• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 24(i)

Messages
47
Reaction score
2
Points
8
*சொல்லாமல்....!*

*மௌனம் 24(i)*

*சில வருடங்களுக்கு முன்..*

தர்ஷினியோ கையைப் பிசைந்து கொண்டு பாலாவைப் பார்த்திட கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர்களைக் கண்டதும் கொஞ்சமாய் கோபம்.

"சீனியர்..சீனியர்..வேணா சீனியர்..ஏதாச்சும் ப்ராப்ளம் வந்துரப் போகுது..விடுங்க சீனியர்.." அவள் கத்தியது எல்லாம் அவன் காதில் விழுந்தாலும் மும்முரமாக வினய்யை வெளுத்து வாங்குவதிலேயே குறியாய் இருந்தான்,
ஆடவன்.

எப்படி அவனைத் தடுப்பதென்றும் தோன்றவில்லை.
அவனின் கையை பிடித்து நிறுத்தவும் அவளுக்கு பெரும் தயக்கம்.

அருகே இருந்த சிறு குச்சியை எடுத்து அவனின் முதுகை சுரண்ட சுற்றி இருந்தவர்களின் பார்வை அவள் மீது விசித்திரமாய் படிந்தது ஏனோ அவளுக்குப் புரியவில்லை.

பட்டென்று ஒரு பார்வை அவளையும் அவளின் கையில் இருந்து குச்சியையும் மாறி மாறி பார்த்தவனுக்கு அந்த நேரம் வினய்யை பற்றி தன்னிடம் சொல்லாதது பற்றி அவள் மீதும் கோபம் இருந்ததே.

உறுத்து விழித்து கடுப்புடன் மீண்டும் வினய்யைத் தாக்க மீளவும் குச்சியால் சுரண்டினாள், அவள்.

இதுவே வேறு பெண் என்றால் நிச்சயம் அவளின் கன்னம் வீங்கியிருக்கும்.
எந்தப் பெண் அந்த இடத்தில் இருந்தாலும் ஆடவனின் நடவடிக்கை இவ்வாறு தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், அவனிடம் உரிமை எடுக்க விட்டிருக்க மாட்டான் என்பது சர்வநிச்சயம்.

"இவ ஒருத்தி.." தனக்குள் முனகியவனுக்கு அவளை அங்கிருந்து அனுப்பி விட்டால் போதுமென்று இருந்தது.

வினய்யை அப்படியே விட்டு விட்டு அவளருகே யாருக்கும் கேட்காது அடிக்குரலில் "என்னடி..? எதுக்கு சொராண்டிட்டு இருக்க..?" கடுப்புடன் கேட்டிட அவனின் விளிப்பில் அவள் முகம் பேயறைந்தது போல் ஆனது.

அவளறிந்த தேவா பெண்களுக்கு அத்தனை கண்ணியம் தருபவன் ஆயிற்றே.

"உன்னத் தான் கேக்கறேன்.." அவன் மீண்டும் அழுத்திச் சொல்ல திடுக்கிட்டு கலைந்தவளுக்கு புன்னகையுடன் இருந்த அவன் முகமும் கடுப்புத் தெறித்த அவன் குரலும் மிரட்சியைக் கொடுத்தன.

"இ..இல்..இல்ல சீனியர்..சண்ட வேணாமே..எல்லா..எல்லாரும் உங்களத் தான் பாக்கறாங்க.." விழிகளை சுற்றிச் சுழலவிட்டு சொன்னவளின் கூற்றை அவனால் ஏற்காமல் இல்லை.

கடைவாய் உதடு கிழிந்து இரத்தம் வந்த வினய்யினை பார்த்து பார்வையாலே தன்னை பின்தொடரச் சொன்னவனோ வேக எட்டுக்களுடன் சட்டைக் கையை மடித்து விட்டவாறு நடந்திட அவனின் பின்னே பயத்துடன் நடந்து சென்றாள்,
தர்ஷினி.

ஓரமாய் ஒரு இடத்துக்கு இழுத்து வந்து வினய்யின் கைகளை ஆடவன் முறுக்க அவனுக்கு வழியில் உயிர் போனது.

