• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 30

Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
அத்தியாயம் - 30


அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அறையில் இருக்க அவனுக்கு பிடிக்கவில்லை. கேள்வியின் வீரித்தில் உரைப்பவரை விட எதிராளியே அதிகம் தாக்கப்படுகின்றனர்.

வலித்தது! அவ்வளவு வலியையும் முகத்தில் பிரதிபலித்தான். பதிலுக்கு அவளிடம் ஒரு வார்த்தை பேசிட விழையாது வெளியேறி விட்டான். தோன்றியது இக்கணங்களில் என்ன வாழ்க்கை என்றே! இன்னும் என்னவெல்லாம் சந்திக்க நேரிட போகிறது என்று எண்ணும் பொழுது அவனது உடல்களும் நடுங்க தான் ஆரம்பித்தது. எப்பொழுதும் இல்லாது முதல் முறையாக எதிர்காலம் என்பதை குறித்த பயம் அவனுள் உருவாகி அச்சுறுத்தத் தொடங்கியது. வாழ்க்கை என்றுமே சகித்து வாழவே இயலாது என்ற உண்மை அவனுக்கு உரைத்தது. தன் நடந்து கொண்டது தப்போ என்றெல்லாம் அவனது எண்ணங்கள் தறிக்கெட்டு ஓட தன் சுய நினைவிழந்து போனது அக்காதலனுக்கு.



அதுவும் மீனுவிடமிருந்து இந்த கேள்விகளை சூழலை சத்தியமா அவனால் நினைக்க கூட முடியவில்லை. காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான் அந்த இரவு நேரத்தில். அவன் வெளியேறுவது எல்லாம் தெரிகிறது. ஆனால் அவளுக்கோ கால்கள் நகர மறுத்த அடம்பிடிக்க படுக்கையில் அமர்ந்து விட்டாள். கேட்கும் கணங்களில் சிறியதாக தோன்றிய வார்த்தைகளோ அவனது எதிர்வினையில் பிரமாண்டமாய் விரிந்து நின்றது. எவ்வளவு பெரிய வார்த்தைகளை சிதற செய்திருக்கிறாள் என்று உணரும் பொழுதில் எல்லாமே கடந்திருந்தது.



முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். சத்தியமாக அவனை காயப்படுத்தி வேடிக்கை பார்க்கும் அளவிற்கு அவள் மனம் இருந்திட வில்லை. அவளின் அழுத்தங்கள் இவ்வாறு பிரபலித்துக் கொண்டிருக்கிறாள். சில சமயங்களில் நடந்து முடிந்திட்ட பின்பே செய்திருக்கவே கூடாது என்று மனது அடித்துக் கொள்ளும். ஆம் அப்படி தான் உணர்ந்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக மிகவும் தாழ்ந்து விட்டது போன்றதொரு உணர்வு. பிடிக்கவில்லை எதையுமே! எவ்வளவு கட்டுப்படுத்தியும் சில சமயங்களில் முழுவதுமாக உடைத்து விடுகிறாள்.



அவளுள் தோன்றிய குற்றவுணர்ச்சியையும் தவிப்பையும் வார்த்தைகளால் வடித்திட இயலாது. பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். அவனும் அந்த சூழலும் அவளது கேள்வியும் நடவடிக்கைகள் மட்டுமே இரவு முழுவதுமே அவளது நினைவில் ஓடிக் கொண்டிருந்த விஷயங்கள். காரை ஓட்டிச் சென்றவன் நடுரோட்டில் நிறுத்தி சாலையின் ஓரத்தில் அமர்ந்து விட்டான்.


இன்னும் எத்தனை தூரம் ஓடப் போகிறேன் என்ற கேள்வி அவனுள் உதிக்க முதல் முறையாக திருமணம் செய்தது தவறோ என்ற எண்ணம் தாக்கியது. தோன்றியது தவறு தான் ஆனால் அவள் தானே அதற்கு காரண காரியம். இதற்கு தானே மறுத்து ஓடினேன் இன்னும் என்னை என்ன செய்ய காத்திருக்கிறாய் என்று அவளிடம் கேட்க விழைந்தது மனது.


