- Messages
- 997
- Reaction score
- 2,811
- Points
- 93
அத்தியாயம் - 22
"சாப்பிட வாம்மா" என்று அவர் அழைக்க தலையசைத்து அமைதியாக அவருடன் சென்றவள் "மேகா எங்கம்மா?" என்ற படி அவருக்கு உதவி செய்ய, "பால் குடுத்தேன், அப்பவே தூங்கிட்டா. நீ உட்கார்" என்று அவளை அமர வைத்தார்.
"இல்லை பரவாயில்லை, இருக்கட்டும்மா" என்றவள் எழுந்து கொள்ள, "மீனு, இன்னைக்கு மட்டும் தானே நான் செய்ய போறேன், உட்கார்ம்மா" என்று செல்வி டேபிளில் எடுத்து வைக்க, த்ரிலோகேஷூம் குமாரும் வந்து விட்டனர்.
மீனு எழுந்து அவர்களுக்கு உணவை எடுத்து வைக்க, "மீனு" என்ற அதட்டலோடு வந்த செல்வி அவளையும் அமர வைத்து அனைவருக்கும் பரிமாறினார். அவ்வப் பொழுது த்ரிலோகேஷின் விழிகள் மீனுவை தழுவினாலும் அவளோ தட்டை தவிர வேறெதையும் பார்த்திடவே இல்லை.
"லோகேஷ், நாளைக்கு காலையில நாங்க கிளம்புறோம்" என்று குமார் ஆரம்பிக்க, "என்ன மாமா, அதுக்குள்ள கிளம்புறீங்க? இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு போங்க" என்றான் உண்ட படி.
"இல்லைப்பா, நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதும் போட்டதை போட்ட படி வந்தாச்சு, நிறைய வேலை இருக்குப்பா" என்றிட, "சரிங்க மாமா" என தலையசைத்தான்.
சாப்பிட்டு குமாரும், திரிலோகேஷூம் அறைக்கு சென்று விட செல்வியுடன் நின்று அவருக்கு பேசியபடி உதவி செய்தாள் மீனலோஷினி.
பாலை காய்ச்சி ப்ளாஸ்கில் ஊற்றி தங்களுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டவர், "மேகா சாப்பிடலை, இடையில எழுந்து அழுதா கொடுக்கணும். அவ எங்க கூடவே இருக்கட்டும்" என்று அவளிடம் ஒன்றை கொடுக்க தலையசைத்தப்படி வாங்கிக் கொண்டாள்.
அவளின் கையை பிடித்துக் கொண்டவர், "மீனு, திரிலோகேஷ் ரொம்ப நல்ல பையன். நீங்க ரெண்டு பேரும் பிள்ளை குட்டியோட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழணும். என் பொண்ணுக்கு தான் அவரோட வாழ கொடுத்து வைக்கலை. எங்களோட மாப்பிள்ளை அப்படின்றதால சொல்லை. உண்மையிலே ரொம்ப தங்கமான பையன். சின்ன வயசுல இருந்து பார்த்திருக்கேன். எங்கண்ணி சொன்ன எதையுமே எதிர்த்து பேசாம செஞ்சிடும். அவ்வளவு பாசம் அம்மா மேல, அவங்களுக்கும் பையன்னா உயிர். என் பொண்ணை அப்படி பார்த்துக்கிட்டார். ஒரு குறை சொல்ல முடியாது. அவ இறந்தப்ப எங்களை விட அவர் தான் ரெம்ப உடைஞ்சிட்டார்.
யாராவது ஒருத்தர் கூடக் குறைய பேசினா பதிலுக்கு சண்டை போடாம விட்டுக் கொடுத்து போங்க. உன்னை என் பொண்ணு மாதிரி தான் நினைக்கிறேன். உங்க வாழ்க்கைய நல்ல படியா தொடங்குங்க" என்று கூறியவரை அணைத்துக் விடுவித்தவர், "சரிம்மா, கிளம்பு" என்று அவளை அனுப்பி கதவு எல்லாவற்றையும் பூட்டி விளக்குகளை அணைத்து அறைக்குள் சென்றார்.
