- Messages
- 545
- Reaction score
- 735
- Points
- 93
அத்தியாயம் - 34
மறுநாள் அவளுடன் மருத்துவமனை சென்றிருந்தான். மருத்துவர் ஆதியிலிருந்து அந்தம் வரை அவளின் மனநிலையை விவரித்து பேசினார். அவளின் போராட்டங்களையும் அழுத்தங்களையும் விவரிக்க திரிலோகேஷிற்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி பரவ ஆரம்பித்தது கண்களெல்லாம் கலங்கிற்று நிமிடத்தில். மீனலோஷினி வெளியில் அமர்ந்திருக்க திரிலோகேஷ் மருத்துவரிடம்.
"ஆனால், எல்லாத்துல இருந்தும் அவங்க வெளி வந்திட்டாங்க. சப்போஸ் அவங்களையும் மீறி சில சமயங்கள் உங்களை காயப்படுத்திட்டா அவங்களை விட்டுடாதீங்க. அவங்க எல்லா விஷயத்திலையும் மெர்ச்சூடா இருந்தாலும் உங்க விஷயத்தில அவங்க இன்னும் பேபி தான். உங்களை ரொம்பவே விரும்புறாங்க. அதான் உங்களோட எதிர்மறையான சின்ன விஷயங்கள் கூட அவங்களை அதிகமா பாதிக்குது. இது மாதிரி கண்டிப்பா நடக்காது மே பி" என்று இழுக்க, "இல்லை நான் பார்த்துக்கிறேன்" என்றான் வேகமாக.
"தட்ஸ் குட்" என்று புன்னகைத்தவர் மீனுவை உள்ளே அழைத்தார். அவள் வந்து அவனருகில் அமர அவனோ விழியெடுக்காமல் அவளையே தான் பார்த்திருந்தான். எல்லா இடத்திலும் அவனுக்கு அவள் ஆச்சரியகுறி தான்.
அவளிடம் மருத்துவர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க அவளோ புன்னகை முகமாக பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவளது கைகளை எடுத்தவன் தன் கைகளுள் இறுக பிணைத்துக் கொள்ள ஒரு நிமிடம் பேசற்று அவனை பார்த்தவள் மீண்டும் மருத்துவரிம் பேச ஆரம்பித்து விட்டாள்.
சில நிமிடங்களில் அவளிடம் மருத்துவ கோப்புக்களை கொடுத்தவர், "யூ ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட் மீனு, இனிமே என்ன ப்ராப்ளனாலும் உங்களுக்குள்ளே அழுத்தாம உங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட சொல்லுங்க. இல்லை நேரடியா கேட்டுடுங்க. உங்க ஹஸ்பண்ட் பக்கத்தில தான இருக்கார். நாலு அடிக் கூட அடிங்க. நேரடியா பேசிற வார்த்தைகளை விட புதைக்கப்படுகிற வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம். கண்டிப்பா அது ஏதோ ஒரு நாள் கோபத்தில கண்டிப்பா வெளிப்படும்" என்று கூறி புன்னகைக்க, "ஷ்யூர் மேம்" என்ற மீனுவின் இதழிலும் புன்னகை உறைந்தது. திரிலோகேஷ் இமைக்க மறந்து மனைவியை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான்.
"சரி நீங்க கிளம்பலாம், சீக்கிரமே குட் நியூஸ் சொல்லுங்க" என்று கூற புன்னகத்தவளின் பார்வை நொடிப் பொழுதில் திரிலோகேஷை தழுவி மீள கிளம்பி விட்டனர்.
காரில் ஏறும் வரை தான் அவனது பொறுமை. ஏறிய நிமிடம் கார் கண்ணாடியை ஏற்றி விட்டவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். "என்னால ரொம்பவே கஷ்டப்பட்டுட்ட இல்லை" என்றவனின் குரல் முழுவதும் உடைந்து வெளி வர கண்ணீர் துளிர்த்து தான் விட்டது.
