• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 22

Administrator
Staff member
Messages
521
Reaction score
800
Points
93
ஜென்மம் 22:

என்ன சொல்வேன்

இதயத்திடம் உன்னை
தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்

உன்னை தேடும்…

மகிழுந்து மதுரையை நெருங்கியதுமே இவளுக்கு சந்தேகம் வந்துவிட்டிருந்தது.

சரியாக திருமங்கலத்தில் மீனாட்சி அம்மாளின் வீட்டின் முன்பு நிற்க, இவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

“இங்க தான் வர்றோம்னு ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை?” என்று பெரிதாய் விழிகளை விரித்து வினவிட,

சடுதியில் இவனது நினைவில் பதினான்கு வயது கனி வந்து போனாள்.

எத்தனை வருடங்களுக்கு பிறகாக காண்கிறான் அவளது இந்த மகிழ்ச்சியை. தன்னை மறந்து ஒரு நிமிடம் அவளை ரசித்தவன்,

“சொல்லியிருந்தா நீ இப்படி க்யூட்டா கண்ணை விரிச்சு கேக்குறதை நான் பாத்திருக்க முடியாதே…?” என சிரிப்புடன் வினவ,

இவ்வளவு நேரம் அவனது ரசனையை கவனித்திராதவளுக்கு சிறிது தடுமாற்றம் வந்துவிட்டது‌.

பட்டென்று முக பாவனையை மாற்றியவள்,

“வாங்க போகலாம்” என்றிட,

அவளது நிலையை உணர்ந்தவனுக்கு மென்னகை முகிழ்ந்தது.

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவன் அவளுடன் இறங்கி செல்ல,

“வெல்கம் கனி. வெல்கம் பார்த்தீபன் சார்” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் மகேஷ்.

அந்த நேரத்தில் அவனை எதிர்பாராதவள்,

“மகி…” என்று சென்று கரங்களை சிரிப்புடன் பிடித்து கொண்டாள்.

“நாங்க வர்றது உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்க,

“ஆமா. சார் முன்னாடியே இன்பார்ம் பண்ணிட்டாரு” என்று கண் சிமிட்டினான்.

இதற்குள் கையில் ஆரத்தி தட்டுடன் வந்த கவிதா,

“வாம்மா புது பொண்ணே” என்று சிரிக்க,

“அக்கா…” பாசத்துடன் அழைத்தவள்,

“உங்க‌ எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கு என்கிட்ட தான் மறைச்சு இருக்கிங்க” என்று பொய் கோபம் காட்ட,

“ஆமா அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் நீ போய் தம்பி பக்கத்துல நில்லு” என்று செண்பகம் கனியை பிடித்து பார்த்தீபனது அருகில் லேசாக தள்ளிவிட,

அவனது கரத்தை பிடித்து தடுமாறி நின்றவள்,

“செண்பா” என்று முறைத்தாள்.

“முதல் முத கல்யாணத்துக்கு அப்புறம் வர சிரிச்ச மாதிரி வா” என்று செண்பகம் மொழிய,

அவளை பார்த்து இதழை சுழித்தவள் பின் சிரிப்புடன் நின்றாள்‌.

இருவருக்கும் கவிதா ஆரத்தி எடுத்து முடிய உள்ளே அழைத்து சென்றனர்‌.

“தம்பி உங்களுக்கு குடிக்க ஜூஸ் எடுத்துட்டு வரவா?” என்று கவிதா வினவ,

“சரிங்கக்கா” என்று தலை அசைத்தான்.

“அக்கா எனக்கு ஜூஸ்” என்று கனி கேட்க,

“நீ என்ன விருந்தாளியா? உனக்கு நீயே போட்டுக்க” என்று செண்பகம் முகத்தை திருப்பி கொண்டு செல்ல,

“கவிதாக்கா பாருங்க இவளை…” என்று சிணுங்கியவாறு உள்ளே செல்ல,

வந்ததில் இருந்து அவளது பல பரிமாணங்களை கண்டவனது இதழில் புன்னகை ஒளிந்திருந்தது.

இத்தனை நாட்களாக இதை எல்லாம் எங்கு ஒளித்து வைத்திருந்தாள் இவள் என்று தான் எண்ணம் ஜனித்தது.

