- Messages
- 997
- Reaction score
- 2,811
- Points
- 93
அத்தியாயம் - 28
உள்ளே நுழைந்தவள் அப்படியே கதவில் சாய்ந்தபடியே அமர்ந்து காலில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவனுடைய முகத்தை கூட பார்க்க பிடிக்கவில்லை. அவனது அன்பிற்கு முன் துரோகமும் தன்னை ஏமாற்றிய வஞ்சித்து விட்டதொரு பிம்பமுமே நிழலாடுகிறது. இவனை தவிர வேறு யாரையும் தன் வாழ்வில் மனதளவில் பொருத்தி பார்த்திட கூட துளியளவேணும் விருப்பமில்லை. அதன் பொருட்டே அவனுடைய வாழ்வில் வலுக்கட்டாயமாக தாயிற்காக நுழைந்து விட்டாள்.
ஆனால் அது மாபெரும் தவறு என்று மனது ஓலமிடுகிறது இக்கணங்களில். தன்னால் ஏற்க முடியாத செயலை யாருக்காகவும் எதற்காகவும் செய்திருக்க கூடாது என்று அவளது சுயமே அவளிடம் கேள்வி எழுப்புகிறது. அவன் மட்டுமல்ல நீயும் தானே உனது தாயிற்காக எனக்கு துரோகம் செய்தாய்! என்ற கேள்வியை முன் வைக்க அவளுக்கு தன்னை தானே மன்னிக்க முடியாதபடி ஒரு கழிவிரக்கம் தோன்றுகிறது.
அழுதாள் அதிகமாகவே. சில கணங்கள் வாழ்வில் வந்துவிடவே கூடதென்று மனது வரையறுத்து வைத்திருக்கும். ஆனால் விதி அந்த வரையறைகளை தகர்த்து வேண்டாம் என்ற நிலையிலே நிறுத்தி அழகு பார்க்கும். இப்பொழுது மீனலோஷினியும் அங்கு தான் நின்றிருக்கிறாள். காதலைப் போன்றதொரு அற்புதமும் இல்லை. அதே சமயம் நம்மை உயிருடன் கூரிடும் ஆயுதமும் இல்லை இல்லை தான் உலகில்!
அவனும் அதே நிலையில் தலையை தாங்கியபடி வெளியில் அமர்ந்திருந்தான். அவனுக்கும் சத்தமிட்டு அழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால் தன்னை முயன்று கட்டுப்படுத்துகிறான். ஆண்களால் எளிதில் கடக்கும் சில விஷயங்களை பெண்களால் கடக்க இயலாது. வெகுவாக திண்டாடிடுவார்கள். இயல்பிலே அவர்களிடமிருக்கும் மென்மை அப்படி தான்.
கண்களுக்கு தெரியாத தூரத்தில் அவள் நன்றாக வாழ்ந்திருப்பாள் என்ற எண்ணமே இத்தனை நாட்கள் அவனை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இல்லை அவள் உன்னை விட அதிகமாகவே துடித்திருந்தாள் என்ற நிதர்சனம் அவனால் ஏற்க முடியவில்லை. தன் கண் முன் அவளது கண்ணீர் உண்மையிலே நரகத்திற்கு அழைத்து சென்று வருகிறது. தன்னால் எதுவுமே செய்திட முடியவில்லையே என்ற ஆதங்கம் சரமாய் மாறி வெடிக்க தயாராகிறது.
"டாடி" என்றபடி மகள் கதவை தட்டிய நொடி மீண்டு விட்டான். சுதாரித்து முகம் கழுவி கதவை திறக்க, "பாட்டி உங்களையும் மம்மியையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றாள் மழலை மொழியிலே.
"ம்ம்... போகலாம். மம்மி உள்ள இருக்காங்க. கூட்டிட்டு வா" என்று தன்னால் செய்ய இயலாத பொறுப்பை மகளிடம் ஒப்படைத்து நகர்ந்து விட்டான்.
கதவை தட்டினாள், "ம்மா... வாங்க" என்று உரக்க. எழுந்து முகம் கழுவி வெளியேறி வந்தவள் மகளை தூக்கிக் கொஞ்சிய படி ஹாலில் வந்து அமர்ந்தாள். அவனது பார்வை முழுவதும் அவளையே சுற்றியது. ஆனால் அவளோ அவனை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை.
