• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4

Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
ஜென்மம் 4.1

மழை வழி கடல்விடும்

வின்காதல் மண்ணை சேருமே…
உனை உடல் பிரிந்தினும்

என் காதல் உன்னை சேருமே…

“ நீங்க கேட்ட ஸ்டாப் இதான்மா இறங்குங்க” என்ற நடத்துனரின் குரலில் நடப்புக்கு வந்தவள் நன்றி கூறிவிட்டு பேருந்தில் இருந்து இறங்கினாள்.

எந்த பக்கம் செல்வது என்று தெரியவில்லை. சுற்றிலும் ஆட்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தின் அருகே ஒரு சிறிய டீக்கடை இருந்தது.

அதன் அருகே சென்றவள், “அண்ணா இங்க ஜி.கே சொல்யூசன்ஸ் எங்க இருக்கு?” என்று கேட்க,

“இதோ இந்த லெஃப்ட்ல திரும்பி ரோட் கிராஸ் பண்ணி செகெண்ட் கட்ல போனா பர்ஸ்ட் பில்டிங்மா” என்று வழி கூற நன்றி நவிழ்ந்தவள் வேக நடை போட்டு ரோடை கடப்பதற்கு நின்றாள்.

சிவப்பு நிற சமிக்ஞை விழுந்ததும் நின்றிருந்த கூட்டத்துடன் தானும் கலந்து சாலையை கடந்து இரண்டாவது தெருவில் நுழைந்தாள்.

நுழைந்ததுமே முதல் கட்டிடமாக உயர்ந்து நின்றது ஜி.கே சொல்யூசன்ஸ்.

சிலர் உள்ளே சென்று கொண்டிருக்க ஒருமுறை நிமிர்ந்து கட்டடத்தை பார்த்தவள் உள்ளே நுழைந்து வரவேற்பாளினியிடம் தான் வந்த காரணத்தை கூறினாள்.

“வெல்கம் டூ ஜி.கே சொல்யூசன்ஸ்” என்று அழகாக புன்னகைத்தவள்,

“கொஞ்சம் நேரம் அந்த சோஃபால உட்காருங்க மேடம்‌. நான் பேசிட்டு சொல்றேன்” என்க,

சரியென தலையசைத்தவள் அருகே இருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

விழிகள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது. வெளியே சென்னை வெயில் சுட்டெறிக்க அதற்கு எதிர்பதமாக எல்லா இடத்திலும் குளிர்சாதன பெட்டி தன்னுடைய வேலையை சரியாக செய்து குளுமையை பரப்பி கொண்டிருந்தது.

இவ்வளவு நேரம் வியர்த்து வடிய வேகநடையில் வந்தவளுக்கு உள்ளும் புறமும் குளுமை சற்று இதமாக இருந்தது. அங்கு கிராமத்தில் இருந்தவரை வெயில் பெரிதாக தெரியவில்லை.

தோட்டத்தில் இளைப்பாரி கொள்வாள்‌. இங்கு சென்னையின் வெயில் சற்றே வாட்டியது.

அலுவலகத்தின் அமைப்பை பார்வையிட்டவளுக்கு உள்ளே மெச்சுதல் தான். அங்கு அனைத்துமே திட்டப்படி அதனதன் இடத்தில் செய்யப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவளை காக்க வைத்த பிறகு வரவேற்பாளினி இவளது பெயரை கூறி அழைக்க எழுந்து அருகே சென்றாள்.

“உங்களை எம்.டி சார் கூப்பிட்றாங்க” என்று வரவேற்பாளினி மொழிய,

இவள் ஒரு நொடி திகைத்து பின்,

“மேம் ஹெச் ஆரை தான பாக்க வர சொன்னாங்க” என்று வினவ,

“எஸ் மேம் பட் இப்போ எம்.டி சார் அவங்களே டேரெக்டா உங்களை இன்டர்வியூ பண்ண வர சொல்றதா சார் பி.ஏ சுமித்ரா இன்பார்ம் பண்ணாங்க. சார் ரூம் தேர்ட் ப்ளோர்ல ரைட் சைடு” என்று கூற,

‘சரி’ என்பதாய் தலை அசைத்து சென்றவளுக்கு மனதிற்குள்,

‘இதென்ன புதுசா இருக்கு. எப்பவும் ஹெச். ஆர் தான இன்டர்வியூ பண்ணி செலக்ட் பண்ணுவாங்க.‌ எல்லா வொர்க்கும் எம்.டியே பாத்துட்டா மத்தவங்களுக்கு வொர்க் இருக்காதே’ என்ற நினைத்து கொண்டாள்.

