• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 24

Administrator
Staff member
Messages
521
Reaction score
800
Points
93
ஜென்மம் 24:

உன்னாலே கண்கள்

தள்ளாடி உறங்காமல்
ஏங்கும் என் ஆவி….



“வாங்க வாங்க தம்பி. வாம்மா கனி” என்று மகேஷின் தந்தை சுப்பையா வரவேற்க,

“வாங்க தம்பி. வா கனி” என்று கையை பிடித்து கொண்டார் மகேஷின் தாய் மணிமேகலை.

மகேஷும் தன் பங்கிற்கு அழைத்து உபசரித்தான்.

பார்த்தீபன் இருக்கையில் அமர்ந்து கொள்ள,

கனி மணிமேகலையை பிடித்து கொண்டாள்.

மதுரைக்கு வந்த பிறகு தாயில்லாத குறையை தீர்த்து வைத்தவர். ஊரைவிட்டு கிளம்பும் சமயம் கூறிவிட்டு கூட செல்லவில்லை. திருமணத்திலும் சரியாக பார்த்து பேச முடியவில்லை.

“எப்படி கனி இருக்க?” என்று வாஞ்சையாக வினவ,

“நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று புன்னகையுடன் வின,

“எனக்கென்ன நல்லா இருக்கேன். தம்பி என்ன சாப்பிடுவாரு டீயா? காபியா?” என்க,

“டீயே கொண்டு வாங்கம்மா” என்றவள்,

“வாங்க சேர்ந்தே போடுவோம்” என்று அவருடன் செல்ல,

மகேஷ் மற்றும் சுப்பையா அமர்ந்து பார்த்தீயுடன் பேசி கொண்டு இருந்தனர்.

மணிமேகலையுடன் பேசியபடி இருந்தாலும் கனியின் பார்வை அடிக்கடி பார்த்தீபன் மேல் படிந்து மீண்டது.

நேற்று இரவில் இருந்து இப்படித்தான் சிந்தனையுடன் இருக்கிறாள்.

காரணம் நேற்று அவன் நடந்து கொண்ட முறை தான். ஓடி வந்து எவ்வளவு வேகத்துடன் அணைத்திருந்தான்.

அதுவும் அவன் மன்னிப்பு கேட்கும் போது அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று இதயத்தினை நழுவ செய்திருந்தது.

இப்போது நினைத்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

நேற்றைய நினைவு நிகழ்வில் வந்து போனது.

தூக்க கலக்கத்தில் இருந்தவள் கதவை திறந்த கணம் புயல் போல வந்து இறுக அணைந்திருந்தான்.

மீதி தூக்கமும் பறி போய்விட இவள் தான் மலங்க மலங்க விழித்தாள்.

ஒரு கணம் இது கனவாக கூட இருக்குமோ என்று உள்ளே எண்ணம் பிறந்தது.

ஆனால் சூடான வெப்ப மூச்சு காற்றுடன் அவளது தோளில் உரசி சென்ற இதழும் கரகரத்து மன்னிப்பு கேட்டு வெளியே வந்த குரலும் ஒரு கணம் அவளை வாரி சுருட்டி கொள்ள நிஜமாய் சமைந்திருந்தாள்.

எல்லாம் ஒரே ஒரு விநாடி தான் சடுதியில் அதே வேகத்தில் அவளை விடுவித்தவன் வேக வேகமாக அறைக்குள் நுழைந்துவிட,

கனி தான் ஒரு கணம் எதில் இருந்தும் வெளிவர இயலாமல் திணறி போனாள்.

அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து கிடைத்த அவனது அருகாமையும் உடல் தந்த வெப்பமும் அவளை ஒரு தடுமாற செய்திட இரண்டு எட்டு வைத்தவள் நீள்விருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

தன்னை சமன் செய்து கொள்ள சில கணங்கள் தேவைப்பட்டது அவளுக்கு.

நொடிகள் கடந்ததும் மனது தெளிவாய் சிந்தித்தது. இவன் இப்படி நடந்து கொள்ளும் அளவிற்கு என்ன நடந்து இருக்கும்.

