ஜென்மம் 23:
ஓடை துள்ளல் நீயானால்
உன் ஓசை நானல்லோ
ஒர் மின்னல் ஆனால்
என் மேகம் நீயல்லோ…
பார்த்தீபன் மாலை வரை உறங்கி எழுந்து கீழே வர,
“வாங்க தம்பி இப்போதான் எழுந்திங்களா?” என்று வினவியபடி கையில் சுட சுட தேநீர் கோப்பை மற்றும் மொறு மொறுவென வெங்காய பஜ்ஜி இருந்தது.
“இந்தாங்க தம்பி” என்று அவனிடத்தில் கொடுக்க,
அதனை வாங்கியவனது விழிகள் கனியை தேடியது.
அதனை உணர்ந்த கவிதா,
“கனி இன்னும் வரலை தம்பி. இப்போதான் போன் பண்ணா. பத்து நிமிஷத்துல வந்திடுவா” என்க,
“சரி” என்பதாய் தலை அசைத்தவன் தேநீரை அருந்தியபடி அலைபேசியில் கவனத்தை வைத்தான்.
ஐந்து நிமிடத்தில் இருசக்கர வாகனம் நிற்கும் ஓசை கேட்க மகேஷிடம் ஏதோ பேசி சிரித்தபடி உள்ளே நுழைந்தாள்.
பார்த்தீபனது விழிகள் அவள் மீது படிந்தது. வெயிலில் களைந்து தலை லேசாக கலைந்து இருந்தது. ஆனால் முகம் மட்டும் பிரகாசித்து கொண்டிருந்தது. பளபளக்கும் விழிகளும் விகசிக்கும் முகமாய் அவனை வசீகரித்தாள்.
நிமிடத்திற்கும் கூடுதலாக அவள் மீது பார்த்தீபன் பார்வையை நிலைக்கவிட,
“இதான் வர நேரமா? போய் எவ்ளோ நேரம் ஆச்சு” என்று கவிதா கடிந்து கொள்ள,
“க்கா நான் சீக்கிரம் தான் வர ட்ரை பண்ணேன். ரொம்ப நாள் அப்புறம் பாக்குறதால சட்டுனு கிளம்ப முடியலை” என்று இழுத்தாள்.
“சரி சரி போ சீக்கிரம் ரெடியாகி வா. கோவிலுக்கு போகணும்” என்க,
சரியென தலையசைத்தவள் அறைக்கு செல்ல,
மகேஷ் கையில் தேநீர் கோப்பையுடன் பார்த்தீபனுக்கு சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தான்.
“நல்லா தூங்குனிங்களா சார்” என்று மகேஷ் வினவ,
பார்த்தீபன் பதில் அளிக்க அவர்களுக்குள் உரையாடல் தொடர்ந்தது.
இங்கு கனி சிறிய குளியலை போட்டு ஒரு புடவையை அணிந்து ஒரு முறை தன்னை சரி பார்த்து கொண்டு கீழிறங்கினாள்.
மகேஷ் அவளது புடவையை கவனித்துவிட்டு,
“பார்றா மேட்சிங் மேட்சிங் கப்பிள் கோல்ஸா?” என்று சிரிப்புடன் வினவ,
கனி அப்போது தான் பார்த்தீபனது உடையை கவனித்தாள்.
அவன் அணிந்திருந்த சிவப்பு நிறத்தில் தான் இவளும் புடவை அணிந்து இருந்தாள்.
பார்த்தீபனும் அப்போது அவளை தான் பார்த்திருக்க விழிகள் ஒரு நொடி சந்தித்து மீண்டது.
கனி பதில் மொழிவதற்குள்,
“ரெடியாகிட்டியா கனி. இந்தா இந்த பூவை வச்சுக்கோ” என்று முல்லை பூவை கூந்தலில் வைத்துவிட்டவர்,
“இப்போதான் நிறைவா இருக்கு. கல்யாணமான புது பொண்ணு தினமும் பூ வைக்க பழகு” என்றார்.
