• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 7

Messages
31
Reaction score
13
Points
8
அத்தியாயம் - 7

மாலையில் சூரியன் மங்கும் போது ஆரியனின் குடும்பம் காரில் ஏறி கிளம்பினர். ஆரியன் குடும்ப வருகையால் இன்றைய தினம் சமருக்கும் சாப்பாடு சனாவின் கைப்பக்குவத்தில் கிடைத்தது. ஆனால் அதனை மகிழ முடியாத நிலையாக, ஆரியன் கூறியவை முள்ளாய் மனதை அரித்தது.

ஆரியன் மற்றும் குடும்பம் வீட்டிற்கு வந்தனர். காலையில் சில்வியாவின் அலப்பறை நினைவு வர, அவளது வீட்டைத் திரும்பி பார்த்தான் ஆரியன். காரில் இருந்து இறங்கிய பிரதீபாவிற்கு வயிறு பற்றி எரியாத குறைதான். " யோவ்... அங்க என்னயா பார்வ வேண்டி கிடக்கு... கண்ணு அங்குட்டு போச்சு நோண்டி புடுவேன் பாத்துக்க... உள்ள வாயா " என்று கத்த, அஸ்வின் ஆரியனைப் பார்த்து சிரித்து வைத்தான்.

" ஹ்ம்ம் இங்க நான் புருஷனா இல்ல இவ புருஷனா னு குழப்பமா இருக்கு... ஒரு பார்வைக்கு சும்மா பாத்தது ஒரு குத்தம்... ஆண்டவா என்ன காப்பாத்து " என்று புலம்பியவன், வீட்டில் சென்று தன்னை சுத்தம் செய்து வந்து முற்றத்தில் அமர, பிரதீபா பின்னாலேயே வந்து நின்று கொண்டாள்...

எதற்கோ திரும்பிய ஆரியன் அவளைக் கண்டு, " அட ஆண்டவா... த சீ பே ... மனுஷன படுத்திகிட்டு... போன ஜென்மத்துல ஆவியா இருந்துருப்பாளோ... மோப்பம் பிடிச்சு பின்னாலயே வர்றா " என்று புலம்ப, அஸ்வின் சிரித்துக் கொண்டான் .

பிரதீ வழக்கம் போல ஒரு தக்காளி வாங்க சில்வியா வீட்டைப் பார்க்க, வீடு திறந்திருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. இந்த நேரம் கண்டிப்பாக சித்தாராவுமே வர வேண்டும்... ஆனால் எல்லாம் தலைகீழாக இருந்தது. எங்காவது சென்றிருப்பர் என்று நினைத்துக் கொண்டனர். அன்றைய தினம் அப்படியே கழிந்தது.

மறூநாள் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் விடிந்தது. காலையில் பால் வாங்க கிளம்பினான் அஸ்வின் . அப்பொழுது மணி 6.00 ஆகியிருந்தது. சூரியனும் தன் கதிர்களால் வானத்தில் செம்மையைப் பரப்பியிருந்தது. சூரியன் உதிக்கும் முன்னே சித்தாரா வீட்டின் முன்பு முற்றம் பெருக்கி தவறாமல் தண்ணீர் தெளித்து கோலம் இட்டிருப்பாள் . மேற்கொண்டு வீட்டின் பாத்திரங்கள் அலம்பும் சத்தம் கேட்கும்... ஆனால் அதறக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

மணி 8.00 நெருங்க எங்கேயோ சென்று விட்டு சோர்வாக வந்தாள் சில்வியா. வெளியே சென்று விட்டு வந்த ஆரியனுக்கு அவளைப் பார்த்து எதோ குறையாய் தோன்றியது. இருப்பினும் தன் வேலையை கவனிக்கச் சென்றான்.

ஆரியன் வேலைக்குக் கிளம்ப, அஸ்வின் வீட்டிலேயே இருந்து கொண்டான். பிரதீபாவும் வீட்டில் வேலையை முடித்து விட்டு முற்றத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க, திரும்பவும் வீட்டைப் பூட்டி விட்டு கையில் சில பைகளுடன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள்.

" ஏன் சிலுக்கு... எங்க கிளம்புற... ஆமா அந்த சித்து எங்க... இந்நேரத்துக்கு தை தை னு குதிச்சுருக்கணுமே " என்று பிரதீபா தொடங்க, உள்ளிருந்த அஸ்வின் அடுத்த சண்டை ஆரம்பமாகிடுமோ என்று வெளியே வந்தான். சில்வியாவின் முகத்தில் வழக்கமாக இருக்கும் பொலிவு இல்லாதிருந்தது .

சில்வியா அஸ்வினைக் காண்கையில் மின்மினி பூச்சியாய் பிரகாசிப்பதைக் கண்டிருக்கிறான். ஆனாலும் எதுவும் பெரிதாய்க் கண்டு கொள்வதில்லை . இன்று அஸ்வினைக் கண்டு விரக்தியாய் புன்னகைக்க , அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

பிரதீபா அவளைக் கூப்பிட, சிரித்தபடியே கிளம்பிச் சென்றாள். பிரதீபாவும் பார்க்கும் மட்டும் பார்த்தாள். அதன் பிறகு வேலைக்குக் கிளம்பி விட்டாள். அஸ்வினுக்கு மனதுக்கு சரியாகப் படவில்லை. எனினும் வீட்டில் இருந்து கொண்டான்.

