• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 22

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 22


சென்னை விமானநிலையமே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
அக்ஷிதா, தன் கையை பிடித்துக் கொண்டு ஓட முயன்ற ஹர்ஷித் பின் ஏறக்குறைய இழுபட்டு சென்று கொண்டிருந்தாள் புன்னகை முகமாக. ஹர்ஷித் நடக்க துவங்கியதிலிருந்து அவளின் பாடு சற்று திண்டாட்டம் தான். 'இப்பையன் காலில் எதாவது சக்கரத்தை கட்டிக் கொண்டிருக்கிறானா? இறக்கை எதுவும் முளைத்திருக்கிறதா?' என்றெல்லாம் மகனின் பாதம் கைகளை பிடித்து ஆராய்ந்ததை நினைத்தால் அவளே தன்னை நினைத்து வாய்விட்டு சிரிப்பாள். மின்னலென ஓடி வீட்டிலுள்ள பொருட்களை தட்டி விட்டு பறந்து விடுவான். அருகில் இழுத்து, "ஏன் இப்படி செய்தாய்?" என கழுத்தை பிடித்து விட்டால் இறுதியில் பாவமாய் இதழ் குவித்து கெஞ்சும் தோரணையில் பார்வையை கொடுப்பவனை அள்ளி அணைக்க தான் உந்துமே தவிர அடிக்க தோன்றாது.... ஆனால் அந்த பாவனை அப்படியே ஜோஷை தான் நினைவுப்படுத்தும். அவனும் அப்படி தான் அவளை நோக்கி பரிதாப பார்வை கொடுப்பான் எதையாவது செய்து விட்டு. "ப்ச்..இப்படி எதுவும் தெரியாத மாதிரி பார்த்து பார்த்தே ஆளை கவுத்திடுறது, இனிமே பார்த்தீங்க" என்று அவனின் கழுத்தை நெறிப்பது போல் கையை கொண்டு செல்பவள் புன்னகையோடு அணைத்துக் கொள்வாள். அவனை நினைக்க கூடாதென்று தான் எண்ணுகிறாள், ஆனால் ஹர்ஷித்தோ விதவிதமாக அவனை கண் முன் ஊஞ்சலாட விட்டுக் கொண்டிருந்தான். அவனை நினைக்கும் கணங்களில், "நான் எங்கு தவறினேன், அவனை உண்மையாக தான் நேசித்தேன். என்னை விட்டு செல்ல அவனுக்கெப்படி மனது வந்தது?" என்றே தங்களை குறித்து அலைபாயும் மனது இறுதியில் அபலையாய் தவித்து தான் போகும். அக்ஷி இறைவனிடம் மன்றாடி இருந்தாள் குழந்தை கண்டிப்பாக ஜோஷின் ஜாடைகளை கொண்டிருக்கவே கூடாது, தன்னை போலவே இருக்க வேண்டுமென. அந்தோ பரிதாபம் அவளின் வேண்டுதலுக்கு எதிர்மாறாக அப்படியே முகம் மட்டுமல்லாது, அடர்ந்த சுருள் கேசம், அமைதியாக கண்களை சுருக்கி கெஞ்சும் பாவம் என்று எல்லாமே தந்தையை கொண்டு பிறந்திருந்தான் சேட்டையும் அடாவடியும் மட்டும் அக்ஷியிடமிருந்து பெற்றுக் கொண்டு. முகத்தில் கூட தான் வந்து விட மாட்டோமா என்று அல்பதனமாக அக்ஷியின் ஆசைகள் மகன் வளர வளர புதைந்தே போனது சலிப்போடு. இப்பொழுது நன்றாக பேச துவங்கியிருந்தான். தோன்றும் பொழுது, "அம்மா" என்பான் இல்லையென்றால், "அக்ஷி" தான். பெயரை கூறி அழைத்தால் காதை திருகுவாள், "நீ தான் எனக்கு பேரு வைச்ச பார்" என முறைத்து புன்னகை முகமாக. அவனோ பதில் கூறாது தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு சத்தமாக சிரிப்பான். மகனின் ஒவ்வொரு செய்கையையும் இரசித்து உருகி கரைந்தே போவாள்.