"தேவா விடு..விடு..வலிக்குது தேவா.."

"........."

"தேவா ப்ளீஸ் விடு ரொம்ப வலிக்கிது.." அவனின் அலறலை துளியும் பொருட்படுத்தவில்லை,ஆடவன்.

தர்ஷினிக்கு தான் பீதியாகிற்று.
உடனே ஆர்த்திக்கு அழைப்பெடுக்க அவளோ அழைப்பை ஏற்காதிருக்க கடுப்பாகியது.

அந்த பரந்த மரத்தின் பின்னே யாரும் இல்லாதிருக்க வினய்யோ தேவாவிடம் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க தோழனின் செயலை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்,
தோழர்கள்.

தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆடவனின் தோழன் மீது தர்ஷினிக்கு கொலைவெறியே எழுந்தது,உண்மை.

"அண்ணா..ப்ளீஸ் சீனியர அடிக்க வேணான்னு சொல்லுங்கண்ணா.." பாலாவைப் பார்த்து பரிதவிப்புடன் அவள் சொல்ல அவனின் இதழ்கள் விரிந்திற்று.

"அண்ணா..என்னண்ணா சிரிக்கிறீங்க..சீனியர் வம்புல மாட்டிக்கப் போறாரு னா.."

"ஐயோ விடுமா..அவன் ஒன்னும் வம்புல மாட்டிக்க மாட்டான்..வேணுன்னா நீயொன்னு பண்ணு.."யோசிப்பது போல் பாவனை செய்து அவளிடம் கிஷோர் சொல்ல அவளின் விழிகளில் எதிர்பார்ப்பு மின்னியது.

"என்ன சீனியர்..?"

"அது ஒன்னுல்ல..நீ மெதுவா அவன் கிட்ட போய்.."

"மெதுவா போனா வினய் ஹாஸ்பிடல்ல தான் படுத்துருப்பான் சீனியர் அடிக்கிற அடில.."

"அட குறுக்க பேசாம கேளுமா..அவன் கிட்ட போய் சீனியர் சீனியர் எனக்கு இப்டி அடிதடி பண்ற ரகட் பாய்ஸ் பிடிக்காது..எதுலயும் நிதானமா இருக்குற பசங்கள தான் புடிக்கும்னு சொல்லு.." என்றிட "பைத்தியமா இவன்..?" எனும் ரீதியில் அவள் பார்வை.

பாலாவுக்கு தோழனின் கூற்றிலும் தர்ஷினியின் புரியாத முக பாவத்திலும் சிரிப்பு பொத்துக் கொண்டு வர ஏனோ அடக்க முடியவில்லை.

தனை மீறி அவன் சிரித்து விட கிஷோரும் சிரித்து விட்டான்.
தர்ஷினிக்கு தலை வலித்தது.

"என்ன சீனியர்..ஐடியா கேட்டு சிரிச்சிட்டு இருக்கீங்க..?"அவள் மனத்தாங்கலுடன் சொல்ல பாலாவுக்கு அவளின் நிலையை பார்க்க பாவமாய்த் தான் இருந்தது.

"நெஜமா தான் சொல்றேன்..நீ போய் சொல்லு..அவன் நிறுத்திருவான் சண்டய..இல்லன்னா எனக்கு ஓங்கி அடி நீ திரும்ப வந்து.." அவன் சொல்லி முடிக்கும் முன் தோழனின் காலில் ஓங்கி மிதித்திருந்தான்,பாலா.

தர்ஷினிக்கு இருந்த பதட்டத்தில் எதையும் யோசிக்க இயலவில்லை.

விடுவிடுவென நடந்து அவனருகே சென்றிட அவளின் வருகையை அவனைக் கொஞ்சம் சமாதானப்படுத்தியது போலும்.

வினய்யின் சட்டைக் காலரை விட்டு விட்டு அவள் புறம் திரும்பி நிற்க வேகமாய் நடந்து வந்தவளுக்குள் இருந்த தைரியம் அவனின் முகத்தில் ஜொலித்த கோபத்தை கண்டவுடன் கொஞ்சமாய் கரையத் துவங்கிற்று.