கனி சம்மதமாய் தலையசைக்க,
“அம்மனுக்கு நெய்விளக்கு போட்டுட்டு வா” என்று கூடையை கையில் கொடுக்க,
“சரிங்கக்கா” என்று தலையசைத்தவள் பார்த்தீயை காண அவன் எழுந்து கொண்டான்.
கனி, “நீயும் வர்றீயா டா?” என்று மகியிடம் வினவ,
“எனக்கு ஒரு சின்ன வொர்க் இருக்கு. நீங்க போய்ட்டு வாங்க” என்றுவிட்டான்.
பார்த்தீபன் முன்னே சென்று மகிழுந்து கதவை திறக்க முயல,
“நாம நடந்தே போகலாமா?” என்று வினவினாள் பின்னால் வந்த கனி.
குரலில் சிறிதான தயக்கம் இவன் நடந்து வருவானா என்று.
“ஹ்ம்ம் போலாமே” என்று கூறியவன் அவளருகே வர,
இதழில் மெலிதான புன்னகை உதிர்த்தவள்,
“இங்க இருந்து பக்கம் தான். டென் மினிட்ஸ்ல போய்டலாம்” என்க,
பார்த்தீபன் அமைதியாய் தலையசைத்தான்.
இருவரும் வேறு ஏதும் பேசாது நடந்து செல்ல அங்கு போவோர் வருவோர் பார்வை இவர்களது மேல் விழுந்தது.
கனிக்கு அது புரிய இப்படி பார்த்தால் இவனுக்கு அசௌகரியமாக இருக்குமே. நடந்து வர கூறி தவறு செய்துவிட்டோனோ? என்று எண்ணியபடி அவனது முகம் காண,
அவன் எப்போதும் போல தான் இருந்தான்.
அதில் சிறிது நிம்மதி அடைந்தவள் அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தாள்.
ஒரு சிலர் இவளை கண்டு விசாரிக்க கனியும் புன்னகையுடன் பதில் அளித்தபடி வந்தாள்.
சரியாக பத்து நிமிடத்தில் தீர்த்தவாரி முத்துமாரி அம்மன் கோவிலை அடைந்தனர்.
இருவரும் உள்ளே நுழைந்ததும் தீபாராதனை காண்பித்து கொண்டிருந்த ஐயர்,
“வாம்மா கனி. எப்படி இருக்க?” என்று விசாரிக்க,
“நல்லா இருக்கேன் ஐயா. நீங்க எப்படி இருக்கீங்க” என்று விசாரித்தாள்.
“நான் நல்லா இருக்கேன். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு கேள்விப்பட்டேன். தம்பி தான் உன் வீட்டுக்காரா?” என்று விசாரிக்க,
“ஆமா ஐயா?” என்று பதில் அளிக்க,
“ரொம்ப சந்தோஷம்மா. ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருங்க” என்று வாழ்த்தியவர் தீபாராதனை காண்பிக்க,
இருவரும் விழி மூடி வேண்டி கொண்டனர்.
பிறகு நெய் விளக்கேற்றி வணங்கிவிட்டு வர,
கனி, “கொஞ்சம் நேரம் உட்கார்ந்துட்டு போகலாமா?” என்று வினவினாள்.
சம்மதமாக தலை அசைத்தவன் அவளருகே அமர்ந்தான்.
அப்போது கனியின் விழிகளை ஒரு கரம் மூட,
“ஹேய் மினி” என்று ஆர்ப்பரித்தாள் கனி.
“மினி தான் எப்படி இருக்க?” என்று சிரிப்புடன் அமர்ந்தாள் மினி. அருகில் மற்றொரு தோழி.
“நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க?” என்றாள்.
“ஹ்ம்ம் பைன். அண்ணாவ இன்ட்ரோ கொடுக்க மாட்டியா?” என்று வினவிட,
“சாரி” என்றவள்,
“இவங்க என் ஃப்ரெண்ட்ஸ் மினி அண்ட் சந்தியா” என்று அறிமுகம் செய்து வைக்க,
பார்த்தீபன், “ஹாய்” என்று புன்னகைத்தான்.
