• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 25

Administrator
Staff member
Messages
521
Reaction score
800
Points
93
ஜென்மம் 25:

இல்லாமலே வாழ்வது

இன்பம் இருந்தும்
இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில்
என்னை கொள்ளாதே…


“அத்தை இன்னைக்கு என்ன குக் பண்ணலாம்?” என்ற கனியின் கேள்விக்கு,

“ரவா தோசையும் தேங்காய் சட்னியும் செய்யலாம். பார்த்தீக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு தோசை கூட சாப்பிடுவான்” என்று பதில் அளித்தார் கஸ்தூரி.

“சரிங்கத்தை” என்றவள் புன்னகையுடன் தேங்காய் சட்னிக்கு தேவையானதை எடுத்து வைத்தாள்.

தாய் என்றாலே இப்படித்தான் போல எப்போதுமே பிள்ளைகளின் நினைப்பு தான்.

அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன வேண்டும் எது சரியாக இருக்கும் என்று இருபத்தி நான்கு மணி நேரமும் உலகம் பிள்ளைகளை சுற்றியே சுழலும் போல.

தனக்கும் ஒரு தாய் தந்தை இருந்தால் தானும் இது போல அன்பை அனுபவித்து இருக்கலாம் என்று எண்ணம் வர தனக்கு தான் அந்த கொடுப்பனை இல்லையே என்று பெருமூச்சு எழுந்தது.

“உனக்கு ரவா தோசை ஓகே தான? இல்லை வேற எதுவும் செய்யவா கனி?” என்றிட,

“எனக்கு ஓகே தான் அத்தை” என்றவளது முகத்தில் மென்னகை மிளிர்ந்தது.

தாய் இல்லாத‌‌ குறையை தீர்த்து வைக்கத்தான் கடவுள் இத்தகைய மாமியாரை கொடுத்திருக்கிறார் போல என்று எண்ணம் உதித்தது.

தேங்காயை நறுக்கி சட்னியை அரைத்து தாளித்தவள்,

“மதியதுக்கு என்ன செய்யலாம் த்தை?” என்று கேட்க,

“மதியத்துக்கு நான் பாத்துக்கிறேன் நீ போய் பர்ஸ்ட் உன் தலையை காய வை. எப்படி ஈரமா இருக்கு பாரு” என்று அதட்ட,

“அதை அப்புறம் காய வச்சிக்கிறேன். பத்து நிமிஷத்துல காஞ்சிடும்” என்று மறுத்தாள்.

“அடி வாங்க போற? இப்படியே இருந்தா சளி பிடிச்சிடும்” என்றவர் அவளது தலையில் இருந்த துண்டை அவிழ்த்து கூந்தலை தட்டிவிட,

இவளது மென்னகை இமை நீண்டது. இருவரும் மதுரையில் இருந்து வந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது.

அந்த நிகழ்வுக்கு பிறகு இருவரும் அதனை பற்றி பேசி கொள்வது இல்லை. சுத்தமாக பேசாமலும் இல்லை.

ஒரே அறையில் இருப்பதால் தேவையான பேச்சுக்கள் இருந்தது.

கனியுடன் தான் பேசவில்லையே தவிர கஸ்துரியிடம் மிகவும் நெருங்கி‌ இருந்தாள்.

கஸ்தூரியும் உண்மையை அறிந்த பிறகு கனியிடம் அவ்வளவு பாசமாக நடந்து கொண்டார்.

அந்த நிகழ்வு நடக்கும் போது இவரும் தானே கூட இருந்தார் என்று எண்ணம் பிறந்தாலும் மாமியாரை மீறி இவரும் என்ன செய்வார்.

எல்லோரும் சூழ்நிலை கைதிகள் தானே எப்போதோ நடந்த நிகழ்வுக்கு இப்போது இவரை முறைத்து கொண்டு செல்வது நியாயம் இல்லை என்று எண்ணியவள் அவரிடத்தில் சுமூகமாக நடந்தாள்.

கஸ்தூரியும் நிவியிடம் காட்டும் அதே அன்பையும் அக்கறையையும் இவளிடம் காண்பித்தார்.

கஸ்தூரியின் வெள்ளை மனதை உணர்ந்த கனியும் அவருடன் நன்றாக ஒட்டி கொண்டாள்.