"லோகேஷ், கூல். எல்லாம் சரியாகிடுச்சு" என்று அவனை ஆசுவாசப்படுத்த முயற்சியில் இறங்கிட்டாள். நொடிகள் நிமிடங்களாக மாறிட அவனது அணைப்பு இறுகியதே தவிர குறைந்த பாடில்லை.
"ஷ்ஷ்...." என்று அவளது வாய் மீது விரல் வைத்து அவளை அதட்டியவன் அவளை உணரும் முயற்சியில். மௌனமான அணைப்புக்கள் அவனின் தற்போதைய நிலைக்கு அவசியமாகிற்று.
வாழ்க்கை எப்பொழுதுமே சற்று அல்ல அதிகமாகவே ஆச்சரியங்கள் சூழ்ந்தது தானே! நடப்பது இன்னதென்று வரையறுக்க முடிந்து விட்டால் வாழ்க்கை அதன் சுவாரசியத்தை இழந்து விடுமே! போராட்டங்களுடன் போர் புரிந்து வெற்றி பெறுவதில் தானே ருசி அதிகம். தடைகளற்ற பாதையில் சலிப்புகளே மேலிடும். ஏற்ற இறக்கங்களே நம்மை உயிர்ப்புடன் இயங்கச் செய்திடும். துன்பங்களற்ற வாழ்வை இறுதி மூச்சில் தானே கிடைக்கும். துன்பங்களென்றாலும் அதிலும் இன்புறுவதிலே நமது திறமை ஒளிந்திருக்கிறது.
அவளது முகத்தை தன்னை நோக்கி இழுத்தவன் அவளது இமைகளில் தனது இதழ்களை பதிக்க அவளோ மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
"மீனுக்குட்டி" என்றான் குரலில் ஏக்கத்தை தேக்கி. கண்களை திறந்து அவனையே பார்த்திருக்க அந்த விரிந்த விழிகளில் சங்கமித்திட விரும்பியது மனது. நெற்றியில் முட்டி சிரித்தவன் அவளை விலக்கி காரை வீட்டை நோக்கி செலுத்தினான். அவனருகில் நெருங்கி அமர்ந்தவள் கைகளை இறுக பற்றி தோளில் சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள். வாழ்க்கை முழுவதுமே இப்படியே இருந்து விட வேண்டும் என்றே இருவரும் இறைவனிடம் பிராத்தித்துக் கொண்டிருந்தனர். அந்த நிமிடங்களை இறுகவே பற்றிக் கொள்ளும் படி மனது ஏங்கியது. பாதைகள் இன்னும் நீண்டு முடிவில்லாது செல்ல மனது பிரயத்தப்பட்டது.
மனதின் விசித்தரங்களை யாரும் யூகித்திட இயலாது. வேண்டாம் என்று விலக்கியவைகளும் ஒரு நாள் இன்றியமையாததாய் மாறி விடும்! ஆம், அவனை தன் வாழ்வில் இன்றியமையாததாத தேவையாகவே மாற்ற விழைந்தாள் மீனலோஷினி.
அவனுக்கு அந்த நிமிடங்கள் நகர்வதே பிடிக்கவில்லை. காரை நிறுத்தாது அவளுடனே சென்று கொண்டிருக்க வேண்டும் என்று மனது விரும்பியது. மெதுவாகவே செலுத்தினான். ஆனால் வீடு வந்து விட்டது. காரின் இயக்கம் நின்றதை உணர்ந்து கண் விழித்தவள் அவன் கையை விடுவித்து கீழிறங்க அவன் இருக்கையை விட்டு இறங்கவே இல்லை.
அவனை கேள்வியாய் பார்க்க, "முக்கியமான வேலை இருக்குப்பா" என்றான் இறைஞ்சலான குரலில்.
இடுப்பில் கையூன்றி அவனை முறைக்க, "வந்திடுறேன், இங்க தான் வருவேன். சர்ப்ரைஸ்" என்றவன் எட்டி அவளின் கன்னத்தை தட்டி கிளம்பி விட அவளும் புன்னகையுடனே மேலேறி சென்றாள்.
