• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 25(i)

Messages
47
Reaction score
2
Points
8
*சொல்லாமல்....!*

*மௌனம் 25(i)*

*சில வருடங்களுக்கு முன்..*

"எதேஏஏஏ..மூஞ்ச பாக்கலன்னு தான் இவ்ளோ சீனா..நா கூட திட்டி விட்டுட்டாரோன்னு நெனச்சேன்.."

"அவரு அப்டி திட்ர ஆளு எல்லாம் கெடயாது ஆர்த்தி..பாரு நா பக்கத்து வீட்டுப் பொண்ணு..ஆனா எங்கப்பா சொன்ன வார்த்தக்காக என்ன எவ்ளோ கண்காணிச்சு பாக்கறாருன்னு.."

"அவரு கண்ணு உன்ன மட்டுந்தான் பாக்கும்..உன் போலோ பண்றதும் அவரு கண்ண போலோ பண்றதும் ஒன்னு மாதிரி தான் இருக்கும்..யேன்னா நீ போற எடத்துக்கு எல்லாம் அவரு கண்ணு போகுமே.."

"என்னடி..வாய்க்குள்ள முணுமுணுக்குற..?"

"ச்சே..அப்டிலாம் இல்ல..ஆனா தேவாண்ணா ரொம்ப திட்டுவார்னு சொல்லுவாங்களே..."

"அடி..என்னதிது..இத்தன நாள் தேவா சீனியர உன்னோட க்ரஷ்னு சொல்லிட்டு பாப்ப..இப்போ என்னன்னா அண்ணா அந்தர் பல்டி அடிக்கிற.."

"அது அப்டி தான்..காலத்தோடு காதல் மாறாது..ஆனா க்ரஷ்ஷு மாறலாம்..
இப்போ என்னோட கர்ஷ்ஷு..அதுவும் ஒரு வேற ஒருத்தர்.." என்றவளுக்குள் சில்லென்று ஒரு உணர்வு.

"அது சர் தான்..ஆனா சீனியருக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு டி..நா வினய் விஷயத்த அவர்கிட்ட சொல்லாததுக்கா இருக்கும்..மனசு கஷ்டமா இருக்கு.."

"சரி..சரி..விடு அவரே வந்து பேசுவாரு உன் கூட.."

"இல்லடி..நா வீட்டுக்கு பொய்ட்டு பேசறேன்..ஆனா இன்னிக்கி பெயார்வெல் இருக்குல..அங்கயாச்சும் வச்சி பேசலாம்.."என்றிட்டது தான் தாமதம்,
ஆர்த்திக்கு அழைப்பு வந்தது.

திரையில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் தர்ஷினியின் விழிகளில் தான் மெல்லிய அதிர்வு.
"தேவாண்ணா.." அவள் பதித்து வைத்திருந்தது ஒரு புறம் என்றால் ஆடவன் அழைத்தது இன்னுமொரு அதிர்வாய்.

ஆர்த்தியோ அப்படியே தோழியைப் பார்த்து புன்னகைத்த படி அப்பால் செல்ல பெருமூச்சு விட்டாள்,அவள்.

அலைபேசியை எடுத்து மேசையில் வைத்து ஒரு கன்னத்தை கையால் தாங்கிய திரையில் மின்னிய அந்த விழிகளை பார்த்தவளின் இமைகள் ஒட்டிக்கொள்ளவில்லை.

"என்னா கண்ணு டா சாமி..இந்த கண்ண பாத்தா தானா காதல் வருமே.." தனக்குள் கூறியவாறு இருக்க அதற்குள் அவளருகே வந்த ஆர்த்தியும் தோழியின் செய்கையில் ஒரு கணம் இதழ் விரிக்கத் தான் செய்தாள்.

"என்ன தர்ஷினி..போனயே பாத்துட்டு இருக்க.."