இருவருக்கும் அழகான புரிதலும் உறவும் மலர்ந்து இருந்தது. இவருடைய அன்பில் நனைந்த பிறகு தான் தனக்கும் தாய் தந்தையர் இருந்திருந்தால் சிறு வயதிலே இந்த அன்பு பாசம் எல்லாம் கிடைத்திருக்கும் என்று சில நாட்களாக மனதில் தோன்ற வைத்திருக்கிறது.

கூந்தலை ஓரளவிற்கு உலர்த்தியவர்,

“போய் வெயில்ல கொஞ்ச நேரம் நில்லு. பத்து நிமிஷத்துல காஞ்சிடும்” என்க,

“சரிங்கத்தை” என்றவள் பால்கனியில் நிற்பதற்காக சென்றாள்.

ஒரு கையில் கூந்தலை தட்டியாவாறே மறுகையில் கதவை திறக்க சரியாக அதே நேரம் பார்த்தீயும் வெளியே வருவதற்காக கதவை திறந்திருந்தான்.

அவன் இப்படி திறப்பான் என்று எதிர்பாராதவள் சடுதியில் நிலை தடுமாறி விழச்செல்ல நொடியில் இடையோடு சேர்த்து அணைத்து பிடித்திருந்தான் பார்த்தீபன்.

இருவரும் வெகு நெருக்கத்தில் நின்றிருக்க பார்த்தீயின் விழிகள் மனையாளின் மீது படர்ந்தது.

அப்போது தான் குளித்து வந்தவள் அன்றலர்ந்த மலர் போல இருந்தாள். கூந்தலில் இருந்த நீர்த்துளிகள் கழுத்தருகே ஆங்காங்கே படர்ந்திருக்க இவனுக்கு அதனை இதழாலே துடைத்தெடுக்க எண்ணம் உதித்தது.

போதாதற்கு அவள் மேல் வந்த சுகந்தம் அவனை உள்ளுக்குள் ஏதேதோ செய்தது.

இடையில் இருந்த கரத்தை கன்னத்தை நோக்கி உயர்த்திய நேரம்,

“கனி சாம்பிராணி எடுத்துட்டு வந்திருக்கேன்” என்ற கஸ்தூரியின் குரலில் இருவரும் அடித்து பிடித்து விலகினர்.

பார்த்தீபன் சடுதியில் கீழிறங்கி சென்றிட இவள் தான் ஒரு நொடி திணறி போனாள்.

கஸ்தூரி, “வாம்மா உட்காரு. நான் சாம்பிராணி காட்றேன்” என்று அவளை நாற்காலியில் அமர வைத்து சாம்பிராணி புகையை கூந்தலுக்கு காண்பித்தார்.

விழிகளை மூடி தலை சாய்த்த கனிக்கு சிறிது நேரத்திற்கு முன் தன் மீது படிந்த கணவனது பார்வை தான் துரத்தியது.

இருபத்தி ஐந்து வயது பெண்ணவளுக்கு கணவனது பார்வை புரியாமல் இல்லை.

அந்த பார்வையில் என்ன இருந்தது என்று தெளிவாக புரிந்தது. மனம் சிறிது அவனுக்காக யோசித்தது.

முப்பது வயது வரை எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காது தன்னை மணந்து கொண்டவனது மனதில் எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கும்.

என்னை தவிர வேறு எந்த பெண்ணை மனந்திருந்தாலும் நிச்சயமாக அவன் மகிழ்வாக இல்லற வாழ்க்கையை துவங்கி இருப்பான்.

என்னதான் அவன் மீது கோபம் இருந்தாலும் அவனை ஒதுக்கி வைப்பது தவறு. பசி தூக்கம் போல இதுவும் ஒரு உணர்வு தான். அவனும் எத்தனை நாட்கள் மனைவியை அருகில் வைத்து கொண்டு வேடிக்கை பார்ப்பான்‌.

இவனிடத்தில் வேறு ஒருவர் இருந்தால் இவ்வளவு தூரம் அமைதியாக இருந்திருப்பானா? என்பது சந்தேகம் தான்.

என்னுடைய கோபம் இந்த பிறவியில் தீரவில்லை என்றால் இறுதிவரை அவன் இப்படி தான் தனியாக தவிக்க வேண்டுமா? இது பெரிய தவறு‌.