“அப்புறம் அண்ணா எங்க ஊரு பிடிச்சு இருக்கா?” என்று வினவ,
“ஹ்ம்ம் பிடிச்சிருக்கு” என்று புன்னகைத்தான்.
“எங்க கனி உங்களை நல்லா பாத்துக்கிறாளா? இல்லைன்னா சொல்லுங்க நாத்தனார் சண்டையை இழுக்குறேன்” என்று சிரிப்புடன் கேட்க,
பார்த்தீபனுக்கும் சிரிப்பு வந்தது.
“இப்போதைக்கு ஓகே தான். தேவைப்பட்டா கூப்பிட்றேன்” என்று தானும் மொழிந்தான்.
இருவரும் பேச சந்தியா கனியிடம்,
“ஹேய் கனி உன் ஆளு செம்மயா இருக்காரு ஹீரோ மாதிரி. இவருக்காக பத்து வருஷ வெய்ட்டிங்க் வொர்த் தான் டி”என்று சிரிக்க,
“ஷ்…” என்று விழிகளை உருட்டி முறைத்தவள் அவனுக்கு கேட்டுவிட்டதா? என்று அஞ்சி திரும்பி பார்க்க, அவர்கள் இருவரும் ஏதே பேசி கொண்டு இருந்தனர்.
“என்னடி வீட்டுக்காருக்கு அவ்ளோ பயமா?” என்று சிரிக்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று அவளை சமாளித்தாள்.
மேலும் சில நிமிடங்கள் பேசி முடிய நால்வரும் கிளம்பினர்.
மினி கிளம்பும் முன், “அண்ணா கனியை கூப்பிட்டு கண்டிப்பா வீட்டுக்கு வரணும். விருந்துக்கு ஏற்பாடு பண்றேன்” என்க,
பார்த்தீபன், “சரிம்மா” என்று மொழிய,
“ஆல்ரெடி உன் மாமியார் வீட்டுல இருந்து அழைப்பு வந்திருக்கு” என்க,
“அது புகுந்தவீடு. என் பொறந்தவீட்டு சார்பா கூப்பிட்றேன் வாங்க” என்றுவிட்டு சென்றாள்.
இருவரும் வீட்டிற்கு வரும் வழியில் ஒரு சிலர் கனியிடம் பேசினர்.
கன ஒரு நடுத்தர பெண்மணியிடம் பேசி கொண்டு இருக்க,
“ஏத்தா கனி எப்போ வந்த…” என்று குரலில் வாஞ்சையை தேக்கி வினவியபடி வந்தார் வயதான பெண்மணி.
அந்த குரலை கேட்டதும் கனியின் முகம் மலர்ந்து போக,
“லெட்சுமி பாட்டி” என்று சிரிப்புடன் அழைக்க,
“எப்படித்தா இருக்க?” என்று அவளது கையை பிடித்து கொள்ள,
“நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க பசங்க எல்லாம் நல்லா இருங்கிங்களா?” என்று வினவ,
“நீ இருக்கும் போது எங்களுக்கு என்னத்தா கவலை” என்று வெள்ளந்தியாய் சிரித்தவர்,
“தம்பிதான் உன் வீட்டுக்காரா?” என்றார்.
“ஆமாம்” என்று தலை அசைத்தவள்,
“இவங்க லட்சுமி பாட்டி. மீனாட்சி பாட்டிக்கு சொந்தம்” என்று அறிமுகம் செய்ய,
“வணக்கம் பாட்டி” என்று பார்த்தீபன் கூற,
“ஐயா ராசா கணக்கா இருக்கப்பா” என்று பார்த்தீயிடம் கூற,
அவளிடத்தில் சிறு புன்னகை முகிழ்ந்தது.