இதுவரை அவள் வேலை செய்த இடத்தில் இவளை நேர்காணல் செய்தது மனிதவளத்துரை அதிகாரி தான். வேலை செய்வர்களிடத்தில் என்ன பிரச்சனை என்றாலும் அவரிடம் தான் செல்லும். இதுவரை பழைய பணி இடத்தில் நிர்வாக இயக்குனரை ஓரிரு முறை தான் நேரில் கண்டிருக்கிறாள். அதுவும் ஏதாவது விஷேஷ நாட்களில் மட்டும் தான்.

மின்தூக்கியில் மூன்றாவது தளத்தை அடைந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு பதற்றம். ஒரு நொடி விழிகளை மூடி தன்னை நிதானித்தவள் எப்போதும் போல சிறிய மென்னகையை இதழில் ஒட்டி கொண்டாள்.

‘இங்கே வேலை செய்ய வந்திருக்கிறேன் அவ்வளவு தான்’ என்று தனக்கு தானே கூறி கொண்டவள்

பார்த்தீபன் எம்‌.டி என்று பெரியதாக போடப்பட்டிருந்த அறைக்கு முன் வந்து நின்றவள் மரியாதை நிமித்தமாக,

“மே ஐ கம்மின் சார்” என்று அனுமதி கேட்க,

“எஸ் கம்மின்” என்ற அழுத்தமான குரல் அவளது செவியில் வந்து மோதியது.

காலையில் இவளை தடுமாற வைத்த அதே குரல். ஆனால் அப்போதிருந்த பாதிப்பு இப்போது நிச்சயமாக இல்லை.

அவனுக்கும் எனக்கும் தொழிலாளி முதலாளி என்பதை தவிர எந்தவொரு தொடர்பும் இல்லை என்று மனதிற்கு மீண்டும் சொல்லி கொண்டவள் சலனமற்ற முகத்துடன் உள்ளே நுழைந்தாள்.

கதவிற்கு நேராக போடப்பட்டிருந்த பெரிய மேஜையின் பின்புறம் போடப்பட்டிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனது முகம் மடிக்கணினியில் மறைந்திருந்தது.

தலையை லேசாக நகர்த்தி அவளது முகத்தை ஒரு கணம் கண்டவன்,

“டேக் யுவர் சீட் மிஸ் கன்னல்மொழி” என்று பெயரை அழுத்தி கூற,

“தாங்க் யூ சார்” என்று அமரிக்கையான புன்னகையை கொடுத்தவள் நாற்காலியில் தன்னை பொருத்தி கொண்டாள்.

அவளுக்கு யூகம் இருந்தது. கண்காணிப்பு கருவி மூலம் தன்னை நிச்சயமாக பார்த்திருப்பான் தன்னை நேரில் பார்க்கும் கணம் நிச்சயமாக அதிர்ச்சி அடைய மாட்டான் என்று.

அதே போலத்தான் பார்த்தீபனுக்னகும் அவளை கண்காணிப்பு கருவியில் கண்டுவிட்டு புருவம் இடுங்கியது.

தான் காலையில் பார்த்த பெண் சட்டென்று மூளையில் மின்னலடிக்க,

“கனி” என்று இதழ்கள் முணுமுணுத்தது.

காலையில் எங்கேயோ பார்த்தது போல உள்ளதே என்று மூளையின் இடுக்குகளில் எங்கு தேடியும் கிடைக்காத ஒன்று இப்போது வரிசை கட்டி நிற்கின்றது.

எப்படி இவளை மறந்து போனோம்? பத்து வருடங்கள் பார்க்காமல் இருந்தால் முகம் மறந்துவிடுமா? என்று சிந்தை தோன்றியது.

இருக்கலாம் தான் அவளை பார்த்தும் அவளை பற்றி நினைத்தும் பத்து வருடங்கள் ஆகிவிட்டதே? பார்க்காத நினைவிலும் இல்லாத ஒன்று வெகு சுலபமாய் மறந்து போவது இயல்பு தானே? என்று எண்ணம் பிறந்தது‌.

ஆனால் அவளும் காலையில் என்னை தெரியாது பார்த்ததில்லை என்று கூறிவிட்டு சென்றாளே? என்று நினைத்தவனது புருவம் யோசனையில் சுருங்கியது.