"என்ன..?" ஒரு கரத்தை இடுப்பில் குற்றி மறு கரத்தின் பெருவிரலால் புருவத்தில் கீறிய படி கேட்டான்,ஆடவன்.

"அ..அது..அது சீனியர் எனக்கு இப்டி சண்ட போட்ற பசங்கள புடிக்காது..எதயும் நிதானமா யோசிக்கிற ஆளுங்கள தான் புடிக்கும்.." சிறிதும் யோசியாமல் கிஷோர் கூறியதை அப்படியே ஒப்புவிக்க முதலில் அவள் கூறுவது புரியவில்லை,ஆடவனுக்கு.

சில நொடி கிரகிப்பின் பின்னே அது புரிந்திட வார்த்தைகளை ஒப்புவித்தது அவளென்றாலும் வார்த்துக் கொடுத்து தோழர்கள் தான் என்று புரியாது போகுமா..?

தூரமாய் நின்றிருந்த தோழர்களை உறுத்து விழிக்க கிஷோருக்கு சிரிப்புத் தாளவில்லை.
தோழனைப் பார்த்து சிரித்த படி கண்ணடிக்க அருகே இருந்த கல்லை எடுத்து அவர்கள் மீது எறிந்தவனின் பார்வை அவள் புறம் திரும்பியது.

"ஓகே ரைட்ட்ட்ட்..உனக்கு ரகட் பாய்ஸ் புடிக்காதுல..?" ஆழ்ந்த குரலில் அவன் கேட்டிட கிஷோரை ஓரக் கண்ணால் பார்த்தவாறு ஆமென்பதாய் அசைந்தது,
அவள் சிரசு.

"ஈஸ் இட்..இனிமே புடிக்கும்.." என்றவனோ மீண்டும் வினய்யை வெளுத்து வாங்க பெண்ணவளுக்கு தான் ஐயோவென்றானது.

அவனால் வினய்யின் செயலை விட தர்ஷினி தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோபமே அதிகமாய்.

மொத்த கோபத்தையும் வினய் மீது காட்ட சாரமாறியாய் விழுந்தன,
அடிகள்.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
கசங்கிய சட்டையுடன் எழுந்து நின்ற வினய்யை பார்க்கும் போதே தன்னால் தானே இந்த நிலை என்கின்ற எண்ணம் அவள் மனதில் எழ சிறு வலி மனிதாபிமானத்தினால்.

நல்ல அடி தான்.
புறத்தோற்றத்திலேயே ஆடவன் வெளுத்துக் கட்டியிருப்பது புரிந்திட கெந்திக் கெந்தி நடந்தான்,
வினய்.

அவன் சென்று முடிந்ததும் தான் தாமதம்,
ஆடவன் விழிகளாலேயே அவளை போகச் சொல்ல பின்னே திரும்பி திரும்பி பார்த்த படி நடந்தாள்,
அவள்.

அவளின் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை அசைத்தாலும் தன்னிடம் சொல்லாத கோபம் அவளிடம் முகம் கொடுத்து பேசிட தடையாய்.

வினய் அவளை தொல்லை செய்வது அவனின் செவியை எட்டி இருந்தாலும் அவள் தன்னிடம் கூறவில்லை என்பதால் பெரிதான பிரச்சினை ஒன்றும் இல்லை என ஆடவன் நினைத்திருக்க ஏனோ அவளின் கரத்தை வினய் பற்றிப் பிடித்தது ஆடவனை வெகுவாகவே கோபப்படுத்தி இருந்தது.

அவள் மறையும் வரை அவனின் பார்வை அவளைத் தான் தொட்டு நின்றது.
ஆனால், அவள் தான் அதை உணர்ந்திடவில்லை.

பாலாவும் கிஷோரும் தோழனின் அருகே வர முன்னரே இன்னொரு பையன் தேவாவைத் தேடி தலையில் கை வைத்துக் கொண்டனர்,தோழர்கள்.