"இன்னிக்கு மூன்று நொடி சீரிஸோட பைனல் எபிசோட்..இன்னிக்கு தேவா பேஸ காட்டுவாங்க..அது தான் எக்சைட்மண்ட் தாங்கல..அதான் செக் பண்ணிட்டு இருக்கேன்.."

"ஆமா..அதுல வர்ர கேரக்டர் அதான் உன் தேவா பேச மாட்டாரா..? கண்ண பத்தியே சொல்லிட்டு இருக்க.."

"அந்த கேரக்டர்கு பேச முடியாது சீரிஸ் ல..அதனால மொத்த நடிப்பும் எக்ஸ்ப்ரஷனும் கண்ணால தான்.."

"ஓஹ்..எத்தன மணிக்கு போடுவாங்க.."

"மதியத்துக்கு அப்றம்..ஒரு நாலர மணி.."

"ஆனா..அந்த டைம் தான் பெயார்வேல் பங்க்ஷன் நடக்குமே.."

"பரவால..குனிஞ்சு படுத்து சரி நா பாத்துருவேன்..எத்தன நாள் நானும் வெய்ட் பண்றது..எனக்கு தேவா தான் முக்கியம்.." சிலாகித்த படி சொல்ல அவள் மனக்கண்ணில் வந்து போனான்,
ஆடவன்.

தலையை உலுக்கிக் கொண்டு நிமிர வித்தியாசமாய் தோழியை நோக்கின,
ஆர்த்தியின் கண்கள்.

அந்த அரங்கமே ஆட்களால் நிரம்பியிருக்க பின் வரிசையில் அமர்ந்திருந்தாள் தர்ஷினி, தோழியர் சகிதம்.

ஆர்த்தி நடுவில் இருக்க கார்த்திகா ஒருபுறம் இவள் மறுபுறம்.

நிகழ்வும் துவங்க கைதட்டல் விசில் சத்தம் என ஆர்ப்பரித்தது,அவ்விடம்.

மூன்று மணிக்குத் துவங்கியிருந்த நிகழ்வது.
மிக விமரிசையாக நடந்து கொண்டிருக்க நான்கு மணி இருபத்தைந்து நிமிடங்கள் என கடிகாரம் காட்டிட தர்ஷினியின் அலைபேசியில் வைத்திருந்த அலாரம் ஒலிக்க கார்த்திகா தான் புருவம் சுருக்கி பார்த்தாள்,தோழியை.

"தேவா டி..நாலர மணிக்கு பைனல் எபிஸோட்.." தோழியின் காதில் கிசுகிசுத்தவாறு அலைபேசியை அவள் ஆராயவும் ஆடவன் மேடையேறவும் சரியாய் இருந்தது.

பாடல் பாடாமல் எப்படியும் அவனை விட்டு விட மாட்டார்கள் என்பது தெரிந்திருக்க அவனுக்குமே தோழர்களின் வேண்டுகோளை புறக்கணிக்க மனம் வரவில்லை.

ஆடவன் மேடையேறிய பின் விசில் சத்தம் காதைப் பிளக்க விழி நிமிர்த்தி பார்த்த தர்ஷினிக்கு மேடையில் நின்றிருந்த தேவாவைக் கண்டதும் சிறிது யோசனை தான்.

அவன் பாடுவான் என்று அவளுக்கு சத்தியமாய் தெரியாது.
ஆர்த்தி அடிக்கடி சொல்லியிருந்தாலும் விளையாட்டுக்காக அவள் சொல்லியிருப்பதாக அவள் நினைத்திருக்க இப்போது கூட பாடத்தான் மேடை ஏறியிருக்கிறான்,
என்று அவள் துளியும் எண்ணவில்லை.

ஆர்த்தியோ படக்கென அவளின் அலைபேசியை பறித்து " இன்னக்காச்சும் அவர பாரு.." கடுப்புடன் மொழிய அன்று கிரிக்கெட் ஆட்டத்தின் போது தான் நடந்து கொண்டதை குறிப்பிட்டுத் தான் இதைக் கூறுகிறாள் என்பது புரிய அவளிதழ்களில் மெல்லிய புன்னகை.