அதுவும் அந்த மன்னிப்பு அந்த குரலில் இருந்த உணர்வு நிச்சயமாக குற்றவுணர்ச்சி தான். இந்தளவு வருந்துவதற்கு என்ன காரணமாக இருக்கும். என்ன நடந்து இருக்கும் என்று கேள்வி எழுந்தது.

ஆனால் பதில் ஒன்றும் புரிபடவில்லை. மகேஷிடம் கேட்கலாம் என்று எண்ணி அலைபேசியை எடுத்தவள் பார்த்தீ வரும் அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

சற்று முன்பு இருந்த அத்தனை உணர்வுகளும் துடைக்கப் பட்டிருக்க நிர்மலான முகத்துடன் இறங்கி வந்தான்.

கனியின் பார்வை ஆராய்ச்சியாக அவன் மீது படிய எதுவுமே நடவாத பாணியில்,

“சாப்பிடலாமா?” என்று வினவ,

“ஹ்ம்ம்…” என்று அனிச்சையாக தலையசைத்தவளது முகத்தில் சிந்தனை கோடுகள்.

மகியிடம் நாளை கேட்டு கொள்ளலாம் என்று எண்ணியவள் அமர்ந்து அவனுக்கு பரிமாறிவிட்டு தானும் உண்டாள்.

அதன் பிறகு கனியின் பார்வை அவ்வபோது அவன் மீது விழுகிறது.

அவளை பார்க்க வைத்தவனோ எதுவுமே நிகழாத தோரணையில் சுற்றுகிறான்.

“என்ன சைட்டிங்கா? ஏன் திருட்டு தனமா பாக்குற? உனக்கு தான் புல் ரைட்ஸ் இருக்கே” என்று சிரிப்புடன் அருகில் கேட்ட மகியின் குரலில் நினைவிற்கு வந்தவள் சடுதியில் மணிமேகலையை திரும்பி பார்க்க அவர் தேநீரை வடிகட்டி கொண்டிருந்தார்.

நண்பனை முறைத்தவள்,

“அம்மாக்கு கேட்டுட போகுது” என்று எச்சரிக்க,

“அதெல்லாம் கேட்காது” என்றவன்,

“என்னோட கேள்விக்கு பதில் சொல்லு” என்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று முறைத்தாள்.

“ஆஹான் நம்பிட்டேன். அப்புறம் ஏன் அப்படி பாத்திட்டு இருந்த” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க,

“ப்ச் நான் ஏதோ திங்கிங்ல பார்த்தேன்” என்றவள்,

“ஆமா நேத்து எங்க போயிருந்திங்க நீங்க?” என்க,

“சும்மா தான் ஊரை சுத்தி பாத்திட்டு இருந்தோம்”

“ஓ… நேத்து எதுவும் நடந்துச்சா டிப்பரண்டா? இல்லை நீ ஏதும் என்னை பத்தி சொன்னியா?”

“இல்லையே ஏன் கேக்குற?” என்றவனிடத்தில் பதில் கூற ஒரு நொடி தடுமாறியவள்,

“நத்திங்” என்றுவிட்டு மணிமேகலையுடன் வெளிய நகர,

மகியின் இதழ்களில் அர்த்த புன்னகை பூத்தது‌.

அதன் பிறகு காலை உணவு நேரம் சிறப்பாக கழிந்தது.

பார்த்தீபன் மகியிடம், “சரி போய்ட்டு வர்றோம்” என்றுவிட்டு பெரியவர்களிடம் கூற செல்ல,

இன்னும் சிறிது நேரம் இருந்து வரலாம் என்று எண்ணி இருந்தவள்,

“கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாமா?” என்றிட,

“எனக்கு ஒரு வொர்க் இருக்கு கனி” என்றான் பார்த்தீ.

‘இந்த ஊர்ல என்ன வேலை?’ என்று எண்ணியவள் அதனை கேட்காது,

“அப்போ நீங்க போய் வொர்க்க முடிச்சிட்டு வாங்க. நான் அதுவரை இங்க இருக்கேன்” என்க,

“நோ நீயும் என்கூட வரணும். இன்னொரு நாள் வந்து புல்டே ஸ்பெண்ட் பண்ணிக்கோ” என்று முடித்துவிட,

இவளும் வேறுவழியின்றி தலையசைத்து வைத்தாள்.

