாஷ், டேபிளில் தலை சாய்த்து படுத்திருந்தாள் அலைபேசியில் தெரிந்தவனை ஓரக்கண்களால் முறைத்தப்படி இதழில் தோன்றிய புன்னகையை விழுங்கிக்கொண்டு. அது நவீனே தான், அவளிடம் வம்பு வளர்த்தப்படி அமர்ந்திருந்தான். ஆம், அவன் அமர்ந்திருந்த விதமும் அந்த பாவனையுமே பெண்ணிற்கு அப்படியொரு கோபத்தை துளிர்க்க செய்து கொண்டிருந்தது. பகலெல்லாம் வேலை அவனை முழுவதுமாக விழுங்கிக் கொள்ள உறங்க சென்றவளை கட்டாயப்படுத்தி இழுத்து பிடித்து அமர வைத்திருந்தான்.


யாஷ்வி, இருப்பிடம் சென்னைக்கு மாறி மூன்று திங்கள் கடந்திருந்தது. ஆனால் நாட்கள் அத்தனை உவப்பானதாக இருந்திருக்கவில்லை, ஷமீயும் நவீனுமின்றி. ஆம், நவீன் தற்பொழுது சிங்கப்பூரில் அமர்ந்திருந்தான். தந்தையின் அலுவல்களை பார்த்துக் கொண்டிருப்பதாலும் அவரால் தொலைதூர பயணங்களை மேற்க்கொள்ள முடியாதென்பதாலும் முக்கிய கூட்டத்தின் பொருட்டு கிளம்பியிருந்தான் நான்கு வாரங்களுக்கு முன்பு.


ஷமீ, அவளை பற்றி கூறவே தேவையில்லை. யாஷ் மட்டுமல்ல அவளுமே யாஷ்வி இல்லாமல் அத்தனை அழுது ஆர்பாட்டத்தில் செய்திருக்க ரூபாவும் மனோவும் தான் திணறி போனார்கள். ஆனால் வாரமொரு முறை படப்பிடிப்பு வேலையின் பொருட்டு யாஷ் பெங்களுர் வந்து செல்ல அது கொஞ்சமே கொஞ்சம் முயல்குட்டியை சமாதானம் செய்தது.



யாஷ்வி, இப்பொழுது நவீனும் அவளை விட்டு வெகு தூரம் பறந்திருக்க மருகி தான் நின்றாள். தினமும் சந்தித்து கொள்வதில்லை என்றாலும் அவ்வப்பொழுது அவனுடன் நிகழும் சந்திப்பு பெண்ணை உயிர்ப்புடன் ஓடச் செய்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு திங்களாக அவனுடான அலைபேசி உரையாடல்களுக்கு கூட பஞ்சமாகி போனது தான் பரிதாபம்.

உறக்கம் கலைந்த சவிதா, அறையில் குடிநீர் தீர்ந்து போயிருக்க மின்விளக்குளை ஒளிர செய்து அடுப்பறை நோக்கி சென்றார். நீரை பருகியவர் வெளியில் வர யாஷ்வி அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கின் ஒளிக்கற்றை கீற்றுகளாக முழுதாக மூடப்படாத கதவுகளின் வழியே வெளியே படர்ந்திருந்தது.



'இவ்வளவு நேரம் துங்காம என்ன பண்றா? ஒரு வேளை லைட்டை ஆஃப் பண்ணாம விட்டுடாளோ?' என்ற எண்ண அலைகள் வியாபிக்க அறையை நோக்கி நகர்ந்தவர் கதவில் கை வைக்க அது தானாகவே திறந்து கொண்டது. யாஷ், அவ்வப்பொழுது அறையில் அமர்ந்து வேலை செய்தப்படியே உறங்கியும் போய் விடுவாள். அவசர வேலைகளை வீட்டில் கொண்டு வந்து பார்ப்பதுண்டு. சவிதா தான் கவனித்து விளக்கணைத்து அவளை எழுப்பி படுக்கையில் படுக்க வைப்பது. ஆக, அதுபோலொரு நிகழ்வென்று என்று எண்ணி வந்தவருக்கு நெஞ்சில் நீர் வற்றி தான் போனது.