'இவன் மட்டும் இல்லையென்றால் நான்?' என்ற எண்ணமே பெண்ணிற்கு அப்படியொரு அழுத்தத்தை கொடுக்கும். ஜோஷ் விட்டு சென்ற பிறகும் சரி நவீனை வேண்டாமென்று மறுத்து விலகி வந்த பிறகும் சரி தளராமல் அவள் வாழ்க்கையை இழுத்து பிடித்துக் கொள்வதற்கு ஒரே பற்றுக்கோல் மகன். அவனில்லை என்றால் என்றோ மரித்து போயிருப்பாள். 'நான் நம்பியவன் என்னை ஏமாற்றி தவிக்க விட்டு சென்று விட்டான் ஆனால் என்னை நம்பி என்னிடம் வந்த உன்னை எந்த சூழலிலுமே கை விட்டு விட மாட்டேன்' என்பதே பாவையின் எண்ணங்கள். ஆம், சிவக்குமார் கூறியது போல் குழந்தையை கலைத்து விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை கடத்தியிருக்க முடியும். ஆனால் அதில் அவளுக்கு உடன்பாடில்லை. ஒரு உயிர் அதுவும் என்னுள் தோன்றிய உயிரை அழித்து என்னுடைய வாழ்வு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டுமா? என்ற எண்ணங்களே அப்படியொரு அழுகையை கொடுத்தது.




நவீன் எவ்வளவோ முயன்றும் அக்ஷியால் முழுதாக ஜோஷிடமிருந்து வெளி வர இயலவில்லை. அவன் முன் எதுவும் காட்டிக் கொள்ளாது புன்னகை முகமாக சுற்றினாலும் தனியாக அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் அவனும் அவனுடைய பேச்சுக்களுமே செவியில் ரீங்காரமிடும். அவன் எப்படியோ ஆனால் அக்ஷி அவனை உண்மையாக விரும்பி தானே நேசித்தாள். அவனின் மீதான நம்பிக்கையில் தானே வீட்டை விட்டு அத்தனை வருடம் வளர்த்த பெற்றவர்கள் எல்லாவற்றையும் வேண்டாமென உதறி ஓடி வந்தாள். ஆனால் அவன் செய்தது என்ன?.... எத்தனை ஏச்சு பேச்சுகள், அவமானங்கள் இப்பொழுது நினைத்தால் கூட உடலே கூசி நடுங்கி போகும்.


நவீனுடனான திருமணம் உண்மையிலுமே இப்பொழுது வரை அவளால் ஏற்க முடியாத ஒன்று தான். சூழலின் பொருட்டு வலுகட்டாயமாக பெண்ணின் வாழ்க்கையில் திணிக்கப்பட்ட ஒன்று. என்ன தான் படுபாதகம் செய்திடடாலும் ஜோஷை விட்டு வர மனது மறுத்து தான் அடம்பிடித்தது. நவீனை பிடிக்காதென்று எல்லாம் இல்லை, அதீதமாக அவனை பிடிக்கும். ஆனால் ஏனோ மனதில் ஒரு அபஸ்வரம். நவீனிடமிருந்து விலகி வந்தது அவளையும் அறியாது உள்ளுக்குள் ஒரு வித ஆசுவாசத்தை அளித்திருந்தது எனலாம்.



நவீனை கடந்து விலகி வந்து ஒரு வருடமாக போகிறது. சிவக்குமார், விஷயமறிந்து மேலும் கீழும் குதித்தார். ஆனால் அக்ஷிதா சிறிது கூட அசரவில்லை, 'நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள், பேசிக் கொள்?' என்ற ரீதியில் நின்றவளுக்கு மங்கையின் அழுகையில் கண்ணீர் பொங்கி பெருகியது. ஆனால் என்ன செய்ய?..."ம்மா, எனக்கு ஹர்ஷித் போதும். எனக்கு என்ன குறை? இப்படி அழுது என்னை டவுனா பீல் பண்ண வைக்காதீங்க. இன்னும் கொஞ்ச வருஷம் தான் இவன் வளர்ந்து என்னை பார்த்துப்பான்" என்றவளின் இதழ் மகனை வருடி விரிந்தாலும் ஏதோ உயிர்பில்லாததாகவே தோன்றியது மங்கைக்கு. 'நல்ல வாழ்க்கையை இப்படி கெடுத்துக் கொண்டிருக்கிறாளே' என்ற ஆதங்கம் அப்பெண்மணிக்கு. ஆம், அத்தனை பிரளயங்களுக்கு பிறகு நவீனுடன் இருக்கும் கணங்களில் தான் சற்று தெளிந்து புன்னகை முகமாக துறுதுறுவென சுற்றினாள். இப்படியே மகள் இறுதி வரை மகிழ்வோடு வாழ்ந்திடுவாள் என்று அவர் விட்ட ஆசுவாச மூச்சை பேதையின் செய்கை மொத்தமாக வாரிச்சுருட்டிக் கொண்டிருந்தது.