“நான் சொன்னேன்லத்தா உன் மனசுக்கு ராசா மாதிரி தான் மாப்பிள்ளை வருவார்னு. எங்க காலத்து எம்.ஜி.ஆர் மாதிரி அம்சமா வந்து இருக்கார்” என்று கனியிடம் கூற,
அவளுடைய பார்வை ஒரு கணம் பார்த்தீபன் மீது படிந்து மீண்டது.
“எப்போத்தா வந்தீங்க?” என்று வினவ,
“மதியம் தான் பாட்டி” என்க,
“உன் கல்யாணத்துக்கு தான் வர முடியலைத்தா” என்று வருத்தப்பட,
“அதான் இப்போ எங்களை நேர்ல பாத்துட்டிங்களே” என்று சமாதானம் செய்தாள்.
“நான் ஒரு கிறுக்கச்சி எம்புட்டு நேரம் வெளியேவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன். வீட்டுக்கு வந்து ஒரு வாய் காபி தண்ணி குடிச்சிட்டு போங்க” என்று அழைக்க,
“இருக்கட்டும் பாட்டி இன்னொரு நாள் வர்றோம்” என்று கனி கூற,
“அட கல்யாணம் பண்ணி முத தடவை வர்ற. வீட்டுக்குள்ள வராம போவீங்களா?” என்று அவர் கூற,
பதில் கூறாத கனியின் பார்வை மெல்லிய தயக்கத்துடன் பார்த்தீயை பார்த்தது.
காரணம் லெட்சுமி பாட்டியின் வீடு மிகச் சிறிய ஓட்டு வீடு. கனியே அங்கு குனிந்து தான் செல்வாள். அவளுக்கு அது பழக்கப்பட்ட இடம். இதில் பார்த்தீபன் எப்படி. அதுவும் அவனுடைய நிலைமைக்கு இந்த வீட்டினுள் எப்படி வருவான். அவனை நடக்க வைத்து தேவையில்லாத சங்கடத்தில் மாட்டிவிட்டோமோ என்று தவிப்புடன் அவனது முகம் காண,
அவளது தவிப்பை உணர்ந்தவன்,
“போகலாம்” என்று தலை அசைக்க,
இவளுக்குள் பெரிய ஆசுவாசம் பிறந்தது.
அவனது பதிலில் லெட்சுமி பாட்டிக்கும் முகம் மலர்ந்து போக,
“வாப்பா ராசா. வாத்தா” என்று இருவரையும் அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்து சென்றவர் சாதாரணமாக நுழைந்தார்.
அவரது உயரத்திற்கு அது சரியாக இருந்தது.
கனி சற்று குனிந்து உள்ளே வந்தவள் ஒரு வித சங்கடத்துடன் பார்த்தீயை காண அவன் நன்றாகவே குனிந்து தான் உள்ளே நுழைந்தான்.
லெட்சுமி பாட்டி பாதி கிழிந்த நிலையில் இருந்த ஒரு பாயை எடுத்து தரையில் விரித்து,
“உட்காருங்க” என்று மகிழ்வுடன் உபசரித்தார்.
கனிக்கு மீண்டும் தவிப்பு தான். இவன் மண் தரையில் எல்லாம் அமர்வானா? என்று.
ஆனால் பார்த்தீபனுக்கு இவள் எண்ணுவது போல எந்த வித ஆட்சேபனையும் இல்லை போலும்.
அவர் கூறியதும் முதல் ஆளாக அமர்ந்துவிட்டான்.
கனி சற்று தள்ளி அமர்ந்தாள்.
“ரெண்டு நிமிஷம்த்தா. நான் போய் பால் வாங்கிட்டு வர்றேன்” என்க,
“இருங்க பாட்டி நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று அவரை தடுத்து கனியே அருகில் உள்ள கடைக்கு சென்றாள்.
பார்த்தீபனது விழிகள் அந்த வீட்டை ஆராய்ந்தது. அதனை வீடு என்று கூறுவதை விட ஒரு அறை என்று கூறலாம்.