அவளின் மிளிர்ந்து ஒளிர்ந்த முகமே இந்துமதிக்கு ஆசுவாசத்தைக் கொடுத்தது. முதலில் எப்பொழுதும் ஒரு வித சோகம் குடியேறி இருக்கும். எல்லாவற்றிலும் ஒட்டாது ஒரு வித விலகல் தன்மை இருக்கும் அவளிடம். செய்ய வேண்டும் என்ற அவரின் வற்புறுத்தலிலே இயங்கியவள் இப்பொழுதெல்லாம் தானே எல்லாவற்றையும் முன்னெடுக்கிறாள். அவளின் மாற்றங்கள் அவருக்கும் புரிப்படவே செய்கிறது.
வந்தவுடன் மேகாவை தூக்கி கொஞ்சியபடி அறைக்குள் செல்ல முனைய, "லோகேஷ் எங்கம்மா? வரலையா?" என்று இந்துமதி வினவ, "வேலை இருக்குனு போயிருக்காரும்மா, கொஞ்ச நேரத்தில வந்திடுவார்" என்று புன்னகையுடன் சென்றவளின் நேரம் மகளுடனே சென்றது. இனம் புரியாத இன்பம் மனதை ஆட்சி செய்ய முகமோ புன்னைகையை மொத்தமாக தத்தெடுத்துக் கொண்டது. எதற்கிந்த ஆனந்தம் என்று புரியவில்லை. சூழலின் இதம் அவளை சூழ்ந்து கொண்டது. மனதின் அலைப்புறுதலை தடுத்திருந்தாள். அன்றைய மகிழ்ச்சியை தவிர இறந்த காலத்தையோ எதிர்காலத்தையோ எங்குமே அண்ட விடாது தன்னை தானே செதுக்கி கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் உணவை தயார் செய்த இந்துமதி மீனுவை அழைக்க, "அவர் வரட்டும் சேர்ந்து சாப்பிடுறோம்" என்று மறுக்க, "சரிம்மா, நேரத்தோடு சாப்பிடுங்க" என்றபடி மேகாவை அழைத்துச் சென்று உணவை கொடுக்க இருவரும் உறங்க சென்று விட்டனர். இப்பொழுதெல்லாம் பாட்டியின் கதைகளை கேட்காமல் அவளுக்கு உறக்கம் வருவதில்லை. அவருக்கும் அவளுடன் இருக்கும் சமயங்களில் மனது குழந்தை நிலையை எட்டி விடுகிறது. ஒரு வயதை கடந்து விட்டாலே வாழ்க்கையில் சூழ்ந்து விடும் வெறுமைகளை களைந்து விடுவது இந்த பிஞ்சுகள் தானே! அதனாலே மேகாவை தன்னுடனே இறுக்க பிடித்து வைத்துக் கொள்ள விரும்பியது அவரின் மனது. வயது ஏற ஏற மீண்டும் அவர்களை அறியாமலே மனதளவில் குழந்தை நிலைக்கு திரும்பி விடுகின்றர் மனிதர்கள்.
வெகு நேரம் அவனுக்காக காத்திருந்தாள் ஹாலில் அமர்ந்த படியே. அவளுக்கிருந்த மகிழ்ச்சியான மனநிலை தூக்கம், பசி என்று எல்லா உணர்வுகளையும் தனக்குள் விழுங்கிக் கொள்ள தற்போது அத்தியாவசிய தேவை திரிலோகேஷ் என்றானது. அவளது பொறுமை எல்லையை கடக்க அழைத்து விட்டாள்.
"எங்க இருக்கீங்க?" என்று எடுத்தவுடனே கேட்க, "டென் மினிட்ஸ்ல வந்திடுவேன். ஆன் த வே" என்று அழைப்பை துண்டித்தான். பேச்சுக்களை ஓரளவிற்கு சகஜமாக்கும் முயற்சியில் அவளும் அவனும். உடனடியாக மாற்ற இயலாது தான். ஆனால் தொடர்ச்சியான முயற்சியால் கண்டிப்பாக மாற்ற முடியுமே!