தனக்கு அவளை நினைவில் இல்லாதது போல அவளுக்கும் தான் நினைவில் இருந்திருக்க மாட்டோமா என்று தோன்றியது.

ஆனால் எப்படி அவளால் மறக்க முடியும் அத்தான் அத்தான் என்று நூறு முறை அழைத்து தன்னை சுற்றி வருவாளே? அத்தனை எளிதில் மறந்துவிட்டாளோ? என்று கேள்வியும் பிறந்தது.

ஆனால் மூளை சடுதியில் இல்லை என்று மறுத்தது. தன்னை பார்த்த கணம் அதிர்ந்து பின்னர் இயல்புக்கு மாறிய அவளது வதனம் நினைவில் ஆடியது.

ஆக அவளுக்கு தன்னை நினைவிருக்கிறது. தான் கேட்டதுக்கு பார்த்ததேயில்லை என பொய் கூறி இருக்கிறாள்.

இன்னும் இந்த பொய் பேசும் பழக்கத்தை இவள் விடவில்லையா? என்று அவனது முகத்தில் பிரித்தரியா பாவனை வந்து போனது.

ஆனால் ஏன் பொய் பேச வேண்டும் என்று வினா தொக்கி நின்றது.

சடுதியில் நேற்று அத்தையும் பாட்டியும் இவளை பற்றி கூறியது நினைவில் வந்து போனது.

வேண்டுமென்றே தனது கவனத்தை ஈர்க்கவென்று இவ்வாறு செய்திருக்கிறாளா? வாய்ப்பு உள்ளதோ? என்று சிந்திக்க மற்றொரு மனம் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று மறுதலித்தது.

என்னவோ அவளது செய்கை அவளை பற்றி தானே சிந்திக்க வைத்திருக்கிறது.

என்னை பார்த்ததும் சாதாரணமாக பேசி இருந்தால் நான் ஏன் அவளை பற்றி நினைக்க போகிறேன்

மொத்தத்தில் இது அவள் வேண்டுமென்றே செய்தது தான் என்று முடிவுக்கு வந்தவன் இனி அவளை பற்றி நினைக்க கூடாது என்று முடிவுக்கு வந்த பிறகு தான் அவளை உள்ளே வர கூறினான். அதுவும் வேண்டுமென்றே ஒரு மணி நேரம் காக்க வைத்த பிறகு.

பார்த்தீபன் நினைத்திருந்தால் அவள் வந்த ஐந்து நிமிடத்திலே உள்ளே அழைத்திருக்கலாம்.

ஆனால் காலையில் அவள் கூறிய வார்த்தையின் தாக்கம் அவளை காக்க வைக்க அவனை உந்தியது.

ஆனால் இதற்கெல்லாம் அசருபவளா கன்னல் மொழி. அவள் காக்க வைத்ததற்கான சுவடு முகத்தில் எங்கேயும் தெரியாத அமைதியான புன்னகையுடன் அமர்ந்து இருந்தாள்.

பார்த்தீபன் மீண்டும் கணினியில் முகத்தை புதைத்து கொண்டான். கண்கள் கணினியை கவனித்தாலும் கவனம் எல்லாம் எதிரில் இருந்தவளிடத்தில் தான்.

எங்கே தன்னை பார்க்கிறாளா? கவனிக்கிறாளா? தன் எண்ணப்படி தன்னுடைய கவனத்தை ஈர்க்கும் செய்கைகளை எதாவது இருக்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தது.

ஆனால் கனியோ நொடி நேரம் கூட இவனிடத்தில் பார்வையை பதிக்கவில்லை.

நன்றி கூறி அமர்ந்தவள் அறையை சுற்றி பார்வையை சுழலவிட்டு கொண்டிருந்தாள்.

பார்த்தீபனின் அறை அவள் எண்ணியது போலவே அத்தனை சுத்தமாக இருந்தது.

அவளுக்கு தான் தெரியுமே சுத்தத்தின் மறுபெயரே பார்த்தீபன் தான் என்று.

தன் அறையில் ஒரு பொருள் இடம் மாறினாலும் அவனுக்கு பிடிக்காது.