அன்றைய தினம் ஒருவாராக கழிய, மாலை வேளையில் ஆரியன் வீட்டுக்கு வந்தான். சில்வியா இருப்பதற்கான அறிகுறி இல்லை. சிறிதாக சந்தேகம் ஏற்பட்டது. சித்தாரா இரு நாளாக வரவில்லை. பிரதீபா வந்ததும் அவளை அஸ்வினோடு இருக்க கூறிவிட்டு ஸ்டேஷனிற்கு வந்தான். சமரையும் அழைத்துக் கொண்டான்.

" என்ன ஆரி திடீர்னு கூப்டுருக்க... " என்றபடி ஸ்டேஷனில் நுழைந்தான். " சமர்... " இதுவரை பொண்ணுங்க காணாம போனதுல எதாவது கேஸ் வந்திருக்கா ரீசன்டா... அண்ட் வன் மோர் திங்... ஒரு பொண்ணு ஃபோட்டோ அனுப்புறேன்... சனா கிட்ட சொல்லி கன்ட்ரோல் ரூம் ல அந்தப் பொண்ணைத் தேடணும் " என்று படுதீவிரமாகக் கேட்டான் ஆரியன்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் சுற்றும் முற்றும் பார்த்தபடி கூடவே ஆரியனையும் பார்த்துக் கொண்டிருந்தார். வயது ஒரு 26 இருக்கும்... எதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தடுமாறுவது போன்று இருந்தது.

எதேச்சையாக தன் முன்னிருந்த சில்வர் டம்ப்ளரைப் பார்த்த சமர், கான்ஸ்டபிளின் பதற்றம் புரிந்தது. திரும்பி, " மேம் உள்ள ஒரு ரெட் கலர் ஃபைல் இருக்கும்... அத எடுத்துட்டு வாங்களேன் " என்றான் சமர். அவரும் உள்ளே பார்க்க எதுவும் இல்லாது போக, அவர்களிடம் வந்து நின்றார்.

" சார் அங்க எதுவும் இல்ல " என்று மெல்லிய குரலில் சொன்னார். சமர் குனிந்திருந்து , " அது எனக்கும் தெரியும் மா... எதோ சொல்ல நினைக்கிறீங்க.. அதைச் சொல்லுங்களேன்... எதாவது தெரியுமா உங்களுக்கு " என்று கேட்டார்.

" சார் என் தங்கச்சி பெயர் ஷீலா . நேத்து அவ ப்ரெண்ட் ஒரு பொண்ணு கூட எங்கேயோ பார்ட் டைம் ஜாப் அப்ளை பண்ண போனா. அந்த பொண்ணுக்கு வீட்டில் பெரியவங்க இல்ல. காலேஜ் ல எக்ஸாம் னுட்டு வந்திருந்தா. என் பொண்ணும் வீட்டு கஷ்டம் காரணமா வேலைக்கு கிளம்பினா ...

மதியம் வரும்போது பேயறைந்தது போல இருந்தாங்க. எனக்கு டியூட்டி வரணுமே னு கிளம்பிட்டேன். என் பொண்ணு சாயந்திரம் வரும்போது தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டா . அவ கூட இருந்தவ தான் காப்பாற்றினா . எனக்கு எதுவுமே ஓடல.

அந்தப் பொண்ணோட தங்கச்சியை வரவழைச்சேன் . கொஞ்ச நேரத்தில் பார்த்தால் அந்த பொண்ணுக்கு சுய நினைவு இல்லை. பிறப்புறுப்புல இருந்து இரத்தம் வர ஆரம்பிச்சுட்டு. என் ஸ்கூல் மேட் கிளினிக் ல சேர்த்தேன். விசாரித்தா அந்த பிள்ளைங்க எதுவுமே சொல்லல. என் ஃப்ரெண்ட் கவனிப்பில் விட்டுட்டு
வேலைக்கு வந்தேன்.

சாயந்திரம் ஒரு பொண்ணு வந்து அவ அக்காவ காணோம் னு கம்ப்ளைன்ட் பண்ணினா. ஆனா சப் - இன்ஸ்பெக்டர் எதோ திட்டினாரு போல... அழுதுட்டே வெளிய போனா... இன்னைக்கு காலை ல வருவா னு எதிர்பார்த்தேன்... ஆனா அந்தப் பொண்ணு பஸ் ஸ்டாண்டில் பையோடு வெளியூர் கிளம்புவதை தான் பாத்தேன் " என்று கூறி முடித்தார்.

இங்கு கவினோ வலுக்கட்டயமாக சித்தாராவுடன் சல்லாபத்தில் இருக்க, அவனுக்கு எதிரே பயத்தில் சுவரோடு ஒன்றி ஒதுங்கி அழுதுகொண்டே இருந்தாள் சில்வியா.

தொடரும்...

கதையைப் பற்றி சொல்லுங்க ...
- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿

 
Top