மேடையில் ஏறிய ஆடவனின் விழிகளில் தூரத்தில் இருந்த தர்ஷினியின் முகம் தெளிவாய்த் தெரியாவிடினும் அது அவள் தான் என புரியாது போகுமா..?

அவள் இருக்கிறாள் என்பதாலோ சின்னப் படபடப்பு ஒன்று உருவாகிட என்றும் போல் இடது நெஞ்சை கைகளால் தட்டிக் கொண்டான்,
விரல்கள் கொண்டு.

"தேவா..பாடு டா..பின்னால பாக்காம.." மேடையின் ஓரமாய் நின்று கொண்டிருந்த சிறு புன்னகையுடன் அதட்ட அவனைத் திரும்பி உறுத்து விழித்தவனோ மறுநிமிடமே பாடல் வரிகளை அலைபேசி திரையில் பார்த்திட தோழர்களின் மேல் கொலைவெறியே எழுந்தது உண்மை.

ஒரு ஆணின் சொல்லாத ஒருதலைக் காதல் பற்றிய பாடல் அது.
பாலாவும் கிஷோரும் கெஞ்சிக் கொஞ்சி ஒத்துக்கொள்ள வைத்திருக்க இருந்த கலவரத்தில் அவர்களின் புதிதானதும் புதிரானதுமான நடத்தையை வேறுபிரித்து ஆராய்ச்சி செய்ய மறந்து தான் இருந்தான்,ஆடவன்.

"நாம செய்றோமே இல்லயோ..இவனுங்க நல்லா பண்றாங்க.." முணுமுணுத்தவனோ இன்னுமே பாடலைத் துவங்காது இருக்க கீழே இருந்து சத்தம்.

"சீனியர் ஸ்டார்ட் பண்ணுங்க..சீனியர்.."

"சீனியர்..ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.." அவர்களின் கூச்சலுக்கு செவிசாய்த்தவனின் இதழ்கள் பாடலைப் பாடத் துவங்கி இருந்தது.

என்ன தான் கோபத்துடன் துவங்கினாலும் பாடத் தொடங்கி ஓரிரு நொடிகளிலேயே அதில் மொத்தமாய் மூழ்கியிருந்தான்,
ஆடவன்.

பொதுவாகவே அவன் பாடும் போது அதில் அவனே லயித்து பின் இரசித்துப் பாடுவது உண்மை.
இன்று அவனின் மன உணர்வுகளை ஒப்புவிக்கும் வரிகளை பாடல் கொண்டிருந்ததாலோ என்னவோ இன்னுமே ஆழமாய் இருந்தது,
அவனின் குரலும் அவனின் முகபாவனையும்.

இதற்கு முன்னும் இதை மேடையில் பாடியிருந்தாலும் இப்படி காதல் பாடல் எல்லாம் பாடியது இல்லை,
அவன்.
இதுவே முதல் தடவை.

அவன் பாடத் தொடங்கியதுமே அந்த இடம் அமைதியாகிப் போய்விட தர்ஷினியோ தன்னை மறந்து அவன் குரலில் மூழ்கி விட்டிருந்தாள்.

அவள் விழிகள் விரிந்து இருக்க பார்வை மேடையை மட்டும் தான் தழுவி நின்றது.
முதலில் தேவையில்லை என்று நினைத்திருந்தாலும் பாடலை அவன் இதழ்கள் மொழியத் துவங்கி ஓரிரு நொடிகளிலேயே தன் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டிருந்தது,
அவள் விரல்கள்.

தோழன் முகத்தில் வந்து போன உணர்வுகளை அப்படியே அலைபேசியில் மேடையின் கீழிருந்து வீடியோ செய்து கொண்டிருந்தான்,
கிஷோர்.

பாடத் தொடங்கிய கணம் முதல் அவன் விழிகளை மூடிக் கொண்டது தான்,
திறக்கவேயில்லை.
ஆனால், அத்தனை உணர்வுகளும் அவனின் அழுத்தத்தை மீறி முகத்தில் வந்து போகத் தான் செய்தன.