"சாப்பிட வாங்க" என்று செல்வி அழைத்துச் சென்றார். மீனுவிற்கு உள்ளே இறங்க மறுத்தது. "என்னம்மா, சாப்பாடு நல்லா இல்லையா?" என்றார் அவளின் தலையை வருடியபடி.
"இல்லைம்மா, நல்லா இருக்கு" என்று பெயருக்கு உண்டு எழுந்து வந்து அமர்ந்து கொண்டாள்.
"மாப்பிள்ளை, வாங்க வெளியில போய்ட்டு வரலாம். எவ்வளவு நேரம் உள்ளே அடைஞ்சு கிடைப்பீங்க" என்று குமார் திரிலோகேஷை வெளியில் அழைத்துச் சென்றார்.
பெண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து கொண்டனர். செல்வி பேசினால் இரண்டு வார்த்தை மகளை பற்றியதாக இருந்தது. அவரது மகளாக பார்க்கும் பொழுது மீனுவிற்குமே மேகாவின் தாயை பிடித்தது. ஆனால் திரிலோகேஷின் மனைவி என்னும் பொழுது அந்த வார்த்தைகள் கசந்து தான் உள்ளே இறங்கியது.
மருமகனை பற்றி அவ்வளவு பெருமையாக பேசினார். தெரிந்த விஷயம் தான் ஆனால் எழுந்து செல்ல முடியாது என்பதால் அமர்ந்திருந்தாள். புகைப்படத்தை பார்த்து தானே அழுதாய் என்று ஆல்பத்தையே அந்த தாய் கொண்டு வந்து காட்டினார். இந்துமதி மகளின் முகத்தை ஆராய எந்தவித மாறுதலும் இல்லை. ஆம், இறுக்கி கொண்டாள் தன்னுள்.
மகளை நினைத்து அழுதார். வருத்தமாக தான் இருந்தது. "ஒரே பொண்ணு, பார்த்து பார்த்து வளர்த்தோம். இப்படி பாதியிலே விட்டு போய்ட்டா. இந்த புள்ளை முகத்தை கூட சரியாவே பார்க்கலை" என்றவரின் கைகள் பேத்தியை அணைத்துக் கொண்டது.
நெகிழ்ச்சியாக தான் இருந்தது, "விடுங்கம்மா, விதியை நம்மாளால் எதுவும் பண்ண முடியாது" என்று இந்துமதி அவருக்கு ஆறுதல் கூறினார். அந்த ஆல்பத்தை வருடிய நொடி மீனுவின் உடம்பும் சிலிர்த்து அடங்கியது. திரிலோகேஷ் ஷாம்லியின் நெற்றியில் குங்குமம் வைத்தபடி இருந்தது அந்த புகைப்படம். ஒரு வித இயலாமை அவளுள். இது எனது இடம் என்று மனது அடித்துக் கொண்டது. அதில் ஷாம்லி நிற்பது இன்னும் இன்னும் அவளை பிரவாகமாக அழுத்தியது. நெஞ்சை அடைப்பது போல் ஒரு பிரம்மை. நடப்பது எதுவுமே மூளையில் பதியாது போக அவளது கண்கள் இரண்டும் அந்த ஆலபத்தை வெறித்தப் படியே இருந்தது.
"எங்கண்ணி அவங்களுக்கு உடம்பு முடியலைன்னாலும் கல்யாணத்தை ரொம்ப கிராண்டா பண்ணாங்க. இந்த மாதிரி நாலு ஆல்பம் எடுத்தாங்க. மாப்பிள்ளை கூட வேண்டாம்னு சொன்னார் அவங்க கேட்கவே இல்லை" என்ற தாய் மீதி மூன்று ஆல்பத்தை காட்டவில்லை என்பதே மீனுவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.
"ம்மா... தூக்கம் வருது" என்று அவளது மடியில் இருந்த மேகா கூற சமயம் வாய்த்ததென்று மகளுடன் அறைக்குள் புகுந்து கொண்டாள். மகளை படுக்க வைத்து தட்டி கொடுத்தவள் தானும் அருகில் படுத்துக் கொண்டாள். இன்னும் அந்த புகைப்படங்கள் அவள் கண்களுக்குள் நிழலாடுவதை போன்றதொரு உணர்வு தாக்கியது. அவளையும் அறியாமல் கண்ணீர் பெருகியது. நினைவுகள் இழுத்து சென்றது பின்னோக்கி. எத்தனை முறை கூறியிருப்பான் நமது திருமணத்தை அந்த மண்டபத்தில் வைக்க வேண்டும் இப்படி அப்படி என்று எத்தனை கற்பனை கோட்டைகள் செதுக்கி அவளிடம் பகிர்ந்திருப்பான். ஆனால் அவனே எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கி விட்டானல்லவா?