"என்னடா இது..இவன் கிட்ட வந்து வசமா சிக்கிட்டான்.." உள்ளுக்குள் நொந்து கொண்டவர்களுக்கு அந்தப் பையன் தோழனிடம் வாங்கிக் கட்டுவது உறுதி என்கின்ற எண்ணம்.

அந்த மரத்தின் பின்னே போடப்பட்டிருந்த சிறு மதிலில் ஏறி அமர்ந்திருந்த ஆடவனுக்கு இன்னும் கோபம் தீராதிருக்க அடிக்கடி தன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்,
அவன்.

அதற்குள் அந்த பையன் அவனருகே ஆடவனின் நெற்றியில் முடிச்சுக்கள்.
பாய்ந்து இறங்கியவனை பயத்துடன் பார்த்தன,
அவன் விழிகள்.

"சீனியர்.."

"ம்ம்..நீங்க அந்த லெட்டர் கொடுத்த பையன் தான.."

"ஆமா சீனியர்..அந்த பையன் தான்.."

"ஆமா எதுக்கு இப்போ வந்துருக்க.."

"அது சீனியர் நீங்க சொன்ன மாதிரி தர்ஷினின சைலன்டா லவ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.."

"வாட்ட்ட்..?" அதிர்வுடன் விழி விரித்துக் கேட்டான்,
தேவா.

தோழனின் அருகே வந்து கொண்டிருந்த பாலாவுக்கும் கிஷோருக்கும் அவன் கூறியது நன்றாகவே கேட்டிருக்க "போச்சுடா.." உள்ளுக்குள் நினைக்க மட்டுமே முடிந்தது,அவர்களால்.

"ஈஸ் இட்ட்ட்ட்..ஓகே ரைட்ட்ட்.." அவன் குரலிலும் சரி உடல் மொழியிலும் சரி அப்படி ஒரு இறுக்கம்.

"ஓகே..உங்க பேரென்ன ஜுனியர்..?"

"இந்தர்.."

"இந்தர்..?"

"தேவேந்திரன் சீனியர்..இந்தர்னு பேசுவாங்க.." அவன் சொல்லிட வியப்பில் மேலெழுந்தன, தேவாவின் புருவங்கள்.

"தேவா வீட்டுக்கு முன்னாடி வீடு தான.."

"தேவாஆஆஆஆ.."

"ஐ மீன் தர்ஷினி.."

"ஆமா சீனியர்..அவங்க வீட்டுக்கு முன்னாடி வீடு தான்..இப்போ பாட்டி வீட்ல தங்கி இருக்கேன்..அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவேன்.."

"ம்ம்.."

"ரொம்ப நன்றி சீனியர்..அன்னிக்கி கூப்டு பேசுனதுக்கு.."

"ஜூனியர் ஒன்னே ஒன்னு சொல்றேன்..தேவா மேல லவ்வ வளத்துக்காம இருக்கறது தான் உங்களுக்கு சேப்.." என்றிட சுர்ரென்று எகிறிற்று,தேவேந்திரனுக்கு.

தேவேந்திரனின் முகத்தில் வந்த மாற்றங்களை தனக்குள் உள்வாங்கியவனுக்கு பெரும் கோபம் கிளர்ந்தெழுந்தது,
உண்மை.

தனக்குள் யோசித்தவனுக்கு சட்டென ஏதும் முடிவெடுக்க இயலவில்லை.
ஒரு கணம் அமைதியாகி நின்றான்,
தேவா.
தேவமாருதன்...
அர்ஜுன் தேவமாருதன்.

கண்களாலேயே அவனை நகரச் சொல்லி விட்டு அமர்ந்தவனுக்கு மனம் மட்டும் சமப்படவில்லை.

உணர்வுகளின் போராட்டம் நெஞ்சை நிறைக்க ஆழமாய் மூச்சு வாங்கி நின்றான்,
தேவா.

தன் வகுப்பறைக்கு வந்த தர்ஷினிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
ஏனென்றே தெரியவில்லை,
ஆடவனின் கோபம் அவளுக்கு சிறிதான பயத்தை மட்டுமல்ல கொஞ்சமே வலியையும் தந்திருந்தது,
உண்மை தான்.

