Member
- Messages
- 47
- Reaction score
- 2
- Points
- 8
*சொல்லாமல்....!*
*மௌனம் 21(ii)*
*இன்று..*
விருட்டென அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவனுக்கு கொட்டிக் கொண்டிருந்த அடை மழை எல்லாம் கருத்தைக் கவரவே இல்லை.
என்றும் இல்லாமல் இன்று தந்தையின் நினைவுகள் அதிகமாய்.
தான் மட்டும் இங்க தனித்து விடப்பட்டிருப்பது போன்றதோர் எண்ணம் எழ அப்படியே மடங்கி அமர்ந்தான்,
தரையில்.
அந்த சிறு வீட்டைச் சுற்றி எங்கும் பெரும் கானகம்.
அதனால், தயக்கமின்றி தன் உணர்வுகளை வெளிப்படுத்தலானான்,அவன்.
முழங்காலில் மண்டியிட்டு மடங்கி அமர்ந்தவனுக்கு தன் கண்ணீரை அடக்குவது தான் பெரும் பாடாய் போனது.
ஆண்கள் அழக்கூடாது என்று இந்த சமூகம் இயற்றி வைத்திருக்கும் நியதிக்குள் வளர்ந்தவன் ஆயிற்றே.
அதிலும் அவன் வளர்ந்த சூழ்நிலையும் சுற்றி இருந்த சில நபர்களும் அவனை இன்னுமே அழுத்தமாகத் தானே மாற்றி வைத்திருந்தனர்.
அழுகையை அடக்கிய படி இருந்தாலும்
விழிகளில் அப்படி ஒரு சிவப்பு.
நீண்ட நயனங்கள் கொண்ட அவன் வதனம் பிரதிபலித்த உணர்வுகளை யாராவது கண்டிருந்தால் அவர்களுக்குமே கண்கள் கலங்கியிருக்கும்.
கொட்டும் மழையில் தலைகுனிந்து இலக்கின்றி தரையை வெறித்தவனாய் அமர்ந்திருந்தவனால் அதற்கு மேலும் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை போலும்.
மழை தரும் கருமேகங்களால் நிரம்பி இருந்த வானத்தை அண்ணாந்து பார்த்து கத்தினான், மறுபடியும்.
தந்தையின் முகமும் அவளின் முகமும் மாறி மாறி கண் முன்னே வந்தது.
அவர்களிருவருமே அவனுக்காய் இல்லை,இப்போது.
அவன் மனதில் மொத்தமான வெறுமை என்றாலும் அவர்களுக்காக அவன் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்த திருப்தி மட்டும் கொஞ்சமாய் அவனின் நாட்களை கடத்த உதவியது என்பதே நிஜம்.
ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.
சட்டென எழுந்து அந்த வீட்டின் சிறு முற்றத்தில் வலது புறமாய் நடப்பட்டிருந்த அந்த சிறு மரத் தூணின் அருகே சாய்ந்து கொண்டாலும் கொட்டும் மழை அவனை நனைத்துக் கொண்டே தான் இருந்தது,இப்போதும்.
அப்படியே கண்மூடி சாய்ந்து கொண்டான்.
ஆதரவற்ற சிறுவன் போல் இருந்தது அவனின் தோற்றம்.
தூரமாய் நின்று இவனை விழியெடுக்காது பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவுக்கும் மனம் பாரமாகியது.
ஏன் இவனுக்கு மட்டும் இத்தனை சோதனைகள் அவன் கடவுளிடம் கேட்காத நாளில்லை,இதுவரை.
தன் மீது ஒருவனின் பார்வை நிலைத்திருப்பதை கூட உணர்ந்திடவில்லை,
அவன்.
பல நூறு நினைவுகள் அவனுள் பிரவாகமெடுத்து ஓடிக் கொண்டிருந்தன.
ஏனோ அதன் தாக்கத்தினால், துளியாய் ஒரு புன்னகை.