அழுதழுது உறங்கியும் போனாள். அங்கிருந்து எப்பொழுது கிளம்பலாம் என்ற மனநிலையிலே சுற்றினாள். எதையும் இரசிக்க முடியவில்லை ஒன்றிடவும் இயலவில்லை. கோயிலுக்கு சென்றால் கூட, "இங்க தான் ஷாம்லி திரிலோகேஷ் கல்யாணம் நடந்துச்சு" என்ற செய்தி அவள் காதில் வந்து விழுக எங்கு சென்று முட்டிக் கொளளலாம் என்றே தோன்றியது. எதிலிருந்து வெளி வர துடிக்கிறாளோ அதற்குள்ளே சுழல் போல் காலம் அவளை இழுத்து செல்கிறதே!
இரண்டே நாளில் கிளம்பி விட்டனர். ஆனால் மீனலோஷினிக்கோ ஒரு யுகம் போல் தோன்றியது. "அப்பப்ப வந்துட்டு போங்க. எங்களுக்குன்னு யார் இருக்கா?" என்ற செல்வியின் புலம்பலுடனே கிளம்பினார்கள்.
அங்கிருந்து கிளம்பி காரில் ஏறிய பின்பே மீனலோஷினியின் மூச்சு சீரானது. திரிலோகேஷினாலும் அவளது வலியையும் கலக்கத்தையும் உணர முடிகிறது ஆனால் அதற்கு ஆறுதல் கூறவோ இல்லை தன்னிலை விளக்கவோ கூட அவள் இடம் அளிக்காது தன்னை தூர நிறுத்தி விலக்குவது அவ்வளவு வருத்தமாக இருந்தது. ஆகி விட்டது இவளோடு தான் இறுதி மூச்சென்று. வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் லாழ்க்கையை நகர்த்துகிறான். எதாவது ஒரு கட்டத்தில் அவளே தன்னை உணர்ந்து வர வேண்டும் என்று மனது ஏங்கியது. அந்த காலங்களை இறைவன் விரைவில் தனக்கு அளித்து அருள் புரிந்திட மனது விரும்பியது.
இந்துமதியை அவரின் வீட்டில் விட்டு தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். அன்றைய தினம் முழுவதும் மீனுவும் மேகாவும் பயண களைப்பின் காரணமாக உறக்கத்திலே இருக்க திரிலோகேஷ் அலுவலக விஷயமாக சென்று விட்டான்.
ஊருக்கு சென்று வந்ததன் தாக்கத்தை மீனு விட்டு அகல ஒரு வார காலம் பிடித்தது. அதுவரை முகத்தை தூக்கி வைத்து தான் சுற்றினாள். திரிலோகேஷ் தான் அவளை மிகக் கடினப்பட்டே தன்புறம் இழுக்க வேண்டி இருந்தது. அவளுக்கு எல்லாமே புரிகிறது. ஆனால் தன்னை மாற்ற முடியாமல் தவிக்கிறாள்.
அன்று கேட்டாள் அவனிடமே. "ரொம்ப படுத்துறேனா? என்னை கல்யாணம் பண்ணதுக்கு சும்மாவே இருக்கலாம்னு தோணுதா?" என்று நேரடியாகவே அவன் கண்களை பார்த்து.
"லூசு மாதிரி பேசாதடி, நீ இப்படி இருக்கதுக்கு முழுக்காரணமே நான் தான். சத்தியமா உன்னை இப்படி எதிர்பார்க்கலை தான்! எனக்கு மேகா மாதிரி தான் நீ. அவ பிடிவாதம் பண்ணா அப்படியே விட்டுடுவேனா மீனு" என்றவனின் குரலில் இருந்த ஒரு மாயை அவளை அவன் புறம் இழுக்க தான் செய்தது. இருந்தும் அவனருகில் செல்ல வில்லை. அவனே எழுந்து வந்து அணைத்துக் கொண்டான். விலக்கவில்லை, அமைதியாய் நின்றாள் அந்த நொடிகளை உள்வாங்கியபடி. ஆனால் மனது நிலையில்லாமல் அலை பாய்ந்திட அவளது விழிகளில் அவ்வளவு கலக்கம். அவனது அருகாமை சுவாசம் எல்லாம் ஒரு சேர தாக்குகிறது பேதையை. முயன்று கட்டுப்படுத்துகிறாள்.