அரவத்தில் சட்டென்று திரும்பிய யாஷ், தாயை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் சுதாரித்து அழைப்பை வேகமாக துண்டித்திருக்க, நொடிப் பொழுதேணும் நவீனின் உருவம் அவரின் விழிகளை நிறைத்து தான் மறைந்திருந்தது. முகத்தில் அப்படியொரு அதிருப்தி பரவ, "தூங்கலையா யாஷ்?" என்றார் கண்டிப்பான குரலில். அவர் குரல் மாற்றமே பெண்ணிற்கு அப்படியொரு குற்றவுணர்வை கொடுத்திருந்தது. அந்த குரலே கூறியது, 'நான் உன்னை கண்டு கொண்டேன்' என்பதை. ஆனால் அதை குறித்து சவிதா கேட்டிருந்தால் அப்பொழுதே நவீனை பற்றி ஒப்பித்திருப்பாள். ஆனால் அவர் அதற்குள் நுழையாததே பெண்ணிற்கு ஒரு வித பதகளிப்பை கொடுத்திருந்தது. இதில் நவீன் வேறு சமிக்ஞை இல்லாது அழைப்பு துண்டாகியதாக எண்ணி மீண்டும் மீண்டும் அழைக்க யாஷ் நொந்தே போனாள்.


சவிதாவிற்கு ஆரம்பத்திலே மகளின் நடவடிக்கையில் மாற்றங்களை காண முடிந்தது ஆனால் அது ஷமீயை கொண்டு என்றெண்ணி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
யாஷ்விக்கு ஆண் நண்பர்கள் பள்ளி, கல்லூரிகளில் உண்டு என்றாலும் அனைவருமே சவிதாவிற்கு பரிட்சயமும் கூட.
விடாது ஒளிர்ந்து கொண்டிருந்த அலைபேசியை வெறித்த சவிதாவிற்கு, 'யாரிவன்?' என்ற எண்ணமே மனதை அரிக்க துவங்க, "காலையில ஆபீஸ் போகணும் தான, சீக்கிரம் தூங்கு யாஷ்" என்று அறிவுறுத்தி வினாவை விழிகளில் தேக்கி நகர்ந்து விட, 'ஊப்ஸ்...' என்று மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவளுக்கு அந்த சூழல் அப்படியொரு அழுத்தத்தை கொடுத்திருந்தது. சவிதா பேசியிருந்தால் அப்பொழுது முற்றுப்புள்ளி இட்டிருப்பாள் ஆனால் அவருடைய அமைதியோ யாஷின் நிம்மதியை கையோடு இழுத்துச் சென்று விட்டது. ஆம், அறிந்தும் அமைதியாய் செல்லும் தாயின் மௌனம் பேதையை அதிகமாகவே அச்சுறுத்தியது. அவரின் வதனத்திலிருந்து எதையுமே யூகிக்க முடியாது தளர்ந்தே போனாள்.



கதவை பூட்ட மறந்த தனது மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவள் அவசரமாக எழுந்து சென்று கதவை பூட்டி வர அலைபேசியில் ஒருவன் அவளை விடாது தொந்தரவு செய்து கொண்டிருந்தான். அழைப்பை ஏற்று கன்னத்தில் கைக் கொடுத்து முகத்தை மறைத்து அமர்ந்திருந்திருந்தவளிடம், இத்தனை நேரமிருந்தத துள்ளல் காணாது கரைந்து தான் போனது.