இன்று இரவு இது பற்றி கண்டிப்பாக பேச வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

ஐந்து நிமிடத்தில் முடி உலர்ந்துவிட,

“நான் போய் சமையலை கண்டினியூ பண்றேன். நீ ரெடியாகி வா” என்றவர் கீழிறங்கி செல்ல,

இவள் சிந்தனையுடனே கூந்தலை பின்ன பார்த்தீபன் உள்ளே நுழைந்தான்.

இருவரது பார்வையும் ஒரு நொடி உரசி கொண்டது.

முதலில் பார்வையை விலக்கிய பார்த்தீ பால்கனிக்கு சென்று அலைபேசியில் உரையாட துவங்கியிருந்தான்.

பத்து நிமிடத்தில் கனி தயாராகி வர பார்த்தீபனும் உடன் இறங்கினான்‌.

இருவரும் எப்போதும் ஒன்றாக தான் உணவருந்த வருவார்கள்.

கஸ்தூரியுடன் சேர்ந்து அவனுக்கு பரிமாறியவள் தானும் அமர்ந்து உண்ண‌ துவங்கினாள்.

இருவரும் ஒன்றாக கிளம்ப கனி இன்று ஒரு தொழிலதிபரை சந்திக்க செல்ல வேண்டும். காப்பகத்திற்காக கனி உதவி வேண்டிட அவரும் செய்வதாக இன்று நிறுவனத்திற்கு வர கூறி இருந்தார்.

ஏற்கனவே பார்த்தீயிடம் கூறி இரண்டு மணி நேரம் விடுப்பு கேட்டிருந்தாலும்,

“ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ் போகணும்” என்று இன்றும் நினைபடுத்த,

புரிந்தது எனும் விதமாக தலையை அசைத்தான்.

“என்னை வழியில இறக்கிவிடுங்க. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்” என்று கனி கூறினாள்‌.

காரணம் பார்த்தீயின் நிறுவனமும் அவள் போக வேண்டிய இடமும் எதிர் எதிர் திசையில் இருந்தது.

“பரவாயில்லை நான் ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்றவன் வாகனத்தை இயக்க,

இவள் தான் அவனது முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். காலையில் நடந்த நிகழ்வின் பிரதிபலிப்பு ஏதேனும் தெரிகிறதா என்று.

ஆனால் அவனது முகம் நிச்சலமாக இருந்தது. முயன்று தன் உணர்வுகளை மறைத்து கொள்கிறானோ என்று எண்ணம் வர மனது பாராமானது‌.

கண்டிப்பாக இன்றைக்கு ஒரு முடிவு எடுத்திட வேண்டும் என்று நினைத்தாள்.

அவன் இறக்கிவிட்டு சென்றதும் ஆர்.கேவை சந்தித்துவிட்டு சற்று தாமதமாகவே தான் அலுவலகத்தினை அடைந்தாள்.

“என்ன முதலாளி மேடம் வந்துட்டிங்களா?” என்று தாரிகா சிரிப்புடன் கேட்க,

அவளை செல்லமாக முறைத்தவள்,

“ஒரு முக்கியமான வொர்க் இருந்தது. அதான் பெர்மிஷன் போட்டு இருந்தேன்” என்று கூற,

“இது உங்க ஆபிஸ் மேடம். நீங்க எப்போ வேணா வரலாம் எப்போ வேணா போகலாம்” என்று அருகில் இருந்து மற்றொரு குரல் வந்தது.

சடுதியில் கனியின் முகத்தில் மாற்றம் வந்து போனது‌. யாரும் பார்க்கும் முன் அதனை மறைத்து கொண்டாள்.

விளையாட்டாக தான் இப்படிப்பட்ட பேச்சுக்கள் வந்தது. இருந்தும் தான் சரியாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கூறுவது போல என்னுடையது என்ற எண்ணம் எனக்கும் எங்கோ இருக்குமோ அதுதான் என்னிஷ்டத்திற்கு வருகிறேனோ என்று தோன்றியது‌.