கூடவே என்னை எதற்கு அழைத்து செல்கிறார் என்று வேறு கேள்வி எழுந்தது‌.

எங்கே என்று கேட்டால் நிச்சயமாக பதில் வராது என்பதால் அமைதியாக மகிழுந்தில் ஏறி அமர்ந்தாள்.

பல நிமிடங்கள் பயணம் அமைதியாக தொடர கரடிக்கல் அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நின்றது அவர்களது மகிழுந்து.

கனி பார்த்தீயை கேள்வியாக பார்க்க,

“இறங்கி வா” என்றவன் உள்ளே செல்ல தானும் அவளை பின்தொடர்ந்தாள்.

காப்பக பொறுப்பாளர் வெளியே வந்து,

“வாங்க பார்த்தீபன் சார்” என்று புன்னகையுடன் வரவேற்றவர்,

“வா கனி” என்க,

அவருக்கு புன்னகையுடன் தலை அசைத்தவள் பார்த்தீபனை இவருக்கு எப்படி தெரியும் என்று சிந்திக்க,

அவரும் பார்த்தீபனும் ஏதோ பேசி கொண்டு இருந்தனர்.

“சரியா லஞ்ச் டைம்க்கு வந்து இருக்கிங்க. இன்னும் பைவ் மினிட்ஸ்ல ஸ்டூடன்ட்ஸ் வந்துடுவாங்க” என்க,

“முன்னாடியே வர பிளான் பண்ணேன். பட் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு அதான் லாஸ்ட் மினிட்ல வந்து இருக்கோம்” என்றவன்,

“எல்லாம் கரெக்டா வந்துடுச்சா? உங்களுக்கு ஓகேவா?” என்று வினவ,

“ஹ்ம்ம் வந்திடுச்சு சார். இப்போ தான் செக் பண்ணோம்” என்றார்.

கனி தான் இருவரும் தெரியாத மொழியில் பேசி கொள்வது போல பார்த்திருந்தாள்.

சரியாக ஐந்து நிமிடத்தில் உணவு இடைவேளை வர வரிசையாக வந்த ஒவ்வொரு குழந்தை கையிலும் ரோஜா பூ இருக்க கனியிடம் வந்தவர்கள்,

“ஹாப்பி மேரிட் லைஃப் கனிக்கா” என்று ஒன்றாக நீட்ட,

ஒரு நொடி திகைத்தவள் முகத்தில் பின் சிரிப்பு ஒட்டிக்கொள்ள,

“தாங்க்ஸ் செல்லக்குட்டீஸ்” என்று பெற்று கொள்ள,

ஒவ்வொரு வகுப்பினரும் விதவிதமான பூக்களுடன் வாழ்த்துக்களை தெரிவிக்க,

கனியின் முகத்தில் புன்னகை பெரிதாய் விரிந்தது.

இதில், “ஏன் எங்களை உனது திருமணத்திற்கு அழைக்கவில்லை” என்று கேள்வி வேறு,

கனி தான் அவர்களது அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.

இடையில் ஒரு கணம் சிரிப்புடன் கணவன் மீது பார்வை பதிந்தது.

“அக்கா மாமா உங்க கல்யாணத்துக்கு ட்ரீட்டா எங்களுக்கு பிரியாணி புது ட்ரெஸ் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்காங்க” என்று பதினான்கு வயது பெண் ஒருத்தி மகிழ்வுடன் கூற,

“அப்படியா?” என்றவள்,

“இது எப்போ?” என்று கணவனை காண,

“குழந்தைங்களு பசிக்கும் வா சாப்பாடு எடுத்து வைப்போம்” என்றவன் நகர,

கனி தான் இதெல்லாம் எப்போதடா செய்தான் இவன் என்று எண்ணியபடி அவன் பின்னே சென்றாள்.

பார்த்தீபனே தனது கையால் ஒவ்வொருவருக்கும் பரிமாற கனி ஏனோ சிரிப்புடன் அவனை பார்த்திருந்தாள்.