"யாஷ்..." என்றவனின் குரல் பெண்ணின் செவியை தீண்டி உருகி கரைய செய்ய அழுதே விட்டாள். இத்தனை நாட்கள் கவனத்தில் வராது இப்பொழுது சவிதா அவளின் முன் விஸ்பரூபமெடுத்து நிற்க, 'ஒரு வேளை அவர் நவீனை மறுத்து விட்டால்' என்ற எண்ணமே அவளுக்கு கண்ணீரை கொடுத்திருந்தது. அவனின்றி அணுவும் அசையாது என்ற நிலையில் பெண் நின்றிருக்க அந்த எண்ணகளே கசந்து தொண்டையை தாண்டி உள்ளிறங்க மறுத்தது.


அவளின் மாற்றத்தை எதிரிலிருப்பவன் நொடியில் கண்டு கொண்டு, "என்னாச்சு யாஷ்?" என்று அவளை தோண்டி துருவ திக்கி திணறி ஒருவாறாக கூறி முடித்தவள் இதழை கடித்து அழுகையை விழுங்க முயல, "யாஷ், ஜஸ்ட் ரிலாக்ஸ். நான் இருக்கேன் தான? நான் உன்னை அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன் உங்கம்மாவே சொன்னாலும்" என்றவனின் சமாதானத்தில் சற்று தெளிந்தவள் இதழில் புன்னகை நிறைந்தது. ஆம், அவள் நவீனை அறிவாள் தானே! அவனின் வாரத்தைகள் கொடுத்த தைரியத்தில் விழிகளோ இதமாக உறக்கத்தை தழுவியிருந்தது அன்றைய பொழுதில்.


அடுத்தடுத்து வந்த நாட்களில் சவிதாவின் பாராமுகமே பெண்ணை வரவேற்றது. 'என்ன தான் எதுவுமில்லை' என்று காட்டிக் கொண்டாலும் அவர் மறைமுகமாக மகளை விட்டு விலகி நின்று கொண்டார். ஆம், அவருக்கு அவருடைய ஆதங்கம். சிறு அசைவுகளை கூட தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் மகளின் இந்த மாற்றம் அப்படியொரு அதிர்ச்சி. யாஷ் வந்து யாரைவது காட்டி, 'எனக்கு பிடித்திருக்கிறது' என்று நேரடியாக கூறியிருந்தால் கண்டிப்பாக யோசித்திருப்பார். நவீனை குறித்து விசாரிக்க முடிவெடுத்திருப்பார். ரிதனுடைய கூட காதல் திருமணம் தான். தன்னுடன் படிக்கும் கல்லூரி தோழியான மனிஷாவுடன் காதல் என்று வந்து நிற்க மனிஷா வீட்டில் ஏற்றுக் கொள்ள விட்டாலும் இருவரின் உறுதியைக் கொண்டு சவிதாவே நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டார். இப்பொழுது பிரசவத்திற்கு கூட சென்று உதவியாக இருந்து வந்தார் அல்லவா?.. ஆனால் மகள் தங்களுக்கு தெரியாது மறைத்து விட்டாள் என்பது உணர்வு ரீதியில் அவரை பாதித்திருந்தது. இந்தளவிற்கு தானா எங்களுடைய உறவின் நிலைப்பாடு என்பது அவருக்கு ஆதங்கத்தை கொடுத்திருந்தது. 'எனக்கு மகளை முழுதாக தெரியும்' என்ற அவரின் மமதை எண்ணங்கள் உடைந்து கொண்டிருப்பதையும் தாங்கள் அறியாது அவளுடைய வாழ்விலொரு அங்கம் இருக்கிறதென்பதையும் தாயின் மனதால் சட்டென்று கிரகித்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை.



பொறுத்து பார்த்த யாஷ்விக்கு தாயின் விலகலை நான்கு நாட்களுக்கு மேல் தாங்க முடியவில்லை. அன்று அலுவலகம் முடித்து வந்தவள் அறைக்கு செல்லாமல் அடுப்பறையில் நின்றிருந்த சவிதாவை நோக்கி விரைந்திருந்தாள். அவளுடைய அரவத்தில் கண்டு கொண்டாலும் தலையை உயர்த்தாது தேநீரும் சிற்றுண்டியும் நிரம்பிய தட்டை அவளுக்காக நீட்டியிருந்தார்.