அவன் சொல்வது போல் முன்னமே சொல்லி இருந்தால் இந்த நிலை வந்திருக்காதோ என மனம் யோசித்திட தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தவளை புருவம் சுருக்கி பார்த்திருந்தாள்,
ஆர்த்தி.

தோழியின் முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அவளின் பயத்தை உணர்த்த மெதுவாய் தர்ஷினியின் அருகே வந்தமர்ந்தாள்,
அவள்.

"தர்ஷினி என்னாச்சுடி..?" அவள் கேட்டிட தோழியை திரும்பி பார்த்தவளின் விழிகள் இலேசாய் கலங்கியுமிருந்தது.

"ஏய் என்னாச்சு டி..? கண்ணெல்லாம் செவந்துருக்கு..?"நிஜமான பதட்டத்துடன் கேட்டிட பதில் மொழிய இயலவில்லை,
அவளால்.

வார்த்தைகள் வர மறுக்க தொண்டைக்குழியை ஏதோ அடைத்த உணர்வு.

"தர்ஷினி..உன்னத்தான்..என்னாச்சுடி..?"

"அது..அந்த வினய் இன்னிக்கு என்னோட கைய புடிச்சுட்டான்.."

"எதேஏஏ..அதுக்கா இப்டி அழுதுகிட்டு இருக்க..அவனுக்கு நாலு அர விட்ருக்க வேணா.."

"நா அடிக்க தான் பாத்தேன்..அதுக்குள்ள சீனியர் சார் அடிச்சிட்டாரு.."

"யாரு அது சீனியர் சார்..?"

"அதான்..தேவா சீனியர்..பைனல் இயர்.."

"ஓஹ்ஹ்ஹ்.." என்றவளின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.

"சரி..அதான் அடிச்சிட்டாருல்ல..அப்றம் எதுக்கு பீல் பண்ணிகிட்டு.."

"அ..அது அவரு என்கிட்ட யாராவது வம்பு பண்ணா வந்து சொல்ல சொல்லி இருந்தாரு..இந்த வினய் ரொம்ப டார்ச்சர் பண்ணுவான்..ஏற்கனவே யாதவ் சீனியர் கூட சீனியர் சார் கு ப்ரச்சன இருக்குல..அதான் வினய் யாதவ் சீனியரோட ப்ரெண்டுன்னு அவர் கிட்ட சொல்லல..
அதனால கோபம் வந்துருச்சு அவருக்கு.."

"வாட்ட்..அடிச்சாரா..?"

"இல்ல.."

"திட்டுனாரா..?"

"ம்ஹும்.."

"அப்போ என்னடி செஞ்சாரு..?"

"மொகத்த கூட பாக்கல.." என்றவளின் குரலில் அப்படி ஒரு தொய்வு.





● ஓகே..உங்க எல்லாரோடயும் குழப்பம் தீரத் தான் இந்த எபிசோட்.
கதப்படி பாத்தா தேவா வேற..
தேவேந்திரன் வேற..
ரீசன்ஸ சொல்றேன்..

01) ஏ.டி ன்னு அர்ஜுன இன்ட்ரோ பண்ணேன்..அதுல "என் பேரு அர்ஜுன்..அப்பா பேரு தீரஜ்னு.." ன்னு தான் சொல்ற மாதிரி இருக்கும் டயலாக்..
அதனால முக்கவாசி பேரு ஏ.டி ன்னதும் அர்ஜுன் தீரஜ் னு பிக்ஸ் ஆகிட்டீங்க..
சம் டைம் வேற பர்ஸ்ட் லெட்டர் வர்ர மாதிரி அப்பா பேர போட்டு இருந்தா கொஞ்சம் டவுட் வந்துருக்குமா இருந்திருக்கும்..
டி க்கு என்ன நேம் னு..🫠