“பேக் எல்லாம் கொடுங்க சார். நான் ரூம்ல வச்சிட்டு வர்றேன்” என்றபடி மகேஷ் வர,

“நோ இஸ்ஸூஸ் நானே வச்சிக்கிறேன்” என்று பார்த்தீபன் மறுத்தான்‌.

“அட இதுலென்ன இருக்கு. கொடுங்க சார்” என்று பையை வாங்கி கொண்டு படியேறி செல்ல,

பார்த்தீபன் பார்வை வீட்டை சுற்றி வந்தது.

சிறு வயதில் சில முறை வந்து போன நினைவு.

பார்வை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆளுயுர புகைப்படத்தில் பதிந்தது.

அதில் மீனாட்சி அம்மாள் கம்பீரமாக கணவருடன் சிரித்து கொண்டிருந்தார்.

எழுந்து அருகில் சென்று புகைப்படத்தை காண,

“பெரியம்மா தான் கனி கல்யாணத்தை பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க. இப்போ மட்டும் இருந்திருந்தா சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்தி இருப்பாங்க. கனியை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். யாருக்கு தான் அவளை பிடிக்காம போகும்” என்றபடி வந்த கவிதா பழச்சாறை கொடுக்க,

அதனை வாங்கி கொண்டவனது விழிகள் சமையலறை சுவற்றில் சாய்ந்து சிரிப்புடன் செண்பகத்துடன் பேசி கொண்டு இருந்தவளிடத்தில் பதிந்தது.

“ஜூஸ் நல்லா இருக்குங்களா தம்பி?” என்று கவிதா வினவ,

ஒரு மிடறு அருந்தியவன்,

“ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்குக்கா” என்று பாராட்ட,

அதில் முகம் மலர்ந்தவர்,

“கனிக்கும் நான் போட்ற ஜூஸ் ரொம்ப பிடிக்கும்” என்றவர்,

“கனி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.‌ அவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் நீங்க. அவளை நல்லா பாத்துக்கோங்க” என்றதும் இவனது தலை தானாக அசைந்தது.

“மதியத்துக்கு சாப்பிட சிக்கன் பிரியாணி மட்டன் கிரேவி சிக்கன் சிக்ஸ்டி பைவ் ரைத்தா செஞ்சு இருக்கேன். வேற எதுவும் செய்யவா தம்பி” என்று அடுக்க,

அவரது அடுக்கலில் மலைத்து போனவன்,

“போதும் போதும் கா. எதுக்கு இவ்ளோ டிஷ்?” என்று வினவ,

“இதெல்லாம் கொஞ்சம் தம்பி. நீங்க நம்ப வீட்டு மாப்ள. முதல் தடவை வந்து இருக்கிங்க. உங்களை நல்லா கவனிச்சு அனுப்ப வேணாமா? என்றவர்,

“ரூம்க்கு போய் உடுப்பை மாத்திட்டு கை கால் அலம்பிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்க,

இவை அனைத்தும் கனியின் மேல் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு என்று உணர்ந்தவன் தலையசைக்க,

“கனி ஏபுள்ள கனி” என்று குரல் கொடுக்க,

“என்னக்கா?” என்றபடி செண்பகத்திடம் ஏதோ கூறி சிரித்தபடி வந்தாள்.

“தம்பிக்கு உன் ரூமை காட்டு உடுப்பை மாத்திட்டு வரட்டும்” என்க,

“வாங்க” என்றபடி மேலே ஏறி செல்ல,

மகேஷ் ஒரு ஓரத்தில் நின்று அலைபேசியில் பேசி கொண்டு இருந்தான்.

“இந்த ரூம் தான்.‌ போய் ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வாங்க” என்றுவிட்டு,

“என்னடா லவ் டாக்கா?” என்று சிரிப்புடன் அவனருகே செல்ல,

இவளது இத்தனை அட்டகாசங்களையும் மனதிற்குள் பதிந்தபடி அறைக்குள் நுழைந்தான் பார்த்தீபன்.

“மினி அப்புறம் பேசலாம்” என்று அழைப்பை துண்டித்தவன்,

“சும்மாதான் பேசிட்டு இருந்தேன்” என்றான்‌.