மொத்தமாக ஒரே அறை தான். ஒரு மூலையில் சிறிய மண்ணெண்ணெய் அடுப்பு இருந்தது. அருகே சில பாத்திரங்கள் டப்பாக்கள் மற்றும் இரண்டு குடம் இருந்தது.
மற்றொரு மூலையில் இரண்டு பெட்டிகள் இருந்தது. வலது மூலையில் சிறிய கதவு கழிப்பறையாக இருக்கலாம் என்று நினைத்தான்.
மற்றொரு மூலையில் சிறிய தொலைபேசி பெட்டி ஒரு பலகை மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சிறிய மின்விசிறி இருந்தது.
அவ்வளவு தான் வேறு ஏதும் பெரிதாக அங்கு இல்லை. ஏன் நாற்காலி கூட இல்லை. அவனுடைய வீட்டின் குளியலறையை விட இவ்வீடு சிறியதாக இருந்தது.
பார்த்தீபனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த காலத்திலும் ஓட்டு வீட்டில் அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார்களா என்று.
அந்த மண்ணெண்ணெய்
அடுப்பின் பர்னரை நான்கு ஐந்து முறை இழுத்து அதனை பற்ற வைத்தவர் பாத்திரத்தில் சிறிது நீருடன் தேயிலை தூளை கொதிக்க வைத்தவர் மின்விசிறியை பார்த்தீயின் புறம் நன்றாக திருப்பி வைத்தவர்,
“காத்து நல்லா வருதாய்யா?” என்று வினவ,
“ஹ்ம்ம் வருது பாட்டி” என்று சிந்தனையை கைவிட்டு பதில் தர,
“கனி தான் இதை வாங்கி குடுத்துச்சு. கனி ரொம்ப தங்கமான புள்ளை அவளை நல்லா பாத்துக்கையா” என்று அவனது கையை பிடித்து கூற,
“கண்டிப்பா நல்லா பாத்துக்கிறேன் பாட்டி” என்று பதில் மொழிந்தான்.
“இந்த காலத்துல இப்படி ஒரு புள்ளய பாக்க முடியாது. என் மகனும் மருவனும் ஒரு லாரி அடிச்சு இறந்து போய்ட்டாங்க. வயசான காலத்துல பேர புள்ளைங்களை வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டப்போ கனி தான் தானா வந்து உதவி பண்ணுச்சு. இப்போவரை பேர புள்ளைங்களுக்கு பள்ளிக்கூடம் பீஸ் அதான் கட்டுது. நான் காட்டு வேலைக்கு போய் கஞ்சி ஊத்துறேன். இதையுமே செய்யுறேன்னு சொல்லுச்சு நான் தான் என்னால முடிஞ்ச வரை வேலை பாக்குறேன்னு சொல்லி வச்சிருக்கேன்” என்றவரது குரல் கலங்கி இருந்தது.
அதனை உணர்ந்தவன் ஆதரவாக கரங்களில் அழுத்தம் கொடுக்க,
“எனக்கு மட்டுமில்ல இந்த ஊர்ல நிறைய பேருக்கு அது தான் உதவி செய்யுது. அது மனசுக்கு எப்பவும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவேன். கனி மாதிரி பொண்ணு பொண்ட்டாட்டியா கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்யா” என்க,
பார்த்தீபனது மனமும் அதனை ஒத்து கொண்டது.
அவர் மேலும் பேசும் முன் கனி பாலுடன் உள்ளே நுழைய,
“என்னத்தா கடையில கூட்டமா?” என்றார்.
“ஆமா பாட்டி” என்று தானே பால் பாக்கெட்டை பிரித்து பாலை பாத்திரத்தில் ஊற்ற,
பார்த்தீபனது பார்வை மனையாள் மீது படிந்தது. அவளது குணங்களால் மேலும் மேலும் மெருகேறி அவனை வசீகரித்தாள்.