இப்போது அலுவலக அறையும் அதே போல அழகாக இருந்தது. ஒரு ஓரத்தில் நீள்விருக்கை போடப்பட்டிருந்தது. மற்றொரு ஓரத்தில் ஏதும் இல்லை. ஆனால் சுவற்றில் அவர்களது நிறுவனத்தை பற்றி விளக்கங்கள் கொண்ட படங்கள் அங்காங்கே மாட்டப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட அறையிலும் பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது அவள் வந்து.

தன் பொறுமையை சோதிக்கவென்றே காக்க வைக்கிறானோ இல்லை காலையில் யாரென்று தெரியாது என்றேனே அதற்காக தான் இவ்வாறு செய்கிறானோ என்றெல்லாம் எண்ணம் வந்தது.

மனதில் என்ன ஓடினாலும் முகம் மட்டும் அவ்வளவு நிர்மலாக இருந்தது.

கணினியில் இருந்து முகத்தை நகர்த்தியவன் தன்னுடைய இன்டர்காமில் யாருக்கோ அழைத்தான்.

அடுத்து நொடியே அனுமதியுடன் ஒரு நவநாகரீக யுவதி உள்ளே நுழைந்தாள்.

“சுமி இந்த அக்ரிமெண்ட்ல இந்த கரெக்ஷன்ஸ் பண்ணுங்க” என்று மேலும் பல உத்தரவுகளை இட,

தன்னுடைய குறிப்பேட்டில் அனைத்தையும் குறிப்பெடுத்து கொண்டவள் விடைபெற,

இப்போது எதிரில் இருந்தவன் அவளை பார்த்தவாறு நிமிர்ந்து அமர்ந்தான்.

கனியும் தலையை நிமிர்த்தி அவனை நேருக்கு நேராக காண ஒரு நொடி அவளது முகத்தை கண்டவன் பிறகு அவள் கொண்டு வந்திருந்த கோப்புக்காக கையை நீட்டினான்.

அவள் கொடுத்ததும் அதனை திறந்து பார்த்தபடியே,

“உங்களை பத்தி சொல்லுங்க மிஸ் கன்னல்மொழி” என்று ஆங்கிலத்தில் வினவ,

தன்னை பற்றி விபரங்களை தானும் ஆங்கிலத்திலே கூறி முடித்தாள்.

அவள் கூறியவற்றை கேட்டவாறே கோப்பில் பார்வையை பதித்தவன் நிமிர்ந்து,

“எனக்கு ரெக்கமண்டேஷன் பிடிக்காது. இங்க எந்த ரிலேஷன்ஷிப்புக்கும் இடம் கிடையாது. நீங்க இன்டர்வியூ சரியா பண்ணா ஜாப் கிடைக்கும் அதர்வைஸ் கோ டு தேர்” என்று கதவை காண்பிக்க,

“எனக்கும் ரெக்கமென்டேஷன்ல ஜாப் ஜாயின்ட் பண்றதுல விருப்பம் இல்லை. நீங்க இன்டர்வியூ பண்ணி எனக்கு தகுதி இருக்குனு தெரிஞ்சா மட்டும் அப்பாயிண்ட் பண்ணுங்க” என்று முடித்துவிட,

பார்த்தீபனின் புருவம் ஒரு நொடி சேர்ந்து பின்னர் விரிந்தது.

அவளது சான்றிதழில் அவளது படிப்பை கண்டிருந்தவன் அது தொடர்பான கேள்விகளை தொடுக்க

தெளிவாக பதில் அளித்தாள் கன்னல் மொழி.

பிறகு அவனது நிறுவனத்தை பற்றி அது வழங்கும் சேவைகளை பற்றி வினாக்களை தொடுக்க,

நேற்றே அவனது நிறுவனத்தை பற்றி கூகுளில் படித்தும் தந்தை மூலம் தெரிந்தும் வைத்து இருந்தவள் தனக்கு தெரிந்தவற்றை கூறினாள்.

அவளை நேர்காணல் செய்வதனுக்கு திருப்தியாக இருக்க,

“ஓகே யூ கேன் ஜாயின் ஹியர். ரைட் நவ்” என்று விட,

அதற்கும் இதழ் தாண்டா புன்னகையை கொடுத்தவள் நன்றி நவிழ்ந்தாள்.

“ஒன்திங்க்” என்றவன் நிறுத்த,

கனி விழிகளில் வினாவை தேக்கி அவனை கண்டாள்.