ஷாம்லியுடனான வாழ்வை அவள் விமர்சித்தது துளியளவேணும் பிடிக்கவே இல்லை. ஒரு இக்கட்டில் தான் அவளை கரம் பிடித்தான். அதற்காக அவளை விலக்கி வைத்திடும் அளவிற்கு அவனுள் இருக்கும் மனிதம் இன்னும் இறந்து விடவில்லையே! அவனை பேசுவதற்கு கண்டிப்பாக அவளுக்கு எல்லா உரியையும் இருக்கிறது. ஆனால் ஷாம்லியுடனான வாழ்க்கையை குறித்தான கேள்வி எழுப்புவது என்பது அநாகரிகம் தானே! எல்லா சூழலிலும் அவன் தன்னிலை மாறாமல் தானே கடந்து கொண்டிருக்கிறான். அன்று ஷாம்லி முதல் இன்று மீனலோஷினி வரை! அவன் சென்று நிற்கவில்லையே அவளிடம். அவள் தானே வந்து நுழைந்தாள் வலுக்கட்டாயமாக அவனது வாழ்வில். அவளை ஏற்க நினைத்தது தவறா?



நியாயங்களின் வரையறை வித்தியாசம் தானே! நீரை போன்றே இருப்பவரின் மனதிற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறிக் கொண்டிருக்கும்.

இதற்கு அஞ்சியே அவளை வேண்டாம் என்று துரத்தினான். ஆனால் அவன் நடக்கவே கூடாது என்ற நினைத்திருந்த நிலையில் நிறுத்தி விட்டாளே! தெரிந்தோ தெரியாமலோ என்றாலும் காயம் காயம் தான். அவன் ஒரு விதத்தில் அவளை ரணப்படுத்தி இருந்தாலும் அவளும் திருப்பி அதையே தான் செய்திருக்கிறாள்.


அந்த கேள்வியின் தாக்கம் குறையவே இரண்டு நாள் பிடித்தது அவனுக்கு. வீட்டிற்கு செல்ல வில்லை. அலுவலகத்தில் தான் இரண்டு நாள் வாசம்! இரவு பகலெல்லாம் ஒன்றானது இருவருக்குமே.


அவளுக்கும் உணவு உறக்கம் என்பது தூர விலகி போயிற்று. அவன் வருகைக்காக ஏங்கி வாயிலை பார்க்க ஆரம்பித்தது விழிகள் இரண்டு நாட்களாக. அவனுக்கு அழைத்திடும் அளவிற்கு தைரியம் துளியளவேணும் இல்லவே இல்லை அவளிடம்.


பால் வரும் பொழுது கதவை திறந்து வாங்கினாள். வீட்டை சுத்தம் செய்பவர் வரும் சமயம் கதவை திறந்து விடுபவள் மீண்டும் அவர் சென்ற பின் அடைத்துக் கொள்வாள். நேற்று மாலை இந்துமதி, செல்வி என்று வரிசையாக அவளுக்கு அழைக்க அழைப்பை ஏற்கும் எண்ணமில்லை அக்காரிகைக்கு. அவனுமே அதே நிலை தான். சிதைத்திருந்தாள் இருவரின் வாழ்வையும் நொடிப் பொழுதில். கடந்த இரண்டு நாட்களாக யாருமில்லாத தனித்தீவில் இருவரும் எதிரெதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.



உண்ணாமலே இருப்பதால் உடல் பலமனைத்தையும் இழந்தது. ஆனால் அவனை கண்டிடாமல் நீரை தவிர வேறு ஆகாரத்தை உள்ளே அனுப்பிடும் எண்ணமில்லை அவளுக்கு. அவனை வார்த்தையால் வதம் செய்திட்டவளுக்கு சமாதானம் செய்திடும் வழி புரியவில்லை.


மூன்றாம் நாள் உணவின்றி என்பதை உடல் ஏற்கவில்லை. ஷோபாவிலே அமர்ந்த படியே மயங்கினாள். மொபைலை இறுக்கி பிடித்தப்படி. அவனது எண்களை தேடி எடுத்தாள் அழித்தாள். அவன் புகைப்படத்திடம் மன்னிப்பு யாசித்தாள். நேரிடையாக கேட்கும் அளவிற்கு இன்னும் மனது விரிவடைந்திடவில்லையே. ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் வாதங்கள்! நாம் தவறு என்றாலும் அவ்வளவு சுலபத்தில் இறங்கி சென்றிடாது மனது. முதலில் நமது செயலுக்கான நியாங்களையே தேடி எடுத்து முன் வைக்கும்.