பேசியபடியே இருவரும் தேநீரை தயாரித்து முடிக்க அவர்கள் இருவருக்கும் தேநீரை கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டார் பாட்டி.
அவ்வீட்டின் அமைதியை கிழித்து கொண்டு வந்தது இரு குரல்கள்.
“ஆச்சி பசிக்கிது…” என்று கத்தியபடி உள்ளே வந்த இருவரும் வீட்டில் அமர்ந்திருந்தவர்களை கண்டு கப்சிப் என்றாகினர்.
இருவரில் பெரியவளான பனிரெண்டு வயது தாரனி,
“கனிக்கா எப்போ வந்தீங்க. சொல்லவே இல்லை” என்று அவளை அணைத்து கொள்ள,
“இன்னைக்கு தான் வந்தேன் தாரனி” பதில் தர,
அருகில் இருந்த சிறிய வாண்டு தனது ஆச்சியிடம் சென்று பார்த்தீபனை காண்பித்து,
“ஆச்சி அக்கா பக்கத்தில இருக்கது யாரு?” என்று சிறு குரலில் வினவ,
அது மற்றவர்களுக்கும் கேட்டு புன்னகையை வரவழைத்தது.
லெட்சுமி, “அவரு உன் கனியக்கா வீட்டுக்காரு. உனக்கு மாமா முறை” என்றதும் சிறியவள்,
‘அப்படியா?’ என்று கனியை காண,
அவளது தலையும் ஆமாம் என அசைந்தது.
சிறியவனது விழிகள் பார்த்தீயிடம் பதிய அவன்,
“வா” என்று அழைத்தான்.
சிறியவன், “ம்ஹூம்” என்று பாட்டியை பிடித்து கொண்டான்.
லெட்சுமி, “இவன் யார்க்கிட்டயும் பேச மாட்டான். தாரணி தான் பேசுவா” என்க,
தாரணி, “மாமா நீங்க தான் என் அக்காவ கல்யாணம் பண்ணி ஊருக்கு கூட்டிட்டு போய்ட்டீங்களா?” என்று வினவ,
“ஆமாம்” என்று சிரிப்புடன் தலை அசைத்தான்.
“உங்க பேர் என்ன மாமா?”
“பார்த்தீபன்”
“அக்காவ நல்லா பாத்துக்கோங்க மாமா” என்க,
“பார்றா பெரிய மனுஷி பேசுறா” என்று கனி சிரிக்க,
பார்த்தீபனும் சிரிப்புடன் சம்மதம் தெரிவித்தான்.
“அடிக்கடி அக்காவ ஊருக்கு அழைச்சிட்டு வாங்க”
“ஹ்ம்ம். நீயும் பாட்டி தம்பியை அழைச்சிட்டு சென்னைக்கு வாங்க” என்று பார்த்தீபன் கூற,
“வர்றோம் மாமா. நான் காலேஜ்ல சென்னையில தான் படிப்பேன். அப்போ வர்றேன்” என்றாள்.
சிறியவன் மீண்டும், “பசிக்கிது ஆச்சி” என்க,
கனி, “வா நான் உனக்கு சாப்பிட ஸ்னாக்ஸ் வாங்கி தர்றேன்” என்க,
லெட்சுமி பாட்டி, “இல்லத்தா நான் புட்டு செஞ்சு வச்சிருக்கேன்” என்றவர் இளையவர்களுக்கு வைத்து கொடுத்துவிட்டு,
“ராசா உனக்கும் கொஞ்சம் புட்டு வச்சி தரவா?” என்று வினவ,
“இல்லை பாட்டி டீ குடிச்சதே ஹெவியா இருக்கு” என்றவன்,
“டூ மினிட்ஸ்ல வந்திட்றேன்” என்று வெளியேறி சென்றான்.
கனி, “இவரு எங்க போனாரு. இங்க எந்த இடமும் தெரியாதே” என்று சிந்திக்க,
ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தவன் கை நிறைய பையுடன் வந்தான்.
