Member
- Messages
- 47
- Reaction score
- 2
- Points
- 8
*சொல்லாமல்....!*
*மௌனம் 22(i)*
*சில வருடங்களுக்கு முன்...*
தனக்கு கிடைத்த கடிதத்தை படித்தவனுக்கு அது அந்தப் பெண்ணின் விளையாட்டு புத்தி என்று தெரிந்தாலும் ஏனோ கோபம் வந்தது.
"பர்ஸ்ட் அவ ப்ரென்ஸுங்கல சொல்லனும்..அத்த பையன் அது இதுன்னு கிட்டு அவளயும் ஏத்தி விட்றது" தனக்குள் கடுகடுத்தவனோ தர்ஷினியை கிளம்பச் சொல்லி விட்டுத் தான்,கடிதத்தை படிக்கத் துவங்கி இருந்தான்.
அதைப் படித்து முடித்தவனுக்கு அதன் இறுதியில் தோழர்களின் நச்சரிப்பு தாள முடியாமல் தான் அவள் எழுதி கொடுத்து விட்டதாக கூறிட தலையில் அடித்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணம் தான்.
ஆழப் பெருமூச்சொன்றை எடுத்து விட்டு அவன் அவளிடம் கொடுத்ததை பிரிக்கத் துவங்கினான்.
அவளுக்கு அது சந்தேகமாய் படாவிடினும் ஆடவனுக்கு அதைக் கண்டதும் மனதுக்கும் சந்தேக விதை முளைத்ததன் காரணம் அவனுக்கே தெரியாது.
அதனால் தான் வம்படியாய் அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டிருந்தான்,
அந்தக் கடிதத்தை.
அந்தக் கடிதத்தை பிரித்து படித்தது தான் தாமதம்.
அவனின் முகமும் விழிகளும் சிவப்பேறத் துவங்கிற்று.
தோழனின் முகமாற்றம் புரிந்தவர்களாய் பாலாவும் கிஷோரும் அருகில் வர அந்தப் பாதச் சத்தம் கேட்டாலும் கடிதத்தில் இருந்து பார்வையை பிரித்தெடுக்கவில்லை,அவன்.
படித்து முடித்தவனோ இதழ்குவித்து ஊதி சமப்படுத்த முயன்று கொண்டிருக்க அவன் எதற்கோ கோபப்பட்டு தான் அதை அடக்குகிறான் என்று புரியாவிடினும் இத்தனை வரு தோழமைக்கு அர்த்தம் ஏது..?
"தேவா..என்னடா..என்ன ஆச்சு..?" கிஷோர் கேட்கும் முன்னமே தன் கையில் இருந்த கடிதத்தை நீட்டியிருந்தான்,
அனல் நிரம்பிய விழிகளுடன்.
அவனோ தோழனையும் கடிதத்தையும் மாறி மாறி பார்த்து புரியாத பாவத்துடன் வாங்கிப் படிக்க தனை மீறி சிரிப்பு வந்து விட்டது,
அவனுக்கு.
கிஷோரின் நடவடிக்கை புரியாது பாலாவும் எட்டிப் பார்த்திட விடயத்தை படித்ததும் அவனிதழ்களும் துடித்திட தோழர்களை உறுத்து விழித்தன, ஆடவனின் விழிகள்.
அவனின் முறைப்புக்கு பயந்து விரிய முயன்ற இதழ்களை பூட்டிக் கொண்டாலும் ஏனோ தோழனின் முகத்தை பார்க்கும் போது சிரிப்பாய் வந்தது.
"யார்ரா இது..நம்ம தங்கச்சிக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்குறது..?" எத்தனை முயன்று குரலில் தொனித்த சிரிப்பை அடக்கத் தான் முடியவில்லை,
பாலாவால்.
அதிலும் கீழே எழுதப்பட்டிருந்த பெயரைக் கண்டதும் பாலாவின் நெற்றி சுருங்கி யோசனையைத் தத்தெடுத்துக்கொள்ள தேவாவின் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
அன்று அவன் கேட்போர் கூடத்தின் அருகே சந்தித்த அதே பையன் தான், அவளுக்கு கொடுத்து விட்டிருந்தான் கடிதத்தை.
அந்த பையனை இவனுக்கு நன்கு தெரிந்திருக்கவும் செய்தது.
கிஷோரோ கீழே இருந்த பெயரை பார்த்து விட்டு "மச்சீ இது அந்தப் பையன் தான.." என்றிட ஆமென்பதாய் தலையசைத்த ஆடவனின் செயலுக்கேற்ப முன்னுச்சி முடிகளும் நர்த்தனம் ஆடின.