“ஹ்ம்ம் நீ கூட அவர்க்கூட சேர்ந்து மறைச்சிட்டேல்ல” என்று அவனது தோளில் அடிக்க,

“உன் ஹஸ்பண்ட் பர்ஸ்ட் டைம் வொய்ஃப்க்கு சர்ப்ரைஸ் தர பிளான் பண்ணி கேட்டாரு‌. அதை எப்படி மறுக்க முடியும்” என்றவன்,

“சர்ப்ரைஸ் ஆகிட்ட போல” என்க,

“ஹ்ம்ம் ரொம்ப. அவர் ஹனிமூன் போறோம்னு சொல்லி அழைச்சிட்டு வந்தாரு. எங்கேன்னு கேட்டேன் சொல்லலை. வேற எங்க அழைச்சிட்டு போய் இருந்தாலும் நான் இவ்ளோ சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன்” என்றவளது முகம் புன்னகையில் மலர்ந்தது‌.

“ஹ்ம்ம் எனக்கு பார்த்தீபன் சார் மேல நிறைய நம்பிக்கை இருந்துச்சு உன்னை சந்தோஷமா வச்சுப்பாருன்னு‌. இப்போ கண்ணால பாக்குறேன்” என்று மகிழ்வுடன் கூற,

கனிக்கும் புரிந்தது. செய்தவற்றை சரிசெய்ய மெனக்கெடுகிறான் என்று.

அவளும் மௌனமாக தலையசைத்தாள்.

பார்த்தீபன் உடை மாற்றி கை கால்களை கழுவி வெளிய வர,

“சார் வந்துட்டாரு வா சாப்பிட போகலாம்” என்று அழைக்க,

இதனை கவனித்த பார்த்தீ, “மகேஷ் என்னை நேம் சொல்லியே கூப்பிடுங்க. சார் சார்னு கூப்பிட்டா ஆபிஸ்ல இருக்க மாதிரியே பீல் ஆகுது” என்று மொழிய,

“அது தானா வருது சார். ட்ரை டூ சேஞ்ச்” என்றான் மகேஷ்.

இவர்களது உரையாடலை கேட்டபடி இறங்கி சென்ற கனி உணவு பாத்திரத்தை மேஜை மேல் எடுத்து வைக்க உதவ,

செண்பகம், “ஏய் போய் தம்பிக்கூட நீயும் உட்காருல. ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடணும்” என்க,

“இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ நான் விருந்தாளி இல்லை. நானே செஞ்சுக்கணும்னு சொன்னாங்க” என்று முகத்தை திருப்ப,

“ஆமா சொன்னேன் தான் அதுக்கு இப்போ என்ன?” என்று செண்பகமும் கழுத்தை வெட்ட,

“ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சண்டை போடாம இருங்க” என்று அதட்டினார் கவிதா.

பார்த்தீபன் இதனை கேட்டபடி வர,

“ண்ணா இவளை எப்படி சமாளிக்கிறிங்கண்ணா. வாய் ரொம்ப கூடி போச்சு” என்று செண்பகம் வினவிட,

பார்த்தீபன் சிரிப்புடன், “வேற ஆப்ஷன் இல்லை” என்க,

“என்ன?” என்று கணவனை விழிகளை உருட்டி முறைத்தாள்‌.

இதனை கண்ட கவிதா, “கனி என்ன பழக்கம் இது. போய் தம்பி பக்கத்துல உட்காரு” என்று அதட்ட,

பார்த்தீபனிடத்தில் நமட்டு சிரிப்பு.

சிறு பிள்ளை போல முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்தாள்.

பார்த்தீபன், “மகேஷ் நீங்களும் வாங்க சாப்பிட” என்று அழைக்க,

“நான்லாம் அப்போவே சாப்பிட்டேன்‌. நீங்க தான் லேட். நான் ஹால்ல இருக்கேன். நீங்க சாப்பிட்டு வாங்க” என்று நகர்ந்தான்.

உணவை எடுத்து வாயில் வைக்கும் முன் மீனாட்சி அம்மாளின் நினைவு வாட்டியது.

வீட்டிற்குள் வந்ததில் இருந்து நினைவு வந்தாலும் உணவு உண்ணும் சமயம் அதிகம் பாதித்தது. காரணம் அவள் வந்த பிறகு ஒரு போதும் கனியின்றி உணவு உண்ண மாட்டார்.

தனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று அதிகமாக விரும்பியது மீனாட்சி அம்மாள் தான்.‌ இப்போது நிச்சயமாக தங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி கொண்டு உணவு உண்டாள்.

கவிதா, “ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. சாயந்திரம் கோவிலுக்கு போய்ட்டு வரணும்” என்க,

“அக்கா ரெஸ்ட்லாம் எனக்கு தேவைப்படலை. நான் மகேஷ் கூட வெளியே போறேன்” என்க,

“சாப்பிட்டதும் இந்த வெயில்ல எங்க போற?”

“மலர் டீச்சர் கூப்பிட்டு இருந்தாங்க பாத்துட்டு வர்றேன்” என்க,

“சரி” என்று தலை அசைத்தவள்,

“தம்பி நீங்க ஓய்வெடுங்க” என்றார்‌.

பார்த்தீபனுக்கும் சற்று அசதியாக இருக்க அறைக்கு சென்றான்.

அங்காங்கே மாட்டப்பட்டிருந்த மனையாளின் புகைப்படத்தை கண்டவனுக்கு காலையில் அதிர்ந்து விழித்தவளது முகமும் நிகழ்வும் நினைவு வந்து போனது.

அவளது அதிர்ந்து விழித்த முகத்தை ஒரு வித சுவாரஸ்யத்துடன் அவளது விழிகளை நோக்கி,

“என்ன?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க,

தடுமாற்றத்தை சடுதியில் மறைத்தவள்,

“யா… யார் சொன்னது இதை” என்று வினவ,

அவளது திணறலை சிந்தாமல் சிதறாமல் உள்வாங்கியவன்,

“யார் சொன்னா என்ன? நான் சொன்னது உண்மை தான?” என்று வினா தொடுத்தான்.

“இல்லை. அப்படி எதுவும் நான் சொல்லலை” என்றவளது கருமணிகள் அங்மிங்கும் உருண்டது.

“டோன்ட் லை. உன் முகமே அதை காட்டி கொடுக்குது‌. உனக்கு பொய் சொல்ல வரலை” என்று அழுத்தம் திருத்தமாக கூற,

அவளிடத்தில் மௌனம்.

“சொல்லு கனி நீ சொன்னதான?” என்று மீண்டும் அழுத்தி வினவ,

“ப்ச் ஆமா சொன்னேன் அதுக்கு இப்போ என்ன?” என்று சத்தமாக கேட்டிருந்தவள் பின் தணிந்து,

“அது அந்த வயசுல வந்த இன்பாக்சுவேஷன். என் ஃப்ரெண்ட்ஸ் உங்களோட என்னை வச்சு கலாய்க்கவும் அந்த வயசுல தெரியாம சொல்லிட்டேன். அதை நான் எப்பவோ மறந்துட்டேன்” என்று விளக்கம் அளிக்க,

“ஓ…” என்று இழுத்தவன்,

“நான் கூட நீ இப்போ வரை என்னை நினைச்சிட்டு தான் கல்யாணம் பண்ணிக்காம இருந்தியோன்னு நினைச்சிட்டேன்” என்று சிரிப்புடன் வினா எழுப்பினான்.

“ஓவரா இமேஜினேஷன் பண்ணிக்காதிங்க. நீங்க பெரிய மன்மதன் உங்களுக்காக பல வருஷமா காத்திருக்காங்க” என்று இதழை சுழிக்க,

“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் ஐயாக்கு ஆள் வரிசைலதான் நின்னாங்க. உனக்கு தெரிஞ்சே ஸ்வேதா ப்ரத்யூ. தெரியாம‌ எவ்ளோ பேர்” என்று காலரை தூக்க,

“அத்தனை பேர் இருந்தா அவங்களையே கட்டியிருக்க வேண்டி தான? ஏன் என்னை போட்டு படுத்துறீங்க” என்று அலுத்து கொள்ள,

“எத்தனை பேர் இருந்தாலும் என் மனசு இந்த கோவக்காரி பின்னாடி தானே போகுது” என்றவனது ஆழ்ந்த குரல் இவளுக்கு மெதுவாய் இறங்க,

பதில் அளிக்காது மகிழுந்தை எடுத்து இருந்தாள்.