நிஜத்தை விட அந்த நினைவுகள் அவனுக்கு நிரம்பவே பிடித்திருந்தது.
தாயின் முகம் கூட அவனுக்கு நினைவில் இல்லை.
தந்தையின் முகம் மட்டும் தான்.
அவரிருந்த வரை அவர் தான் அவனுக்கு சர்வமுமாய் இருந்திருப்பார் என்று அடிக்கடி தோன்றும் அவனுக்கு.
நினைவு தெரியும் வயதுக்கு முன்னமே அவன் தந்தை உயிர் நீத்திருக்க அவருடனான புகைப்படங்கள் அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டேயிருக்கும்,
அவன் மேல் அவர் வைத்த அளவில்லாத நேசத்தை.
ஏனோ அதைப் பார்த்திடும் போதே அவன் விரல்கள் அதை வருடிக் கொடுத்திட இவனுக்கு விழிகளின் ஓரம் கொஞ்சமாய் நீரும் கோர்த்துக் கொள்ளும்.
இல்லாதவர்களுக்கு தானே எதினதும் அருமை புரியும்.
தந்தையைக் கொன்றவருக்கு மகனாய் தண்டனை வழங்கியதாயிற்று.
அது போதும் அவனுக்கு.
எங்கே அதையும் செய்யத் தவறிவிடுவோமோ என்கின்ற எண்ணம் அவனை உறுத்திக் கொண்டேயிருந்தது எத்தகைய வலி என்பதை அவன் மட்டுமே அறிவான்.
தந்தையின் பின் அவளின் நிழற்படங்கள்.
இத்தகைய நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து உதடுகள் கொஞ்சமாய் முறுவலித்தன.
இறுக்கமும் அழுத்தமுமாய் இருக்கும் அவனின் முகத்திலும் புன்னகையைத் தந்திட அவளால் மட்டுமே முடியும்.
எத்தனை நேரம் அப்படி இருந்தானோ திடுமென ஒலித்த அலைபேசி மணி அவனை இழுத்து நிகழுக்குள் சேர்ப்பித்தது.
அதே நேரம்,
தேவேந்திரனைப் பற்றி ஆர்த்தியிடம் அவனது தாயார் தெரிவித்திருக்க அவளுக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
அவனின் மாற்றங்கள் அவளை கொஞ்சம் மகிழ்வுறச் செய்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வதென்பது அத்தனை சுலபமாய்த் தோன்றவில்லை,
அவளுக்கு.
என்ன தான் முன்பு அவன் திட்டும்போதெல்லாம் புன்னகையுடன் கடந்து விட்டாலும் சமீப காலமாய் அவன் அவளிடம் காட்டிய பாராமுகமும் வெளிப்படுத்தி நின்ற கோபமும் நிதானம் தப்பி அவளிடம் உதிர்த்த வார்த்தைகளும் அவளை வெகுவாய் தள்ளி நிற்க வைத்திருந்தது,
அவனில் இருந்து.
இது தானே அவனிடம் இருக்கும் பலவீனம்.
இடம் பொருள் ஏவல் பாராமல் சினத்தின் உச்சியில் வார்த்தைகளை விட அது அடுத்தவர் மனதை காயப்படுத்தும் என்று அறிந்தும் ஏனோ அவன் தன்னை மாற்றிக் கொள்ள முயன்றதில்லை,
இதுவரை.
யாருக்காகவும் மாற மாட்டேன் என அவன் விடாது பிடித்திருக்கும் பிடிவாதமே இதற்கு மூல முதற்காரணம்.
ஆர்த்தியைக் கேட்டால் அவன் மீது அளவில்லா காதல் இருக்கிறது என்பாள்.
ஆனால், அதை இனி அவனிடம் சில காலம் வெளிப்படுத்தக் கூடாது என்பதே அவளது முடிவு.
