- Messages
- 997
- Reaction score
- 2,811
- Points
- 93
அத்தியாயம் - 26
மகளிடம் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் வயிறு உணவுக்காக ஏங்கியது. நேற்று முழுவதும் சாப்பிடாமல் சுற்றியதால் உடம்பு மிகவும் பலகீனமாக உணர்ந்தது. அதை பொருட்படுத்தாது அப்படியே படுத்து விட்டான்.
வெகு நேரம் அதே இடத்திலே அமர்ந்திருந்த மீனு கண்ணீரை துடைத்து உள்ளே எழுந்து வந்து பார்த்தாள். மேகா அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவனை தொந்தரவு செய்யாது மேகாவை அழைத்து வந்தவள் பள்ளிக்கு கிளம்புவதற்கு ஆயத்தமாகினாள்.
மனது முழுவதும் கனமாக இருந்தது. அவனது பார்வை முகம் எல்லாம் அவளை தாக்கி சிந்தனையை சிதைத்தது. அவள் வேண்டுமென்றே அவனை விலக்க வில்லை. அவள் காயத்தின் ஆழம் அவனை கண்டு அஞ்சுகிறது. அவன் செய்த செயலை இன்னும் அவளால் ஏற்கவே முடியவில்லை. அன்றைய அவளுடைய நிலையை இன்று நினைத்தாலும் கண்ணீர் நிமிடத்தில் பெருகி விடும்.
கிளம்பியவளுக்கு அவனை இப்படியே விட்டு செல்ல மனதில்லை. ஆனால் ஏற்கனவே பள்ளிக்கு அதிக விடுப்பு திருமணத்திற்கு எடுத்ததால் செல்ல கட்டாயத்தில் இருக்க மேகாவுடன் புறப்பட்டு விட்டாள். மனது முழுவதும் அவனையே சுற்ற கிளம்புவதற்குள் இருபது முறையாவது அறையை எட்டி பார்த்திருப்பாள்.
பள்ளிக்கு வந்து விட்டாள். ஆனால் இருப்பு கொள்ளவில்லை. நிலையில்லாமல் தவிக்கும் மனதை கட்டுப்படுத்த வழியறியாது திணறியவள் பள்ளியில் விடுப்பு கூறி பாதியிலே கிளம்பி விட்டாள்.
வெகு நேரத்திற்கு பிறகே எழுந்து கொண்டவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். உண்ணாமலே இருந்தது பயங்கர தலைவலியை ஏற்படுத்தி இருக்க எழுந்து கொள்ள கூட முடியவில்லை.
உடல் மட்டுமின்றி மனதும் அதீத சோர்வாக உணர்ந்தான்.
வந்து விட்டாள், காலிங்பெல்லை அழுத்த சிரமப்பட்டே எழுந்து சென்று கதவை திறந்து விட்டான். அவளை அந்த நேரத்தில் எதிர்பார்க்காததால் சற்று அதிர்ச்சியடைந்தாலும் என்னவென்று கேட்கவில்லை. உள்ளே வந்து மீண்டும் பழைய நிலையில் அமர்ந்து கொண்டான். வந்து பேக்கை வைத்து அவனெதிரில் அமர்ந்தாள் அவனை பார்த்தப்படியே. அவனோ நிமிராமல் அமர்ந்திருந்தான்.
அவனும் அவனது அசைவும் அவளை அதீதமாக தாக்குகிறது. அவன் சரியில்லை என்று புரிகிறது அதற்கு காரணம் தான் தான் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் அவள் மனதால் இன்னும் அவன் அளித்த வலியில் இருந்து மீண்டு விட வில்லை. அது அவ்வளவு சுலபமும் இல்லை.
எத்தனை இரவுகள் இப்படி தலையை பிடித்துக் கொண்டு பைத்தியம் மாதிரி அமர்ந்திருந்தாள் என்பது அவள் மட்டுமே அறிந்திட்ட இரகசியம். அவளை பார்த்து பரிதாப பார்வை செலுத்திடக் கூட ஆள் இருந்திருக்கவில்லையே! ஏன் சத்தமாக தனது வலியை வாய் விட்டு கூற முடியாத இடத்தில் அல்லவா நிறுத்தி சென்றிருந்தான் அவளின் காதலன். அதை இக்கணங்களில் நினைத்தாலுமே இலவச இணைப்பாக வழியும் கண்ணீரை துடைத்தவள் எழுந்து அவனருகில் சென்றாள்.
"லோகேஷ்" என்றாள். அசையாது இருக்க தோளில் லேசாக தட்டினாள். நிமிர்ந்து பார்த்தான். கண்களில் அப்படியொரு வலி. அவளது கண்களையும் கண்ணீர் நிரப்ப விழைகிறது. கடினப்பட்டு கட்டுப்படுத்துகிறாள்.