அவன் வருகிறான் என்று கூறியவுடன் எழுந்து முகத்தை கழுவி ப்ரெஷாகி வந்து மீண்டும் அமர சரியாக காலிங்பெல்லும் ஒலித்தது.
கதவை திறந்தவள் தலையசைக்க உள்ளே வந்து அமர்ந்தான். "ப்ரெஷ்ஷாகிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" என்றிட, "எங்க மேகா, ஆன்ட்டியை காணோம்" என்றான்.
"சாப்பிட்டு தூங்க போய்ட்டாங்க" என்றவள் அடுப்பறை நுழைய அவனும் அவளின் அறைக்குள் சென்றான்.
சில நிமிடங்களில் அவன் உண்ண அமர, உணவை பரிமாறியவள் அருகிலே அமர்ந்து கொண்டாள். "நீ சாப்பிட்டீயா?" என்று வினாவுடன் அவன் உண்ண தொடங்க, "இல்லை, அப்புறமா சாப்பிடுறேன்" என்றாள்.
அவளை முறைத்தவன், "இப்பவே லேட்டாகிடுச்சு, உட்கார்" என்று அதட்ட, "எனக்கு பசியில்லை" என்றாள் மறுப்பாக தலையாட்டி. அவன் உணவிலிருந்து கையெடுத்து பின்னால் சாய்ந்து அமர்ந்து கொள்ள அவனை முறைத்தவள் தனக்கு உணவு எடுத்து வைத்து அமர்ந்து கொண்டாள். அவள் செயலில் லேசாக அரும்பிய புன்னகையுடன் உண்ண ஆரம்பித்தான். அதீத மகிழ்ச்சியின் பொழுதும் துக்கத்தின் பொழுதும் பசி என்பது துறந்து போய் விடும் உடல். நீண்ட நாட்களுக்கு பிறகான அவனின் அருகாமை அவளுள் பரவசத்தை ஏற்படுத்தி இருந்தது. எதுவுமே தேவையில்லை எல்லாமே கிடைத்து விட்டது போன்றதொரு நிறைவான மனநிலை.
அதற்கு பின் பேச்சு வார்த்தைகளற்று அமைதியாக இருவரும் உண்டு எழுந்தனர். வயிறு மட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு பிறகு இருவருக்குமே மனதும் நிறைந்திருந்தது. வாழ்வே புதிதாக தெரிந்தது. துன்பங்களிலே திழைத்தவர்களை இன்பமும் நிறைத்திருக்கிறது என்று உணர்த்துவதாய் தோன்றியது அந்த கணங்கள்
அவன் எழுந்து வந்து ஷோபாவில் அமர்ந்து விட எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு வந்தவள் அவனை நெருங்கி அமர்ந்து மார்பில் சாய்ந்து கொண்டாள். ஒரு நிமிடம் திகைத்தவன் கைகள் அவளை தோளோடு அணைத்துக் கொண்டது.
பேச்சுகளற்ற மௌனம் இந்ந நிமிடம் இனிக்கவே செய்தது. அவளுக்கு புரிந்தது அவனாக தன்னிடம் வர மாட்டான் தான் தான் செல்ல வேண்டும் என்று. அவள் வார்த்தைகளின் வீரியம் அவ்வாறே. எல்லாவற்றையும் மறந்து விட்டாலும் இன்னும் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் அவனுள் அதிகளவு தயக்கங்கள் குடியேறி இருந்தது. ஒரு முறை அடிப்பட்டு விட்ட கிலி மனதில் அதிகளவில் பரவி இருந்தாலும் மீண்டுமொரு முறை தன்னையறியாமல் கூட அவனை காயப்படுத்தி விடக் கூடாது என்ற ஜாக்கிரதை எண்ணமும் முக்கிய காரணம்.