இதுவரை கூட மீனலோஷினிக்கு நடந்தது எதுவும் உணர முடிந்திடவில்லை. இப்பொழுது அறையில் அவன் மட்டுமே இருக்க எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்கிற தயக்கம் சூழந்து கொண்டது. தன்னால் அவனை ஏற்க முடியுமா? கோபத்தில் வார்த்தையை விட்டு ஏதாவது காயப்படுத்தி விட்டால் என்றெல்லாம் சுழல ஒரு வித நடுக்கம் சூழ்ந்து கொண்டது. இன்னும் அவளால் அவனை முழுதாக மன்னித்திட முடியவில்லை. மறக்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறாள்.
அவள் கதவை திறந்து உள்ளே நுழைய, பால்கனியில் அவன் திரும்பி நின்று அலைபேசிஅழைப்பில் யாருடனே தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தான். அச்சூழல் அவளை தடுமாற செய்தது. இரவு உடையில் இலகுவாக சாய்ந்து நின்ற படி பேசிக் கொண்டிருந்தான். அவள் வரவை உணரவே இல்லை. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர, அவளுக்கோ கால்கள் கூட நகர மறுத்து சதி செய்து கொண்டிருந்தது.
அவள் நினைத்து எதிர்பார்த்து கனாவிலே பல முறை வாழ்ந்து பார்த்த தன்னவனுடனான வாழ்க்கை கிட்டி விட்டது. அவளால் மகிழ முடியவில்லை. அவன் தன்னை வஞ்சித்து ஏமாற்றி விட்டதாய் ஒரு உணர்வு அவளை சூழ்ந்திருந்தது.
"ஷாம்லி இல்லை, என்னை திருமணம் செய்து கொள் என்று நின்றேன். அவள் இருந்திருந்தால் நான் நான்" என்ற எண்ணமே வலுப் பெற நினைவுகளே கசந்தது. அந்த உணர்வுகளே அவளை உயிருடன் மடிய செய்தது. போராட்டம் தான் நடத்திக் கொண்டிருக்கிறாள் பல வருடங்களாக. எப்படி முடிந்தது உன்னால்? அவளை ஏற்றுக் கொண்டால் என்னை விரும்பியது பொய்யா? நாடகமா? என்னால் உன்னை தவிர யாரையும் ஏற்க என்ன நினைக்க கூட முடியவே இல்லையே என்பதே ஆதங்கமாகவும் கோபமாகவும் உருபெற்று புயலாக மாறி அவனை தாக்கும் சமயத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தது.
பிளாஸ்க்கை வைத்தவள் அப்படியே படுக்கையில் அமர்ந்து விட்டாள். அந்த அரவத்திலே அவள் இருப்பை உணர்ந்தவன், "ஐ வில் கால் யூ பேக்" என்ற படி அழைப்பை துண்டித்து உள்ளே வந்தான்.
அவனது இதயத்துடிப்பு அதிகரித்தது. 'என்ன பிரதிபலிப்பாள் சண்டையிடுவாளா? சத்தமிடுவாளா? இல்லை மௌனியாகிடுவாளா?' என்றெல்லாம் நொடிப் பொழுதில் மனதில் வினாவாக எழுந்து கொண்டிருக்க விடையறிய வந்து விட்டான் அவளருகில்.
எதில் தொடங்குவது விட்டதில் இருந்தா? தன்னால் முடியுமா? அவள் ஏற்பாளா?
"மீனு" என்றழைத்த பின்பே சுயநினைவு பெற்றவள் அவனை நிமிர்ந்து பார்த்தாளே தவிர பதில்லை. விழிகள் தன்னை போல் அவனை நோக்கி அம்பை எய்தது. இம்முறை எதையும் ஏற்க தயாராகி விட்டான் போல!
குரலை சரி செய்தவன், "சாரி" என்றான் திரட்டி வைத்திருந்த தைரியத்துடன்.