அவளது முகத்தை தன்னை நிமிர்த்தியவன், "மீனுக்குட்டி" என்றான். அவ்வளவு தான் முழுவதும் அவன் வசத்தில் சென்று விட்டாள் மீனலோஷினிதிரிலோகேஷ். மறந்து போனது அத்தனை அழுகைகளும் துக்கமும். எந்த வித எதிர்பார்ப்புமின்றி தன் பின்னால் சுற்றிய திரிலோகேஷாக கண்களுக்கு தெரிந்தான். இடையில் நடந்தது இடையிலே சென்று விட்டது போல் தோன்றியது. அவனது கையணைப்பில் தான் நிற்கிறாள் இன்னும். எத்தனை முறை அழைத்திருப்பான் அவளை இப்படி. எண்ணிலடங்கா நினைவுகள் அவளை சூழ்ந்து கொண்டது.
அவனை பிடிக்கும் அவனுடைய அமைதி, ஆளுமை, திமிர் என எல்லாவற்றையும் பிடிக்கும். காதலில் குறைகளும் நிறைகளாக மாறி விடும் தான். ஆனால் மீனுவிற்கு அந்த குறை தவறாக விஸ்வரூபமெடுத்த மாயமென்ன? இங்கு குறை என்பது பிழையாகிற்றே விதியின் வசத்தால்.
நெற்றியில் இதழை பதித்தவன், "மீனு" என்றழைக்க கண்களை மூடிக் கொண்டாள் அவனை எதிர்கொள்ள திராணியற்று.
"எதையும் குழப்பாத, உன் மனசு சொல்றதை கேளு. மன்னிப்பு ரொம்பவே ஸ்பெஷலான விஷயம் தெரியுமா? அதை கொடுக்க முடியலைன்னா மறந்திடு எல்லாத்தையும். இப்ப நிம்மதியா தூங்கு. ரொம்ப கஷ்டப்படாத. வாழ்க்கை இன்னும் கொஞ்சமே கொஞ்ச காலம் தான். இந்த நிமிஷம் இருக்க நான் இன்னும் ரெண்டு நிமிஷம் கழிச்சு உயிரோட இருப்பேனான்னு தெரியாது" என்று விழித்துக் கொண்டாள் வேகமாக.
அவனில்லை என்ற செய்தியை கூட செவிக்கு கேட்க பிடிக்கவில்லை. கண்களில் அவ்வளவு கலக்கத்துடன் கூடிய மிரட்சி.
மீண்டும் நெற்றியில் இதழ் பதித்து, "தூங்கு டி" என்று நெற்றியில் முட்டி சிறு புன்னகையுடன் நகர்ந்து விட்டான். இன்னும் அப்படியே பித்த பிடித்தவள் போல் படுக்கையில் அமர்ந்திருந்தாள்.
திரும்பி பார்த்தவன் மீண்டும் அருகில் வந்து அவளை படுக்க வைத்து போர்வையை போர்த்தில் விட்டான். இப்பொழுதெல்லாம் அவளது பிடிவாதத்தின் அளவு குறைந்திருந்தது. அவனது செயலுக்கெல்லாம் ஒத்துழைப்பு நல்கினாள். இழுத்தான் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள். அவளையறியாமலே அவன் வசம் சென்று கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நாளும் அவனது செயல்கள் வியப்பிலே ஆழத்திக் கொண்டிருந்தது. மேகாவை போலவே அவளையும் குழந்தை போல் பார்த்துக் கொண்டான். அவள் எப்படி தந்தை பின சுற்றுகிறாளே அதே போல் மனைவியையும் மாற்றிட விழைந்து பாதி வெற்றியையும் கண்டு கொண்டான் அக்காதலன்.
திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகி விட்டது. அவனுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது. மகளும் மனைவியும் பள்ளிக்கு ஓட அலுவலகத்தோடு சேர்த்து அவர்களையும் தன் பிடியில் வைத்திருந்தான் திரிலோகேஷ். வார விடுமுறையில் இந்துமதி வீட்டிற்கு சென்று விடுவார்கள் குடும்பத்துடன். அவருக்கும் நிறைவாக இருந்தது மகளை இறுக்கி பிடித்திடும் மருமகனால். முகத்தை வைத்தே மனைவியின் தேவையை கணித்து கூறினானே! வாழ்க்கை அவன் நினைத்ததை விட இலகுவாக சென்றது!