“என் ஆபிஸ்ல எந்த ரிலேஷனுக்கும் இடம் கிடையாது. மத்தவங்க எப்படியோ அப்படி தான் நீங்களும். ஒரு நார்மல் எம்பிளாயி தான். உங்களுக்கும் எனக்கும் இருக்கிற ரிலேஷன்சிப் யாருக்கும் தெரியவர கூடாது. அதை வச்சு எதாவது அட்வாண்டேஜ் எடுத்துக்கணும் நினைச்சா” என்றவன் நிறுத்திவிட்டு வெளியே போய்விட வேண்டும் என்ற அர்த்தத்தில் கரங்களை காண்பிக்க,

இவளது இதழ்களில் ஒரு பிரித்தரியா புன்னகை ஜனித்தது. உடலில் ஒரு வித இறுக்கம் தோன்றியது. கணநேரத்தில் அதனை மறைத்தவள்,

“ஐ க்னோ உங்களுக்கும் எனக்கும் இடையில இருக்கிறது ஒரு பாஸ் எம்பிளாயி ரிலேஷன்ஷிப் மட்டும் தான். தாங்க்ஸ் பார் ரிமைனிங். இல்லாத ஒன்னை சொல்ற பழக்கம் என்கிட்ட கிடையாது சார். ஐ வோன்ட் க்ராஸ் மை லிமிட்ஸ் சார்” என்றவள் கீற்றாய் புன்னகைத்தாள்.

அந்த புன்னகை எதிரில் இருந்தவனை தாக்கியதோ என்னவோ?

அவன் பதில் எதுவும் கூறாது ஆராய்ச்சி பார்வையை செலுத்த,

“ஷால் ஐ லீவ் சார்” என்று வினவ,

“உங்களுக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ண சொல்றேன். கம்பெனி ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் நல்லா படிச்சு பார்த்திட்டு சைன் பண்ணுங்க. சேலரி அதர் டீடெயில்ஸ் என்னோட பி‌‌. ஏ சொல்லுவாங்க” என்றவன் சுமித்ராவை அழைத்து,

“இவங்களை அசிஸ்ட் பண்ணுங்க”என்றுவிட,

மீண்டும் ஒரு முறை நன்றி கூறி வெளியேறினாள் கன்னல் மொழி.

தன்னை கடந்து சென்றவளையே பார்த்திருந்தவன் அவளது அந்த புன்னகைக்கான பொருளை தேடி கொண்டிருந்தான்.

அப்போதைக்கு அது கிடைக்க போவதில்லை என்று உணர்ந்தவன் பெருமூச்சுடன் தனது பணியை கவனித்தான்.

கனி வெளியே வந்ததும் சுமித்ரா,
“வெல்கம் டூ ஜி.கே சொல்யூசன்ஸ் மிஸ் கன்னல்மொழி. ஐ ஆம் சுமித்ரா. பார்த்தீபன் சார் பி.ஏ” என்று அழகாய் புன்னகைத்தாள்.

அவள் முகத்திற்கு அந்த புன்னகை அத்தனை அழகாய் பொருந்தியது.

தானும் மெலிதான புன்னகையை பரடவிட்டவள் நன்றி நவிழ,

“உங்களுக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் ஆன் பிராசஸ்ஸிங். அது ரெடியாகுறக்கு முன்னாடி நீங்க ஹெச்.ஆரை பார்த்துட்டு வந்திடுங்க. அவங்க உங்களுக்கு எல்லா டீடெயில்ஸ்யும் சொல்லுவாங்க” என்க,

சம்மதமாய் தலை அசைத்தாள் கன்னல்மொழி.

“வாங்க நானே ஹெச்.ஆர்கிட்ட இன்ட்ரோ கொடுக்குறேன்” என்றவள் தானே அழைத்து சென்று மனிதவள துறை அதிகாரியிடம் அழைத்து சென்றாள்.

“ஸ்வேதா இவங்க” என்று சுமித்ரா கூறுகையிலே,

“கன்னல்மொழி ரைட். நான் இன்னைக்கு இவங்களை தான இன்டர்வியூ பண்றதா இருந்துச்சு” என்று வினவிட,

“யெஸ் இவங்க தான். சார் இவங்களை அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க. நீங்களே பர்தரா அர்சிஸ்ட் பண்ணுங்க ஸ்வேதா” என்று சுமித்ரா கூறிவிட்டு செல்ல,

“டேக் யுவர் சீட் மிஸ் கன்னல்மொழி” என்று புன்னகைத்தாள் ஸ்வேதா.