சிவக்குமார் அழைத்து நவீனையும் வாணியையும் கண்டமேனிக்கு பேசினார். ஏதோ மகளை அவன் நம்ப வைத்து ஏமாற்றி வஞ்சித்து விட்டதாக. இன்னும் ஏதேதோ, வாயில் வந்ததையெல்லாம் பேசி, நீ நல்லா இருக்க மாட்ட என்றெல்லாம் சபித்தார். ஆனால் அவர்கள் அதை அமைதியாக தான் கடந்தனர். தாயை தோளோடு அணைத்து சமாதானம் செய்தவன் அதை யாஷிடம் கூட பகிரவில்லை. ஏற்கனவே அக்ஷியை குறித்து பேசினாலே கலங்கி போய் விடுபவளை மேலும் வருத்த ஆடவனுக்கு விருப்பமிருந்திருக்கவில்லை. சிவக்குமாரும் ஒரு முறை பேசினார் இரண்டு முறை பேசினார் அவ்வளவே, ஆம், மகளே நான் விலகிக் கொள்கிறேன் எனும் பொழுது அவரால் என்ன செய்திட முடியும். மறைமுகமாக ஏதாவது செய்திடலாம் ஆனால் வயோதிகத்தின் காரணமாக அவரும் தளர்ந்து தான் போயிருந்தார் எல்லா பொறுப்பையும் மகன் வசம் விட்டு.


நாட்கள் அத்தனை வேகமாக ஓடியது யாருக்காகவும் எதற்காகவும் தேங்காது, நவீன் யாஷின் விருப்பத்திற்கேற்ப பெங்களூர்க்கு இடம்பெயர்ந்திருந்தான். அவனுடைய அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் அவர்களின் வாசம். யாஷ் மீண்டும் வேலைக்கு செல்ல துவங்கியிருந்தாள். ஶ்ரீ, அவளை காணும் பொழுது அத்தனை பூரிப்பு நவீனிடம். வீட்டில் நவீன் இருந்தால் அவனின் பின் தான் சுற்றும் அச்சிட்டு எப்பொழுதும் கண்களை அகல விரித்துக் கொண்டு. பள்ளி விட்டு வந்து தனக்காக காத்திருந்து ஷோபாவிலே உறங்கி போகும் மகளை பார்க்கையில் அத்தனை உற்சாகம் பொங்கி பெருகும் ஆடவனுக்கு. "ப்ச்..நவீன், தூங்கும் போது பிள்ளைய கொஞ்ச கூடாது" என்ற வாணியின் அதட்டுதலை பொருட்படுத்தாது மகளை மடியில் அள்ளி கொஞ்சிடுவான். என்ன தான் இயல்பு போல் காட்டிக் கொண்டாலும் யாஷின் மனதிலும் நவீனின் மனதிலும் மிகப்பெரிய நெருடலாகவே மாறி போயிருந்தாள் அக்ஷிதா. ஆம், நவீன் கொடுத்த எந்த உதவியையும் ஏற்க மறுத்தாள். "நோ, இப்ப நீங்க செய்திடுவீங்க மாமா ஆனா திரும்பவும் எதாவது தேவைனா உங்களை தான் எதிர்பார்க்க தோணும். சோ வேண்டாமே" என்றவள் அவனிடமிருந்து முழுவதுமாகவே விலகியிருந்தாள். ஹர்ஷித்தையும் விலக்கிக் கொண்டாள், முதலில் அவனை காண இரண்டொரு முறை யாஷூடன் சென்னை சென்று வந்தவன் அக்ஷியின் விருப்பமின்மையை புரிந்து கொண்டு அதையும் தவிர்த்து விட்டான். ஆம், அவனை பார்த்து விட்டால் கழுத்தை கட்டிக் கொண்டு அவனுடனே செல்கிறேன் என்று அழுகையில் கரையும் மகனை காணும் பொழுது அக்ஷி துடித்தே போவாள். ஆக, அவளே நினைத்தால் எப்பொழுதாவது அழைத்து பேசுவாள் நவீன், யாஷிடம் ஶ்ரீயிடம் வாணியிடமென்று அலைபேசி ஒரு வலம் வரும். உற்சாகமாக புன்னகையுடன் தான் பேசுவாள். ஹர்ஷித் தான் வாணியை கண்டவுடன் கைகளை உயர்த்தி, 'தூக்கு' என்று கையுயர்த்தி ஆர்பரிப்பான். அவனின் பாவனையில் வாணியோடு இணைந்து யாஷூமே நெகிழ்ந்திடுவாள். பாதைகள் இரு வேறாக மாறி போயிருந்தாலும் மெலிதான ஏதோவொரு நூழிலை பிணைப்பொன்று அவர்களை இறுக்கி பிடித்திருந்தது. முதலில் அதை ஏற்க முடியாது மூவருமே தடுமாறினார்கள் ஆனால் காலப்போக்கில் இது தான் சரியென்ற எண்ணத்தை நிரப்பிக் கொண்டது மனது. ஆக அவரவர் பாதையில் பயணக்க துவங்கியிருந்தனர். வாணி வீட்டிலிருந்தே சில மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். அவர் அருகிலே நின்று அவரை போல் ஆடுகிறேன் என கைக்கால்களை உதறி பாவனை செய்யும் ஶ்ரீயை கண்டு வாணிக்கும் மட்டுமின்றி நவீனுக்கும் யாஷூக்கும் அப்படியொரு புன்னகை பெருகும்.