"ஆமா..இந்தப் பையன உங்க வீட்டு பக்கத்துல பாத்துருக்கேனே.."
"ம்ம்..அடிக்கடி வந்துட்டுப் போவான் பக்கத்துல இருக்குற வீட்டுக்கு.." சொன்னாலும் ஆடவனின் குரலில் அப்படி ஒரு இறுக்கம்.
"விடு மச்சீ..தெரியாம பண்ணி இருக்கான்..நாலு தட்டு தட்டுனா சரியாய்ருவான்.."
"அதில்லடா..அவன் தேவாவ டார்ச்சர் பண்ணுவானோன்னு தான் யோசனயாவே இருக்கு.." கூறியவனின் ஆட்காட்டி விரல் நெற்றியை தடவியது.
"பேசாம தங்கச்சி கிட்ட சொல்லிரேன்.." பாலா தீவிரமாக சொல்ல "தங்கச்சி.." எனும் அவனின் விளிப்பில் ஆடவனின் இதழ்களில் புன்னகைத் துகள்களின் ஆக்கிரமிப்பு.
"ம்ஹும்..வேணா..தேவாக்கு தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க..அது மட்டுல்ல அவங்களுக்கு அவன் தெரிஞ்ச பையன்..பேமிலிக்குள்ள நல்ல பாண்டிங்க் இருக்கு..வெளில சொல்லப் பயந்து கிட்டு ரொம்பவே யோசிப்பாங்கன்னு தோணுது..அவன் கிட்ட ஹார்ஷா அவங்களால நடந்துக்க முடியாது..அது மட்டுல்ல தேவாக்கு உண்ம தெரிஞ்சது அவனுக்கு தெரிஞ்சதுன்னா அவங்க பேசாம இருக்குறத பாத்துட்டு அவன் இன்னும் டார்ச்சர் பண்ணுவான்னு தோணுது.." தீர்க்கமாய் யோசித்து தெளிவாய் தான் கணித்திருந்தான்,
ஆடவன்.
"அப்போ என்ன பண்ணலாங்குற மச்சீ.."
"நாமளே களத்துல எறங்கிற வேண்டியது தான்.."
"ஏதே..பாலா கேட்ட கேள்விக்கு என்ன சொல்றான்னு பாரேன்..என்னடா பண்ணப் போற..அடிக்கப் போறியா.."
"பர்ஸ்ட் சொல்லி பாக்கலாம்..அதுக்கப்றம் மத்தத யோசிக்கலாம்.." ஒற்றைக் கண் அடித்து பின்னந்தலையை அழுந்தக் கோதிய படி தனக்கான மேனரிசத்துடன் சொன்னான்,
ஆடவன்.
ஏனோ தோழனின் கரத்தில் இருந்த கடிதத்தை வாங்கியவனுக்கு தர்ஷினியின் தலையில் ஓங்கிக் கொட்ட வேண்டும் என்றிருந்தது.
"பாக்குறதுக்கு தான் அழுத்தமா இருக்குற..உள்ளுக்குள்ள அப்பாவித் தனம் டன் டன்னா இருக்குன்னு இப்ப தான் புரிது..தெரிஞ்சவங்க தந்தாங்கன்னு முழுசா நம்பி வாங்கி வந்திருக்கு என்னோட அறிவு..யப்பா இவள வச்சி நாம எப்டி தான் காலம் தள்ளப் போறோம்னு புரில.." தனக்குள் முனகினாலும் ஏனோ அவளை இன்னும் பிடிக்கத் தான் செய்தது.
உள்ளுக்குள் குறுகுறுக்க பெரு விரலின் நுனியால் தாடையை தடவிய படி நிமிர்ந்து தோழர்களை பார்த்திட தமக்குள் கிசுகிசுத்தவாறு இருக்க அது தன்னைப் பற்றி தான் என்று அவனுக்கு புரியாதா..?
எழுந்த புன்னகையை அப்படியே இதழ்களுக்குள் புதைத்து விட்டு நிமிர்ந்தவனின் கரமோ பேன்ட்டினதும் ஷர்ட்டினதும் பாக்கெட்டை தடவிப் பார்த்தது.
"மச்சீ..ஒரு பென் இருந்த தா.." கிஷோரிடம் அவன் வினவ தம் இரகசிய உரையாடலை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு தன் பாக்கெட்டில் இருந்து பேனாவொன்றை எடுத்து நீட்டியிருந்தான்,
அவன்.