"மீனுனு.." என்றான் மௌனத்தை கலைத்து. "ம்ம்...." என்றவள் அவனது விழிகளை நோக்க, "எப்ப வீட்டுக்கு வர்ற? எனக்கு உன்னையும் மேகாவையும் விட்டு தனியா இருக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. வீட்டுக்கு போனாலே நீயும் அவளும் பேசுற மாதிரியே இருக்கு. அதனால நான் நிறைய நாள் ஆபீஸ்லேயே தான் ஸ்டே பண்றேன் " என்றான் தயக்கங்ளை களைந்து.
"இப்பவே கூட நான் ரெடியா தான் இருக்கேன்" என்றவளின் இதழில் புன்னகை மின்ன அப்படியே அவளை அணைத்து விடுவித்தவன் எழுந்து கொண்டான்.
"சரி நான் கிளம்புறேன், நாளைக்கு காலையில வரேன். உனக்கு சர்ப்ரைஸ் இருக்கு" என்று கூறி கண் சிமிட்ட அவளது முகமோ அவன் கிளம்புவதால் உடனே வாடி விட்டது.
"கண்டிப்பா போகணுமா?" என்றவள் நெருங்கி அவனது கைகளை இறுக பற்றிக் கொண்டாள் சிறு குழந்தையின் தவிப்புடன் உன்னை விட மாட்டேன் என்ற எண்ணத்தில்.
அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்றவன் அவளின் ஆசைப்படியே அங்கு தங்குவதாக உறுதி கொடுத்த பின்பே அவளது முகம் மலர்ந்தது.
எல்லா விளக்குகளையும் அணைத்து கதவுகளை தாழ் போட்டவள் அறைக்குள் நுழைய உடைகளை மாற்றியவன் பால்கனிக்கு சென்று விட்டான். நிசப்தமான இரவின் ரீங்காரமுன் வீசும் தென்றல் காற்றும் வாழ்வின் மாற்றங்களும் அவனை வெகு ஆசுவாசமடைய செய்ய அங்கிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து விட்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு மனது நிம்மதியாக உணர்ந்தது. தொலைந்தது அனைத்தும் மீண்டும் கிடைத்து விட்டது போலொரு பிரம்மை அவனை ஆட்கொண்டது. வாழ்வின் ஒவ்வொரு நிலைகளையும் மனது மீட்டிக் கொண்டிருந்தது. இங்க வந்து இறுதியாக மீனலோஷினியிடம் சரணந்திடுவான் என்று அவன் கனவில் கூட நினைத்து கிடையாது. வாழ்க்கை அவனை அவ்வாறு புரட்டி தான் எடுத்திருந்தது.
அவளுடன் வாழ வேண்டும் என்று வெகு பிரயத்தனப்பட்ட வாழ்க்கை தான். ஆனால் அதற்குள் ஷாம்லி முதல் மேகா வரை என்று இடையில் எவ்வளவோ கடந்து வந்திருந்தான். நினைத்திடாத இடத்தில் நிறுத்தி இருந்தது வாழ்வு. ஷாம்லியுடன் திருமணத்திற்கு பிறகு சில காலம் அவளை தன் மனதில் ஆழப் புதைத்திருந்தான் திரும்பி வர முடியாத கடந்த காலமாகவே நினைத்து. ஆனால் மீனலோஷினியோ எல்லாவற்றையும் உடைத்து இப்பொழுது நிகழ்காலமாக அவனது கையில் இருந்தாள்.
ஊஞ்சலின் அசைவிற்கேற்ப கண்களை மூடி மனதில் ஒரு வலம் வந்து விட்டவனை, "இங்க என்ன பண்றீங்க? தூங்கலையா?" என்றவளின் குரல் கலைத்தது.
"இல்லைப்பா, காத்து நல்லா இருந்தது. அதான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம்னு" என்றவன் கைகளில் கொண்டு வந்த பால் குவளையை நீட்டினாள். உனக்கு என்றவன் குடிக்க ஆரம்பிக்க முடிக்கும் வரை பொறுமையாக அருகில் நின்று வேடிக்கை பார்த்திருந்தவள் அது ஒருவர் மட்டும் அமரக் கூடிய மூங்கில் வகை ஊஞ்சல் அவளது கைகளை விலக்கி மடியில் அமர்ந்து கொள்ள புன்னகையுடன் இறுக அணைத்துக் கொண்டது அவனது கைகள். அந்த அமைதியும் அவளும் அவனுக்கு முழு நிம்மதியை அளித்தனர். இரசித்தது மனது அந்த சூழலை பெரிதும் விரும்பி....