பத்து நிமிடத்திலே விமான நிலையத்தையே ஒரு வட்டமடித்து விட்டான் ஹர்ஷித். 'ப்ச்...பத்து நிமிஷம் தான் ஆகியிருக்கா? இன்னும் டூ ஹவர்ஸ் இருக்கே அதுக்குள்ள என்னென்ன பண்ண போறானோ இந்த பையன்?' என்று ஆயாசமாக அக்ஷி மகனை பார்க்க அவனோ அமர்ந்திருந்த இருக்கையின் மேல் அப்படியே எழுந்து நின்று கீழே குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். அவள் அதட்டினாலும் அதெல்லாம் இரண்டு நிமிடம் தான் அதற்கு பின் தன் வேலையை காட்ட துவங்கி விடுவான். அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பெங்களூர் செல்வதற்காக விமானநிலையம் வந்திருந்தாள் மகனோடு.

அவனை முறைத்த அக்ஷி இழுத்து அமர வைக்க அலைபேசி ஒலித்தது. மங்கை தான் அழைத்திருந்தார். "சொல்லுங்கம்மா" என அலைபேசியில் கவனமாகியவள் சில நிமிடம் அளவளாவி அழைப்பை துண்டிக்க அருகிலிருந்த மகனை காணவில்லை. அதிர்ந்து பார்வையால் தான் இருந்த இடத்தை முழுவதும் துலாவியவள் , "எங்க போனான் இவன்?" என எழுந்து, "ஹர்ஷித்" என்று அழைத்தப்படி தேட துவங்கியிருந்தாள் தொற்றிக் கொண்ட பதற்றத்தோடு.



இரண்டு நிமிடம் கடந்தும் அவனை காணாது போக கண்ணெல்லாம் நீர் தேங்க நெற்றியை தேய்த்தவள் கால்களோ உணவகத்தை நோக்கி சென்றிருந்தது, 'ஒரு வேலை அங்கு சென்றிருப்பானோ?' என. அவளின் எண்ணத்தை பொய்யாக்காது தூரத்திலிருந்த டேபிளில் நடுநாயகமாக அமர்ந்து கையிலிருந்த எதையோ தீவிர ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனின் அருகில் இரண்டு பேர் இருக்கையில் அமர்ந்து அவனை பார்த்து புன்னகைத்து பேசிக் கொண்டிருக்க அக்ஷிதாவோ சற்று நேரத்தில் தன்னை பதற விட்ட மகனின் மீது கோபத்தோடு அருகில் விரைந்தாள்.


"ஹர்ஷித்" என்ற குரலில் இருக்கையிலிருந்த இரண்டு தலைகளும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது. அக்ஷி அப்படியே அவ்விருவரையும் அதிர்ந்த விழிகளோடு பார்த்து நின்றாள். உடலெல்லாம் சட்டென்று மின்சாரம் பாய்ந்தது போல் நடுங்கியது தன் முன் அமர்ந்திருந்தவனை கண்டு. தேங்கிய கண்ணீரை துடிக்கும் இதழை கடித்து விழுங்கியவளுக்கு தலையே சுற்றியது, கால்கள் தடுமாற இதயமோ வெளியே நழுவி விடுமளவிற்கு வேகமாக துடித்தது.



"ம்மா.." என்ற ஹர்ஷித் தூக்கு என்பதாய் அவளை நோக்கி கை நீட்ட அமீத்தும் ஜோஷூம் அதிர்ந்து ஹர்ஷித்தையும் அக்ஷியையும் மாறி மாறி பார்த்தனர் அடைத்த இதயத்தோடு. ஜோஷ்வா, அவனின் விழிகளில் தெரிந்த பரிதவிப்பில் அக்ஷியோ அந்த நிமிடமே மனதளவில் மரித்து போனாள். துடிப்பும் தவிப்பும் அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் தான் என பிரதிபலித்துக் அமர்ந்திருந்தான் இறுகி கனத்த மனதோடு.




தொடரும்....
 
Last edited:
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Josh akshi ah emathi iruka mattan than thonuthu josh aval ah vittu ponathu ku yetho oru karanam irukumo oru vela ithuku pinnadi akshi oda appa velai ethachum.irukumo indha story la kanama ponavaga erandhavaga nu nenacha ellarumey ipadi unexpected time la entry kudukuraga
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Harshith nalla vaalu payan🤣🤣😍 Kandipa josh aaskhi vitu poe iruka matan atho nadathu iruku 😲suspense illa solluga 😊
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Jose vanthuttan
Superrrrrrrrr superrrrrrrrr
Seekkirama suspense ah open pannu ma
 
Top