அதை விடுத்து அவரை பின்னிருந்து அணைத்துத் கொண்ட யாஷ்வியின் சூடான கண்ணீர் சவிதாவின் தோளை நனைத்திருந்தது. 'ஷ்ஷ்...' என்று நெற்றியை தேய்த்தவர் தட்டை கீழே வைத்து, "யாஷ், யாஷ்ம்மா.." என்றிட உடைந்தே போனாள். நிமிடங்கள் பிடித்தது இருவரும் சமன் அடைய, மகளை முன் புறம் கொண்டு வந்தவர் முகத்தை நிமிர்த்த, அவரை பார்ப்பதை தவிர்த்து பார்வையை வேறெங்கோ அலைய விட்டவள், "சாரிம்மா.." என்று முணுமுணுத்தாள். ஆம், என்ன ஏதென்று சவிதா அவளை கடிந்திருந்தால் கூட இத்தனை வலித்திருக்காது. அவரின் விலகல் பெண்ணை அதிகமாக பாதித்திருந்தது.




வாடி கசங்கியிருந்த முகம் அழுததன் பொருட்டு மேலும் வீங்கி தான் போயிருந்தது. அதை பொறுக்க முடியாது சட்டென்று சேலை தலைப்பை எடுத்து முகத்தை துடைத்து விட்டவர் அவளின் நெற்றியில் படந்த மயிரிழைகளை புறம் தள்ளி, "போய் முகம் கழுவி வா யாஷ்" என்றிட மூச்சை இழுத்து விட்டவள் தாயை ஒரு முறை அணைத்து விடுவித்து அறைக்குள் சென்று உடை மாற்றி முகம் கழுவி வர சவிதா ஷோபாவில் அமர்ந்திருந்தார் மகளுக்கான சிற்றுண்டியோடு.


யாஷ் எதாவது கேட்பார் என்று அவரின் முகத்தையே பார்க்க, "சாப்பிடு யாஷ்" என்ற சவிதாவிற்கு மறுத்து அவளின் தலை இருபுறமும் அசைந்தது. சட்டென்று அவரின் மடியில் படுத்து முகத்தை புதைத்துக் கொண்டவள், "நீங்க எதுவுமே என்கிட்ட கேட்கலையேம்மா?" என்றாள் சலுகை கொண்டு உரிமையாக நிமிர்ந்து அவரின் முகத்தை பார்த்து கண்ணீரை உள்ளிழுத்து.


லேசாக அரும்பிய புன்னகையுடன் மகளை முறைத்து கண்ணீரை துடைத்து விட்டவர், "இதுவரை நீயா தான யாஷ் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லியிருக்க?" என்றார் வினாவாய் புருவத்தை ஏற்றி இறக்கி குற்றம்சாட்டும் பார்வையோடு.


வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டவள் அவரின் தோளில் சாய்ந்து கொண்டு முகத்தை காண திராணியின்றி நவீன் தன்னை ஆக்கிரமித்ததை ஒருவாறாக ஏற்ற இறக்கங்களுடன் கூறி முடித்தாள். மகளின் வார்த்தைகளையும் நவீனை குறித்த உரையாடலின் போது அவளின் உற்சாகத்தையும் சவிதா மனது குறித்துக் கொள்ள தவறவில்லை.