நிமிடங்கள் கடக்க பாடல் முடிய விழிகளை திறந்து ஆழப் பெருமூச்சு விட்டவனின் இதயத் துடிப்பு அதிகமாகியிருக்க ஒரு நிமிடம் தனை மீறி விழி தாழ்த்தி இதயப்பகுதியை பார்த்திட அவனிதழ்களில் நொடி நேரப் புன்னகை.

அதற்குள் கரகோஷ சத்தம் காதை பிளந்தது.
சட்டென மீண்டு " தேங்க்ஸ்" எனும் வார்தையுடன் கையில் இருந்த ஒலிவாங்கியை கையளித்து விட்டு மேடையில் இருந்து கடகடவென தன்னிடத்துக்கு வந்தமர்ந்தவனோ யாரையும் நிமிர்ந்தும் கூட பார்க்கவில்லை.

தர்ஷினி தன்னைத் தான் பார்த்திருக்கிறாள் என்பது அவனுள் இனம் புரியா படபடப்பை விதைத்திருந்தது என்னவோ உண்மை தான்.

பாலாவோ கிஷோரை பார்த்து ஒற்றைக் கண் அடிக்க கிஷோரும் புன்னகை சிந்தினான்,ஆடவனை விழிகளால் சுட்டிக் காட்டியவாறு.

பாடல் முடிந்தாலும் தர்ஷினியின் செவிகளினோரம் இன்னும் ஆடவனின் குரலின் ஓசை.

"என்னமா..பாடறாரு..?" திகைப்பில் இருந்து மாறாமலே ஆர்த்தியிடம் கேட்க தோழியின் முகத்தை கண்டதும் அவளுள் அப்படி ஒரு சிரிப்பு.

"நா தா அப்போவே சொன்னேன்ல..நல்லா பாடுவாருன்னு.." என்றிட அதற்கு நேர் மாறான உணர்வுகள் கார்த்திகாவின் முகத்தில்.

தர்ஷினி ஆடவனைப் பற்றி புகழ்ந்து பேசுவது அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை.
தேவேந்திரன் அவளிடம் பேசிய தருணம் முதலே அவள் மனதில் தேவேந்திரன் தான் தர்ஷினிக்கு பொருத்தமானவனாய் இருப்பான் என்ற எண்ணம் ஆழமாய் மனதில் வேரூன்றி இந்த பிடித்தமின்மைக்கு அதுவே மொத்தக் காரணமும்.

"எதுக்கு அவர பத்தியே பேசிட்டு இருக்க.." கடுப்புடன் அவள் கேட்க " கேக்க முடிலன்னா காதப் பொத்திக்க.." அதற்கு மேலான கடுப்புன் பதில் சொன்னாள்,
ஆர்த்தி.

"ஐயோ..என் தேவாவ மறந்துட்டேனே.." என்று கத்தியவாறு தர்ஷினி அலைபேசியை எடுத்து அவளின் வெப்சீரிஸை தேடிப் பிடித்து ஓட விட விழிகளில் அப்படி ஒரு ஆர்வம்.

"ஐயோ..தேவா மொகத்த காட்டப் போறானே.." குதூகலித்தவளுக்கு அப்படி ஒரு ஆர்வம் இருந்தது உண்மை.

மெல்லிய வெளிச்சம் மட்டுமே ஊடறுத்து இருந்த இருளான அறையில் தன் கால்களை அகல ஊன்றி நின்றிருந்தான்,
கதாநாயகன்.

அவனின் விரல்கள் தன் முகத்தை மறைத்திருக்கும் துணியின் முடிச்சை அவிழ்த்த பின் அப்படியே சரிந்து துணி நிலத்தில் வீழ்வதாய் அடுத்த காட்சி.

அதன் பின்னே கதாநாயகனின் பிடரிப் பகுதியே காட்சியில் ஓட பொறுமையில்லை,
தர்ஷினிக்கு.