அவன் இன்னும் பதில் மொழிந்திடவில்லை. அவனது உடலும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அப்படியே மனைவியை பார்த்தப்படி இருந்தவன் என்ன நினைத்தானோ அப்படியே அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
நொடியில் நடந்தேறிய நிகழ்வில் சர்வமும் நடுங்கியது அவளுள். ஆனால் அவனை விலக்க வில்லை. அவனுடைய உஷ்ண மூச்சுக்களை அவளுடைய உடல் உணர்ந்தது. நிறைய நாட்கள் அல்ல நிறைய வருடங்களுக்கு பிறகான அருகாமை.
அவளையும் அறியாமல் கைகள் மேலேழுந்து அவனது சிகையை வருடியது. நிமிடங்கள் இருவருமே தங்களை மறந்து வேறு உலகில் சஞ்சரித்தன. அணைப்பில் காமத்தை தாண்டி அவனுடைய அதீத காதலை அவளால் உணர முடிந்தது. அவனது தொடுகை தவறாக தெரியவில்லை பெண்ணின் மனதிற்கு. ஆனால் தற்போது இந்த காதலை, ஒரு காலத்தில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வதைத்து கொன்ற அவனது காதலை ஏற்க மறுத்து மனது மருகி நிற்கிறது அந்த பேதையின் மனது.
சில விஷயங்கள் மூளைக்கு புரிந்தாலும் அடிபட்ட மனது ஏற்க மறுக்கும். சில வலிகளை, அனுபவித்தவர் மட்டுமே மீண்டும் அதை கனவில் கூட அனுபவிக்க எண்ணி விட மாட்டார்கள். மீனுவும் அதே மனநிலையில் தற்போது நின்றிருந்தாள்.
நொடிகள் நிமிடங்களாக மாறியும் இன்னும் மீண்டு விட வில்லை அக்காதலர்கள். அந்த பிரத்தியோக உலகம் அவர்களது வலிகளிலிருந்து முழுவதுமாக விடுவிக்கிறது போன்றதொரு மாயை இருவருக்கும்.
அவளுள் புதைத்திருந்த தலை நிமிர்த்தி அவளை பார்த்தான். இமைக்க மறந்தும் அவளும் அவனை தான் பார்த்திருந்தாள். இந்த நிமிடங்களை உண்மை என்று இன்னும் அவளால் நம்ப முடியவில்லை. ஒரேடியாக விலக்கி வைத்த அவனிடம் எளிதில் உரிமை கொண்டாட மனது மறுக்கிறது.
"ஏன்டி என் கூட பேச மாட்ற?" என்றவன் குரலில் தெரிந்த வலி அவளுள்ளும் பரவியது. பதில் கூற முனையவில்லை. அவனை அது அதிகமாகவே காயப்படுத்தும் என்று புரிகிறது. ஏற்கனவே உடைந்திருந்தவனை மேலும் சிதைக்க மனதில்லாமல் போக வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவளிடமிருந்து வரும் எதார்த்த வார்த்தைகள் கூட அவனையே தாக்குகிறது. புரிகிறது மனதிற்கு ஆனால் அதை செய்யாது இருக்க முடியவில்லை பாவையால்.
தேங்கி வைத்த வலியை வார்த்தைகளாக வெளியேற்ற மனது உந்துகிறதே! கேள் இதை விட அதிகமாக நான் துடித்திருக்கிறேன். 'தினமும் மொபைலில் நேரில் என்று உனது அன்பினால் திக்கு முக்காட செய்து ஒரு நாள் நீ எனக்கு வேண்டாம் என்று நிர்மூலமாக நடு தெருவில் விட்டு சென்றாயே, அப்பொழுது நான் கதறிய கதறலை கேட்க கூட நீ இல்லையே!' என்று சத்தமாக கத்த வேண்டும் என்று மனது விழைகிறது. எத்தனை பகலும் இரவும் உன்னுடைய உரையாடல்களை திரும்ப திரும்ப வாசித்து என்னை நானே அதீதமாக காயப்படுத்தி இருக்கிறேன். ஒரு முறையாவது நான் கூறியது பொய் விளையாட்டாய் உன்னை ஏமாற்ற கூறினேன் என்று கூறி நீ அழைத்து விட மாட்டாயா என்று ஏக்கத்தோடு பார்வையை அலைபேசியிலே வைத்திருந்தேன் என்பது எண்ணிலடங்கா.
நிராகரிப்பு அதுவும் தன்னுடையவர்களின் நிராகரிப்பு என்பது மரணத்தை தொட்டு மீள்வதற்கு சமமான வலி தான். அனுவபவித்தேனே, எங்க சென்றாயடா என் உயிரை முழுவதுமாக எடுத்துக் கொண்டு அந்த கணங்களில்.
ஆனால் தற்போது அதையெல்லாம் எண்ணினாலும் அவனை தாக்க முனையவில்லை. அடுத்தவரின் காயத்திலே தாக்குவது தவறு என்று அவளுள் இருக்கும் மனிதநேயம் அறைந்து கூறுகிறது.