கனிக்கும் பார்த்தீக்கும் திருமணம் நடந்ததை அறிந்த அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

கனியை யாருமே பார்த்தீயுடன் சேர்த்து சிந்தித்து பார்த்ததில்லை. காரணம் இருவருடைய பொருளாதார நிலை முக்கியமாக புறத்தோற்றம் இதெல்லாம் இருவருக்கும் கிஞ்சிற்றும் பொருத்தமில்லை என்று பலரது எண்ணம்‌.

விடயம் அறிந்த பலர் உண்மையாக வாழ்த்தினாலும் சிலர் இவளுக்கு இப்படிப்பட்ட வாழ்வா இதுவரை தங்களுடன் பணி புரிந்தவள் தங்களுக்கு முதலாளியா என்று பொறாமை எழுந்தது.

அது அவ்வபோது அவர்களது செயலிலும் வெளிப்பட கனி அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

வாழ்வில் இதற்கு மேல் எவ்வளவோ பார்த்துவிட்டேன் நீங்களெல்லாம் எனக்கு தூசு என்பது போல கடந்துவிட்டாள்.

ஆனால் இன்று தன் மீது தவறு உள்ளதால் அதனை சரிசெய்ய எண்ணினாள்.

ஹெச்.ஆரிடம் தனது தவறுக்கு விளக்கம் அளிக்க எண்ணி அழைப்பை விடுக்க அழைப்பு ஏற்கப்படவில்லை.

சரி நேரடியாக பேசிவிட்டு வருவோம் என்று எண்ணியவள் எழுந்து அவளறையை நோக்கி சென்றாள்.

அனுமதி வாங்கிவிட்டு உள்ளே நுழைய,

“வாங்க கனி” என்று புன்னகைத்த ஸ்வேதாவை கண்டு இப்போது வரை கனிக்கு குற்றவுணர்வு.

அதுவும் கனிக்கும் தனக்கும் திருமணமான விடயத்தை பார்த்தீபன் அறிவித்த போது ஸ்வேதாவின் முகத்தில் அப்படியொரு ஏமாற்றம்‌.

ஆனால் அதனை மறைத்து கொண்டாள். அவளுடைய வலியை அந்த கணம் கனியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

வலியுடன் கூடிய சிரிப்புடன் அவள் இருவரையும் வாழ்த்திய நிமிடம் இன்று வரை கண்ணுக்குள் நிற்கிறது.

இந்த பெண்ணுக்கு என்ன குறை. அழகு அறிவு அந்தஸ்து என எல்லாம் இருக்கிறேதே. அதற்கு மேல் நல்ல குணம் இருக்கிறது.

இப்போது வரை தன்னுடைய ஏமாற்றத்தை நொடியும் கனியிடம் காண்பித்தது இல்லை‌.

இவள் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் நொடி பொழுதேனும் தூவேஷம் காட்டியியிருக்க கூடும். ஆனால் இவள் இப்போது வரை புன்னகையுடன் தன்னை எதிர்கொள்கிறாளே!

இவளை திருமணம் செய்து இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் அவனது வாழ்க்கை.

எவ்வளவு அழகாய் வண்ணமயமான வாழ்வை காதலுடன் கொடுத்து இருப்பாள் இவள் என்று தன் போக்கில் சிந்தித்தவள்,

“சொல்லுங்க கனி” என்று வினவ,

அதில் சுயநினைவை அடைந்தவள்,

“நான் கால் பண்ணேன் நீங்க எடுக்கலை” என்றாள்.

அலைபேசியை எடுத்து பார்த்த ஸ்வேதா,

“சாரி சைலண்ட்ல இருக்கு போல கவனிக்கலை சாரி. சொல்லுங்க கனி எனிதிங் இம்பார்ட்டன்ட்” என்று வினவ,

“டூ ஹவர்ஸ் பெர்மிஷன் போட்டு இருந்தேன். வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதான்” என்று தயக்கத்துடன் இழுக்க,

“ஓகே நோ இஸ்யூஸ் நீங்க ஒரு மெயில் அனுப்பிடுங்க‌. நான் பாத்துக்கிறேன்” என்று முடிக்க,

கனியின் முகத்தில் பெரிதான ஆசுவாசம். மற்றவர்கள் போல நீ இந்த நிறுவன முதலாளி என்று கூறி தன்னை சங்கடப்படுத்தாமல் ஒரு ஊழியராக பதில் அளித்ததில் நிம்மதி பிறந்தது.