"எதுக்கு நீங்க என்னை விட்டு ஷாம்லிய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கா?" என்றாள் அவனை ரணமாக்கிடும் பொருட்டு. உண்மையிலே அவளது நோக்கம் அவனை காயப்படுத்தியே விட வேண்டும் என்பதல்ல. அவளது இத்தனை வருட காயங்களின் வடுக்கள் ரணங்கள் அழுகை கதறல் எல்லாம் இவ்வாறு வெளி வருகிறது. அதனது தாக்கம் குறையும் வரை அவளால் நினைத்தாலும் தன்னை கட்டுப்படுத்திட இயலாது. அவளுள் இயலாமை, கோபம் எல்லாமே தேங்கி வெளியேற வழியின்றி தவித்து நிற்கிறது வருடங்கள் கடந்து.
வடிகாலாய் காரணமானவனே கிடைத்து விட மனது கொட்டி விட துடிக்கிறது.
அவனது கண்கள் கலங்கியது. அவளது வார்த்தைகள் ஆழமாக தாக்கியது. இருவருக்குமே சூழலை கிரகிக்க முடியவில்லை. காலம் இவ்வாறு கொண்டு வந்து நிறுத்திடும் என்று தெரிந்திருந்தால் முதலிலே காதலை வெளிப்படுத்தாமலே பிரிந்திருப்பார்கள் போலும்!
என்ன கூறுவான், அவளை உணர்ந்திட முடிகிறதே. ஆனால், பதில் எங்கு தேடிடுவான். வெறும் வார்த்தைகளால் மட்டுமே அவளின் காயங்களின் எச்சங்களை சரி செய்திட இயலாது என்று அவனது மூளை சத்தமிட்டு கூறுகிறது. ஆனால் அவள் அருகில் செல்லுமளவிற்கு இன்னும் தைரியம் வந்திடவில்லை. அவளது ஒரே ஒரு பார்வை அவனை விலகி. ஒதுங்க செய்து விடுகிறதே!
அவனது முகம் முழுவதும் தவிப்பு சூழ அவளை பார்க்க திரணியற்ற கலங்கிய விழிகளை வேறு புறம் திருப்பிய படி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
அவளை விட அதிகமான வலிகளை அனுபவித்து கடந்து வந்திருக்கிறான். அவளும் அவனது சூழல் உணராமல் இல்லை. நிதர்சனம் எப்பொழுதுமே எளிதில் ஏற்றுக் கொள்ளும்படி அமைந்து விடுவதில்லையே.
அப்படியே சில கணங்கள் உறைந்திருந்தவனுக்கு அவளின் விசும்பல் சத்ததில் தான் சுற்றுப்புறம் உரைத்தது அவனுக்கு.
ஆம், அவனை வதைக்க அவளது விழிகளில் நீர் வழிகிறது தான். இரு கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். யாரை மீண்டும் ஒரு முறை கூட பார்த்திடக் கூடாது என்று உறுதியாக இருந்தாலோ அவனிடமே இன்று அடைக்கலமாகி விட்டாள் என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. ஏதோ தோற்று விட்டது போன்றதொரு உணர்வு.
எதையாவது செய்யவே கூடாது என்று பிடிவாதமாக நிற்கும் கணங்களில் தான் காலம் நம்மை முழுவதுமாக உடைத்து மண்டியிட வைத்து விடும்.
"மீனு" என்றவன் அவளது முகத்தை நிமிர்ந்த முயற்சி செய்திட முடியவே இல்லை. அப்படியொரு அழுகை உடைப்பெடுத்தது. இத்தனை நாட்கள் அடக்கி வைத்தது பிரவாகமாகிட இருவராலும் தாங்க முடியவில்லை. உணர்ச்சி பிழம்பு ஜூவாலையாக மாறி இருவரையும் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.
"மீனு ப்ளீஸ் அழாத" என்று முதுகை வருடியவன் வேகமாக எழுந்து தண்ணீர் எடுத்து வந்து நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். ஆனால் கைகள் நடுங்கியது அதன் மூடியை திறப்பதற்கு தடுமாறினாள்.
"இங்க கொடு" என்றவன் திறந்து அவளுக்கு குடிக்க கொடுத்தான். ஏதாவது கேட்டு வாங்கி கொடுக்கவில்லை என்றால் இவ்வாறு தான் மேகா அழுது கொண்டிருப்பாள். அவளை போலவே அவனுக்கு தோன்றியது மீனுவின் தற்போதைய நிலை.
இன்னும் அவளால் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போக முகத்தில் அத்தனை தவிப்பு.