பார்த்தீபனும் அதற்கு மேல் அவளை சீண்டவில்லை.

இங்கு கீழே கனி, “அக்கா நாங்க போய்ட்டு வர்றோம்” என்று மொழிய,

“அடியே கூறு கெட்டவளே உன் வீட்டுக்காருக்கு இங்க உன்னை தவிர யாரையுமே தெரியாது. வந்ததுல இருந்து நீ பாட்டுக்கு இருக்க. அவரு எதாவது வேணும்னா கூட எங்ககிட்ட எப்படி கேட்பாரு. நீ தான கூட‌ இருந்து எதுவும் வேணுமான்னு கேட்கணும்” என்று பார்த்தீ தலை மறைந்ததும் திட்ட,

அதில் இருந்த உண்மை புரிந்தவள் சில நொடிகள் அமைதியாகிவிட்டு பின்,

“சாரிக்கா. நான் உங்களை பாத்த எக்ஸைட்மெண்ட்ல மறந்துட்டேன்” என்றவள் தனது அறைக்கு சென்றாள்.

அங்கே பார்த்தீபன் அவளது புகைப்படத்தை பார்த்தபடி நின்றிருந்தான்.

அவள் வந்த அரவம் உணராதவன் சிந்தனையுடன் இருக்க,

இவள் கதவை இரண்டு தட்டு தட்டினாள்.

அதில் சிந்தை கலைந்தவன் திரும்பி,

“என்ன?” என்று புருவத்தை உயர்த்த,

“உங்களுக்கு எதுவும் வேணுமா?” என்று வினவ,

“எனக்கா?” என்றவன் பதில் வினா எழுப்ப,

“ஆமா நான் மகேஷ் கூட வெளியே போறேன் அதான் உங்களுக்கு எதுவும் வேணுமான்னு கேட்க வந்தேன். நான் வர டைம் ஆகும்” என்று இழுக்க,

“ஆமா வேணும்” என்றவனது முகத்தில் சிரிப்பு.

“என்ன?” என்று கனி பார்க்க,

“டைட்டா ஒரு ஹக் வித் டீப் கிஸ்” என்றவனது உதடு சிரிப்பில் துடித்தது‌.

அவனது வார்த்தையினால் கோபத்தில் சிவந்தவள்,

“உங்களை கேட்க வந்த என்னை தான்…” என்று திட்டி கொள்ள,

“நீ எதுவும் பண்ண வேணாம் நானே பண்றேன்” என்று அதற்கும் வம்பிழுக்க,

வாய்க்குள் எதையோ திட்டி முணுமுணுத்தவள் அறையை விட்டு வெளியே செல்ல முனைய,

“எதுவா இருந்தாலும் சத்தமா பேசு” என்றிட,

“உங்கிட்ட பேச எனக்கெதுவும் இல்லை” என்க,

“அப்போ செய்யிறதுக்கு நிறைய இருக்கோ” என்று கண்ணடித்தான்‌.

இவள் கோபமாக ஏதோ கூற வர,

“எப்படி என் சர்ப்ரைஸ்?” என்று வினவ,

அப்போது தான் அவனுக்கு நன்றி கூற வேண்டும் என்று எண்ணியது நினைவிற்கு வர,

“சொல்லணும்னு நினைச்சேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தாங்க் யூ சோ மச்” என்க,

“அவ்ளோதானா? நான் பெருசா எதிர்ப்
பார்த்தேன்” என்றான்.

“வேற என்ன?” என்று இவள் காண,

“ஓடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஒரு முத்தம் கொடுப்பேன்னு எதிர்ப்பார்த்தேன்” என்று சிரிப்புடன் கூற,

“ஆவ்…” என்று பல்லை கடித்தவள்,

“போயா…” என்றுவிட்டு வெளியேற,

இங்கு பார்த்தீபன் தான் இதழில் உறைந்த புன்னகையுடன் மனையாளை பார்த்திருந்தான்…











 
Well-known member
Messages
377
Reaction score
262
Points
63
Infatuation nu Mozhi nalla samalikira ma unmai ah ne yae oru nall solla than pora ah

Parthi oda surprise mozhi ku rombhavae pidichi iruku pola
 
Top