நன்றி கூறி அமர்ந்தாள் கன்னல்மொழி.

“உங்க டீடெயில்ஸ் சொல்லுங்க” என்று ஸ்வேதா கூற,

கனி தன்னுடைய சுயவிவரத்தை கூறினாள்.

அனைத்தையும் கேட்டவள், “ஓ நீங்க மதுரையா?” என்று வினவிட,

“யெஸ் மேம்”

“சாரோட நேட்டீவ் கூட மதுரை சைட் தான்னு கேள்விப்பட்டேன். அப்போ சார் உங்க ரிலேடிவ்வா?” என்று வினா தொடுக்க,

ஒரு கணம் திகைத்த கனியின் மனக்கண்ணில் பார்த்தீபன் சற்று முன்பு கூறிய வார்த்தைகள் வந்து போக சடுதியில்,

“நோ மேம். சார் எனக்கு ரிலேடிவ் இல்லை” மறுத்திட்டாள்.

“ஓ… ஓகே” என்றவளது குரலில் முன்பிருந்த ஆர்வம் குறைந்து போக,

“இப்போதைக்கு அர்ஜென்ட் ரெக்கொயர்மெண்ட் எதுவும் தேவைப்படலை. பட் இருந்தும் உங்களை திடீர்னு அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க‌.‌ அதுவும் டேரெக்ட் ரெக்கொயர்மெண்ட்ல அதான் கேட்டேன்” என்றவள் விளக்கம் மொழிய,

இதற்கு என்ன கூறுவென தெரியாது ஒரு நொடி சிந்தித்தவள் பின்,

“என் அப்பாவோட ப்ரெண்டுக்கு தெரிஞ்சவங்க சாரோட அப்பா. நான் ஜாப் சேர்ச் பண்ணிட்டு இருக்கதை தெரிஞ்சு இங்க ரெபெர் பண்ணாங்க. மத்தபடி எனக்கு இவங்களை தெரியாது இன்னைக்கு தான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன்.‌ இன்டர்வியூ பண்ணி தான் எடுத்தாங்க” என்று சரளமாக பொய் கூற,

“ஓ… ஓகே” என்று தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டவள்,

நிறுவனத்தின் விதிமுறைகள் அனைத்தையும் தெளிவாக எடுத்துக் கூறினாள்.

அவள் பேசி முடிய கனிக்கான பணி நியமன ஆணையும் வந்தது.

“நான் சார்க்கிட்ட சைன் வாங்கிட்டு வர்றேன். நீங்க வெயிட் பண்ணுங்க” என்றவள் எழுந்து செல்ல,

பார்த்தீபனை பார்க்க செல்கிறேன் என்று கூறும் நொடி அவளது கண்கள் மின்னியதோ என்று கனிக்கு தோன்ற அடுத்த கணமே என்னவாயிருந்தால் எனக்கென்ன என்று அசட்டையாக தோளை குளுக்கினாள்.

ஸ்வேதா சென்ற இரண்டு நிமிடத்திலே வந்து,

“இதை ரீட் பண்ணி பாத்திட்டு சைன் பண்ணுங்க” என்று கூற,

ஒருமுறை நன்றாக வாசித்து முடித்தவள் கையெழுத்திட்டாள்.

“வெல்கம் டூ ஜி‌.கே சொல்யூசன்ஸ்” என்று புன்னகைத்த ஸ்வேதா அவளுக்கான அடையாள அட்டையை நீட்டினாள்.

அதற்குள் வந்துவிட்டதா என்று எண்ணியவாறு அதனை கழுத்தில் மாட்டி கொண்டாள்.

“நீங்க இப்போ ஆஸ்திரேலியன் டீம்ல தான் ஜாயின் பண்ண போறீங்க.‌ உங்க டீம் ஹெட் ஊர்மிளா உங்களுக்கு வொர்க் டீடெயில்ஸ் சொல்லுவாங்க” என்று அழைத்து சென்று ஊர்மிளாவிடம் விட்டு சென்றாள்.

ஊர்மிளாவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டவள் அவளுக்கான வேலையை பற்றி விளக்கினாள்.

ஜி.கே சொல்யூசன்ஸ் ஒரு படிப்பு தொடர்பான சேவை மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனம்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கும் படிக்க விரும்புவர்களுக்கும் தங்களது சேவையை வழங்கி வருகிறது.