"சரி யாஷ், நான் அப்பாக்கிட்ட ரிதன் மனோக்கிட்ட பேசுறேன். அந்த பையனை பத்தி விசாரிக்க சொல்லுவோம். அவரையும் நேரா வரச் சொல்லி அவங்க வீட்டிலையும் பேசுவோம்" என்று
மகளுக்கு நம்பிக்கை அளித்திருக்க, "தாங்க்ஸ்ம்மா" என்று அவரின் கன்னங்களை பிடித்து கொஞ்சியவன் அவரது மடியிலே ஐக்கியமாகி போனாள் வளவளத்தப்படி. ஆம், சவிதா வந்து இத்தனை நாட்களை கடந்து யாஷ்வியால் அவரிடம் இயல்பாய் உரையாட முடிந்திருக்கவில்லை. நவீனை குறித்த குற்றவுணர்வு அவளின் மனதின் ஏதோவொரு மூலையில் தாக்கியிருந்தது. இப்பொழுது அந்த தடை தகர்ந்திருக்க மடையை திறந்தது போல் பேசிக் கொண்டிருந்தாள்.


அன்றிரவே சவிதா கணவரிடமும் மகன்களிடமும் நவீனை குறித்து உரையாடி இருக்க மனோ, "எனக்கு நவீனை தெரியும்மா, இங்க இருந்தவரை நல்ல குணம் தான். இருந்தாலும் என்னோட ப்ரெண்ஸ்ட்கிட்ட சொல்லி சென்னையிலையும் விசாரிச்சு சொல்றேன்" என்றிருந்தான்.


யாஷ்வி மூலம் தகவல் நவீனுக்கும் பறந்திருக்க சவிதாவும் அலைபேசியில் அவனிடம் ஒரு முறை பேசியிருந்தார். "நான் வொர்க் விஷயமா பாரின்ல்ல இருக்கேன் ஆன்ட்டி. இந்தியா வந்ததும் உங்களை அப்பா அம்மாவோட நேரா வந்து பார்க்கிறேன்" என்றிருந்தவன் கூறியது போலவே வந்திருந்தான் தாய் வாணி மற்றும் தந்தை ராகவனுடன்.




வாணிக்கும் மகன் கூறியதில் அத்தனை மகிழ்ச்சி. ஆம், இத்தனை நாட்களாய், "பொண்ணு பார்க்கவா நவீன், இல்ல உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா கூட சொல்லு டா. பேசலாம்" என்று அவனை படுத்தி எடுத்துக் கொண்டிருக்க பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருத்தான். ராகவனுக்கு திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டு விட மகனை சற்று ஒதுக்கி வைத்து கவனத்தை கணவன் புறம் திருப்பி இருந்தார். முறைப்படி கணவருடன் யாஷ்வி வீட்டிற்கு சென்றார் வாணி.


மனோ விசாரித்து நவீனையும் அவனின் பின்புலத்தையும் சிறப்பாகவே கூறியிருந்தாலும் நவீனின் அதீத வசதி சவிதாவை சற்று அச்சுறுத்தவே செய்தது. ஆனால் நேராக அவனின் குடும்பத்தையும் அவர்களின் இலகுவான அணுகுமுறையும் அவரை மெல்ல சமாதானம் செய்திருந்தது. மேலும், நவீன் அவனை சவிதாவிற்கு கேசவனுக்கு பிடித்து தான் போனது முதல் சந்திப்பிலே. அதுவும் ஷமீ அவனை விட்டு அகலாது ஆக்கிரமித்து அவனின் பின்பே ஒட்டிக் கொண்டே சுற்றித் திரிய சவிதா மட்டுமின்றி வாணியும் விழிகளை விரித்து தான் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்களை.


யாஷ்வியால் நவீனுடனான வாழ்க்கை இத்தனை இலகுவில் கைக்கூட போகிறது என்று நம்ப முடியவில்லை. புன்னகை முகமாக ஷமீயை கைகளில் ஏந்தியப்படி சுற்றித் திரிந்தவளை காண எல்லோருக்கும் பூரிப்பு தான். வாணிக்கும் ராகவனுக்கும் யாஷ்வியும் அவளது குடும்பமும் திருப்தியை கொடுத்திருந்தது.