ஏனோ இப்போது அவள் கண்களுக்கு அழகாய் தெரிந்தான்.

நிச்சயம் மகி தான் இந்த காப்பகத்தை பற்றி கூறி இருப்பான் என்று புரிந்தது.

தானே குனிந்து நிமிர்ந்து ஓடியாடி குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் பார்த்தீபன் அவளுக்கு புதிதாய் தெரிந்தான்.

தொழிலதிபர் கிரிதரனது மகன் பார்த்தீபன் இல்லை இவன். கனிக்காக மாறி இருப்பவன் என்று புரிந்தது.

தானும் உடன் உதவி புரிந்து பரிமாறினாள்.

பிறகு தங்கள் கையாலே புது உடையை கொடுத்தார்கள்.

விடை பெற்று கிளம்பும் சமயம் குழந்தைகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கனியை பேருவகை கொள்ள செய்தது‌.

இன்னொரு நாள் மீண்டும் வருவதாக கூறி விடைபெற்று வந்தாள்.

அமைதியாக சென்ற பயணத்தை கலைக்கும் விதத்தில்,

“என்னோட சர்ப்ரைஸ் எப்படி?” என்ற பார்த்தீயின் குரல் கேட்க,

“ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது தாங்க்ஸ் பார் யுவர் வொண்டர்புல் கிஃப்ட்” என்றவளது குரலில் உண்மையான மகிழ்வு இருந்தது.

அதனை உள்வாங்கியவன் சிரிப்புடன் அவளை நோக்க,

“உங்களுக்கு எப்படி இந்த ஹோம் தெரியும் மகி சொன்னானா?” என்று வினவ,

“ஹ்ம்ம் ஆமா‌. நேத்து நைட் இங்க தான் வந்தோம்”

“ஓ… வேற எதுவும் சொன்னானா?”

“ஹ்ம்ம்”

“அதான் நைட் அந்த ரியாக்ஸனா?” என்றிட,

அவனிடத்தில் சில கணங்கள் மௌனம்.

“அதுக்காக தான இதெல்லாமா? நீங்க நீங்களா இருங்க எனக்காக இதெல்லாம் செய்ய தேவையில்லை” என்று கனி கூற,

“உனக்காக நான் இதை பண்ணலை. எனக்காக பண்ணேன். என்னோட மனநிறைவுக்காக” என்று சடுதியில் பதில் அளித்தான்.

இப்போது அவள் மௌனியாகி போனாள்.

“சாரி…” என்று மெதுவாய் வருத்தத்தை தாங்கி வந்தது அவனது குரல்.

“நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க? சாரி சொல்ற அளவுக்கு நீங்க எதுவும் பண்ணலையே?”

இத்தனை நேரம் இருந்த இதம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

இவள் கோபப்பட்டால் கூட தாங்கி கொள்ளலாம் இப்படி தள்ளி வைத்து பேசினால் என்ன கூறுவதென்று அவனுக்கு தெரியவில்லை.

“என்னை ரொம்ப தேடுனீயா?”

“நான் ஏன் உங்களை தேடணும். உங்களுக்கு எனக்கும் என்ன உறவு?” என்றவள்,

“மோர் ஓவர் என்னை நம்பாதவங்களை நான் எப்பவும் என் வாழ்க்கைக்குள்ள அனுமதிக்க விரும்ப மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாக மொழிய,

இவனுக்குள் இங்கே பெரிதான போராட்டம்.

சடுதியில் வாகனத்தை நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி,

“கனி” என்று அவளது கையை பிடிக்க,

“பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த காயத்துக்கு இப்போ மருந்து போட ட்ரை பண்ணாதிங்க மிஸ்டர் பார்த்தீபன். அது எப்பவோ ஆறாத வடுவாகிடுச்சு” என்று அவனது கரத்தை விலக்கியவள்,

“காரை‌ எடுங்க” என்றுவிட்டு விழிகளை மூடி சாய்ந்துவிட்டாள்.

இங்கு பார்த்தீபன் தான் அவளை சில நிமிடங்கள் வெறித்துவிட்டு மகிழுந்தை எடுத்தான்.

அதன் பிறகான பயணம் முழுவதும் ஒருவித ஆழ்ந்த அமைதி ஆட்சி செய்தது.