பதிலுக்காக அவளையே பார்த்தவனுக்கு பதில் வராது என்று புரிய அவளை விலக்கி, "சாரி" என்றபடி எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.
கால்கள் வலுவிலக்க அப்படியே அமர்ந்து விட்டாள். இன்னும் அவனது கைகள் தன்னுடைய இடையில் இருப்பது போல் ஒரு உணர்வு. முகத்தை மூடிக் கொண்டவளுக்கு அப்படியொரு அழுகை. சத்தம் வரவில்லை, அவனை மீண்டும் தன்னிடம் வர வைக்க விரும்பாததால்.
'ஏன் என்னை மட்டும் இப்படியான இக்கட்டான சூழலிலே நிறுத்துகிறாய்! இறுதி வரை எதையும் ஏற்கவே முடியாது போராத்திலே காலம் முடிந்து விடுமா' என்றெல்லாம் மனது பிதற்ற இறைவனிடம் முறையிட்டாள்.
நிமிடங்கள் அல்ல மணி நேர போராட்டத்திற்கு பிறகே சமநிலை அடைந்து கால்கள் எழுந்து கொண்டது.
அறைக்கு செல்ல அவனுக்கும் அவளுடைய அதே தவிப்பான நிலை தான். உணர முடிகிறது. வேகமாக குளியலறை புகுந்து முகத்தை கழுவி அடுப்பறை நுழைந்தவள் உணவுகளை ஆராய காலையில் அவனுக்கு வைத்த உணவுக் கூட தொடப்படாமல் அப்படியே இருந்தது.
இப்பொழுது கோபமெல்லாம் வரவில்லை. எல்லாவற்றையும் எடுத்து சூடு செய்து டேபிளில் வைத்தவள் அறைக்குள் நுழைந்தாள்.
"லோகேஷ், சாப்பிட வா" என்று சற்று உரிமையாகவே வெளி வந்தது அவளது குரல். நகராமல் அவளை பார்த்தப்படியே அமர்ந்திருந்தான்.
அருகில் சென்றவள் கைகளை பற்றி எழுப்பினாள். உடனே இசைந்தது கொடுத்தது மனது அவளது உரிமையில்.
அழைத்து வந்து அமர வைத்து உணவை பரிமாறியவள் அருகிலே அமர்ந்து கொண்டாள்.
சாப்பிடாமல் அவளையே பார்த்தப்படியே இருக்க, "சாப்பிடு, ஊட்டியா விட முடியும்?" என்றாள் கண்களை உருட்டி மிரட்டிய படி. நேற்று அவனுள் இருந்த கணங்களை அவளின் இன்றைய பேச்சுக்களும் செயல்களும் நொடியில் தகர்த்து கொண்டிருக்கிறது.
உணவின் அருகில் இருந்த கையை எடுத்தவன், "ம்ம்... ஊட்டி விடு" என்று அமர்ந்து கொண்டான் பின்னால் சாய்ந்து. வம்பிலுக்க உந்தியது மனது அவளிடம். அவளது குரலை பேச்சுக்களை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று மனது விரும்பியது.
அவனின் எதிர்பார்ப்பை ஏமாற்றி விடாமல் அவன் வேண்டிய படியே, எழுந்து சென்று கைக்கழுவி வந்தவள் அவனுக்கு ஊட்டி விட்டாள். அது அவனுக்கு இன்னும் இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்பொழுதுமே அவனுக்கு அவள் ஆச்சரியக்குறி தான்! அவளுடைய ஒவ்வொரு செயலும் அவனை ஆக்ஷிக்கும். அதனால் தானே தன் நிலையை விட்டு சுயத்தை மறந்து அவளின் பின்னாலே சுற்றினான் அவளின் காதலனாக.
அவளின் கையால் சிறாதளவு உண்டவனுக்கோ மொத்த பசியும் அடங்கிற்று. வற்புறுத்தி முழுவதையும் உண்ட பின்பே அவனை நகர அனுமதித்தாள் அவனின் அழகிய ராட்சசி.
சாப்பிட்டு அமர்ந்தவனுக்கு தலைவலி குறைந்திருந்தது. இருந்தும் ஒரு மாத்திரையை விழுங்கியவன் வெளியில் வர அவளோ எல்லாவற்றையும் எடுத்து வைத்து சுத்தம் செய்து விட்டு ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.
வேகமாக அவளருகில் வந்தவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். இன்று அவனது நடவடிக்கை முழுவதுமே அவளை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.
அசௌகரியமாக உணர்ந்தவள் சற்று நெளிய, "அமைதியா இரு டி, தூக்கம் வருது" என்று உரிமையாய் அதட்டினான் அவளின் காதல் கணவன்.
"ரூம்ல போய் படு லோகேஷ், கால் வலிக்க போகுது" என்று அவன் காலை குறுக்கி படுத்திருப்
பதை கண்டு கூற, "அங்க நீ இருக்க மாட்டேல்ல" என்றவனுக்கு பதில் கூறாது அமைதியாகி விட்டாள்.