அவன் கொஞ்சம் மாற வேண்டும்.
நிதர்சனம் உணர்ந்து தன் தவறு புரிந்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே அவளின் உச்சபட்ச எதிர்ப்பார்ப்பு.
மற்றதை பிறகு யோசித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டிருந்தாள்,
அவள்.
அவளுக்கும் மனம் உண்டு.
அதிலும் சில எதிர்ப்பார்ப்புக்கள் உண்டு.
எல்லாவற்றையும் மறந்து மன்னித்து உடனே காதலைப் பொழிந்திட அவள் ஒன்றும் தேவதை இல்லையே.
அதுவும் அவனுக்கு தன் மீது காதல் இருப்பது உறுதியாகியில்லா சமயத்தில்.
சராசரிப் பெண்ணாயிற்றே,
சில பிடிவாதங்கள் அவளிடம் இருக்கத் தான் செய்யும்.
அதிலும் அவள் அத்தையின் முகத்தில் தெரிந்த இறைஞ்சல் அவளை இன்னுமே யோசிக்க வைத்திட பட்டென எழுந்து பால்கனிக்கு சென்றாள்,ஆர்த்தி.
வீசிய மென்காற்றும் தகிக்கும் அவள் மனதின் வெம்மையை அடக்க தவறிற்று.
இலக்கின்றி வானத்தை வெறித்தாள்.
இலக்கற்ற அந்த பார்வையின் இடையிடையே நிழலாய் தேவேந்திரனின் முகம்.
மனதில் ஏதோ ஒரு விரக்தி பரவ இதழ்களில் தானாய்த் தோன்றியது,கசந்த முறுவலொன்று.
அவனைத் தவிர வேறு யாரையும் அவளால் ஏற்றிட முடியாது.
அதற்கென்று அவனை மொத்தமாய் மன்னித்திடவும் முடியாது.
அவன் மீது கோபம் இருக்கத் தான் செய்தது,
அவளுக்கு.
கோபத்துக்கும் காதலுக்கும் இடையே சிறு போராட்டம்.
காதல் தான் கோபத்தை தள்ளி முன் நிற்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.
அதற்கு சிறிது காலம் காத்திருக்கத் தான் வேண்டும்,
அவன் காதலை அவன் மறந்திடவும்..
அவள் காதலை அவள் மீட்டிடவும்.
மறுநாள் பொழுது இனிதே விடிய முதல் வேலையாய் தர்ஷினியைக் காண வந்திருந்தான்,
எழில்.
அவனுக்கு அவளிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி சில விடயங்கள் இருந்தனவே.
மொட்டை மாடியில் அவள் மார்புக்கு கையை கட்டிய படி நிற்க எழிலோ அவளைத் தான் பார்த்த படி நின்றிருந்தான்.
என்ன சொல்லித் துவங்குவதென்பது பெரும் குழப்பமாய் இருந்தது,அவனுக்கும்.
"தர்ஷினி.."
"ம்ம்..சொல்லுங்க எழிலத்தான்.."
"நீங்க டைவோர்ஸ் பண்ணப் போறீங்களா..?" அவன் கேட்டிட தலையைசைத்தவளின் முகத்தில் சடுதியாய் வந்து ஒட்டிக் கொண்டன,
வருத்தத்தின் ரேகைகள்.
"நீ அவன லவ் பண்றியா தர்ஷினி..?" ஏதோ புரிந்தாவனாய் கேட்டான்,எழில்.
தர்ஷினியின் விழிகள் அவனுக்கான காதலை மொத்தமாய் வெளிப்படுத்திக் கொண்டல்லவா நிற்கிறது,அவனைப் பற்றி பேசும் போதே.
"இங்க பாரு மா..அவன் காலேஜ் டைம்ல ஒரு பொண்ண லவ் பண்ணி இருக்கான் தான்..ஆனா இப்போ நீ தான் அவனோட வாழ்க்க..அவன் எதயோ மறக்க ட்ரை பண்றான்னு தோணுது..நீ தான் அவன மாத்தனும்."