வீட்டை அடைந்ததும் கனி விறுவிறுவென இறங்கி அறைக்குள் சென்றுவிட,

பார்த்தீபன் நீள்விருக்கையில் அமர்ந்துவிட்டான்.

மனதில் நேற்றைய நிகழ்வு நழுவி சென்றது.

கனியின் உதவும் மனது பற்றி அறிந்திருந்த பார்த்தீபன் அவளை மகிழ்விப்பதற்காக மகியிடம் இதனை பற்றி நேற்று பேசியிருந்தான்.

அதற்காக தான் நேற்று இரவு இருவரும் வெளியே சென்றனர்.

கரடிக்கல் சென்று காப்பகத்தில் நேரடியாக அனைத்தையும் பேசிவிட்டு வரும் போது தான் மகி கனியை பற்றி கூறி இருந்தான்.

பார்த்தீ, “நான் லாஸ்ட் மந்த் கனியை சென்னையில ஒரு ஆசிரமத்தில பாத்தேன் மகேஷ்” என்று நடந்ததை கூற,

“ஓ… அதான் இந்த சர்ப்ரைஸ் பிளானா சார்?”

“ஆமா மகேஷ். சம்பாதிக்கிறதே பத்தாம இன்னும் வேணும்னு ஓடுற காலத்துல ஒரு ஆசிரமத்தையே பாத்துக்கிறா” என்று கூற,

“பார்த்தீ சார். கனியை பத்தி இன்னும் உங்களுக்கு முழுசா தெரியலை. அந்த ஒரு ஆசிரமத்தை பாக்குறதுக்கே இவ்ளோ ஆச்சரியப்பட்றீங்களே இதே மாதிரி இன்னும் இருபத்தி ஏழு ஆசிரமத்தை பாத்துக்குறா” என்றதும்,

“என்ன?” என்றவனது குரலில் ஏகமாய் அதிர்ச்சி.

“ட்வென்டி செவன்? எப்படி?” என்று அதிர்ச்சி விலகாது கேட்க,

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு பார்த்தீபன் சார்” என்று சிரித்தவன்,

“நீங்க என்ன நினைக்கிறீங்க சார்.‌ நீங்க கொடுக்குற சம்பளத்தை வச்சு அவ இதெல்லாம் செஞ்சிட்டு இருக்கான்னா. மீனாட்சி பாட்டியோட மொத்த சொத்தும் அதுல இருந்து வர்ற வருமானம் எல்லாத்தையும் வச்சு பாத்துக்க விட்டாலும் அது பத்தலை. ராப்பகலா கண் முழிச்சு ட்ரேடிங் கத்துக்கிட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறா”

“...”

“அது எல்லாமே மத்தவங்களுக்கு உதவி பண்ணதான். இன்னுமின்னும் உதவி செய்யணும்னு தான் நிறைய புக்ஸ் படிச்சு கத்திட்டு இருக்கா. தமிழ் நாட்டுல இருக்க எல்லா ஆதரவற்றோர் இல்லத்தையும் பாத்துக்கணும்னு தான் அவ ஆசை லட்சியம் அதுக்காக தான் உழைச்சிட்டு இருக்கா. இந்த ஊர்ல கூட நிறைய பேருக்கு படிக்க உதவி பண்ணிட்டு இருக்கா. நானும் அவளுக்கு உதவியா‌ இருக்கேன்”

“...”

“சின்ன உதவி செஞ்சா கூட விளம்பரபடுத்துற இந்த காலத்துல இத்தனை பேரை வாழ வச்சிட்டு இருக்கவ இதை யாருக்கும் தெரியாம பண்ணிட்டு இருக்கா. நிறைய பேர் கிட்ட டொனேஷன் கூட வாங்கிட்டு இருக்கா. அவ நினைச்சா எல்லார் மாதிரியும் சம்பாதிச்சு தான் உண்டு தான் வாழ்க்கை உண்டுன்னு வாழலாம் ஆனால் அவ செய்ய மாட்டா” என்றதும் பார்த்தீபனது பார்வை கேள்வியாக விழுந்தது.