தந்த தோழனின் கரத்தை பிடித்து அவனை குனிய வைத்து அவன் முதுகின் மேலே அந்த தாளை வைத்து ஏதோ கிறுக்கினான்,
அவன்.
கிஷோருக்குத் தான் கடுப்பானது.
"எரும மாடே..என்னடா பண்ற..விடுடா நாதாரி பயலே..டேய் தேவா.." தன் முதுகில் உண்டான கூச்சம் தாளாதவனின் குரல் உச்சஸ்தானியில் ஒலித்தது.
அவனின் கத்தலை சமாளித்து விட்டு அவன் கரத்தை அகற்ற தன் முதுகைத் தடவிக் கொண்டு எழுந்து நின்றான்,
கிஷோர்.
"என்னடா பண்ண..?" கேட்டவாறு அவன் கையில் தாளைப் பறித்து பார்த்து விட்டு அற்பப் பார்வை ஒன்றை வீசினான்,
ஆடவனின் மேல்.
பாலாவுக்கு தோழனின் நடவடிக்கையில் இருந்த பொறாமை பிடிபட இரகசியமாக சிரித்துக் கொண்டான்,தனக்குள்ளே.
கிஷோரின் பார்வையை கண்டும் காணாது போல் காகிதத்தை பறித்துக் கொண்டு அவன் முன்னே நடந்திட தலையில் அடிப்பது போல் சைகை செய்தாலும் அவனின் மனமும் நிறைந்தே இருந்தது.
"என்னடா இது..சின்னப் புள்ள மாதிரி மாறிட்டான்...
அவன் பேரயும் தங்கச்சி பேரயும் ஹார்ட் போட்டு எழுதுனது மேல என்னமா கிறுக்கித் தள்ளுனான்னு.."
"விடு மச்சீ..நீயும் நாளக்கி லவ் பண்ணா இப்டி தான் பண்ணுவ..யாவும் காதல் செய்யும் மாயம்.." சொன்னவனின் பார்வையோ தன் முன்னே நடக்கும் தோழனையே தொட்டு நின்றது.
கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஆடவன் எப்போதும் போல் அமர்ந்திருக்க அவன் முன்னே பயந்த விழிகளுடன் அமர்ந்திருந்தான்,
அந்தப் பையன்.
அதிலும் அவன் மேசையில் வைத்த தன் கடிதத்தை பார்க்கும் போதே உள்ளுக்குள் உருண்டது,பயப்பந்து.
தன் காதல் மாட்டி விட்டது என்று பயப்படவில்லை,
அவன்.
காதல் விவகாரம் தெரிந்ததால் தேவாவின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதே பயத்தின் அடித்தளமே.
தேவாவுக்கு காதல் பிடிக்காது..
பெண்களுக்கு கண்ணியம் தந்தாலும் அவனுக்கு பெண்களின் மீது நம்பிக்கை இல்லை..
என்றெல்லாம் முன்பு உலாவரும் தகவல்கள் பொய்யாகி இருப்பது கொஞ்ச நாட்களுக்கு முன்பென்பதை அவன் எங்கே அறிந்திடுவான்..?
"சாரி..சீனியர்..உங்களுக்கு லவ் புடிக்காதுனு என் லவ்வ பிரிச்சுராதீங்க.." அவன் சொல்லவும் ஆடவனின் தாடை இறுகிற்று.
அவன் முகத்தில் தோன்றிய கோபத்தை சட்டென அடக்கிக் கொண்டிட அது அந்தப் பையனுக்கு அது புலப்படாவிடினும் பாலாவுக்குத் தான் தோழனின் சடுதியான உணர்வு மாற்றத்தில் ஏதோ ஒரு பயம்.
"இங்க பாருங்க..ஜுனியர் லவ் பண்றீங்க..ஓகே..அந்தப் பொண்ணுக்கு உங்கள புடிக்குமா..?"
"கண்டிப்பா புடிக்கும்..
ஏன்னா அவள நா நல்லா பாத்துக்குவேன்.."
"ஜுனியர்..அடுத்தவங்க முன்னாடி மரியாதயா பேசுங்க..அவங்க ஒன்னும் உங்களுக்கு எந்த விதத்துலயும் சொந்தம் கெடயாது.." அழுத்தம் திருத்தமாக அவன் இதழ்கள் உச்சரிக்க விழிகளில் கோபத்தின் சாயல்.