அன்றே இருவரின் குடும்பங்களின் முழு ஒப்புதலோடு எளிமையான முறையில் திருமணத்தை உறுதி செய்திருந்தனர். வாணி, வாங்கி வந்த பூவை யாஷ்வி தலையில் வைத்து விட்டவர் அவளை தன் அருகிலே அமர்த்திக் கொண்டார். ஏனோ யாருக்கும் அடங்காத மகனை விழியசைவில் அடக்கிக் கொண்டிருப்பவளை சுவாரசியமாக வேடிக்கை பார்த்திருந்தாலும், 'மாட்டுனீயாடா மகனே! என்ன சொல்லுவ, மை லைஃப் லை ரூஸ்ஸா....இருக்குடா உனக்கு, குழந்தை பிறக்கும்ல்ல அப்புறம் பார்ப்போம் உன்னை, எப்படி குப்புற விழுறனு?' என்று மகனை நக்கலாக பார்க்க நவீனோ இன்னும் கெத்தை விட்டுக் கொடுக்காது தாயின் பார்வையறிந்து, 'பாருங்களேன், நல்லா தான் பாருங்களேன்' என்று சட்டை காலரை ஏற்றி விட்டுக் கொண்டு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அசட்டையான பாவனையில் அமர்ந்திருந்தான்.



ஷமீ தான் வீட்டை இரண்டாக்கி கொண்டிருந்தாள். யாஷ்விக்கு செய்வது போல் தனக்கும் ஒப்பனை செய்ய வேண்டும், இல்லாத முடியில் பூ வைக்க வேண்டும் என்று சண்டையிட்டு யாஷ்விக்கு கொடுத்த அளவு பூவை வாங்கி தரையை படர விட்டு சுற்றித் திரிந்தாள். அதில் அனைவரது முகத்திலும் கரையாத புன்னகை நிரம்பியிருந்தது.


ஷமீயோடு நின்றிருந்த யாஷை தோளோடு அணைத்து பிடித்துக் கொண்டுக்கு அலைபேசியில் சில பல சுயமிகளை எடுத்துக் கொண்டு புன்னகை முகமாக நவீனோடு இணைந்து அவனது குடும்பமும் விடைபெற்றிருந்தது.



தொடரும்....
 
Last edited:
Messages
524
Reaction score
403
Points
63
நேத்ராம்மா சீக்கிரமே கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரி தோணுதே இதுக்கு அப்புறம் எதாவது ப்ளான் இருக்கோ 🤔🤔
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Wowwwwwwww, ivlo seekkirama engagement eh aagiduche, superrrrrrrrr superrrrrrrrr
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Namba mudiya villai apadi pada than thonuthu indha nethra sis avolo sikkiram lovers ah nalla vitham ah sera vida matagala yae oru vela ithuku pinnadi periya plan vachi irupa gala🤔🤔🤔
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Athukula naveen yash ku marriage ya namba mudiyala shami kutty so sweet athuyum twist illama marrige nadagadum 🥳🤩🤩
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
நேத்ராம்மா சீக்கிரமே கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரி தோணுதே இதுக்கு அப்புறம் எதாவது ப்ளான் இருக்கோ 🤔🤔
நானே மனசு வந்து சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சாலும் இந்த உலகம் நம்புதானு பாருங்களேன்😂😂
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Namba mudiya villai apadi pada than thonuthu indha nethra sis avolo sikkiram lovers ah nalla vitham ah sera vida matagala yae oru vela ithuku pinnadi periya plan vachi irupa gala🤔🤔🤔
எப்படி எப்படி பேசுறாங்க பாருங்களேன்😂😂..நானும் கொஞ்சமே கொஞ்ச நல்ல புள்ளை தாங்க😜😜😛
 
Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
Athukula naveen yash ku marriage ya namba mudiyala shami kutty so sweet athuyum twist illama marrige nadagadum 🥳🤩🤩
நன்றிம்மா😍😍
 
Top