இது கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் இருந்து கல்லூரி விடுதியில் சேரும்வரை அனைத்து வேலைகளையும் சரியாக செய்து கொடுத்துவிடும்.

வேலைக்கும் அவ்வாறே கடவுச்சீட்டு முதல் நுழைவுஇசைவு வரை தங்குமிடம் உணவு வரை யாவையும் செய்து கொடுத்துவிடும்.

இந்த சேவையை பெரிய அளவில் செய்துவருகிறது. இந்தியாவில் மட்டும் அறுபது கிளைகளை கொண்டது.

சென்னையிலே மூன்று கிளைகள் உள்ளது.‌ இப்போது அவள் பணி சேர்ந்திருக்கும் அலுவலகம் தான் எல்லாவற்றிற்கும் தலைமை அலுவலகம்.

இந்த வேலையில் பொறுமை மிகவும் அவசியம். வாடிக்கையாளர்கள் தங்களது பொறுமையை சோதிக்கும் விதமாக நிறைய கேள்விகள் சந்தேகங்கள் எழுப்புவார்கள் அதற்கு நாம் மிகவும் பொறுமையாக எடுத்து கூற வேண்டும் என்று பலவாறு அறிவுரை வழங்கினாள்.

கனி அனைத்தையும் கவனமாக கேட்டு கொண்டாள்.

அவளுக்கென ஒரு மேஜை கொடுக்கப்பட்டு அதில் மடிக்கணினியும் கொடுக்கப்பட்டது.

அவளது குழுவில் மொத்தம் இவளோடு சேர்த்து பதினைந்து நபர்கள் இருந்தார்கள்.

ஊர்மிளா அழைத்து வந்து, “ஹெலோ காய்ஸ் இவங்க கன்னல் மொழி நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று மொழிய,

“வெல்கம் கேர்ள் ஐ ஆம் தாரிகா” என்று ஒரு பெண் கூற,

“ஹாய் ஐ ஆம் அதுல்யா”

“ஹாய் ஐ ஆம் நிவேதிதா” என்று வரிசையாக தங்களை அறிமுகப்படுத்தி கொள்ள,

“ஹாய் ஆல் ஐ ஆம் கன்னல்மொழி ஃப்ரம் மதுரை” என்று அறிமுகம் செய்து கொண்டாள்.

பத்து நிமிட அறிமுகப் படலத்திற்கு பிறகு தாரிகா அவளுக்கான இன்றைய வேலையை பற்றி கூறினாள்.

“இன்னைக்கே ஸ்டூடண்ட் ப்ரொபைல் எப்படி கிரியேட் பண்றது. என்னென்ன க்ரிட்டெரியா தேவைப்படும்னு பாரு. மத்த வொர்க்ஸ போக போக தெரிஞ்சுக்கலாம்” என்க,

இவளும் தேவையானவற்றை குறிப்பெடுத்து வேலையில் மும்முரமானாள்.

நேரம் போனதே தெரியவில்லை பிறகு மதிய உணவு குழு நண்பர்களுடன் கலகலப்பாக சென்றது.

கனி எதிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் புன்னகையுடன் வேடிக்கை பார்த்திருந்தாள்.

மாலை வரை நன்றாக ஆராய்நதவள் ஒரு மாணவனின் ப்ரெபைலை உருவாக்குவது எப்படி என்று தெளிவாக கற்று கொண்டிருந்தாள்.

கன்னல் மொழி இயல்பிலே நல்ல சூட்டிகை. விரைவாக எதையும் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவள். இவை யாவும் ஒரு காரணம் என்றாலும் காலையில் கேட்ட பார்த்தீபனது வார்த்தைகள் தான் முக்கியமானது.

அவனிடத்தில் தன்னை நிரூபிக்கும் வரை ஓயாது கற்க வேண்டும் என்ற திடமே அவளை பணி செய்ய ஊக்குவித்தது.

தாரிகா வந்து, “கன்னல் மொழி இன்னும் கிளம்பலையா? சிக்ஸ்க்கு எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிடனும்” என்க,

“இதோ டூ மினிட்ஸ் இந்த ப்ரொபைல முடிச்சுக்கிறேன்” என்று மொழிய,

“ஜாப் வந்த புதுசுல இப்படி தான் ஆர்வமா இருப்போம்.‌ அப்புறம் போக போக முதல் ஆளா கிளம்பி ஓரிருவோம்” என்க,

கனியிடத்தில் புன்னகையை பிறந்தது.