தண்ணீர் பாட்டிலை கீழே வைத்தவன் நின்ற படியே அவளை தன் மீது சாய்த்து அணைத்துக் கொண்டான். அவனை விலக்கும் அளவுக்கு கூட அவளுக்கு திரணியற்று போனது. ஏதேதோ எண்ணங்கள் சுழல சூழல் மரத்து மறந்து போனது. அவனையோ அவனது அருகாமையோ பிடிக்காமல் இல்லை அவளுக்கு. அதீதமாக பிடித்தம் விளைவாகவே இவ்வாறு தவித்து நின்று கொண்டிருக்கிறாள்.
எத்தனை வருட தவிப்பு, நொடியில் அடங்கி விடுமா என்ன?
"மீனு ரிலாக்ஸ்" என்று அவளது காதருகே குனிந்து கூறியவன், அவளை ஆசுவாசமாக்கும் பொருட்டு தலையை வருடினான். ஓரளவு சமன்பட்டவளின் மூளை அவனை விட்டு விலகுமாறு கட்டளையிட, மனதோ அவனிடம் அடைக்கலமாக துவங்கி இருந்தது.
கோபம் ஆத்திரம் எல்லாம் மறந்து நொடி நேர மாயையில் மூழ்கி அவனிடம் அடைக்கலம் புகுந்தாள். அவனது அசைவுகளும் பேச்சுக்களும் அவளை முழுவதுமாக தன் வயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவனுக்கு அடிமையாகக் கூடாது என்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்று தோற்கிறாள்.
இழுத்தான் அவளை தன்புறம் முழுவதுமாக. அவளையும் மீறி மனது அவனை நோக்கி செல்ல ஆயத்தமாக, ஒரு முறை பட்ட காயமே இன்னும் ஆறாது வடுவாக இருக்கும் பொழுது மறுபடியும் அவனை தேடி செல்லாதே. இம்முறை வீழ்ந்தால் கண்டிப்பாக அதாள பாதாளத்தினுள் முழுதாக சென்று விடுவாயடி என்று மனது அறிவுறுத்தியது. மூளை விழித்துக் கொள்ள வேகமாக அவனை தள்ளி விலக்கி விட்டாள்.
அவள் பலம் கொண்டு தள்ளியதில் சற்றும் தடுமாறியவன் கட்டிலை பிடித்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, "கிட்ட வராதீங்க" என்று சற்று உரக்கவே கத்தினாள்.
"சரி சரி, நீ தூங்கு" என்று அவளை படுக்க வைக்க வர வேகமாக பின்னால் நகர்ந்து கொண்டாள் கண்களில் மிரட்சியோடு.
அவளது விழிகள் அவனை தாக்க சில நிமிட ஊருவளில் அவளை அவதனித்தவன், "மீனு, என்னடா. என்னை பார்த்து எதுக்கு பயப்படுற?" என்று அவளை நோக்கி முன்னேறியவன் வேகமாக அருகில் அமர்ந்து, "ரெஸ்ட் எடு எல்லாம் சரியாகிடும். தூங்கு" என்று வலுக்கட்டாயமாக அவளது தோளை பற்றி படுக்க வைக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அருகிலே அவளது கைகளை இறுக பற்றியபடி அமர்ந்திருந்தவன் அவள் மூச்சு சீராகி உறங்கி விட்டதை உணர்ந்த பின்பே எழுந்தான். அவளை நேராக படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டு அருகில் அவளது முகத்தை பார்த்தப்படியே படுத்திருந்தான். நித்தமும் மனதின் ஓரத்தில் நின்று இம்சித்தவள் வதனம் இப்பொழுது அருகிலே கைக்கெட்டும் தூரத்தில் வந்து விட்டது. இந்த கணங்களில் அதுவே போதும் என்பது போல் அவனது மனதில் ஆசுவாசம் தோன்ற இமைகள் தானாக மூடிக் கொண்டது. அவளது கையை எடுத்து மார்பில் வைத்துக் கொண்டான்.