"என்ன பண்ண சொல்றீங்க எழிலத்தான்..?" சத்தியமாய் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது துளியும் புரியவில்லை,அவளுக்கு.
"அவன் எப்பவுமே ரொம்ப அழுத்தமா இருப்பான்..எதயுமே வெளிக்காட்டிகிட்டு இருக்க மாட்டான்..நா கூட அன்னிக்கி பேசும் போது இன்னும் அந்தப் பொண்ண நெனச்சு தான் டைவோர்ஸ் கேட்ருக்கான்னு நெனச்சேன்..ஆனா அன்னிக்கு உன் கிட்ட பேசுறப்போ அவன் கண்ணுல ஏதோ தெரிஞ்சுது..மே பீ அது உனக்கான அவனோட காதலா இருக்கலாம்..அப்டி தான் எனக்கு தோணுது.." அவன் சொல்ல அவளிதழ்களில் விரக்தி கலந்த புன்னகை.
அவன் பேசி விட்ட வார்த்தைகளை கேட்டது அவள் மட்டும் தானே.
"நீ அன்னிக்கி ரூம விட்டு வெளியவே வர்லன்னு அத்த சொன்னாங்க..அது உங்களுக்குள்ள இருக்குற ப்ரச்சன..அதுல நா தலயிட வர்ல..நீயும் அவன லவ் பண்றன்னு புரியுது..பர்ஸ்ட் மனசு விட்டு பேசு அவன் கூட..உன் மனசுல இருக்குறத சொன்னா கொஞ்சமாச்சும் அவன் மாறலாம்..
உள்ளுக்குள்ள வச்சி காட்டிக்காம இருக்குறதால என்ன நடந்துரும்..? வீணான மனஸ்தாபம் தான்.."
"உனக்கே தெர்யும் அர்ஜுன பத்தி..அப்டி அவ்ளோ ஈசியா மனசுல இருக்குறத சொல்ல மாட்டான்..கோவம் எக்கச்சக்கமா வரும்..
அதயெல்லாம் தெரிஞ்சு தான அவன லவ் பண்ற..இப்போ கோபத்துல ஏதோ பேசிட்டான்னு பட்டுன்னு முறுக்கிக்க வேணா..கொஞ்சம் பேசிப்பாரு அவன்கிட்ட.."
"அது மட்டுல்ல..நீ ரொம்ப ரோஷக்கார பொண்ணுனு எனக்கு தெரியும்..ஆனா இவன் விஷயத்துல அத கொஞ்சம் எறங்கி வா..இத நா சொல்றது சரியா தப்பான்னு கூட தெரில..ஆனா யாராவது ஒருத்தர் புரிஞ்சு நடந்தா தான் வாழ்க்க நல்லாருக்கும்..ஒரே ஒரு தடவ அவனோட போய் பேசிப்பாரு..இன்னும் ஒரே ஒரு தடவ..அதுக்கப்றம் உன்னோட முடிவ நீ எடுத்துக்க.." நீளமாய் பேசி முடித்தவனோ அவளின் சிந்தனை முகத்தை பார்த்து விட்டு கீழிறங்கிச் சென்றிட தர்ஷினியின் மனதில் எழில் பேசியது தான் ஓடிக் கொண்டேயிருந்தது.
அவன் பேசியதற்கு அவள் எதிர்வினை ஆற்றி நின்றாலும் தன் மனதில் உள்ளதை ஒருபோதும் அவனிடம் சொன்னதேயில்லை.
ஒரு வேளை அது தான் பிழையோ..?
சிந்தித்தாலும் முகத்தில் அடித்தாற் போல் அவன் இன்னும் வார்த்தைகளை வீசிவிட்டானெனின்..?
அது தான் பெரும் கலக்கமாய் இருந்தது.
