• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 3

Messages
31
Reaction score
13
Points
8
தலைக்குக் கை கொடுத்து மேஜையில் ஊன்றி பால்கனியில் இருந்தபடி கிளையில் இருந்து தன் குழந்தைக்கு உணவூட்டும் காகத்தினைப் பார்த்திருந்தாள் சஹானா.

மனதில் பெரும் வலி சூழ்ந்திருந்தது . மனத்தில் மட்டுமல்ல முகத்திலும் மருந்திற்கும் சிரிப்பில்லை... இதயத்தைக் அரிவாளால் கதிரை அறுப்பதுபோல வலித்தது. ஆனாலும் நடந்ததை ஏற்க விருப்பமில்லை...

அதற்காக சமர் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கின்றானா என்று கேட்டால் அவளை விட வலியில் துடிப்பதே அவன் தான்... சனாவைப் பொறுத்தவரை தன்னவன் இப்படி செய்தானோ என்ற குழப்புமும் இவனா... அவ்வளவு தானா எல்லாம் என்ற வலியும் தான்...

ஆனால் சமருக்கு சஹானா சொன்னவை எல்லாம் ஒருபொருட்டே அல்ல... அவனது வலி எல்லாம் தான் முதல் குழந்தையாய் பாவித்த அஹானா வாழ்வைக் காப்பாற்ற கையாலாகாதவனாக இருக்கின்றேனே என்ற எண்ணம் தான்... பெறாத மகளுக்காக தன் வாழ்வை இழந்து நிற்கின்றனர் இருவரும்...

உயிர் வேதனை தரும் வார்த்தையை
உறவே நீ பேசுவதோ
குயில் வீட்டையே குடை சாய்த்திட
புயல் காற்று வீசுவதோ
விதியின் ஆட்டம் ஓயாதே
எதுவும் விளையாதே வடாதே

செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை ஏத்திவிடு காலாலே ...

என்ற வரிகள் பக்கத்து வீட்டு ஹோம்தியேட்டரில் ஒலிக்க, அந்த வாரத்தைகள் தனது வாழ்வில் நிஜமானதை எண்ணியபடி அதே காகம் தன் குழந்தைக்கு உணவூட்டும் நிகழ்வை பார்த்திருந்தான் சமர்ஜித்...


இருவர் நினைவும் இரு வாரம் முன்பு நிகழ்ந்தவற்றில் நிலைத்தது...

****

அன்று நடந்தது...

" ஓகே மிஸ். அரசி
.. இப்பவே டைம் ஆகிட்டு... நீங்க அவங்களுக்கு பக்கத்துல இருந்து சாப்பாடு வாங்கி குடுங்க... நான் மீட்டிங் அ முடிச்சுட்டு வர்றேன் " என்றவள், கடகடவென்று மேலே அறைக்குள் நுழைந்தாள். அரசி மகாலட்சுமிக்கு தயிர்சாதம் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு அருகிலேயே அமர்ந்து தனது மடிக்கணினியில் S.P அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் கம்ப்ளைன்ட் அனுப்பி வைக்க, மகாலட்சுமியும் சாப்பாட்டை உண்டு ஏப்பம் விட்டாள்.

சஹானாவும் கீழே இறங்கி வர, மூவரும் காரில் ஏறி பயணத்தைத் தொடங்கினர். மிதமாய்ப் போய்க் கொண்டிருந்த பயணம் ,ஒரு நொடியில் மின்னல் வேகத்தில் ஒரு பழைய குடோனில் சென்று நிற்க, மகா லட்சுமி தலையை பிடித்தபடி வந்து நின்றாள்.

சஹானாவும் அரசியும் வண்டியிலுருந்து இறங்கி பிரியாணி பொட்டலத்தை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தனர். உண்டு முடித்தவர்கள் கையை கழுவி விட்டு வந்து அவளின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க, மகாலட்சுமி என்பவள் திருதிருவென முழித்து பின்னர், தனது இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து சஹானாவைக் கொல்ல முயன்றாள். மயக்கத்தின் பிடியில் இருந்து வெளிவராத நிலையில் அவளால் சரியாக தாக்க இயலாமல் போக, சஹானாவும் அரசியும் சேர்ந்து அவளை அடித்து கையை கயிற்றால் கட்டி வைக்க, சமர் வந்து சேர்ந்தான்.


" வேலை முடிஞ்சுதா... ஹாய் பச்சரிசி... இதுதான் சாக்கு னு பிரியாணி சாப்டிங்களா " என்று கேட்டபடி நடந்து வந்தான்...

" போயா யோவ்... எப்ப பாரு பச்சரிசி னு " என்று அரிசி கடுப்பாக , " அப்ப சம்பா அரிசி " என்று சமர் தொடங்க, மாற்றி மாற்றி வாக்குவாதம் கூடியது...