'உன்னை ரொம்பவே காயப்படுத்திட்டேன் ஆனா இனிமே கண்டிப்பா எப்பயுமே அந்த மாதிரி செய்ய மாட்டேன்' என்று மனதிலே அவளுடன் உரையாடினான்.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் வருடங்கள் கடந்தும் அவளை தன்னிடம் வந்து நிறுத்திய விதி மீண்டும் தன்னவளாக மாற்றி விடும் என்ற எண்ணம் அவனது விரைவாக உறக்கத்தை அளித்து சென்றது..
அத்தியாயம் - 23
அப்படியே உறங்கி விட்டவனுக்கு இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்றைக்கு தான் ஒரு ஆசுவாசம். இல்லையென்றால் உறங்கும் பொழுது ஒரு முறையாவது மீனலோஷினி அவனது மனதில் விஸ்வரூபமெடுத்து நின்று விடுவாள்.
நமது சில தவறுகளை மாற்றவே முடியாது. ஆனால் என்றுமே மறக்கவும் முடியாது. அது போல தான் அவனது வாழ்வில் மீனலோஷினி என்றுமே அழியாத ஆழமான காவியமாக உயிர்ப்புடன் இருந்திருந்தாள். ஆனால் இன்று உயிர் பெற்று அருகில் மிக அருகில். அப்படியொரு நிம்மதியை அளித்திருந்தது இக்கணங்கள். ஒரு சில உணர்வுகளை வெறும் வார்த்தைகளில் உணர்த்திட முடியாது. அந்த உணர்வு அளித்திடும் மகிழ்ச்சிக்கு ஈடு என்பதே கிடையாது.
அவளுக்கும் கோபம், சண்டை, ஆதங்கம் எல்லாவற்றையும் மீறி அவன் அவனுடைய அருகாமை அப்படியொரு பாதுகாப்பு உணர்வை அளித்திருந்தது. அவனது அமைதியான வதனமும் கனிவான பேச்சுக்களும் அக்கறையும் அவளை தன்னுள் இழுக்கிறது. அவளால் அதை ஏற்று அவனிடம் ஒன்ற முடியவில்லை. மனது தடுமாறுகிறது. முதலில் ஒரு முறை இப்படி தானே என்னை வாரிச்சுருட்டினாய்! ஆனால் அதன் பிறகு கீழே வெகு ஆழத்தில் புதைத்து விட்டல்லவா சென்று விட்டாய். இன்னும் அந்த குழியில் இருந்து மீள முடியாது மூச்சடக்கி கொண்டிருக்கிறேன்.
இம்முறை எந்த தவறும் நிகழ வாய்ப்பில்லை என்று மூளை உறுதியாக அடித்து கூறினாலும், காயம்பட்ட மனதினால் அதை முழுதாக கிரகிக்க முடியவில்லை. யாரும் வேண்டுமென்றே செய்திட வில்லை. ஆனால் நடந்து விட்டதே. தனியே விட்டு சென்று விட்டான் தானே! துடித்தது நானல்லவா என்று நினைக்க நினைக்க பதறி நடுங்குகிறது பேதையின் மனது.
நியாயம் ஒரு வரையறைக்குள்
அடங்கி விடுவதல்ல. சூழலும் மனிதர்களுமே அதை தங்களுக்கு தகுந்தாற் போல் கட்டமைத்து செதுக்கி கொள்கின்றனர். த்ரிலோகேஷோ தனது நியாத்தை விளக்கி நிற்க மீனலோஷினியோ தன் வரையறைக்குள் இருந்து வெளி வர மறுத்து மருகுகிறாள்.
நம்மளையும் மீறி விதி என்ற ஒன்றே நம்மளை வழி நடத்திக் கொண்டிருகிறது.
இதெல்லாம் சாத்தியமா? முடியாது என்று முற்றுப் புள்ளி வைத்து விட்ட விஷயத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறது. தன் வாழ்வில் மீனலோஷினி வந்து விட்டாள் என்பது இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.
ஏதோ கனவுலகில் மிதப்பது போன்றதொரு பிரம்மை.