“நான் கூட இதை அடிக்கடி கேட்டு இருக்கேன். அதுக்கு அவ பெருசா ஒன்னுமில்லை ஒரு அநாதையோட கஷ்டம் இன்னொரு அநாதைக்கு தான் புரியும்னு வச்சிக்கோவேன். நம்பின எல்லாரும் கைவிட்டு நீ அநாதை உனக்கு யாருமே இல்லைன்னு விட்டப்போ ரொம்ப வலிச்சது.‌ அதே மாதிரி அந்த குழந்தைங்களை யாரும் சொல்லிட கூடாது‌. நான் இருக்கேன்னு அவங்களுக்கு நான் சொல்லணும். செயல்ல காட்டணும் அதுதான் இதையெல்லாம் செய்ய காரணம்”

“...”

“இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்யணும்.‌ அவங்க எல்லாம் படிச்சு சொந்த கால்ல நிக்கணும்.‌ எங்கேயும் யார்க்கிட்டேயும் அவமான பட கூடாது. இதுக்கும் மேல ஒரு சுயநலம் தான். என்னை அநாதைன்னு சொல்லி விரட்டுனவங்க முன்னாடி எனக்காக எவ்ளோ பேர் இருக்காங்க பாருன்னு காட்டணும்னு ஒரு எண்ணம்னு சொன்னா” என்றவன்,

“உலகத்திலே ரொம்ப பெரிய வலி எதுன்னு தெரியுமா பார்த்தீ சார்” என்று அவன் முகம் கண்டான்.

பார்த்தீயிடத்தில் நிச்சயமாக பதில் இல்லை.

“நம்ப உலகமா நினைச்சு இருக்கவங்க நம்மள துளியும் நம்பாம உதாசீனப்படுத்திட்டு போறது. நீங்க அதை தான் கனிக்கு கொடுத்து இருக்கீங்க” என்றதும் பார்த்தீ முற்றிலும் முதலுமாக அதிர்ந்து உடைந்து போயிருந்தான்.

எவ்வளவு தூரம் ஒரு சிறு பெண்ணை தான் வருத்தி இருந்தால் அவள் இத்தைய வார்த்தையை கூறி இருப்பாள்.

எதை செய்தும் சரி செய்ய முடியாத பிழையை செய்துவிட்டேன்.

இந்த பத்து வருடத்தில் எவ்வளவு துன்பப்பட்டாளோ தனிமையில் வாடினாளோ? தன்னையே உலகமாய் எண்ணி இருந்தவளது இதயத்தை சில்லு சில்லாக உடைத்த்திருக்கிறேனே என்று தன் மீதே ஏகமாய் கோபம் வருத்தம்.

அதன் பிறகு மகியும் எதுவும் பேசவில்லை பார்த்தீயும் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை.

வாகனத்தில் வந்து இறங்கியதும் அவளை ஓடி சென்று அணைத்து கொண்டவனுக்கு அவளது இத்தனை வருட வலிகளை தன்னுள் வாங்கி கொள்ளும் தவிப்பு எழுந்தது.

தாள முடியாத குற்றவுணர்ச்சியின் காரணமாக தான் அவளிடத்தில் மன்னிப்பை வேண்டி இருந்தான்.


தான் செய்த தவறை ஒற்றை மன்னிப்பில் சரி செய்ய இயலாது என்று உணர்ந்தவன் சடுதியில் அவளை விட்டுட்டு அறைக்குள் நுழைந்து இருந்தான்.

அதன் பிறகு எதுவுமே நடக்காத பாவனையில் இருந்தது எல்லாமே குற்றவுணர்ச்சி மட்டும் தான்.

இங்கு கனியும் இவனில்லாத இந்த பத்து வருட வாழ்வின் போராட்டங்களை தான் திருப்பி பார்த்து கொண்டிருந்தாள்…



 
Well-known member
Messages
377
Reaction score
262
Points
63
Mozhi ku andha vayasula nadanthathu thappu than athula parthi hurt pannathu rombhavae thappu than but athuku main reason avan kuzhandhai poi solla thu apadi nu nenacha andha ennam atha andha vayasula yae prathyu nalla use pannikita ah
 
Top