கனியின் மனதில் ஸ்வேதா உயர்ந்து கொண்டே சென்றாள்‌.

“ஓகே தாங்க்யூ” என்று விடைபெற்று கொண்டவள் எழுந்து பார்த்தீபனது அறையை நோக்கி சென்றாள்.

அவள் செல்லும் சமயம் சுமி வெளியே வர,

“சார் ப்ரீயா இருக்காங்களா மேம்?” என்று வினவ,

“ஹ்ம்ம் ஒன் ஹவர் ப்ரீதான்” என்று மொழிந்தாள்.

“ஓகே” என்று தலை அசைத்தவள்,

அனுமதி பெற்று அவனறைக்குள் நுழைந்தாள்‌.

ஏதேனும் வேலை தொடர்பாக வந்திருப்பாள் என்று எண்ணியவன்,

“சொல்லுங்க” என்றுவிட்டு கையில் இருந்த கோப்பில் பார்வையை பதிக்க,

“நீங்க ஏன் ஸ்வேதாவ கல்யாணம் பண்ணிக்கலை?” என்றவளது கேள்வியில் விழுக்கென நிமிர்ந்தவன்,

“என்ன?” என்று திகைப்புடன் நோக்க,

“நீங்க ஏன் ஸ்வேதாவ கல்யாணம் பண்ணலை?” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக வினா தொடுத்தாள்‌.

மெதுவாக அவளது கேள்வியை உள்வாங்கியவன்,

“இப்போ எதுக்கு இந்த கேள்வி?” என்று நிதானமாகவே வினவினான்.

“அது ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணு. அழகான அறிவான பொண்ணு. உங்களோட அந்தஸ்துக்கு ரொம்ப தகுதியானவ. அவங்க அப்பா கூட பிஸ்னஸ் தான் பண்றாங்க. அவளை கல்யாணம் பண்ணி இருந்தா‌ உங்க லைஃப் ரொம்ப அழகா இருந்திருக்கும்” என்று மொழிய,

“இதெல்லாம் கல்யாணம் பண்ண போதுமா?”

“ஷீ லவ்ஸ் யூ” என்று கூற,

“இருக்கலாம் பட் எனக்கு உன்னை மட்டும் தான் புடிச்சு இருக்கு மிஸஸ் கன்னல்மொழி பார்த்தீபன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவனது விழிகள் அவளை ஊடுருவி செல்ல,

அந்த பார்வையை சமாளிக்க முடியாதவள் தடுமாறி பார்வையை விலக்கி ஏதோ கூற விழைய,

“சாரி டு டிஸ்டர்ப் யூ சார். உங்களை பார்க்க மிஸ்டர் அவினாஷ் வந்து இருக்காரு. ஏதோ எமெர்ஜென்சியாம்” என்றவாறு பரபரப்புடன் வந்தாள் சுமித்ரா.

“ஐ ஆம் லீவிங் சார்” என்ற கனி அவன் தலையைசைத்ததும் வெளியேறி இருந்தாள்.

அவனது பார்வையிலும் குரலிலும் இதயம் மத்தளம் கொட்டியது.

என்ன பதில் கூறி இருப்பாளோ சுமி வந்து காப்பாற்றிவிட்டாள்‌.

பார்வையிலே ஆளை சாய்த்திடும் வித்தை தெரிந்தவன் போலும் என்று சிந்தித்தவள் தனது பணியை கவனித்தாள்.

அதன் பிறகு நேரம் வேகமாக சென்றது. மாலை அலுவலகத்தில் இருந்து செல்லும் போது கூட பார்த்தீ எதையும் பற்றி பேசவில்லை‌.

கனிக்கு ஒருவிதத்தில் ஆறுதலாக இருந்தது. வீட்டிற்கு சென்றதும் மாமியாருடன் பொழுது அழகாய் சென்றது.

இரவு உணவை முடித்துவிட்டு சமையலறையை கஸ்தூரியுடன் சேர்ந்து ஒதுங்க வைத்தவள் உறங்க செல்ல பார்த்தீபன் படுத்தபடியே அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான்.