அதிகாலையில் முதலில் விழிப்பு தட்டியது என்னவோ மீனலோஷினிக்கு தான். எழுந்து அமர்ந்தாள், இத்தனை நாட்கள் யாரிடம் மனதினுள்ளே போர் புரிந்திருந்தாளோ அவனே அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மனதினுள் ஆயிரம் ஆயிரம் தடுப்புக்களை கடினப்பட்டு கட்டமைத்து வைத்திருந்தாலும் நொடி நேரத்தில் தகர்த்து வந்து விடுகிறான் தன்னை நெருங்கி என்பதே அவளுக்கு வியப்பாகவே தோன்றியது. அது அவனுக்கு மட்டுமே சொந்தமான அவனுடைய பிரதான இடம் என்பது அவளின் சிற்றறிவுக்கு எட்ட வில்லை போலும்!
இன்னும் அவளது கை அவனது கைக்குள் பிணைக்கப்பட்டிருக்க தன் மார்பில் வைத்திருந்தான். அவனது மார்பு சுவாசிப்பதற்காக ஏறி இறங்க இதயதுடிப்பை துல்லியமாக உணர முடிந்தது அவளால். அந்த உணர்வு அவளுள் பரவிய நொடி உடல் சிலிர்த்து அடங்கியது. எத்தனை கணங்கள் உரிமையாக சாய்ந்திருக்கிறாள். ஆனால் இன்று எல்லாமே புதிதாக தோன்றியது. வருடங்கள் மாறினாலும் அவனுக்காக அவளின் உணர்வுகள் மட்டும் மாறிட வில்லை. ஆனால் அதை வெளி காட்டிட அவள் மனம் விழைந்திட வில்லை. உடைந்ததை ஒட்ட வைப்பதென்பது அவ்வளவு சுபலமில்லை. அப்படியே வைத்தாலும் மீண்டும் பழைய நிலை மீளுமா என்பது அதி பெரும் கேள்விக் குறியே?
கையை எடுக்க முயற்சிக்க, அவனது கையின் அழுத்தம் கூடியது. உறங்கவில்லை கண்களை மூடியே படுத்திருக்கிறான் என்பது புரிந்தது.
"லோகேஷ்" என்று அவனுக்கே கேட்காதளவு மெல்லிய குரலில் அழைத்தாள்.
நேராக படுத்திருந்தவன், "ம்ம்..." என்ற படி அவளை புறம் திரும்பி ஒரு களித்து படுத்து கண்களை திறந்து அவளையே பார்த்தான்.
'மெதுவா தான கூப்பிட்டேன் கேட்காதுனு நினைச்சேனே?' என்று நினைத்தவளை அவதனித்தவன் மனது, 'நீ நினைப்பதல்ல உன்னுடைய அசைவே உன்னை உனது தேவையை எனக்கு உணர்த்திடும்' என்று கூறியது. வார்த்தையாக வாய் திறந்து கூறினால் அவளுடைய பதில் கண்டிப்பாக அவனை காயப்படுத்தும் என்று உணர்ந்து அமைதியாகி விட்டான் அக்காதலன். அந்த ரம்மியமான சூழலை கெடுக்க அவனது மனது விரும்பவில்லை.
மீண்டும் கையை இழுத்தாள் அவனுக்கோ விடும் எண்ணமில்லை. தலையை அசைத்தான் விட முடியாது என்பது போல். விலக்கி வைத்திருந்த உரிமையுணர்வு அவனுள் மீண்டும் ஒட்டிக் கொண்டது. இடையில் தங்களது வாழ்வில் நடந்தது எல்லாம் மறந்து விட்டது அவனது மூளைக்கு. நொடி நேரத்தில் பழைய த்ரிலோகேஷாக மாறி அவளிடம் வம்பிலுக்க மனது உந்தியது.
அவன் கண்களுக்கோ மூளைக்கோ இப்பொழுது மீனலோஷினி என்பவளை தவிர எதுவுமில்லை தெரியவில்லை.
கருப்பு பக்கங்களாகவே நகர்ந்த வாழ்வு தீடீரென வண்ணமயமாகி விட்டது போல் தோற்றம் அவனுள். அவள் தன்னுடன் இருக்கிறாள் என்ற நினைப்பே அவ்வளவு இனிமையாக இருந்தது. வாழ்வு முழுவதுமே அது மட்டுமே போதும் என்றெல்லாம் கூட அவன் மனது பிதற்றியது. மரத்து போன அவனது உணர்வுகளும் உயிர் பெற்று எழுந்தது. அவளை மட்டுமின்றி அவளது உணர்வுகள் தவிப்பு என்று எல்லாவற்றையுமே அவனது மனது ரசித்தது.