எழில் சொல்வது சரி தான். ஒரு முறை அவள் மனதைத் திறந்து பேசி விடுவது சிறந்தது. சாதமாயினும் பாதகமாயினும் அவளுக்குள் ஏதோ திருப்தி நிலவுமே, தன் மீது தவறில்லை என்பது போல்.
நீண்ட யோனைக்கு பிறகு அவனைச் சந்திக்க வேண்டும் என்பதாய் ஒரு தீர்க்கமான முடிவு அவள் மனதில்.
இருள் சூழ்ந்து நிலாத் தெரியத் துவங்கி இருந்த நேரம் அது.
தன் அறையின் பால்கனியில் நின்று வானத்தை வெறித்தவாறு நின்றிருந்தான்,யாதவ்.
குருவின் வார்த்தைகளே காதில் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருக்க அறையை வெளியேறக் கூட இல்லை, ஓரிரு நாட்களாய்.
ஏனோ அந்த ஒற்றை வசனத்தில் அவனின் மொத்தத் தவறுகளையும் சொல்லிக் காட்டியது போல் இருந்தது.
குரு மீது பிழையில்லை.
அவன் மட்டும் அப்படிச் சொல்லியிராவிடின் இந்நேரம் தர்ஷினியை காதல் வலையில் விழ வைக்கிறேன் என்று ஏதாவது பைத்தியக்காரதனத்தை அவன் செய்து கொண்டிருக்கக் கூடும் என்பதை உணர்ந்தவனுக்கு முதன் முதலாக உள்ளுக்குள் தைத்தது.
அவன் கெட்டவனில்லை.
அதற்கென்று நல்லவன் என்று சொல்ல முடியாது.
தன் பிடிவாதத்துக்காக எதையும் செய்யத் துணிபவனுக்கு அதில் இருக்கும் தவறுகள் கண்ணுக்குப் புலப்படாமல் தான் போய்விடும்.
அவன் அப்படி ஒரு ரகம்.
மனம் பிசைய தோழனிடம் பேசிப்பார்த்தால் சரியாகி விடும் என்று பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அழைத்தான்,
குருவுக்கு.
அழைப்பு போய்க்கொண்டிருந்தாலும் அவன் ஏற்கவில்லை.
அவன் வேலையாய் இருந்தது,யாதவ் அறிந்திட மாட்டானே.
தோழனுக்கு தன் மீது கோபம் என்று நினைத்துக் கொள்ள மனம் வலித்தது.
என்ன தான் குருவுடன் கோபமாய் அவன் நடந்து கொண்டாலும் அதையெல்லாம் பொருத்துக் கொள்ளும் குருவுக்கு தன் மீது கோபம் என எண்ணியவனுக்கு ஏனோ அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
"சாரி.." தன் தவறை உணர்ந்து முதன் முதலாக மன்னிப்புக் கேட்டிருந்தான் தோழனிடம்,குறுஞ்செய்தி வழியே.
அதன் பிறகு தான் அவன் மனமோ சமப்பட்டது, கொஞ்சமேனும்.
தர்ஷினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றிற்று.
ஆனால்,அதை எப்படிச் செய்வது என்று தான் புரியவில்லை.
தான் செய்ய விழைந்த காரியத்தை சொல்லி அவளிடம் மன்னிப்புக் கேட்டிடும் திராணி அவனில் இல்லை.
உள்ளும் புறமும் கூசியது.
அதற்கென்று அவளிடம் மன்னிப்பு கேட்காவிடின் அவன் மனம் ஆற மாட்டாது என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.
அவனுக்குள்ளும் இந்த நொடி சில மாற்றங்கள்.
மாற்றங்கள் இல்லா மனிதர்கள் இல்லை.
மனிதர்களில் இல்லா மாற்றங்களும் இல்லை.
தொடரும்.
அதி....!
2024.01.29