இளையவர்களிடம் நீட்ட,
இருவரது பார்வையும் பாட்டியிடம் குவிய,
அவர், “எதுக்கு ராசா இதெல்லாம்” என்று சங்கடமாய் இழுக்க,
கனி, “ரெண்டு பேரும் வாங்கிக்கோங்க மாமா தான வாங்கி கொடுக்குறாங்க” என்றதும்,
“இவ்வளவும் எங்களுக்கா?” என்று வியப்புடன் விழிகளை விரித்தாள் தாரனி.
“ஆமா உங்களுக்கு தான் வாங்கிக்கோங்க” என்று சிரிப்புடன் கொடுத்தான்.
வகை வகையான உணவு பொருட்களை கண்டதும் இளையவர்களது முகத்தில் எவ்வளவு ஆனந்தம்.
இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தான் தோன்றியது பார்த்தீபனுக்கு.
பிறகு இருவரும் விடைபெற்று கிளம்ப,
போகும் வழியில் கனி, “சாரி அண்ட் தாங்க்ஸ்” என்று கூற,
“எதுக்கு?” என்று விழி உயர்த்தினான்.
“அது அவங்க வீட்டுக்கு கூப்பிட்டதும் ஸ்டேடஸ் எதுவும் பாக்காம வந்ததுக்கு அப்புறம் அவங்க வீட்ல டீ குடிச்சதுக்கு. உங்க நிலைமைக்கு நீங்க அங்க எல்லாம் வருவீங்களான்னு எனக்கு சந்தேகமா தான் இருந்துச்சு. நீங்க வர முடியாதுனு எதாவது சொல்லி இருந்தா அவங்க ரொம்ப பீல் பண்ணி இருப்பாங்க” என்றவள்,
“அப்புறம் சாரி. உங்களுக்கு அங்க அவ்ளோ கம்பர்டபுளா இல்லனு எனக்கு தெரிஞ்சது. என்னால தான இது” என்றவள் வருந்தி கூற,
“என்னை நீ தெரிஞ்சுக்கிட்டது அவ்ளோ தானா கனி?” என்றவனது குரலில் இருந்த ஏதொ ஒன்று அவளது நடையை நிறுத்திவிட,
வீடு வந்திருந்தது. அங்கே காத்திருந்த மகேஷ்,
“என்ன இவ்ளோ நேரம்? வழியில யாரும் பேசிட்டு இருந்தாங்களா?” என்று வினவ,
“ஹ்ம்ம்” என்றவளது பார்வை முழுவதும் பார்த்தீயிடம் தான்.
“சரி நானும் சாரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றோம்” என்க,
“எங்கே?” என்று கூட கேட்க தோன்றாமல் தலை அசைத்தாள்.
உள்ளுக்குள் பார்த்தீபனது கேள்வி தான் ஓடியது.
கவிதா மற்றும் செண்பகத்துடன் சேர்ந்து சமைத்தாலும் எண்ணம் எல்லாம் உரியவனிடத்தில் தான்.
இருவரும் சமைத்ததும் கூறிவிட்டு கிளம்ப,
இவள் பார்த்தீபனுக்காக காத்திருந்தாள்.
நீள்விருக்கையில் அமர்ந்தவா
றே உறங்கியிருக்க, வெளியே இரு சக்கர வாகனத்தின் ஓசை கேட்டது. இருவரும் வந்துவிட்டனர் என்று எண்ணி கதவை திறக்க,
உள்ளே நுழைந்த மறுகணம் அவளை பார்த்தீபன் இறுக அணைத்து கொள்ள, இவளுக்கு தூக்க கலக்கத்தில் கால்கள் தடுமாறின.
இடையோடு சேர்த்து இறுக்கி கொண்டவனது இதழ்கள் அவளது கழுத்தில் உரசி, “சாரி...” என்று மன்னிப்பை வேண்டியது.
இவள் தான் எதுவும் புரியாது மலங்க மலங்க விழித்தாள் அரை தூக்கத்தில்.