பணியை முடித்தவள் தனது உடைமைகளை எடுத்து கொண்டு வெளியே வர சரியாக அதே நேரம் வெளியே எங்கோ சென்றுவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் பார்த்தீபன்.

வெளியே சென்று கொண்டிருந்தவர்கள் மரியாதை நிமித்தமாக மாலை வணக்கம் கூறி வெளியேற தானும் அவனருகே வரும் சமயம்,

“குட் ஈவ்னிங் சார்” என்றபடி வெளியேற விழைய,

எல்லோரிடத்திலும் தலையை அசைத்தவன் இவளது வணக்கத்தினை கண்டுகொள்ளாதது போல கடந்துவிட,

இவளை அது பெரியதாக பாதிக்கவில்லை.‌ அமைதியாக நகர்ந்தாள்.

இதனை கவனித்துவிட்ட அதுல்யா தான், “கனி நீ குட் ஈவினிங் சொன்னதை சார் கவனிக்கலை போல. அதான் ரியாக்ட் பண்ணாம போய்ட்டார். இல்லைனா கண்டிப்பா தலை அசைச்சு இருப்பார். நீ எதுவும் பீல் பண்ணாத” என்றுவிட,

புரிந்தது எனும் விதமாக தலையசைத்தவளது இதழில் கீற்று புன்னகை.

தாரிகா, “கன்னல் மொழி எந்த ஏரியா நீ எதுல வந்த?” என்று வினவ,

தனது இருப்பிடத்தை கூறியவள்,

“பஸ்ல வந்தேன்” என்க,

“ஓ ஈவ்னிங் டைம் பஸ் ரொம்ப ரஷ்ஷா இருக்குமே. ஸ்கூட்டி வாங்கிக்கலாமே?” என்றவள்,

“நம்ம ஆபிஸ்ல லோன் பெசிலிட்டி இருக்கு” என்று சேர்த்து கூற,

அவளது அக்கறையில் மென்னகை புரிந்தவள்,

“என்னோட ஸ்கூட்டி ஊர்ல இருக்கு. நெக்ஸ்ட் வீக் வந்திடும். ஒன் வீக் தான் பஸ்” என்றுவிட்டு ஐந்து நிமிட தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க துவங்கினாள்.

அப்போது அலைபேசியில் பேசியவாறு கண்ணாடி தடுப்பின் வழியே வேடிக்கை பார்த்தவனது விழியில் சாலையை கடந்து செல்லும் கன்னல் மொழி விழுந்தாள்.

காலையில் இருந்து ஆராய்ந்தவனது பார்வையில் அவளது தோற்றம் இப்போது தான் பார்வையில் விழுந்தது.

சந்தன நிறத்தில் சுடிதாரும் அதற்கு தோதாக சிவப்பு நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தவளது துப்பட்டாவை ஒரு பக்க தோளில் வழிந்து கொண்டிருந்தது.

பத்து வருடங்களுக்கு முன்பு போல் குழந்தை முகம் மாறி முகத்தில் முதிர்ச்சி பிறந்திருந்தது. சற்று பூசினார் போல உடல் வாகு கொண்டிருந்தவள் மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறத்தில் இருந்தாள்.

மறுபக்க தோளில் கைப்பை தொங்கி கொண்டிருக்க யாரையும் பார்க்காமல் விறுவிறுவென நடந்து சாலையை கடந்து பேரு
ந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள்.

அலைபேசியில் பேசி முடித்துவிட்ட பின்பும் கவனம் அவளிடத்தில் தான்.

தன்னிடம் ஒதுங்கி செல்வது போல நடந்து என்னுடைய கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறாளா இவள் என்ற எண்ணம் தோன்றியது.

பார்த்தீபனுக்கு தெரியவில்லை அவனுடைய எண்ணங்கலுக்கு எல்லாம் அப்பாற்பட்டவள் இந்த கன்னல் மொழி என்று.

தெரியும் நேரம் இவனது எதிர்வினை என்னவோ?...











 
Well-known member
Messages
935
Reaction score
685
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
383
Reaction score
268
Points
63
Parthiban ku therinchalum.no use mozhi madam kita ivar oda endha mozhi yum.avolo sikkiram velai seiyanumae
 
Administrator
Staff member
Messages
524
Reaction score
800
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
😍😍
 
Top