"ப்பா" என்ற படி மேகா கதவை திறந்து வந்து விட வேகமாக அவளது கையை விட்டு விட்டான்.
மீனுவை அங்கு எதிர்பார்க்காதவள், 'ம்மா..." என்றபடி அருகில் வந்து அவளை கட்டிக் கொண்டாள்.
மீனு அவளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு வெளியில் செல்ல அவர்களையே பார்த்தப்படியே படுத்திருந்தான் எழுந்து கொள்ள மனதில்லாமல். நிறைய வருடங்கள் கழித்து மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
அவர்கள் இருவரும் வெளியில் வர குமாருடன் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்த செல்வி, "எழுந்திட்டீயாம்மா, இரு காபி தரேன்" என்ற படி எழ முனைய, "நீங்க இருங்க, நான் பார்த்துக்கிறேன்" என்றவள் முகம் கழுவி ரிப்ரெஷ் செய்து மேகாவுடன் அடுப்பறை நுழைந்தாள்.
திரிலோகேஷிற்கும் ஒரு கப்பில் காபியை எடுத்துக் கொண்டவள், "மேகா உனக்கு வேணுமா?" என்று வினவ, "இப்ப தான் பாட்டி பால் கொடுத்தாங்கம்மா" என்று அவளது மார்பிலே படுத்த படி பதில் கூறினாள்.
இரண்டு கையில் கப்புடன் மேகாவை தூக்கியபடி வெளியில் வந்தவளை கவனித்த செல்வி, "கீழ கொட்டிட போறம்மா, மேகா இங்க வா பாட்டிக்கிட்ட" என்று அவளை தூக்க முயற்சிக்க, "ம்ம்...முடியாது" என்றபடி அவளது கழுத்தை இறுக கட்டிக் கொண்டாள்.
"பரவாயில்லைம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்று புன்னகைக்கைத்தப்படி அறைக்குள் நுழைந்தவள் த்ரிலோகேஷிடம் காபியை நீட்டினாள்.
வாங்கிக் வைத்தவன் எழுந்து பாத்ரூம் சென்று வர மேகாவும் மீனுவும் ஷோபாவில் அமர்ந்த சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
மேகாவை பிறந்ததிலிருந்து தன்னுடனே வைத்திருக்கிறான். தன்னிடம் கூட இவ்வளவு நெருக்கம், பிணைப்பு இல்லை என்றே ஒரு நிமிடம் அவனுக்கு தோன்றியது. இருவரும் சூழலை மறந்து விளையாடிக் கொண்டிருந்தனர். மீனலோஷினி எப்பொழுதுமே இப்படி தான். எல்லோரையும் முழுவதுமாக விழுங்கி தன்னுள் கட்டி வைத்து விடுவாள் என்பது எத்தனை உண்மையோ அதே போல் அவளுக்கு பிடிக்க வில்லையென்றால் அதற்கு நிகராக தள்ளி நிறுத்திடுவாள் என்பதும் அவ்வளவு உண்மை.
அவர்களிடம் சென்று இணைய மனது உந்தினாலும் கால்கள் நகராது மறுக்க காபி கப்பை எடுத்துக் கொண்டு பால்கனி சென்று விட்டான்.
என்றுமே இல்லாது போல் ஒரு சுவையை அளித்தது காபி மட்டுமேயன்றி அவளுடனான நிமிடங்கள் கூட.
சில நிமிடங்கள் கழித்து அறைக்குள் வர தாய் மகள் இருவரும் வெளியில் சென்றிருந்தனர். லேசான புன்னகை அவனது இதழில் ஒட்டிக் கொண்டே இருந்தது காலையில் விழித்ததில் இருந்தே.
அப்படியே வெளியில் வர, "மாப்பிள்ளை, இன்னைக்கு நாங்க ஊர்க்கு கிளம்புறோம். காலையில கோயில்க்கு போய்ட்டு அப்படியே மீனு அம்மாவை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்களை அங்க விட்டுட்டு கிளம்புறோம்" என்று குமார் கூற சம்மதமாக தலையசைத்தான்.