பின் அவனின் முன்புற தோற்றத்தை இருளில் காண்பிக்க தலையில் கையை வைத்து விட்டாள்,
அவள்.

பின்ன மெல்ல மெல்ல இருள் விலகிட தன் முகத்தில் விழும் ஒளிக்கற்றைகளை தடுக்க கதாநாயகனின் ஒற்றை கரம் தன் முகத்தை மறைத்திருப்பதாய் அடுத்த காட்சி.

பாதி மறைத்த முகத்தை கண்டதுமே தர்ஷினிக்கு எதுவோ புரிவது போல்.
வேக வேகமாக மூச்சு வாங்கி காணொலியை முன்னே செலுத்திட பார்த்திட கார்த்திகாவின் கரத்தை நிமிர்ந்து பாராமாலே பற்றியிருந்தாள்,
மறு கரத்தினால்.

நெற்றியின் ஓரம் வியர்வைத் துளிர்க்க திரையிலோ மெதுமெதுவாக தன் கரத்தை எடுத்துக் கொண்டிருந்தான்,
கதாநாயகன்.

முகத்தில் கரத்தை அகற்றினாலும் மங்கலாய் அவன் முகம் காண்பிக்கப்பட சந்தேகமில்லாமல் உறுதியாகிற்று அவளுக்கு, அது தேவா தான் என்பது.

பட்டென தெளிவாய் ஆடவன் முகம் திரையில் தெரிய எதிர்பாரா விதமாய் சிலிர்த்தடங்கியது,
அவள் தேகம்.

மயிர்க்கால்கள் எழுந்து நிற்க விழிகள் தன்னாலே விரிந்து கொண்டன.
அதிலும் அவன் உருவம் முழுதாய் தெரிந்த பின்பு சாவகசாமாய் நின்று இடது புருவத்தை ஏற்றி இறக்கி ஒற்றைக் கண் அடிப்பதாய் அடுத்த காட்சி.

கைகள் நடுங்கி அலைபேசியை நழுவ விட விழ விடாமல் பிடித்துக் கொண்டது,
ஆர்த்தி தான்.

அவ்வப்போது இந்த கண்களை பார்க்கும் போது தேவாவாய் இருக்குமோ என்கின்ற சந்தேகம் எழுந்தாலும் அது ஊர்ஜிதமாகிய பொழுது அவள் நிலை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாய்..

இதயத்தில் யாரோ பட்டாம் பூச்சியை பறக்க விட்டது போன்று இருந்தது.
ஆடவன் மேடையில் இருந்து இறங்கி விட்டான் என்று தெரிந்தும் விழிகள் உயர்ந்து மேடையைத் தான் பார்த்தது.

அவள் உணர்வுகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.
காதல் ஈர்ப்பு என்று எதுவும் இல்லாது ஒரு வித்தியாசமான உணர்வு.

எதையுமே அவளால் வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை.

ஆர்த்திக்கும் அதிர்வு தான்.ஆனால், தர்ஷினியின் அளவுக்கு எல்லாம் இல்லை.

"தர்ஷினி என்ன பண்ணுதுடி..எதுக்கு இப்டி பேயறஞ்ச மாதிரி இருக்க..?"

"ஆர்த்தி..விட்டா எழுந்து குதிக்கனும் மாதிரி இருக்கு..ஹார்ட் புல்லா பட்டர்ப்ளை டான்ஸ் ஆடுது..முடியல என்னால..திரும்ப திரும்ப பாக்கனும் போல இருக்கு.." மனதை மறையாது கூறி விட்டு மீண்டும் அதே காட்சியை தான் ஓடவிட்டன, அவள் விரல்கள்.

எத்தனை முறை பார்த்தால் என்று தெரியாது.
ஒவ்வொரு தடவை பார்த்து முடித்ததும் ஏனோ முன்னே அலைபாய்ந்து ஆடவனைத் தேடின,
அவள் விழிகள்.
 
Top