பையனும் வெகுவாக பயந்து தான் போய்விட தானாய் அசைந்தாடியது,
அவன் சிரசு.
"இங்க பாருங்க..நீங்க லவ் பண்ணுங்க..என்ன கருமத்த வேணாலும் பண்ணுங்க..பட் அவங்க மனச கலச்சி எதுக்கு அவங்க படிப்பயும் ஸ்பாய்ல் பண்ண பாக்கறீங்க..பர்ஸ்ட் படிச்சு முடிங்க..அதுக்கப்றம் அவங்க கிட்ட சொல்லிக்கலாம்..ஓகே ரைட்ட்ட்ட்..இனிமை ஏதாச்சும் இப்டி நடந்துச்சு கண்டிப்பா உங்கம்மா கிட்ட நா சொல்லிருவேன்.." ஆடவன் விரல் நீட்டி எச்சரிக்க அவன் பயந்தாலும் "மௌனமாய் அவளைத் தொந்தரவு செய்யாமல் காதலி.." என்று அவன் சொன்னது மட்டும் பையனின் மனதில் ஏனோ ஆழமாய் பதிந்து நின்றது.
"நீங்க படிச்சு முடிச்சு வந்து லவ்வ சொல்லி வேணா பொண்ணு கேளு..அவங்க படிப்பு முடியுற முன்னாடி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுணீங்கன்னா தொலச்சு கட்டிருவேன்..ஓகே ரைட்ட்ட்ட்.." என்க தலைகுனிந்து அமர்ந்திருந்த பையனோ தன்னாலே தலையை ஆட்டிட ஒரு புறம் அவனைக் கண்டிடும் போதே கோபம் கிளர்ந்தெழுந்தாலும் அடக்கிக் கொண்டான்,
அவன்.
கைகள் பரபரத்தது,
ஓங்கி ஒன்று வைத்திட.
கை நீட்டியதற்கு காரணம் கேட்டால் என்னவென்று தான் அவனும் சொல்ல..?
அவன் காதலை ஒப்புக் கொள்வதில் அவனுக்கு தயக்கம் இல்லை தான்.
ஆனால், அதன் பின் தர்ஷினியும் அவளின் படிப்பும்..
அதுவே அவனை கொஞ்சம் நிதானப்படுத்தியது.
"ஜுனியர்..ஒரு விஷயம்..ஒரு வெல்விஷரா சொல்றேன்..அந்த பொண்ண லவ் பண்றீங்கன்னா அந்த தாட்ட இப்போவே அழிச்சுருங்க.." கோபத்துடன் கூறியவன் விருட்டென எழுந்து செல்ல அந்தப் பையன் தான் அவன் கூறிச் சென்றதுக்கு மலங்க மலங்க விழித்தான்.
வெளியே வந்தவனுக்கு மனம் ஆறவில்லை,
உள்ளுக்குள் படபடத்தது.
அவள் மீது அவனுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால், ஏனோ ஒரு இனம் புரியா பயம்.
எதிர்பாராதது நடக்கும் போது அது நிலைக்குமா என்கின்ற எண்ணத்தில் அந்த மொத்த மகிழ்வையும் அனுபவிக்க விடாது மனதினோரம் சிறு பயம் தோன்றுமே.
அந்தப் பயம் தான்,
ஆடவனின் மனதோரம்.
ஏதோ யோசனை வர கடகடவென நடந்து அவளின் வகுப்பறையை அடைந்திட அவனின் நேரத்திற்கு தர்ஷினியுடன் ஒரு சிலரே அந்த வகுப்பில்.
சட்டைக் காலரை சரி செய்து விட்ட படி தர்ஷினியை கண்ணாலே அழைத்து தன்னோடு வருமாறு சொல்ல யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
தேவாவைப் பற்றி அவர்கள் அறிந்தது சந்தேகம் முளைக்கவும் விடவில்லை.
அவனின் அழுத்தமான விழிமொழியில் அதிர்ந்து பின் அரண்டு சுயம் மீண்டவளாய் கார்த்திகாவையும் அழைத்துக் கொண்டு அவன் பின்னூடு நடந்தாள்,தர்ஷினி.
அதே மரத்தடிக்கு அழைத்து வந்தவனுக்கு கார்த்திகாவையும் அவள் அழைத்து வந்தது நன்மைக்கே என்று தோன்றாமல் இல்லை.