குளியலறை சென்று முகம் கழுவி வந்தவள் மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

என்னதான் பேசி முடிவெடுத்து விடலாம் என்று காலையில் எண்ணி இருந்தாலும் சட்டென்று பேச நா எழவில்லை. இதனை எப்படி துவங்குவது என்று பெரிதான குழப்பம் தயக்கம்.

சில நிமிடங்கள் சிந்தனையில் கழிய அவன் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு இரவு விளக்கை போட்டுவிட்டு உறங்க தயாரானான்.

இதற்கு மேலும் தாமதித்தால் அவன் உறங்கிவிடுவான் என்று உணர்ந்தவள் சடுதியில் அவனை நெருங்கி படுத்து கொண்டாள்.

அளருகாமை உணர்ந்த பார்த்தீபன் திரும்பி பார்க்க அவனை கரம் கொண்டு அணைத்து கொண்டவள்,

மெதுவாக, “சாரி” என்று முணுமுணுக்க,

அவளது செயலை எதிர்பாராதவன்,

“கனி” என்று அதிர்ந்து பார்க்க,

அவனது நெஞ்சில் இதழை பதித்தவள் அவனுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தினாள்‌.

உடல் மெல்ல வெப்பமாவதை உணர்ந்தவன் சடுதியில் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் முகம் கண்டான்‌.

அதில் பெரிதான வேறுபாடுகள் தெரியவில்லை.

“என்னடி ஆச்சு? ஏன் இப்படி பிகேவ் பண்ணிட்டு இருக்க?” என்று உணர்வுகளை கட்டுக்குள் வைக்க போராடியபடி அதட்ட,

“மார்னிங் நீங்க பார்த்த பார்வைக்கு அர்த்தம் எனக்கு புரிஞ்சது. அன்னைக்கு ஏதோ கோபத்துல பக்கத்தில வராதீங்கன்னு சொல்லிட்டேன். அதுல எவ்ளோ பெரிய தப்புனு இப்போ தான் புரிஞ்சது. பசி தூக்கம் மாதிரி இதுவும் ஒரு உணர்வு தான்”

“...”

“இதுவே வேற யாராவது கல்யாணம் பண்ணி இருந்தா நீங்க சந்தோஷமா வாழ்ந்து இருப்பீங்க. எனக்கு விருப்பம் இல்லாத காரணத்துனால மட்டும் தான் உங்களை மறுக்குறது ரொம்ப பெரிய தப்பு. எனக்கு கடைசிவரை உங்க மேல இருக்க கோபம் போகலைன்னா நீங்க இப்படியே இருக்க முடியுமா? அதான்” என்றவள் நிறுத்தி அவன் முகம் காண,

“ஸோ…” என்றவாறு அவளது முகத்தை அழுத்தமாக பார்த்தான்.

“ஸோ எனக்கு எல்லாத்துக்கும் ஓகே” என்க,

“எனக்கு ஓகே இல்லை” என்று பட்டென்று பதில் வந்தது.

கனி திகைத்து காண,

“எனக்கு இது மட்டும் தான் வேணும்னா அது எங்க வேணா கிடைக்கும். பட் எனக்கு உன்னோட காதலோட சேர்ந்தது தான் வேணும். அஃப் கோர்ஸ் நீ சொன்னது கரெக்ட் தான். எனக்கு உணர்வு ஆசை எல்லாம் இருக்கு தான். அதுக்காக உன்னோட நான் சேர மு
ணணடியாது.‌‌ என்னைக்கு உன் கண்ணுல நான் காதலை பாக்குறேனோ அன்னைக்கு தான் இதெல்லாம்” என்று முடித்துவிட,

“அது நடக்கவே இல்லைன்னா?”

“கண்டிப்பா நடக்கும். எதையும் யோசிக்காம தூங்கு” என்றவன் அவளை தன் தோள்மீது படுக்க வைத்து தானும் உறங்கி போனான்.

இங்கு கனிக்கு தான் இந்த இரவு தூங்காத இரவாகி போனது…




 
Well-known member
Messages
377
Reaction score
262
Points
63
Parthi annaiku pannathu thappu than illa nu sollala aana atha manasula vachikitae irupan nu sollura va avanga appa avolo force panni yum open ah venam.nu solli irukanum .illa marriage pannikita onnu ava manasu ah mathikanum athuvum illama ipadi ava panna athu avan ah iva koba tha vida athigam ah hurt pannathu ah
 
Top