வாழ்வு எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கியிடாதே! குறைகளையும் இருக்கும் நிறைகளால் சமன் செய்தலே புத்திசாலி தனம்.
நிறைய பேசினாள் அவனிடம். கேட்டுக் கொண்டிருந்தான் பொறுமையாக இத்தனை வருடங்களாக தேக்கி வைத்த நேசங்களை வார்த்தைகளாக வடித்துக் கொண்டிருந்தாள் அவனது மனைவி. நேரம் விரைவாக நகர்ந்து செல்வது போல் தோன்றியது இருவருக்குமே. இறுக்கி பிடிக்க நினைத்த மனது காலத்திடம் தோற்று தான் நின்றது.
நேரத்தை கவனித்தவன், "மீனு, நேரமாகிடுச்சு. பனி விழுகுது. வா உள்ளப் போகலாம்" என்றிட அங்கிருந்து செல்ல மனமில்லை என்றாலும் தலையாட்டியவள் எழுந்து உள்ளே செல்ல அவனும் அவளின் பின்பே வந்தான். படுக்கையை நேராக விரித்தவள் ஒரு புறம் படுக்க அவனும் மறுபுறம் படுத்துத் கொண்டான் அவளை பார்த்தப்படியே. அவளும் அவனை தான் பார்த்திருந்தாள் விழிகளை விரித்து வைத்து.
"என்ன?" என்று அவன் புருவமுற்ற தலையாட்டி புன்னகைக்க, "தூங்கு" என்றான் உதட்டசைத்து. கண்களிலிருந்து கூட அவன் பிம்பம் மறைவதை மனது விரும்பிடவில்லை. மாட்டேன் என்பதாய் இருபுறமும் தலையசைக்க, "எனக்கு தூக்கம் வருது" என்றவன் கண்களை புன்னகையுடனே மூடிக் கொள்ள அவளுக்கு உறக்கம் என்பது துளியும் அண்டவில்லை. வெகு நேரமாக புரண்டு புரண்டு படுக்க விழித்து விட்டான், "என்னாச்சு மீனு?" என்றபடி. பாவமாக முகத்தை வைத்து ஏதுமில்லை என்பதாக தலையசைக்க அவளது பாவனையில் அள்ளிக் கொஞ்சிட மனது விழைந்தது. அவளின் அருகாமை மோக உணர்வுகளை அவனுள் கிளர்ந்து எழச் செய்ய அவனோ முயன்று தன்னைக் கட்டுப்படுத்தினான். அவனை மேலும் துண்டிடும் விதமாக என்ன நினைத்தாலோ திடீரென அவன் மீதேறி படுத்துக் கொண்டாள் அணைத்தப்படி....
அவனுள் உருவாக்கியிருந்த கட்டுபாடுகள் எல்லாம் அவளின் செயலால் உடைந்தெறிய அவளின் இதழை தன் வசப்படுத்தினான். காமம் என்பது காதலின் மற்றொரு பரிமாணமே! இனப்பெருக்கம் என்பது இயற்கை நியதிகளில் எல்லாருக்குமே பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒன்றே! மீனலோஷினி மட்டுமல்ல உலகமே தன் வசம் நிற்பது போல் ஒரு போரானந்தம். மெய் மட்டுமின்றி காதலில் சுழன்று தவித்த இரண்டு மனங்களும் ஒன்றாக சங்கமித்தது.