அந்த பெருமரத்தை சுற்றி போடப்பட்டிருந்த கட்டில் அவன் அமர்ந்திருக்க அவனின் முன்னே கையை பின்னேக் கட்டிக் கொண்டு பயம் வழிய நின்றிருந்தாள்,
தர்ஷினி.
கார்த்திகாவின் பார்வை அவன் மீது முறைப்பாய் படிந்து மீண்டது அடிக்கடி.
அவனோ எப்படி ஆரம்பிப்பது என யோசித்து அவளைப் பார்ப்பதும் தரையைப் பார்ப்பதுமாய் இருக்க கார்த்திகாவுக்கு எகிறியது.
"என்னாச்சு..இவன் இப்டி நடந்துக்குறான்..?" மனதில் குழம்பிய படி ஆடவனைப் பார்த்திட தொண்டையைச் செருமினான்,
ஆடவன்.
"தேவா.."
"சீனியர் சார்.." பயந்து குரலில் கேட்டாள்,அவள்.
"இனிமே யாராச்சும் அப்டி ஏதாச்சும் தந்தா எடுக்காத..புரிஞ்சுதா..?" அவன் விழிகளால் ஊடுருவி கேட்டிட அந்த விழிகளில் இருந்த ஏதோ ஒன்று அவளை மறுக்கவிடவில்லை.
தலையை ஆட்டினாள்,
சரியென்பதாய்.
"கண்டிப்பா எடுக்க மாட்டல்ல.." விண்ணப்பமா கட்டளையா என்று பிரித்தறிய முடியாத வகையில் அவன் தொனி.
அந்த விழிகளில் காதலை அவன் காட்டாவிடினும் ஏனோ தானாக எழும் கனிவைத் தான் அவனால் மறைக்க இயலவில்லை.
அந்த கனிவு அவளைக் கொஞ்சம் அசைத்ததோ என்னவோ..?
அதிலும்,
நேற்று தந்தை வேறு "அந்த பையன் சொல்றத கேட்டு நடந்துக்க தர்ஷினி..நல்ல பையன்..உங்கம்மா வேற காலேஜ்ல உன்ன பாத்துக்க சொல்லி சொல்லிருக்கா..நானும் சொல்லிருக்கேன்..தேவா தம்பி எது சொன்னாலும் கேட்டுக்க நடந்துக்க.." அறிவுரையாய் தந்தை அவனின் பேச்சு வரும் போது கூறியது பெரும் பங்கை வகித்திருக்கலாம்,
அவள் ஒப்புக்கொண்டிட.
"இல்ல..எடுக்க மாட்டேன் சீனியர் சார்.." என்றிட நறுக்கென அவளின் கையை கிள்ளினாள்,
கார்த்திகா.
ஏன் அவன் சொல்வதையெல்லாம் தோழி ஒத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற கோபம் அவளில்.
தன் கையைத் தடவியவாறு தோழியை முறைத்தவளின் பார்வை தன்னில் இல்லை என்பது புரிந்திட விழிகளை சுழற்றி அவளின் வதனத்தில் மாறி மாறி வரும் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன,
ஆடவனின் விழிகள்.
அவள் மீண்டும் அவன் புறம் திரும்ப கணநேரத்தில் அவனின் பார்வை மாறியதை இருவருமே கவனிக்கவில்லை,
என்பது தான் நிஜம்.
"ம்ம்ம்ம்...குட்..அது மட்டுல்ல..உன்ன யாராவது தொந்தரவு பண்ணா என்கிட்ட சொல்லு..ஓகே ரைட்ட்ட்ட்.."
"சரி..சீனியர் சார்.."
"ம்ம்..அப்டி சந்தர்ப்பம் இல்லன்னா உன்னோட க்ளாஸ் மேட் ஆரவ் கிட்ட சொல்லு..புரியுதா..?"
"சரி சீனியர் சார்.."
"சரி..நீ யாராயாச்சும் லவ் பண்றியா..?"அவன் கேட்டதும் அவள் விழிகளில் அப்படி ஒரு அதிர்வு.
"சிவசிவா..லவ்வா..அப்டிலாம் எதுவும் இல்ல சீனியர்.." படபடத்துக் கொண்டு மறுக்க அவனோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் வெளியே காட்டிடும் ரகமா அவன்..?
"ம்ம்...குட்..வீட்ல மாப்ள பாக்கற வர இப்டியே இருக்கனும்..புரியுதா..?"அவன் கட்டளையாய் சொல்ல அவளுக்கு கோபம் வந்து விட்டது.