" ஆச்சே நிறுத்துங்க... அந்த பொண்ணோட மாப்பிள்ளை என்ன ஆனாள் . .. " என்று சஹானா கேள்வியெழுப்பினாள்.

" ஹம்ம்.. சம்பவம் நடந்தது உண்மை தான்... அந்த அம்மா பெயரும் மகா லட்சுமி தான்... குழந்தை இறக்கல... டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு... உன்ன போட்டு தள்ள எடுத்த முயற்சி இது... இவ பெயரும் மகா லட்சுமிதான்... அவங்க புருஷன வெளிய எடுத்தாச்சு .... ஆனா இதுக்கு ஒரு ஸ்டெப் எடுத்தே ஆகணும்... இல்லனா குழந்தைங்க னு மட்டும் இல்ல ... வயசானவங்க னு வயசு வித்தியாசம் இல்லாம நாய்ங்க கிட்ட சிக்கிடுவோம்... ஒரு முறை இரத்தம் கண்டு போனால் அப்புறம் நாய்கள் கடிக்குறது வாடிக்கையா வச்சுருப்பாங்க... " என்று தனது எண்ணத்தை முன்வைத்தான்.

" ஹம்ம்.... இன்னைக்கே ஆடர் போட்டுடலாம்... " என்றிட, நேரமாவதை உணர்ந்து அவரவர் வண்டியில் கிளம்பினர்.

அன்றைக்கே விலங்கியல் வல்லுநர்களோட் கலந்துரையாடல் நடந்தது . முடிவு இரண்டு நாளில் வெளியிடலாம் ' என்ற அறிவிப்போடு அன்றைய தினம் முடிவுற்றது.

வேலையை முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தாள் சஹானா... ஜார்ஜ் டவுனில் உள்ள அலுவலகத்திலிருந்து வண்டலூர் வந்து சேர நேரம் ஆகாதா என்ன... எத்தனை முயற்சி செய்தும் நேரமாகி விட, அஹானாவை நினைத்து பயந்தபடி வந்தாள் சஹானா... வீட்டினுள் நுழைய முகத்தைத் தூக்கி வைத்துவிட்டு அமர்ந்திருந்தாள்.

எத்தனை தான் கவினிடம் கிடைக்கும் கொஞ்சல்கள், குழைவுகள் மற்றும் காதல் மொழிகள் இருப்பினும் சஹானா பேசும் சிறு வார்த்தையும் அவளை தேற்றியது... கவின் பேசும் பல வார்த்தை சஹானாவின் இரு வார்த்தைக்கு ஈடாகவில்லை... பாலில் ஊறிய பணியாரத்திற்கும் துவர்க்கும் நெல்லிக்காய்க்கும் வித்தியாசம் இருக்காதா என்ன... எத்தனை தான் உணவு தேட வீட்டை விட்டு பறவையானது சென்றாலுமே சூரியன் மறைகையில் வீடு வந்து தானே ஆக வேண்டும்...

வந்ததும் சண்டை தொடங்கியது.
" நீ எதுக்கு என்ன இப்படி படுத்துற க்கா... பழிக்கு பழியா... கோபம் னா நேரா காட்டுக்கா... இப்படி என்ன ஏங்க வைக்காத... சத்தியமா நமக்குள்ள எப்ப சமர் மாமா வந்தாரோ அப்பல இருந்து நீ என்ன விட்டு விலகிட்ட... எனக்கு நீ வேணும் க்கா... ப்ளீஸ்... ஒருவேளை உனக்கு குழந்தை இருந்திருந்தா அந்த குழந்தை கூடயாவது டைம் ஸ்பெண்ட் பண்ண இருந்துப்ப... அம்மா அப்பா இருந்திருந்தா இது நடந்திருக்காதே னு ஃபீல் பண்ணுறேன்... ஐ கான்ட் க்கா... மத்தவங்க அன்ப விட, உன்ன மனசு தேடுது..." என்று கத்தியவள் மடிந்து அழ ஆரம்பித்தாள்....

சனாவிற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை ... உயிர் போய் உயிர் வந்திருக்கிறாள். ஆனால் அது சிறியவளின் பார்வைக்குத் தெரியாது... தாயைக் காணாத சேயாகவே அவள் அழுகிறாள்... பல நிமிட போராட்டத்திற்குப் பின்னர் சமாதானம் அடைந்தாள் அஹானா..

இது முடிந்து ஒரு மணிநேரம் முடிந்து மெல்ல வந்தான் சமர். அவர்களைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்தவாறு அறையில் நுழைந்தான். சமரும் நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். மனம் கொஞ்சமாய் வலித்தது. அனாவிற்காக தான் குழந்தையைப் பற்றித் திட்டமிடவில்லை. அனாவின் மனதில் தவறான விதை விளைய கூடாதென பார்த்து பார்த்து செயல்பட்டான்.