"சரி மீனு, நீயும் மேகாவும் போய் சீக்கிரம் ரெடியாகி வாங்க" என்று விரட்டிய செல்வி காலை உணவை தயார் செய்து முடித்தார்.
உள்ளே வந்த மீனு மேகாவை குளிக்க வைத்து உடை மாற்றி விட்டு கட்டில் அமர வைத்து தன் உடைய எடுத்து குளியலறை புகுந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் வந்தவள் மேகாவுக்கு தலை வாரி பூ வைத்து அவளை மேலும் அழகாக மாற்றி இருக்க அப்பொழுது தான் நடைபயிற்சி முடித்து உள்ளே நுழைந்தான் லோகேஷ்.
"டாடி, ட்ரெஸ் எப்படி இருக்கு?" என்று புன்னகை முகமாக மேகா அவன் முன் நிற்க, "சூப்பரா இருக்குடா!" என்று அவளை தூக்கி முத்தமிட்டான். அப்பொழுது தான் அவனை திரும்பி பார்த்தாள் மீனலோஷினி. எப்பொழுதும் போல் ஒரு பார்வை தான். மீண்டும் திரும்பி தன் வேலையில் ஈடுபட ஆரம்பித்தாள்.
அவனிடமிருந்து இறங்கிய மேகா, "நான் போய் பாட்டிக்கிட்ட ட்ரெஸ்ஸை காட்டிட்டு வரேன்" என்று வெளியே ஓடி விட்டாள்.
மீனுவின் செவிகளில் எல்லாமே விழுகிறது. ஆனால் திரும்ப விழையாது எழுந்து சென்று கண்ணாடி முன் நின்று தலையை வாரிக் கொண்டிருந்தாள்.
இதுவரை அவளின் அந்த விலகலை ஏற்றவனால் இந்த கணங்களில் ஏற்க முடியவில்லை. மனதின் ஏதோ ஒரு மூலையில் அழுத்தமாக தாக்கியது.
கண்ணாடி வழியே அவனையே பார்த்தவளுக்கு தன்னை நோக்கி வருவதை போன்று ஒரு அசிரீரி எழ இனம் புரியாத பயம். ஆயிரம் காரணம் கூறி அவனை விலக்கினாலும் அவனது அருகாமையிலும் கனிவான பேச்சுக்களிலும் மனம் அவன் புறம் சாய்வதை அவளால் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவளுள் சற்று அதிகமாகவே எழுந்தது.
அப்படியே கனவில் நின்றவளை அவன் பாத்ரூம் கதவை பூட்டிய சத்தமே கலைத்தது. அவளருகில் இருந்த டவலை எடுத்து எப்பொழுதோ சென்றிருந்தான்.
தன் தலையில் தட்டிக் கொண்டவள் வேகமாக தயாராகி வெளியே வர அவன் பின்பே திரிலோகேஷூம்
வந்து விட்டான்.
சாப்பிட்டு அனைவரும் கோயிலுக்கு கிளம்பினார்கள். செல்வியும் குமாரும் பின்னால் அமர்ந்து கொள்ள மீனலோஷினி மேகா மடியில் வைத்து அவனருகில் அமர்ந்திருந்தாள்.
இருவரும் வெளியில் வேடிக்கை பார்த்து சிரித்து பேசி வர அவனது கண்கள் அடிக்கொரு முறை அவர்களை தழுவுவதை தவிர்க்க முடியவில்லை அவனால்.
மீனு அவனை பாதித்தாள் கொஞ்சமல்ல அதிகமாகவே. இடையில் விலகி இருந்ததவனை இந்த திருமணத்தால் மீண்டும் தன்னை நோக்கி திருப்பி இருந்தாள் அப்பேதை. தாலி அவர்களது வாழ்வில் நடந்ததை மாற்றா விட்டாலும் எல்லாவற்றையும் மீறி ஏதோ ஒரு இறுகிய பிணைப்பை இருவருள்ளும் மனதின் ஆழத்தில் கொண்டு வந்திருந்தது.