வேலைக்கு வந்தவர் கண்ணாடி சன்னல்களின் வழியே இவள் நிலையை கண்டு பதறி திரிலோகேஷிற்கு அழைத்து விட்டார். விஷயத்தை கேட்ட நொடியே கிளம்பி விட்டான் மருத்துவரை உடன் அழைத்துக் கொண்டு.

தன்னிடமிருந்த மற்றொரு சாவியால் கதவை திறந்து உள்ளே நுழைய சுயநினைவிழந்து கிடந்தாள் வாடி போய். மனதை பிசைந்தது அவளின் நிலை காதல் கணவனுக்கு.

"தூக்கி உள்ள படுக்க வைங்க லோகேஷ், சாப்பிடாம இருந்ததால வீக்காகி மயங்கிட்டாங்க. ட்ரிப்ஸ் போடுறேன். கொஞ்ச நேரத்தில எழுந்திடுவாங்க. அப்புறம் சாப்பாடு கொடுங்க சரியாகிடும். வேற ப்ராப்ளம் இல்லை" என்று அவளை பரிசோதித்து மருத்துவர் கூறினார். அதன் பிறகே அவனுக்கு ஆசுவாசமானது.

வேகமாக அவளருகில் தூக்குவதற்கு சென்றான். ஆனால் கைகளோ அந்தரத்தில் நின்று விட்டது. அவளது கேள்வி மீண்டும் மீண்டும் ஒலித்தது. மனது கனத்தது. ஆனால் மேகா மட்டுமே அவன் கண் முன் தோன்றினாள். அவள் தவறு செய்தால் திருத்ததானே செய்வான். தண்டனை கொடுக்க மனது விரும்பாதே. பெருமூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்தினான் முதலில். பின் தூக்கி உள்ளே படுக்கையறையில் படுக்க வைக்க மருத்துவர் சிகிச்சை அளித்து சென்று விட்டார்.


இரண்டு மணி நேரத்திற்கு பின்பே கண் விழித்தாள். நகரவே இல்லை அங்கேயே அமர்ந்திருந்தான் அவளருகில் அல்லாது சற்று தள்ளி. ஆம் அவள் தானே தள்ளி நிறுத்தி இருந்தாள்.

மொபைலில் இருந்தவன் அவள் எழுந்த அமர்ந்த அரவத்தில் எழுந்து கொண்டான். அவளுக்கோ பார்வை முழுவதும் அவனிடத்தில் நிலைத்திருக்க அவளுக்காக வாங்கி வைத்திருந்த உணவை கொண்டு வந்து நீட்டினான். வாங்க கைகள் எழுந்திடவில்லை மீனலோஷினிக்கு. அவனையே பார்த்திருந்தாள். அருகில் வைத்து விட்டு வார்த்தைகளன்றி வெளியில் சென்று விட்டான். உடைபெடுத்தது கண்ணீர் அவனின் செயலில். அவளின் செயலுக்கான அவனின் பிரதிபலிப்பு நியாயம் என்று மூளை கூறினாலும் மனது அதை ஏற்கும் நிலையில் இல்லை.

அப்படியே உணவை வெறித்தப் படியே அமர்ந்திருந்தாள். அரைமணி நேரம் வெளியில் அமர்ந்திருந்தவன் சாப்பிட்டு விட்டாளா என்று பார்க்க உள்ளே நுழைய, அவளும் உணவும் அதே நிலையிலே அவன் கண்களுக்கு காட்சி அளிக்க, சலிப்பாக தலையை இருபுறமும் ஆட்டிக் கொண்டான்.

கைக்கழுவி வந்தவன் உணவை எடுத்து அவளுக்கு ஊட்டுவதற்காக நீட்ட இன்னும் அவளுடைய பித்து தெளியவில்லை. மனதிடம் போராடிக் கொண்டிருந்தாள் சுற்றம் மறந்த நிலையில்.



"மீனுனு..." என்ற அழுத்தமான அழைப்பிற்கு பிறகே சுற்றம் உரைத்தது மூளைக்கு. பார்த்தாள் நிமிர்ந்து அவனை. அவனது முகமோ இறுகி இருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று உணரக் கூட முடியவில்லை அவளால்.


"சாப்பிடு" என்ற படி ஊட்ட வாங்கிக் கொண்டாள் அமைதியாக. பேச்சுகளன்றி மௌனம் ஆட்சி செய்தது. சில நேரங்களில் இதத்தை அளித்திடும் மௌனமே, பல நேரங்களில் வதைக்கவும் செய்திடும்.