02) கதைல எந்த ஒரு எடத்துலயும் ரைட்டர் நான் உங்க கிட்ட சொல்ற மாதிரி அர்ஜுன்ங்குற பேர யூஸ் பண்ணி இருக்க மாட்டேன்..
கேரக்டர்ஸ் தான் அர்ஜுன்னு சொல்ற மாதிரி சீன்ஸ் வரும்..
பர்சன்ட் ல அர்ஜுன் வர்ர சீன்ல எல்லாம் நான் "அவன்.." னு தான் யூஸ் பண்ணி இருப்பேன்.🤪

03)தேவேந்திரன் கேரக்டர் ப்ரசன்ட்ல வரும் போது எந்த எடத்துலயும் தேவா ன்னு யூஸ் பண்ணுனது இல்ல..
அதே மாதிரி தேவா பாஸ்ட்ல வரும் போதும் தேவேந்திரன்னு யூஸ் பண்ணதில்ல..
🫣🫣

04)தர்ஷினிய பர்ஸ்டா அவ வீட்டுக்கு போறப்போ அவ அர்ஜுன் இதுக்கு முன்னாடி வீட்டு பக்கத்துல தான் இருந்தான்..அதுக்கப்றமா காலி பண்ணிட்டு போனத நெனச்சு பாப்பா..
அதனால அர்ஜுன் அவங்க வீட்டுக்கு பக்கத்துல தான் குடியிருந்தான்னு கெஸ் பண்ணலாமே..🫣

05) தேவேந்தின் வீடு தர்ஷினி வீட்டுக்கு முன் வீடுன்னு சொல்லி இருப்பேன்..
பட் தேவா மொட்ட மாடில வந்து பாக்கும் போது ரெண்டு மூனு வீடு தள்ளின்னு மென்ஷன் பண்ணி இருப்பேன்..😝

06)தேவாவுக்கு காலேஜ் போறப்பவே பைக் இருக்கும்..🏍️ ஓட்டுவான்..
பட் கிட்டத்துல ஒரு எபில வந்துருக்கும்..
தேவேந்திரன் பயத்தால பைக் ஓட்டத் தொடங்கும் போது வேலக்கி போக ஸ்டார்ட் பண்ணிட்டான்னு..

07) தேவா தர்ஷினிய தேவான்னு தான் சொல்லுவான்..காலேஜ் சீன்ஸ்ல இருக்கும்..
பட் தேவேந்திரன் தர்ஷினிய தர்ஷினின்னே தான் பேசுவான்..அந்த கீ செய்ன் தேட்ற எபிசோட்ல..அம்மா மடில படுத்துட்டு அழுகுற எபிசோட் எல்லாத்துலயும் அப்டி தான் வரும்..
அது மட்டுல்ல அர்ஜுன்( அதான் ப்ரசன்ட்ல..) தே ன்னு தொடங்கி தெணறிட்டு தேவதர்ஷினின்னு சொல்ற மாதிரி தான் சீன்ஸ்ல இருக்கும்..

08)தேவா ரொம்ப ரகட் மாதிரி இருப்பான்..
பட் தேவேந்திரன் அப்டி இல்ல..அழுகுற மாதிரி எல்லாம் காட்டி இருப்பேன்..

09)தேவேந்திரன் அம்மா கூட பேசாம பாட்டி வீட்ல தான் இருந்தான்னு சொல்லி இருப்பேன்..
ஆனா தேவா அம்மா கூட கோச்சி கிட்டு வீட்ல வேல செய்ற பாட்டியோட தான் இங்க வீடெடுத்து வந்தான்னு சொல்லி இருப்பான்..

10)ஆர்த்திக்கி தேவா மேல க்ரஷ்..தேவேந்திரன் மேல லவ்..ஆர்த்தி ஒரு சீன்ல சொல்லுவா..அவளுக்கு தர்ஷினி ஹஸ்பன்ட் அர்ஜுன் மேலயும் கர்ஷ் இருந்தா..