இருவுடல் ஒன்றானபோதும் ஓருயிரை உருவாக்க முனையவில்லை... அவனும் உணர்வுள்ள மனிதன் தானே... அனாவின் வார்த்தைகள் வலிக்காமல் இருக்குமா என்ன... கேட்டுக் கொண்டிருந்தவன் அப்படியே நழுவி வெளியே சென்று விட்டு ஒரு மணிநேரம் கழித்து வந்தான்.


இரவுநேரம் அனா உறங்கிய பின்னர் சனாவும் சமரும் சிறிது நேரம் கதையளப்பது வழக்கம். அதற்காக சமர் காத்திருக்க, சனா வந்தது போல அறிகுறி இல்லை... எழுந்து சனாவின் தனியறையில் பார்க்க, அங்கில்லை ; சமையலறையில் பார்க்க, அனாவுடன் கதையளந்தபடி இருந்தாள். தாய் மகளுக்கு உரித்தான கண்டிப்பும் கொஞ்சலும் போய்க் கொண்டிருந்தன. அதனை ரசித்தவன் தனதறையில் வந்து தூங்க ஆரம்பித்தான்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து பட்டும் படாமலும் பேசியும் பேசாமலும் சென்றது. அனாவும் சனாவும் ஒன்றித்திருக்க, சமருக்கு தனித்தீவில் சிக்கியது போன்ற மனநிலை உருவானது. ஆனாலும் வேலைகள் வந்து குமிய, கவனத்தைத் திசை திருப்பினான்.

அன்றைய தினம் மாலை நேரமே வீட்டிற்கு வந்தவன், ஏழு மணிக்கு ஸ்டேஷனுக்குக் கிழம்ப, சஹானா அப்பொழுதே வீடு வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பாத்துக்கொண்டனரே தவிர, மேற்கொண்டு பேசிக்கொள்ளவில்லை. அவன் கிளம்பி செல்ல அவளும் அஹானாவோடு நேரம் செலவிட்டாள்.

மற்றைய நாள் காலை வேளை சமர் வரும்முன்னே அவள் அலுவலகம் கிளம்ப, வீட்டுக்கு வந்த சமருக்கு உடம்பு அதிக களைப்பாய் இருந்தது. அஹானாவிடம் , " குட்டிமா , ஒரு காஃபி போட்டு குடுடா.. " என்று கேட்க, வெடுக்கென பதில் தந்தாள் .

" நான் உங்க வேலைக்காரியும் இல்ல வீட்டுக்காரியும் இல்ல.. என்ன உரிமை ல வேலை கேக்குறீங்க ... " என்று அஹானா பதில் தர, சமருக்கு விழிகள் கலங்கியது. குழந்தையாய் அவன் பாவிக்க, அவளது வார்த்தை வலியை ஊட்டியது.

அவளிற்கு பதில் அளிக்காமல் எழுந்து தனது பைக்கில் கிளம்பினான். அஹானா தான் செய்த காரியத்தின் வீரியம் உணராமல் கவினுடன் கிளம்பி விட்டாள். அன்றைய தினம் சமர் உடல் தளர்வில் ஒரு காஃபி கடையில் அமர்ந்து இருக்க , இரத்த அழுத்தம் கூடி மயங்கி சரிந்தான். விஷயம் அறிந்து வந்த சஹானாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. ஒருவகையில் குற்ற உணர்வு அவளைக் கொல்லாமல் கொன்றது. விழியில் வழியும் கண்ணீரைத் துடைக்க மனமில்லாமல் அலுவலகத்தில் விடுப்பு கூறி விட்டு சமரச அழைத்துக் கொண்டு வீடு வந்தாள் .

மாலை நேரம் ஓரளவு உடல் தேறியிருக்க சமர் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து எறும்புகள் சாரை சாரையாய் ஊர்வதை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணிக்கு வீடு வர வேண்டிய அஹானா வீட்டில் சமரும் சஹானாவும் இருப்பது அறியாமல், கவினுடன் ஊரை சுற்றி விட்டு ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தாள்.

அன்றைய தினமே வீட்டிற்குள் புது பிரச்சனையை உருவாக்கி சமரையும் சஹானாவையும் தனது வார்த்தை எனும் ஈட்டியினால் பிரித்து வைத்தாள் அஹானா . பின்வரும் விளைவு அறியாமல் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.


தொடரும் ...


கதையோட போக்கு எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க மக்களே... தவறுகள் இருப்பின் மறக்காம சொல்லுங்க...

- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அருமை அருமை டா ♥️♥️♥️♥️♥️♥️♥️கதையின் நகர்வு அருமை, கொஞ்சம் சஸ்பென்ஷா இருக்கு எப்போ அஹானாவுக்கு என்ன நடந்ததுன்னு 👍👍👍👍
 
Top