விடியல் நேற்றலிருந்த மனநிலையை விட அதிகளவு பூரிப்பை அளித்திருந்தது அவளுக்கு... அவனுக்கும் எல்லாவற்றையும் வென்று விட்டதை போன்றதொரு களிப்பு..... அவனை மட்டுமின்றி அவனது பார்வைகளும் கூட அவளை பின் தொடர அவளின் தயங்கங்களும் கூச்சங்களும் எங்காவது ஒளிந்துக் கொள்ளும் படி உந்தியது. ஆனால் இறுதியில் சரணந்த இடம் என்னவோ அவனின் மார்பு தான். அதை விட பாதுகாப்பான இடம் வேறொன்றுமில்லை என்பதை மனம் அறுதியிட்டு கூறியது.
காலையில் அவனை கண்டவுடன் மேகா புன்னகையுடன் கால்களை கட்டிக் கொள்ள இந்துமதியும் அவனை பார்த்து தலையசைத்த படி அடுப்பறை நுழைந்தார்.
காபியை போட்டிருந்த மீனு, "ரெண்டு நிமிஷம்மா" என்று கைகளை காட்டிய படி கூற, "என்ன அதிசயமா இருக்கு. எப்பயும் நான் எழுப்பினா கூட எழுந்திக்க மாட்டீயே?" என்று சந்தேகமாக வினவ, "தூக்கம் வரலைம்மா" என்று கூறி அவரை வெளியில் அனுப்பியவள் முகம் முழுவதும் புன்னகையால் நிறைந்திற்று.
அவரும் புன்னகையுடன் திரிலோகேஷிடம் பேச அமர்ந்து விட அவர்கள் இருவருக்கும் காபியை கொடுத்தவள் மேகாவிற்கு பாலை ஆற்றி கொடுத்து விட்டு தானும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
"ஆன்ட்டி, மேகா ஸ்கூல்க்கு பக்கத்து தெருவுல ஒரு வீடு சேல்ஸ்க்கு வந்துச்சு. வாங்கி இருக்கேன். மீனுவுக்கும் மேகாவுக்கும் அது தான் வசதியா இருக்கும். இன்னைக்கு நல்ல நாளா இருக்கிறதால பால் காய்ச்சிடலாம். டூ டேஸ்க்கு அப்புறம் திங்க்ஸ் ஷிப்ட் பண்ணிட்டு நம்மளும் ஷிப்ட் ஆகிடலாம்" என்று மீனுவை பார்த்தப்படியே கூற, "ரொம்ப சந்தோஷம்ப்பா. ஆயிரம் தான் நீ இங்க வந்து போனாலும் நீங்க பிரிஞ்சிருக்கிறது எனக்கு நெருடலா தான் இருத்துச்சு. ஆனா இப்ப ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என்றார் நிறைந்த மகிழச்சியுடன்.
"பட் ஒரு கன்டிஷன், நீங்களும் கண்டிப்பா எங்க கூட வரணும். இல்லைன்னா மீனு நிம்மதியா இருக்க மாட்டா. உங்களுக்கு எங்க கூட இருக்கிறது தான் சங்கடமா இருக்கு. இப்ப வாங்கி இருக்க வீடு ரெண்டு ப்ளோர் இருக்கு. நீங்க கீழ இருங்க. நாங்க மேல இருக்கோம்" என்றவன் மீனுவை பார்க்க, "ம்மா... ஆமாம்மா, அப்பா இருந்தா கூட பரவாயில்லை. உங்க ஹெல்த் கண்டினை நினைச்சே எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் அதான் தனியே வீடு இருக்கு சொல்றாரு இல்லை. வந்திடுங்களேன் எங்களோட" என்று கெஞ்ச ஆரம்பித்தாள் மகள்.
வெகு நேரத்திற்கு பிறகே இருவருக்காக சம்மதம் கொடுத்தார். மேகாவை விட்டு இருக்க அவருக்கு விருப்பமில்லை. இணைந்திருந்த நாட்கள் குறைவென்றாலும்
அவளுடைய சுட்டி தனத்தினால் அவரை கவர்ந்திழுத்திருந்தாள். அவருக்கும் தனிமை இப்பொழுதெல்லாம் சற்று கசந்திருந்தது.
தொடரும்.....