சாப்பிடாமல் இருந்ததன் விளைவாக பாதிக்கு மேல் உள்ளே இறங்க மறுத்தது. "போதும்" என்றாள் சன்னமான குரலில். அவளருகில் தான் இருந்தான். முதலில் இருந்த ஒரு பிணைப்பு என்பது அறுந்திருந்தது. அவளால் அவனை உணர முடியவில்லை. அவனது செயல்களில் விலகல் தன்மை அதீதமாக வெளிப்பட்டது. அது பேதையை தாக்கி சிதைத்தது. அதற்கு காரணம் தான் தான் என்பது மறந்து போக இம்முறையும் அவனையே மனது சாடிக் கொண்டிருந்தது.


சிறிதளவு உணவு இறங்கிய பின்பே முகத்தில் தெளிச்சி தெரிந்தது. எழுந்து வந்து வெளியில் அமர்ந்தாள். குளியலறை புகுந்து கொண்டான் நீரை மேலே ஊற்ற சரியாக தூங்காததன் விளைவாக கண்கள் எல்லாம் எரிந்தது. குளித்து வந்தவன் அப்படியே படுத்து விட்டான். உணவு இன்னும் அவனுள் சென்றிடவில்லை. அதை அவன் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. அவளது வார்த்தைகளே பெரிதாக விரிந்து நின்று அவனது மூளையை ஆக்கிரமித்திருக்க அது ஏறக்குறைய செயலிழந்து தான் போனது. உறங்கினான் வெகுநேரம். அவளும் அழுதபடியே ஷோபாவில் உறங்கி இருந்தாள்.


மாலையில் தான் இருவருக்குமே உறக்கம் கலைந்தது. இப்பொழுது தான் அவன் மூளைக்கு ஓய்வளித்து உறங்கி இருக்க சிந்தனைகள் வலுத்தது. இதை இப்படியே விட்டு விடும் எண்ணம் அவனுக்கில்லை. இதே நிகழ்வு மீண்டும் தன் வாழ்வில் நடந்து விடவே கூடாது என்பதில் அவன் தீர்மானமாக இருந்தான்.

பிரச்சனைகளை ஒத்திப் போடுவதை விட அன்றே பேசி தீர்த்து விடுவது தானே புத்திசாலி தனம்! ஆம், இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவிற்கு கொண்டு வர அவனது மனது விரும்பியது. நிறைய நிறைய சிந்தித்தான் எல்லா வகையிலும்? கடைசியில் ஒரு முடிவுடன் வெளியில் எழுந்து வந்தான். பேசாது விட்டாலும் இது என்றுமே தீராது என்று அவனுக்கு புரிந்தது.

அவளெதிரில் வந்து அமர்ந்தான். காலடி ஓசையில் கண்களை திறந்தாள். அவளும் எப்பொழுதோ விழித்திருந்தாள். ஆனால் நகர விருப்பமில்லை.


"மீனு" என்றழைக்க நிமிர்ந்து பார்த்தாள் அவனை. "கொஞ்சம் பேசணும்" என்றான். அவனது வார்த்தைகளை கேட்பதற்கு தயாராய் அமர்ந்து சம்மதமாக தலையசைத்தாள்.

என்ன கூறப் போகிறான் என்று மனது தவித்தது. நடந்து விட்டால் நொடியில் முடிந்து விடும். ஆனால் அதற்கு முன் என்ன நிகழுமோ என்ற மனநிலையிலான தவிப்பு மரணித்து மீள்வதற்கு சமம் தான். அவளது கண்களில் தெரிந்த அத்தனை கலக்கம், அவன் கூற வருவதை தடுக்க நினைத்தது. இம்முறை எதையும் ஆராய்ந்திடும் எண்ணம் அவனுக்கில்லை. சில கசந்த முடிவுகளிலிருந்தே நல்ல தொடக்கம் உருவாகும். முடித்து முற்றுப்பு
ள்ளி வைக்க விருப்பினான். அவர்களின் உறவிற்கா...? இல்லை இந்த ஆடு புலி ஆட்டத்திற்கா...?
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Meenu ippo enn feel pandra ama ippo lokesh solla pora mudivu 2 payrukum oru decision eduga crt tha irukum Kandipa Avan intha uravu ku mutru pulli vaika mataan nambuvom
 
Top