11)தேவேந்திரன் லவ் பண்ணது தர்ஷினியத் தான்னு ஆர்த்திக்கி பரசன்ட்ல தான் தெரியுற மாதிர சீன் ஒன்னு வரும்..
அழுது கிட்டே போவா..
அந்த சீன்..
ஆனா தேவா ஆர்த்தி கிட்ட காலேஜ் டைமே தன்னோட காதல் தர்ஷினி தான்னு சொல்லி இருப்பான்..
அவள தான் ஸ்பை ஆ வச்சிருப்பான்..

12)தேவேந்திரனுக்கு சட்டுன்னு கோவம் வரும்..ஆர்த்தி சீன்ல அது வரும்..ரீசன்டா ஆர்த்தி அதுக்காக பீல் பண்றதா ஒரு எபில இருக்கு..ஆனா தேவா ரொம்ப நிதானமா நடந்துப்பான்..

13)பாஸ்ட்ல தேவாட நடத்தயும் ரீசன்டா ப்ரசன்ட்ல வர்ர அர்ஜுனோட நடத்தயும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும்..
ஹார்ட் துடிக்கிறது அவ பக்கதுல வந்தா..
அவன் நெஞ்சுல கை வச்சுறது..

14)ப்ரசன்ட்ல ஒரு சீன்ல வரும் தர்ஷினிக்கு அர்ஜுன தவிர யார் மேலயும் க்ரஷ் வந்தது கெடயாதுன்னு..
ஆனா பாஸ்ட் லைட்டா அவளுக்கு அவன் கண்ணுல மேல ஒரு க்ரேஸ் வர்ர மாதிரி காட்டி இருப்பேன்..

15)தர்ஷினி தேவேந்திரன் கூட நார்மாலா பேசுவா..
அந்த மொட்ட மாடில வச்சு நலம் விசாரிச்சிப்பாங்க..
ஆனா தேவாவோட அவளால நார்மால பேச முடியாம இருக்கும்..
பாஸ்டலயும் தான்..
ப்ரசன்டலயும் தான்..

16)தேவேந்திரன் அண்ணன் செஞ்ச தப்புக்கு தான் அம்மா தப்பா புரிஞ்சுகிட்டு அவன தள்ளி வச்சுருப்பாங்கன்னு சொல்லி இருப்பேன்..
ஆனா தேவாவ யாரோ ஒரு பொண்ணு பேச்ச கேட்டுட்டு தான் அவங்கம்மா ஒதுக்கி விட்றதா அவன் சொல்லுவான்..

17)தேவேந்திரன்கு அப்பா இல்லாதது நெனச்சு பீல் பண்ற மாதிரி ஒரு சீன் வரும்..பர்ஸ்ட் எபிசோட்ஸ் ல..
ஆனா தேவா அப்பா அவனுக்காக பரிஞ்சு பேசலன்னு பீல் பண்ணுவான் ரீசன்டா ஒரு சீன்ல..

18)பாஸ்ட்ல தேவாவ வர்ணிச்சதும் ப்ரசண்ட்ல ரீசன்டா அர்ஜுன வர்ணிச்சதும் ரொம்ப ஒத்துப் போகும்..

19)தேவா தர்ஷினிய லவ் பண்ண முன்னாடி அவள சீண்டி எல்லாம் பாக்க மாட்டான்..பட் தேவேந்திரன் தர்ஷினிய சீண்டுறது பத்தி ஆரம்ப எபிஸ் ல யோசிச்சு பாப்பான்..

20) பர்ஸ்ட் எபிஸ் ல சொல்லி இருப்பேன்..கார்த்திகா தேவேந்திரன் லவ் கு சப்போர்ட் னு..பட் அவ தேவா வ மொறச்சு தள்ரதா கிட்டத்துல வந்த எபி ல காட்டி இருப்பேன்..
இனிமேலும் வரும்..

புல்லா வாசிச்சா இன்னும் க்ளிக் ஆகும்..
முடில டைப் பண்ணி கை வலிக்கிது..

இனிமே வர்ர எபி கீழயும் இது மாதிரி போட்டு விட்றேன்..
டைம் இருந்தா..

அப்பவே சொன்னேன் சண்ட போடாதீங்கன்னு..
கேட்டீங்களா..?
😉🫣
 
Top